11.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள், பரமதந்தையின் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் நீங்கள் எதிர்காலத்தின் புதிய உலகத்திற்கான உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்ற மறைமுகமான சந்தோஷததை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி:
நீங்கள் எந்த விழிப்புணர்வை சதா கொண்டிருந்தால், உங்களால் தெய்வீகக் குணங்களை கிரகிக்க முடியும்?

பதில்:
ஆத்மாக்களாகிய நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள். எங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுவதற்காகத் தந்தை வந்துள்ளார். இந்த விழிப்புணர்வைச் சதா நீங்கள் கொண்டிருந்தால் உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியும். கற்பதிலும், யோகத்திலும் முழுக் கவனம் செலுத்துங்கள். விகாரங்களில் ஆர்வமின்மையைக் கொண்டிருக்கும் போது, உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியும். ஒரு விகாரம் உங்களைத் தாக்கும்போது, நீங்கள் ஒரு முள்ளாக உள்ளீர்களென்பதையும், நீங்கள் ஒரு மலராக வேண்டுமென்பதையும் நினைவு செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியிலுள்ளது. நீங்கள் இப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பாடசாலையில் சாதாரணமாக அமர்ந்திருப்பதைப் போன்று, இங்கு முட்டாள்களைப் போன்று நீங்கள் அமர்ந்திருக்கக் கூடாது. இங்கு பல குழந்தைகள் முட்டாள்கள் போன்று அமர்ந்திருக்கின்றார்கள். இது அதி மேலான பரமாத்மாவான பரமதந்தையின் பல்கலைக் கழகமென்பதையும், நாங்கள் அவரின் மாணவர்கள் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் அதிகளவு ஆன்மீக போதையைக் கொண்டிருக்க வேண்டும். இது மறைமுகமான சந்தோஷமும், மறைமுகமான ஞானமும் ஆகும். அனைத்து விடயங்களும் மறைமுகமானவையாகும். உங்களிற் பலர், இங்கு அமர்ந்திருக்கும் போதும், வெளிப்புறத்துக்கான தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலப் புதிய உலகிற்கான, உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காக நீங்கள் இங்கு கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் அதிகளவு சந்தோஷத்தையும், தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். பிராமணர்கள் மாத்திரமே, இங்கு வருகின்றார்கள். நீங்கள் தீயவையான அனைத்துக் குப்பைகளையும் வெளியே விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். இந் நேரத்தில் முழு உலகமும் குப்பைக்குள் அமர்ந்துள்ளது. கலியுக குப்பைக்கும், சத்திய யுக பூந்தோட்டத்திற்குமிடையே வேறுபாடு உள்ளது. கலியுகத்திலுள்ளவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் துன்புறுத்துவார்கள். நீங்கள் இப்போது மலர்களாக வேண்டும். ஆகவே நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் மலர்களாகிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு பூந்தோட்டமாகும். தந்தை பூந்தோட்டத்தின் அதிபதி என்று அழைக்கப்படுகிறார். பூந்தோட்டத்தின் அதிபதி வந்து எங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் எவ் வகையான மலர்களாகப் போகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இங்கும், ஒரு பூந்தோட்டம் உள்ளது. முரளியைச் செவிமடுத்த பின்னர், பூந்தோட்டத்திற்குச் சென்று, மலர்களோடு உங்களை ஒப்பிட்டு, நீங்கள் எவ் வகையான மலராக உள்ளீர்கள் என்ற அல்லது இன்னமும் நீங்கள் முட்களாகவே இருக்கின்றீPர்களாவென உங்களையே கேட்டுப் பாருங்கள். நீங்கள் கோபமடையும் போது, நீங்கள் ஒரு முள்ளென்பதையும், அந்தத் தீய ஆவி இன்னமும் உங்களுக்குள் உள்ளதென்பதையும் நீங்கள் உணர வேண்டும். நீங்கள் அந்தளவுக்கு விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். கோபம் பலரது முன்னிலையில் தன்னைக் காட்டிக் கொடுக்கின்றது, ஆனால், அனைவரது முன்னிலையில் ஒருவரால் விகாரத்தில் ஈடுபட முடியாது. ஏனெனில் இரகசியமாகவே அதில் ஈடுபடுகின்றார்கள். கோபம் வெளியே தோன்றும். ஒருவர் கோபமடைந்தால், அதன் தாக்கம் சில நாட்களுக்கு நீடிக்கும். கோபத்தின் ஆதிக்கமும், பேராசையின் ஆதிக்கமும் உள்ளன. நீங்கள் சுயத்தில் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். பாபா உங்களை மலர்கள் ஆக்குகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். காமமும், கோபமும் மிகவும் தீயவையாகும். அவை மனிதரின் முழு அழகையும் கெடுத்து விடுகின்றன. இந்த அழகை இங்கு நீங்கள் வெளிப்படுத்தினாலே, அங்கு நீங்கள் அழகானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல இருப்பதால், நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவேண்டும் என்று தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு நாளும் விளங்கப்படுத்துகிறார். இலக்ஷ்மியும், நாராயணனும் எத்தனை தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். மக்கள் அவர்கள் முன்னே சென்று புகழ் பாடுகிறார்கள்: நாங்கள் அதிகளவு பாவம் செய்தவர்கள்; நீங்களோ சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள். சுவர்க்கம் பூந்தோட்டமென்றும், நரகம் முட்காடு என்றும் நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். இராவணனனோ நரகத்தை உருவாக்குகிறான். நீங்கள் நினைக்க வேண்டும்: நான் கடவுளின் குழந்தை, அவ்வாறாயின் எனக்குள் எவ்வாறு குப்பை உட்புக முடியும்? உங்களுக்குள் குப்பையை நீங்கள் கொண்டிருந்தால், தந்தையின் பெயரை நீங்கள் அவதூறு செய்கின்றீர்கள். நீங்கள் கோபமடைந்தால் தந்தையை அவதூறு செய்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். கோபம் என்ற தீய ஆவி உங்களுக்குள் பிரவேசித்தவுடன் நீங்கள் தந்தையை மறக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போது, எந்தத் தீய ஆவியும் உங்களுக்குள் பிரவேசிக்க முடியாது. நீங்கள் ஒருவரது இதயத்தைப் புண்படுத்தினால், அதன் தாக்கமும் இருக்கும். நீங்கள் ஒருமுறை கோபப்பட்டால், நீங்கள் ஒரு கோபக்காரார் என்பது பிறரின் புத்தியில் ஆறு மாதங்களுக்கு நிலைத்திருக்கும். அவர்கள் தங்கள் இதய சிம்மாசனத்திலிருந்து அவரை இறக்கி விடுகின்றார்கள். அந்த ஆத்மா பாப்தாதாவின் இதய சிம்மாசனத்திலிருந்தும் அகன்று விடுகின்றார்;. இந்த தாதா உலக அதிபதி ஆகுவதால், நிச்சயமாக அவர் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், அது ஒருவரின் பாக்கியத்தில் இல்லாவிட்டால், அவர் முயற்சி செய்ய மாட்டார். இது மிகவும் இலகுவான முயற்சியாகும். தந்தையை நினைவு செய்தால், ஆத்மா சுத்தமாகுகின்றார்;. வேறு எவ் வழியுமில்லை. இந்த நேரத்தில் இராஜ ரிஷிகள் எவருமில்லை. உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கும் தந்தை ஒருவர் மாத்திரமே உள்ளார். மனிதர்களால் மனிதர்களைச் சீராக்க முடியாது. தந்தை வந்து அனைவரையும் சீராக்குகின்றார். தம்மை முற்றாகச் சீராக்கிக் கொண்டவர்களே, சத்திய யுகத்தில் முதலில் பிரவேசிக்கின்றார்கள். உங்களிடம் ஏதாவது தீய பழக்கங்கள் இருந்தால், நீங்கள் அவற்றைத் துறந்து விட வேண்டும். நீங்கள் இந்தக் கல்வியைக் கற்பதிலும், யோகத்திலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரேயளவு மேன்மையானவர்களாக ஆக முடியாதென்பதும் உங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும் நீங்கள் முயற்சி செய்யத் தந்தை உங்களைத் தூண்டுகிறார். எந்தளவுக்கு முயற்சி செய்ய முடியுமோ, அந்தளவுக்கு முயற்சி செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுங்கள். தவறினால் கல்பம் கல்பமாக உங்களால் அதனை அடைய முடியாது. பாபா மீண்டும், மீண்டும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: தந்தையை நினைவு செய்தால், உங்கள் குப்பை அகற்றப்படும். அந்தச் சந்நியாசிகள் ஹத்த யோகம் கற்பிக்கின்றனர். ஹத்த யோகத்தினால் உங்கள் ஆரோக்கியத்தை விருத்தி செய்யலாம் என்றோ அல்லது நீங்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டீர்கள் என்றோ நினைக்காதீர்கள். இல்லை, அவர்களும் நோய் வாய்ப்படுவார்கள். பாரதத்தில், இலக்ஷ்மி நாராயணனின் ஆட்சி இருந்தபோது அனைவரும் நீண்ட ஆயுளைக் கொண்டிருந்ததுடன், அவர்கள் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். எவ்வாறாயினும் இப்போது அனைவருடைய ஆயுட்காலமும் குறுகியதாகும். பாரதத்தை, அவ்வாறு ஆக்கியவர் யார்; என்பது எவருக்குமே தெரியாது. மக்கள் காரிருளில் இருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு விளங்கப்படுத்தினாலும், அதனைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமாகும். அப்பாவிகளான சாதாரண மக்களே புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். கோடீஸ்வரர் எவராவது ஒருவர் இங்கு இருக்கின்றாரா? இன்று ஒரு மில்லியன் என்பது ஒரு பெரிய விஷயமல்ல. இப்போது பல மில்லியன்களுக்குச் சொந்தக்காரர்கள் பலர் இருக்கிறார்கள். பாபாவும் அவர்களைச் சாதாரணமானவர்கள் என்றே அழைக்கிறார். இது பில்லியன்களைக் கொண்டிருக்கும் காலமாகும். திருமண வைபவங்களுக்காக அதிகளவு பணத்தைச் செலவழிக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள், அம்பு இலக்கைத் தாக்கக்கூடியவாறு சாமர்த்தியமாக விளங்கப்படுத்த வேண்டும். ஒரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் போன்றோர் வரும்போது, அவர்கள் மிகவும் பூரிப்படைகின்றார்கள். ஆனால் குரல் கொடுக்கக் கூடிய சக்தி ஒருவருக்குக்கூடக் கிடையாது. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், அவர்கள் முழுதாகப் புரிந்து கொள்வதில்லை. கடவுளே அதி மேலானவர். இதுவே அதி மேலான ஆஸ்தியாகும். இலக்ஷ்மி, நாராயணனக்கு யார் இந்த சுவர்க்க ஆஸ்தியைக் கொடுத்தார்கள் என்றோ அல்லது அவர்கள் எங்கு வசிக்கிறார்களென்றோ பலருக்கும் தெரியாது. புரிந்துகொள்வதற்காகப் பலர் நூதன சாலைக்குச் செல்கின்றார்கள். சேவைக்கு அங்கு மிகச் சிறந்த சந்தர்ப்பமுள்ளது. ஆனால் அவர்களிடம் யோகம் இல்லை. நீங்கள் தந்தையை நினைவு செய்;தால், நீங்கள் மிகவும் மலர்ச்சியாக இருப்பீர்கள். நான் யாருடைய குழந்தை? பல குழந்தைகள் ஒழுக்;கத்துடன் கற்பதில்லை. அவர்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருப்பதுமில்லை. இன்னும், எவரும் முழுமையானவர்கள் ஆகவில்லை. அவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள், ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, தந்தையை நினைவு செய்ய வேண்டும். நாங்கள், அவ்வாறான ஒரு தந்தையிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறோம். இவ்வுலகில் நாங்களே மிகவும் தூய்மையற்றவர்கள். நாங்கள் மீண்டும் தூய்மையானவர்கள் ஆகுவோம். இதனை மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள். தந்தை தொடர்ந்து பல விடயங்களில் உங்களுக்கு புத்திமதி கூறுகின்றார்: இதனை, இதனைச் செய்யுங்கள். விக்ரோறியா மகாராணியின் ஆலோசகர் மிகவும் ஏழை. அவர் தெரு விளக்கில் மிகவும் சிரமத்துடன் கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றார். அவருக்கு அந்த ஆர்வம் இருந்தது. இதுவும் ஏழை மக்களுக்கே. தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். செல்வந்தர்கள் எவ்வாறு கடவுளை நினைவு செய்வார்கள்? அவர்கள் கூறுகின்றார்கள். இதுவே எங்களது சுவாக்கம். ஓ, அப்படியா? ஆனால் பாபா இன்னும் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கவில்லை. அவர் இப்போது அதனைச் செய்கிறார். ஆகவே நீங்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும். நீங்கள் நிச்சயம் தூய்மையானவர்களாக வேண்டும். பரமாத்மாவான பரமதந்தையைத் தவிர வேறு எவராலும் பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது என்று மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் குழந்தைகளாகிய நீங்கள் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ஹத்த யோகம் துறவறப் பாதைக்;குரியவர்களுக்கானதாகும். தந்தை தொடர்ந்து விளங்கப்படுத்துகிறார்: எவராவது நன்மைபெற வேண்டுமென்றால், அவர் அதற்கேற்ப, தனது அபிப்பிராயத்தை எழுதுவார். எவ்வாறாயினும், அது அவரின் ஈடேற்றத்திற்கான நேரம் இல்லையென்றால், அது அவரின் புத்தியில் புகமாட்டாது. உங்களுடையது இறை பணியாகும். மக்களைத் தேவர்களாக்கும் சேவையை நீங்கள் செய்யவேண்டும். உலகில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. அவைபற்றி, அதிகளவு விளம்பரங்களும் உள்ளன. அதிகளவு குருட்டு நம்பிக்கை உள்ளது! பகலுக்கும், இரவுக்குமிடையேயான வித்தியாசம் உள்ளது. பிராமணர்களாகிய உங்களுக்கிடையேயும் பகலுக்கும் இரவுக்குமிடையேயான வித்தியாசமுள்ளது. உங்களிற் சிலர் எதனையுமே புரிந்து கொள்வதில்லை. நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்தால், அது மிகவும் இலகுவாகவிருக்கும். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழியும். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். இந்த ஓசையை தொடர்ந்தும் பரவச் செய்யுங்கள். உங்களுக்குச் சரீர உணர்வு இல்லையென்றால், உங்கள் கழுத்தில் மேளத்தை மாட்டிக் கொள்ளுங்கள். தந்தை வந்துள்ளார் என்றும், என்னை மாத்திரம் நினைவு செய்தால், நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்கள் ஆகுவீர்கள்; என்றும் அவர் கூறுகின்றார் என்று நீங்கள் மேளம் கொட்டி அறிவியுங்கள். இச் செய்தியை நீங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் அறிவிக்க வேண்டும். அனைவரிலும் துரு படிந்துள்ளது. இந்த முழு உலகமும் தமோபிரதானாகும். தந்தையின் செய்தியை நீங்கள் நிச்சயம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இறுதியில் உங்கள் பெயர் புகழப்படும். அவர்கள் கூறுவார்கள்: எங்களை விழித்தெழச் செய்ய அவர்கள் எவ்வளவு முயற்சித்தார்கள் என்பது அற்புதமே. ஆனால் நாங்கள் விழித்தெழவில்லை. உறங்கியவர்கள் இழந்;தார்கள், விழித்தெழுந்தவர்கள் நன்மை அடைந்தார்கள். உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதற்காகவே தந்தை வருகிறார். இருப்பினும் நீங்கள் அதனை இழக்கிறீர்கள். நீங்கள் சேவை செய்வதற்குப் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தந்தை இப்போது வந்து, கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தூய்மையானவர்கள் ஆகுங்கள். நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் நினைவு செய்யாவிட்டால், உங்கள் பாவங்கள் அழிய மாட்டாது. துரு முற்றாக அகன்றால் மாத்திரமே, உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும். அல்லாவிட்டால் நீங்கள் தண்டனையை அனுபவிப்;பதுடன், குறைந்த அந்தஸ்தையும் பெறுவீர்கள். சேவை செய்தற்குப் பல வழிகள் உள்ளன. சேவைக்குச் செல்லும்போது பதாதைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் படங்கள் பழுதடையாத வண்ணம் அவற்றைச் செய்ய வேண்டும். இந்தப் படங்கள் மிகவும் சிறந்தவை. ஆனால் மாதிரிகள் விளையாட்டுப் பொருட்கள் போன்றவையாகும். முக்கிய நபர்களின் உருவப் படங்கள் பல உள்ளன. அவை பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும். உண்மையில் உங்களுக்கு ஆறு படங்கள் போதும். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதையும், சக்கரத்தை நினைவு செய்வதன் மூலம் எவ்வாறு நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்யலாம் என்பதையும் நீங்கள் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். பட்ஜும் (டியனபந) மிகவும் சிறந்தது. ஆனால், குழந்தைகளாகிய நீங்கள் பட்ஜுக்கு மதிப்பளிப்பதில்லை. தொடர்ந்து இதனை விளங்கப்படுத்துங்கள். நீங்கள் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கலாம். இந்த பட்ஜை உங்கள் மார்பில் குத்திக் கொண்டு, விளங்கப்படுத்துங்கள்: இவர் பாபா, இவர் பிரம்மாவின் மூலம் உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். புகையிரதங்களிலும் நீங்கள் சேவை செய்யலாம். சிறு குழந்தைகள் கூட இதனைச் செய்யலாம். எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். இந்த பட்ஜ், வைரங்கள், முத்துக்கள், மலர்கள், பழங்கள் மற்றும் மாளிகைகள் அனைத்தும் அதனுள் அடக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், அது குழந்தைகளின் புத்தியில் புகுவதில்லை. நீங்கள் படங்களை உங்களுடன் எடுத்துச் செல்லவேண்டுமென்று, பாபா உங்களுக்குப் பல தடவைகள் கூறியுள்ளார். ஆம், மக்கள் உங்களை விமரிசிப்பார்கள். கிருஷ்ணரும் அவதூறு செய்யப்பட்டார். அவர் பெண்களைக் கடத்தினார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அவர்களைச் சக்கரவர்த்தினிகள் ஆக்கினார், இல்லையா? எவ்வாறு உலக அதிபதி ஆகுபவர் ஒருவர் அவ்வாறான செயலைச் செய்திருப்பார்? இந்த ஞானப் பாதையில் நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். விநாசம் விரைவில் இடம்பெறுவதை நாங்கள் விரும்புகிறோம். எவ்வாறாயினும் பின்னர் நீங்கள் கூறுவீர்கள்: ஓ! பாபா எங்களுடன் இருக்கிறார். இப்போது நாங்கள் பாபாவை விட்டு விலகினோமாயின், 5000 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் நாங்கள் பாபாவைச் சந்திப்போம். அவ்வாறான பாபாவை எவ்வாறு நாங்கள் விட்டுச் செல்ல முடியும்? இப்போது நாங்கள் பாபாவுடன் கற்கிறோம். இந்தப் பிராமணப் பிறவியே, உங்களின் அதி உயர்ந்த பிறவியாகும். எங்களுக்கு அரசாட்சியைத் தருகின்ற அவ்வாறானதொரு தந்தை அவராவார். நாங்கள் அவரை மீண்டும் சந்திக்கமாட்டோம். எவ்வாறாயினும், கங்கை கரையில் வாழ்பவர்கள், ஏனைய இடங்களில் வாழ்பவர்கள் போன்று அதனை பாராட்டுவதில்லை, மற்றவர்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இங்கும், வெளியேயுள்ளவர்கள் தங்களை பாபாவிற்கு அர்ப்பணிக்கிறார்கள். எவ்வாறாயினும், உங்களிடம் யோக சக்தி இல்லையென்றால், நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் எந்தப் பயனுமிருக்காது. அவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். பல குழந்தைகள் தாம் பிறருக்கு இவ்வாறு விளங்கப்படுத்தினோம் என்றும் அது மிகவும் நன்றாக இருந்தது என்றும் இங்கு வந்து கூறுகின்றார்கள் அல்லது எழுதுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அவற்றைக் கேட்டிருந்தாலும், அவர்கள் எதனையும் செவிமடுக்கவும் இல்லை, புரிந்து கொள்ளவும் இல்லை என்பதை பாபா புரிந்து கொள்கிறார்! அவர்கள் தந்தையை அடையாளம் கண்டுகொள்வதுமில்லை. அவர்கள் எதனையாவது புரிந்துகொண்டிருந்தால், அவர்கள் தந்தையுடன் தொடர்பு வைத்திருந்திருப்பார்கள். ஒரு கடிதமாவது எழுதியிருப்பார்கள். அவர்கள் உடனடியாக உங்களைக் கேட்பார்கள்: அவ்வாறான ஒரு தந்தைக்கு எவ்வாறு நீங்கள் கடிதம் எழுதுவீர்கள் என்று எங்களுக்குக் கூறுங்கள்! கடிதம் பிரம்மா மேற்பார்த்து, சிவபாபா என்று எழுதப்படவேண்டும். அவர்கள் உடனடியாக பாபாவிற்கு எழுதியிருப்பார்கள். இந்த பிரம்மாவே, சிவபாபாவின் இரதமாவார். இந்த ஒருவரில் பிரவேசிப்பவரே மிகவும் பெறுமதியானவராவார். பல குழந்தைகளுக்கு சேவை செய்யும்போது, தொண்டை உலர்ந்துவிடும். அவர்களிடம் யோகம் இல்லாததால், அவர்களுடைய அம்பு எவரையும் தாக்குவதில்லை. இதுவே நாடகம் எனப்படும். பாபா யாரென அவர்கள் புரிந்துகொண்டால், அவர்களால் பாபாவைச் சந்திக்காது இருக்கமுடியாது. யோகியுக்தாக இருந்துகொண்டு, நீங்கள் புகையிரதத்தில் பயணம் செய்யலாம்;: நான் பாபாவிடம் செல்கிறேன். மக்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும்போது, அவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை நினைவு செய்வார்கள். ஆகவே, நீங்கள் யாரைப் பார்ப்பதற்கு இங்கு வருகிறீர்கள்? இங்கு வரும் வழியில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கவேண்டும். வழியில் சேவை செய்யுங்கள். பாபா கடலாவார். குழந்தைகளாகிய நீங்கள் தன்னைப் பின்பற்றுவதையும், ஞான அலைகள் உங்களிலிருந்து வெளிவருவதையும் அவர் கண்டால், மிகவும் சந்தோஷப்படுவார். அவர் நினைப்பார்: இவர் மிகவும் சிறந்த, தகுதியான குழந்தை. அதிகாலை வேளையில் இந்த நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் அதிகளவு நன்மையைப் பெறலாம். காலையில் மாத்திரம்தான் நீங்கள் பாபாவை நினைவு செய்யவேண்டுமென்றில்லை. நடக்கும்போதும், பேசும்போதும், உண்ணும்போதும் நீங்கள் நினைவில் இருந்தால், அது நினைவு யாத்திரையில் இருப்பதாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. எவரது இதயத்தையும் புண்படுத்தாதீர்கள். உங்களில் ஏதாவது தீய ஆவி உள்ளதா என்று சோதித்துப் பாருங்கள், எதுவும் இருக்குமாயின் அதனை அகற்றுங்கள். ஒரு மலராகி, அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள்.

2. நீங்கள் ஞானக் கடலின் குழந்தைகள். ஆகவே சதா, ஞான அலைகள் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும். சேவை செய்வதற்குப் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் புகையிரதங்களிலும் சேவை செய்வதுடன், தூய்மையாகுவதற்கு நினைவு யாத்திரையில் இருக்கவும் வேண்டும்.

ஆசீர்வாதம்:
யோகசக்தியின் மூலம் மாயையின் சக்தியை வெற்றி கொண்டு சதா வெற்றியாளர் ஆகுவீர்களாக.

யோக சக்தியும் ஞானசக்தியும் அதிமேன்மையான சக்திகளாகும். விஞ்ஞான சக்தியானது இருளை அகற்றி ஒளியை ஏற்படுத்தி, உங்களுக்கு உதவுவதைப் போன்று, யோக சக்தியானது எக்காலத்திற்கும் மாயையின் சக்தியை வெற்றி கொள்வதற்கு உங்களுக்கு உதவுகிறது. யோகசக்தி ஒரு மேன்மையான சக்தியாகும். அதனுடன் ஒப்பிடும்போது மாயையின் சக்தி எதுவுமேயில்லை. யோக சக்தியைக் கொண்ட ஆத்மாக்கள் கனவிலேனும் மாயையினால் தோற்றடிக்கப்பட முடியாது. கனவிலேனும் அவர்களால் எந்தப் பலவீனங்களையும் கொண்டிருக்க முடியாது. உங்கள் நெற்றியில் எப்பொழுதும் அத்தகைய வெற்றி திலகத்தை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள்.

சுலோகம்:
முதல் இலக்கத்தைக் கோருவதற்கு, வீணான எதனையும் சக்திமிக்கதாக மாற்றுங்கள்.