11.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஞான வாளுக்கு யோக சக்தி தேவை, அப்பொழுதே வெற்றி இருக்க முடியும். ஞானத்துடன் யோகம் இருக்கும்போது நிச்சயமாக அது மக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கேள்வி:
நீங்கள் இறை தூதுவர்கள். நீங்கள் எச்செய்தியை முழு உலகிற்கும் கொடுக்க வேண்டும்?

பதில்:
முழு உலகிற்கும் கடவுள் கூறியிருக்கின்ற இச்செய்தியைக் கொடுங்கள்: நீங்கள் அனைவரும் உங்களை ஆத்மாக்களாகக் கருதவேண்டும். சரீர உணர்வைத் துறந்துவிடுங்கள். உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் தலைமீதுள்ள பாவச் சுமை அகற்றப்படும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகுவீர்கள். அகநோக்கிலிருக்கின்ற குழந்தைகளால் மாத்திரமே இச்செய்தியை அனைவருக்கும் கொடுக்க முடியும்.


ஓம் சாந்தி.
எந்தவொரு மனிதராயினும், அவர் தெய்வீகக் குணங்களைக் கொண்டவராயினும்சரி, அசுர குணங்களைக் கொண்டவராயினும்சரி எவரையுமே கடவுள் என அழைக்க முடியாது. எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்கள் சத்தியயுகத்திலும், அசுர குணங்களைக் கொண்டவர்கள் கலியுகத்திலும் இருக்கின்றார்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே பாபா எழுதியிருந்தார்: நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவர்களா அல்லது அசுர குணங்களைக் கொண்டவர்களா? நீங்கள் சத்தியயுகத்தவரா அல்லது கலியுகத்தவரா? இவ்விடயங்களை மக்கள் புரிந்துகொள்வது கடினமான விடயமாகும். நீங்கள் ஏணிப் படத்தை மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். உங்கள் ஞான அம்புகள் மிகவும் சிறந்தவை. எனினும், ஒரு வாளில் உள்ள பலத்தைப் போன்று (கூரிய முனை), அவற்றிற்கும் சக்தி தேவை. சிலர் மிகவும் கூரிய முனையை வைத்திருக்கின்றார்கள். குரு கோபிந் சிங்கின் வாள் வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் அவ்வாளை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்கள் அதனை மிகவும் சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். சில வாள்களின் பெறுமதி இரண்டு பைசாக்கள் மாத்திரமேயாகும். சக்தியுடைய வாள்கள் மிகவும் கூரானவை. அவை மிகவும் பெறுமதி வாய்ந்தவை. குழந்தைகளாகிய உங்களுக்கும் அது பொருந்தும். சிலரிடம் பெருமளவு ஞானம் இருந்தாலும், யோக சக்தி குறைவாகவே இருக்கின்றது. ஏழைகளும், பந்தனத்தில் உள்ளவர்களும் சிவபாபாவைப் பெருமளவில் நினைவு செய்கின்றார்கள். அவர்களிடம் ஞானம் குறைவாக இருந்தாலும், யோகசக்தி பெருமளவு உள்ளது. அவர்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றார்கள். அவர்கள் அர்ஜுனனினதும், ஏகலைவனினதும் உதாரணத்தைக் காண்பிக்கின்றார்கள். அம்பு விடுவதில் ஏகலைவன் அர்ஜுனனை விடவும் அதிக திறமைசாலியாக இருந்தான். அர்ஜுனன் என்றால், வீட்டிலிருந்தவாறே தினமும் செவிமடுப்பவர் என்பதாகும். வெளியில் வசித்தவர்கள் திறமைசாலிகளாகினார்கள். ஞானத்தில் சக்தியைக் கொண்டவர்களின் முன்னிலையில் அவர்கள் தலைவணங்குகின்றார்கள். அது விதி எனக் கூறப்படும். ஒருவர் தோல்வியடையும்போது அல்லது கடனாளியாகும்போது அவர்கள் அதனை விதியின்மீது குற்றம் சாட்டுகின்றார்கள். ஞானத்துடன் யோக சக்தியும் தேவைப்படுகின்றது. அச்சக்தி இல்லையெனில், நீங்கள் சேவலைப் போன்ற ஞானியாகவே இருப்பீர்கள். குழந்தைகளும் அதனை உணர்கின்றார்கள். சிலர் தங்கள் கணவனை நேசிக்கின்றனர். சிலர் வேறு எவரையாவது நேசிக்கின்றனர். அவர்கள் ஞானத்தில் மிகவும் திறமைசாலிகளாக இருந்தாலும், அகத்தே பெருமளவு முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே, நீங்கள் முற்றிலும் சாதாரணமானவர்களாக இருக்கவேண்டும். அனைத்தையும் பார்க்கும்போதும், நீங்கள் எதனையும் பார்க்காதது போல் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தை மீது மாத்திரமே அன்பு கொண்டிருக்கின்றீர்கள். இதனாலேயே நினைவு கூரப்படுகின்றது: உங்கள் கரங்கள் பணியைச் செய்தாலும், உங்கள் இதயம் நினைவில் இருக்கட்டும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும்பொழுதும், நீங்கள் ஓர் ஆத்மா என்பதை உங்கள் புத்தி நினைவு செய்யட்டும். தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள் எனத் தந்தை கட்டளையிட்டுள்ளார். பக்தி மார்க்கத்திலும்கூட, அவர்கள் தங்கள் பணியைச் செய்யும்போது, தொடர்ந்து தங்கள் விஷேட, அன்பிற்கினிய தேவர்களில் எவரையாவது நினைவு செய்கின்றனர். அவை கல்லாலான விக்கிரகங்கள் ஆகும். அவற்றில் ஆத்மா இருக்கமாட்டாது. இலக்ஷ்மியும், நாராயணனும்கூட பூஜிக்கப்படுகின்றனர். அவையும்கூட கல்லாலான விக்கிரகங்களேயாகும். அவர்களிடம் கேளுங்கள்: அவர்களின் ஆத்மாக்கள் எங்கே? அவர்கள் நிச்சயமாக ஒரு பெயருடனும், வடிவத்துடனும் இங்கே இருக்கின்றார்கள் என்பதனை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். யோக சக்தியின் மூலம் நீங்கள் இப்பொழுது தூய தேவர்களாகுகின்றீர்கள். நீங்கள் உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும்கூட கொண்டிருக்கின்றீர்கள். இரண்டாவதாக, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஞானக்கடலும், ஞான கங்கைகளும் அதிமங்களகரமான இச்சங்கமயுகத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் ஒரு நேரத்தில் மாத்திரமே இருக்கின்றனர். ஞானக்கடல், சக்கரத்தின் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை, ஞானக்கடல் ஆவார். அவருக்கு, நிச்சயமாக ஒரு சரீரம் தேவைப்படுகின்றது. அப்பொழுதே அவரால் பேசமுடியும். எவ்வாறாயினும், நீர் போன்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் சங்கமயுகத்திலேயே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஏனைய அனைவரும் பக்தியில் இருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் கங்கை நீரைக்கூட வழிபடுகின்றார்கள். ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். அவர் ஒரேயொரு தடவையே வருகின்றார், அதாவது பழைய உலகம் மாறவேண்டியுள்ளபோதே அவர் வருகின்றார். இதனை ஒருவருக்கு விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் புத்தி தேவைப்படுகின்றது. சிவன் மாத்திரமே ஞானக்கடலும், பரமாத்மாவாகிய பரமதந்தையும் ஆவார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எவை எழுதப்பட வேண்டும் என்பது பற்றி நீங்;கள் ஏகாந்தத்தில் இருந்து ஞானத்தைக் கடைந்து பார்க்க வேண்டும். அவர் வரும்போது, பிரம்ம குமாரர்களாகவும், குமாரிகளாகவும் ஆகுகின்ற குழந்தைகள் ஞானத்தைக் கிரகித்து, ஞானகங்கைகள் ஆகுகின்றனர். தொடர்ந்து ஞானத்தை எடுத்துரைக்கின்ற ஞான கங்கைகள் பலர் இருக்கின்றனர். அவர்களால் மாத்திரமே ஜீவன் முக்தியை அருள முடியும். நீராடுவதன் மூலம் உங்களால் தூய்மையாக முடியாது. சங்கமயுகத்தில் மாத்திரமே ஞானம் இருக்கின்றது. இதனை விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் பல வழிமுறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் மிகவும் அகநோக்குடையவராக இருக்க வேண்டும். சரீர உணர்வைத் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இந்நேரத்தில், உங்களை முயற்சியாளர்கள் என்றே கூறுவீர்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர், யுத்தம் ஆரம்பமாகும்போது, அனைவரும் இச்செய்தியைப் பெற்றிருக்க வேண்டும். சிவபாபாவே இச்செய்தியைக் கொடுக்கின்றார். கடவுள் தூதுவர் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் இ;ச்செய்தி அனைவரையும் சென்றடையுமாறு செய்கின்றீர்கள்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் யோகத்தைக் கொண்டிருங்கள். அப்பொழுது, நீங்கள் பிறவி பிறவியாகச் செய்த பாவங்கள் அழிக்கப்படும் எனத் தந்தை வாக்குறுதியளிக்கின்றார். தந்தை இங்கிருந்து, பிரம்மாவின் வாய் மூலமாக உங்களுக்கு இதனைக் கூறுகின்றார். கங்கைநீரால் எவற்றை விளங்கப்படுத்த முடியும்? எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில், நீங்கள் மிகவும் செல்வந்தர்களாகவும், வளமுடையவர்களாகவும் இருந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் சந்தோஷமற்றவர்களாகவும், ஏழ்மை நிறைந்தவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அப்படங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. பக்தி மார்க்கச் சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட வேண்டும். சமய நூல்களைக் கற்றல், வழிபாடு போன்ற அனைத்தும் பக்தியாகும். நான் சமய நூல்கள் போன்றவற்றை உங்களுக்குக் கற்பிப்பதில்லை. நான் தூய்மையற்றவர்களாகிய உங்களைத் தூய்மையாக்குவதற்காக ஞானத்தைக் கொடுக்கின்றேன்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். இப்பொழுது ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மையற்றதாகவே உள்ளது. இப்பொழுது தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தேவர்களாகுவீர்கள். உங்கள் சரீரம் மீதும், பழைய உறவுகள் அனைத்தின் மீதும் உள்ள பற்று முடிவடைய வேண்டும். நீங்கள் பாடியதுண்டு: நீங்கள் வரும்போது, நான் வேறு எவரையும் செவிமடுக்கமாட்டேன். நான் அனைத்து உறவுமுறைகளையும் உங்களுடன் மாத்திரமே வைத்திருப்பேன். நான் அனைத்துச் சரீரதாரிகளையும் மறந்துவிடுவேன். தந்தை இப்பொழுது உங்கள் சத்தியத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னுடன் யோகத்தைக் கொண்டிருப்பதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அனைத்தும் நீக்கப்படுவதுடன் நீங்கள் புதிய உலகின் அதிபதிகளாகுவீர்கள். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். அரசர்களுடன் பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். அரசர்களுக்கு பணிப்பெண்களும், சேவகர்களும் தேவைப்படுகின்றனர். தந்தை தொடர்ந்தும் இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் நன்றாக யோகத்தில் இருக்காவிட்டால் உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியாது. எனவே, எவ்வாறு உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் கோரிக்கொள்வீர்கள்? வீட்டில், ஏதோவொரு காரணத்தால் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றது. தந்தை எழுதுகின்றார்: உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருப்பதனாலேயே ஞானம் நிலைத்திருப்பதில்லை. பாபா வினவுகின்றார்: கணவன், மனைவி இருவரும் சேர்ந்து நன்றாக வாழ்கின்றீர்களா? உங்கள் நடத்தை மிக நன்றாக இருக்கவேண்டும். கோபத்தின் சுவடு சிறிதளவேனும் இருக்கக்கூடாது. உலகில் இப்பொழுது பெருமளவு குழப்பங்களும், அமைதியின்மையும் நிலவுகின்றது. உங்களிற் சிலர் ஞானத்திலும், யோகத்திலும் திறமைசாலிகளாக இருந்தால், மற்றவர்களும் பாபாவை அதிகளவில் நினைவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் இதில் மிகச்சிறந்த பயிற்சியை விருத்தி செய்யும்போது, உங்கள் புத்தி எல்லையற்றதாகிவிடும். பாபா சிறிய படங்களைப் பெருமளவில் விரும்புவதில்லை. படங்கள் அனைத்தும் பெரியதாக இருக்கவேண்டும். திரைப்படங்களின் போஸ்டர்களைப் போன்று, அவற்றையும் வெளியில் பிரதான இடங்களில் வைக்கவேண்டும். அவை சற்றேனும் பாதிக்கப்படாதவகையில் மிக நல்ல படங்களை உருவாக்குங்கள். மிகப் பெரிய ஏணிப்படமொன்றை உருவாக்கி, அனைவரது பார்வையும் அதன் மீது படுமாறு ஓரிடத்தில் வையுங்கள். அவை மங்காமல் அல்லது ஈரமாகாமல் இருக்கும் வகையில் உயர் ரகப் பூச்சுக்களைப் பயன்படுத்துங்கள். இவற்றைப் பிரதான இடங்களில் வையுங்கள், அல்லது எங்காவது கண்காட்சி இடம்பெறும்பொழுது, இரண்டு அல்லது மூன்று பிரதான படங்கள் போதுமானவை. உண்மையிலேயே, சக்கரத்தின் படத்தை நீங்கள் சுவரின் அளவில், 8 அல்லது 10 பேர் சேர்ந்து தூக்கும் அளவிற்குப் பெரிதாக உருவாக்க வேண்டும். அப்பொழுது, வெகு தொலைவிலிருந்து பார்க்கின்ற எவராலும் அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடியும். சத்தியயுகத்தில் பல சமயங்கள் கிடையாது. அவை பின்னரே தோன்றுகின்றன. முதலில், சுவர்க்கத்தில் வெகு சிலரே உள்ளனர். இப்பொழுது இது சுவர்க்கமா அல்லது நரகமா என நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். வருகின்ற எவருக்கும் தொடர்ந்து விளங்கப்படுத்துங்கள். படங்கள் பெரிதாக இருக்கட்டும். அவர்கள் எவ்வாறு பாண்டவர்களின் அத்தகைய பெரிய சிலைகளை உருவாக்கியிருக்கின்றார்கள் எனப் பாருங்கள். நீங்களும் பாண்டவர்களே. சிவபாபா சங்கமயுகத்தில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அந்த ஸ்ரீ கிருஷ்ணர் சத்தியயுகத்தின் முதலாவது இளவரசராவார். இதனை விளங்கப்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். கற்றுக்கொண்டிருக்கும் போதே சிலர் விட்டுச் சென்றுவிடுகின்றார்கள். பாடசாலையில், ஒருவரால் கற்க முடியாவிடின், அவர் விலகிச் சென்றுவிடுகின்றார். இங்கும் பலர் கற்பதை விட்டுச் சென்றுவிடுகின்றனர். எனவே, அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்லமாட்டார்களா? நானே உலகின் அதிபதி. எனவே, அவர்கள் என்னிடமிருந்து ஓரிரு வார்த்தைகளைக் கேட்டாலும் அவர்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, பலர் செவிமடுப்பார்கள். முன்னைய கல்பத்தில் நிகழ்ந்ததைப் போன்றே முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் இழந்திருக்கின்றீர்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். வைரங்களைப் போன்று இருந்த நீங்கள் இப்பொழுது சிப்பிகளைப் போன்று ஆகிவிட்டீர்கள். பாரதம் வைரத்தைப் போன்றிருந்தது. அதற்கு இப்பொழுது என்ன நிகழ்ந்து விட்டது? இது அதே பாரதமேயாகும், இல்லையா? இச்சங்கமயுகமானது அதி மங்களகரமான யுகம் என அழைக்கப்படுகின்றது. அங்கேயே அனைவரிலும் அதி மேன்மையான மனிதர்கள் இருக்கின்றனர். ஏனையவர்கள் அனைவரும் சீரழிந்தவர்களே. பூஜிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்கள் இப்பொழுது பூஜிப்பவர்களாகிவிட்டனர். அவர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றனர். அச்சரீரங்கள் முடிவடைந்துவிட்டன. ஆத்மாக்கள் தமோபிரதானாகிவிட்டனர். அவர்கள் சதோபிரதானாகும்போது பூஜிக்கப்படுவதில்லை. அவர்கள் உயிருள்ள வடிவில் உள்ளனர். நீங்கள் இப்பொழுது சிவபாபாவை உயிருள்ள வடிவில் நினைவு செய்கின்றீர்கள். பின்னர், நீங்கள் பூஜிப்பவர்களாகும்போது, கல்லை வழிபடுவீர்கள். பாபா இப்பொழுது உயிருள்ள வடிவில் இருக்கின்றார். பின்னர், நீங்கள் அவருக்குக் கல்லாலான உருவத்தைச் செய்து அதனை வழிபடுகின்றீர்கள். இராவண இராச்சியத்திலேயே பக்தி ஆரம்பமாகின்றது. அவர்கள் அதே ஆத்மாக்களேயாயினும், தொடர்ந்து வெவ்வேறு சரீரங்களை எடுக்கின்றனர். நீங்கள் விழும்போதே பக்தி ஆரம்பமாகின்றது. பின்னர், பாபா வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்ததும் பகல் ஆரம்பமாகின்றது. பிராமணர்கள் பின்னர் தேவர்களாகுகின்றனர். உங்களை இப்பொழுது தேவர்கள் என அழைக்க முடியாது. பிரம்மா சத்தியயுகத்தில் இருப்பதில்லை. பிரம்மா இங்கேயே தபஸ்யா செய்கின்றார். அவரும் ஒரு மனிதரேயாவார். சிவபாபா சிவன் என மாத்திரமே அழைக்கப்படுகின்றார். அவர் இவரில் இருக்கும்போதும் சிவன் என்றே அழைக்கப்படுகின்றார். அவருக்கு வேறு பெயர் எதுவும் கொடுக்கப்பட முடியாது. சிவபாபா இவரில் மாத்திரமே பிரவேசிக்கின்றார். அவரே ஞானக்கடல்.. அவர் பிரம்மாவின் சரீரத்தின் மூலமாக உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். எனவே, படங்கள் பெருமளவு புரிந்துணர்வுடன் உருவாக்கப்பட வேண்டும் அவற்றின்மீது எழுத்துக்கள் இருப்பதும் பயனுள்ளதாகும். தூய்மையாக்குபவர் கடல் நீரா அல்லது கங்கை நீரா? அல்லது, ஞானக்கடலும், அவரிலிருந்து தோன்றிய ஞான கங்கைகளாகிய பிரம்மகுமாரர்களும், குமாரிகளுமா? தந்தை அவர்களுக்கு மாத்திரமே ஞானத்தைக் கொடுக்கின்றார். பிரம்மா மூலமாக பிராமணர்கள் ஆகுபவர்கள் பின்னர் தேவர்களாகுவார்கள். நீங்கள் பல்ரூப வடிவத்தின் மிகப் பெரிய படமொன்றையும் காண்பிக்க வேண்டும். இது ஒரு பிரதானமான படமாகும். பாபா விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் புத்தியைக் குற்றமற்றதாக ஆக்கவேண்டும். ஒருவர் குற்றமுடைய கண்ணைக் கொண்டிருப்பதை பாபா பார்க்கும்போது அவரால் (இப்பாதையில்) தொடர முடியாது என்பதை பாபா அறிவார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள் என்பதை அரிதாகவே எவராவது புரிந்து கொள்கின்றார்கள். நீங்கள் மகா முட்டாள்கள், நீங்கள் தந்தையை விவாகரத்துச் செய்கின்றீர்கள். இராச்சியமொன்று ஸ்தாபிக்கப்படுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அனைவரும் அங்கு தேவைப்படுகின்றனர். இறுதியில் நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைப் பெறுவீர்கள். முதல் தரமான பணிப்பெண்களும், வேலைக்காரர்களும் உருவாக்கப்படுவார்கள். முதல் தரமான பணிப்பெண்கள் கிருஷ்ணரைப் பராமரிப்பார்கள். பாத்திரம் கழுவுபவர்கள், அவருக்கு(கிருஷ்ணருக்கு) உணவூட்டுபவர்கள், அனைத்தையும் சுத்தம் செய்பவர்கள் என எல்லாவிதமான பணிப்பெண்களும் இருப்பார்கள். அவர்கள் யாவரும் இங்கிருந்தே வெளிப்படுவார்கள். முதலாம் இலக்கத்தவர் நிச்சயமாக ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெறுவார். நீங்கள் அத்தகைய உணர்வைக் கொண்டிருக்கின்றீர்கள். சில குழந்தைகள் மிக நன்றாக முரளி வகுப்பை நடாத்துகின்றபோதிலும் அவர்களிடம் யோகம் குறைவாகவே இருப்பதை பாபா உணர்கிறார். சில பெண்கள் தங்கள் கணவன்மாரை முந்திச் செல்கின்றார்கள். எவரேனும் ஒருவர் ஞானத்திலிருந்தால் அவர் கூறுவார்: பாபா, மற்றைய சக்கரம் சரியாக இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்யவேண்டும். இது ஓர் இல்லறப் பாதை. தம்பதிகள் ஒருவருக்கொருவர் பொருத்தமானவராக இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்க வேண்டும். இறுதியில் நீங்கள்; உலகத்தையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் அன்னங்கள் என்பதையும் மற்றவர்கள் நாரைகள் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். சிலர் ஒருவிதமான குறையையும், வேறு சிலர் இன்னொரு விதமான குறையையும் கொண்டிருக்கின்றனர். இது ஒரு கயிறிழுத்தல் போட்டியாகும். இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. இது மிகவும் இலகுவானது. நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறுகின்றீர்கள். ஒரு பைசாவேனும் செலவிடாமல் நீங்கள் அனைவரிலும்; அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறமுடியும். ஏழைகள் தொடர்ந்தும் மிக நல்ல சேவை செய்கிறார்கள். வெறுங்கையுடன் வந்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிகளவு கொண்டுவந்தவர்கள் இன்று இங்கில்லை. ஆனால் ஏழைகளோ ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஞான வாளை யோக சக்தியினால் நிரப்புவதற்கு, செயல்களைச் செய்யும்போது அகநோக்குடையவராகி, பயிற்சி செய்யுங்கள்: நான் ஒர் ஆத்மா. ஆத்மாவாகிய நான் சதா தந்தையை மாத்திரமே நினைவுசெய்யுமாறு தந்தையின் கட்டளையைப் பெற்றுள்ளேன். ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். உங்கள் சரீரம், சரீர உறவினர்கள் மீதுள்ள பற்றைத் துண்டித்துவிடுங்கள்.

2. உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது ஒருவரையொருவர் எச்சரிக்கை செய்யுங்கள். ஓர் அன்னமாகி, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரிக்கொள்ளுங்கள். கோபத்தின் எந்தச் சுவட்டையும் அகற்றிவிடுங்கள். உங்கள் புத்தியைக் குற்றமற்றதாக்குங்கள்.

ஆசீர்வாதம்:
மகிழ்வித்தலை அனுபவம் செய்கையில் ஒரு தீவிர முயற்சியாளராகி அனைத்துச் சூழ்நிலைகளையும் கடந்து இரட்டை ஒளி (ஒளியாகவும் இலேசாகவும்) ஆகுவீர்களாக.

சில குழந்தைகள் கூறுவார்கள்: நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஏனையவருடன் அல்லது சுற்றாடலுடன் இந்த சம்ஸ்காரத்தின் பந்தனம் உள்ளது. ஆனால் காரணம் எதுவாயினும் அல்லது எவ்வாறாயினும் அனைத்து சூழ்நிலையையும் எதுவுமே நிகழாதவாறு ஒரு தீவிர முயற்சியாளர் கடந்துவிடுவார். அத்தகைய ஆத்மா சதா மகிழ்ச்சியை அனுபவம் செய்வார். அத்தகைய ஸ்திதி பறக்கும் ஸ்திதி என அழைக்கப்படும். புறக்கும் ஸ்திதியின் அடையாளமானது இரட்டைஒளியாக (ஒளியாகவும் இலேசாகவும்) இருப்பதாகும். அத்தகைய ஆத்;மா எந்தவித சுமையினாலும் குழப்பமடையமாட்டார்.

சுலோகம்:
ஒவ்வொரு நற்குணத்தையும் ஞானத்தின் ஒவ்வொரு விடயத்தையும் உங்கள் ஆதி சம்ஸ்காரம் ஆக்குங்கள்.