11.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எப்பொழுதும் சந்தோஷமாக இருந்து ஏனையோருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். இதுவே அனைவர் மீதும் கருணை கொண்டிருப்பதாகும். எவருக்கேனும் பாதையைக் காண்பிப்பதே மகத்தான புண்ணியம் ஆகும்.

கேள்வி:
எவரால் சதா சந்தோஷமாக இருக்க முடியும்? சந்தோஷமாக இருப்பதற்குரிய வழிமுறை என்ன?

பதில்:
ஞானத்தில் மிகத் திறமையானவர்களும், நாடகத்தை எவ்வாறு ஒரு கதை வடிவில் நினைவு செய்வது என்பதை அறிந்தவர்களுமே சதா சந்தோஷமாக இருக்க முடியும். சதா சந்தோஷமாக இருப்பதற்கு, தொடர்ந்தும் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அனைத்தையும் மிக நன்றாகக் கடையுங்கள். ஞானக்கடலைக் கடைவதால், நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுடன் ஓர் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருக்கின்றார். ஒருவர் மாத்திரமே எங்களுடைய தந்தை என்பதும் அவரே எங்களுக்குக் கற்பித்தல்களையும் தருகின்றார் என்பதும் ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். ஓர் ஆசிரியரின் கடமை கற்பித்தல்களைக் கொடுப்பதும் ஒரு குருவின் கடமை உங்களுக்கு உங்களுடைய இலக்கைக் காண்பிப்பதும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய இலக்கைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். முக்திக்கும் ஜீவன்முக்திக்கும் நினைவு யாத்திரை முற்றிலும் அவசியமாகும். இரண்டும் இலகுவானதாகும். 84 பிறவிகளின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. எங்களுடைய 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது என்பதையும் நாங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும் என்பதையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், பாவாத்மாக்கள் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ அடைய முடியாது. நீங்கள் இவ்வழியில் ஞானக்கடலைக் கடையவேண்டும். இதைச் செய்பவர்கள் வெகுமதியைப் பெறுவார்கள். அவர்களே சந்தோஷமாக இருந்து ஏனையோரையும்; சந்தோஷமடையச் செய்பவர்கள் ஆவர். நீங்கள் ஏனையோருக்குப் பாதையைக் காண்பிப்பதற்குக் கருணை கொண்டிருக்க வேண்டும். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சிலர் இதை நினைவுசெய்கிறார்கள், ஏனையவர்கள் நினைவுசெய்வதில்லை; அவர்கள் அதை மறந்துவிடுகின்றார்கள். நீங்கள் இந்தளவிற்கேனும்; நினைவுசெய்தால், உங்களுடைய சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்கும். நீங்கள் தந்தையை ஆசிரியரின் வடிவிலும் குருவின் வடிவிலும் நினைவுசெய்தால்கூட, உங்களுடைய சந்தோஷப் பாதரசம் உயர்ந்திருக்கும். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்கையில், சில குழப்பங்கள் உள்ளன. நீங்கள் மலைமீது உயர ஏறிக்; கீழே இறங்குவதைப்; போன்றே, குழந்தைகளின் ஸ்திதியும் உள்ளது. சிலர் மிகவும் உயரத்தில் ஏறிப் பின்னர் வீழ்ந்துவிடுகின்றார்கள். எனவே அவர்கள் முன்பிருந்ததை விடவும் மேலும் அதிகமாகக் கீழே வீழ்கின்றார்கள். அவர்கள் சம்பாதித்துள்ள அனைத்தும் பின்னர் இழக்கப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு தானம் செய்திருந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவு புண்ணியத்தைச் செய்திருந்தாலும்கூட, புண்ணியத்தைச் செய்கையில் அவர்கள் பாவம் செய்ய ஆரம்பித்தால், புண்ணியம் அனைத்தும் இழக்கப்பட்டுவிடும். தந்தையை நினைவு செய்வதே மகத்தான புண்ணியமாகும். நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகுவீர்கள். நீங்கள் கொண்டிருக்கின்ற சகவாசத்தால் நிறமூட்டப்பட்டுத் தொடர்ந்தும் தவறுகள் செய்தால், நீங்கள் முன்பிருந்ததை விடவும் மேலும் அதிகமாக வீழ்வீர்கள். பின்னர் அக்கணக்கில் எதுவுமே சேகரிக்கப்பட மாட்டாது. அங்கே ஓர் இழப்பு ஏற்படுகின்றது. நீங்கள் சில பாவங்களைச் செய்யும்பொழுது, ஒர் இழப்பு ஏற்படுகின்றது. பெருமளவு பாவம் உங்கள் கணக்கில் சேகரிக்கப்படுகின்றது. கணக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும். தந்தையும் கூறுகிறார்: நீங்கள் ஒரு புண்ணியக் கணக்கைக் கொண்டிருந்தீர்கள், பின்னர், பாவம் செய்வதால், அது நூறு மடங்கு பாவக்கணக்காக ஆகியது உங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுகின்றது. சில பாவங்கள் மிகவும் பெரியவையும் ஏனையவை இலேசானவையும் ஆகும். காமம் மிகவும் கடுமையானதாகும். கோபம் இரண்டாம் இலக்கமும், பேராசை அதைவிடக் குறைந்ததுமாகும். நீங்கள் சேகரித்தவையெல்லாம், காமத்தால் மிகவும் குறைக்கப்படுகின்றன. இலாபத்திற்குப் பதிலாக, நட்டமே ஏற்படுகின்றது. சற்குருவை அவதூறு செய்பவர்களால் ஓர் அந்தஸ்தைப் பெறமுடியாது. சிலர் தந்தைக்குரியவர்களாகிப் பின்னர் அவரை விட்டு நீங்குகிறார்கள். அதற்கு என்ன காரணம்? வழமையாக, அவர்கள் காமத்தால் காயமடைகின்றார்கள். அது மிகக் கடுமையான எதிரி ஆகும். அவர்கள் அதன் கொடும்பாவியைச் செய்து அதை எரிக்கின்றார்கள். அவர்கள் கோபத்தின் அல்லது பேராசையின் கொடும்பாவிகளை உருவாக்குவதில்லை. நீங்கள் காமத்தின் மீது முழுமையாக வெற்றி அடையவேண்டும், அப்பொழுது மாத்திரமே நீங்கள் உலகை வெல்பவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: வந்து, இராவண இராச்சியத்தில் தூய்மையற்றவர்களாகியுள்ள எங்களைத் தூய்மையானவர்கள் ஆக்குங்கள். அவர்கள் அனைவரும் பாடுகின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஓ சீதைக்குச் சொந்தமான இராமராகிய, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற, தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எவ்வாறாயினும், அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை நிச்சயமாகப் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வருவார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால், அவர்கள் அதன் கால எல்லையை நீண்டதாக்கியுள்ளதால், இப்பொழுது காரிருள் நிலவுகின்றது. ஞானமும் அறியாமையும் உள்ளன. பக்தி அறியாமையாகும், ஏனெனில் அவர்கள் வழிபடுபவரையே அவர்களுக்குத் தெரியாது. எனவே, அவர்கள் எவ்வாறு அவரை அடையமுடியும்? இதனாலேயே அவர்களுடைய தானங்களும் புண்ணியம் போன்றவையும் பயனற்றவை ஆகும். அவர்கள் காக்கை எச்சம் போன்று, ஒரு சிறிய தற்காலிகச் சந்தோஷத்தைப் பெறக்கூடும், இல்லாதுவிடின், அங்கு துன்பத்தைத் தவிர எதுவுமே இருக்காது. இப்பொழுது தந்தை கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் துன்பம் யாவும் அகற்றப்படும். நீங்கள் அவரை எவ்வளவுக்கு நினைவுசெய்கின்றீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும், அதனால் பழையவை முடிவடைந்து புதியன சேகரிக்கப்படுகின்றன. சிலர் எதனையும் சேகரித்துக்கொள்வதில்லை. அனைத்தும் நினைவுசெய்வதிலேயே தங்கியுள்ளது. எவ்வாறு நினைவு செய்யாமல் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் அல்லது அகற்றப்படும்? பிறவி பிறவியாகப் பல பாவங்கள் உள்ளன. உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் உங்களுடைய இப்பிறவியின் வாழ்க்கைக் கதையை பாபாவுக்குக் கூறுவதால் அழிக்கப்பட மாட்டாது. இப்பிறவியின் பாவங்கள் சிறிதளவு இலேசாகின்றன, ஆனால் நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்யவேண்டும். பல பிறவிகளின் கர்மக்கணக்குகள் அனைத்தும் யோகத்தால் மாத்திரமே தீர்க்கப்படும். எவ்வளவு யோகத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். என்னால் சத்தியயுக ஆரம்பத்தில் பிறவி எடுக்க இயலுமா? பெருமளவு முயற்சி செய்பவர்களே சத்தியயுக ஆரம்பத்தில் பிறவி எடுப்பார்கள். அவர்களால் மறைந்திருக்க முடியாது. அனைவருமே சத்தியயுகத்திற்குச் செல்வார்கள் என்றல்ல. ஏனையவர்கள் இறுதியில் ஒரு குறைந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அவர்கள் ஆரம்பத்தில் வந்தால், சேவகர்களாக இருப்பார்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய பொதுவான ஒன்றாகும். இதனாலேயே நீங்கள் தந்தையை அதிகளவில் நினைவுசெய்ய வேண்டும். புதிய உலகில் உலக அதிபதிகள் ஆகுவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். பாபாவை நினைவுசெய்பவர்கள் நிச்சயமாகச் சந்தோஷமாக இருப்பார்கள். நீங்கள் ஓர் அரசராக ஆகவிரும்பினால், உங்களுடைய பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். நீங்கள் ஓர் அரசராக ஆகப்போகின்றீர்கள் என்பது வேறு எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றது? நிலையங்களைத் திறப்பவர்களும் சேவை செய்பவர்களும்கூட ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் பெருமளவு நன்மையைப் பெறுகிறார்கள். அவர்கள் ஒரு வெகுமதியைக் கூடப் பெறுகிறார்கள். சிலர் மூன்று அல்லது நான்கு நிலையங்களைக்கூட திறக்கின்றார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் நிச்சயமாக அதன் பங்கைப் பெறுகின்றார்கள். மாயையின் துன்பத்தின் சுமை இப்பொழுது உங்கள் அனைவராலும் ஒன்றுசேர்ந்து அகற்றப்படுகின்றது, அனைவரும் தோள் கொடுக்கின்றார்கள். எனவே, அனைவரும் ஒரு வெகுமதியைப் பெறுகின்றார்கள். முயற்சிசெய்பவர்களும் பலருக்குப் பாதையைக் காண்பிப்பவர்களும் அதற்கேற்ப ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். அவர்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். எத்தனை பேருக்கு நீங்கள் பாதையைக் காண்பித்துள்ளீர்கள் என்பதையும் எத்தனை பேரை நீங்கள் ஈடேற்றியுள்ளீர்கள் என்பதையும் உங்கள் இதயம் அறியும். இதுவே அனைத்தையும் செய்வதற்கான நேரம் ஆகும். நீங்கள் அனைவரும் உணவையும் பானத்தையும் பெறுகின்றீர்கள். சிலர் முற்றிலும் எந்த வேலையையும் செய்வதில்லை. மம்மா எவ்வளவு சேவையைச் செய்தார் என்று பாருங்கள்! அவர் சேவையால் பலருக்கு நன்மையளித்தார். இங்கும் பெருமளவு சேவை தேவைப்படுகின்றது. யோகத்திலும் சேவை உள்ளது. நீங்கள் அத்தகைய ஆழமான வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது, நீங்கள் முன்னேறிச் செல்வதால், பல வித்தியாசமான கருத்துக்கள் வெளிப்படும். நாளுக்கு நாள், தொடர்ந்தும் முன்னேற்றம் இருக்கும். புதிய கருத்துக்கள் வெளிப்படும். சேவையில் ஈடுபட்டிருப்பவர்களால், விரைவாக அவற்றைப் புரிந்துகொள்ள இயலும். சேவை செய்யாதவர்களின் புத்திகளில் எதுவுமே இருப்பதில்லை. அவர்களால் எவ்வாறு ஒரு புள்ளியின் வடிவத்தைப் புரிந்துகொள்ள முடியும்? நீங்கள் எவரையும் வினவ முடியும்: ஆத்மா எவ்வளவு பெரியது? ஆத்மாக்களின் இடம், காலப்பகுதி என்ன என்பதை எங்களுக்குக் கூறுங்கள்! எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. மக்கள் பரமாத்மாவின் பெயர், ரூபம், இடம், காலம் என்பவற்றைப் பற்றி வினவுகின்றார்கள். நீங்கள் அவர்களிடம் ஆத்மாவைப் பற்றிய இவ்விடயங்களை வினவினால், அவர்கள் குழப்பம் அடைகின்றார்கள். எவருக்கும் இது தெரியாது. ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி, அதில் பெரும் பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கும்கூட, ஆத்மாக்களையோ அல்லது பரமாத்மாவையோ பற்றி அறியாத பலர் உள்ளனர். அவர்கள் விகாரங்களைத் துறந்திருக்கின்றார்கள், அதுகூட, ஓர் அற்புதமே! சந்நியாசிகளின் தர்மம் வேறுபட்டதாகும். இந்த ஞானம் உங்களுக்கானதாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகிறீர்கள். உலகிலுள்ள எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. ஞானம் பக்தியிலிருந்து வேறுபட்டதாகும். ஞானம் உங்களை மேலேறச் செய்கின்றது, பக்தியோ உங்களைக் கீழிறங்கச் செய்கின்றது. எனவே பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. மக்கள் எவ்வளவுதான் வேதங்களினதும் சமயநூல்களினதும் அதிகாரிகளாகத் தங்களைக் கருதினாலும், அவர்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. இப்பொழுது உங்களுக்கும் அவை தெரியும். உங்கள் மத்தியில்கூட, அது வரிசைக்கிரமமானதாகும். நீங்கள் மறந்துவிடுவதன் காரணமாகவே உங்களுடைய சந்தோஷம் மறைகின்றது. இல்லாதுவிடின், நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பாபாவிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாபா உங்களுக்குக் காட்சிகளை அருள்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் காட்சிகளைப் பெற்று, ஆனால் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதுவிடின், அதில் என்ன நன்மை இருக்கின்றது? மக்கள் துன்பத்தில் இருக்கும்பொழுதே, தந்தையை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் தந்தையைக் கூவி அழைக்கின்றார்கள்: விடுதலையளிப்பவரே! ஓ இராமா! ஓ பிரபு! ஆனால் அவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. பக்தி மார்க்கத்திலுள்ள எவரும் கூறுவதில்லை: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். அவ்வாறு கூறுவதேயில்லை! அவர்கள் அவ்வாறு கூறியிருந்தார்களாயின், அது தொன்றுதொட்டுத் தொடர்ந்திருக்க வேண்டும். பக்தி தொடர்ந்திருக்கின்றது. பெருமளவு பக்தி இருந்தாலும், ஞானம் ஒருவரைப் பற்றியதாகும். பக்தி செய்வதால் தாங்கள் கடவுளைக் கண்டடைவார்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள், ஆனால் எவ்வாறு அல்லது எப்பொழுது என்பது அவர்களுக்குத் தெரியாது. எப்பொழுது பக்தி ஆரம்பமாகிறது, அல்லது யார் அதிகூடியளவு பக்தி செய்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் தொடர்ந்தும் இன்னும் 40,000 வருடங்களுக்கு பக்தி செய்வார்களா? ஒரு புறத்தில், மக்கள் பக்தி செய்துகொண்டிருக்கின்றார்கள், மறுபுறத்தில் நீங்கள் ஞானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் மனிதர்களுடன் அதிக பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. நீங்கள் பல கண்காட்சிகளை நடாத்தினீர்கள், ஆனால், அப்படியிருந்தும், பலமில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே வெளித்தோன்றுகிறார்கள். எவ்வளவு பேரை நீங்கள் உங்களைப் போன்று ஆக்கி இங்கு கொண்டுவருகின்றீர்கள்? உண்மையான பிராமணர்கள் எவ்வளவுபேர் உள்ளார்கள் என்பதை உங்களால் இந்நேரத்தில் கணக்கிட முடியாது. பல போலிக் குழந்தைகளும் உள்ளார்கள். பிராமணக் குருமார்கள் சமயக்கதைகளைக் கூறுகின்றார்கள், பாபாவோ உங்களுக்குக் கீதையின் கதையைக் கூறுகிறார். நீங்களும் அதைக் கூறுகின்றீர்கள். பாபா அதைப் பேசுவது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் பேசுகின்றீர்கள். உண்மையான கீதையைக் கூறுவது குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும். அனைவருக்கும் சமயநூல்கள் உள்ளன. உண்மையில், சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவையாகும். ஒரு கீதை மாத்திரமே ஞானத்தின் சமயநூல்; ஆகும். கீதையே தாயும் தந்தையும் ஆகும். தந்தையே வந்து அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்கிறார். அத்தகைய தந்தையை மக்கள் பின்னர் இகழ்கிறார்கள். சிவபாபாவின் பிறந்த நாள் வைரம் போன்று பெறுமதி மிக்கதாகும். அதிமேலான கடவுளே, ஜீவன்முக்தியை அருள்பவர் ஆவார். எவ்வாறு வேறு எவருடைய புகழ் இருக்க முடியும்? மக்கள் தேவர்களைப் புகழ்கின்றார்கள், ஆனால் ஒரேயொரு தந்தை மாத்திரமே அவர்களை தேவர்களாக ஆக்குகின்றார். எங்களுடைய நிர்மாணமும் விநாசமும் நடைபெறுகின்றன. எதையும் விளங்கப்படுத்த இயலாத பலர் உள்ளார்கள், எனவே அவர்கள் பௌதீக வேலையைச் செய்கின்றார்கள். இராணுவத்தில், அனைத்து வேலைகளையும்; செய்கின்றவர்கள் உள்ளார்கள். கூறப்பட்டுள்ளது: கற்றவர்கள் முன்னிலையில் கற்காதவர்கள் தலைவணங்க நேரிடும். மம்மாவும் பாபாவும் செய்வதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். யார் விசேடமான அன்பிற்கினிய குழந்தைகள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் பாபாவை வினவினால், பாபா உங்களுக்கு ஒரு பெயரைக் கொடுத்துக் கூறுவார்: இன்ன இன்னாரைப் பின்பற்றுங்கள். சேவாதாரிகள் அல்லாதவர்கள் ஏனையவர்களுக்கு எதைக் கற்பிப்பார்கள்? அவர்கள் மேலும் அதிகமாக நேரத்தை வீணாக்குவார்கள். பாபா விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் முன்னேற்றமடைய விரும்பினால், அதை இங்கு செய்யமுடியும். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுத்தீர்கள் எனபதைப் பற்றிய படம் இங்குள்ளது. நீங்கள் இதைப் புரிந்துகொண்டுள்ளீர்கள், எனவே இப்பொழுது அதை ஏனையவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இது மிகவும் இலகுவானதாகும்! நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும். நேற்று நீங்கள் அவர்களை வழிபட்டீர்கள். இன்று நீங்கள் வழிபடவில்லை, ஏனெனில் நீங்கள் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். பலர் வந்து ஞானத்தைப் பெறுவார்கள். நீங்கள் மேலும் நிலையங்களைத் திறக்கையில், மக்கள் பலரும் வந்து அதைப் புரிந்து கொள்வார்கள். அதை அவர்கள் கேட்டதுமே அவர்களுடைய சந்தோஷப் பாதரசம் உயரும். நீங்கள் சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாற வேண்டும். சத்திய நாராயணனின் கதையும் உள்ளது. பக்தி செய்வதால், மக்கள் தொடர்ந்தும் கீழிறங்குகிறார்கள். ஞானம் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது. எல்லையற்ற தந்தை உங்களுக்கு மிகச் சரியாக விளங்கப்படுத்துகின்றார். பாபா கூறுகின்றார்: நேற்று, நான் உங்களுக்கு ஓர் இராச்சியத்தைக் கொடுத்தேன், எனவே அந்த இராச்சியம் எங்கு சென்றது? இது ஓர் நாடகம் என்பது உங்களுக்கே தெரியும். ஒரே தந்தை மாத்திரமே உங்களுக்கு முழு நாடகத்தின் இரகசியங்களையும் கூறுகின்றார். நாங்கள் கூறுகிறோம்: பாபா, நீங்கள் நாடகத்தால் கட்டுண்டு இருக்கின்றீர்கள், எனவே நீங்கள் தூய்மையற்ற உலகில் வந்து ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. மக்கள் கடவுளைப் பெருமளவு புகழ்கின்றார்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, நாங்கள் உங்களை அழைத்தோம், எனவே நீங்கள் எங்களுக்குச் சேவை செய்வதற்கு, அதாவது, தூய்மையற்றவர்களில் இருந்து எங்களைத் தூய்மையானவர்களாக்குவதற்கு வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு கல்பமும், நீங்கள் எங்களைத் தேவர்களாக்கிப் பின்னர் சென்றுவிடுகின்றீர்கள். இது ஒரு கதை போன்றதாகும். இது திறமைசாலிகளுக்கான கதை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாடகத்திற்கேற்ப, பாபா சேவகனாகவும் ஆகிவிட்டார். தந்தை கூறுகின்றார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். சரீர உணர்வைத் துறவுங்கள். நீங்கள் புதிய உலகில் ஒரு புதிய சரீரத்தைப்; பெறுவீர்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களை மிக நன்றாகக் கடையுங்கள். இவ்வாறு ஆகுவதற்கு நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு உங்களுடைய புத்தியைப் பயன்படுத்துங்கள். உங்கள் முன்னிலையில் உங்களுடைய இலக்கும் இலட்சியமும் உள்ளன. அம்மக்கள் கடவுளை ஒரு மனிதனாகக் கருதுகிறார்கள் அல்லது அவர் அசரீரியானவர் என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும்கூட அசரீரியானவர்கள் ஆவீர்கள். நீங்கள் ஒரு சரீரத்தை ஏற்று உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள். பாபாவும் ஒரு பாகத்தை நடித்துக் கொண்டிருக்கின்றார். தாங்கள் நிச்சயமாக மாலையின் மணி ஆகுவார்கள் என்ற நம்பிக்கையைச் சிறந்த சேவையைச் செய்பவர்கள் மாத்திரமே கொண்டிருப்பார்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற வேண்டும். நீங்கள் சித்தியடையாதபொழுது, இயல்பாகவே இராமராக அல்லது சீதையாக ஆகுவீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார், எனவே நீங்கள் மிகவும் நன்றாகக் கற்க வேண்டும். எவ்வாறாயினும், மாயையிடமிருந்து பெருமளவு தடையும் உள்ளது. மாயை புயல்களைக் கொண்டு வருகின்றாள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞானக்கடலைக் கடைந்து எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். ஏனையவர்களுக்கும் பாதையைக் காண்பிப்பதற்குக் கருணையைக் கொண்டிருங்கள். நீங்கள் கொண்டிருக்கின்ற சகவாசத்தால் நிறமூட்டப்பட்டுப் பாவச் செயல்களைச் செய்யாதீர்கள்.

2. மாயையின் துன்பச் சுமையை அகற்றுவதற்கு, நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உங்கள் தோளைக் கொடுக்கவேண்டும். நிலையங்களைத் திறந்து பலருக்கும் நன்மையளிப்பதற்கு கருவிகள் ஆகுங்கள்.


ஆசீர்வாதம்:
உங்கள் பிராமண வாழ்வில் நீங்கள் இணைந்த வடிவில் நிலைத்திருந்து, மலர்ச்சியும், கவனமும் நிறைந்த மனோநிலையை எப்பொழுதும் கொண்டிருப்பீர்களாக.

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் சந்தோஷ மனோநிலை மாறுமாயின், அதனை நிலையான சந்தோஷம் என்று கூற முடியாது. உங்கள் பிராமண வாழ்வில் எப்பொழுதும் மலர்ச்சியும் கவனமுமான மனோநிலையைக் கொண்டிருங்கள். உங்கள் மனோநிலை மாறாதிருக்கட்டும். உங்கள் மனோநிலை மாறும் பொழுதே, இன்று, உங்கள் மனோநிலை இவ்வாறுள்ளதால், நீங்கள் ஏகாந்தத்தில் இருக்க விரும்புவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் தனியாக இருக்கும் போது, உங்கள் மனோநிலை மாறுபடுகின்றது. எப்பொழுதும் இணைந்த வடிவில் இருந்தால், உங்கள் மனோநிலை மாற்றமடையாது.

சுலோகம்:
ஒரு விழாவைக் கொண்டாடுவது என்றால், நினைவுசெய்வதற்கும், சேவைக்குமான உற்சாகத்தைக் கொண்டிருப்பதாகும்.


தந்தை பிரம்மாவிற்கு சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
இப்பொழுது, தீவிர முயற்சிக்கான இலக்கைக் கொண்டிருங்கள்: நான் ஒரு டபிள் லைட் (ஒளியான, இலேசான) தேவதை ஆவேன். நடமாடும் தேவதை அனுபவத்தை அதிகரியுங்கள். சரீரமற்ற ஸ்திதியை பயிற்சி செய்யுங்கள். எந்த எண்ணத்தையும், சம்ஸ்காரத்தையும் அல்லது சுபாவத்தையும் ஒரு விநாடியில் முடிப்பதற்கு டபிள்லைட்டாக (ஒளியாகவும் இலேசாகவும்) இருங்கள்.