10.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஞானக்கடலான தந்தையினால் உங்கள் மீது ஞான மழை பொழியப்படுகிறது என்ற போதையில் சதா இருங்கள். இதன் மூலம் நீங்கள் தூய்மையாகி உங்கள் மகத்தான வீட்டிற்குத் திரும்புவீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களின் நம்பிக்கை எதன் அடிப்படையில் தொடர்ந்தும் உறுதியாகிறது?

பதில்:
உலகில் குழப்பங்கள்; மேலும் அதிகரிக்கையில், உங்களுடைய தெய்வீக விருட்சமும் வளர்ந்து, பழைய உலகில் இருந்து உங்களுடைய இதயம் அதிகமாக விலகிச் செல்லும் பொழுது உங்களுடைய நம்பிக்கை உறுதியானது ஆகும். சேவை துரித கதியில் இடம்பெறும். நீங்கள் தாரணையில் தொடர்ந்து கவனம் செலுத்தும்போது உங்கள் புத்தியில் உற்சாகம் அதிகரிப்பதுடன் எல்லையற்ற சந்தோஷத்தில் நீங்கள் இருப்பீர்கள்.

ஓம் சாந்தி.
சிவபாபாவை நினைவு செய்யுமாறு ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதை உங்களுக்குக் கூறவேண்டிய அவசியம் கிடையாது. சிவபாபா இவரின் மூலம் எங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். இது ஞானக் கடலில் இருந்து வரும் ஞானமழை ஆகும். இப்பொழுது தம்மீது ஞானமழை பொழியப்படுகிறது என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. பிராமணர்களாக ஆகுபவர்களுக்கு மாத்திரமே நான் வந்து, ஞானமழை பொழிகிறேன். நான் குழந்தைகளின் முன்னால் நேரடியாக வருகிறேன். குழந்தைகளும் என்னுடன் இப்பொழுது நேருக்கு நேர் அமர்ந்துள்ளார்கள். நேருக்கு நேர்; பாபாவுடன் அமர்ந்திருப்பதனால் ஏற்படுகின்ற போதையை பாபா மீண்டும் மீண்டும் உங்களில் அதிகரிக்;கிறார். பின்னர் மாயை அந்த போதையை இறங்கச் செய்கிறாள். அவள் சிலரின் போதையை முழுமையாக அகற்றுகிறாள். சிலரின் போதையைக் குறைவாக அகற்றுகிறாள். நீங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே கடலுக்கு வந்துள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அதாவது முரளியில் இருந்து கருத்துக்களைக் கிரகிப்பதற்;கும் வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் ஆகும். நாங்கள்; அவரின் முன்னால் அமர்ந்துள்ளோம். ஞானக்கடலின் மழையானது ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகிறது. தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகவே தந்தை வருகிறார். ஓ தூய்மையாக்குபவரே! என்ற புகழையும் மக்கள் பாடுகிறார்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இவ்வாறு கூவியழைக்க மாட்டீர்கள். அங்கு நீங்கள் ஞானக் கடலில் இருந்து வரும் ஞான மழையினால் ஏற்கனவே தூய்மையாக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள். ஞானத்துடன் விருப்பமின்மையும் இருக்கின்றது. எதில் விருப்பமின்மை? உங்களுடைய புத்தியானது பழைய தூய்மையற்ற உலகில் விருப்பமின்மையைக் கொண்டுள்ளது. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றும், நிச்சயமாகப் பழைய உலகை துறந்தாக வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் புத்தியினால் புரிந்துகொள்கிறீர்கள். இதற்கு மக்கள் விருப்பமின்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். தந்தை ஒருவர் புதிய கட்டடம் ஒன்றைக் கட்டும்பொழுது, புத்தியின் யோகமானது பழையதில் இருந்து விடுபட்டு, புதியதில் இணைக்கப்படுகிறது. புதியதற்கு செல்ல வேண்டுமாயின் பழையது அழிக்கப்பட வேண்டும்; என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். சுவர்க்கம் மிக விரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அப்போது நீ;ங்கள் விரைவாக வீட்டிற்கு சென்று பின்னர் சந்தோஷமாக இருக்க முடியும் எனவும் குழந்தைகளாகிய நீங்கள் உள்ளாந்தமாக உணர்கின்றீர்கள். அனைத்திற்கும் முதலில் நாங்கள் மணவாளனுடன் வீட்டிற்குத் திரும்பி செல்வோம். இது எங்களுடைய பெற்றோரின் வீடு ஆகும். இது சிறியதொரு வீடு. அந்த வீடு மகத்துவமான தந்தையின் மிகப் பெரிய வீடாகும். அது ஆத்மாக்கள் அனைவரினதும் வீடு என்பது உங்களுக்கு தெரியும். இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் மாத்திரமே இருக்கிறது. இது வேறு எவரது புத்தியிலும் இருப்பதில்லை. முன்னர் இருள் இருந்தது, இப்பொழுது ஒளி இருக்கிறது. அனைவரும் ஞானத்தைப் பெறமாட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவரும் நிச்சயமாக வீடு திரும்புவார்கள். நீங்கள் இப்பொழுது உங்களது வீட்டிற்கு திரும்புகிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு தகுதிவாய்ந்தவர்களாக ஆக வேண்டும். முதலாவதாக என்னை நினைவு செய்யுங்கள், அதனால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியும். இரண்டாவதாக சக்கரத்தைச் சுழற்றுங்கள். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? அதன் கால எல்லை எவ்வளவு? யார் எந்த நேரத்தில் வருகிறார்கள்? தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் 8.4 பிறவிகளை எடுப்பதாக அவர்கள்; கூறுகிறார்கள். அதன் அர்த்தமானது அனைவரும் அவ்வளவு பிறவிகளை எடுக்கிறார்கள் என்பதா? 84 பிறவிகள் மாத்திரமே உள்ளன என்றும் அதற்கான கணிப்பீடும் உங்களுக்குத் தெரியும். அனைவரும் 84 பிறவிகளை எடுப்பார்கள் என்றில்லை. அவர்கள் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்தும் பிறவிகள் எடுக்கிறார்கள். இறுதியில் சிலர் ஒன்று அல்லது இரண்டு பிறவிகளை எடுக்கிறார்கள்;. ஆரம்பத்தில் வருபவர்கள் 84 பிறவிகளை எடுப்பார்கள் உதாரணத்திற்கு இலக்ஷ்மியும் நாராயணனும் உள்ளார்கள். மக்கள் அவர்களுடைய ஆலயங்களுக்குச் சென்றாலும், அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் தேவ தேவியரின் காட்சியைப் பெறுவதற்காகவே செல்வதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களுடைய இராச்சியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்;பதோ அவர்களால்; பூஜிக்கப்படுபவர்களின் பணியையோ அவர்கள் அறியமாட்டார்கள். எனவே அவ்வாறு பூஜிப்பதில் என்ன பயனுள்ளது? இதனாலேயே இது மூட நம்பிக்கை எனக் கூறப்படுகிறது. ஓதுதல், தியானம் செய்தல், யாத்திரைகள் செல்லுதல் முதலானவற்றை கடவுளைக் காண்பதற்கான வழிகளாக அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் அவ்வாறான முறைகள் எவற்றினாலும் கடவுளைக் காண முடியாது. சிலர் இங்கும் வருகின்றார்கள், ஒரு காட்சியைப் பெறுவதற்காக ஜெகதாம்பாள் கோயிலுக்கும் செல்கிறார்கள். ஆகையால், அவர்களுடைய புத்தியில் எதுவும் புகவில்லை என்பதை பாபா புரிந்து கொள்கிறார்கள். உங்களுடைய அனைத்து ஆசைகளும் இப்பொழுது பூர்த்தியடைகிறது. ஜெகதாம்பாளின்; பாகம் இப்பொழுது மிகச்சரியாக நடிக்கப்படுகிறது. உண்மையிலேயே, ஜெகதாம்பாளின் பாகம் மிகவும் உயர்ந்தது. முதலில் இலக்ஷ்மி; பின்னர் நாராயணன் உள்ளனர். இது உங்களுடைய இறுதிப் பிறவியாகும், இங்கு உங்களது கர்மக் கணக்குகள் தீர்க்கப்படுகின்றன. அனைத்துக் கர்மங்களை தீர்ப்பதன் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவதுடன், தந்தையின் நினைவிலும் இருக்க வேண்டும். உண்மையில் குழந்தைகளாகிய நீங்கள் தந்தை ஒருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நீங்கள் சரீரதாரிகளை நினைவு செய்யும்பொழுது நேரம் வீணாகின்றது. எவராலும்; பாபாவை தொடர்ந்து நினைவு செய்வதென்பது சாத்தியமற்றது ஆகும். தொடர்ந்து நினைவு செய்யக்கூடிய எவருமே இல்லை. ஒரு மனைவியே தொடர்ந்தும் தன்னுடைய கணவனை நினைவு செய்ய முடியாது. அவள் சமைக்கும் போதும் குழந்தைகளைப் பராமரிக்கும்போதும்; நிச்சயமாகத் தன்னுடைய கணவனை நினைவுசெய்ய மாட்டாள். தந்தையை தொடர்ந்தும் நினைவு செய்வதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களுடைய ஸ்திதியானது இறுதியில் ஒருவரை மாத்திரமே நினைவுசெய்யக்; கூடியதாக ஆகின்றது. இது மிகவும் முக்கியமான ஒரு பரீட்சை ஆகும். எட்டு இரத்தினங்களுக்கான பெரும் புகழும் உள்ளது. மக்கள் தீய சகுனங்களை அனுபவிக்கும் பொழுது அவர்கள் எட்டு இரத்தினங்களினால் ஆன ஒரு மோதிரத்தை அணிகிறார்கள். இறுதியில் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். இதற்கு புத்தியின் இணைப்பானது முற்றாகத் தெளிவானதாக இருப்பதுடன் வேறு எவரையும் நினைவு செய்தல் ஆகாது. அப்பொழுது மாத்திரமே உங்களால் மாலையின் ஒரு மணியாக ஆக முடியும். 9 இரத்தினங்களுக்கான பெரும் புகழும் உள்ளது. எனவே இப்பொழுது சதா நினைவைக் கொண்டிருக்கும் பயிற்சியைச் செய்யுங்கள். தற்பொழுது எவராவது 2 அல்லது 3 மணிநேர நினைவில் இருப்பதே அபூர்வமாக இருக்கின்றது. எந்தளவிற்கு குழப்பங்கள்; உலகில் அதிகரிக்கின்றதோ, அந்தளவிற்கு உங்கள் நம்பிக்கையும் அதிகரித்து, பழைய உலகிலிருந்து உங்கள் இதயமும் விலகிச் செல்லும். பலர்; மரணித்து விடுவார்கள். மாயை மிகப் பழைய ஒரு எதிரி என்பதையும் புத்தி கூறுகிறது. எதிரி இல்லாத இடமே இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அசுத்தமானவர்களில் இருந்து சுத்தமானவர்களாக ஆகுகிறீர்கள். தூய்மையற்றவர்களினால் சமைக்கப்பட்ட உணவு எதனையும் உங்களால் உண்ண முடியாது என்ற புரிந்துணர்வை நீங்கள் கொண்டுள்ளீர்கள். உண்ணும் உணவு எவ்வாறோ, மனம் அவ்வாறாகவே இருக்கும் எனக் கூறப்படுகின்றது. தீயதை வாங்குபவர்கள், அதைச் சமைத்தவர்கள், அதை உண்பவர்கள் அனைவரும் பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கிருந்து புத்துணர்வு பெற்றுச் செல்கிறீர்கள். நாள் முழுவதும் உங்களுடைய புத்தியில் உலக சக்கரத்தை சுழற்றி, உங்களுடைய வீட்டையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இங்கிருந்து உங்களுடைய பௌதீக வீட்டுக்குச் செல்லும் பொழுது சகவாசத்தின் காரணமாக உங்களுடைய ஸ்திதியானது பாதிக்கப்படுகிறது. இங்கு அமர்ந்திருக்கும் போதும் சிலருடைய புத்தியின் யோகமானது வெளியே அலைகின்றது. இதனாN;லயே அவர்களால் முழுமையான தாரணையைக் கொண்டிருக்க முடியாமல் இருக்கின்றது, எல்லையற்ற தந்தை இங்கிருந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஆத்மாக்கள். உங்கள் செயல்கள் அனைத்தையும் சரீரத்தின் மூலம் செய்கிறீர்கள். நீங்கள் பாபாவிடம் இருந்து ஸ்ரீமத்தைப் பெற்று இராச்சியத்திற்கான உங்களுடைய பாக்கியத்தை மீண்டும் ஒரு தடவை பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்! அதீந்திரிய சந்தோஷத்தைப் பற்றி கோபிவல்லவனின் குழந்தைகளிடம் வினவுங்கள்; என்பது நினைவுகூரப்படுகிறது. உங்களுடைய ஸ்திதி மிகவும் உயர்வடைவதனால், விரிவாக்கம் தொடர்வதுடன் உங்களுடைய சந்தோஷமும் அதிகரித்து, உங்களுடைய நம்பிக்கையும் மேலும் உறுதியாகும். நீங்கள் தொடர்ந்து உங்கள் தாரணையில் கவனம் செலுத்தும்போது, உங்கள் புத்தியில் உற்சாகமும் அதிகரிக்கும். காலம் செல்லும்போது, சேவையானது தொடர்ந்து அதிக வேகத்துடன் செய்யப்படும். அம்பானது சிலரைச் சரியாகத் தாக்கக் கூடிய விதத்தில் நீங்கள் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்தலே பிரதான விடயமாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அவர் ஞானக் கடலும் ஆவார். மனிதர்கள் ஞானத்தின் மூலம் மாத்திரமே தூய்மை ஆகுகிறார்கள். அதே தந்தையே தூய்மையாக்குபவரும் ஆவார். சர்வ வியாபி எனும் கருத்தினால் பக்தி தொடர்ந்து நீடிக்க முடியாது போன்ற ஒரு கருத்தை எடுங்கள். இது மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட வேண்டும். எங்களுடைய ஞானத்தின் மூலமே விநாசமானது இடம்பெறும் என அம்மக்கள் கூறுகிறார்கள். இந்த உருத்திர ஞான யாகத்தின் மூலமே விநாசத் தீ உருவாக்கப்படுகிறது என நீங்களும் கூறுகிறீர்கள். எனவே, அவர்கள் கூறுவதும் சரியாகும்! அவர்கள் புரிந்து கொள்ளாது விட்டாலும், விநாசத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்! விநாசமானது கடந்த கல்பத்திலும் இடம் பெற்றது. கடவுள் கூறுகிறார்: இவை அனைத்தும் உருத்திரனின் ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்படும். இதுவே உங்களுடைய ஞானம் என அவர்கள்; நினைக்கிறார்கள். இதனாலேயே அவர்கள் உங்களை எதிர்க்கிறார்கள். அதிகளவு பக்தி செய்வதன் மூலம் தங்களால் கடவுளைக் காண முடியும் என்று அவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அதிகளவு பக்தி செய்பவர்கள் கடவுளைக் கண்டு கொண்டார்கள் என நாங்களும் கூறுகிறோம். எவ்வாறாயினும், மக்களுக்கு இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் கடந்த கல்பத்திலும் தந்தைக்கு நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு உதவி செய்தீர்கள். எனவே நரகத்தின் அழிவானது நிச்சயமாக இடம்பெற்றிருக்க வேண்டும.; நரகம் அழிந்தால் மாத்திரமே சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட முடியும். பாரதம் உண்மையில் தூய்மையாக இருந்தது என்பதையும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். சுவர்க்கம் நிச்சயமாக இருந்தது என்பதை அனைத்து சமய மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். புராதனம் என்றால் மிகப்பழைமை வாய்ந்தது என்பதாகும், ஆகவே அது சுவர்க்கமாகவே இருக்க வேண்டும். பழையதாகியது மீண்டும் புதியதாகவும் ஆக வேண்டும். இது குழந்தைகயாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. அங்கே உண்மையாக தேவர்களின் இராச்சியம் இருந்தது. ஆனால் அது இப்பொழுது இல்லை. அவர்கள் மீண்டும் ஒரு முறை அநாதியான தேவ தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றனர். யாருடைய உதவியுடன்? ஆத்மாக்கள் அனைவரதும், அசரீரியான பாபுஜியான (தந்தை) அந்த ஒருவரின் உதவியுடன் ஆகும். அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவார். இவ்விடயங்கள் அனைத்;தையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஏழைகளின் பிரபு ஆவேன். நீங்கள் ஏழைகள். உங்களிடம் என்ன இருக்கிறது? நீங்கள் பாரதத்திற்காக அனைத்தையும் அர்ப்பணித்தீர்கள். இராவணனுடனான உங்கள் யுத்தம் மிகவும் மகத்துவமானதாகும்! நீங்கள் சக்திசேனையினர். தாய்மாருக்கு வந்தனங்கள் என்றும் பாடப்பட்டுள்ளது. தூய்மையற்றவர்கள் தூய்மையானவர்களை புகழ்கிறார்கள், ஆகவே எந்தத் தாயை அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்? அவர்கள் அதனை பூமி தாய் எனக் கருதுகிறார்கள், ஆனால்; அது பூமியில் வாழ்பவர்களையே குறிக்கிறது. ஜெகதாம்பாள் இருக்கின்றார், எனவே அவரது குழந்தைகளும் இருக்கிறார்கள். கட்டப்பட்டுள்ள தில்வாலா ஆலயம் ஒரு ஞாபகார்த்தம் ஆகும். குமாரிகளும் அரைக் குமாரிகளும் இருக்கிறார்கள், அவர்கள் தாய்மார்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா நாங்கள் பிரம்ம குமாரர்கள், குமாரிகள் ஆவோம் ஆகவே எங்களை உங்களுடைய குழந்;;தைகள் என அழையுங்கள் தாய் என்று அல்ல. நாங்கள் குமாரிகள். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஆழமான விடயங்களாகும். ஆனால் மக்களால் இவற்றை உள்வாங்க முடியாதிருக்கின்றது. முன்னைய பிறவிகளின் உணர்வுகள் ஆழமாகப் பதிந்திருப்பதுடன் துண்டிக்கப்படுவதில்லை. சிவபாபா உங்களின் முன் இருந்து ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. தந்தை இச்சரீரத்தில் பிரவேசித்துள்ளார்;. பாபா வந்து அலௌகீகமான தெய்வீகச் செயல்களைச் செய்கிறார். அவர் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகவே கற்பிக்கிறார். மிகச்சரியான நினைவு இருக்க வேண்டும். தூய்மையாக்குபவரான சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். தூய்மையாக்குபவர் அனைவரிலும் அதிமேலானவர். அவரே தந்தையும் ஆசிரியரும் ஆவார். தூய்மையாக்குபவர் என்ற வார்த்தையே முதலில் வெளிப்பட வேண்டும். ஓ தந்தையான கடவுளே வாருங்கள்! வந்து மீண்டும் ஒரு முறை எங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பியுங்கள்! என மக்கள்; அவரை நினைவு செய்து கூறுகிறார்கள். தந்தையும் கூறுகிறார்: நான் மீண்டுமொருமுறை இலகுவான ஞானத்தை உங்களுக்கு கற்பிக்கிறேன். இதில் நூல்கள் முதலியவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. எனினும், மக்கள் இவ்வாறான பெயர்களை குறிப்பிட்டிருக்கின்றார்கள். உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காக தந்தை இப்பொழுது கற்பிக்கிறார். உங்களுக்கு தினமும் புதிய கருத்துக்கள் கொடுக்கப்படுகின்றன. கீதை, கிரந்த் போன்றவை மேலதிக சேர்வைகளையோ திருத்தங்களையோ கொண்டிருப்பது இல்லை. அவர்கள் ஒரே விடயங்களையே உபதேசிக்கிறார்கள். இங்கு மேலதிக சேர்வைகளும், சில விடயங்களில் திருத்தங்களும் செய்யப்படுகின்றன. உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய கருத்துக்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த ஞானம் மிகவும் அற்புதமானது! இது எந்த சமய நூல்களிலும் இல்லை. காமமே மிகப் பெரிய எதிரி ஆகும். கடவுள் பேசுகிறார்: உங்களுடைய சரீரம் உட்பட அனைவரையும் மறந்து, ஒருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நான் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். நான் அமரத்துவ சொரூபம், மகாகாலன் ஆவேன். குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். ஆகவே நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்பவுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். விரைவாகப் புத்திசாலியாகி தந்தையிடம் இருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதுவரை யுத்தம் ஆரம்பமாக மாட்டாது. தந்தை கூறுகிறார்: என்னால் எதுவும் செய்ய முடியாது. முதலில் ஒத்திகைகள் இடம்பெறும். ஆட்சி புரிபவர்கள் இன்னும் வரவில்லை. இராஜஸ்தானைப் (அரசர்களின் பூமி) பற்றி உங்களாலும் விளங்கப்படுத்த முடியும். அவர்களிடம் வினவுங்கள்: ஏன் இந்த இடத்திற்கு இராஜஸ்தான் எனப் பெயரிடப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? பாரதத்தில் இலக்ஷ்மி நாராயணனது இராச்சியம் இருந்தது. அந்த இராஜஸ்தான் (அரசர்களது பூமி) மீண்டுமொருமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆகவே அது இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. நாங்கள்; இதை அறிவோம். ஆனால் இது உங்களுடைய புத்தியில் புகும்போது மாத்திரமே சந்தோஷ பாதரசம் உயரும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அந்த தேவர்களுக்கு ஆலயங்களை கட்டுகிறார்கள். பாரதத்தில் அதிகளவு செல்வம் இருந்தது. நாங்கள் அதை மீண்டும் ஒருமுறை அரசர்களின் ஒரு தெய்வீக தேசமாக ஆக்குகிறோம். வந்து, இவ்விடயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதில் உற்சாகம் இருக்க வேண்டும். இதுவும் ஒரு கருத்தரங்கு ஆகும். நீங்கள் எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்றும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். குமாரிகள் தாய்மார்கள் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக செவிமடுக்கிறார்கள். கிருஷ்ணர் அன்றி கடவுள் ஒருவரே அதிமேலானவர். ஆகவே உங்களால் இராஜஸ்தானைப் பற்றி விளங்கப்படுத்த முடியும். நிச்சயமாக அரசர்களின் பூமியாகிய இராஜஸ்தான் இருந்ததுடன் அவர்களுக்கு ஆலயங்களும்; உருவாக்கப்பட்டது. நாங்கள் மீண்டும் அதை உருவாக்குகிறோம். தந்தை எங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கிறார் நீங்களும் இதற்கு முயற்சி செய்ய வேண்டும். பின்னர் அரைக்கல்பத்திற்கு நீங்கள் ஒரு பொழுதும் அழவேண்டிய அவசியம் இருக்க மாட்டாது. நீங்கள் இராமருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராவணனை வெற்றி கொள்கிறீர்கள். அத்தகைய வார்தைகளை அவர்கள் செவிமடுத்தால் அது அவர்களைத் தொட்டுவிடும். அவ்வாறு அம்பினால் தாக்கப்படுபவர்கள் புரிந்து கொள்வதற்காக இங்கு வருவார்கள். பாபா இவ் எல்லையற்ற கருத்தரங்கை ஒவ்வொரு நாளும் நடாத்துகிறார். இது ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் இடையிலான கருத்தரங்கு ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கர்மத்தின் வேதனையில் இருந்து விடுதலை அடைவதற்கு ஒரேயொரு தந்தையின் நினைவில் இருங்கள். சரீரதாரிகளை நினைவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களுடைய புத்தியின் இணைப்பை மிகத் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

2. மிகவும் தூய்மையான உணவை உண்ணுங்கள். நீங்கள் உண்ணும் உணவைப் போன்றே உங்களுடைய மனதும் இருக்கும். எனவே தூய்மையற்றவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். உங்களுடைய புத்தியை நீங்கள் சுத்தமானதாக ஆக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
ஆன்மீக அனுதாபத்தினால், சதா செல்வந்தராக இருந்து, அதனைக் கொண்டு அனைவரையும் திருப்தியானவர்கள் ஆக்குவீர்களாக.

இன்றைய உலகில் பலரும்; செல்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் மிகவும் அதிகளவு தேவையான செல்வம் அனுதாபமாகும். செல்வந்தராயினும், ஏழையாயினும், இன்றைய மக்களிடம் அனுதாபம் இல்லை. உங்களிடம் அனுதாபம்; என்ற செல்வம் இருக்கின்றது, ஆகையால் ஏனையோருக்கு நீங்கள் வேறு எதனையும் கொடுக்காது விட்டால் பரவாயில்லை, ஆனால் உங்கள் அனுதாபத்தினால் அனைவரையும் உங்களால் திருப்தியானவர் ஆக்க முடியும். உங்களுடைய ஆன்மீக அனுதாபமானது உங்களுடைய ஆன்மீக தொடர்பின் அடிப்படையில் ஆகும். இந்த ஆன்மீக அனுதாபத்தினால், உங்களால் அனைவரையும் அவர்களின் சரீரம், மனம், செல்வம் என்பவற்றையிட்டு திருப்திபடுத்த முடியும்.

சுலோகம்:
ஒவ்வொரு பணியிலும் தைரியத்தை உங்கள் சகபாடி ஆக்கினால், நீங்கள் நிச்சயமாக வெற்றியீட்டுவீர்கள்.