10.09.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து புதிய ஆன்மீக விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு உங்கள் வடிவத்தை மாற்றிக் கொண்டு இங்கே வந்திருக்கிறீர்களோ அவ்வாறே தந்தையும் இங்கே வந்திருக்கிறார்.

கேள்வி:
தந்தை கொடுக்கின்ற விளக்கங்களில் அதிகளவு கவனம் செலுத்தினால் சிறு குழந்தைகளால் எப் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்?

பதில்:
ஆன்மீகத் தலைவர் எனும் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். சிறிய குழந்தைகள் தைரியத்துடன் ஒன்றைச் செய்து, தந்தை கூறுவனவற்றில் கவனம் செலுத்தி மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்தும் பொழுது, அவர்கள் மீது அனைவரும் அன்பு செலுத்துவார்கள். தந்தையின் பெயரும் போற்றப்படும்.

பாடல்:
உங்கள் ஆகாயச் சிம்மாசனத்தை விட்டிறங்கி பூமிக்கு வாருங்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் கூவி அழைத்ததால் தந்தையும் வந்தார். குழந்தைகளாகிய நீங்கள் நடைமுறையில் என்ன கூறுகிறீர்கள்? பாபா மீண்டுமொரு முறை இராவண இராச்சியத்திற்கு வாருங்கள். மாயையின் நிழல் மீண்டும் ஒருமுறை படுகின்றது என்றதொரு கூற்றுள்ளது. இராவணனே மாயை என அழைக்கப்படுகிறான். இதனாலேயே அவர்கள் கூவி அழைக்கிறார்கள்: இப்பொழுது இது இராவண இராச்சியமாகியுள்ளது. ஆகையால் மீண்டும் ஒருமுறை வாருங்கள். இந்த இராவண இராச்சியத்தில், பெரும் துன்பம் நிலவுகிறது. நாங்கள் மிகவும் சந்தோஷமற்ற பாவாத்மாக்கள் ஆகியுள்ளோம். தந்தை இங்கே நடைமுறையில் வந்துள்ளார். அதே மகாபாரத யுத்தம் மீண்டும் இடம்பெறுவதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தந்தை ஞானத்தையும் இராஜயோகத்தையும் கற்பிக்கிறார். மக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ! அசரீரியான பரமாத்மாவான பரமபிதாவே, அசரீரியான உலகிலிருந்து வந்து ஒரு சரீர வடிவை எடுங்கள்! உங்கள் வடிவத்தை மாற்றுங்கள்! நீங்களும் பிரம்மம் என்ற பெரும் தத்துவம் அல்லது அசரீர உலகம் என்ற இடத்தின் வாசிகளே என்று தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்களும் உங்கள் வடிவத்தை மாற்றியுள்ளீர்கள். எவருக்குமே இது தெரியாது. ஓர் அசரீரியான ஆத்மா ஒரு பௌதீக சரீரத்தை ஏற்கிறார். அது அசரீரியான உலகம். இது பௌதீக உலகம்;. மற்றையது சூட்சும உலகம் அது வேறாகும். சப்தத்திற்கு அப்பாலுள்ள மௌனதாமத்திலிருந்தே நீங்கள் இங்கே வந்தீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. புதிய படைப்பை உருவாக்க வேண்டிய பொழுது முதலில் தந்தை சூட்சும உலகை உருவாக்குகிறார். இப்பொழுதே நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் மீண்டும் அங்கே செல்ல மாட்டீர்கள். முதலில் நீங்கள் கீழே இறங்கி வரும்பொழுது, நீங்கள் சூட்சும உலகினூடாக வருவதில்லை. நீங்கள் நேரடியாக இங்கே வருகிறீர்கள். இப்பொழுது உங்களால் சூட்சும உலகிற்குச் சென்று, திரும்பி வர முடியும். நடந்து சென்று வருவது என்றில்லை. குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளையே காணுகின்றீர்கள். அசரீர உலகின் காட்சிகளையும் நீங்கள் காணலாம். ஆனால் உங்களால் அங்கு செல்ல முடியாது. நீங்கள் வைகுந்தத்தின் காட்சிகளையும் காணலாம். ஆனால் நீங்கள் முழுமையாகத் தூய்மையாகும் வரை நீங்கள் அங்கே செல்ல முடியாது. நீங்கள் சூட்சும உலகிற்குச் செல்கின்றீர்கள் என்றும்; கூற முடியாது. அதன் காட்சிகளை நீங்கள் காணமுடியும். சிவபாபாவும், தாதாவும் குழந்தைகளாகிய நீங்களும் இருக்கிறீர்கள். புதிய ஆன்மீக விடயங்களைக் குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு செவிமடுக்கிறீர்கள் எனப் பாருங்கள். உலகிலுள்ள எவருக்குமே இவ்விடயங்கள் தெரியாது. அசரீரியான உலகைப் பற்றி அவர்கள் பேசினாலும் அது எவ்வாறு இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிற்கும் முதலில் அவர்கள் ஆத்மாவையே அறியாதுள்ளார்கள். அவ்வாறாயின் அவர்களால் எவ்வாறு அசரீரியான உலகை அறிந்து கொள்ள முடியும்? தந்தை வந்து முதலில் உங்களுக்கு ஆத்மா உணர்வையே கொடுக்கிறார். நீங்கள் ஆத்மாக்கள். உங்கள் வடிவத்தை மாற்றியுள்ளீர்கள். அதாவது நீ;ங்கள் அசரீரியானவர்களில் இருந்து சரீரதாரிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை அனுபவம் செய்கிறீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஓர் இசைத் தட்டில் பதிவு செய்யப்படுவதைப் போன்று அப் பாகங்கள் அனைத்துமே ஆத்மாவில் நிறைந்துள்ளது. இவ்விடயங்கள் அனைத்தையும் அவர் உங்களுக்குக் கூறியுள்ளார். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது ஆழமான மகிழ்வூட்டும் விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றேன். முன்னர் நீங்கள் அறியாத விடயங்களை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். புதிய கருத்துக்கள் உங்கள் புத்தியியில் இருப்பதால் உங்களால்; விரைவில் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த முடிகின்றது. படிப்படியாக பிராமணர்களின் விருட்சமும் தொடர்ந்தும் வளர்கின்றது. அது பின்னர் தேவ விருட்சம் ஆகுகின்றது. பிராமணர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உலகப் படத்தில் இந்தியா மிகச் சிறிதாகத் தோன்றுவதைப் போலவே, எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. உண்மையில் இந்தியா மிகப் பெரியது. அவ்வாறே ஞானத்தையிட்டுக் கூறப்பட்டுள்ளது: மன்மனாபவ அதாவது அல்பாவை நினைவு செய்யுங்கள். விதையோ சின்னஞ்சிறியது. அதில் இருந்து வளரும் மரமோ மிகப் பெரியது. இந்தப் பிராமணக் குலமும் மிகச் சிறியதாயினும், அது தொடர்ந்தும் வளரும். இந்நேரத்தில் நீங்கள் பிராமணர்கள் என்பதும் பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது 84 பிறவிகளிற்கான ஏணிப்படம் மிகச் சிறந்தது. 84 பிறவிகளை எடுப்பவர்களே வந்து இதனைப் புரிந்து கொள்கிறார்கள் எனக் குழந்தைகளால் விளங்கப்படுத்த முடியும். சிலர் 84 பிறவிகளையும் மற்றவர்கள் 80 பிறவிகளையும் எடுக்கிறார்கள். குறைந்தபட்சம் நீங்கள் இந்தத் தேவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையாவது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சூரிய வம்சக் குலத்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சித்தியடையாது விட்டால், தாமதித்தே வருவீர்கள். எல்லோரும் ஒன்றாக வருவதில்லை. பலர் ஞானத்தை எடுத்த போதிலும் அனைவரும் ஒன்றாக இறங்கி வருவதில்லை. அவர்கள் ஒன்றாகத் திரும்பிச் செல்கிறார்கள். கீழ் இறங்கும் போது ஒரு நேரத்தில் வெகுசிலரே வருகின்றார்கள். இது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம். ஒரேநேரத்தில் அனைவருமே எவ்வாறு 84 பிறவிகள் எடுக்க முடியும்? மீண்டும் ஒருமுறை கீதையின் ஞானத்தை எங்களுக்கு உபதேசிக்க வாருங்கள் என்று நீங்கள் கூவியழைக்கிறீர்கள். மகாபாரத யுத்தம் நடக்கும் போதே அவர் வந்து கீதையின் ஞானத்தை உபதேசிக்கின்றார் என்பதையே இது காட்டுகிறது. இதுவே இராஜயோகம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்போது இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பாபா ஒவ்வொரு சக்கரமும் வந்து, 5000 வருடங்களுக்கொரு ஒருமுறை எங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நாங்கள் சத்திய நாராயணனின் கதையைக் கேட்கிறோம், அப்படியில்லையா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் எங்கே சென்றார்கள்? எவருக்குமே இது தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இராவணனின் நிழல் உங்கள் மீது படுகின்றது. இப்பொழுது நாடகத்திற்கு ஏற்ப இராவண இராச்சியம் முடிவடைய வேண்டும். சத்திய யுகத்தில் இராம இராச்சியம் உள்ளது. ஆனால் இந்நேரத்தில் இராவண இராச்சியமே உள்ளது. இப்பொழுது உங்களிடம் உள்;ள ஞானம் இவ்வுலகில் உள்ள வேறு எவரிடமுமே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இது புதிய உலகிற்கான எங்கள் புதிய கல்வியாகும். அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரை எழுதியுள்ளார்கள். ஆனால் அது பழையதொரு விடயமாகும். நீங்கள் இப்பொழுது புதிய விடயங்களைச் செவிமடுக்கிறீர்கள். கடவுள் சிவன் பேசுகிறார் என்பதை தாங்கள் முன்னர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என அவர்கள் கூறுகிறார்கள். கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார் என்பதையே அவர்கள் எப்பொழுதும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் புதிய உலகிற்கான புதியவை அனைத்தையும் செவிமடுக்கிறீர்கள். பாரதம் புராதனமானது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் எவ்வாறாயினும் அது எப்பொழுது இருந்தது? இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் எவ்வாறு தொடர்ந்தது? அவர்கள் எவ்வாறு தங்கள் இராச்சித்தைப் பெற்றார்கள் என்பதும் பின்னர் அது எங்கே சென்றது? இது எதுவுமே அவர்கள் புத்தியில் புகுவதில்லை. என்ன நடந்ததால் அவர்களின் இராச்சியம் முடிவடைந்தது? யார் வெற்றியடைந்தார்கள்? அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. சத்திய யுகம் பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்திருந்ததென்று அவர்கள் கூறுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் நூறாயிக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆட்சி செய்வது சாத்தியமற்றது. அது அவ்வாறாயின் சூரிய வம்ச அரசர்கள் பலர் இருந்திருக்க வேண்டும் அவர்கள் எவரையும் பற்றி குறிப்பிடப்படவில்லை. 1250 ஆண்டுகளைப் பற்றியோ அல்லது எவ்வளவு காலத்திற்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் தொடர்ந்தது என்றோ எவருக்குமே தெரியாது. இதனைப் பற்றி எதுவுமே எவருக்குமே தெரியாத போது எவ்வாறு நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப்பற்றி எவரும் எதையும் தெரிந்து கொள்ள முடியும்? எவரின் புத்தியும் வேலை செய்வதில்லை. சிறியவர்களாகிய உங்களால் உடனடியாக விளங்கப்படுத்த முடியும். இது வெகு சுலபமானது. முழுக்கதையுமே பாரதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சத்திய திரேதா யுகங்களில் பாரத மக்கள் அரசர்களாக இருந்தார்கள். பல்வேறுபட்ட உருவங்கள் உள்ளன. இது இன்றிலிருந்து, 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதே, ஆயினும் அவர்கள் பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இது 5000 ஆண்டுகளுக்கான கதையாகும்: 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அவர்களின் வம்சம் இருந்தது. பின்னர் அவர்கள் மறுபிறப்பெடுத்தார்கள். சிறுமிகள் ஆகிய நீங்கள் இதனை விளங்கப்படுத்தும் போது, இந்த ஞானத்தை நீங்கள் மிகவும் நன்றாகக் கற்றுள்ளீர்கள் என மக்கள் நினைப்பார்கள். ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு எவரிடமும் இந்த ஆத்மீக ஞானம் இல்லை. ஆன்மீகத் தந்தையே வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்துள்ளார் என நீங்கள் கூறுவீர்கள். ஆத்மா சரிPரத்தின் மூலமே செவிமடுக்கிறார். ஆத்மா கூறுகிறார்: நான் இன்னார் ஆகுகின்றேன். மனிதருக்கு சுயத்தைப் பற்றிய உணர்வில்லை. தந்தை எங்களைப் பற்றி எங்களுக்கு உணரச் செய்துள்ளார். ஆத்மாவாகிய நான் முழுமையான 84 பிறவிகளையும் எடுக்கிறேன் அத்தகைய விடயங்களை நீங்கள் அமர்ந்து விளங்கப்படுத்தும் போது உங்களிடம் மிகச் சிறந்த ஞானம் உள்ளது என அவர்கள் எண்ணுவார்கள். கடவுள் ஞானம் நிறைந்தவர்;. அவர்கள் பாடுகிறார்கள்: கடவுள் ஞானம் நிறைந்தவரும், பேரின்பம் நிறைந்தவரும், முக்தியளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். ஆனால் அவர் எங்கே எங்களை அழைத்துச் செல்லப் போகிறார் என்பது எவருக்குமே தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இதனை விளங்கப்படுத்த முடியும். ஆன்மீகத் தந்தையே ஞானம் நிறைந்தவர் என்றும், அவரே பேரின்பம் நிறைந்தவர் எனவும் அழைக்கப்படுகிறார். மக்கள் சந்தோஷமற்றிருக்கும் போது அவர் வந்து மக்களை அதில் இருந்து விடுதலையாக்குகிறார். இராவண இராச்சியம் ஒன்றே உள்ளது. தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் எனக் கூறப்படுகின்றது. இராவண இராச்சியம் நரகம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் அமர்ந்திருந்து இந்த ஞானத்தை எவருக்காவது விளங்கப்படுத்தும் போது இதனைச் சென்று மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள் என அவர்கள் உடனடியாக கூறுவார்கள். எவ்வாறாயினும் நீங்கள் இதனை மிக நன்றாகக் கிரகிக்க வேண்டும். கண்காட்சிப் படங்கள் கொண்ட சஞ்சிகையும் ஒன்று உள்ளது. இப்படங்களை நன்றாகப் புரிந்து கொண்டு அவற்றின் மூலம் பெருமளவு சேவையும் செய்ய முடியும். இக் குழந்தை (சகோதரி ஜெயந்தி) இலண்டனுக்குச் சென்று தனது ஆசிரியருக்கும் விளங்கப்படுத்தலாம். இந்த சேவையை நீங்கள் இலண்டனுக்குச் சென்றும் செய்ய முடியும். உலகில் அதிகளவு ஏமாற்றுதல் உள்ளது. இராவணன் அனைவரையும் ஏமாற்றுக்காரர்கள் ஆக்கியுள்ளான். குழந்தைகளால் முழு உலகின் வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்த முடியும். இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்தது? அதன் பின்னர் எவ் வருடத்தில் இருந்து இஸ்லாமியர், பௌத்தர், கிறிஸ்தவர் ஆகியோரின் காலம் நிலவியது. பல்வேறு சமயங்களின் விருட்சம் வளர்ந்து, மிகவும் பெரிதாகி உள்ளது. அரைக் கல்பத்தின் பின்னரே ஏனைய சமயங்கள் வருகின்றன அவ்விடயங்களைப் பற்றி நீங்கள் கூறும் போது உங்களை ஓர் ஆன்மீகத் தலைவர் என்றும் உங்களிடம் ஆன்மீக ஞானம் உள்ளது என்றும் அவர்கள் கூறுவார்கள். அவர் பதிலளிப்பார்: இந்த ஞானம் இந்தியாவில் கொடுக்கப்படுகின்றது. தந்தையான ஆன்மீகக் கடவுளே அதனைக் கொடுக்கிறார். அவரே விதையாவார். இது தலைகிழான ஒரு விருட்சமாகும். விதை ஞானம் நிரம்பியவர். ஒரு விதையிடம் அந்த விருட்சத்தைப் பற்றிய அறிவு உள்ளது. இது பல்வேறு சமயங்கள் அடங்கிய விருட்சமாகும். இதுவே பாரதத்தின் தேவ தர்மம் என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இலக்ஷமி நாராயணனின் இராச்சியமும், பின்னர் இராமர் சீதையின் இராச்சியமும் உள்ளது. அவை அரைக் கல்பத்திற்குத் தொடருகிறது. அதன் பின்னரே இஸ்லாம் சமயத்தினர் வருகின்றனர். விருட்சம் தொடர்ந்தும் வளருகிறது. இந்தக் குழந்தை சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி, எவ்வாறு விருட்சம் வெளிப்படுகின்றது என்று விளங்கப்படுத்த வேண்டும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என நாங்கள் விளங்கப் படுத்துவோம். வெளிநாடுகளில் இதனைச் செய்வதற்கு வேறு எவருமே இல்லை. இப்பொழுது இது கலியுக முடிவு, சத்திய யுகம் வர உள்ளது எனக் குழந்தை சென்று விளங்கப்படுத்தினால், அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவார்கள். பாபா உங்களுக்கு வழிமுறைகளைக் காட்டுவதால் நீங்கள் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சிறு குழந்தைகள் அதிகளவு மரியாதையைப் பெறுகிறரர்கள். சிறு குழந்தைகள் தைரியமாக ஒன்றைச் செய்யும் பொழுது பலரிடமிருந்தும் அன்பை பெறுகிறார்கள். சிறு குழந்தைகள் இவ்விடயங்களில் கவனம் செலுத்தும் பொழுது நீங்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆக முடியும் எனத் தந்தை உணர்கிறார். ஆன்மீகத் தந்தையே இங்கே அமர்ந்து உங்களுக்கு இந்த ஞானத்தை தருகின்றார். கிருஷ்ணரைத் தந்தையாகிய கடவுள் எனக் கூறுவது தவறாகும். கடவுள் அசரீரியானவர். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். அவரே தந்தையாவார். கலியுகத்தில் அனைவரும் சந்தோஷமற்று இருக்கும் பொழுது தந்தை வருகிறார். மீண்டும் இது கலியுகம் ஆகும் பொழுது சத்தியயுகத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வரவேண்டும். புராதன பாரதமே சந்தோஷ பூமியாக இருந்தது. அது சுவர்க்கமாக இருந்த பொழுது வெகு சிலரே இருந்தனர். எனவே அப்பொழுது ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கே இருந்தார்கள்? அவர்கள் சாந்தி தாமத்தில் இருந்தார்கள். இவ்வாறாக நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதில் பயப்படுவதற்கு எதுவுமே இல்லை இது ஒரு கதையே. ஒரு கதையைச் சந்தோஷத்துடனேயே கூறுவார்கள். உலக வரலாறும் புவியியலும் எவ்வாறு மீண்டும் நடைபெறுகிறது என்பதும் ஒரு கதையே. அதனை ஞானம் எனவும் நீங்கள் கூற முடியும். இதனை மிக உறுதியாக நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு நான் மீண்டும் கூற வேண்டிய முழு விருட்சத்தினது ஞானமும் ஆத்மாவாகிய என்னிடம் உள்ளது. ஞானம் நிறைந்த தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை தருகிறார். இக் குழந்தை சென்று இந்த ஞானத்தை அவர்களுக்குக் கொடுக்கும் பொழுது அவர்கள் கூறுவார்கள்: பிறரையும் அழையுங்கள். அவர்களிடமும் கூறுங்கள்: ஆம், என்னால் அவர்களுக்குக் கூற முடியும், ஏனெனில், பாரதத்தை சுவர்க்கம் ஆக்கிய புராதன இராஜ யோகத்தை அறிவதற்கு மக்கள் விரும்புகின்றார்கள். யாராவது சென்று அதனை விளங்கப்படுத்த வேண்டும். சந்நியாசிகள் என்ன கூறுகிறார்கள்? கீதையில் மாத்திரமே ஆன்மீக ஞானம் உள்ளது. எனவே அவர்கள் சென்று கீதையை மாத்திரமே உபதேசிக்கிறார்கள். பலர் கீதையை வாசித்து மனப்பாடம் செய்கிறார்கள். அது ஆன்மீக ஞானமா? அந்த ஞானம் ஒரு மனிதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனிதரால் ஆன்மீக ஞானத்தை கொடுக்க முடியாது. கீதைக்கும், பாபா உங்களுக்குக் கூறும் ஞானத்திற்கும் இடையில் இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தந்தையே அந்த ஞானத்தை கொடுத்தார். ஆனால் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். சத்திய யுகத்தில் கிருஷ்ணரிடம் இந்த ஞானம் இருப்பதில்லை. தந்தையே ஞானம் நிரம்பியவர். இவை மிகவும் நுட்பமான விடயங்கள்! கிருஷ்ண ஆத்மா சத்தியயுகத்தில் இருக்கும் பொழுது இந்த ஞானம் இருக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் சிக்கலாக்கியுள்ளார்கள். நீங்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று பாபாவின் பெயரைப் போற்ற வேண்டும். நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்ற முடியும். அவர்களிடம் கூறுங்கள்: உலக வரலாற்றையும் புவியியலையும் பற்றிய ஞானத்தை எங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியும். சுவர்க்கத்தை எவ்வாறு கடவுள் ஸ்தாபிக்கிறார் என்றும், சுவர்க்கம் எவ்வாறு பின் நரகம் ஆகின்றதென்பதையும் எங்களால் விளங்கப்படுத்த முடியும். அமர்ந்திருந்து இவ்விடயங்களைக் குறித்துக் கொண்ட பின்னர் எந்தக் கருத்தையும் மறந்துவிடாத வண்ணம் சோதித்துக் கொள்ளுங்கள். பின்னர் அக்கருத்துக்களை ஞாபகப்படுத்திக் குறித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பயிற்சி செய்வதனால் நீங்கள் மிக நன்றாக எழுதுவீர்கள். நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்தும் பொழுது உங்கள் பெயர் போற்றப்படும். பாபாவினால் இங்கிருந்து எவரையும் வெளியில் சேவை செய்வதற்காக அனுப்ப முடியும். இவர் சென்று மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினால், அது மிகவும் நன்று. ஏழு நாட்களில் நீங்கள் மிகவும் திறமைசாலிகள் ஆக முடியும். விதையினதும் விருட்சத்தினதும் ஞானத்தை உங்கள் புத்தியில் கிரகித்துவிட்டு விபரங்களை விளங்கப்படுத்துங்கள். நீங்கள் படங்களைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்துங்கள். சேவை செய்வதில் விருப்பம் இருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் அந்தஸ்து மிக நன்றாக உயரும். ஞானம் மிக இலகுவானது. இது சீரழிந்த பழைய உலகம். சுவர்க்கத்துடன் ஒப்பிடும் பொழுது இது துர்நாற்றம் வீசும் சாணம் போன்றது. அது தங்கமான உலகம். இதுவோ சாணத்திலான உலகம். நீங்கள் உங்கள் சரீரத்தை நீக்கி விட்டுச் சென்று இளவரசர் இளவரசிகளாகி சிறந்த பாடசாலைகளுக்கு சென்று கற்ப்பீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அங்கே அனைத்துமே உடைய முடியாதவையாகவும், மிகவும் சிறந்த ஆகாய விமானங்களும் இருக்கும். இச் சந்தோஷம் உங்களுக்குள் இருக்குமாயின் நீங்கள் எதனையிட்டும் ஒரு போதும் அழமாட்டீர்கள். நீங்கள் இளவரசர்கள் இளவரசிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். எனவே அந்தச் சந்தோஷம் ஏன் உங்களுக்குள் இருக்கக் கூடாது? எதிர் காலத்தில் நாங்கள் சிறந்த பாடசாலைகளுக்குச் சென்று பலவற்றைச் செய்வோம். குழந்தைகளாகிய நீங்கள் இவை அனைத்தையும் ஏன் மறக்கின்றீர்கள் என்பதை பாபாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் மிகுந்த போதையுடன் இருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த மாட்டுச்சாணத்தைப் போன்றுள்ள, சீரழிந்த பழைய உலகை உங்கள் புத்தியிலிருந்து அகற்றுங்கள். சத்தியயுக உலகை நினைவு படுத்துவதுடன் எல்லையற்ற சந்தோஷத்தின் போதையையும் கொண்டிருங்கள். ஒரு போதும் அழாதீர்கள்.

2. தந்தை உங்களுக்குக் கூறுகின்ற ஆழமான மகிழ்வூட்டும் விடயங்களைக் கிரகித்து பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். ஆன்மீகத் தலைவர் எனும் பட்டத்தை பெறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இலகுவான, இயல்பான யோகியாக இருந்து, கர்மத்தை செய்கின்ற போதும், எந்தவொரு கர்ம பந்தனத்திலிருந்தும் விடுதலையடைவீர்களாக.

மகாவீர் குழந்தைகள் பௌதீக உலகிலுள்ள எதனாலும் ஈர்க்கப்பட முடியாது. அவர்கள் ஒரு விநாடியில் பற்றற்றவர்களாகவும் தந்தை மீது அன்புடையவர்களாகவும் ஆகுகின்றார்கள். அவர்கள் ஒரு வழிகாட்டலை பெற்றவுடனேயே, தமது சரீரத்திலிருந்து பற்றற்றவர்களாகவும், சரீரமற்றவர்களாகவும், ஆத்ம உணர்வுடையவர்களாகவும், பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களாகவும், யோகயுக்தாகவும் தம்மை அனுபவம் செய்கின்றார்கள். அவர்களே இலகுவான யோகிகளும், இயல்பான யோகிகளும், சதா யோகிகளும், கர்ம யோகிகளும், மேன்மையான யோகிகளும் ஆவார்கள். அவர்களால் தமது எண்ணங்களையும் தமது சுவாசத்தையும் பிராணத்தின் பிரபுவின் (பிராணேஸ்வர்) நினைவில், எப்பொழுது வேண்டுமோ எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமோ தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.

சுலோகம்:
நிலையான ஸ்திரமான ஸ்திதியாகிய மேன்மையான ஆசனத்தில், அமர்வதே தபஸ்வி ஆத்மாவின் அடையாளமாகும்.