10.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த உலகிலிருந்து மரணித்து, புதிய உலகிற்குச் செல்வதற்காக நீங்கள் இந்தப் பல்கலைகழகத்திற்கு வந்துள்ளீர்கள். உங்களுடைய அன்பு இப்பொழுது கடவுள் ஒருவர் மீதே இருக்கின்றது.

கேள்வி:
நீங்கள் செல்வந்தர்களாகுவதற்கு எந்த முறையில் தந்தையை நினைவுசெய்ய வேண்டும்?

பதில்:
தந்தை ஒரு புள்ளி ஆவார். ஒரு புள்ளியாகி, புள்ளியை நினைவுசெய்யுங்கள், நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒரு புள்ளியை (பூஜ்ஜியம்) எழுதுமபொழுது அது 10 ஆகுகின்றது, இன்னுமொரு பூஜ்ஜியத்தை அதன் பக்கத்தில் எழுதினால், அது 100 ஆகுகின்றது, பின்னர் அது 1000 ஆகுகின்றது. தந்தையை நினைவு செய்வதால் பூஜ்ஜியம் தொடர்ந்தும் சேர்க்கப்படுகின்றது, நீங்கள் தொடர்ந்தும் செல்வந்தர்களாக ஆகுகிறீர்கள். இந்த நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள்.

பாடல்:
விட்டிற்பூச்சிகளின் ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி.
இப்பாடலின் அர்த்தம் மிகவும் தனித்துவமானது! அன்பு எதற்காக உருவாக்கப்படுகிறது? யாருக்காக? கடவுளிற்காக, ஏனெனில் நீங்கள் இவ்வுலகிலிருந்து மரணிக்கும்பொழுது, நீங்கள் அவரிடம் செல்கிறீர்கள். உங்களுக்கு இவ்வாறான அன்பு வேறு எவர் மீதாவது உள்ளதா? அத்தகைய அன்பிற்காக நீங்கள் மரணிப்பீர்கள் என எண்ணுகிறீர்களா? எவராவது அத்தகைய அன்பைக் கொண்டுள்;ளார்களா? இப்பாடலின் அர்த்தம் மிகவும் அற்புதமானது! விட்டிற்பூச்சியானது ஒரு சுடர் மீது அன்பைக் கொண்டுள்ளதால், அதை வட்டமடித்துப் பின்னர் அச்சுவாலையிலேயே மரணிக்கின்றது. நீங்களும் தந்தை மீது அன்பைக் கொண்டிருக்கும்பொழுது, உங்களது சரீரத்தை விடவேண்டும், அதாவது தந்தையை நினைவுசெய்தவாறே உங்களது சரீரத்தை விடவேண்டும் என்று அர்த்தமாகும். இப்பாடலானது ஒரேயொருவருக்கு உரியது. அந்தத் தந்தை வரும்பொழுது அவர் மீது அன்பு கொண்டவர்கள் இவ்வுலகிலிருந்து மரணிக்க வேண்டும். நீங்கள் கடவுள் மீது அன்பு கொண்டிருக்கையில், மரணிக்கும்பொழுது எங்கு செல்வீர்கள்? நிச்சயமாகக் கடவுளிடமே செல்வீர்கள். மக்கள் கடவுளிடம் செல்வதற்காகத் தானங்கள், புண்ணியச் செயல்களைச் செய்து, யாத்திரைகள் போன்றவற்றிற்கும் செல்கிறார்கள். ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ளபொழுதும், கடவுளை நினைவுசெய்யுமாறு மக்கள் அவரிடம் கூறுகின்றனர். கடவுள் மிகவும் புகழ்வாய்ந்தவர்! அவர் வரும்பொழுது முழு உலகையுமே முடிவுக்குக் கொண்டு வருகிறார். நீங்கள் இப்பழைய உலகிலிருந்து மரணித்து, புதிய உலகிற்குச் செல்வதற்காக இப்பல்கலைக்கழகத்திற்கு வருகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். பழைய உலகானது நரகமாகிய, தூய்மையற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. தந்தை இப்பொழுது புதிய உலகிற்கான பாதையை உங்களுக்குக் காட்டுகிறார். என்னை நினைவுசெய்யுங்கள்! நான் தந்தையாகிய, சுவர்க்கக் கடவுள். நீங்கள் செல்வம், சொத்து, கட்டடங்கள் முதலியவற்றை அந்த லௌகீகத் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள். புத்திரிகள் ஆஸ்தியைப் பெறுவதில்லை. அவர்கள் மற்றவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர், அவர்கள் வாரிசுகள் ஆகமுடியாது என்று அதன் அர்த்தமாகும். கடவுளே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை; அனைவரும் அவரிடம் செல்ல வேண்டும். புதிய உலகில் வெகு சில மனிதர்களே இருப்பதனால், தந்தை நிச்சயமாக ஏதோ ஒருவேளையில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்க வேண்டும். பழைய உலகில் ஏராளமான மனிதர்கள் உள்ளனர். புதிய உலகில் சொற்ப மனிதர்களே இருப்பதுடன், அங்கே பெருமளவு சந்தோஷமும் இருக்கின்றது. பழைய உலகில் ஏராளமான மனிதர்கள் இருப்பதுடன், பெருமளவு துன்பமும் உள்ளது, இதனாலேயே அவர்கள் கூவி அழைக்கிறார்கள். பாபு (காந்திஜி) கூறுவதுண்டு: 'ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்!" அவருக்கு உண்மையில் அவரைத் தெரியாது. பரமாத்மா பரமதந்தையான கடவுளே தூய்மையாக்குபவர் என்றும், அவரே உலகிற்கு விடுதலையளிப்பவர் என்றும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். உலகிலுள்ள அனைவரும் இராமரையும், சீதையையும் நம்புகிறார்கள் என்பதல்ல. முழு உலகமுமே பரமாத்மா பரமதந்தையை விடுதலையளிப்பவராகவும், வழிகாட்டியாகவும் கருதுகிறது. அவர் உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கிறார். அச்சா, பின்னர் யார் உங்களுக்குத் துன்பத்தை விளைவிப்பவர்? தந்தை உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்க மாட்டார், ஏனெனில் அவரே தூய்மையாக்குபவர். அவரே உங்களைச் சந்தோஷ பூமியாகிய தூய உலகிற்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் அந்த ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகள். தந்தையைப் போன்றே குழந்தைகளும் இருப்பார்கள். ஒரு பௌதீகத் தந்தைக்குப் பௌதீகக் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், பரமாத்மாவாகிய பரமதந்தை உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காக வந்துள்ளார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அவருடைய குழந்தைகள் ஆகும்பொழுது நிச்சயமாக எங்களுடைய சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றோம். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். நீங்கள் மாணவர்கள் என்பதை மறக்க வேண்டாம். மதுவனத்தில் சிவபாபா புல்லாங்குழல் (முரளி) இசைக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. இங்கே அது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் அல்ல. கிருஷ்ணர் நடனமாடுவது, புல்லாங்குழல் இசைப்பது அனைத்துமே பக்தி மார்க்கத்திற்குரியவை. எவ்வாறாயினும், சிவபாபா மாத்திரமே ஞானமாகிய புல்லாங்குழலை இசைக்கிறார். மிக நல்ல பாடல்களை இயற்றும் மக்கள் பலரும் உங்களிடம் வருவார்கள்;;. பொதுவாக ஆண்களே பாடல்களை இயற்றுபவர்கள்;. நீங்கள் ஞானப் பாடல்களை மாத்திரம் பாடுவதனால், உங்களால் சிவபாபாவை நினைவுசெய்ய முடியும்;. தந்தை கூறுகிறார்: அல்ஃபாவாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! தந்தை ஒரு புள்ளி என அழைக்கப்படுகின்றார். வியாபாரிகள் ஒரு பூச்சியத்தை எழுதும்பொழுது, அவர்கள் அதைச் சிவபாபா என்றே கருதுகின்றார்கள். நீங்கள் ஒன்றிற்குப் பக்கத்தில் ஒரு பூச்சியத்தை எழுதும்பொழுது, அது 10 ஆகுகின்றது, இன்னொரு பூச்சியத்தைச் சேர்க்கும்பொழுது, அது 100; ஆகுகின்றது. பின்னர் இன்னொரு பூச்சியத்தை சேர்க்கும்பொழுது, அது 1000 ஆகுகின்றது. நீங்களும் சிவனை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவுக்கு அதிகமாகச் சிவனை நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவுக்கு அதிகமான பூச்சியங்கள் சேர்க்கப்படுவதுடன், நீங்கள் அரைக் கல்பத்திற்குச் செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். அங்கே ஏழைகள் எவரும் இருக்க மாட்டார்கள். அங்கே அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்; துன்பம் என்ற குறிப்பே இல்லை. தந்தையின் நினைவால் உங்களது பாவங்கள் தொடர்ந்து அகற்றப்பட்டு, நீங்கள் மிகவும் செல்வந்தர்களாக ஆகுகின்றீர்கள். இது உண்மையான தந்தையிடமிருந்து உண்மையான வருமானத்தைச் சம்பாதித்தல் என அறியப்படுகிறது. இவ்வருமானமே உங்களுடன் வரும். மனிதர்கள் அனைவரும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்வார்கள். நீங்களோ உங்கள் கைகளை நிறைத்தவாறே செல்வீர்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள்! தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: தூய்மை இருந்தால், நீங்கள் அமைதியையும், செழிப்பையும் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள், முதலில் தூய்மையாக இருந்தீர்கள், பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். சந்நியாசிகள் அரைவாசித் தூய்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்; உங்கள் துறவறமானது முழுமையானது. அவர்கள் (சந்நியாசிகள்) எவ்வளவு சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர்கள் சொற்ப சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள், துன்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்கள் முன்னர் என்றுமே சர்வவியாபகம் பற்றிப் பேசுவதில்லை. சர்வவியாபகம் பற்றிப் பேசுவதால் அவர்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினார்கள். உலகில் பலவகையான ஒன்றுகூடல்கள் உள்ளன, ஏனெனில் அவற்றின் மூலம் அவர்கள் ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றார்கள்; அதுவும் அவர்களின் வியாபாரமாகும். கூறப்படுகின்றது: சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆகுதல் என்ற வியாபாரத்தை விட ஏனைய வியாபாரங்கள் அனைத்தும் தூசைப் போன்றது. அரிதாகவே சிலர் இந்த வியாபாரத்தைச் செய்கின்றார்கள். தந்தைக்கு உரியவர்களாகிய பின்னர், நீங்கள் அனைத்தையும், உங்கள் சரீரத்தையும் கூட, தந்தைக்குக் கொடுக்கிறீர்கள், ஏனெனில், உங்களுக்குப் புதிய சரீரங்கள் வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்களால் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல முடியும். ஆனால் அது ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகினால் மாத்திரமே முடியும். எங்களைத் தூய்மையாக்குங்கள்! என்று நீங்கள் கிருஷ்ண பூமியில் கூற மாட்டீர்கள். இங்கு மனிதர்கள் அனைவரும் கூவியழைக்கின்றார்கள்: ஓ விடுதலையளிப்பவரே, வாருங்கள்! எங்களை இந்தப் பாவாத்மாக்கள் நிறைந்த உலகிருந்து விடுவியுங்கள்! தந்தை இப்பொழுது உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே செல்வது நல்லதாகும். மக்கள் அமைதியை விரும்புகின்றார்கள். அமைதி என்றால் என்ன? எவருமே செயல்கள் செய்யாமல் இருக்க முடியாது. அமைதி தாமத்திலேயே அமைதி இருக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள சரீரங்களை ஏற்றுச் செயல்களை ஆற்ற வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் செயல்களைச் செய்தாலும் உங்களுக்கு அமைதியுள்ளது. அமைதியற்ற மக்;கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள், அதனாலேயே அவர்கள் தாங்கள் எவ்வாறு அமைதியை பெறலாம் என வினவுகின்றார்கள். அமைதிதாமமே உங்கள் இல்லம் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். சத்தியயுகத்தில் அமைதியும் சந்தோஷமும் உள்ளன் அங்கே அனைத்தும் உள்ளது. உங்களுக்கு அது வேண்டுமா அல்லது அமைதி மாத்திரம் வேண்டுமா? இங்கே துன்பம் உள்ளதால், மக்கள் தூய்மையாக்குகின்ற தந்தையை இங்கே கூவியழைக்கின்றார்கள். மக்கள் கடவுளைச் சந்திப்பதற்காகவே பக்தி செய்கின்றார்கள். பக்தி முதலில் கலப்படமற்றதாகவும், பின்னர் அது கலப்படம் உள்ளதாகவும் ஆகுகின்றது. கலப்படமான பக்தியில் மக்கள் என்ன செய்கின்றார்கள் எனப் பாருங்கள். அனைத்தும் மிகத் தெளிவாக ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முதலில் யார் கடவுள் என நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை அவ்வாறாக்கியவர் யார்? அவரது முன்னைய பிறவியில் அவர் யாராக இருந்தார்? இவ்விடயங்களை நீங்கள் மிகவும் சாதுரியமாக விளங்கப்படுத்த வேண்டும். நல்ல சேவையைச் செய்கின்றவர்களின் இதயங்கள் அதனை அவதானிக்கின்றன. ஒரு பல்கலைகழகத்தில் நன்றாகக் கற்பவர்கள் நிச்சயமாக முன்னேறிச் செல்கிறார்கள். அது வரிசைக்கிரமமானது, இருப்பினும் சில மந்த புத்தியுள்ளவர்களும் இருக்கின்றார்கள். ஆத்மாக்கள் சிவபாபாவிடம் கூறுகின்றார்கள்: எனது புத்தியில் உள்ள பூட்டைத் திறவுங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் உங்கள் புத்தியில் உள்ள பூட்டைத் திறக்கவே வந்துள்ளேன். ஆனால் உங்கள் பூட்டானது இலகுவாகத் திறக்கப்படாத வகையில் உங்கள் செயல்கள் உள்ளன! அவ்வாறாயின் பாபாவினால் என்ன செய்ய முடியும்? பல பாவங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய குழந்தைகளையிட்டு பாபாவினால் என்ன செய்ய முடியும்? தாங்கள் போதுமானளவு கற்கவில்லை என ஆசிரியரிடம் கூறுவார்கள். ஆசிரியர் என்ன செய்வார்? ஆசிரியர் கருணை காட்ட மாட்டார். ஒருவேளை அவர் உங்களுக்கு மேலதிக நேரத்தைக் கொடுக்கக் கூடும். அது தடைசெய்யப்படுவதில்லை. கண்காட்சி பரந்தளவில்; திறக்கப்பட்டுள்ளன் அங்கே சென்று நீங்கள் பயிற்சி செய்யலாம். பக்தி மார்க்கத்தில் சிலர் உங்களை மாலையை உருட்டுமாறு கூறுகின்றார்கள். ஏனையோர் ஒரு மந்திரத்தை நினைவுசெய்யுமாறு கூறுகின்றார்கள். இங்கே தந்தை தனது சொந்த அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தையை நினைவுசெய்யுங்கள். இவ்வாறு செய்வதனால் நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். எனவே உங்கள் முழு ஆஸ்தியையும் தந்தையிடமிருந்து நீங்கள் மிகவும் நன்றாகப் பெற்றுக் கொள்ளுங்கள். இதிலும் தந்தை கூறுகின்றார்: என்றுமே விகாரத்தில் ஈடுபடாதீர்கள்! உங்களுக்கு விகாரத்தின் சுவை சிறிதளவு இருந்தாலும், அது அதிகரிக்கின்றது. ஒருமுறை சிகரட் புகைப்பிடித்த சுவை இருந்தாலும், சகவாசத்தில் வசப்படுவதால், அந்தப் பழக்கம் அதிகரிக்கும். பின்னர் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவது கடினமாகி விடுகின்றது. பின்னர் அவர்கள் அதிகளவு சாக்குப்போக்குகள் கூறுவார்கள். எந்த பழக்கங்களையும் வளர விடக்கூடாது. தீய பழக்கங்களை விட்டுவிட வேண்டும். தந்தை கூறுகின்றார்: வாழும்பொழுதே உங்கள் சரீரம் என்ற உணர்வைத் துறந்து, என்னை நினைவுசெய்யுங்கள். தூய உணவே போக்காகத் தேவர்களுக்குப் படைக்கப்படுகின்றது. ஆகையால் நீங்களும் தூய உணவை மாத்திரமே உண்ண வேண்டும். இக்காலத்தில், உங்களால் தூய நெய்யையேனும் பெற முடியாதுள்ளது; அதற்கு மாறாக அவர்கள் எண்ணெயைப் பயன்படுத்துகின்றார்கள். அங்கே எண்ணெய் போன்றவை இருக்க மாட்டாது. இங்கே அவர்கள் பால் பண்ணைகளில் தூய நெய், போலியான (கலப்படம் உள்ளது) நெய் இரண்டையும் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் இரண்டையும் 'தூய நெய் எனக் கூறியபொழுதிலும், அவற்றின் விலையில் ஒரு வித்தியாசம் உள்ளது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மலர்களைப் போன்று மலர்ந்து, மலர்ச்சியானவர்களாக இருக்க வேண்டும். சுவர்க்கத்தில் இயற்கை அழகுள்ளது. அங்கே தத்துவங்களும் சதோபிரதானாக உள்ளன. இங்குள்ள எவராலும் இலக்ஷ்மி நாராயணனைப் போன்று இயற்கை அழகை உருவாக்க முடியாது. தங்கள் பௌதீகக் கண்களால் அவர்களை எவராலும் காண முடியாது. ஆம், அவர்கள் காட்சிகளைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் காட்சிகளைக் கண்ட பின்னரும், அதேபோன்ற படங்களை எவராலும் உருவாக்க முடியாது. ஆம், ஒரு ஓவியருக்கு ஒரு காட்சி கிடைத்து, அவர் அந்நேரத்திலிருந்து தொடர்ந்தும் ஒரு படத்தை வரைய ஆரம்பித்தாலும் கூட அது சிரமமாகவே இருக்கும். ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா இப்பொழுது எங்களை வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்காகவே வந்திருக்கின்றார். நாங்கள் எங்கள் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறப் போகின்றோம். எங்களின் 84 பிறவிகள் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன. அத்தகைய எண்ணங்களை உங்கள் புத்தியில் கொண்டிருப்பதனால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். விகாரத்தைப் பற்றிய எண்ணம் சற்றேனும் இருக்கக்கூடாது. தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. ஆகையாலேயே திரௌபதி கூவியழைத்தார். அவர் ஐந்து கணவர்களைக் கொண்டிருக்கவில்லை. அவர் தன்னைக் காப்பாற்றுமாறு கூவியழைத்தார், ஏனெனில் துச்சாதனன் அவளைத் துயில் உரிந்தான். அவர் எவ்வாறு 5 கணவர்களைக் கொண்டிருக்க முடியும்? அவ்விடயங்கள் சாத்தியமில்லை! குழந்தைகளாகிய நீங்கள் புதிய கருத்துக்களைத் தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதால், நீங்கள் படங்களைத் தொடர்ந்தும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எவற்றையாவது மாற்றி அதிக வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும். ஒரு குறுகிய காலத்தில் நீங்கள் பாரதத்தைத் தேவதைகளின் பூமியாக மாற்றுவீர்கள் என எழுதுங்கள்; நீங்கள் இந்தச் சவாலை விடுக்க வேண்டும். தந்தை தனது குழந்தைகளுக்குக் கூறுவாhர்: மகன் தந்தையைக் காட்டுகிறார், தந்தை மகனைக் காட்டுகிறார். எந்தத் தந்தை? சிவனும், சாலிகிராம்களும்; அவர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிவபாபா விளங்கப்படுத்துபவற்றைப் பின்பற்றுங்கள். 'தந்தையை பின்பற்றுங்கள்" என அவரைப் பற்றியே கூறப்படுகிறது. நீங்கள் லௌகீகத் தந்தையர்களைப் பின்பற்றியதால், தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். உங்களைத் தூய்மையாக்குவதற்காக, அவர் தன்னைப் பின்பற்றச் செய்கிறார். வேறுபாடு ஒன்று உள்ளது. 'இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, என்னைப் பின்பற்றித் தூய்மையாகுங்கள்" எனத் தந்தை கூறுகிறார். என்னைப் பின்பற்றுவதால் மாத்திரமே, நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். உங்களுடைய லௌகீகத் தந்தையர்களைப் பின்பற்றுவதால், நீங்கள் 63 பிறவிகளாக ஏணியில் கீழிறங்கி வந்தீர்கள். தந்தையைப் பின்பற்றுவதால் நீங்கள் மேலேறுகிறீர்கள். நீங்கள் தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: இந்த இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரக் கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்தன. உங்களுக்குத் தந்தையை தெரியும், நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். எவராலும் இரண்டறக் கலக்க முடியாது; அவர்கள் மீண்டும் வர வேண்டும். தந்தை உங்களுக்குத் தினமும் விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். உங்களைத் தூய்மையாக்குவதற்காக, அப்பால் உள்ள தந்தை உங்களுக்குத் தூய்மை எனும் ஆஸ்தியைக் கொடுக்கிறார். இதனாலேயே, 'எங்களைத் தூய்மையாக்குங்கள்!" என மக்கள் எல்லையற்ற தந்தைக்குக் கூறுகிறார்கள். அவரே தூய்மையாக்குபவர். லௌகீகத் தந்தை 'தூய்மையாக்குபவர்" என அழைக்கப்பட மாட்டார். 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!" என அவரும் (லௌகீகத் தந்தை) தொடர்ந்தும் கூவியழைக்கிறார். எனவே, அனைவருக்கும் இரண்டு தந்தைமாரினதும் அறிமுகத்தைக் கொடுங்கள். உங்கள் லௌகீகத் தந்தையர்கள் உங்களைத் திருமணம் முடித்து, தூய்மையற்றவர்கள் ஆகும்படி உங்களைக் கூறுகின்றனர், இந்த உலகிற்கு அப்பால் உள்ள தந்தையோ உங்களைத் தூய்மையாகுமாறு கூறுகிறார். 'என்னை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையாகுவீர்கள்" என அவர் கூறுகிறார். ஒரேயொரு தந்தையே அனைவரையும் தூய்மையாக்குகிறார். இந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் சிறந்தவை. பல்வேறு வகையான ஞானக் கருத்துக்களைக் கடைந்து, அவற்றைப் பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். இது உங்களுடைய தொழிலாகும். நீங்கள் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர்கள். அப்பாலுள்ள தந்தை இப்பொழுது கூறுகிறார்: இப்பொழுது தூய்மையாகுங்கள், ஏனெனில் விநாசம் முன்னே நிற்கின்றது. நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீங்கள் நிச்சயமாக அப்பாலுள்ள தந்தையின் வழிக்காட்டல்களைப் பின்பற்ற வேண்டும். 'நான் அப்பாலுள்ள தந்தையைப் பின்பற்றி, தூய்மையற்றவராகுவதை நிறுத்துவேன்" என்ற இந்தச் சத்தியத்தைக் கண்காட்சியில் நீங்கள் எழுத வேண்டும். 'நான் இந்த உத்தரவாதத்தைத் தந்தைக்கு கொடுக்கிறேன்" என எழுதுங்கள். அனைத்தும் தூய்மையிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளான நீங்கள் இரவுபகலாகச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். அல்பாவாகிய தந்தை, எங்களுக்கு பீட்டாவாகிய, இராச்சியமான, சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்றார். சிவனின் பிறந்த நாள் என்றால், பாரத சுவர்க்கத்தின் பிறந்த நாளாகும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமாகும். தாயாகிய கீதையே என்று கூறப்படுகிறது. நீங்கள் தந்தையிடமிருந்து மாத்திரமே உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். சிவபாபாவே கீதையைப் படைப்பவர். நீங்கள் அப்பாலுள்ள தந்தையிடமிருந்து, தூய்மை எனும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறை மாணவர்கள் என்ற விழிப்புணர்வை எப்பொழுதும் பேணுங்கள். எந்த அசுத்தமான பழக்கத்தையும் உருவாக்காதீர்கள், ஆனால் அவற்றை முடித்துவிடுங்கள். விகாரம் பற்றிய சிறிதளவு எண்ணங்கள் கூட இருக்கக்கூடாது.

2. நீங்கள் உயிர்வாழும்பொழுதே சரீர உணர்வை மறந்து, தந்தையை நினைவு செய்யுங்கள். பல்வேறு ஞானக் கருத்துக்களைக் கடைந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற தொழிலைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருந்து, உங்களுடைய பிறப்புரிமையின் போதை மூலம் உங்கள் தகைமைகளை உங்கள் இலக்கிற்குச் சமமாக ஆக்குவீர்களாக.

உங்கள் லௌகீக வாழ்வில், உங்கள் பௌதீகச் சொத்து உங்களுடைய பிறப்புரிமை ஆகும். அதேபோன்று, பிராமண வாழ்வில் தெய்வீகக் குணங்கள், ஆன்மீகச் சந்தோஷம், சக்தி எனும் செல்வம் உங்கள் பிறப்புரிமை ஆகும். உங்களுடைய பிறப்புரிமையின் போதை இயல்பான முறையில் இருக்கட்டும், அப்பொழுது அதற்கு முயற்சி எதனையும் செய்யத் தேவையில்லை. இப் போதையைக் கொண்டிருப்பதனால், உங்கள் இலக்கிற்கேற்ப, உங்கள் தகைமைகள் அமையும். உங்களை நீங்கள் உள்ளவாறும், எவ்வாறு இருக்கின்றீர்கள் எனவும் அறிந்து ஏற்றுக் கொள்ளும்பொழுதும், மேன்மையான தந்தையையும், மேன்மையான குடும்;பத்தையும் அறிந்து கொள்ளும்பொழுதும், மேன்மையான பாக்கியத்தை உடையவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் ஆதி ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்பொழுது, ஒவ்வொரு செயலையும் செய்யுங்;கள், நீங்கள் இலகுவில் ஒரு வெற்றி நட்சத்திரம் ஆகுவீர்கள்.