11.02.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் உங்கள் பழைய ஆடைகளை நீக்கி வீடு திரும்பிச் செல்லவுள்ளீர்கள் எனும் எல்லையற்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். பின்னர், புதிய உலகில், நீங்கள் புதிய ஆடைகளைப் பெறுவீர்கள்.

கேள்வி:
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய, நாடகத்தின் சூட்சுமமான இரகசியம் என்ன?

பதில்:
இந்நாடகம் தொடர்ந்தும் ஒரு பேனைப் போன்று நகர்கிறது; அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கிறது. என்னென்ன செயல்கள் செய்யப்பட்டனவோ, அவை அவ்வாறே, 5000 வருடங்களுக்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. இந்த இரகசியம் மிகவும் சூட்சுமமானதும், புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் ஆகும். இந்த இரகசியத்தை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளாத குழந்தைகளே, நாடகத்தில் இருந்தால், நாங்கள் முயற்சி செய்வோம் என்று கூறுகிறார்கள். ஆகவே, அவர்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை இனங்கண்டு, இப்பொழுது அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள், அத்துடன் நீங்கள் தூய்மையாகவும் வேண்டும். அவர்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அவர்களுக்குத் தூய்மையற்ற புத்தி இருப்பதால், அவர்கள் கூவியழைக்கிறார்கள். இதுவே தூய்மையற்ற கலியுகத்து-உலகம் என்று ஒருவரின் புத்தியும் கூறுகிறது. புதிய உலகம் சதோபிரதான் எனவும், பழைய உலகம் தமோபிரதான் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைக் கண்டடைந்து விட்டீர்கள். இப்பொழுது பக்தர்களாகிய நீங்கள் கடவுளைக் கண்டடைந்து விட்டீர்கள். பக்தியின் பின்னர் பக்தியின் பலனைக் கொடுப்பதற்குக் கடவுள் வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் முயற்சி செய்வதால், அம்முயற்சிகளின் பலனையும் கேட்கிறார்கள். பக்தர்கள் செய்யும் முயற்சிகள் எவை என்பதை நீங்கள் அறிவீர்கள். இறுதி அரைக் கல்பமாக, பக்திமார்க்கத்தில் தடுமாறித் திரிந்ததால், நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். நீங்கள் பக்தி செய்கையில், மகத்தான முயற்சியைச் செய்தீர்கள். அதுவும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. உங்களுக்கு நன்மை செய்வதற்கே நீங்கள் முயற்சியைச் செய்கிறீர்கள். கடவுள் வந்து, தங்கள் பக்தியின் பலனைத் தங்;களுக்கு அருள்வார் என்று மக்கள் எண்ணுவதால், கடவுளே பலனைக் கொடுப்பவர். பக்தியில் துன்பம் உள்ளதால், பக்தர்;கள் கடவுளை நினைவுசெய்கிறார்கள். ஆகவே, அவர்கள் கூறுகிறார்கள்: வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, எங்களைத் தூய்மையாக்குங்கள். இப்பொழுது இராவண இராச்சியம் உள்ளதை எவரும் அறியார். இராவணனே உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்கினான். இராம இராச்சியம் இருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள், எவ்வாறு அல்லது எப்பொழுது அது நடைபெற வேண்டும் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. இப்பொழுது இராவண இராச்சியமே உள்ளதை ஆத்மாக்கள் உள்ளாரப் புரிந்துகொள்கிறார்கள். அது உண்மையில் பக்திமார்க்கம். பக்தர்கள் பெருமளவில் ஆடி, பாடி, களிப்படைகிறார்கள். அவர்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள், ஆனால் அவர்களும்; அழுகிறார்கள். அவர்கள் கடவுளை அறியாவிட்டாலும், அவருக்காக அன்புக் கண்ணீரைச் சிந்துகிறார்கள். நீங்கள் யாருக்காக அன்புக் கண்ணீர் சிந்துகிறீர்களோ, அவரை நீங்கள் உண்மையிலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஒரு விக்கிரகத்திலிருந்து நீங்கள் எதையும் அடைய முடியாது. ஆம், அவர்கள் தீவிரமாகப் பக்தி செய்யும்பொழுது, ஒரு காட்சியைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு மகத்தான சந்தோஷத்துக்குரிய விடயமாகும். கடவுளே இங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்தி, தான்; யார் என்று உங்களுக்குக் கூறுகிறார். அவர் கூறுகிறார்: உலகிலுள்ள எவருக்கும் என்னை அவ்வாறே, நான் உள்ளவாறே தெரியாது. உங்கள் மத்தியில், என்னை பாபா என்று அழைக்கும் சிலர் உறுதியாகவும், பிறர் பலவீனமாகவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீர உணர்வைத் துண்டிப்பதற்கு முயற்சி தேவை. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆத்மாக்கள்; 84 பிறவிகளை எடுத்ததிலிருந்து நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களே புரிந்துகொள்கிறார்கள். முழு உலகச் சக்கரத்தினதும் ஞானத்தைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை ஞானம்-நிறைந்தவர் ஆதலால், அவர் குழந்தைகளாகிய உங்களுக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளை அனுபவம் செய்கிறீர்களா என்று மக்கள் உங்களை வினவும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: ஆம், ஆனால் எங்களிற் சிலர் 84 பிறவிகளை எடுக்கிறார்கள், ஏனையோர் 82 பிறவிகளை எடுக்கிறார்கள், ஆனால் எவராலும் எடுக்க முடிகின்ற அதிகபட்ச பிறவிகளின் எண்ணிக்கை 84 ஆகும். ஆரம்பத்தில் வருபவர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். மிக நன்றாகக் கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள், விரைவில் வருவார்கள்; அவர்கள் மணிமாலையில் நெருக்கமாகக் கோர்க்கப்படுவார்கள். நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அது விரைவில் கட்டப்பட்டால், விரைவில் நீங்கள் சென்று அங்கு வசிப்பீர்கள் என உங்கள் இதயம் உணர்கிறது. அதேபோன்று, இப்பொழுது உங்கள் பழைய ஆடைகளை நீக்கிப் புதியதொன்றை அணியவுள்ளீர்கள் என்னும் சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். ஒரு நாடகம் முடிவதற்கு அரை மணித்தியாலம் முன்னர், நடிகர்கள் கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பித்து, விரைவில் தாங்;கள் வீட்டுக்குச் செல்வதற்கான நேரம் வரும் என்று எண்ணுகிறார்கள். பின்னர் அந்நேரம் வருகிறது. குழந்தைகளாகிய உங்களுக்காகவே, இந்த எல்லையற்ற கடிகாரம் உள்ளது. உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடையும்பொழுது, நீங்கள் இங்கு இருக்க மாட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கர்மாதீத் ஆகுவதற்கு, நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். இதற்குப் பெரும் முயற்சி தேவை. பின்னர் நீங்கள் புதிய உலகத்துக்குச் செல்கிறீர்கள், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும், உங்கள் (சுவர்க்க) கலைகள் குறைவடைகின்றன. ஒரு புதிய வீட்டில் நீங்கள் ஆறு மாதங்கள் வசித்த பின்னர் எங்காவது அழுக்கின் கறைகள் தென்படும்; ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும். அங்கு, புதிய உலகில், சிலர் ஆரம்பத்திலும், சிலர் சிறிது தாமதித்தும் வருவார்கள். முதலில் வருபவர்கள் சதோபிரதான் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்னர் கலைகள் படிப்படியாகக் குறைவடைகின்றன. இந்நாடகச் சக்கரம் ஒரு பேனைப் போன்று தொடர்ந்து நகர்கிறது; அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கிறது (வiஉமள யறயல). முழு உலகிலுமுள்ள அனைவரும் புரிகின்ற செயல்கள் அனைத்தும் சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதால், மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என நீங்கள் அறிவீர்கள். இவ்விடயங்கள் மிகவும் சூட்சுமமானவையும், புரிந்துகொள்ளப்பட வேண்டியவையும் ஆகும். தந்தை உங்களுக்கு அனுபவத்திலிருந்து கூறுகிறார். 5000 வருட காலத்தில் மீண்டும் இக்கல்வியை நீங்கள் கற்பீர்கள்; என்பது உங்களுக்குத் தெரியும். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. இச்சக்கரத்தைப் பற்றி வேறு எவரும் அறியார். அதனைப் படைப்பவரும், இயக்குனரும், பிரதான நடிகரும் யார் என்று எவருக்கும் தெரியாது. நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்துள்ளீர்கள் எனவும், இப்பொழுது வீட்டுக்குத் திரும்பிச் செல்லவுள்ளீர்கள் எனவும்; குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் ஆத்மாக்கள். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது மாத்திரமே, உங்கள் சந்தோஷக் கலைகள் உயர்வடைகின்றன. ஏனைய நாடகங்கள் எல்லைக்குட்பட்டவையும், இந்நாடகம் எல்லையற்றதும் ஆகும். ஆத்மாக்களாகிய எங்களுக்கு பாபா கற்பிக்கிறார். ஒரு குறிப்பிட்ட வேளையில் என்ன நடைபெறும் என்று அவர் எங்களுக்குக் கூறுவதில்லை. நீங்கள் பாபாவிடம் எதையேனும் வினவும்பொழுதெல்லாம், அவர் கூறுகிறார்: நாடகத்துக்கேற்ப, உங்களுக்குக் கூறப்பட வேண்டியுள்ளதை, நான் உங்களுக்குக் கூறுவேன். நாடகத்துக்கேற்ப நீங்கள் பெற வேண்டிய பதில் உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும். நாடகத்தில் இல்லாத எதையும் தந்தையால் செய்ய முடியாது. நாடகத்தில் இருந்தால், தாங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவோம் என்று சில குழந்தைகள் கூறுகிறார்கள். ஒருபொழுதும் அத்தகைய குழந்தைகளால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். முன்னைய கல்பத்தில் நடைபெற்றதைப் போன்றே, நாடகம் உங்களை முயற்சி செய்யும்படி தூண்டும். நாடகத்துக்கேற்ப, உங்களிற் சிலர் நிறுத்தி விடுகிறீர்கள் (ஓரிடத்தில் பின்தங்கிவிடுகிறீர்கள்); நாடகத்துக்கேற்ப, அனைத்து விடயங்களையும் செய்வீர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆகவே, அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது இதிலிருந்து புரிந்துகொள்ளப்பட்டது. ஆத்மாக்களாக இருக்கின்ற விழிப்புணர்வு இப்பொழுது உங்களிடம் உள்ளது. உங்கள் பாகங்களை நடிப்பதற்கு நீங்கள் இங்கு கீழிறங்கி வந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், அவர்களின் பாகங்களும் அழிவற்றவை. ஆத்மாக்களாகிய உங்களில் 84 பிறவிகளின் பாகங்கள் பதியப்பட்டுள்ளன. அதே பாகங்களையே நீங்கள் மீண்டும் நடிப்பீர்கள். இது இயற்கை என அழைக்கப்படுகிறது. வேறு எவ்வாறு நீங்கள் இயற்கையை விவரிப்பீர்கள்? நீங்கள் தூய்மையாக வேண்டும் என்பதே பிரதான விடயம். இந்த அக்கறை மாத்திரமே உங்களுக்கு உள்ளது. அனைத்தையும் புரிகையில், தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். காதலிகளான நீங்கள் அனைவரும் உங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரை நினைவுசெய்ய வேண்டும். அன்பிற்கினியவர் கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள்! நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவர் என அழைக்கிறீர்கள். ஆகவே, ஏன் நீங்கள் என்னை மறந்து, கங்கையைத் தூய்மையாக்குபவர் என்று அழைக்கிறீர்கள்? இப்பொழுது நீங்கள் அவை அனைத்தையும் புரிந்துகொள்வதாலேயே நீங்கள் அவை அனைத்தையும் துறந்துள்ளீர்கள். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் ஒருபொழுதும் கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவர் என நினைவுசெய்ய மாட்டீர்கள். எவ்வாறாயினும், கடவுள் எவ்வாறு வருகிறார் என எவரும் அறியார். சத்தியயுகத்திலிருந்த கிருஷ்ணரின் ஆத்மா, பின்னர் பல ரூபங்களை ஏற்று, இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை, அவர் சதோபிரதான் ஆகுகிறார். சமயநூல்களில் இத்தவறு இருக்கிறது. இத்தவறு செய்யப்பட்ட பின்னர் மாத்திரமே என்னால் வந்து, அதைத் திருத்த முடியும். இத்தவறுகளும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அவை மீண்டும் நடைபெறும். பேசுபவர் கடவுள் சிவனே என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சிவனைக் கடவுள் என அழைக்கிறார்கள். ஒரேயொரு கடவுள் மாத்திரமே இருக்க முடியும். ஒரேயொரு கடவுளே பக்தர்கள் அனைவருக்கும் பக்தியின் பலனைக் கொடுப்பவர். எவரும் அவரை அறியார். ஆத்மாக்கள் கூவியழைக்கிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! இங்கு உங்கள் லௌகீகத் தந்தையர்கள் உள்ளார்கள், இருந்தும் ஆத்மாக்களாகிய நீங்கள் அத் தந்தையையே நினைவுசெய்வதால், ஆத்மாக்களுக்கு இரு தந்தையர்கள் உள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் தொடர்ந்தும் அந்தத் தந்தையையே நினைவுசெய்தீர்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் உள்ளார்கள். ஆத்மாக்கள் அனைவரும் நடிப்பதற்கென, தங்களின் சொந்தப் பாகங்களைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தைத் துறந்து, இன்னுமொன்றை எடுத்து, தனது சொந்தப் பாகத்தைத் தொடர்ந்தும் நடிக்கிறார்கள். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்கே இங்கு வந்துள்ளோம். இவ்வுலகம் உங்கள் மேடையும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் இம்மேடைக்கான ஒளியூட்டிகளும் ஆகும். ஏனெனில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மிகச்சிறந்த பணியைச் செய்வதால், அவை தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை பிரகாசித்து, அனைவருக்கும் சந்தோஷத்தை மாத்திரமே கொடுக்கின்றன் அவை எவருக்கும் எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவை அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. ஏனெனில் அவை மகத்தான வேலையைச் செய்வதால், தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிறந்த வேலையைச் செய்பவர்கள் தேவர்கள் போன்றவர்கள் என்று கூறப்படுகிறார்கள். உண்மையில், சத்தியயுகத்தில் மாத்திரமே தேவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சந்தோஷத்தை அளிப்பவர்களாக இருந்தார்கள். அனைவரும் அன்பைக் கொண்டிருந்தார்கள்;, ஆகவே, அவர்கள் தேவர்களுடன் ஒப்பிடப்படுகிறாhர்கள். தேவர்களின் புகழ் பாடப்பட்டுள்ளது. மக்கள் அவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று பாடுகிறார்கள்: நாங்கள் நற்குணமின்றி உள்ளோம்; எங்களிடம் நற்குணங்கள்; கிடையாது. உங்களால் மாத்திரமே எங்கள் மீது கருணை கொள்ள முடியும். எங்கள் மீது கருணை கொள்ளுங்கள்! தந்தை கூறுகிறார்: நான் உங்கள் மீது கருணை கொண்டிருப்பதால், உங்களை நற்குணங்கள் மிக்கவர்களாக ஆக்குவதற்கு மீண்டும் வருகிறேன். நீங்கள் பூஜிக்கத் தக்கவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தக்கவர்கள் ஆகவேண்டும். ஹம்சோ, சோஹம் என்பதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் ஒன்றே என்று மக்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அது தவறு. அசரீரியான ஆத்மாக்களாகிய நீங்கள் தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்களாகிப் பின்னர் சூத்திரர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமண குலத்தில் பிரவேசித்துள்ளீர்கள். ஆத்மாக்கள் முதலில் தங்களின் சதோபிரதான் ஸ்திதிக்குள் சென்று, பின்னர் தங்களின் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்தில் பாபா வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாரதம் உண்மையிலேயே சுவர்க்கமாக இருந்தது, அங்கு மிகச்சொற்ப மக்களே இருந்தார்கள். இப்பொழுது கலியுகம் உள்ளது. இப்பொழுது அனைத்துச் சமயங்களும் உள்ளன. சத்தியயுகத்தில் வேறு சமயங்கள் இருக்கவில்லை; அங்கு ஒரேயொரு தர்மம் மாத்;திரம் இருந்தது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்பியிருந்தார்கள். பழைய உலகின் விநாசம் உங்கள் முன்னால் உள்ளது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இது ஓர் எல்லையற்ற கடிகாரம் என்பதை வருகின்ற எவரிடமும் கூறுங்கள். ஒரு தெய்வீகக் காட்சியை அருளியதால், தந்தை இக்கடிகாரத்தின் படத்தை உருவாக்கி வைத்துள்ளார். அக்கடிகாரத்தை அவதானிப்பதால், நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற கடிகாரத்தை நினைவுசெய்ய வேண்டும். பிரம்மாவினூடாக ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படுவதையும், சங்கரரினூடு இப்பழைய அசுர உலகத்து விடயங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதையும் தந்தை தூண்டுகிறார். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல வேண்டும் என்று புத்தியும் கூறுகிறது. கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வரும். பல மனிதர்கள் உள்ளார்கள், பல இயற்கை அனர்த்தங்களும் உள்ளன. அதே குண்டுகளும் உருவாக்கப்படுகின்றன. சமயநூல்களில் உள்ள பல்வேறு கதைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தந்தை வந்து வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். நான்கு பிரதான சமயங்கள் உள்ளன. ஐந்தாவது பிராமண தர்மம். இச்சிறு தர்மமே அனைத்திலும் உயர்ந்தது. பிராமணக் குருக்கள் யாகங்களில் கவனம் செலுத்த வேண்டும். இதுவே ஞான யாகம். ஓர் இயற்கை அனர்த்தத்தை முடிவடையச் செய்வதற்கு மக்கள் ஒரு யாகத்தை உருவாக்குகிறார்கள். அங்கு யுத்தம் எதுவும் இருக்க மாட்டாது என அவர்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அந்த யுத்தம் நடைபெற்றிராது விட்டால், சத்தியயுகம் எவ்வாறு வரும்? இம்மனிதர்கள் அனைவரும் எங்கு செல்வார்கள்? ஆத்மாக்களாகிய எங்கள் அனைவரையும் அவர் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆகவே, இங்கு நாங்கள் நிச்சயமாக எங்கள் சரீரங்களை நீக்க வேண்டும். நீங்கள் கூவி அழைக்கிறீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆக்குங்கள். தந்தை கூறுகிறார்: நான் நிச்சயமாக இப்பழைய உலகை அழித்தாக வேண்டும். புதிய உலகமே சத்தியயுகம். நான் திரும்பவும் அனைவரையும் முக்தி தாமத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அனைவரும் மரணத்தை அழைக்கிறார்கள். அவர்கள் மகாகாலனை அழைக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை. தந்தை கூறுகிறார்: இந்த அழுக்கான உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரையும் அமைதி உலகிற்கு அழைத்துச் செல்வது எனக்காக நாடகத்திலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம். முதலில் நீங்கள் முக்தியடைய வேண்டும், பின்னர் நீங்கள் ஜீவன்முக்தியில் வாழ்கிறீர்கள். பின்னர் பந்தன வாழ்க்கையை வாழ்கிறீர்கள். அனைவரும் சத்தியயுகத்துக்குச் செல்ல மாட்டார்கள். ஏனைய அனைவரும் பின்னரே வரிசைக்கிரமமாக வருவார்கள். இதனாலேயே நீங்கள் இப்பொழுது அமைதி உலகையும், சந்தோஷ உலகையும் நினைவுசெய்ய வேண்டும். பின்னர் வருபவர்களுக்கு நடிப்பதற்குச் சிறிய பாகங்களே உள்ளன. எவ்வாறாயினும், அனைத்துக்கும் முதலில், அவர்களும் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். உங்கள் பாகங்களே அதிமேன்மையானவை. நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். சமய ஸ்தாபகர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கிறார்கள்;; அவர்கள் எவருக்கும் விடுதலை அளிப்பதில்லை. தந்தை பாரதத்தில் வந்து அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார். அவரே அனைவரையும் தூய்மையாக்குபவர். அவர் அனைவரையும் விடுவிக்;கிறார். ஏனைய சமய ஸ்தாபகர்கள் எவருக்கும் சற்கதியை அருள வருவதில்லை; அவர்களின் சொந்த சமயங்களை ஸ்தாபிப்பதற்கு மாத்திரமே அவர்கள் வருகிறார்கள். அவர்கள் எவரையும் அமைதி உலகத்துக்கோ அல்லது சந்தோஷ உலகத்துக்கோ அழைத்துச் செல்வதில்லை. தந்தை மாத்திரம் உங்கள் அனைவரையும் அமைதி உலகத்துக்கும், சந்தோஷ உலகத்துக்கும் அழைத்துச் செல்கிறார். உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்துச் சந்தோஷத்தை அருள்கின்ற, ஒரேயொருவருடன் மாத்திரமே உங்கள் யாத்திரை உள்ளது. உண்மையில், ஒரேயொரு பாபாவுடனேயே உண்மையான யாத்திரை உள்ளதென்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை, ஒரேயொருவரின் புகழ் மாத்திரம் உள்ளது. அவரை அனைவரும் கூவி அழைக்கிறார்கள்: ஓ விடுதலையாக்குபவரே, வாருங்கள்! பாரதம் மாத்திரமே தந்தை வந்து முக்தியையும், ஜீவன்முக்தியையும் அருள்கின்ற, உண்மையான யாத்திரைத் தலம். பின்னர், பக்திமார்க்கத்தில், நீங்கள் அவருக்குப் பெரிய ஆலயங்களைக் கட்டுகிறீர்கள். நீங்கள் வைரங்களாலும் இரத்தினங்களாலுமான ஆலயங்களைக் கட்டுகிறீர்கள். சோமநாதர் ஆலயம் எவ்வளவு அழகாக இருந்தது என்று பாருங்கள், இப்பொழுது பாபா எங்கே அமர்ந்திருக்கிறார் என்று பாருங்கள்: தூய்மையற்ற உலகில் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் ஆகும். பாபாவின் உதவியாளர்கள் ஆகியுள்ள நீங்கள் மாத்திரம் அவரை இனங்காண்கிறீர்கள். ஏனையோருக்குப் பாதையைக் காட்டுவதில் பாபாவுக்கு உதவுபவர்களே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். இதுவே நியதி. தந்தை கூறுகிறார்: முயற்சி செய்யுங்கள்! தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யும்படி கூறுவதால், ஏனைய பலருக்கும் பாதையைக் காட்டுங்கள். உங்களின் முன்னிலையில் 84 பிறவிகளின் சக்கரம் உள்ளது. இது குருடர்களுக்கான கண்ணாடி போன்றது. இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அதேபோன்று நடைபெறுகிறது. எவ்வாறாயினும், அவர்கள் என்னை அறிந்துகொள்ள மாட்டார்கள். எனது ஆலயங்களைக் கொள்ளை அடிப்பதிலிருந்து அவர்களை என்னால் நிறுத்த முடியும் என்பதல்ல. அவை கொள்ளை அடிக்கப்படுவது நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவை மீண்டும் கொள்ளையிடப்படும். நான் என்ன செய்ய முடியும்? தூய்மையற்றதைத் தூய்மையாக்கும்படியே நீங்கள் என்னைக் கூவியழைக்கிறீர்கள். ஆகவே, நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். விநாசம் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளதால், அது மீண்டும் நடைபெறும். நான் ஊதி விநாசத்தை மேற்கொள்வதில்லை. குண்டுகள் போன்றவற்றின் உற்பத்தியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நானும் நாடகத்தினால் கட்டுப்பட்டுள்ளேன். உலகை மாற்றுவதும், தூய்மையற்றதைத் தூய்மையாக்குவதுமான எனது பாகமே அனைத்திலும் மகத்துவமான பாகம். இப்பொழுது யார் அதிக சக்திவாய்ந்தவர்கள்? நானா அல்லது நாடகமா? நாடகத்துக்கேற்ப, இராவணனும் வர வேண்டும். நான் வந்து என்னிடமுள்ள ஞானம் அனைத்தையும் உங்கள் அனைவருக்கும்; கொடுக்கிறேன். நீங்கள் சிவபாபாவின் சேனையினர். நீங்கள் இராவணனை வெற்றிகொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் நிலையங்களைத் திறவுங்கள். நான் உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளேன். நான் உங்களிடமிருந்து எதையும் பெறுவதில்லை. உங்களிடமுள்ள பணம் அனைத்தையும் ஒரு தகுதிவாய்ந்த முறையில் இங்கு நீங்கள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் அவை அனைத்தையும் பயன்படுத்திய பின்னர் பசியுடன் இருக்க வேண்டும் என்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் எவரும் பசியோடு இருக்க மாட்டீர்கள். பாபா உங்களுக்கு அனைத்தையும் கொடுத்தார், ஆகவே உங்களில் எவராவது பசியுடன் இருப்பார்களா? நீங்கள் பட்டினி இருக்கிறீர்களா? சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியம் உள்ளது. இந்நேரத்தில் எத்தனை பேர் பட்டினியில் மரணிக்கிறார்கள் என்று பாருங்கள். தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு, இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது ஓர் ஆன்மீக இயற்கை-வைத்தியம். இது மிகவும் இலகுவானதொரு விடயம். இவ்வாயினூடாக, அவர்; மன்மனபவ என்று கூறுகிறார். ஆத்மாக்களே குணமாக்கப்பட வேண்டும். இதனாலேயே தந்தை அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர் என அழைக்கப்படுகிறார். அவர் ஒரு மிகச்சிறந்த சத்திரசிகிச்சையைச் செய்கிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, நீங்கள் பூகோளத்தை ஆள்பவர்கள் ஆகுவீர்கள். இம்முட்காட்டில் வசிக்கும்பொழுது, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச்சென்ற பின்னர், பூந்தோட்டத்துக்குச் செல்லவுள்ளீர்கள் என்பதை நினைவுசெய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் தொடர்ந்தும் நினைவூட்டுங்கள்: அல்லாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் இராச்சியத்தை நீங்கள் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, தந்தையின் முழுமையான உதவியாளர்கள் ஆகுங்கள். குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். எப்பொழுதும் எல்லையற்ற கடிகாரத்தை நினைவுசெய்யுங்கள்.

2. இந்த யாகத்தைப் பராமரிப்பதற்கு, நீங்கள் உண்மையான பிராமணர்களாக வேண்டும். ஒரு தகுதிவாய்ந்த வழியில் உங்கள் பணத்தைப் பயன்படுத்தி, தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சுய முன்னேற்றத்தினூடாகச் சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்ற, ஓர் உண்மையான சேவகர் ஆவீர்களாக.

சுய முன்னேற்றமே சேவைக்கான முன்னேற்றத்திற்கான அடிப்படை. சிறிதளவு முன்னேற்றம் இருந்தால், அப்பொழுது சிறிதளவு சேவையே இருக்கும். சேவை என்பது வார்த்தைகளின் மூலம் எவருக்கேனும் செய்தியைக் கொடுப்பது மாத்திரமல்ல, ஆனால் உங்கள் ஒவ்வொரு செயலினூடாகவும் எவருக்Nனும் மேன்மையான செயல்களைச் செய்வதற்கான தூண்டுதலைக் கொடுப்பதும் சேவையே ஆகும். தங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினூடாகச் சேவையில் சதா ஈடுபட்டுள்ளவர்கள் சேவை செய்வதால் மேன்;மையான பாக்கியத்தை அனுபவம் செய்கின்றார்கள். நீங்கள் சேவை செய்யும் அளவிற்கேற்ப, நீங்களே முன்னேறுகிறீர்கள். தங்கள் மேன்மையான செயல்களின் மூலம் சேவை செய்பவர்கள் எப்பொழுதும் தொடர்ந்தும் அவற்றிற்கான பலனைப் பெறுகின்றார்கள்.

சுலோகம்:
நெருக்கமாக வருவதற்கு, நீங்கள் சிந்திப்பதையும், பேசுவதையும், செய்வதையும் சமமாக ஆக்குங்கள்.