10.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்கள் மின்கலங்களைச் சக்தியூட்டுவதற்காக வந்துள்ளார். நீங்கள் எந்தளவிற்கு நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கே உங்கள் மின்கலங்களும் தொடர்ந்தும் சக்தியூட்டப்படும்.

கேள்வி:
உங்கள் சத்தியப் படகிற்கு புயல்கள் வருவதேன்?

பதில்:
இந் நேரத்தில், பல செயற்கையான மக்கள் உள்ளதால் ஆகும். தங்களைச் சிலர் கடவுள் என்று அழைக்கின்றார்கள், மற்றும் சிலர் தங்கள் மாயாஜால சக்தியைக் காட்டுகின்றார்கள். இதனாலேயே மக்களால் உண்மையை இனங்கான முடியாதுள்ளது. அவர்கள் சக்தியப்படகை ஆட்டமடையச் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். எனினும், உங்கள் சத்தியப்படகு என்றுமே தாழாது என உங்களுக்குத் தெரியும். இன்று தடைகளை உருவாக்குபவர்கள், நாளை இங்கு மாத்திரமே சற்கதிக்கான பாதையை அவர்களால் காணமுடியும் என்பதைப் புரிந்து கொள்வார்;. அனைவருக்குமாக இருக்கின்ற ஒரேயொரு கடை இதுவாகும்.

ஓம் சாந்தி.
ஆத்மாக்களாகிய நீங்கள் உயிர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் உயிரே செவிகளினூடாகச் செவிமடுக்கின்றார். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கின்றார். தந்தையின் ஆத்மா ஞானத்தினால் நிரம்பியுள்ளார். குழந்தைகளாகிய நீங்களும் இந்தப் பிறவியில் ஆத்ம உணர்வுடையவராக வேண்டும். பக்தி மார்க்கத்தில் நீங்கள் 63 பிறவிகளாகச் சரீர உணர்வுடையவராக இருந்தீர்கள். அங்கே ஆத்மா என்றொருவர் இருக்கின்றார் என நீங்கள் அறிந்திருந்த போதிலும், ஆத்மா என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆத்மாவே சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். ஆத்மாவே துன்பத்தை அனுபவம் செய்கின்றார். தூய்மையற்ற ஆத்மா அல்லது தூயஆத்மா எனக்கூறப்பட்டுள்ளது. தூய்மையற்ற பரமாத்மா எனக் கூறப்படுவதை நீங்கள் என்றுமே கேள்விப்பட்டதில்லை. கடவுள் அனைவரிலும் இருப்பாராயின், தூய்மையற்ற பரமாத்மா எனக்கூறப்பட்டிருக்கும். ஆகவே ஆத்ம உணர்வுடையவராகுவதே பிரதான விடயமாகும். ஆத்மாக்கள் எவ்வளவு சின்னஞ் சிறியவர்கள் என்பதும், எவ்வாறு ஆத்மாக்கள் தங்களுக்குள் முழுப்பாகத்தையும் பதித்துள்ளார்கள் என்பதும் எவருக்குமே தெரியாது. நீங்கள் புதிய தொன்றைச் செவிமடுக்கின்றீர்கள். தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றார். வேறு எவராலும் இதனைக் கற்பிக்க முடியாது. மீண்டும், மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மின்கலம் மூலமாகத் தொழிற்படுகின்ற அவசரகால விளக்கு உங்களிடம் உள்ளது. அது சக்தியூட்டப் பட்டுள்ளது. தந்தை அனைத்தையும் விட அதிமேலான சக்தி நிறைந்தவராவார். பற்பல ஆத்மாக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த மேலான சக்தியிடமிருந்து, சக்தியை நிரப்பிக்கொள்ள வேண்டும். தந்தையே சர்வசக்திவான் ஆவார். ஆத்மாக்களாகிய நாங்கள் அவருடன் யோகம் செய்யாமல் எவ்வாறு எங்கள் மின்கலம் சக்தியூட்டப்படும்? மின்கலம் சக்தியிழப்பதற்கு ஒரு முழுச்சக்கரமும் எடுக்கின்றது. இப்பொழுது மின்கலம் சக்தியூட்டப்பட வேண்டும். உங்கள் மின்கலம் சக்தி இழந்து விட்டது என்பதால் இப்பொழுது அது சக்தியூட்டப்பட வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு புரிகின்றது. எவ்வாறு? பாபா கூறுகின்றார்: என்னுடன் யோகம் செய்யுங்கள். இது மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளப்படக் கூடிய விடயமாகும். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணைத்துக் கொள்ளும் போது சக்தியால் நீங்கள் நிரப்பப்பட்டு சதோபிரதான் ஆகுவீர்கள். இக்கல்வி ஒரு வருமானத்தைக் கொடுக்கின்றது. நினைவினூடாக நீங்கள் தூய்மை ஆகுவதுடன் உங்கள் ஆயுட்காலமும் நீடிக்கின்றது. உங்கள் மின்கலமும் சக்தியூட்டப்படுகின்றது. தந்தையை நீங்கள் எந்தளவிற்கு நினைவுசெய்கிறீர்கள் என உங்களை நீங்கள் சோதிக்க வேண்டும். நீங்கள் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கிறீர்கள் என்பதை மறந்துவிடும் போது மின்கலம் சக்தியை இழந்து விடுகின்றது. வேறு எவருமே உண்மையான தொடர்பைக் கொண்டிருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே உண்மையான தொடர்பைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தையை நினைவு செய்யாதுவிடின், எவ்வாறு ஒருவரின் தீபம் ஒளியேற்றப்படும்? ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானம் பகல் என்றும் பக்தி இரவு என்றும் உங்களுக்குத் தெரியும். பின்னர் இரவில் விருப்பமின்மை இருக்கும்போது பகல் ஆரம்பமாகின்றது. தந்தை கூறுகின்றார்: இரவை மறந்து, பகலை நினைவு செய்யுங்கள். சுவர்க்கம் பகலாகும், நரகம் இரவாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, உயிருள்ள ரூபத்தில் இருக்கின்றீர்கள். இச்சரீரங்கள் அழியக் கூடியவையாகும். அவை தூசினால் ஆக்கப்பட்டவை, அவை தூசுடன் இரண்டறக் கலந்துவிடும். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் ஆனாலும் மின்கலம் சக்தியை இழந்து விடுகின்றது. இப்பொழுது நீங்கள் மிக விவேகமானவர்களாக ஆகுகின்றீர்கள். நாங்கள் எங்கிருந்து வந்தோமோ, அந்த வீட்டிற்கே உங்கள் புத்தி தொடர்ந்து செல்கின்றது. இப்பொழுது சூட்சும உலகைப்பற்றி எங்களுக்குத் தெரியும். விஷ்ணு நான்கு கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். மனிதர்களுக்கு நான்கு கரங்கள் இருக்க முடியாது. பிரம்மாவும், சரஸ்வதியும் பின்னர் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகுவதினாலேயே, விஷ்ணுவிற்கு நான்கு கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. இவ்விடயங்களைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. ஆத்மா இவ்வாறான சம்ஸ்காரங்களினால் நிரப்பப்பட்டுள்ளார். ஆத்மாவே தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றார். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையைக் கூவி அழைக்கின்றார்கள்: ஓ பாபா நாங்கள் சக்தியை இழந்து விட்டோம். இப்பொழுது வாருங்கள், ஏனெனில் நாங்கள் சக்தியூட்டப்பட விரும்புகின்றோம். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: எந்தளவிற்கு நீங்கள் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ அதற்கேற்பவே நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். நீங்கள் தந்தையின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். பாபா, நான் உங்களுக்கு உரியவன். உங்களுடனேயே வீடு திரும்புவேன். இது மணவாளனின் பெற்றோர் வந்து அவளது பெற்றோரின் வீட்டிலிருந்து மணவாட்டியை அழைத்துச் செல்வது போன்றுள்ளது. இங்கே நீங்கள் இப்பொழுது உங்களை அலங்கரிப்பதற்கு இரு தந்தையரைப் பெற்றிருக்கின்றீர்கள். அலங்காரம் மிக நன்றாக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் நற்பண்புகள் அனைத்தினாலும் நிறைந்திருக்க வேண்டும். உங்களையே வினவுங்கள்: நான் ஏதாவது குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றேனா? மனதில் புயல்கள் இருந்தாலும், சோதியுங்கள: பிழையான செயல்கள் எதனையாவது செய்கின்றேனா? எவருக்காவது நான் துன்பத்தை விளைவித்தேனா? தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். நாங்களும் அனைவருக்கும் சந்தோஷத்திற்கான பாதையைக் காட்ட வேண்டும். பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் அதைச் செய்வதற்கான பல வழிகளைக் காட்டுகின்றார். நீங்கள் சேனைகள். உங்கள் பெயர் பிரஜாபிதா பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆகும். வருகின்ற எவரிடமும் வினவுங்கள்: நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்? நீங்கள் யாரிடம் வருகின்றீர்கள்? அவர்கள் பதில் அளிக்கின்றார்கள்: நாங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகளிடம் வந்துள்ளோம். அச்சா. பிரம்மா யார்? நீங்கள் பிரஜாபிதா பிரம்மா என்ற பெயரை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? ஆம் நீங்களும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், அனைவரும் அவருடைய மக்கள். அவர் உங்கள் தந்தையும் ஆவார், ஆனால் நீங்கள் அவரை அறிந்திருக்க மாட்டீர்கள். பிரம்மா நிச்சயமாக ஒருவருடைய குழந்தையாவார். அவருடைய தந்தை (சிவபாபா) யிடம் பார்க்கக் கூடியதான சரீரம் இல்லை. சிவபாபா, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகிய மூவரை விடவும் மேலானவர். திரிமூர்த்தி சிவன் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவரே அவர்கள் மூவரையும் படைத்தவர். சிவபாபா உச்சியில் உள்ளார், பின்னர் வம்சாவழி விருட்சம் போன்று மூவரும் உள்ளனர். பிரம்மாவின் தந்தை நிச்சயமாகக் கடவுளே ஆவார். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். அச்சா. எனவே பிரம்மா எங்கிருந்து வந்தார்? தந்தை கூறுகின்றார்: நான் அவரின் சரீரத்தில் பிரவேசித்து, அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டேன். குழந்தைகளாகிய உங்களுக்குப் பெயர்கள் கொடுக்கப்பட்டது போன்று, அவருக்கும் பிரம்மா எனப் பெயரிடப்பட்டது. பாபா கூறுகின்றார்: இது எனது தெய்வீக, அலௌகீகப் பிறப்பாகும். நான் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றேன். நான் இவரின் சரீரத்தில் பிரவேசித்து உங்களுக்கு ஞானத்தைப் பேசுகின்றேன். ஆகவே, நாங்களே பாப்தாதா. அவர் பிரவேசிக்கின்ற சரீரத்தில் அவருக்கெனச் சொந்தமான ஆத்மா உள்ளார்: நான் வந்து அவருக்குப் பக்கத்தில் அமர்கின்றேன். இரு ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாகத்தை நடிக்கின்ற பல நிகழ்வுகள் உள்ளன. ஓர் ஆத்மாவை வரவழைக்கும்போது அந்த ஆத்மா வந்து எங்கு அமர்வார்? அந்த ஆத்மா நிச்சயமாக வந்து பிராமணப் புரோகிதரின் அருகில் அமர்ந்திருப்பார். இங்கும் இரு ஆத்மாக்கள் உள்ளார்கள்: பாப்பும்,தாதாவும். தந்தை இவரிடம் கூறுகின்றார்: உங்களுக்கு உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. அவரும் உங்களிடம் கூறுகின்றார்: உங்களுக்கும் உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றிவந்த பின், வீட்டிற்குத் திரும்புகிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். இப்பொழுது இச்சங்கமயுகத்திலேயே நீங்கள் மாற்றமடைகின்றீர்கள். யோகத்தைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் சதோபிரதானாகுவதுடன், உங்கள் மின்கலமும் சக்தியூட்டப் படுகின்றது. பின்னர் நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். முழுச்சக்கரமும் தொடர்ந்து உங்கள் புத்தியில் சுற்றி வருகின்றது. நீங்கள் விரிவாக்த்திற்குள் செல்ல முடியாது. விருட்சத்தின் கால எல்லையும் உள்ளது. பின்னர் அது உலர்;ந்து விடுகின்றது. இங்கும் மனிதர்கள் அனைவரும் உலர்ந்து விட்டதைப் போன்றுள்ளனர். அனைவரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்கின்றனர். இப்பொழுது அனைவரினது சரீரமும் அழிக்கப்படவுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்கள். இந்த ஞானத்தைத் தந்தையைத் தவிர வேறு எவராலும் கொடுக்க முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு உலக ஆட்சியைக் கொடுக்கின்றார். ஆகவே நீங்கள் அவரை அதிகளவு நினைவு செய்யவேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காவிட்டால் மாயையினால் நீங்கள் அறையப்படுகின்றீர்கள். மிகக் கடுமையான அறை விகாரத்திற்கே ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே யுத்த களத்தில் நிற்கின்றீர்கள், ஆகவே புயல்கள் உங்களிடம் மாத்திரமே வரும். எனினும் நீங்கள் பாவச்செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நீங்கள் பாவச்செயல்களைச் செய்யும் போது நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார்: குழந்தைகளே என்றுமே விகாரத்தில் ஈடுபடாதீர்கள். குலத்தின் பெயரை அவதூறு செய்யாதீர்கள். ஒரு லௌகீகக் குடும்பத்திலும் ஒரு குழந்தை தகுதியானவராக இல்லையெனில் பெற்றோர் கூறுவார்கள்: உங்கள் முகத்தை ஏன் அழுக்காக்குகின்றீர்கள்? நீங்கள் குலத்தின் பெயரையும் அவதூறு செய்கின்றீர்கள். வெற்றியையும், தோல்வியையும் பின்னர் தோல்வியையும் வெற்றியையும் அனுபவம் செய்த பின்னர், இறுதியில் நீங்களே வெற்றியாளர் ஆகுவீர்கள். இதுவே சத்தியப்படகு ஆகும். ஏனெனில் பல செயற்கையான மனிதர்கள் தோன்றியதால் பல புயல்கள் ஏற்படும். சிலர் தங்களைக் கடவுள் என அழைக்கின்றார்கள், சிலர் தங்களை வேறு ஏதோ என அழைக்கின்றார்கள். பலர் தங்கள் மாயாஜாலச் சக்தியைக் காட்டுகின்றார்கள். அவர்கள் காட்சிகளையும் காட்டுகின்றார்கள். தந்தை அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்காக வருகின்றார். இந்தக் காடும், இந்தக் காட்டில் வாழ்கின்றவர்களும் எஞ்சியிருக்கப் போவதில்லை. இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இப்பொழுது இப்பழைய உலகம் ஒரு சுடுகாடாக ஆகுகின்றது என உங்களுக்குத் தெரியும். நீங்கள் மரணிக்கப் போகின்றவர்கள் மீது பற்று வைக்கக்கூடாது. இப்பழைய உலகம் ஒரு முடிவுக்கு வருகிறது. வுpநாசம் இடம் பெறவுள்ளது. புதிய உலகம் பழையதாகும் போதே தந்தை வருகின்றார். தந்தையை மிக நன்றாக நினைவு செய்வதனால் உங்கள் மின்கலம் சக்தியூட்டப்படுகிறது. சிலர் நன்றாக ஞானம் பேசுகிறார்கள். ஆனால் அவர்களிடம் எந்த யோகசக்தியும் இல்லாததால், அந்தளவிற்கு வலிமையும் இல்லை. வாள் அந்தளவிற்கு சக்தி வாய்ந்ததாக இல்லை. தந்தை கூறுகின்றார்: இது எதுவும் புதியதல்ல. நான் 5000 வருடங்களுக்கு முன்பும் வந்;தேன். தந்தை வினவுகின்றார்: முன்னர் நாங்கள் சந்தித்த துண்டா? குழந்தைகள் பதிலளிக்கிறார்கள்: நாங்கள் ஒரு சக்கரத்திற்கு முன் சந்தித்தோம். நாடகம் அவர்களை முயற்சி செய்யத் தூண்டும் எனச்சிலர் கூறுகின்றார்கள். நல்லது, நாடகம் இப்பொழுது உங்களை முயற்சி செய்யத் தூண்டுகிறது. ஆகவே அதனைச் செய்யுங்கள்! எங்காவது ஓரிடத்தில் அமர்ந்திருக்காதீர்கள். முன்னைய கலப்பத்தில் முயற்சி செய்தவர்கள் மீண்டும் அதைச் செய்வார்கள். இன்னமும் இங்கு வராதவர்களும் வருவார்கள். இந்தப் பாதையில் வந்தபின், விட்டுச் சென்று திருமணம் செய்தவர்களும, அது நாடகத்தில் அவர்களுடைய பாகமாக இருந்தால் மீண்டும் இங்கு வந்து முயற்சி செய்வார்கள். அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அனைவரும் மீண்டும் தங்கள் வாலைத் தொங்கவிட்டுக் கொண்டு தந்தையிடமே வரவேண்டும். பீஷ்மபிதாவும் இறுதியிலேயே வந்தார் என எழுதப்பட்டுள்ளது. இந்நேரத்தில் அவர்களுக்கு அதிகளவு அகங்காரம் இருந்தாலும், அவர்களுடைய அகங்காரம் பின்னர் முடிவடைந்துவிடும். நீங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கொரு முறை உங்கள் பாகங்களை நடிப்பீர்கள். உங்கள் இராச்சியத்தைப் பெற்ற பின்னர் அதனை இழந்து விடுவீர்கள். நாளுக்கு நாள் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சத்தியயுகத்தில் தேவதர்மமே வழக்கமாக இருந்ததென்றும், இதனாலேயே அவர்கள் இப்பொழுது வணங்கப்படுகிறார்கள் என்றும் தேவர்களை வணங்குகின்ற மக்களுக்கு குறிப்பாக பாரதமக்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் புகழ்கின்றார்கள், ஆனால் அவர்கள் ஆதிசனாதன தேவ தேவியர்களின் தர்மத்தையே புகழ்கின்றார்கள். இந்தத் தர்மத்தை ஸ்தாபித்தது யார்? அவர்கள் அதனைக் கிருஷ்ணர் ஸ்தாபித்தார் என நம்புகின்றார்கள். இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் அவரை வணங்குகின்றார்கள். உங்களுக்குள்ளும் இது வரிசைக்கிரமமானதே ஆகும். சிலர் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள், சிலர் குறைவாகவே செய்கின்றார்கள். அனைவரும் ஒரு விரலைக் கொடுப்பதனால் மலையை உயர்த்த முடியும் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் இப்பொழுது பழையதாகி விட்டதால் அனைத்தும் அதன் பலத்தை இழந்து விட்டன. அவர்களால் சுரங்கங்களிலும் தங்கத்தைக் காண முடியாதுள்ளது. சுவர்க்கத்தில் தங்கத்தினாலான மாளிகைகள் உள்ளன. ஆனால் இப்பொழுது அரசாங்கம் தனது கடன்களைத் தீர்க்க முடியாமல் கவலையடைகின்றது. அங்கு அதிகளவு செல்வம் உள்ளது, அங்கு சுவர்கள் வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வைரங்களால் பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். அங்கு செல்வத்திற்கு எவ்விதக் குறையும் இல்லை. அங்கு பொக்கிஷங்கள் பெருமளவில் நிறைந்திருக்கும். அலாவுதீனும் அவரது மந்திரவிளக்கும் பற்றிய ஒரு நாடகமும் நடிக்கப்படுகின்றது. விளக்கை உரசியதும் ஒரு முழுமையான மாளிகை தோன்றும். இங்கும் ஒரு தெய்வீகக்காட்சியை நீங்கள் பெற்றதும், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். அங்கு நீங்கள் வைரங்களினால் பதிக்கப்பட்ட புல்லாங்குழல் போன்றவையுடன் இளவரசர்கள் இளவரசிகளைக் காணலாம். அத்தகைய ஆபரணங்களை எவராவது இங்கு அணிவாராயின் அவை கொள்ளையடிக்கப்படும். அந்த நபரை குத்திவிட்டு அவரிடமிருந்து கொள்ளையடிப்பார்கள். அத்தகைய விடயங்கள் அங்கு இடம் பெறுவதில்லை. இந்த உலகம் மிகவும் பழையதும், தீயதும் ஆகும். இலக்ஷ்மி, நாராயணனது உலகம் மிகவும் அற்புதமானதும், அழகானதுமாகும். அங்கு வைரங்களினாலும், இரத்தினங்களினாலும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருக்கும். அவை தாமாகவே அங்கிருப்பதில்லை. அதுவே சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. உண்மையில் நீங்களே சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் சோமநாதருக்கு ஆலயம் கட்டினோம். பக்திமார்க்கத்தில் நீங்கள் என்னவாக, எவ்வாறு இருந்தீர்கள் என்றும், பின்னர் நீங்கள் ஆலயங்களைக் கட்டி வழிபட்டீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்கள் 84 பிறவிகளின் ஞானம் ஆத்மாக்களாகிய உங்களிடம் உள்ளது. நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அங்கு அதிகமான வைரங்களும் இரத்தினங்களும் இருந்தன. அவை அனைத்தும் எங்கு சென்றன? படிப்படியாக அனைத்தும் முடிவடைந்து விட்டன. முஸ்லிம்களினால் அதிகளவு கொள்ளையடிக்கப்பட்டது. அவர்கள் வைரங்களைக் கல்லறைகளில் பதித்தார்கள். அத்துடன் தாஜ்மகால் போன்றவற்றையும் கட்டினார்கள். பிரித்தானியர்கள் வந்து அதைத் தோண்டி எடுத்துச் சென்றார்கள். இப்பொழுது எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. பாரதம் இப்பொழுது ஏழ்மையடைந்து விட்டதால் தொடர்ந்து கடன்கள் எடுக்க வேண்டியுள்ளது. உங்களால் தானியம் சீனி, எதுவுமே பெற முடிவதில்லை. உலகம் இப்பொழுது மாறவேண்டும், எனினும் அதற்கு முன்னர் ஆத்மாக்களாகிய உங்களின் மின்கலங்களை சதோபிரதானாக்குவதற்கு நீங்கள் சக்தியூட்டப்பட வேண்டும். நீங்கள் நிச்சயமாகத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். உங்கள் புத்தியின் யோகம் தந்தையுடன் இணைக்கப் பட்டிருக்கவேண்டும். அவரிடமிருந்தே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறவேண்டும். இதிலேயே மாயை உங்களுடன் போரிடுகின்றாள். முன்னர் நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனையோரைப் போன்றே நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் ஏனைய அனைவரும் கலியுகத்தில் உள்ளார்கள் உங்கள் மனதில் புகுகின்றவற்றை எல்லாம் நீங்கள் தொடர்ந்தும் கூறுவதாக மக்கள் கூறுகின்றார்கள். எனினும், பல யுக்திகள் உள்ளன, அவற்றைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். நாளடைவில் உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். பாபா இப்பொழுது ஒரு பெரிய பல்கலைக்கழகத்தைத் திறக்கின்றார். அங்கு விளங்கப்படுத்துவதற்குப் படங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் மேலும் முன்னேறுகையில், இப்படங்கள் யாவும் டிரான்ஸ் லைற் வடிவத்தில் இருக்கும். அப்போது விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும். நீங்கள் பாபாவின் நினைவுடனும், அவரின் ஞானத்துடனும் மீண்டுமொருமுறை உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மாயை இடையில் புகுந்து உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றாள். தந்தை கூறுகின்றார்: ஏமாற்றப்படுவதிலிருந்து தொடர்ந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதற்கான பல வழிமுறைகளை அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் காட்டுகின்றார். அவர்களிடம் கூறுங்கள்: தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அப்போது நீங்கள் இந்த இலக்ஷ்மி, நாராயணன் போலாகுவீர்கள். இந்த பட்ஜ் போன்றவற்றைக் கடவுளே செய்துள்ளார். ஆகவே அவற்றிற்கு அதிக மதிப்புக் கொடுக்க வேண்டும் அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சகல நற்குணங்களினாலும் உங்களை அலங்கரியுங்கள். எவருக்கும் என்றுமே துன்பம் விளைவிக்காதீர்கள். சந்தோஷத்திற்கான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.

2. முழு உலகமும் ஓர் இடுகாடு போலாகி விட்டது, எனவே அதன்மீது பற்று வைக்காதீர்கள். நீங்கள் இப்பொழுது மாற்றப்படுகின்றீர்கள் என்ற விழிப்புணர்வுடன் எப்பொழுதும் இருங்கள். ஏனெனில் இப்பொழுது நீங்கள் புதிய உலகிற்குச் செல்லவேண்டும்.

ஆசீர்வாதம்:
வீட்டில் குடும்பத்துடன் வாழும் போதும், நான் எனும் உணர்வை துறந்துள்ள ஓர் உண்மையான நம்பிக்கை பொறுப்பாளராகவும் மாயையை வென்றவராகவும் ஆகுவீர்களாக.

குப்பையில் கிருமிகள் பிறப்பதைப் போன்றே, மாயை நான் எனும் உணர்வுள்ள இடத்தில் பிறப்பெடுக்கின்றாள். உங்களை ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் எனக் கருதுவதே மாயை வென்றவர் ஆகுவதற்கான இலகுவான வழியாகும். ஒரு பிரம்ம குமார் என்றால், நம்பிக்கை பொறுப்பாளர் என்று அர்த்தமாகும், ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் எவ்விதமான பற்றையும் எவர் மீதும் கொண்டிருக்க மாட்டார், ஏனெனில், அவருக்கு நான் என்ற உணர்வு இருப்பதில்லை. உங்களை ஒரு இல்லறத்தவர் எனக் கருதும் போதே, மாயை வருகின்றாள், உங்களை ஒரு நம்பிக்கை பொறுப்பாளர் எனக் கருதும் போது, மாயை ஓடோடி விடுகின்றாள், எனவே குடும்பத்துடன் வாழும்; போதும், பற்றற்றவராகி, அதன் பின்னர் செயல்களுக்குள் வரும் போது, நீங்கள் மாயை உட்புகாதவர் ஆகுகிறீர்கள்.

சுலோகம்:
அகங்காரம் இருக்கும் இடத்தில், நிச்சயமாக இகழப்படும் உணர்வும் இருக்கும்.