11.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உயிரின் பிரபுவாகிய தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு வாழ்க்கை என்ற தானத்தை அருள வந்துள்ளார். தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதே வாழ்க்கை என்ற தானத்தைப் பெறுதல் என்பதன் அர்த்தமாகும்.

கேள்வி:
நீங்கள் நாடகத்தின் ஒவ்வொரு இரகசியத்தையும் அறிந்திருப்பதால், நாடகத்தின் எந்தக் காட்சி உங்களுக்குப் புதியது அல்ல?

பதில்:
இந்நேரத்தில், உலகம் முழுவதிலும் குழப்பம் நிலவுவதும், விநாச காலத்தில் அன்பற்ற புத்தியை உடையவர்கள் தங்கள் குலத்தை அழிப்பதற்காகப் பொருட்களைத் தயாரிப்பதும் உங்களுக்குப் புதிய விடயமல்ல. இந்த உலகம் மாற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மகாபாரத யுத்தத்தின் பின்னரே எங்கள் புதிய உலகம் வரும்.

பாடல்:
அதிகாலை நேரத்தில் இங்கே வந்தவர் யார்?........

ஓம் சாந்தி.
அதிகாலையில் வந்து, புல்லாங்குழல் வாசிப்பவர்; யார்;? உலகம் முழு இருளில் உள்ளது. நீங்கள் இப்பொழுது வாழ்க்கையின் பிரபுவும், தூய்மையாக்குபவரான தந்தையான ஞானக்கடலின் புல்லாங்குழல் இசையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரே உயிர்காக்கும் கடவுள். 'ஓ கடவுளே, என்னை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!" என மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட உதவியைக் கேட்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற உதவியைப் பெறுகிறீர்கள். ஏனெனில் அவரே எல்லையற்ற தந்தை. ஆத்மாக்கள் மறைமுகமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தைகளின் சரீரங்களே கண்ணுக்குத் தெரிகின்றன. தந்தை கொடுக்கும் ஸ்ரீமத் குழந்தைகளுக்கானதாகும். சகல சமயநூல்களினதும் இரத்தினமாக விளங்கும் கீதை மிகவும் பிரபல்யமானது. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை அதில் இட்டுவிட்டனர். கடவுளின் வாசகங்களே ஸ்ரீமத் என்பதை நீங்கள் இப்பொழுது அறிகிறீர்கள். சீரழிந்தவர்களை மேன்மையானவர்கள் ஆக்க ஒரு தந்தையால் மாத்திரமே முடியும் என்பதையும் நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அவர் சாதாரண மனிதர்களை நாராயணனாக மாற்றுகிறார். சத்திய நாராயணனின் கதையும் உள்ளது. அமரத்துவ கதை நினைவு கூரப்படுகிறது. உங்களை அமரத்துவ பூமிக்கு அதிபதிகள் ஆக்குவதும், உங்களைச் சாதாரண மனிதனில் இருந்து நாராயணன் ஆக்குவதும் ஒரே விடயமாகும். இது மரண பூமியாகும். பாரதம் அமரத்துவ பூமியாக இருந்தது என்பது எவருக்குமே தெரியாது. இங்கேயே அமரத்துவ பாபா பார்வதிகளுக்கு ஞானத்தை உபதேசித்தார். ஒரேயொரு பார்வதியும், ஒரேயொரு திரௌபதியும் மாத்திரமே உள்ளார்கள் என்றில்லை. பல குழந்தைகள் இதனைச் செவிமடுக்கிறார்கள். சிவபாபா அனைத்தையும் பிரம்மா மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறார். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு நான் பிரம்மாவின் மூலமாக விளங்கப்படுத்துகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாகவே ஆன்மீக உணர்வு உடையவர்களாக வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தையால் மாத்திரமே உங்களை இவ்வாறு ஆக்க முடியும். உலகிலுள்ள மனிதர் எவருக்குமே ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லை. அவர்கள் ஆத்மாவைப் பற்றிய ஞானம் இல்லாதவர்களாக இருப்பதால், எவ்வாறு அவர்கள் பரமாத்மாவைப் பற்றிய ஞானம் எதனையும் கொண்டிருக்க முடியும்? அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மாவாகிய நானே பரமாத்மா. முழு உலகமும் அத்தகைய பெரியதொரு தவறில் அகப்பட்டுள்ளது! அவர்கள் முற்றிலும் கல்லுப் புத்தியை உடையவர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டினரும் கல்லுப் புத்தியையே கொண்டிருக்கிறார்கள். தங்களையும் அழித்து, உலகத்தையும் அழிப்பதற்காகவே தாங்கள் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களது புத்தியில் புகுவதில்லை. இந்நேரத்தில் அவர்களது புத்தியினால் பயனேதும் இல்லை. அவர்கள் தங்களது சொந்த அழிவிற்காகவே இந்த ஆயத்தங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு புதிய விடயம் அல்ல. நாடகத்திற்கு ஏற்ப இதுவே அவர்களது பாகம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள்! அவர்கள் நாடகம் என்னும் பந்தனத்தில் கட்டுண்டு இருக்கிறார்கள். கல்லுப் புத்தி இல்லாவிட்டால் அவர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்வார்களா? அவர்கள் தமது குலம் முழுவதையும் அழிக்கிறார்கள் என்பது அதிசயமே. இது அற்புதமே! அவர்கள் என்ன செய்கின்றார்கள்? எல்லோரும் கூடி அமர்ந்திருக்கும் போது எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் நாளைய தினம்; இராணுவம் குழப்பம் அடைந்தால், ஜனாதிபதியையுமே கொல்வார்கள். அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெறுகின்றன. அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் எவரையும் சகித்துக் கொள்வதில்லை. இன்றைய உலகில் எவ்வளவோ கொந்தளிப்புக்கள் உள்ளன. கல்லுப்புத்தி உடைய பலர் உள்ளனர். விநாச காலத்தில், தந்தை மீது அன்பற்ற புத்தியைக் கொண்டுள்ள பலர் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அழிவை நோக்கி இட்டுச் செல்லப்படுவார்கள். இப்பொழுது இவ்வுலகம் மாற வேண்டும். மகா பாரத யுத்தம் இடம் பெற்றது என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தார். சமய நூல்களில் அவர்கள் முற்று முழுதாக விநாசம் அடைந்ததாகக் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும், முற்று முழுதான விநாசம் ஏற்படுவதில்லை. அவ்வாறாயின் பிரளயம் (முற்று முழுதாக அழிதல்) ஏற்படும். மனிதர்கள் எவரும் இன்றி, பஞ்ச தத்துவங்கள் மாத்திரமே நிலைத்திருப்பது சாத்தியமில்லை. பிரளயம் ஏற்பட்டால், மனிதர்கள் எங்கிருந்து வருவார்கள்? அவர்கள் கிருஷ்;ணர் தனது பெருவிரலை வாயில் வைத்தவாறு ஓர் அரசமிலையில் சமுத்திரத்தில் மிதந்து வந்ததாகக் காட்டுகின்றார்கள். ஒரு கைக்குழந்தையால் அவ்வாறு வரமுடியுமா? அவர்கள் சமயநூல்களில் அத்தகைய கதைகளை எழுதி உள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! 'பீஷ்மர்" போன்ற கல்விமான்களும், குமாரிகளாகிய உங்களது ஞான அம்பினால் வீழ்த்தப்படுகிறார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது அவர்களும் வருவார்கள். நீங்கள் சேவையில் எவ்வளவிற்குத் சக்திவாய்ந்தவர்கள் ஆகி எவ்வளவிற்குத் தந்தையின் அறிமுகத்தைத் தொடர்ந்தும் அனைவருக்கும் கொடுக்கிறீர்களோ, அவ்வளவிற்கு நீங்கள் மற்றவர்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். ஆம், தடைகளும் இருக்கவே செய்யும். அசுர சமுதாயத்தால் இந்த யாகத்திற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்டதாக நினைவு கூரப்படுகிறது. கல்லுப் புத்தி உடைய அப்பாவி மக்கள் இதனைப் பற்றி எதையுமே விளங்கிக் கொள்வதில்லை. உங்கள் ஞானம் தனித்துவம் வாய்ந்தது என அவர்கள் கூறுகிறார்கள். இவை புதிய உலகத்திற்கான புதிய விடயங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: வேறு எவராலும் இந்த இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். தந்தை மாத்திரமே ஜீவன் முக்தியை அருள்பவர். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆதலால் நிச்சயமாக அவர் தூய்மையற்றவர்;களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பார். நீங்கள் தெய்வீகப் புத்தியை உடையவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும், பின்னர் தெய்வீக பிரபுக்கள் ஆகுகின்றீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மனிதர்கள் எத்தனையோ ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும் தாங்கள் (தேவர்கள்) யார் என்பதையோ, தாங்கள் எப்பணியைச் செய்தார்கள் என்பதையோ, மக்கள் புரிந்து கொள்வதில்லை. தெய்வீகப் பிரபுவிற்கும் ஓர் ஆலயம் உள்ளது. ஆயினும், பாரதம் தெய்வீக பூமியாக இருந்தது என்பது எவருக்குமே தெரியாது. வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட தங்க மாளிகைகள் அங்கே இருந்தன. இது நேற்றைய விடயமே. சத்திய யுகத்தின் கால எல்லை நூற்றாயிரக் கணக்கான வருடங்கள் என, அந்த மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தந்தையோ முழு நாடகமுமே 5000 வருடங்கள் மாத்திரமே எனக் கூறுகிறார். இதனாலேயே, 'இன்றைய பாரதம் எப்படி உள்ளது, நேற்றைய பாரதம் எப்படி இருந்தது!" எனக் கூறப்படுகிறது. நூறாயிரம்; வருடங்களுக்கான எதனைப் பற்றியும் எவருமே ஞாபகத்தில் வைத்திருக்க முடியாதிருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். பாபா, ஐயாயிரம் வருடங்களிற்கு ஒருமுறை வந்து அனைத்தையும் நினைவூட்டுகிறார் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தீர்கள். இது 5000 வருடங்களுக்குரிய விடயம். இலக்~;மி, நாராயணனுடைய இராச்சியம் எப்பொழுது இருந்தது எனவும், அவர்கள் எத்தனை வருடங்களிற்கு முன்னர் வாழ்ந்தனர் எனவும் நீங்கள் எவரிடமாவது வினவ முடியும். அது நூற்றாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்தது என அவர்கள் பதிலளிப்பார்கள். இது ஐயாயிரம் வருடங்களுக்குரிய ஒரு விடயம் என நீங்கள் விளங்கப்படுத்தலாம். 'கிறிஸ்துவிற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் வைகுண்டம் இருந்தது" என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை பாரதத்தில் மட்டுமே வருகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இது கூறப்படுகிறது. மக்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதால், நிச்சயமாக அவர் வந்து எதனையாவது செய்திருக்க வேண்டும். அவரே தூய்மையாக்குபவர். ஆதலால் அவர் நிச்சயமாகவே அனைவரையும் தூய்மையாக்குவதற்காக வந்திருக்க வேண்டும். அவரே ஞானக்கடல். ஆதலால் அவர் நிச்சயமாக ஞானத்தைக் கொடுப்பார், இல்லையா? நீங்கள் யோகத்தில் அமரும் பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இது ஞானம். இல்லையா? அம்மக்கள் சப்பணமிட்டு, அமர்ந்து ஹத்தயோகம் செய்கிறார்கள். அவர்கள் செய்கின்ற பல்வேறு விதமான விடயங்கள் அனைத்தையும் பாருங்கள்! தாய்மார்களான உங்களால் அதனைச் செய்ய முடியாது! உங்களால் அவர்கள் அமருவதைப் போல அமரவேனும் முடியாது! தந்தை கூறுகிறார்: இனிமையான குழந்தைகளே, நீங்கள் அவை எதையும் செய்யத் தேவையில்லை. மாணவர்கள் பாடசாலையில் கட்டுப்பாட்டுடன் அமர்கிறார்கள். தந்தை உங்களுக்கு அதையேனும் செய்யும்படி கூறுவதில்லை. நீங்கள் உங்கள் விருப்பப்படி அமரலாம். அமர்ந்திருக்கும் பொழுது களைப்புற்றால், படுங்கள். பாபா உங்களுக்கு எதைச் செய்வதற்கும் தடை விதிப்;பதில்லை. இவ்விடயங்கள் புரிந்து கொள்வதற்கு மிக இலகுவான விடயங்கள் ஆகும். இதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் எவ்வளவு சுகவீனமுற்று இருந்தாலும் கூட, சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இதனைச் செவிமடுத்துக் கொண்டு சிவபாபாவின் நினைவில் இருக்கும் பொழுது, உங்கள் சரீரத்தைத் துறக்கக்கூடும். இது உங்களுக்குத் தெரியாமலேயே இருக்கும். 'நீங்கள் சரீரத்தை விடும் பொழுது, வாயில் கங்கை நீரைக் கொண்டிருப்பதுடன், கங்கை நதிக்கரையிலேயே துறக்க வேண்டும்" என நினைவு கூரப்படுகிறது. அவை அனைத்தும் பக்தி மார்க்க விடயங்கள். உண்மையில் இது ஞான அமிர்தத்தையே குறிக்கிறது. உண்மையிலேயே நீங்கள் அவ்விதமாகவே உங்கள் சரீரத்தைத் துறப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பரந்தாமத்தில் இருந்து வந்தீர்கள். நீங்கள் என்னை விட்டுச் சென்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களை என்னுடன் திருப்பி அழைத்துச் செல்வேன். குழந்தைகளாகிய உங்களை வீட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வதற்காகவே நான் வந்துள்ளேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பற்றியோ, அல்லது நீங்கள் ஓர் ஆத்மா என்பதைப் பற்றியோ அறியாதவராக இருக்கிறீர்கள். மாயை உங்கள் இறக்கைகளை முற்றாக வெட்டி எறிந்து விட்டாள். ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டதால் உங்களால் பறக்க முடியாது. நீங்கள் சதோபிரதான் ஆகும் வரை எவ்வாறு உங்களால் சாந்தி தாமத்திற்குச் செல்ல முடியும்? நாடகத் திட்டப்படி அனைவரும் தமோபிரதான் ஆகவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் முழு விருட்சமுமே தமோபிரதான் ஆகி, முற்றிலும் உக்கிய நிலையை அடைந்து விட்டது. குழந்தைகளாகிய உங்களுக்கு ஆத்மாக்கள் அனைவரும் தமோபிரதானாக உள்ளனர் என்பது தெரியும். புதிய உலகத்தில் அனைவருமே சதோபிரதானாக உள்ளனர். இங்குள்ள எவருமே சதோபிரதான் ஸ்திதியைக் கொண்டிருக்க முடியாது. ஓர் ஆத்மா தூய்மையாகிய பின்னர் அவரால் இங்கு மேலும் இருக்க முடியாது. அவர் ஓடிச் சென்றுவிடுவார். முக்தி அடைந்து, சாந்தி தாமத்திற்குச் செல்வதற்காகவே, அனைவரும் பக்தி செய்கிறார்கள். எவ்வாறாயினும், இப்பொழுது எவரும் திரும்பிச் செல்வது நியதியாக இல்லை. தந்தை இங்கே அமர்ந்திருந்து, இந்த இரகசியங்கள் அனைத்தையும், நீங்கள் கிரகிப்பதற்காக விளங்கப்படுத்துகிறார். எவ்வாறாயினும், தந்தையை நினைவு செய்து ஒரு சுயதரிசன சக்கரதாரி ஆகுவதே பிரதான விடயமாகும். நீங்கள் விதையை நினைக்கும் பொழுது, முழு விருட்சமுமே உங்கள் புத்தியில் புகுகின்றது. விருட்சம் சிறியதாகவே ஆரம்பிக்கிறது. பின்னர் அது தொடர்ந்து வளர்ந்து பெரிதாகுகிறது. எண்ணற்ற சமயங்கள் உள்ளன. நீங்கள் அனைத்தையும் ஒரு விநாடியில் புரிந்து கொள்கிறீர்கள். உலகிலுள்ள எவருக்குமே மனித உலக விருட்சத்தின் விதை ஒரு தந்தையே என்பது தெரியாது. தந்தை ஒருபோதுமே சர்;வவியாபியாக இருக்க முடியாது. இதுவே மிகப் பெரிய தவறு. ஒருபோதும் மனிதர் எவருமே கடவுள் என அழைக்கப்பட முடியாது என நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். தந்தை அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். அப்படி இருந்தும், தங்கள் பாக்கியத்தில் அதனைக் கொண்டிருப்பவர்களும், இந்த உறுதியான நம்பிக்கையை வைத்திருப்பவர்களுமே நிச்சயமாக தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், அவர்கள் ஒருபோதுமே எதையும் விளங்கிக் கொள்வதில்லை. அது அவர்களுடைய பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்கள் என்ன முயற்சியைச் செய்வார்கள்? அது அவர்களது பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களைப் போல இருப்பார்கள். தந்தை எல்லையற்ற ஆஸ்தியைத் தங்களுக்குத் தருவதற்காக வந்துள்ளார் என்ற நம்பிக்கையையேனும் அவர்கள் கொண்டிருப்பதில்லை. மருத்துவக் கல்லூரிக்கு ஒரு புதிய மாணவர் சென்று உட்கார்ந்தால், எதனைப் புரிந்து கொள்வார்? எதையுமே புரிந்து கொள்ள மாட்டார்! அவ்வாறே அவர்களும் இங்கே வந்து, அமர்ந்திருக்கிறார்கள். இந்த அழிவற்ற ஞானம் ஒருபோதுமே அழிவதில்லை. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஆதலால் வேலைக்காரர்கள், பணிப்பெண்கள், பிரஜைகளின் வேலைக்காரர்கள் ஆகிய அனைவருமே தேவைப்படுகிறார்கள். ஆதலால் அவர்கள் அவ்விதமாக வந்து அமர்கிறார்கள். சிலரால் அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களையும் எழுதுகிறார்கள். அவர்கள் மேலும் முன்னேற முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், அந்நேரத்தில் அது சிரமமாக இருக்கும். ஏனெனில், அந்நேரத்தில் பெரும் குழப்பங்கள் நிகழும். நாளுக்கு நாள், புயல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. எத்தனையோ நிலையங்கள் உள்ளன. அவர்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்மாவின் மூலமாக ஸ்தாபனை நிகழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. விநாசமும் சற்று முன்பாகவே உள்ளது. விநாசம் நிகழ்ந்தே ஆகவேண்டும். அரசாங்கம் சனத்தொகையை குறைக்கும்படி கேட்கிறது. ஆனால் அதை இட்டு எவராலேனும் என்ன செய்ய முடியும்? விருட்சம் தொடர்;ந்து வளர வேண்டும். தந்தை இங்கே இருக்கும் வரை, எல்லாச் சமயங்களைச் சேர்ந்த ஆத்மாக்களும் இங்கு இருக்கவே வேண்டும். வீடு திரும்பும் நேரம் வரும் பொழுது, ஆத்மாக்கள் இங்கு வருவது நின்றுவிடும். இப்பொழுது அனைவரும் இங்கே வரவேண்டும். எவ்வாறாயினும், இவ்விடயங்களை எவருமே புரிந்து கொள்வதில்லை. இது இப்பொழுது இராவண இராச்சியம் எனவும், தான் இராம இராச்சியத்தை விரும்புவதாகவும், பாபுஜி கூறுவது வழக்கம். 'இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார்" என அவர்கள் கூறுகிறார்கள். இதன் அர்த்தம் இது நரகம் என்பதே ஆகும். அவர் சுவர்க்கவாசி ஆகியது நல்லது. ஏனெனில் அவர் நிச்சயமாகவே ஒரு நரகவாசியாகவே இருந்தார் என்பதைக் கூட மக்கள் புரிந்துகொள்வதில்லை. பாபா கூறுகிறார்: மனிதர்கள் மனித முகத்தையும், குரங்கின் குணத்தையும் கொண்டுள்ளார்கள். 'தூய்மையாக்குபவரான சீதாவின் இராமரே" என அவர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள். நாங்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். தந்தை மாத்திரமே அனைவரையும் தூய்மையாக்குகிறார். அனைவரும் பக்தி மார்க்கச் சீதைகளாக இருக்கின்றனர். தந்தையே இராமர் ஆவார். நீங்கள் இதனை மக்களுக்கு நேரடியாகக் கூறும்பொழுது, அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இராமரைக் கூவி அழைக்கிறார்கள். தந்தை உங்களுக்கு மூன்றாவது கண்ணாகிய ஞானத்தை இப்பொழுது கொடுத்துள்ளார். நீங்கள் இப்பொழுது வேறு உலகத்தைச் சார்ந்தவர் போலத் தோன்றுகிறது. அவர்கள் பழைய உலகில் எதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்? நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விவேகமற்றவர்களில் இருந்து விவேகமானவர்கள் ஆகிவிட்டீர்கள். இராவணனே உங்களை மிகவும் விவேகமற்றவர்கள் ஆக்கினான்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். இதனாலேயே தந்தை வந்து, அனைவரையும் சதோபிரதான் ஆக்குகிறார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் சேவையை முன்னெடுத்துச் செல்கின்ற போதிலும், 'தந்தையை நினையுங்கள்" எனும் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்திருங்கள். தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும் வழியை வேறு எவராலும் உங்களுக்குக் காண்பிக்க முடியாது. அனைவரினதும் ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரே! ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகிவிட்டதாலேயே அவர்; வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஊசி போடுகிறார். தந்தையே அநாதியான சத்திரசிகிச்சையாளன் எனப்படுகிறார். ஆத்மாக்கள் இப்பொழுது சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆகிவிட்டதால், அவர்களுக்கு ஓர் ஊசி தேவைப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே. நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை வைத்திருந்து, உங்கள் தந்தையை நினையுங்கள். உங்களது புத்தியின் யோகத்தை மேலே இணையுங்கள். வாழும்வரை, தூக்கு மேடையில் ஊசலாடுங்கள்! உங்களது புத்தியின் யோகம் இனிய வீட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். நாங்கள் எங்கள் இனிய மௌன வீட்டிற்கு செல்ல வேண்டும். அசரீரியான உலகமே இனிய வீடு எனப்படுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பழைய உலகம் ஏற்கனவே அழிந்து விட்டது. ஆதலால் உங்களை அதிலிருந்து வேறுபட்டவராகக் கருதுங்கள். விருட்சம் வளருகின்ற போது ஏற்படும் தடைகளையும் புயல்களையும் கண்டு அஞ்சாதீர்கள். அவற்றை வெற்றி கொள்ளுங்கள்.

2. ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குவதற்கு உங்களுக்கு ஞானமும், யோகமும் ஆகிய ஊசியை ஏற்றுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை இனிய வீட்டுடன் இணையுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் பாக்கியத்தினதும், பாக்கியத்தை அருள்பவரினதும் விழிப்புணர்வின் மூலம் மாஸ்டர் படைப்பவராகவிருந்து சகல பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்களாக.

உங்கள் சூட்சுமமான மனதின் ஓசையை சதா தொடர்ந்தும் கேளுங்கள்: ஆஹா என் பாக்கியமே, ஆஹா பாக்கியத்தை அருள்பவரே தொடர்ந்தும் சந்தோஷத்தில் நடனமாடுங்கள். நீங்கள் எதனை எல்லாம் அறிய விரும்பினீர்களோ, எதனை எல்லாம் அடைய விரும்பினீர்களோ அவற்றை அடைந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். இந்த அனுபவத்தை பேணுங்கள். அப்பொழுது நீங்கள் சகல பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுகிறீர்கள். இது பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஆத்மாக்களைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரமாகும். ஆகையால், மாஸ்டர் சர்வசக்திவானாகவும், மாஸ்டர் படைப்பவராகவும் இருக்கின்ற விழிப்புணர்வில் நிலைத்திருங்கள். அற்ப, குழந்தைத்தனமான விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

சுலோகம்:
தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஒருவரால் மட்டுமே மாயையின் எந்தக் கவர்ச்சியிலிருந்து அப்பாலும், தந்தையின் அன்பினால் அன்பாகவும், மேன்மையான கர்மயோகியாகவும் இருக்க முடியும்.