10.02.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் வந்துள்ளதால், பாரதம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆகுகின்றது என்ற நற்செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.

கேள்வி:
சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம் என்ற சந்தோஷத்தைக் கொண்டுள்ள குழந்தைகளின் அறிகுறிகள் என்ன?

பதில்:
அவர்கள் எவ் வகையான துன்பத்தையும்; தமக்குள் அனுபவம் செய்வதில்லை. தாம் முக்கியஸ்தர்கள் என்றும், தம்மை எல்லையற்ற தந்தை இலக்;ஷ்மி நாராயணனைப் போன்று ஆக்குகின்றார் என்ற போதையையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது நடத்தை மிகவும் இராஜரீகமாக இருக்கும். அவர்களால் இந்த நற்செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

ஓம் சாந்தி.
தந்தை விளங்கப்படுத்துகின்றார் என்பதும், இச் செய்தி விசேடமாக பாரதத்திற்கும், பொதுவாக முழு உலகிற்கும் சென்றடைய வேண்டும் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பாரதம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆகுகின்றது என்றும்,அதே சுவர்க்கம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்ற சந்தோஷமான செய்தியையும் நீங்களே அனைவருக்கும் கொடுக்கும் தூதுவர்கள். தந்தையாகிய சுவர்க்கக்கடவுள் என அழைக்கப்படுகின்ற ஒரேயொரு தந்தையே சுவர்க்க ஸ்தாபனையை மேற்கொள்வதற்காக பாரரத்;திற்கு வந்துள்ளார். பாரத மக்கள் அனைவருக்கும் இந்த நற்செய்தியைத் தெளிவாகக் கொடுங்கள் என்ற வழிகாட்டல் குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தத்தமது சமயத்தையிட்டே அக்கறை கொண்டுள்ளார்கள். உங்கள் தர்மத்தையிட்டு நீங்கள் அக்கறை கொள்கின்றீர்கள். பாரதத்தின் சூரிய வம்ச தேவதர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது, அதாவது, பாரதம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆகுகின்றது என்ற நற்செய்தியை நீங்கள் எடுத்துரைக்கின்றீர்கள். நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்க வேண்டும். தமக்குள் இந்த சந்தோஷத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வகையான துன்பமும் இருக்க மாட்டாது. புதிய உலகைப் படைப்பதில் சிரமம் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கள்ளங்கபடமற்றவர்களுக்கு எதிராக அதிகளவு வன்முறை மேற்கொள்ளப்படுகின்றது. சகோதர, சகோதரிகளே, உள்ளே வந்து, இந்த நற்செய்தியைச் செவிமடுங்கள் என்றதொரு துண்டுப்பிரசுரத்தை பாபா அச்சடித்து வைத்திருந்ததைப் போன்று, நீங்களும் எப்பொழுதும், பாரத மக்களுக்கு இந்த நற்செய்தியைக் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வில் இருக்க வேண்டும். அவர்களது எல்லையற்ற ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுப்பதற்காக எல்லையற்ற தந்தை வந்துள்ளார் என்ற செய்தியை அனைவருக்கும் எவ்வாறு கொடுக்கலாம் என்ற அக்கறையை நீங்கள் நாள் முழுவதும் கொண்டிருக்க வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் படத்தைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் நாள் முழுவதும் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் முக்கிய ஸ்தாபகர்கள். ஆகையால் உங்கள் நடத்தை எக்காரணத்தைக் கொண்டும் அநாகரிகமாக இருக்கக் கூடாது. நீங்கள் குரங்குகளை விட மோசமாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா இப்பொழுது அவர்களைப் (தேவர்கள்) போன்று ஆக்குகின்றார். ஆகையால் உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். எனினும், இந்தச் சந்தோஷம் குழந்தைகளுக்கு இருப்பதும் இல்லை, அந்த ஆர்வத்துடன் இச் செய்தியை பிறருக்குக் கொடுப்பதும் இல்லை என்பது அற்புதமேயாகும். தந்தை உங்களை தூதுவர்கள் ஆக்கியுள்ளார். ஆகையால், இச் செய்தி அனைவரையும் சென்றடையட்டும். தமது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது என்பதோ அல்லது அது எப்பொழுது மறைந்தது என்பதோ பாரத மக்களுக்குத் தெரியாது. இப்பொழுது விக்கிரகங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. ஏனைய சமயங்கள் அனைத்தும் இப்பொழுது உள்ளன. ஆனால், ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இப்பொழுது இல்லை. இந்த விக்கிரகங்கள் பாரதத்தில் மாத்திரமே உள்ளன. பிரம்மாவின் ஊடாக ஸ்தாபனை இடம்பெறுகின்றது. ஆகையால், இந்த நற்செய்தியை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும், அப்பொழுது உங்களுக்குள் சந்தோஷமும் நிலைத்திருக்கும். இந்த நற்செய்தியை கண்காட்சிகளின் போது கொடுங்கள்: எல்லையற்ற தந்தையிடம் வந்து, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள்? எவருக்கும் தெரியாது. ஆகையாலே அவர்களுடைய முகம் மனிதர்களுடையதைப் போன்றிருந்தாலும், அவர்களின் நடத்தை குரங்குகளைப் போன்றுள்ளது என்று கூறப்படுகின்றது. உங்கள் முகம் மனிதர்களைப் போன்றிருந்தாலும் உங்கள் நடத்தை தேவர்களைப் போன்று ஆகுகின்றது. நீங்கள் மீண்டும் ஒருமுறை தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே பிறரும் இந்த முயற்சியைச் செய்வதற்கு நீங்கள் அவர்களுக்குத் தூண்டுதல் அளிக்க வேண்டும். கண்காட்சிகள் சேவை செய்வதற்கான சிறந்த முறையாகும். இல்லற பந்தனம் இல்லாதவர்கள் உதாரணத்திற்கு, ஓய்வு பெற்றவர்களுக்கும், விதவைகளுக்கும், குமாரிகளுக்கும் சேவை செய்வதற்குப் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. நீங்கள் சேவை செய்வதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் திருமணம் செய்வது என்றால் முற்றாக உங்களை அழித்துக் கொள்வது என்று அர்த்தமாகும். திருமணம் செய்யாதிருப்பதென்றால் நல்ல நிலைமையில் இருப்பதாகும். தந்தை கூறுகின்றார்: தூய்மையற்ற இந்த மரண உலகம் அழிக்கப்பட உள்ளது. நீங்கள் தூய உலகிற்குச் செல்ல விரும்பினால், இந்தச் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் கண்காட்சிகளுக்கு மேல் கண்காட்சிகள் நடத்த வேண்டும். சேவை செய்கின்ற குழந்தைகள் சேவை செய்வதில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளார்கள். சிலர் பாபாவிடம் வினவுகின்றார்கள்: நான் வேலையை விடலாமா? பாபா நீங்கள் தகுதியானவரா என்று உங்களைப் பார்க்கின்றார். அதன் பின்னர் வேலையை விட்டு விலகி, இந்தச் சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர் உங்களுக்கு அனுமதியளிக்கின்றார். நீங்கள் அனைவருக்கும் இந்த நற்செய்தியைக் கொடுக்க வேண்டும்: தந்தை கூறுகின்றார்;: உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற வாருங்கள். நீங்கள் 5000 வருடங்களின் முன்னரும் உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோரினீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்து அதனைக் பெற்றுக் கொள்ளுங்கள். எனது வழிகாட்டலைப் பின்பற்றுங்கள். உங்களுக்குள் என்ன குறைபாடுள்ளது என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். இந்த பட்ஜை பயன்படுத்தி நீங்கள் அதிகளவு சேவை செய்யலாம். இந்த பட்ஜ் முதற்தரமானது. அது சொற்ப சதப் பெறுமதியாயினும், அதனைப் பயன்படுத்தி நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். மக்கள் தமது கல்விக்காக புத்தகங்கள் போன்றவற்றிற்காக அதிகளவு செலவழிக்கின்றார்கள். இங்கே புத்தகங்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள்; தந்தையின் உண்மையான மந்திரத்தை அனைவரின் காதுகளிலும் இரகசியமாகக் கூற வேண்டும். ஏனைய அனைவரும் பொய்யான மந்திரத்தையே கூறுகின்றார்கள். பொய்யான விடயங்களுக்கு எப்பெறுமதியும் கிடையாது. கற்களுக்கு அல்ல, வைரங்களுக்கே பெறுமதி உள்ளது. ஒவ்வொரு வாசகமும் நூறாயிரக்கணக்கான பெறுமதியானது என்ற புகழ் இந்த ஞானத்திற்கே பொருந்தும். பல சமயநூல்கள் உள்ளன என்று தந்தை கூறுகின்றார். அவற்றை நீங்கள் அரைக்கல்பமாக கற்றீர்கள். ஆனால் நீங்கள் அவற்றைச் செய்வதன் மூலம் எதனையும் அடையவில்லை. இப்பொழுது உங்களுக்கு ஞான இரத்தினங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் சமயநூல்களின் அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் தந்தையோ ஞானக் கடல். அவரது ஒவ்வொரு வாசகமும் நூறாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியைக் கொண்டது. அவற்றின் மூலமே நீங்கள் உலக அதிபதிகளாகவும், கோடானு கோடீஸ்வரர்கள் ஆகவும் ஆகுகின்றீர்கள். இந்த ஞானத்திற்குப் பெரும் புகழ் உள்ளது. அந்த சமயநூல்கள் போன்றவற்றை வாசிப்பதன் மூலம் நீங்கள் ஏழைகள் ஆகுகினீர்;கள். நீங்கள் இப்பொழுது இந்த ஞான இரத்தினங்களைத் தானமாக வழங்க வேண்டும். தந்தை பல இலகுவான வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் உங்கள் சொந்த தர்மத்தை மறந்ததால், நீங்கள் வெளியில் அலைந்து திரிய ஆரம்பித்தீர்கள். பாரதமக்களாகிய உங்களது ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு என்ன நடந்தது? 8.4 கோடி உயிரினங்களைப் பற்றிப் பேசியதால், எதுவும் புத்தியில் நிலைக்கவில்லை. இப்பொழுது தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுத்தீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் தமது தர்மத்திலும் கர்மத்திலும் சீரழிந்தார்கள். ஏனைய சமயங்கள் அனைத்தும் இருந்த போதும், இந்த ஆதி சனாதன தேவிதேவிதா தர்மம் இப்பொழுது இல்லை. இச் சமயம் இருந்த போது, ஏனைய சமயங்கள் எதுவும் இருக்கவில்லை. இது மிகவும் இலகுவான விடயமாகும்! இந்தத் தந்தை, இந்த தாதா, பிரஜாபிதா பிரம்மா என்பதால், நிச்சயமாக பல பிரம்மகுமாரிகளும் பிரம்மகுமார்களும் இருக்க வேண்டும். தந்தை வந்து உங்களைத் துன்பத் தோட்டம் ஆகிய இராவணனின் சிறையில் இருந்து விடுதலை அளிக்கின்றார். துன்பத் தோட்டம் என்றால் என்னவென்பதை எவருமே புரியாதுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: இது துன்ப உலகமாகும். அதுவோ சந்தோஷ உலகமாகும். உங்கள் அமைதி உலகையும், உங்கள் சந்தோஷ உலகையும் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். அவர்கள் அசரீரி உலகைப் பற்றிப் பேசுகின்றார்கள். இந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சிறப்பானவையாகும். இங்கே ஆங்கில மொழி தொடர்ந்தும் பேசப்படுகிறது. இப்பொழுது பல்வேறு மொழிகள் உள்ளன. மனிதர்களுக்கு எதுவும் புரிவதில்லை. இப்பொழுது நிர்குண் நிலையம் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான நிலையம் உள்ளது. நிர்குண் என்றால் தெய்வீக குணங்கள் அற்ற என்று அர்த்தமாகும். அவர்கள் அவ்வாறானதொரு கல்விக்கூடத்தை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாது அதற்கு நிர்குண் என்று பெயரிட்டுள்ளார்கள். பல கல்விக்கூடங்கள் உள்ளன. பாரதத்தில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் என்ற ஒரு கல்விக்கூடமே இருந்தது. அந்த நேரத்தில் வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்ல. எவ்வாறாயினும். சக்கரத்தின் கால எல்லை 5000 வருடங்கள் என்பதற்குப் பதிலாக, ஆயிரமாயிரமாகும் என்று மக்கள் கூறுகின்றார்கள். நீங்கள் அவர்களை அறியாமை என்ற இருளில் இருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் சேவை செய்ய வேண்டும். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருப்பினும், நீங்கள் சிவபாபாவின் யக்ஞத்தில் (யாகத்தில்) உண்டதன் பின்னர், சேவை செய்யாதிருந்தால், பாபாவின் வலதுகரமான தர்மராஜின் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். ஆகையால் நீங்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றீர்கள். சேவை செய்வது மிகவும் இலகுவாகும். அனைவருக்கும் மிகவும் அன்பாக விளங்கப்படுத்துங்கள். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட ஆலயத்திற்கோ அல்லது கங்கைக்கரைக்கோ செல்லும் பொழுது தந்தைக்கு அதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. பக்தர்கள் அதிகாலையில் எழுந்து ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். சமயப்பற்றுள்ளவர்களுக்கு விளங்கப்படுத்துவது இலகுவாகும். இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயங்களில் சேவை செய்வது மிகவும் சிறப்பாகும். நல்லது, அங்கு (ஆலயத்திற்கு) சென்று விளங்கப்படுத்துங்கள்: சிவபாபாவே அவர்களை (இலக்ஷ்மியையும் நாராயணனையும்) அவ்வாறு ஆக்கினார். இக் காடு எரியூட்டப்பட்டு அனைத்தும் அழிக்கப்பட உள்ளது. உங்கள் பாகமும் முடிவிற்கு வரும். அதன் பின்னர் நீங்கள் அங்கு சென்று இராஜகுடும்பத்தில் பிறப்பீர்கள். நீங்கள் முன்னேறிச் செல்கையில், நீங்கள் எவ்வாறு இராச்சியத்தைக் கோருவீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். நாடகத்தில் என்ன உள்ளது என்பது முன்னரே உங்களுக்கு அறிவிக்கப்பட மாட்டாது. நீங்கள் என்ன அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். தானதர்மங்கள் அதிகளவு செய்தவர்கள் இராஜகுடும்பத்தில் பிறப்பெடுப்பார்கள். அரசர்களுக்கு அதிகளவு செல்வம் உள்ளது. நீங்கள் இப்பொழுது இந்த ஞானஇரத்தினங்களைத் தானமாக வழங்குகின்றீர்கள். இந்த ஞானம் பாரதமக்களுக்கானதாகும். அவர்களிடம் கூறுங்கள்: ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. தூய்மையாக்குபவரான தந்தை இப்பொழுது வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! இது மிகவும் இலகுவானது! ஆயினும், அவர்களின் புத்தி அதிகளவு தமோபிரதானாக உள்ளதால் அவர்களால் எதனையும் கிரகிக்க முடியாதுள்ளது. அவர்கள் விகாரங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளார்கள். பல வகையான மிருகங்களும் உள்ளன. சில அதிகளவு கோபமுடையவை. மிருகங்களின் ஒவ்வொரு இனமும் வெவ்வேறு சுபாவமுடையது. அவை வெவ்வேறு வகையில் துன்பத்தைக் கொடுக்கின்றன. காமவாளைப் பயன்படுத்துதலே அதிகளவு துன்பத்தை விளைவிக்கின்ற விகாரமாகும். இராவண இராச்சியம் விகாரமான இராச்சியமாகும். தந்தை ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகின்றார். பல நல்ல புத்திரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பந்தனத்தில் உள்ளவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். உண்மையில், அவர்களுக்கு ஞானோதயம் கிடைக்குமாயின், அவர்களை எவராலும் பந்தனத்தில் வைத்திருக்க முடியாது. எவ்வாறாயினும், அவர்களுக்கு இன்னமும் அதிகளவு பற்று என்ற பந்தனம் உள்ளது. சந்நியாசிகளும் தமது வீட்டை நினைவு செய்கின்றார்கள். இந்த பந்தனத்தைத் துண்டிப்பது மிகவும் கடினமாகும். நீங்கள் இப்பொழுது உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை மறக்க வேண்டும். ஏனெனில் இப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. உங்கள் சொந்த சரீரத்தையும் மறந்து, உங்களை ஆத்மாக்கள் எனக் கருதி, பாபாவை நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் உங்கள் 84 பிறவிகளின் பாகத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு முன்னர் எவராலும் வீடு திரும்ப முடியாது. இந்த நாடகம் இப்பொழுது நிறைவு பெற இருப்பதால், நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப உள்ளீர்கள் என்பதையிட்டு குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். உங்கள் பாகம் இப்பொழுது முடிவடைகின்றது. எனவே வீடு திரும்புவதில் நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டும். பாபாவை அதிகளவு நினைவு செய்யுங்கள். இந்த நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் முதலில் வீடு திரும்புவீர்கள், அதன் பின்னர் நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் செல்வீர்கள். இவ் உலகில் இருந்து சிலர் விரைவில் விடுதலை அடைய விரும்புகின்றார்கள், ஆனால் அவர்களால் எங்கு செல்ல முடியும்? எல்லாவற்றிற்கும் முதலில், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். முதலில் உங்கள் சொந்த நாடியை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் எந்தளவிற்கு தகுதியானவர் ஆகியுள்ளீர்கள் என்றும் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும் பொழுது என்ன செய்வீர்கள் என்றும் உங்களையே வினவுங்கள். முதலில், நீங்கள் தகுதியானவர்கள் ஆக வேண்டும். நீங்கள் தந்தையின் தகுதியான குழந்தைகள் ஆக வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனுமே அதிகபட்ச தகுதியுடையவர்கள். கடவுளே சில குழந்தைகளையிட்டுக் கூறுகின்றார்: இவர் மிகவும் சிறந்தவர், அவர் சேவை செய்வதற்குத் தகுதியானவர். சிலரைப் பொறுத்தவரை அவர் கூறுகின்றார்: இவர் தகுதியற்றவர். அவர் தனது சொந்த அந்தஸ்தைக் காரணமின்றி அழித்துக் கொள்கின்றார். தந்தை உண்மையை மாத்திரமே பேசுகின்றார். அவர்கள் கூவி அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே வாருங்கள்! வந்து, சந்தோஷ உலகிற்கு எங்களை அதிபதிகள் ஆக்குங்கள். அவர்கள் எல்லையற்ற சந்தோஷத்திற்காக வேண்டுகின்றார்கள். எனவே தந்தை கூறுகின்றார்: சிறுதளவு சேவை செய்வதற்கான தகுதியையேனும் பெறுங்கள்! இந்த நற்செய்தியை எனது பக்தர்களுக்குக் கொடுங்கள்: சிவபாபா இப்பொழுது ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவு செய்து, தூய்மையாகும் போது, நீங்கள் தூய உலகிற்கு அதிபதிகள் ஆகுவீர்கள். இந்தப் பழைய உலகம் எரியூட்டப்பட உள்ளது. உங்கள் முன்னிலையில் உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும் காணும் பொழுது, அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்பட வேண்டும். நாங்கள் அவர்களைப் போன்று ஆக வேண்டும். நாள் முழுவதும் நீங்கள் இதனை உங்கள் புத்தியில் வைத்திருந்தால், நீங்கள் எவ்வகையிலும் அசுரத்தனமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். நாங்கள் அவர்களைப் போன்று ஆகுகின்றோம். அவ்வாறாயின், நாங்கள் எவ்வாறு மோசமாக நடந்து கொள்ள முடியும்? எவ்வாறாயினும், இது ஒருவரின் பாக்கியத்தில் இல்லையாயின், அவர் அத்தகைய வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க மாட்டார். அவர் வருமானத்தை ஈட்ட மாட்டார். உங்களால் மிகவும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். வீட்டில் அமர்ந்திருந்தவாறே, நீங்கள் அனைவரும் வருமானத்தை ஈட்டுவதுடன், பிறரும் அவ்வாறு செய்ய அவர்களைத் தூண்ட வேண்டும். வீட்டில் அமர்ந்திருக்கும் போதே நீங்கள் சுயதரிசன சக்கரத்தைச் சுழற்றி, பிறரும் சுயதரிசன சக்கரத்தை சுழற்ற அவர்களுக்கு உதவ வேண்டும். நீங்கள் எந்தளவிற்குப் பிறரை இவ்வாறு ஆக்குகின்றீர்களோ, அதற்கேற்ப நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். உங்கள் இலக்கும் இலட்சியமும் இலக்ஷ்மி நாராயணனைப்; போன்று ஆகுவதாகும். சூரிய வம்சத்தினரில் ஒருவராக வர விரும்புகின்றீர்களா என வினவப்படும் போது, உங்கள் கைகளை நீங்கள் உயர்த்துகின்றீர்கள். இப் படங்கள் கண்காட்சிகளுக்கு அதிகளவு பயனளிக்கும். நீங்கள் விளங்கப்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம். அதி மேலான தந்தை கூறுவதை மாத்திரமே நாங்கள் செவிமடுக்கின்றோம். பக்தி மார்க்கத்து விடயங்களைச் செவிமடுப்பதை நாங்கள் தவிர்க்கின்றோம். இப் படங்கள் மிகவும் சிறந்தவை. அவற்றைக் கொண்டு நீங்கள் அதிகளவு சேவை செய்யலாம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எந்தளவிற்குத் தகுதியானவர் ஆகியுள்ளீர்கள் என்று உங்கள் நாடியை சோதித்துப் பாருங்கள். தகுதியானவர் ஆகுவதுடன், நீங்கள் செய்கின்ற சேவைக்கான அத்தாட்சியைக் காட்டுங்கள். ஞானோதயம் பெறுவதன் மூலம் பந்தனத்தில் இருந்து விடுதலையடையுங்கள்.

2. ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உங்களுக்குள் இருக்கின்ற குறைபாடுகள் அனைத்தையும் அகற்றுங்கள். துன்பத்தை விளைவிக்கின்ற சுபாவங்கள் அனைத்தையும் துறந்து, சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள். ஞான இரத்தினங்களைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
விதி நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்வதன் மூலம் எப்பொழுதும் சக்திசாலி ஆகி, மேன்மையான பணியை நடைமுறையில் கொண்டு வருவீர்களாக.

மேன்மையான புதிய உலகின் விதி நிச்சயிக்கப்பட்டிருந்த போதிலும் சக்திசாலிகள் என்ற ஆசீர்வாதத்தைப் பெற்ற குழந்தைகள், அவர்களுடைய பணியைச் செய்வதற்குக் கர்ம தத்துவமும் அதன் பலனனும், முயற்சியும் அதன் வெகுமதியும், கருவியாகி பணிவைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் கருவி ஆகுகிறார்கள். உலகமக்கள் எந்தவொரு நம்பிக்கையையும் காண இயலாதிருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள்: இந்தப் பணி பல தடவைகள் நடைபெற்றது, இப்பொழுதும் நடைபெறுகிறது. இது ஏனெனில் சுயமாற்றத்தின் நடைமுறை நிரூபணத்தின் முன்னால் வேறு எந்தவித நிரூபணமும் தேவையில்லை. அத்துடன் இறைவனின் பணி எப்பொழுதும் வெற்றியே.

சுலோகம்:
சிறிதளவில் கூறி பெருமளவில் செய்கின்ற மேன்மையான இலக்கு உங்களை மகான்கள் ஆக்கும்.