10.10.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    11.08.88     Om Shanti     Madhuban


வெற்றிக்கான காந்தம், சந்திப்பதும் வளைந்து கொடுப்பதும் ஆகும்.


எல்லோருடைய அன்பும் அன்புக்கடலில் கலந்துள்ளது. இந்த முறையில் சதா அன்பிலே மூழ்கியிருங்கள். தொடர்ந்து மற்றவர்களும் அன்பை அனுபவத்தைப் பெறச் செய்யுங்கள். குழந்தைகள் எல்லோரினதும் அபிப்பிராயங்கள் ஒத்ததாக இருக்கும் சந்திப்பைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இங்கு பறந்து வருபவர்கள், எப்போதும் இயல்பாகவே சதா பறக்கும் ஸ்திதிக்கான ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து பெறுவார்கள். இங்கு வந்திருக்கும் குழந்தைகள் எல்லோரினதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா அவர்களின் மீது அன்பு மலர்களைப் பொழிகிறார். உங்களின் எண்ணங்கள் ஒத்திசைவாக இருக்கும் சந்திப்பும், உங்களின் சம்ஸ்காரங்கள் தந்தையின் சம்ஸ்காரங்களை ஒத்ததாக இருக்கும் சந்திப்புமே, தந்தையைச் சந்தித்தல் எனப்படுகிறது. இதுவே தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். எண்ணங்களை ஒத்திசைத்தல், சம்ஸ்காரங்களை ஒத்திசைத்தல். இவ்வாறு ஒத்திசைத்தல் பணிவானவராகவும் ஒரு கருவியாகவும் ஆகுவதற்கேயாகும். நீங்கள் நெருங்கி வருகிறீர்கள். நீங்கள் நெருங்கி வருவீர்கள். சேவையில் வெற்றியின் அடையாளத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் சதா அன்பானவர்கள் ஆகுவதற்கும், உலகம் முழுவதும் அன்பு அலைகளைப் பரப்புவதற்குமே இந்த சிநே - மிலனுக்கு (அன்புச் சந்திப்பு) வந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், அனைத்திற்குமே, புண்ணியம் வீட்டில் ஆரம்பமாகின்றது. முதலாவது, அனைத்திலும் எமது அதியன்பிற்குரிய வீடான, சுயம் என்பதாகும். எனவே, முதலில் உங்களுடன் ஆரம்பியுங்கள். பின்னர் பிராமணக் குடும்பத்துடனும் பின்னர் உலகத்துடனும் செய்யுங்கள். ஒவ்வோர் எண்ணத்திலும் அன்பு - உண்மையான அன்பு, சுயநலமற்ற அன்பு, இதயபூர்வமான அன்பு இருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணத்திலும், இரக்கமும் கருணையும் இருக்க வேண்டும். உங்களின் இயல்பான சுபாவம் அருள்பவருக்குரியதாக ஆகவேண்டும். இதுவே உண்மையான சிநே - மிலன் (அன்புச் சந்திப்பு) ஆகும். இதில், எண்ணங்களின் ஒத்திசைவும், அபிப்பிராயங்களின் ஒத்திசைவும் சம்ஸ்காரங்களின் ஒத்திசைவும் இருக்கும். எல்லோருடைய ஒத்துழைப்பையும் ஈடுபடுத்தும் இந்தச் செயல்திட்டத்திற்கு முன்னர் (சிறந்த உலகிற்கான குளோபல் ஒத்துழைப்பு) எல்லா வேளையும் மேன்மையான பிராமண ஆத்மாக்களின் ஒத்துழைப்பு, இலகுவாகவும் இயல்பாகவும் உலகை ஒத்துழைக்கச் செய்யும். இதனாலேயே, வெற்றி நெருங்கி வருகிறது. சந்திப்பதும், திருப்புவதும், அதாவது, தன்னை வளைத்துக் கொள்வதுமே வெற்றிக்கான காந்தமாகும். இந்தக் காந்தத்தினூடாக, ஆத்மாக்கள் எல்லோரும் மிக இலகுவாகவும் மிக விரைவாகவும் இங்கு கவரப்படுவார்கள்.

இங்கு சந்திப்பிற்காக வந்திருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் பாப்தாதா அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள். எப்போதும் நெருக்கமாக இருப்பீர்கள். தந்தைக்கு நெருக்கமாக மட்டுமன்றி, உங்களுக்கிடையே நெருக்கமாக இருக்கும் காட்சியையும் பாப்தாதாவிற்குக் காட்டியுள்ளீர்கள். உலகிற்கு ஒரு காட்சி காட்டப்படுவதற்கு முன்னர், பாப்தாதாவிற்கு ஒரு காட்சி காட்டப்பட்டது. இங்கு வந்திருப்பவர்கள், குழந்தைகளான உங்களின் செயல்களைப் பார்க்கும்போது, என்ன செயல்களை அவர்கள் செய்ய வேண்டும் என்றும், என்ன நிகழவேண்டும் என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். உங்களின் செயல்களே செயல்திட்டமாகும். அச்சா.

நீங்கள் செய்த திட்டங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. இந்தத் திட்டப்பணி (புரெஜெக்ட்) ஆரம்பமாகியபோது, வெவ்வேறு துறைக்கான பிரிவுகளைத் தயார் செய்யும்படி பாப்தாதா விசேடமானதொரு சமிக்கை வழங்கினார். இப்போதும் அவர் அதையே கூறுகிறார்: எந்தவொரு தொழில்துறைக்கான பிரிவும் இந்த மகத்தான பணியின்போது விடுபடக்கூடாது என்ற இலக்கை நிச்சயமாக வைத்திருங்கள். இப்போதும் நேரத்தின் காரணத்தால், உங்களால் அதிகளவில் செய்ய முடியாமல் போனாலும், நீங்கள் நிச்சயமாக ஒரு மாதிரியைத் தயார் செய்ய வேண்டும் என்ற இலக்கை நிச்சயமாக வைத்திருந்து அதற்காக முயற்சி செய்யுங்கள். எதிர்காலத்தில், இந்தப் புரஜெக்ட்டை மேலும் விரிவாகச் செய்ய முடியும். எனவே, காலத்திற்குத் தகுந்தபடி அனைத்தையும் தொடர்ந்து செய்யுங்கள். எவ்வாறாயினும், அதன் நிறைவை அண்மையில் கொண்டுவருவதற்கு, எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம். உங்களால் இவ்வளவு பெரிய உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோரையும் ஒரே வேளையில் தொடர்பில் கொண்டு வரமுடியாதிருக்கும். இதனாலேயே, சகல தொழில்துறைகளையும் சேர்ந்தவர்களுக்கும் சேவை செய்வதன் அடிப்படையில் ஆத்மாக்கள் அனைவரையும் ஒத்துழைக்கச் செய்ய வேண்டும் எனப் போதையின் பிரகாசத்துடன் உங்களால் கூறமுடியும். எனவே, இந்த இலக்கானது எல்லோரையும் திருப்திப்படுத்தும். நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குத் தெரியாது என எந்தத் தொழிலைச் சேர்ந்தவர்களும் முறைப்பாடு செய்ய முடியாது. விதைகளை விதையுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதும், உங்களால் அதை எவ்வாறு செய்யக்கூடியதாக உள்ளது என்பதையும் பொறுத்து, வளர்ச்சி இடம்பெறட்டும். இதையிட்டுப் பாரமாக உணராதீர்கள்: நாங்கள் என்ன செய்வது? நாங்கள் எவ்வளவைச் செய்வது? எவ்வளவு நிகழ வேண்டுமோ, அது நிச்சயமாக நிகழும். நீங்கள் எவ்வளவைச் செய்துள்ளீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் வெற்றிக்கு நெருக்கமாக வந்துள்ளீர்கள். உங்களால் மாதிரிகளைத் தயார் செய்ய முடியுமல்லவா?

இந்திய அரசாங்கத்தை நெருக்கமாகக் கொண்டுவரும் மேன்மையான எண்ணம் உங்களுக்கு உள்ளது. ஆனால் காலம் அவர்களின் புத்திகளை எவ்வாறாயினும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது. இதனாலேயே, பிராமண ஆத்மாக்கள் எல்லோரும் இந்த விசேடமான புரெஜெக்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை, வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்ற விசேடமான, தூய எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தூய எண்ணத்துடனும், தந்தைக்குச் சமமாக இருக்கும் அதிர்வலைகளுடனும் வெற்றிக்கு உத்தரவாரம் உள்ளது என்ற திடசங்கற்பத்துடனும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். எவ்வாறாயினும், ஏதாவது பெரியதொரு பணியை ஆரம்பிக்கும்போது, அவர்கள் முதலில் என்ன செய்கிறார்கள்? பாரமானதொரு சுமையைச் சுமப்பது போன்ற பௌதீகமான விடயங்களுக்கு முதலில் என்ன செய்வார்கள்? அனைவரும் தமது விரலைக் (ஒத்துழைப்பை) கொடுப்பார்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைப் பேசி, அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள், இல்லையா? அதேபோல், இந்த விசேடமான பணிக்கு எவராலும் கருவியாக முடியும் என்றாலும், அனைவரின் அன்பும், அனைவரின் ஒத்துழைப்பும், அனைவரின் சக்தியின் ஊக்கம் உற்சாகத்திற்கான அதிர்வலைகளுமே கும்பகர்ணனை அவனின் தூக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்யும். இந்தக் கவனம் இந்த விசேடமான பணிக்கு அவசியமாகும். வெற்றி பெறுவதற்கு, குறிப்பாக உங்களின் ஒத்துழைப்பும், பிராமணர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவையாகும். இதில் சிறிதளவு வேறுபாடு ஏற்பட்டாலும், வெற்றி அடைவதில் அது ஒரு வேறுபாட்டை உருவாக்கும். இதனாலேயே, குழந்தைகள் எல்லோரினதும் தைரியமான ஒலியைக் கேட்கும்போது, அந்த வேளையில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் குறிப்பாக ஒன்றுகூடலில் அன்பு இருப்பதனால், அவர் அன்பின் பிரதியுபகாரத்தை வழங்குவதற்கும் வந்துள்ளார். நீங்கள் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள். முன்னரும் பல தடவைகள் நீங்கள் மிகச்சிறந்தவர்களாக இருந்தீர்கள். இப்போதும் அவ்வாறு ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, சதா தொலைவில் இருந்து பறப்பதற்கு என்றும் தயாராக இருக்கும் விசேடமான இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைத் தனது கழுத்து மாலைகளாக ஆக்குகிறார். அத்துடன் தனது இதயத்திலும் அவர்களை ஒன்றுகலக்கச் செய்துள்ளார். அச்சா.

குமாரிகள் கண்ணையாவிற்குச் சொந்தமானவர்கள். (கண்ணையா - கிருஷ்ணர் - எனது இதயத்தைத் திருடியவர்). ஒரேயொரு வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். எல்லாவற்றுடனும் ஒன்று என்ற வார்த்தையைச் சேருங்கள். ஒரு வழிகாட்டல் (ஏக் மத்), ஸ்திரத்தன்மையும் நிலையான தன்மையும் (ஏக் - ரஸ்), ஒரேயொரு தந்தை (ஏக் பாப்). பாப்தாதா இதயபூர்வமான வாழ்த்துக்களை பாரதத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் வழங்குகிறார். நீங்கள் உங்களின் இலக்கிற்கேற்ற தகைமைகளை நடைமுறையில் ஏற்படுத்த வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? பாபா யாரிடம் எதையாவது சொல்வார்? யாரிடம் அவர் எதையாவது சொல்லாமல் விடுவார்? இதனால்தான் அவர் அனைவருக்கும் இதைக் கூறுகிறார். (தாதிஜியிடம்): கருவிகள் ஆகுபவர்களிடம் அக்கறை இருக்கவே செய்கிறது. இது இரக்கத்தின் ஓர் அடையாளம். அச்சா.

கூட்டத்திற்காக வந்திருந்த சகோதர, சகோதரிகள் அனைவரையும் பாப்தாதா மேடைக்கு அழைத்தார்.

நீங்கள் எல்லோரும் உங்களின் புத்திகளை இதில் மிக நன்றாக ஈடுபடுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் சேவையில் உள்ள அன்பைப் பற்றி பாப்தாதா அறிவார். சேவையில் முன்னேறும்போது, எங்கும் எவ்வளவு வெற்றி ஏற்படும் என நினைத்துப் பாருங்கள். எல்லோருக்கும் சேவையில் மிக நல்ல அன்புள்ளது. நீங்கள் பகலையும் இரவையும் ஒன்றாக்கி, சேவைக்காக ஓடுகிறீர்கள். இந்தக் கடின உழைப்பையும் அன்பின் ரூபமாகவே பாப்தாதா பார்க்கிறார். அது கடின உழைப்பில்லை. ஆனால் நீங்கள் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள். அச்சா. ஊக்கமும் உற்சாகமும் உள்ள நல்ல சகபாடிகள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இது ஓர் எல்லையற்ற பணி. உங்களுக்கு எல்லையற்ற இதயம் உள்ளது. இதனாலேயே, எங்கு எல்லையற்ற உணர்வு இருக்கிறதோ, அங்கு நிச்சயமாக வெற்றி ஏற்படும். குழந்தைகள் எல்லோரிலும் உள்ள சேவைக்கான அன்பைப் பார்க்கும்போது, பாப்தாதா ஒவ்வொரு நாளும் சந்தோஷப் பாடல்களைப் பாடுகிறார். அவர் ஆஹா குழந்தைகளே! ஆஹா! என்ற இந்தப் பாடலைப் பல தடவைகள் பாடியுள்ளார். அச்சா. வருவதில் அதிகளவு அர்த்தம் இருந்தது. நீங்கள் சகல இரகசியங்களையும் புரிந்து கொண்டவர்கள்தானே? தந்தையும் அறிவார். இரகசியங்களும் அறியும். (தாதிஜி பாப்தாதாவிற்கு போக் படைக்க விரும்பினார்). இன்று, பாபா திருஷ்டியின் மூலம் மட்டுமே ஏற்றுக் கொள்வார். அச்சா.

எல்லோருடைய புத்திகளும் மிக நன்றாகச் செயல்படுகின்றன. நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வருகிறீர்கள். இதனாலேயே, வெற்றி மிகவும் நெருங்கி வந்துள்ளது. நெருக்கமாக இருத்தல், வெற்றியை நெருக்கமாகக் கொண்டுவரும். உங்களுக்கு அதிகளவு வேலை கொடுக்கப்பட்டது என நினைத்து நீங்கள் களைப்படையவில்லைதானே? எவ்வாறாயினும், தந்தை அரைவாசி வேலையைச் செய்து விடுகிறார். எல்லோரிடமும் நல்ல உற்சாகம் காணப்படுகிறது. உங்களிடம் திடசங்கற்பமும் உள்ளது. நெருங்கி வருதல் எவ்வளவு அண்மையில் உள்ளது? நீங்கள் காந்தத்தை (பாபா) இங்கு வைத்தால், அந்த நெருக்கம் எல்லோருடைய கழுத்திலும் ஒரு மாலையை உருவாக்கும். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? அச்சா. நீங்கள் எல்லோரும் இதில் மிகச்சிறந்தவர்கள்.

தாதிகளிடம்: (31ஃ03ஃ88) : தந்தை குழந்தைகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். குழந்தைகள் தந்தைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நன்றி கூறுவதனால் முன்னேறியுள்ளீர்கள். இதுவே முன்னேறுவதற்கான வழிமுறையாகும். உங்கள் எல்லோருடைய ஒன்றுகூடலும் இந்த வழிமுறையால் நல்லதாகும். நீங்கள் ஹா ஜி (ஆமாம்) எனக் கூறி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, முன்னேறுகிறீர்கள். எல்லோரும் இந்த முறையைப் பின்பற்றினால், அவர்கள் தேவதைகள் ஆகுவார்கள். சிறிய மாலையைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். இதுவரை கையில் உள்ள காப்பே உருவாக்கப்பட்டுள்ளது. கழுத்தில் உள்ள அட்டியலே உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எல்லோரும் கழுத்தில் அட்டியலைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளீர்கள். இப்போது, கவனம் தேவைப்படுகிறது. அதிகளவு சேவை செய்வதில் நீங்கள் ஈடுபடும்போது, சிலவேளைகளில் சுயத்தில் கவனம் குறைந்து விடுகிறது. சிலவேளைகளில், சாரம் விவரங்களில் அமிழ்ந்து போய்விடுகிறது. சாரம் அதன் புலப்படும் ரூபத்தில் இருப்பதில்லை. இது இப்போது நிகழ வேண்டும் என நீங்களே கூறுகிறீர்கள். என்ன நிகழ வேண்டுமோ அது நிகழுகிறது என ஒரு கட்டத்தில் நீங்கள் கூறும் அந்த நாளும் வரும். தீபங்களின் மாலை இங்கேயே முதலில் உருவாக்கப்படும். எல்லோரிலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பதற்கு உதாரணங்களாக பாப்தாதா உங்கள் எல்லோரையும் கருதுகிறார். உங்கள் எல்லோருடைய ஒற்றுமையே யக்யத்திற்கான கோட்டை ஆகும். நீங்கள் 10 அல்லது 12 பேராக இருந்தாலும், நீங்களே இந்தக் கோட்டையின் சுவர்கள் ஆவீர்கள். எனவே, பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். பாப்தாதா எவ்வாறாயினும் இருக்கிறார். எனினும், நீங்களே கருவிகள் ஆவீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது குழுவினர் இத்தகையதோர் ஒன்றுகூடலை உருவாக்கினால், அற்புதங்கள் நிகழும். இப்போது, இத்தகையதொரு குழுவை உருவாக்குங்கள். முதல் குழுவைப் பொறுத்தவரை, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள் என எல்லோரும் கூறுகிறார்கள். அவர்களின் சுபாவங்கள் வெவ்வேறானவை. ஆமாம், அவை வெவ்வேறாகவே இருக்கும். என்றாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் வைத்திருப்பதுடன் எப்போதும் ஹா ஜி எனக் கூறுகிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில் தங்களை வளைத்துக் கொள்கிறார்கள். இதனாலேயே, கோட்டையின் சுவர்கள் பலமானதாக உள்ளன. இதனாலேயே நீங்கள் எல்லோரும் முன்னேறுகிறீர்கள். அத்திவாரத்தைப் பார்க்கும்போது, சந்தோஷம் ஏற்படுகிறதல்லவா? பருவகாலத்தின் முதல் பழம் புலப்படுவதைப் போல், குழுவும் சக்திநிறைந்ததாக ஆகினால், சேவை உங்களைப் பின்பற்றும். வெற்றி மாலை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எல்லோரும் நிச்சயமாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக வருவீர்கள். அப்போதுதான் மாலை உருவாகும். ஒரு மணி ஓரிடத்திலும், இன்னொரு மணி அதற்குத் தொலைவிலும் இருந்தால், ஒரு மாலையை உருவாக்க முடியாது. மணிகள் தொடர்ந்து ஒன்றுசேரும். அவர்கள் தொடர்ந்து நெருக்கமாக வருவார்கள். அப்போது மட்டுமே மாலை உருவாக்கப்படும். எனவே, நீங்கள் நல்ல உதாரணங்கள் ஆவீர்கள். அச்சா.

இப்போது, சந்திப்பிற்கான கோட்டாவைக் (ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை) கருத்தில் கொள்ள வேண்டும். பாபா இந்த இரதத்தை மேலதிகமான சகாஷினால் இயங்கச் செய்கிறார் என முன்னரே உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இது சாதாரணமானதொரு விடயமல்ல. பாபா எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், சகல சக்திகளின் வலிமையும் சேகரிக்கப்படுகின்றது. இதனாலேயே, இந்த இரதமும் அதிகளவில் ஒத்துழைக்கிறார். சக்தியானது சேமிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தளவு சேவை செய்வது கடினமாகவே இருந்திருக்கும். இதுவும் நாடகத்தில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவின் பாகமாகும். நீங்கள் மேன்மையான செயல்களின் எத்தகைய பொக்கிஷக் களஞ்சியத்தைச் சேமித்திருந்தாலும், அது தேவையான நேரத்தில் பயனுள்ளதாகின்றது. பல ஆத்மாக்களின் ஆசீர்வாதங்களும் பெறப்படுகின்றன. இவையும் சேமிக்கப்படுகின்றன. ஏதாவதொரு வகையான பொக்கிஷக் களஞ்சியம் இருப்பதனால், இந்த ஆத்மாவிற்கு ஒரு விசேடமான பாகம் உள்ளது. தடைகள் இல்லாமல் இந்த இரதம் தொடர்வதும் நாடகத்தின் ஒரு பாகமேயாகும். ஆறு மாதங்கள் என்பது சிறிய விடயமல்ல. அச்சா. எல்லோரும் சந்தோஷப்படுத்தப்படுவார்கள்.

அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்

கேள்வி: எந்த ஒரு வார்த்தையின் அர்த்தத்தில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களின் பலவீனங்கள் அனைத்தும் முடிவிற்கு வரும்?

பதில்: உங்களை முயற்சியாளர் (புருஷார்த்தி) என்ற வார்த்தையின் அர்த்தத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். புருஷாரத் - புருஷ்- உயிர், இரத் - சாரதி. புருஷ் என்றால் இந்த இரதத்தின் சாரதி என்று அர்த்தம். இந்தச் சடப்பொருளின் அதிபதி. இந்த ஒரு வார்த்தையின் அர்த்தத்தில் ஸ்திரமாகுவதன் மூலம், உங்களின் பலவீனங்கள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும். உயிருக்கு (புருஷ்) சடப்பொருளின் மீது உரிமை உள்ளது. அவர் அதில் தங்கியிருப்பதில்லை. சாரதி இந்த இரதத்தை ஓட்டுகிறார். அவர் இந்த இரதத்தில் தங்கியிருப்பதில்லை.

கேள்வி: ஆரம்பத்தில் இருந்து இராச்சியத்திற்கான உரிமையைக் கோருவதற்கு நீங்கள் என்ன சம்ஸ்காரங்களைக் கிரகிக்க வேண்டும்?

பதில்: இப்பொழுதில் இருந்தே, உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். நீண்ட காலத்திற்குப் போராடும் சம்ஸ்காரங்கள் உங்களுக்குள் இருந்தால், அதாவது, உங்களின் நேரத்தைப் போராடுவதில் நீங்கள் கழித்தால், ஒரு நாள் வெற்றியும் அடுத்த நாள் தோல்வியும் ஏற்பட்டால், ஒரு கணம் வெற்றியும் அடுத்த கணம் தோல்வியும் ஏற்பட்டால், சதா வெற்றியாளராக இருக்கும் சம்ஸ்காரங்களை நீங்கள் உருவாக்காவிட்டால், உங்களை பிராமணர் என்றில்லாமல் ஒரு போராளி என்றே அழைக்க முடியும். பிராமணர்களே தேவர்கள் ஆகுவார்கள். போராளிகள் ஷத்திரிய குலத்திற்கே செல்வார்கள்.

கேள்வி: உலகை மாற்றுபவராக ஆகுவதற்கு முன்னர், உங்களுக்குத் தேவையான மாற்றத்திற்கான சக்தி என்ன?

பதில்: உலகை மாற்றுபவராக ஆகுவதற்கு முன்னர், உங்களின் சம்ஸ்காரங்களை மாற்றுகின்ற சக்தி உங்களுக்குத் தேவை. முதலில், உங்களின் பார்வையிலும் மனோபாவத்திலும் மாற்றம் தேவை. பார்வையாளர்களான நீங்கள் இந்தப் பார்வையுடன் பார்க்கிறீர்கள். பௌதீகக் கண்களால் அன்றி, உங்களின் தெய்வீகக் கண்ணால் எல்லாவற்றையும் பாருங்கள். நீங்கள் தெய்வீகக் கண்ணால் பார்க்கும்போது, இயல்பாகவே நீங்கள் தெய்வீக ரூபத்தை மட்டுமே பார்ப்பீர்கள். பௌதீகக் கண்கள் தோலை மட்டும் பார்த்து, தோலைப் பற்றி (சரீரதாரிகள்) மட்டுமே சிந்திக்கும். இது தேவதைகளின் அல்லது பிராமணர்களின் பணியல்ல.

கேள்வி: சகோதரர், சகோதரி என்ற உறவுமுறையைக் கொண்டிருக்கும்போது, உங்களின் பார்வையும் மனோபாவமும் ஒருபோதும் விஷமத்தனம் செய்யாதவகையில் எந்தத் தெய்வீகக் கண்ணால் நீங்கள் பார்க்க வேண்டும்?

பதில்: ஒவ்வொரு பெண்ணையும் அந்தச் சரீரத்தில் உள்ள ஆத்மாவாக, ஒரு சக்தி ரூபமாக, ஓர் உலக அன்னையாக, ஒரு தேவியாகப் பாருங்கள். இதுவே தெய்வீகக் கண்ணால் பார்த்தல் எனப்படுகிறது. ஒரு சக்தியின் முன்னால் தீய மனோபாவத்துடன் யாராவது வந்தாலும், அவர்கள் எரிந்து விடுவார்கள். ஆகவே, எவரையும் உங்களின் சகோதரியாக அல்லது ஆசிரியையாகப் பார்க்காதீர்கள். ஆனால் ஒரு சிவசக்தியாகப் பாருங்கள். தாய்மார்களும் சகோதரிகளும் தமது சிவசக்தி ரூபத்தில் ஸ்திரமாக இருக்க வேண்டும். இவர் எனது விசேடமான சகோதரர், எனது விசேடமான மாணவர் என்பதல்ல. அவர்கள் மகாவீர்கள். நீங்கள் சிவசக்திகள்.

கேள்வி: ஒரு மகாவீரரின் சிறப்பியல்பு என எது காட்டப்படுகிறது?

பதில்: அவரின் இதயத்தில் இராமரை மட்டுமே அவர் வைத்திருந்தார். மகாவீர் இராமருக்குச் சொந்தமானவர். அவரிடம் சிவனின் சக்தி உள்ளது. நீங்கள் யாராவதொரு சரீரதாரியைப் பார்க்கும்போதும், நெற்றியில் உள்ள ஆத்மாவைப் பாருங்கள். ஆத்மாவுடன் பேசுங்கள். சரீரத்துடன் அல்ல. உங்களின் பார்வை நெற்றியில் உள்ள இரத்தினத்தின் மீது விழ வேண்டும்.

கேள்வி: எந்த ஒரு வார்த்தையை நீங்கள் கவனக்குறைவாகப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்? அந்த எச்சரிக்கை என்ன?

பதில்: கவனக்குறைவாக முயற்சியாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள். ஆனால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் திடசங்கற்பத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், மேன்மையான செயல்களை மட்டுமே செய்யுங்கள். மேன்மையானவர் ஆகுங்கள். ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் விகாரங்களின் சந்ததியின் சகல சுவடுகளையும் முடிக்கின்ற முழுமையாகச் சரணடைந்தவரும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளரும் ஆகுவீர்களாக.

தேவைப்படும் நேரத்திற்காகப் பழைய சம்ஸ்காரங்கள் என்ற சொத்தை நீங்கள் ஒருபுறம் ஒதுக்கி வைத்தால், ஏதாவதொரு முறையில் மாயை உங்களைப் பற்றிப் பிடித்து விடுகிறாள். பழைய பதிவேடு என்ற சிறியதொரு துண்டினாலும் உங்களைப் பிடிக்க முடியும். மாயை மிகவும் கூர்மையானவள். அவளின் பிடித்துக் கொள்ளும் சக்தி எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. எனவே, இப்போது விகாரங்களின் சந்ததிகளின் எந்தவிதமான சுவடுகளையும் முடித்துவிடுங்கள். எந்த மூலையிலும் உங்களின் பழைய சம்ஸ்காரங்களின் எந்தவிதமான அடையாளமும் இருக்கக்கூடாது. இதுவே முழுமையாக அர்ப்பணித்த ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் யக்யத்துடன் அன்பாகவும் ஒத்துழைப்பவராகவும் ஆகுதல் எனப்படுகிறது.

சுலோகம்:
ஒருவரின் சிறப்பியல்பிற்காக அவரிடம் விசேடமான அன்பைக் கொண்டிருத்தலும் பற்றேயாகும்.