10.03.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     01.05.84     Om Shanti     Madhuban


விரிவாக்கத்தின் சாரத்திலேயே அழகு உள்ளது.


பாப்தாதா விரிவாக்கத்தையும் விரிவாக்கத்தில் சாரத்தின் ரூபத்தில் இருக்கும் குழந்தைகளையும் பார்க்கிறார். விரிவாக்கம் இந்த இறை மரத்தின் அழகு ஆகும். சாரத்தின் ரூபத்தில் உள்ள குழந்தைகள் இந்த மரத்தின் பழங்கள் ஆவார்கள். விரிவாக்கம் எப்போதும் பல்வகை ரூபத்தில் உள்ளது. அனைவரும் எப்போதும் பல்வகை ரூபத்தின் சிறப்பை விரும்புவார்கள். பல்வகையின் சிறப்பு நிச்சயமாக மரத்தின் அலங்காரமே. ஆனால், சாரத்தின் ரூபத்தில் உள்ள பழமே சக்திவாய்ந்தது. விரிவாக்கத்தைக் காணும்போது நீங்கள் எப்போதும் சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால், நீங்கள் பழத்தைப் பார்க்கும்போது, சதா சக்திசாலியாக இருக்கும் நம்பிக்கை ஏற்படுகிறது. பாப்தாதாவும் விரிவாக்கத்துக்கு இடையே சாரத்தைப் பார்க்கிறார். விரிவாக்கத்துக்கு இடையே சாரம் மிகவும் அழகாக உள்ளது. நீங்கள் அனைவரும் இதை அனுபவம் செய்கிறீர்கள். சாரத்தின் சதவீதத்திற்கும் விரிவாக்கத்தின் சதவீதத்திற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. உங்களுக்கும் இது தெரியும் அல்லவா? விரிவாக்கத்தின் சிறப்பியல்பு அதற்கே உரியது. விரிவாக்கம் அத்தியாவசியமானது. ஆனால், சாரத்தின் ரூபத்தில் உள்ள அதன் பழமே பெறுமதி வாய்ந்தது. இதனாலேயே, பாப்தாதா இரண்டையும் பார்க்கும்போது களிப்படைகிறார். விரிவாக்கமான இலைகளையும் அவர் நேசிக்கிறார். அத்துடன் மலர்களையும் பழங்களையும் நேசிக்கிறார். இதனாலேயே, இங்கு வந்து உங்களைச் சந்திப்பதற்காக, பாப்தாதாவும் குழந்தைகளான உங்களைப் போன்று ஒரு சேவையாளர் ஆகவேண்டியுள்ளது. உங்களைப் போன்ற ரூபத்தில் அவர் வரும்வரை, பௌதீக ரூபத்தில் சந்திப்பு நிகழ முடியாது. நீங்கள் விரிவாக்கத்தின் ஆத்மாக்களாக இருந்தாலென்ன அல்லது சாரத்தின் ரூபத்தில் உள்ள ஆத்மாக்களாக இருந்தாலென்ன, இரண்டு வகையினரும் தந்தைக்குச் சொந்தமானவர்கள். அதாவது, இருவரும் அவரின் குழந்தைகள் ஆகியுள்ளார்கள். இதனாலேயே, தந்தை நிச்சயமாகக் குழந்தைகள் அனைவருக்கும் வரிசைக்கிரமமாக, தந்தையைச் சந்திப்பதற்கான அவர்களின் ஆசையின் பலனைக் கொடுக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் தமது பக்தியின் தற்காலிகப் பலனை நிச்சயமாகப் பெறும்போது, குழந்தைகளான நீங்களும் நிச்சயமாகக் குழந்தைகளாக உங்களின் உரிமையைப் பெறுவீர்கள்.

இன்று, பாபா முரளி கூறுவதற்கு வரவில்லை. நீங்கள் அனைவரும் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளீர்கள். எனவே, பாபா சந்திப்பைக் கொண்டாடுவதற்காக அவரின் சத்தியத்தை நிறைவேற்றுவதற்கு வந்துள்ளார். சிலர் தந்தையை அன்புடன் சந்திக்கிறார்கள். சிலர் ஞானத்துடன் சந்திக்கிறார்கள். சிலர் சமமாக இருக்கும் ரூபத்தில் சந்திக்கிறார்கள். எவ்வாறாயினும், தந்தை நிச்சயமாக அனைவரையும் சந்திப்பார். இன்று, சகல திசைகளில் இருந்தும் வந்துள்ள குழந்தைகள் அனைவரினதும் சிறப்பியல்பை பாபா பார்த்தார். முதலில், பாபா டெல்லியின் சிறப்பியல்பைப் பார்த்தார். அது சேவை ஆரம்பித்த இடம். ஆரம்பத்திலும், சேவையாளர்களான நீங்கள் சேவையை ஆரம்பிப்பதற்கு ஜமுனை நதிக்கரைகளுக்கே சென்றீர்கள். நீங்கள் ஜமுனை நதிக்கரைக்களுக்குச் சென்று சேவை செய்தீர்கள், அல்லவா? சேவையின் முதல் விதைகள் டெல்லியில் ஜமுனை நதிக்கரைகளிலேயெ விதைக்கப்பட்டன. எனவே, இராச்சியத்தின் மாளிகைகளும் ஜமுனை நதிக்கரைகளிலேயே இருக்கும். இதனாலேயே, கோபி வல்லபருடன் (கோப, கோபியரின் தந்தை) ஜமுனை நதிக்கரையிலே கோபர்களும் கோபிகைகளும் நினைவுகூரப்படுகிறார்கள். ஸ்தாபனையின் சக்திசாலிக் குழந்தைகளின் தொலைக்காட்சியை பாப்தாதா பார்த்தார். எனவே, டெல்லியைச் சேர்ந்தவர்கள் நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் சிறப்பியல்பைக் கொண்டிருக்கிறார்கள். அது சேவையின் அத்திவாரத்திற்கான இடமும் இராச்சியத்திற்கான அத்திவாரமும் ஆகும். அத்திவார இடத்தைச் சேர்ந்த நீங்கள் மிகவும் சக்திசாலிகள், அல்லவா? டெல்லியைச் சேர்ந்தவர்களுக்குச் சதா சக்திசாலிகளாக இருக்கும் பொறுப்பு இருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த கருவி ஆத்மாக்களான உங்களிடம் சதா இந்தப் பொறுப்புக் கிரீடம் உள்ளதல்லவா? நீங்கள் சிலவேளைகளில் அந்தக் கிரீடத்தைக் கழற்றுவதில்லை, அல்லவா? டெல்லிவாசியாக இருத்தல் என்றால், சதா பொறுப்புக்கிரீடத்தை அணிந்திருத்தல் என்று அர்த்தம். டெல்லியில் வசிப்பவராக இருக்கும் சிறப்பியல்பை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சதா இந்தச் சிறப்பியல்பை நடைமுறைப்படுத்துங்கள். அச்சா.

மற்றைய நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் கர்நாடகாவில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் பக்தி, அன்பின் மிக நல்ல நாடகங்களை நடிக்கிறார்கள். ஒருபுறம், ஆழமான பக்தி (நம்பிக்கை) உள்ளது. அவர்கள் மிக, மிக அன்பான ஆத்மாக்கள். மறுபுறம், உலகைப் பொறுத்தவரை, பிரபல்யமான, கல்விமான்களும் கர்நாடகாவில் இருக்கிறார்கள். எனவே, அங்கு இரண்டும் உள்ளது. அன்பான உணர்வுகளைக் கொண்டிருப்பவர்களும், பதவியில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆகவே, ஒலியானது கர்நாடகாவில் இருந்து பரவ முடியும். அந்த பூமி உரத்த சத்தத்தை எழுப்பக்கூடியது. ஏனெனில், அந்த ஆத்மாக்கள் விஐபி களாக இருந்தாலும், அந்த இடத்தில் அன்பும் நம்பிக்கையும் இருப்பதனால், அவர்கள் பணிவானவர்கள். எனவே, அவர்களால் இலகுவாக இதைச் செய்ய முடியும். கர்நாடகா இந்த விசேட பணிக்குக் கருவி ஆகும். எப்போதும் உங்களின் சிறப்பியல்பான அன்பையும் பணிவையும் சேவையில் உங்களுடன் வைத்திருங்கள். எத்தகைய சூழல் வந்தாலும் இந்தச் சிறப்பியல்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். இந்த இரண்டுமே கர்நாடகா படகின் இரண்டு துடுப்புக்கள் ஆகும். இவை இரண்டையும் எப்போதும் வைத்திருங்கள். ஒன்று முன்னாலும் மற்றையது பின்னாலும் என்று இருக்க வேண்டாம். அப்போது, சேவையெனும் படகானது இந்த இடத்தின் சிறப்பியல்பின் வெற்றியை வெளிப்படுத்தும். இரண்டினதும் சமநிலையானது உங்களின் பெயரைப் பெருமைப்படுத்தும். அச்சா.

சதா தங்களை சாரத்தின் ரூபமாக, அதாவது, பழத்தின் ரூபமாக ஆக்கிக் கொள்பவர்களுக்கும், சதா சாரத்தின் ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன், மற்றவர்களையும் சாரத்தின் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கச் செய்பவர்களுக்கும், சதா சக்திசாலி ஆத்மாக்களுக்கும், சக்திவாய்ந்த நினைவின் சொரூபங்களாக இருக்கும் சக்திசாலி சேவையாளர்களுக்கும், சமமாக இருக்கும் ரூபத்தில் சந்திப்பைக் கொண்டாடும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

இறைவனின் முதலாவது மேன்மையான படைப்பு பிராமணர்களே. - 03ஃ05ஃ84

இன்று, படைப்பவரான தந்தை, தனது படைப்பைப் பார்க்கிறார். அதாவது, தனது முதல் படைப்பான பிராமண ஆத்மாக்களைப் பார்க்கிறார். மேன்மையான பிராமண ஆத்மாக்களான நீங்களே, முதலாவது மேன்மையான படைப்பாகும். அதனால் எஞ்சிய படைப்பை விட அதிகமாக நேசிக்கப்படுகிறீர்கள். பிரம்மாவினூடான அதியுயர்ந்த படைப்பானது, வாய்வழித்தோன்றல்களான நீங்களே. மகாத்மாக்களான நீங்களே. பிராமண ஆத்மாக்களான நீங்களே. பிராமண ஆத்மாக்கள் தேவர்களை விட அதிமேலானவர்கள் எனப் புகழப்படுகிறார்கள். பிராமணர்களே பின்னர் தேவதைகளாகவும் அதன்பின்னர் தேவர்களாகவும் ஆகுபவர்கள். எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையே ஆதி பிதாவினூடாகப் (முதல் தந்தை) பெறப்படும் முதல் சங்கமயுக வாழ்க்கை ஆகும். சங்கமயுகத்தின் முதல்வாசிகள் பிராமண ஆத்மாக்களே. அவர்கள் ஞான சொரூபங்கள். திரிகாலதரிசி மற்றும் திரிநேத்ரி ஆவார்கள். பௌதீக உலகில் பௌதீக ரூபத்தில் பரமாத்மாவைச் சந்திக்கும் ஆத்மாக்கள், சகல உறவுமுறைகளிலும் அன்பின் பொறுப்பை நிறைவேற்றுகிறார்கள். அத்துடன் அவர்கள் இறை பொக்கிஷங்கள் அனைத்தினதும் உரிமையையும் பெற்றுள்ளார்கள். பௌதீக ரூபத்தில் பிராமணர்களால் பாடப்படும் பாடல் இதுவே. நாம் தந்தை பிரம்மாவினூடாகத் தந்தை சிவனைக் கண்டோம், அவரை அடைந்தோம் என்ற பாடல் தேவ வாழ்க்கைக்கு உரியது அல்ல. பௌதீக உலகில் உங்களின் பௌதீகக் கண்களால் இரு தந்தைகளையும் காணுதல், அவர்களுடன் உண்ணுதல், அவர்களுடன் நடத்தல், அவர்களுடன் பேசுதல், அவர்கள் கூறுவதைக் கேட்டல், ஒவ்வொரு தெய்வீகச் செயலையும் அனுபவம் செய்தல், ரூபம் அற்ற ஒரேயொருவரை ரூபத்தில் காணுதல் என்பவை பிராமண வாழ்க்கை வாழும் ஒருவரின் பாக்கியம் மட்டுமே.

நாம் இறைவனைத் தந்தையின் ரூபத்தில் கண்டோம். நாம் அவரைத் தாய், நண்பர், சகோதரர், மணவாளன் என்ற ரூபங்களில் கண்டோம் எனப் பிராமணர்கள் மட்டுமே கூறுவார்கள். ரிஷிகள், முனிவர்கள், தபஸ்விகள், பண்டிதர்கள், சமயநூல்களைக் கற்றவர்கள் அனைவரும் புகழையே பாடுகிறார்கள். அவர்களுக்கு தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே உள்ளது: அவர் ஏதாவதொரு வேளையில் வருவார். நாம் நிச்சயமாக ஏதாவதொரு வேளையில் அவரைச் சந்திப்போம். அவர்கள் கல்பத்தில் பல பிறவிகளாக அவரைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், பிராமண ஆத்மாக்களோ ஒரு பிரகாசத்துடனும் நம்பிக்கையுடனும் போதையுடனும் தமது இதயபூர்வமான சந்தோஷத்துடனும் தமது தந்தையைக் கண்டுகொண்டதாகக் கூறுகிறார்கள். அவர்கள் இதற்கான தாகத்துடன் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள்.

பிராமண வாழ்க்கை வாழுதல் என்றால், அழியாத, முடிவற்ற, ஆட்ட அசைக்க முடியாத பேறுகள் அனைத்தினதும் சொரூபமாக இருக்கும் வாழ்க்கை ஆகும்.
இந்தக் கல்ப விருட்சத்தின் அத்திவாரம் பிராமண வாழ்க்கையே. இது அதன் வேர்கள் ஆகும்.
இந்த மரம் பிராமண வாழ்க்கையின் அடிப்படையிலேயே வளருகிறது.
பிராமண வாழ்க்கையின் வேர்களினூடாகவே, பல்வகை ஆத்மாக்கள் அனைவரும் விதையில் இருந்து முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான பேறு என்ற நீரைப் பெறுகிறார்கள்.
பிராமண வாழ்க்கையின் ஆதாரத்தினாலேயே கிளைகளும் கொப்புகளும் வளருகின்றன.
எனவே, பிராமண ஆத்மாக்களே பல்வகையான சந்ததிகள் அனைத்தினதும் மூதாதையர்கள் ஆவார்கள்.
பிராமண ஆத்மாக்களே உலகின் அதிமேன்மையான பணியின் புதுப்பித்தலை, ஆரம்ப விழாவைச் (முகூரத்) செய்பவர்கள்.
பிராமண ஆத்மாக்களே யாகம் வளர்க்கும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவார்கள். இந்த ஞானயாகத்தில் சுய இராச்சியத்திற்கான குதிரை அர்ப்பணிக்கப்படுகிறது.
பிராமண ஆத்மாக்கள் ஒவ்வோர் ஆத்மாவினதும் 84 பிறவிகளின் ஜாதகத்தையும் அறிந்தவர்கள்.
பிராமண ஆத்மாக்கள், பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து ஆத்மாக்கள் அனைவருக்கும் மேன்மையான பாக்கியத்தின் மேன்மையான ரேகையை வரைபவர்கள்.
பிராமண ஆத்மாக்கள் ஆத்மாக்களை முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கான மகாயாத்திரையில் அழைத்துச் செல்வதற்குக் கருவிகள் ஆகுகின்றார்கள்.
பிராமண ஆத்மாக்கள் ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒன்றுதிரட்டிய முறையில் தந்தையுடன் நிச்சயதார்த்தம் செய்பவர்கள்.
பிராமண ஆத்மாக்களே தமது கரங்களை இறைவனின் கரத்துடன் இணைக்கும் நூலைக் கட்டுபவர்கள்.
பிராமண ஆத்மாக்களே பிறவி பிறவியாக சதா தூய்மையாக இருப்பதற்கான நூலைக் கட்டுபவர்கள்.
பிராமண ஆத்மாக்கள் அமரத்துவக் கதையை அனைவருக்கும் கூறி, அனைவரையும் அமரர்கள் ஆக்குபவர்கள்.

ஆத்மாக்களான நீங்கள் எத்தனை மகத்தானவர்கள் என்றும் எவ்வளவு பொறுப்புமிக்கவர்கள் என்றும் புரிந்து கொண்டீர்களா? நீங்களே மூதாதையர்கள். மூதாதையர்கள் எத்தகையவர்களோ, அவ்வாறே அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியும் இருக்கும். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீங்கள் உங்களின் குடும்பத்திற்கோ அல்லது சேவை இடத்திற்கோ மட்டும் பொறுப்பானவர்கள் அல்ல. நீங்கள் எல்லைக்குட்பட்ட இத்தகைய இடங்களுக்கு மட்டும் பொறுப்பானவர்கள் இல்லை. ஆனால், நீங்கள் உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆதார மூர்த்திகள், ஈடேற்றும் ரூபங்கள் ஆவீர்கள். ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் எல்லையற்ற பொறுப்பு உள்ளது. நீங்கள் உங்களின் எல்லையற்ற பொறுப்பை நிறைவேற்றாவிட்டால், உங்களின் நேரத்தை உங்களின் லௌகீக இல்லறத்தை அல்லது உங்களின் அலௌகீக இல்லறத்தை, சிலவேளைகளில் பறக்கும் ஸ்திதியுடனும், சிலவேளைகளில் ஏறும் ஸ்திதியுடனும், சிலவேளைகளில் நடக்கும் ஸ்திதியுடனும், சிலவேளைகளில் நின்றுவிடும் ஸ்திதியுடனும் பார்த்துக் கொள்வதற்குச் செலவழித்தால், அதைப் பிராமண ஆத்மா என்று கூற முடியாது. ஆனால் ஷத்திரிய ஆத்மா என்றே கூறமுடியும். இத்தகைய ஆத்மாக்கள், நான் இதைச் செய்வேன். நான் அதைச் செய்வேன் எனத் தமது முயற்சிகளின் அற்புதங்களின் பாடலைச் சதா பாடுவார்கள். அவர்கள் சதா தமது இலக்கை வைத்திருப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஓர் இலக்கை நோக்கி சதா அடிப்பதற்கு முயற்சி செய்வதற்கும், உண்மையிலேயே அந்த இலக்கை அடிப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. அவர்கள் தமது இலக்கை அடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். நான் இப்போது இதைச் செய்வேன். நான் அதை இந்த முறையில் செய்வேன். இந்த முறையில் அவர்கள் தமது இலக்கை அடைவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இத்தகைய ஆத்மாக்கள் ஷத்திரிய ஆத்மாக்கள் எனப்படுகிறார்கள். பிராமண ஆத்மாக்கள் தமது இலக்கை அடிப்பதற்கு முயற்சி செய்வதில்லை. அவர்கள் சதா இலக்கில் ஸ்திரமாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தமது புத்திகளில் தமது இலக்கை வைத்திருப்பார்கள். ஒரு விநாடி எண்ணத்தின் மூலம் அவர்கள் வெற்றியாளர்கள் ஆகுவார்கள். பாப்தாதா தொடர்ந்து பிராமணக் குழந்தைகளினதும் ஷத்திரியக் குழந்தைகளினதும் விளையாட்டுக்களைப் பார்க்கிறார். பிராமணர்களின் விளையாட்டு வெற்றிக்குரியது. ஷத்திரியர்களின் விளையாட்டு, சதா அம்பு, வில் என்ற சுமையைச் சுமப்பது. அவர்களின் முயற்சிகளில் சதா சிரமப்படுதல் என்ற அம்பு காணப்படும். ஒரு பிரச்சனையைத் தீர்த்ததும், வேறொன்று தோன்றும். பிராமணர்கள் சகல தீர்வுகளின் சொரூபங்கள் ஆவார்கள். ஷத்திரியர்கள் சதா பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஈடுபட்டிருப்பார்கள். பௌதீக ரூபத்தில், பாபா உங்களுக்கு வியப்பானதொரு கதை சொல்வதுண்டு. ஷத்திரியர்கள் என்ன செய்கிறார்கள்? இதைப் பற்றிய ஒரு கதை உள்ளது. நீங்கள் எலியை நீக்கினால், பூனை வரும். இன்று, பணத்தைப் பற்றிய பிரச்சனை. நாளை, மனதைப் பற்றிய பிரச்சனை. அதற்கு அடுத்த நாள், சரீரத்துடன் பிரச்சனை அல்லது உறவுகளுடன் பிரச்சனை அல்லது தொடர்புகளுடன் பிரச்சனை. அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வதிலேயே ஈடுபட்டிருப்பார்கள். அவர்களுக்கு நிச்சயமாக எப்போதும் தங்களைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ ஏதாவதொரு முறைப்பாடு இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது ஏதாவதொன்றுக்கு சதா முயற்சி செய்வதில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளைக் காணும்போது, பாப்தாதா தனது கருணைநிறைந்த, கனிவான ரூபத்தினூடாக அவர்களின் மீது கனிவு கொள்கிறார்.

சங்கமயுகத்தின் பிராமண வாழ்க்கை, இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் ஓய்வெடுப்பதற்கான காலம் ஆகும். அவரின் இதயத்தில் சௌகரியமாக அமர்ந்திருங்கள். பிரம்மாபோஜனம் உண்டு, ஞான அமிர்தத்தைப் பருகுங்கள். சக்திவாய்ந்த சேவை செய்யுங்கள். களிப்புடன் சௌகரியமாக இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். ஏன் நீங்கள் துயரப்படுகிறீர்கள்? இப்போது நீங்கள் ஓ இராமா! எனத் துயரத்துடன் கூறுவதில்லை. ஆனால், ஓ பாபா!, ஓ தாதி! ஓ தீதி! என்று கூறுகிறீர்கள், அப்படியல்லவா? ஓ பாபா!, ஓ தாதி! தீதி, நான் சொல்வதைக் கேளுங்கள்! ஏதாவது செய்யுங்கள்!. இதுவும் துயரமே. இது சௌகரியமாக வாழுவதற்கான யுகம் ஆகும். ஆன்மீகக் களிப்புடன் இருங்கள்! இந்த அழகான நாட்களை ஆன்மீகக் களிப்புடன் கழியுங்கள். அழிகின்ற விடயங்களில் களிப்படையாதீர்கள். ஆடிப் பாடுங்கள். ஆனால் வாடிப்போகாதீர்கள். இப்போது இறைவனின் களிப்பில் நீங்கள் காலத்தைக் கழிக்காவிடின், எப்போது அதைச் செய்யப் போகிறீர்கள்? உங்களின் ஆன்மீகக் கௌரவத்துடன் (ஷான்) இருங்கள். ஏன் துயரம் அடைகிறீர்கள் (பரிஷான்)? எறும்பு போன்ற மிகச்சிறிய விடயங்கள் உங்களின் புத்திகளில் புகுந்து, உங்களின் புத்தியின் யோகத்தைக் குழப்புவதைக் கண்டு தந்தை வியப்படைகிறார். பௌதீகமாக எறும்பு ஒன்று உங்களைக் கடிக்கும்போது, நீங்கள் குழம்பிப் போய், உங்களின் சரீரத்தில் அமைதியற்ற நிலை காணப்படும். அதேபோன்று, இது உங்களின் புத்தியைக் குழப்புகிறது. எறும்பு ஒன்று யானையின் காதுக்குள் சென்றால், அது யானையை மயக்கம் அடையச் செய்துவிடும். அதேபோன்று, பிராமண ஆத்மாக்கள் மயக்கம் அடைந்து, ஷத்திரியர்கள் ஆகுகிறார்கள். நீங்கள் என்ன விளையாட்டுக்களை விளையாடுகிறீர்கள் எனப் புரிந்து கொண்டீர்களா? ஷத்திரியர்கள் ஆகாதீர்கள்! இல்லாவிடின், நீங்கள் வெள்ளியுக இராச்சியத்தையே பெறுவீர்கள். சத்தியயுக தேவர்கள் உபயோகிக்காமல் விட்டதையே வெள்ளியுகத்தின் ஷத்திரியர்கள் பெறுவார்கள். பிராமணர்களே தேவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் செயற்களத்தில் முதல் அறுவடையைப் பெறுவார்கள். ஆனால் ஷத்திரியர்களோ இரண்டாம் அறுவடையையே பெறுவார்கள். முதல் அறுவடையினதும் இரண்டாம் அறுவடையினதும் உருசியின் வேறுபாட்டை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள், அல்லவா? அச்சா.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம்: மகாராஷ்டிராவிற்கு ஒரு சிறப்பியல்பு உள்ளது. மகாராஷ்டிரா என்ற பெயரைப் போன்று, அவர்கள் மகாத்மாக்களின் அழகானதொரு பூங்கொத்தை பாப்தாதாவிற்குப் பரிசளிக்க வேண்டும். மகாராஷ்டிரா இராச்சியம் அழகானதும் முழுமையானதும் ஆகும். எனவே, மகாராஷ்டிரா தொடர்பில் இத்தகைய முழுமையான, பிரபல்யமான ஆத்மாக்களை அழைத்து வரவேண்டும். இதனாலேயே, ஆத்மாக்களை மகாத்மாக்கள் ஆக்கி, அழகானதொரு பூங்கொத்தைத் தந்தையின் முன்னால் கொண்டுவர வேண்டும் என உங்களுக்குக் கூறப்பட்டது. இப்போது, இறுதியில், செல்வத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு பாகம் உள்ளது. அவர்களுக்கு உங்களுடன் ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கும் பாகம் கிடையாது. ஆனால், உங்களுடன் அவர்கள் தொடர்பில் வருவார்கள். உங்களுக்குப் புரிகிறதா?

உத்தரப்பிரதேசத்தில், உலகின் அற்புதங்களில் ஒன்றான தாஜ் மகால் உள்ளது. இது இங்கேயும் வெளிநாடுகளிலும் பிரபல்யமானது. உத்தரப்பிரதேசத்தில் உலகிலேயே அற்புதமான ஒன்று இருப்பதைப் போன்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் சேவையின் நடைமுறையான, புலப்படும், அற்புதமான பலனைக் காட்ட வேண்டும். அதன் மூலம் நீங்கள் இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும், பிராமண உலகில் அற்புதமானதைச் செய்வதில், உலகிலேயே அற்புதமானவர்களாக இருப்பதில் மிகவும் பிரபல்யமானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இத்தகைய அற்புதமான பணியைச் செய்ய வேண்டும். கீதை பாடசாலைகளும் நிலையங்களும் இருப்பது அற்புதம் அல்ல. இதுவரை வேறு எவரும் செய்யாததை நீங்கள் செய்யும்போதே, அதை அற்புதமானது என்று சொல்ல முடியும். உங்களுக்குப் புரிகிறதா? வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பருவகாலத்திலும் இருக்கிறார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் உள்ள வசதிகளினூடாக இரண்டு தந்தையரையும் உலகிலேயே பிரசன்னம் ஆக்கியுள்ளார்கள். பிரசன்னம் ஆகுதல் என்றால், அவர்களால் தமது பௌதீகக் கண்களால் பார்க்கக்கூடியதாக இருப்பதாகும். எனவே, நீங்கள் இத்தகைய தந்தையை உலகின் முன்னால் என்றும் பிரசன்னம் ஆக்குவீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொண்டீர்களா? அச்சா. நாளை, முழு ஒன்றுகூடலும் விடைபெற்றுச் செல்லப் போகிறார்கள். படிப்படியாக, இங்கு ஹெலிகொப்டர்கள் வந்திறங்கும் நாளும் வரும். சகல வசதிகளும் உங்களுக்காகவே செய்யப்படுகின்றன. சத்தியயுகத்தில், விமானங்கள் வரிசையாக நிற்பதைப் போன்று, இப்போது இங்கு ஜீப்புகளினதும் பஸ்களினதும் வரிசை காணப்படுகிறது. படிப்படியாக, விமானங்களின் வரிசையும் காணப்படும். அனைவரும் பயந்து, இங்கே ஓடி வருவார்கள். உங்களுக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு அவர்கள் செல்வார்கள். அவர்கள் பயப்படுவார்கள். ஆனால், நீங்கள் பறப்பீர்கள். இறப்பதையிட்டு நீங்கள் பயப்பட மாட்டீர்கள். நீங்கள் ஏற்கனவே இறந்துவிட்டீர்கள். பாகிஸ்தானில் நீங்கள் ஒரு மாதிரியைக் கண்டீர்கள். அவர்கள் அனைவரும் தமது சாவிகளையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆகவே, உங்களுக்குச் சகல சாவிகளும் கிடைக்கப் போகின்றன. நீங்கள் அவற்றைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே. அச்சா.

பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்புகள் அனைத்தையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்களுக்கும், வெறுமனே பௌதீக ஓய்வு மட்டுமன்றி, இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தையின் இதயத்தில் ஆன்மிக ஓய்வெடுப்பவர்களுக்கும், சங்கமயுகத்தின் மேன்மையான கௌரவத்தை சதா பேணுபவர்களுக்கும், தமது சிரமத்தை அன்பாக மாற்றி அன்பிலே திளைத்திருப்பவர்களுக்கும், இத்தகைய மேன்மையான பிராமண ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஞான இரத்தினங்களைக் கிரகித்து, வீணானவை அனைத்தையும் முடிக்கும் புனித அன்னம் ஆகுவீர்களாக.

புனித அன்னத்திற்கு இரண்டு சிறப்பியல்புகள் உள்ளன. ஒன்று, ஞான இரத்தினங்களைப் பொறுக்குவது. இரண்டாவது, வேறுபிரித்தறியும் சக்தியால் பாலில் இருந்து நீரை வேறுபிரித்தறிதல். நீரில் இருந்து பிரித்தெடுத்தல் என்றால் வீணானவற்றையும் சக்திவாய்ந்ததையும் வேறுபிரித்தறிதல். வீணானவை நீரைப் போன்றவை. சக்திவாய்ந்தவை பாலைப் போன்றவை. எனவே, வீணானவற்றை முடித்தல் என்றால் புனித அன்னம் ஆகுதல் என்று அர்த்தம். ஒவ்வொரு கணமும் உங்களின் புத்தியில் சதா ஞான இரத்தினங்கள் இருக்க வேண்டும். உங்களின் கடைதல் தொடர்ந்து இருக்கும்போது, நீங்கள் இரத்தினங்களால் நிறைந்திருப்பீர்கள்.

சுலோகம்:
சதா தமது மேன்மையான நிலையில் (pழளவைழைn) ஸ்திரமாக இருந்து, எந்தவொரு எதிர்ப்பையும் (ழிpழளவைழைn) முடிப்பவர்களே வெற்றி ஆத்மாக்கள் ஆவார்கள்.