10.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும்போது அல்லது சொற்பொழிவு ஆற்றும்போது பாபா பாபா என்று கூறியவாறு அதைச் செய்யுங்கள். தந்தையைப் புகழுங்கள், அம்பானது இலக்கைத் தைக்கும்.

கேள்வி:
எந்தக் கேள்வியை பாபா குறிப்பாக பாரதக் குழந்தைகளிடம் கேட்கின்றார்?

பதில்:
பாரதக் குழந்தைகளாகிய நீங்கள் செல்வந்தர்களாக இருந்தீர்கள்; நீங்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்களாகவும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவராகவும் இருந்தீர்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள்; நீங்கள் காமவாளை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. நீங்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தீர்கள், எனவே, எவ்வாறு நீங்கள் கடனாளிகள் ஆகினீர்கள்? உங்களுக்குக் காரணம் தெரியுமா? குழந்தைகளே, நீங்கள் எவ்வாறு அடிமைகள் ஆகினீர்கள்? உங்கள் செல்வத்தையும், சொத்துக்களையும் எங்கே இழந்தீர்கள்? நீங்கள் எவ்வாறு தூய்மையானவர்களிலிருந்து, தூய்மையற்றவர்களாகினீர்கள் என சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்களை பாபா, பாபா என்று கூறியவாறு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும் போது, அவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்.

ஓம் சாந்தி.
ஓம்சாந்தி என்று கூறுகின்றபோது நீங்கள் தந்தையை நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும். தந்தை முதலில் மன்மனாபவ! என்று கூறுகின்றார். அவர் முன்னரும் இதை நிச்சயமாகக் கூறியிருந்தார், இதனாலேயே இப்பொழுதும் அவர் இதைக் கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிவீர்கள். நீங்கள் ஓர் ஒன்றுகூடலில் சொற்பொழிவாற்றச் செல்கின்ற போது, அந்த மக்கள் தந்தையை அறியமாட்டார்கள். ஆகையினால் அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் என சிவபாபா கூறுகின்றார் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறவேண்டும். அவர் உங்களைத் தூய்மையாக்கும் பொருட்டு, நிச்சயமாக இங்கே விளங்கப்படுத்த வருகின்றார். இங்கே, பாபா குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, நான் உங்களை உலகின் அதிபதிகள் ஆக்கினேன். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தீர்கள். ஆகையினால், நீங்களும் பாபா இதைக் கூறுகின்றார் எனக் கூறவேண்டும். எவரும் அத்தகைய சொற்பொழிவுகளை ஆற்றியதாக பாபா இன்னமும் செய்தியைப் பெறவில்லை. சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் என்னை அதிமேலானவராகக் கருதுகின்றீர்கள்; நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவராகக் கருதுகின்றீர்கள். நான் பாரதத்தில் பிரவேசித்து உங்களுக்கு இராஐ யோகத்தைக் கற்பிக்கின்றேன். நான் உங்களுக்குக் கூறுகின்றேன்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அதிமேலான தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். ஏனெனில் அவரே அருள்பவரான தந்தையாவார். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக பாரதத்தில் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். அந்நேரத்தில் அங்கு வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. தந்தை குழந்தைகளாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார், பின்னர் நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம். பாபா கூறுகின்றார்: பாரத மக்களாகிய நீங்கள் மிகுந்த செல்வந்தராக இருந்தீர்கள். அங்கே தேவதர்மம் இருந்தபோது, நீங்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள்;; நீங்கள் காமவாளைப் பயன்படுத்தவில்லை. நீங்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தீர்கள். தந்தை பின்னர் கூறுகின்றார்: நீங்கள் ஏன் கடனாளிகள் ஆகினீர்கள் என்ற காரணத்தை அறிவீர்களா? நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஏன் உலகின் அடிமைகள் ஆகிவிட்டீர்கள்? நீங்கள் தொடர்ந்தும் அனைவரிடமிருந்தும் கடன் வாங்குகின்றீர்கள். எங்கே அந்தப் பணம் அனைத்தையும் தொலைத்தீர்கள்? பாபா உங்களுக்குச் சொற்பொழிவு ஆற்றியது போன்று சொற்பொழிவு ஆற்றுங்கள், பலர் கவரப்படுவார்கள். நீங்கள் பாபாவை நினைவுசெய்வதில்லை, இதனாலேயே அம்பு இலக்கைத் தைப்பதில்லை. நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவதில்லை. இல்லையெனில், உங்களுடைய அத்தகையதொரு சொற்பொழிவைக் கேட்டாலும் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கும். சிவபாபா கூறுகின்றார்: ஒரேயொருவரே கடவுள் ஆவார். அவரே புதிய உலகை ஸ்தாபிப்பவரான, துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அங்கே மாளிகைகள் வைரங்களாலும் இரத்தினங்களாலும் பதிக்கப்பட்டிருந்தன. ஓர் இராச்சியம் மாத்திரமே அங்கே இருந்தது. அனைவரும் பாலும், சீனியும் போல் இருந்தார்கள். தந்தையின் புகழ் எவ்வாறு எல்லையற்றதோ, அவ்வாறே பாரதத்தின் புகழும் எல்லையற்றது. பாரதத்தின் புகழைக் கேட்கின்ற பொழுது மக்கள் சந்தோஷம் அடைவார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களைக் கேட்கின்றார்: உங்களுடைய செல்வம், சொத்துக்கள் அனைத்தையும் எங்கே தொலைத்தீர்கள்? நீங்கள் பக்திமார்க்கத்தில் அதிகளவு செலவு செய்தீர்கள். நீங்கள் பல ஆலயங்களைக் கட்டினீர்கள். சிவபாபா கூறுகின்றார்: எவ்வாறு நீங்கள் தூய்மையானவர்களிலிருந்து, தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள் எனச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் துன்ப நேரத்தில் கடவுளை நினைவு செய்வதாகக் கூறினீர்கள், இல்லையா? நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது அவரை நினைவு செய்வதில்லை, ஆனால் உங்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்கியது யார்? தொடர்ந்தும் பாபாவின் பெயரை மீண்டும், மீண்டும் குறிப்பிடுங்கள். தொடர்ந்தும்; பாபாவின் செய்தியைக் கொடுங்கள். பாபா கூறுகின்றார்: நான் சிவாலயமாகிய, சுவர்க்கத்தை ஸ்தாபித்தேன். சுவர்க்கத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது; நீங்கள் இதையும் மறந்து விட்டீர்கள். இராதையும், கிருஷ்ணருமே அவர்களுடைய திருமண நாளின் பின்னர் இலக்ஷ்மி, நாராயணனாக ஆகுபவர்;கள் என்பதை நீங்கள் அறியவும் மாட்டீர்கள். நீங்கள் உலகின் அதிபதியாக இருந்த கிருஷ்ணரையும் அவதூறு செய்தீர்கள்; நீங்கள் என்னையும் அவதூறு செய்கின்றீர்கள்! நானே உங்களுக்குச் சற்கதி அருள்பவர், இருந்தும் நான் பூனைகளிலும், நாய்களிலும், ஒவ்வொரு அணுவிலும் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்! பாபா கூறுகின்றார்: நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள்! தந்தை கூறுகின்றார்: நானே அனைவருக்கும் சற்கதி அருள்பவரும், தூய்மையாக்குபவரும் ஆவேன். நீங்கள் பின்னர் கங்கையே தூய்மையாக்குபவர் எனக் கூறுகின்றீர்கள். நீங்கள் என்னுடன் யோகம் செய்யாததால், மேலும் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாபாவின் பெயரை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி விளங்கப்படுத்துங்கள், உங்களால் சிவபாபாவை நினைவுசெய்ய முடியும். நாங்கள் தந்தையைப் புகழ்கின்றோம் என அவர்களிடம் கூறுங்கள். தந்தையே கூறுகின்றார்: நான் அவரது பல பிறவிகளின் இறுதியில் ஒரு சாதாரண, தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இவருடையதே பல பிறவிகள்; ஆகும். இவர் இப்பொழுது எனக்கு உரியவர், எனவே நான் இந்த இரதத்தின் மூலம் விளங்கப்படுத்துகின்றேன். இவரும் அவரது சொந்தப் பிறவிகள் பற்றி அறியமாட்டார். அவர் பகீரதன் (பாக்கிய இரதம்), நான் இவருடைய ஓய்வு பெறும் ஸ்திதியில் இவரினுள் பிரவேசிக்கின்றேன். சிவபாபா இந்த முறையில் விளங்கப்படுத்துகின்றார். பாபா எவரும் அவ்வாறான சொற்பொழிவுகள் ஆற்றுவதாக ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. எவரும் பாபாவின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. அவர்கள் நாள் முழுவதும் பாபாவை முற்றிலுமே நினைவு செய்வதில்லை. அவர்கள் அரட்டையடிப்பது போன்றவற்றில் மும்முரமாக இருந்துவிட்டு, தாங்;கள் அவ்வாறான சொற்பொழிவை ஆற்றியதாகவும், குறிப்பிட்ட முறையில் விளங்கப்படுத்தியதாகவும் கூறி, பாபாவுக்கு எழுதுகின்றார்கள். நீங்கள் இன்னமும் சிறிய எறும்புகள் என பாபா புரிந்துகொள்கின்றார். நீங்கள் இன்னமும் பெரிய எறும்புகளாக ஆகவில்லை, இருந்தும் அதிகளவு ஆணவம் இருக்கின்றது! சிலர் சிவபாபாவே பிரம்மாவின் மூலம் விளங்கப்படுத்துகின்றார் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் சிவபாபாவை மறந்து விடுகின்றீர்கள். மக்கள் பிரம்மாவைப் பற்றி மிக விரைவாகக் குழப்பம் அடைகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் என்னில் மாத்திரமே அக்கறை கொள்ள வேண்டும். நீங்கள் என்னை நினைவுசெய்கின்றீர்கள், இல்லையா? எவ்வாறாயினும் நீங்கள் தந்தை யார் என்றோ, அல்லது அவர் எப்போது வருகின்றார் என்றோ அறிய மாட்டீர்கள். சக்கரம் நூறாயிரக்கணக்கான வருடங்களை உடையது எனக் குருமார் கூறுகின்றார்கள், ஆனால் தந்தை சக்கரம் 5000 வருடங்கள் மாத்திரமே கொண்டது எனக் கூறுகின்றார். பழைய உலகம் புதிய உலகமாகும். மீண்டும் புதிய உலகம் பழையதாகும். இப்பொழுது புது டெல்லி எங்கே உள்ளது? அது தேவதைகளின் பூமியாக இருக்கின்ற போது, அங்கே புது டெல்லி இருக்கும். புதிய உலகில் ஐமுனை நதிக்கரையோரத்தில் புது டெல்லி இருந்தது. அங்கே இலக்ஷ்மி, நாராயணனின் மாளிகை இருந்தது. அது தேவதைகளின் பூமியாக இருந்தது. அது இப்பொழுது இடுகாடாகப் போகின்றது; அனைவரும் புதைக்கப்படவுள்ளார்;கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: அதிமேலான தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். எப்பொழுதும் இந்தமுறையில் பாபா பாபா எனக் கூறியவாறு விளங்கப்படுத்துங்கள். நீங்கள் பாபாவின் பெயரைக் குறிப்பிடாததால், எவரும் உங்களைச் செவிமடுப்பதில்லை. நீங்கள் பாபாவை நினைவு செய்யாததால், உங்களால் அந்தச் சக்தியைப் பெற முடியாதுள்ளது; நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். பந்தனத்தில் இருந்து, அடித்தலை அனுபவஞ் செய்பவர்கள், பாபாவை உங்களை விடவும் அதிகளவு நினைவுசெய்கின்றார்கள். அவர்கள் அதிகளவு கூவி அழைக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் திரௌபதிகள். நீங்கள் இப்பொழுது துகிலுரியப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். முன்னைய சக்கரத்திலும், பூதகி போன்ற பெயர் கொடுக்கப்பட்ட பெண்கள் சிலரும் இருந்தார்கள். நீங்கள் அதை மறந்து விட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: பாரதம் சிவாலயமாக இருந்தபோது, அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. இங்கே சொத்துக்கள், ஆகாயவிமானங்கள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள், தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். அவர்கள் அதி முட்டாள்கள். நீங்கள் ஏதாவது கூறுகின்ற போது, பாபா கூறுகின்றார் என ஆரம்பியுங்கள். ஹத்தயோகிகளால் உங்களுக்கு முக்தியைக் கொடுக்க முடியாது. அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றவர் ஒரேயொருவராக இருக்கின்ற போது, நீங்கள் ஏன் குருமாரை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? நீங்கள் சந்நியாசிகளாக விரும்புகின்றீர்களா, அல்லது ஹத்தயோகம் கற்று பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க விரும்புகின்றீர்களா? எவருமே இரண்டறக் கலக்க முடியாது. ஒவ்வொருவரும் தனது பாகத்தை (pயசவ) நடிக்க வேண்டும். சகல நடிகர்களும் அழிவற்றவர்கள். இந்த நாடகம் அநாதியானதும், அழிவற்றதுமாகும்; எவ்வாறு எவரும் அநாதியான முக்தியைப் பெறமுடியும்? தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சாதுக்கள் போன்றோருக்கும் விடுதலையளிக்கவே வருகின்றேன், எனவே எவ்வாறு கங்கை தூய்மையாக்குபவராக இருக்க முடியும்? நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என அழைக்கின்றீர்கள், இல்லையா? உங்கள் யோகத்தை என்னிடமிருந்து துண்டித்ததால், உங்களுடைய நிலைமை இவ்வாறு ஆகியுள்ளது. இப்பொழுது என்னுடன் யோகம் செய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். துய ஆத்மாக்கள் முக்திதாமத்தில் இருக்கின்றார்கள். இப்பொழுது முழு உலகமும் தூய்மையற்றது. நீங்கள் தூய உலகை அறிய மாட்டீர்கள். நீங்கள் அனைவரும் பூஐpப்பவர்கள்; ஒரு நபருமே பூஐpக்கத் தகுதிவாய்ந்தவர்கள் இல்லை. பாபாவின் பெயரைக் குறிப்பிடுங்கள், உங்களால் அனைவரையும் விழித்தெழச் செய்ய முடியும். உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை, நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணர் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்த, சிறிய குழந்தை. அவர் எவ்வாறு இந்த வியாபாரத்தைச் செய்ய முடியும்? எவ்வாறு கிருஷ்ணர் அனைவரதும் தந்தையாக இருக்க முடியும்? ஒரேயொருவரே கடவுள் ஆவார். என்னுடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றாது, எவ்வாறு உங்கள் கறை அகற்றப்படும்? நீங்கள் அனைவரையும் பூஐpக்கின்றீர்கள், இதனாலேயே உங்கள் நிலைமை இவ்வாறாக ஆகியுள்ளது. இதனாலேயே நான் மீண்டும் வந்துள்ளேன். நீங்கள் உங்களுடைய தர்மத்திலும், கர்மத்திலும் சீரழிந்தவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்து சமயத்தை ஸ்தாபித்தது யார், அது எப்போது ஸ்தாபிக்கப்பட்டது? என எனக்குக் கூறுங்கள். இந்த முறையில் சொற்பொழிவாற்றிச் சவால் விடுங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை நினைவுசெய்வதில்லை. சில நேரங்களில் சில குழந்தைகள் பாபா தங்களுக்குள் பிரவேசித்து சொற்பொழிவு ஆற்றியதாக எழுதுகின்றார்கள். பாபா பெருமளவு உதவி செய்கின்றார். நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்காததால், நீங்கள் செய்கின்ற சேவை தவழ்ந்து செல்கின்றது. நீங்கள் பாபாவின் பெயரைக் குறிப்பிடும் போது மாத்திரமே, அம்பு சிலரைத் தாக்கும். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தவர்கள். ஆகையினால் நான் உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்த வந்துள்ளேன். நான் பாரதத்தில் மாத்திரமே பிரவேசிக்கின்றேன். பூஐpக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியவர்கள், பின்னர் பூஐpப்பவர்கள் ஆகுகின்றார்கள். நான் பூஐpக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதுமில்லை, பூஐpப்பவர் ஆகுவதுமில்லை. பாபா கூறுகின்றார், பாபா கூறுகின்றார் எனத் தொடர்ந்தும் கூறுங்கள். நீங்கள் இதை மீண்டும் மீண்டும் ஓதுவது போன்று கூறிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இம்முறையில் சொற்பொழிவாற்றுவதை பாபா கேட்கும்போது, நீங்கள் சிறிய எறும்புகளிலிருந்து, பெரிய எறும்புகளாக ஆகிவிட்டீர்கள் எனப் புரிந்துகொள்வார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நீங்கள் சதா என்னை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். நான் இந்த இரதத்தின் மூலம் என்னை மாத்திரம் நினைவுசெய்யுமாறு உங்களுக்குக் கூறுகின்றேன், நீங்கள் இரதத்தை நினைவு செய்யக்கூடாது. நீங்கள் பாபா இதைக் கூறினார், பாபா இதை விளங்கப்படுத்தினார் எனக் கூறும்போது அவர்களில் இது எவ்வாறு பதிகின்றது என நீங்கள் பார்க்கலாம். தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை உங்களது சரீரத்திலிருந்தும், சகல சரீர உறவினர்களிலிருந்தும் துண்டித்து விடுங்கள். நீங்கள் சரீரத்தைத் துறந்தவுடன் ஆத்மாவே எஞ்சியிருப்பார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். சிலர் நானே பிரம்மம் என்றும், சிலர் நானே மாயையின் அதிபதி என்றும் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாயை என்றால் என்ன என்றும், செல்வம் என்றால் என்ன என்றும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் செல்வத்தையும் மாயை என அழைக்கின்றீர்கள். நீங்கள் இந்த முறையில் விளங்கப்படுத்தலாம். பல மிக நல்ல குழந்தைகள் முரளியைக் கூட வாசிப்பதில்லை; அவர்கள் தந்தையை நினைவுசெய்வதில்லை. ஆகையினால் அவர்கள் நினைவுச் சக்தியைக் கொண்டிராததால், அம்பு இலக்கைத் தைப்பதில்லை. நினைவின் மூலமே நீங்கள் சக்தியைப் பெறுகின்றீர்கள், இந்த யோகசக்தியின் மூலமே நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் பெயரைத் தொடர்ந்தும் குறிப்பிட்டால், எவருமே எதையும் கூறமுடியாது. அனைவரினதும் கடவுள் ஒரேயொரு தந்தையா, அல்லது அனைவரும் கடவுளா? அவர்கள் தாங்கள் ஒரு குறிப்பிட்ட சந்நியாசியின் சீடர்கள் எனக் கூறுகின்றார்கள். அவர்களிடம் வினவுங்கள்: அவர்கள் சந்நியாசிகள், நீங்கள் இல்லறத்தவர்;கள். எனவே எவ்வாறு நீங்கள் அவர்களது சீடர்களாக இருக்க முடியும்? மாயையும் பொய், சரீரமும் பொய், முழு உலகமும் பொய் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியமானவர். அவர் வரும்வரை, நாங்கள் சத்தியமானவர் ஆகமுடியாது. ஒரேயொருவர் மாத்திரமே முக்தியையும், ஐPவன்முக்தியையும் அருள்பவராவார். வேறு எவராலுமே முக்தியை அருளி அவருக்கு உரியவராக எங்களை ஆக்க முடியாது. பாபா கூறுகின்றார்: இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது உங்கள் கண்களைத் திறந்து கவனமாக இருங்கள். பாபா இதைக் கூறுகின்றார், என்று சொல்வதன் மூலம் நீங்கள் குற்றஞ்சாட்டப்பட மாட்டீர்கள். எவருமே எதிர்மறையான எதையும் கூறமாட்டார்கள். நீங்கள் வெறுமனே சிவன் எனக் கூறாது, திரிமூர்த்தி சிவபாபா எனக் கூறவேண்டும். திரிமூர்த்திகளை உருவாக்கியவர் யார்? யார் பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையை நடாத்துகின்றார்? பிரம்மா படைப்பவரா? நீங்கள் இவ்வாறு போதையுடன் பேசும் போது மாத்திரமே, உங்களால் எதையாவது அடையமுடியும். இல்லையெனில், அது சரீர உணர்வில் சொற்பொழிவு ஆற்றியது போன்றிருக்கும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது எண்ணற்ற சமயங்களின் கல்ப விருட்சமாகும். முதலில், தேவதர்மம் இருக்கின்றது. அந்தத் தேவதர்மம் எங்கு சென்று விட்டது? அவர்கள் நூறாயிரக் கணக்கான வருடங்கள் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால், இது 5000 வருடங்களுக்குரிய விடயமாகும். அவர்கள் தொடர்ந்தும் அவர்களுடைய ஆலயங்களைக் கட்டுகின்றார்கள். அவர்கள் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தம் பற்றிப் பேசியுள்ளார்கள். பாண்டவர்கள் மலையிலே உருகிப் போனபின்னர் என்ன நடந்தது? நான் எவ்வாறு வன்முறையில் ஈடுபட முடியும்? நான் உங்களை அகிம்சா லைஷ்ணவர்களாக ஆக்குகின்றேன். காமவாளை ஒருபோதும் பயன்படுத்தாதவர்களே, விஷ்ணுவின் குலத்துக்குச் சொந்தமான வைஷ்ணவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சேவையில் வெற்றியடைவதற்கு, அகங்காரத்தைத் துறந்து, ஒவ்வொரு விடயத்திலும் தொடர்ந்தும் பாபாவின் பெயரைக் குறிப்பிடுங்கள். நினைவில் நிலைத்திருந்து சேவை செய்யுங்கள். அரட்டையடிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

2. ஓர் உண்மையான வைஷ்ணவர் ஆகுங்கள். எந்த வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் புத்தியின் யோகத்தை, உங்கள் சரீரத்திலிருந்தும், சகல சரீர உறவினர்களிடமிருந்தும் துண்டித்து விடுங்கள்.

ஆசீர்வாதம்:
உலகத்தின் ஆதார சொரூபமாகி, உலக நன்மைக்கான பணியில் சதா மும்முரமாக இருப்பீர்களாக.

உலக உபகாரி குழந்தைகளால் தமது கனவிலுமே ஓய்வாக இருக்க முடியாது. இரவும் பகலும் சேவை செய்வதில் மும்முரமாக இருக்கின்ற குழந்தைகள், தமது கனவிலும் புதிய விடயங்களையே பார்ப்பார்கள். அவர்கள் சேவை செய்வதற்கான திட்டங்களையும் வழிமுறைகளையுமே பார்க்கின்றார்கள். அவர்கள் சேவை செய்வதில் மும்முரமாக இருப்பதால், தமது சொந்த முயற்சியின் வீணானவற்றிலிருந்தோ அல்லது ஏனைய எவரது வீணானவற்றிலிருந்தோ அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எல்லையற்ற உலக ஆத்மாக்கள் எப்பொழுதும் அவர்களின் முன்னிலையிலேயே உள்ளார்கள். அவர்களால் சற்றேனும் கவனயீனத்தைக் கொண்டிருக்க முடியாது. அத்தகைய சேவை செய்கின்ற குழந்தைகள் ஆதார சொரூபங்கள் என்ற ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.

சுலோகம்:
சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் பல வருடங்களுக்குச் சமமானது. ஆகையால் கவனயீனத்தினால் நேரத்தை வீணடிக்காதீர்கள்.