11.01.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைத் தொடர்ந்து பின்பற்றும்போது, தந்தையே உங்களுக்குப் பொறுப்பாவார். தந்தையின் வழிகாட்டல்: நடந்தும், உலாவித் திரியும் போதும் என்னை நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
சிறந்த, நற்குணங்களையுடைய குழந்தைகளின் பிரதான அடையாளங்கள் யாவை?

பதில்:
அவர்கள் முட்களை மலர்களாக ஆக்குகின்ற, மிகச்சிறந்த சேவையை செய்கிறார்கள். அவர்கள் முட்களைப் போன்று எவரையும் குத்துவதில்லை. அவர்கள் என்றுமே தம்மிடையே சண்டையிடுவதில்லை. அவர்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. துன்பம் விளைவிப்பது என்றால், அவர்களை முட்களால் குத்துவது போன்றதாகும்.

பாடல்:
நேரம் கடந்துகொண்டிருக்கிறது.

ஓம் சாந்தி.
இனிமையிலும், இனிமையான எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள், செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இந்தப்பாடலின் கருத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள்;. வரிசைக்கிரமம் எனக் கூறப்படுகின்றது, ஏனெனில், சிலருக்கு முதற்தர புரிந்துணர்வும், சிலருக்கு இரண்டாம் தர, ஏனையோருக்கு மூன்றாம் தர புரிந்துணர்வும் உள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்குரிய முறையில் புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தியில் சொந்த தனிப்பட்ட வெவ்வேறு நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள். தந்தை தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார். சிவபாபா இவர் மூலம் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என்றே எப்பொழுதும் கருதுங்கள். அரைக் கல்பமாக நீங்கள் அசுர வழிகாட்டல்களையே பின்பற்றினீர்கள். இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் உங்களுடைய படகு அக்கரைக்குச் செல்லும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இந்த வழிகாட்டல்கள் கடவுளிடமிருந்து அல்ல, ஒரு மனிதரிடமிருந்தே கிடைக்கிறது என்று நீங்கள் கருதினால் குழப்பமடைவீர்கள். தந்தை கூறுகிறார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றினால், நான் உங்களுக்குப் பொறுப்பாவேன். இவரினூடாகச் செய்யப்படும் செயல்களுக்கு நானே பொறுப்பாவேன். நான் அதனைச் சரியாக்குவேன். எனது வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். மிகச் சரியாக நினைவு செய்பவர்களே எனது வழிகாட்டலைப் பின்பற்றுகின்றார்கள். இவை கடவுளின் வழிகாட்டல்கள் என்பதை ஒவ்வொரு அடியிலும் நீங்கள் புரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் நீங்கள் ஒருபோதும் இழப்பை அனுபவம் செய்யமாட்டீர்கள். நம்பிக்கை கொண்டிருப்பதனால் வெற்றி கிட்டும். இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளாத பல குழந்தைகள் உள்ளனர். சிறிதளவு ஞானத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதனால், சிறிதளவு யோகமே உள்ளது. ஞானம் என்றால் வரலாற்றையும், புவியிலையும் தெரிந்து கொள்வதாகும். இது மிகவும் இலகுவானதாகும். இங்குள்ள மக்கள் அதிகளவில் விஞ்ஞானத்தைக் கற்கிறார்கள். இந்தக் கல்வி மிகவும் இலகுவானதாகும். யோகத்திற்கே முயற்சி தேவையாகும். யோகம் செய்யும்போது நல்ல போதை கொண்டிருந்ததாக எவராவது பாபாவிடம் கூறினால், பாபா அவரை நம்பமாட்டார். பாபா ஒவ்வொருவருடைய செயல்களையும் அவதானிக்கின்றார். தந்தையை நினைவு செய்கின்றவர்களே அதிகளவு அன்பானவர்கள் ஆவார்கள். எவ்வாறாயினும் நீங்கள் நினைவு செய்யாதபோது, நீங்கள் பிழையான செயல்களைச் செய்கிறீர்கள். இரவுக்கும் பகலுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது. இப்போது, உங்களால் ஏணி படத்தை மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். தற்போது, இது ஒரு முட்காடாகும். அது ஒரு பூந்தோட்டமல்ல. பாரதம் ஒரு பூந்தோட்டமாக இருந்ததென்று நீங்கள் மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். காட்டு மிருகங்கள் எப்போதாவது பூந்தோட்டத்தில் வாழ்வதுண்டா? தேவர்களே அங்கு வாழ்கின்றார்கள். தந்தையே அதிமேலான அதிகாரியாவார். அதன் பின்னர் மனித குலத்தின் தந்தையான பிரம்மாவும் அதி மேலான அதிகாரியாவார். இந்த தாதாவும் அதிமேலான அதிகாரியாவார். சிவனும் உள்ளார், மனித குல தந்தையான பிரம்மாவும் உள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள். உங்களுடைய சரீர வடிவில் நீங்கள் சகோதர சகோதரிகள், அதாவது மனித குலத் தந்தையான, பிரம்மாவின் குழந்தைகள். அவர் அனைவரதும் முப்பாட்டனார் ஆவார். அத்தகைய அதி மேலான அதிகாரிக்கு ஒரு கட்டடம் தேவையாகும். இவ்வாறாக எழுதி, இது எவரது புத்தியையாவது தொடுகின்றதா எனப்; பாருங்கள். சிவபாபாவும், மனித குல தந்தையான பிரம்மாவும் அதாவது ஆத்மாக்கள் அனைவரது தந்தையும், மனிதர்கள் அனைவரது தந்தையும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த கருத்தாகும். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் அதனை முற்றாக விளங்கப்படுத்துவதில்லை. இதனை நீங்கள் மறக்கின்றீர்கள், ஏனெனில், ஞானம் உள்ளது என்ற அகங்காரத்தை நீங்கள் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அது நீங்கள் பாப்தாதாவையும் வெல்லுவதற்கு முயற்சிப்பது போன்றதாகும். இந்த தாதா கூறுகிறார்: ஓகே நான் கூறுவதை நீங்கள் செவிமடுக்காதிருந்தால், சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார் என்றும் நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்று எப்பொழுதும் நினையுங்கள். இதனைச் செய்யுங்கள.; அதனைச் செய்யுங்கள் என்று உங்களுக்கு வழிகாட்டல்களை கடவுளே கொடுக்கின்றார். அவரே பொறுப்பாவார். கடவுளால் கொடுக்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். இவர் கடவுள் அல்ல. நீங்கள் இப்பொழுது கடவுளுடன் கற்கவேண்டும். எப்பொழுதும் கடவுளே உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார் என்றே நினையுங்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் பாரத மக்களே ஆவார்கள். அனைவரும் மனிதர்கள், ஆனால் அவர்கள் அனைவரும் சிவாலயத்தில் வாழ்ந்ததாலேயே அனைவரும் அவர்களுக்கு நமஸ்தே கூறுகிறார்கள். எவ்வாறாயினும் சில குழந்தைகள் முழுதாக விளங்கப்படுத்துவதில்லை. பலர் தங்களுடைய ஞானத்தையிட்டு அகங்காரம் கொள்கிறார்கள். பலரிடம் குறைபாடுகள் உள்ளன. நீங்கள் முழுமையான யோகத்தைக் கொண்டிருந்தால் மாத்திரமே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். உலக அதிபதி ஆகுவதென்பது உங்களுடைய மாமியார் வீட்டிற்குச் செல்வது போலல்ல. மாயை எவ்வாறு சில குழந்தைகளின் மூக்கில் பிடித்து அவர்களை சாக்கடையில் வீசுவதை பாபா பார்க்கிறார். நீங்கள் சந்தோஷத்துடனும் மலர்ந்த முகத்துடனும் தந்தையின் நினைவில் இருக்கவேண்டும். உங்களுடைய இலக்கும் குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகவேண்டும். இதனை மறந்துவிடுவதன் மூலம் உங்களுடைய சந்தோஷத்தின் வீதம் உயர்வதில்லை. சிலர் தங்களால் வெளியே இருக்கும்போது பாபாவை நினைவு செய்ய முடியாதிருப்பதால், விசேட தியானம் நடாத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். நீங்கள் நினைவில் நிலைத்திருக்காததால், பாபா சிலவேளைகளில் நீங்கள் பின்பற்றுவதற்கு ஒரு நிகழ்ச்சிநிரலை அனுப்புகிறார். இருப்பினும், நீங்கள் நினைவு செய்வதற்காக அமர்வதில்லை. அவர்களுடைய புத்தி தொடர்ந்து அங்கும் இங்கும் அலைகிறது. பாபா தனது சொந்த உதாரணத்தைக் கொடுக்கிறார். அவர் நாராயணனின் தீவிர பக்தனானக இருந்ததால் அவர் எங்கு சென்றாலும் நாராயணனின் படம் ஒன்றை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார். இருப்பினும், வழிபாடு செய்யும் போது, அவரின் புத்தி அலைந்து திரியும். அவ்வாறே இங்கும் நடக்கிறது. தந்தை கூறுகிறார்: நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் நீங்கள் தொடர்ந்து தந்தையை நினைவு செய்யவேண்டும். ஆனால், உங்களில் பலர் உங்களுக்காக ஒரு சகோதரி விஷேடமாகத் தியானத்தை நடாத்தவேண்டும் என்றே விரும்புகிறீர்கள். விஷேடமாக தியானம் நடாத்த வேண்டும் என்பதற்கான அவசியமே இல்லை. பாபா எப்போதும் கூறுகிறார்: நினைவில் நிலைத்திருங்கள்! யோகத்தில் அமர்ந்திருக்கும்போது சில குழந்தைகள் திரான்சில் சென்றுவிடுகிறார்கள். அவர்களால் ஞானத்தை நினைவு செய்யவோ அல்லது யோகம் செய்யவோ முடியாதிருப்பதுடன் தூங்கி விழவும் ஆரம்பிக்கின்றார்கள். பலருக்கு அவ்வாறு செய்யும் பழக்கம் உள்ளது. அந்த அமைதி தற்காலிகமானதாகும். அவர்கள் நாள் முழுவதும் அமைதியின்றி இருக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் நடக்கும்போதும், உலாவித்திரியும்போதும் தந்தையை நினைவு செய்யவில்லை என்றால், எவ்வாறு உங்களுடைய பாவச்சுமைகள் நீக்கப்படும்.? இது அரைக்கல்பத்திற்கான சுமையாகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி தந்தையை நினைவு செய்வதற்கு அதிக முயற்சி தேவையாகும். இன்ன, இன்ன நேரத்தில் தாங்கள் நினைவில் இருந்ததாக கூறி பல குழந்தைகள் பாபாவிற்கு எழுதினாலும், அவர்களால் அந்தளவு நீண்ட நேரத்திற்கு நினைவில் இருக்க முடியாது. அவர்கள் உண்மையில் அட்டவணையைப் புரிந்து கொள்வதில்லை. பாபாவே எல்லையற்ற தந்தையாவார். அவரே தூய்மையாக்குபவர். ஆகவே நீங்கள் சந்தோஷத்தில் நிலைத்திருக்கவேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர் என்று நீங்கள் எண்ணக்கூடாது. எவ்வாறாயினும் இவ்வாறு தாங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள் என்று எண்ணுகின்ற குழந்தைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவரை நினைப்பதில்லை. அவர்கள் பாபாவை நினைவு செய்திருந்தால் அவர்கள் முதலாவது இலக்கத்தவராக ஆகியிருப்பார்கள். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு மிகச்சிறந்த புத்திதேவை. நாங்கள் பாரதத்தைப் புகழ்கின்றோம். புதிய உலகில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. இப்போது அது கலியுகமான பழைய உலகமாகும். அது சந்தோஷதாமமாகும். ஆனால் இதுவோ துன்பபூமியாகும். பாரதம் சத்திய யுகமாக இருந்தபோது அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. மக்கள் உங்களை வினவுகிறார்கள். அது அவர்களின் இராச்சியமாக இருந்ததென்பதை எவ்வாறு நாங்கள் நம்பலாம்? இந்த ஞானம் அற்புதமானதாகும். ஒவ்வொருவருடைய பாக்கியத்திலும் என்னென்ன உள்ளது என்பதும் நீங்கள் ஒவ்வொருவரும் என்னென்ன முயற்சியைச் செய்கிறீர்கள் என்றும் தெளிவாகப் புலப்படுகிறது. அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து உங்களால் கூறமுடியும். எவ்வாறாயினும், உண்மையில், சத்தியயுகத்திலும், கலியுகத்திலும் நீங்கள்; மனிதர்களே. எனவே, மக்கள் ஏன் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, விழுந்து வணங்குகின்றார்கள்? அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். எவராவது மரணித்தால் இன்னார், இன்னார் சுவர்க்க வாசி ஆகிவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதேயில்லை. இந்நேரத்தில் அனைவரும் நரகவாசிகள். எல்லோரும் இங்கு நிச்சயமாக மறுபிறப்பு எடுக்கிறார்கள். பாபா தொடர்ந்து அனைவருடைய நடத்தையையும் அவதானிக்கிறார். உங்களில் சிலரோடு பாபா மிகவும் சாதாரணமாகவே பேசவேண்டியள்ளது. அவர் உங்களைப் பராமரிக்க வேண்டும். தந்தை சகலதையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இது சரியென்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இருப்பினும், நீங்கள் ஏன் பெரிய முட்களாக ஆகுகிறீர்கள்? ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிப்பதால் நீங்கள் முட்களாகுகிறீர்கள். நீங்கள் அந்தப்பழக்கத்தை கைவிடுவதில்லை. தோட்டக்காரரான தந்தை இப்போது பூந்தோட்டம் ஒன்றை உருவாக்குகிறார். அவர் தொடர்ந்து உங்களை முட்களிலிருந்து மலர்கள் ஆக்குகிறார். அது அவரின் பணியாகும். முள்ளாக இருக்கும் ஒருவர் எவ்வாறு பிறரை மலர்களாக மாற்ற முடியும்? கண்காட்சிகளுக்கு யாரை அனுப்புவது என்பதில் நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நல்ல தெய்வீகக்குணங்களையுடைய குழந்தைகளே முட்களை மலர்களாக ஆக்குகின்ற சிறந்த சேவையைச் செய்கிறார்கள். அவர்கள் முட்களைப் போன்று எவரையும் குத்துவதில்லை. அதாவது, அவர்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் தங்களுக்கிடையே சண்டையிடுவதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மிகச்சரியாக விளங்கப்படுத்தவேண்டும். இதில் எவரையும் அவதூறு செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. சிவஜெயந்தி வரவிருப்பதால், நீங்கள் பல கண்காட்சிகளை நடத்தவேண்டும். நீங்கள் சிறு கண்காட்சிகளை நடத்தியும் விளங்கப்படுத்தலாம்: ஒரு விநாடியில் சுவர்க்கவாசிகள் ஆகுங்கள் அதாவது தூய்மையற்ற சீரழிந்தவர்களிலிருந்து, தூய்மையானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் ஆகுங்கள். ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை பெறுங்கள். அவர்கள் ஜீவன்முக்தி என்பதன் அர்த்தத்தைக்கூடப் புரிந்துகொள்வதில்லை. இப்போது நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். எல்லோரும் தந்தையிடமிருந்து முக்தி, ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். எவ்வாறாயினும் நீங்களும் நாடகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்கள் சுவர்க்கத்திற்குள் வருவதில்லை. எல்லோரும் தங்களுக்குச் சொந்தமான பிரிவிற்குள் திரும்புவார்கள். பின்னர் அவர்கள் தங்களுக்குரிய நேரத்தில் தங்களுடைய சமயத்தை ஸ்தாபிப்பதற்காக கீழே இறங்குவார்கள். இது விருட்சத்தின் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சற்குருவைத் தவிர வேறு எவராலும் எல்லோருக்கும் ஜீவன்முக்தியை கொடுக்கமுடியாது. எவ்வாறாயினும் உங்களுக்குப் பக்தியைக் கற்பிப்பதற்குப் பல குருமார்கள் இருக்கிறார்கள். எந்த மனித குருவினாலும் ஜீவன்முக்தியை அருள முடியாது. விளங்கப்படுத்துவதற்கான விவேகமே உங்களுக்குத் தேவையாகும். இதில் நீங்கள் உங்களுடைய புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்த நாடகம் மிக அற்புதமாக நடிக்கப்படுகின்றது. உங்களில் மிகச்சிலரே இதில் போதையுடன் இருக்கிறீர்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

இரவு வகுப்பு - 18.3.68
உண்மையில் நீங்கள் சமய நூல்கள் பற்றி விவாதிக்க தேவையில்லை. பிரதான விடயம் நினைவிலிருத்தலும் உலகின் ஆரம்பம் மத்தி இறுதி பற்றி புரிந்துகொள்வதும் ஆகும். நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆக வேண்டும். நீங்கள் இந்த சக்கரத்தை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஒரு விநாடியில் முக்தியையும் ஜீவன் முக்தியையும் பெறுகிறீர்கள் என்பது நினைவு கூறப்படுகின்றது. பக்தி அரைக்கல்பத்துக்கு நீடித்ததும், அங்கு சிறிதளவு ஞானம் கூட இல்லாதிருந்ததும் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு அற்புதமே. தந்தையிடம் மட்டுமே ஞானம் உள்ளது. நீங்கள் தந்தையிடமிருந்து இதனை அறிந்துகொள்ள வேண்டும். தந்தை மிகவும் சாதாரணமானவர் அல்ல. இதனாலேயே பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே தோன்றுகின்றனர். அந்த ஆசிரியர்கள் இவ்வாறு கூறமாட்டார்கள். இவர் கூறுகின்றார்: நானே தந்தையும் ஆசிரியரும் குருவும் ஆவேன். மக்கள் இதனை செவிமடுக்கும் போது ஆச்சரியமடைகின்றனர். பாரதம் தாய்நாடு என்று கூறப்படுகின்றது. ஏனெனில் அம்பாளின் பெயர் மிகவும் பிரசித்தமானது. அம்பாளுக்கு பல மேலாக்களை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். அம்பாள் என்னும் வார்த்தை மிகவும் இனிமையானது. சிறு குழந்தைகள் தங்கள் தாயிடம் பெருமளவு அன்பு வைத்திருக்கின்றார்கள். ஏனெனில் அவரே உணவு ஊட்டுகின்றார், குடிப்பதற்கான பானங்களை வழங்குவதுடன் அவர்களை பராமரிக்கின்றார். எவ்வாறாயினும் அம்பாளுக்கும் தந்தை ஒருவர் இருக்க வேண்டும். இக்குழந்தை தத்தெடுக்கப்பட்டவர். இவருக்கு கணவர் ஒருவர் இல்லை. இது ஒரு புதியவிடயமாகும்: பிரஜாபிதா பிரம்மா நிச்சயமாக குழந்தைகளை தத்தெடுத்தார். தந்தை மட்டுமே வந்து இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பெருமளவிலான மேலாக்கள் அம்பாளுக்கு இடம்பெறுகின்றன. ஏனெனில் அந்தக் குழந்தை (மம்மா) பெருமளவு சேவை செய்ததனால் பூஜிக்கப்படுகின்றார். மம்மா கற்பித்த மக்களின் எண்ணிக்கை போல அதிகளவு குழந்தைகளுக்கு வேறு எவராலும் கற்பிக்க முடியாது. மம்மா மிகவும் பிரபல்யமானவரும் பல பெரிய மேலாக்கள் அவருக்கு நடாத்தப்படுகின்றன. தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஆரம்பம் மத்தி இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்தினார் என்பது உங்களுக்கு தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தையின் வீடு பற்றியும் தெரியும். உங்களுக்கு தந்தையிடம் அன்பு உள்ளது. அத்துடன் வீட்டையும் நேசிக்கின்றீர்கள். இந்த நேரத்திலேயே நீங்கள் இந்த ஞானத்தை பெறுகின்றீர்கள். இக் கல்வியின் மூலம் பெருமளவு வருமானம் சம்பாதிக்கப்படுகின்றது. ஆகவே சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் முழுமையாக சாதாரணமானவர்கள். தந்தை வந்து இந்த ஞானத்தை பேசுவது பற்றி உலகம் அறிய மாட்டாது. தந்தை மட்டுமே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இப்புதிய விடயங்களைக் கூறுகின்றார். எல்லையற்ற கல்வி மூலம் புதிய உலகம் படைக்கப்படுகின்றது. பழைய உலகில் விருப்பமின்மை உள்ளது. குலந்தைகளாகிய உங்களுக்குள் ஞானத்தின் சந்தோஷம் உள்ளது. நீங்கள் தந்தையையும் வீட்டையும் நினைவு செய்ய வேண்டும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். தந்தை அனைவருக்கும் கூறுகின்றார்: குழந்தைகளே உங்களுக்கு முக்தி ஜீவன் முக்தியை என்ற ஆஸ்தியை கொடுக்க வந்துள்ளேன். ஆகவே ஏன் மறக்கிறீர்கள்? நான் உங்களின் எல்லையற்ற தந்தை. நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கவே வந்துள்ளேன். ஆகவே நீங்கள் ஸ்ரீமத்தை பின்பற்ற மாட்டீர்களா? இல்லையெனில் பெருமளவு இழப்பு அங்கிருக்கும். இது எல்லையற்ற இழப்பு ஆகும். நீங்கள் தந்தையின் கையை விட்டுச் சென்றால் உங்கள் வருமானத்தில் இழப்பு ஏற்படும். அச்சா, குட் நைட், ஓம்சாந்தி.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதன் மூலம் மிக மிக அன்பானவர்கள் ஆகுங்கள். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும் செயல்கள் செய்யும்போதும் நினைவில் நிலைத்திருக்க பயிற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து சந்தோஷமாகவும், முக மலர்ச்சியுடனும் இருங்கள்.

2. ஓவ்வொரு செயலைச் செய்யும்போதும் ஒவ்வொரு அடியிலும் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். அகங்காரமுடையவர்கள் (சரீரஉணர்வின் போதையுடையவர்கள்) ஆகாதீர்கள். தீய செயல்களைச் செய்யாதீர்கள். குழப்பமடையாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உலக நன்மைக்கான உங்கள் பொறுப்பை புரிந்துகொள்வதால் மாஸ்டர் படைப்பவராகி உங்கள் நேரம் சக்தி என்பவற்றில் சிக்கனமுடையவர் ஆகுவீர்களாக.

ஆசீர்வாதம்: உலகின் அனைத்து ஆத்மாக்களும் மேன்மையான ஆத்மாக்களான உங்கள் குடும்பமாகும். குடும்பம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு சிக்கனமாக இருப்பது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். எல்லையற்ற சேவைக்கான கருவி என உங்களைக் கருதி உங்கள் முன்னிலையில் அனைத்து ஆத்மாக்களையும் வைத்திருந்து அனைத்து நேரத்தையும், சக்திகளையும் சிக்கனமாக பயன்படுத்துங்கள். உங்களுக்காக சம்பாதித்து அதிலிருந்து சாப்பிட்டு அதனை முடித்துவிடுதலென இவ்விதத்தில் கவனயீனமாக இருக்காதீர்கள். உங்களின் அனைத்து பொக்கிஷங்களினதும் வரவு செலவை தயாரியுங்கள். அவ்விதத்தில் மாஸ்டர் படைப்பவர் என்ற ஆசீர்வாதத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திந்து, சேவைக்கான நேரம் சக்திகள் என்பவற்றின் கையிருப்பை சேமித்துக்கொள்ளுங்கள்.

சுலோகம்:
மகாதானி ஒருவரின் எண்ணங்கள் வார்த்தைகளிலிருந்து அனைவரும் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களையே பெறுவர்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை.
ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதிருப்பதே ஒரு தேவதை அல்லது அவ்யக்த வாழ்வின் சிறப்பம்சமாகும். தேவர்களின் வாழ்வில் ஆசைகள் என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் வாழ்வு பிராமண வாழ்வாகி பின்னர் தேவதை வாழ்வாகும் போது, அதாவது நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும் போது, நீங்கள் தூய செயல்கள், வீணான செயல்கள், பாவச் செயல்கள் அல்லது கடந்தகால செயல்கள் என எந்த வகையான செயல்களினாலும் கட்டுண்டுவிட முடியாது.