11.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் மாத்திரமே நீண்டகாலமாகப் பிரிந்திருந்தவர்களும், முழுமையான 84 பிறவிகள் எனும் உங்கள் பாகங்களை நடித்து வருபவர்களும் ஆவீர்கள். நீங்கள் இப்பொழுது துன்ப பந்தனங்களிலிருந்து சந்தோஷ உறவுமுறைகளுக்குள் செல்ல வேண்டும். ஆகவே, எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள்.

கேள்வி:
எக்குழந்தைகளால் நிலையான, எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியும்?

பதில்:
1) பாபா எங்களை உலக அதிபதிகளாக்குவதற்கு வந்துள்ளார். 2) எங்களுக்கு அதே கீதையின் உண்மையான ஞானத்தைக் கொடுப்பதற்கு எங்கள் உண்மையான பாபா வந்து விட்டார். 3) ஆத்மாக்களான நாங்கள் இப்பொழுது கடவுளின் மடியில் அமர்ந்திருக்கிறோம். ஆத்மாக்களான நாங்கள் இப்பொழுது எங்கள் சரீரங்களினூடாகத் தந்தைக்குரியவர்களாக இருக்கின்றோம். 4) எங்கள் பக்தியின் பலனாகிய, சற்கதியை எங்களுக்குக் கொடுப்பதற்கு, பாபா வந்துள்ளார். 5) பாபா எங்களை முக்கால விடயங்களையும் காண்பவர்கள் (திரிகாலதரிசி) ஆக்கியுள்ளார். 6) கடவுள் எங்கள் தாயாகி, எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்கள் இறை மாணவர்கள். இந்த விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் கொண்டவர்களே, எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள்.

ஓம் சாந்தி.
நீங்கள் ஆத்மாக்கள் எனும் நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். கடவுளாகிய பாபாவே, எங்களுக்குக் கற்பிக்கிறார்;; ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு பாபா வந்துள்ளார் என்பதை பாபாவின் முன்னிலையில் நேரடியாக வருவதனால், ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும், ஜீவன்முக்தியை அருள்பவரும் ஆவார். மாயை உங்களைத் திரும்பத் திரும்ப அவரை மறக்கச் செய்கிறாள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். அசரீரியான பாபா இந்த இரதத்தில் அமர்ந்திருக்கிறார். முஸ்லீம்கள் ஒரு குதிரையைச் சுற்றிலும் ஒரு சால்வையைப் போர்த்து, முகமது அக்குதிரையைச் செலுத்தினார் எனக் கூறுகிறார்கள். அவர்கள் அந்த அடையாளத்தைப் பயன்படுத்துகின்றனர். இங்கே, அசரீரியான பாபா இவரில் அவதரித்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். உங்களைச் சுவர்க்க அதிபதிகளாகவும், உலக அதிபதிகளாகவும் ஆக்குகின்ற பாபா வந்துள்ளார். பாபாவே உண்மையான கீதையின் கடவுள். ஆத்மாக்களின் புத்தி தந்தையிடம் செல்கிறது. இதுவே தந்தைமீதான ஆத்மாக்களின் அன்பாகும். எக்குழந்தைகள் இச்சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள்? நீண்ட காலமாகப் பிரிந்திருந்தவர்களே ஆவர்;. பாபாவே கூறுகிறார்: நான் உங்களைச் சந்தோஷ உறவுமுறைகளுக்குள் அனுப்பினேன், நீங்கள் இப்பொழுது துன்ப பந்தனங்களில் இருக்கிறீர்கள். அனைவருமே 84 பிறவிகளை எடுப்பார்கள் என்றில்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். 8.4 மில்லியன் பிறவிகளின் சக்கரம் எவருடைய புத்தியிலும் இருக்க முடியாது. பாபா உங்களுக்கு மிகச்சரியாக 84 பிறவிகளின் சக்கரத்தை விளங்கப்படுத்தியுள்ளார். பாபாவின் குழந்தைகள் தொடர்ந்தும் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் அங்கங்களினூடாகச் செவிமடுக்கிறீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். பாபா எங்களுடன் இந்த வாயினூடாகப் பேசுகிறார். அவரே கூறுகிறார்: நான் இந்த அங்கங்களின் ஆதாரத்தை எடுக்க வேண்டும். அவர் பிரம்மா எனப் பெயரிடப்பட வேண்டும். பிரஜாபிதா பிரம்மா ஒரு மனிதராகவே இருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மா (மக்களின் தந்தை) சூட்சும உலகில் இருக்கிறார் என நீங்கள் கூற முடியாது. கடவுள் பௌதீக உலகினுள் வந்து, கூறுகிறார்: நான் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, உங்களைத் தத்தெடுக்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்கள் கடவுளினால் தத்தெடுக்கப்படுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். ஒரு சரீரமின்றி, உங்களைத் தத்தெடுக்க முடியாது. ஆத்மா கூறுகிறார்: நான் இந்தச் சரீரத்தினூடாக உங்களுக்குரியவர் ஆகுகின்றேன். அவர் இச்சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளார். இச்சரீரம் அவருக்கு உரியதல்ல. ஆத்மா சரீரத்தினுள் பிரவேசித்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரங்களினுள் பிரவேசித்துள்ளீர்கள். பாபா கூறுகிறார்: நான் இவரில் பிரவேசித்துள்ளேன். சிலசமயங்களில், நான் குழந்தை ஆகுகிறேன், சிலசமயங்களில் நான் தாய் ஆகுகிறேன், அவரே மந்திரவாதி. சிலர் இவ்விடயங்களை மாயாஜாலம் எனக் கருதுகிறார்கள். உலகில் பெருமளவுக்குப் பொய்யான மந்திரசக்தி உள்ளது. அவர்கள் கிருஷ்ணராகவும் ஆகுகிறார்கள். கிருஷ்ணரில் நம்பிக்கை உடையவர்கள் விரைவிலேயே கிருஷ்ணரைக் காண்பதுடன், அவரில் நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுபவர்களும் ஆகுவார்கள். இங்கு, அனைத்தும் ஞானத்திற்குரிய விடயமாகும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் ஓர் ஆத்மா என்னும் உறுதியான நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். பாபா கூறுகிறார்: நான் உங்களுடைய தந்தை. நான் குழந்தைகளாகிய உங்களைத் திரிகாலதரிசி (முக்கால விடயங்களையும் காண்பவர்கள்) ஆக்குகிறேன். வேறு எவராலும் அத்தகைய ஞானத்தைக் கொடுக்க முடியாது. பக்தி மார்க்கம் முடிவுக்கு வரும்;பொழுதே, தந்தை வர வேண்டும். ஒரு சிவலிங்கத்தின் அல்லது ஒரு நிலையான, அநாதியான ஒளி ரூபத்தின் காட்சிகளை மக்களில் பலரும் காண்கிறார்கள். ஒருவருக்கு என்ன நம்பிக்கையும், பக்தியும் உள்ளனவோ, நான் அவற்றைப் பூர்த்தி செய்கிறேன். எவ்வாறாயினும், அவர்களில் எவராலும் என்னைச் சந்திக்க முடியாது. அவர்கள் என்னை முற்றிலுமே இனங்கண்டு கொள்வதில்லை. பாபாவும் ஒரு புள்ளி, நாங்களும் புள்ளிகளே என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்;துகொள்கிறீர்கள். இந்த ஆத்மாவாகிய நான், என்னில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்களும் உங்களில் இந்த ஞானத்தைக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாவாகிய நான், பரந்தாமத்தில் வசிக்கிறேன் என்பதை எவரும் அறியார். நீங்கள் வந்து பாபாவின் முன்னிலையில் அமரும்பொழுது, உங்களுக்குச் சந்தோஷப் புல்லரிப்பு ஏற்படுகின்றது. ஓ! ஞானக்கடலான சிவபாபா, இவரில் அமர்ந்திருந்து, எங்களுக்குக் கற்பிக்கிறார்! கிருஷ்ணர் அல்லது கோபியர் என்னும் கேள்விக்கே இடமில்லை. அவர்கள் இங்கும் இருப்பதில்லை சத்திய யுகத்திலும் இருப்பதில்லை. அங்கே, ஒவ்வோர் இளவரசரும் தனது சொந்த மாளிகையில் வசிப்பார். வந்து, தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைக் கோருபவர்கள் மட்டுமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்வார்கள். உங்களினுள் இச்சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்களே தாயும், தந்தையும் என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவரே தந்தை ஆதலால், அப்பொழுது யார் தாய்? நிச்சயமாக ஒரு தாய் தேவைப்படுகிறார். அந்தத் தாய்க்கு (சிவபாபா) ஒரு தாய் இருக்க முடியாது. இந்த இரகசியம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் தந்தையை நினைவுசெய்யவும் வேண்டும். தந்தை கூறுகிறார்: உங்களுக்கு எந்தக் குறைபாடுகளும் இருக்கக்கூடாது. அவர்கள் பாடுகிறார்கள்: நான் நற்குணம் அற்றவன், என்னிடம் நற்குணங்கள் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நற்குணம் உடையவர்களாக வேண்டும். உங்களுக்குக் காமம், கோபம் அல்லது சரீர அகங்காரம் எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் இப்பொழுது இங்கமர்ந்திருக்கிறீர்கள்;;;; நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள், எனவே நீங்கள் ஏன் வாடிப் போகின்றீர்கள்? எவ்வாறாயினும், இறுதியில் மாத்திரமே உங்கள் ஸ்திதி உறுதியாகும். நினைவுகூரப்பட்டுள்ளது: நீங்கள் அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபியரிடம் கேளுங்கள். இது இறுதியில் நடைபெறும். தாங்கள் 75மூ மான நேரத்தில் அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருப்பதாக எவரும் கூற முடியாது. இந்நேரத்தில், பெரும் பாவச்சுமை உள்ளது. ஒரு குருவின் ஆசீர்வாதத்தினால் அல்லது கங்கையில் நீராடுவதனால் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. இறுதியில் மாத்திரமே, தந்தை வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். ஒரு குமாரி அம்புகளை எய்து, அவர் (பீஷ்ம பிதாமகர்) மரணித்தார் என அவர்கள் காட்டுகிறார்கள். அவர் மரணிக்கும்பொழுது, அவர் பருகுவதற்குக் கங்கை நீர் கொடுக்கப்பட்டது. இங்கே நீங்கள் உணர்வற்றவர்கள் ஆகும்பொழுது, உங்களுக்கு பாபாவைப் பற்றி நினைவூட்டப்படுகிறது: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பழக்கத்தைப் பதித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நினைவூட்டுவதற்காக நீங்கள் ஒருவரில் தங்கியிருக்கக்கூடாது. உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, நீங்கள் இயல்பாகவே பாபாவை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் எவருடைய உதவியுமின்றி, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அம்மக்கள் மந்திரங்களைக் கொடுக்கிறார்கள், ஆனால் அது ஒரு பொதுவான விடயம். அந்நேரத்தில், அதிகளவு சண்டை, வன்முறை போன்றவை இருக்கும். நீங்கள் வெவ்வேறு இடங்களில் தங்குகிறீர்கள். அந்நேரத்தில், நீங்கள் சிவ, சிவா எனக் கூற முடியாதிருக்கும். அந்நேரத்தில், நீங்கள் முழுமையான நினைவில் இருப்பதுடன், அவருக்கான அன்பையும் கொண்டிருப்பீர்கள். அப்பொழுது மாத்திரமே உங்களால்; ஒரு முதல் இலக்க அந்தஸ்தைக் கோர முடியும். நான் உங்களுடைய தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முன்னைய கல்பத்திலும் நான் குழந்தைகளாகிய உங்களை அழகிய மலர்கள் ஆக்கினேன். சத்திய யுகத்தில், மலர்களைப் போன்ற குழந்தைகள் இருப்பதுடன், யோக சக்தியினூடாகவே அவர்கள் பிறப்பார்கள். அங்கே துன்பத்தை விளைவிக்கின்ற எதுவும் இருக்க மாட்டாது. அதன் பெயரே சுவர்க்கம்! எவ்வாறாயினும், அங்கே யார் வசிக்கிறார்கள் என்பதை பாரத மக்கள் அறியார்கள். அங்கே இரணியகசிபு வசித்தான் போன்ற அத்தகைய பல கதைகளை அவர்கள் சமயநூல்களில் எழுதியுள்ளார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்துக்கு உரியவை. பக்தி முதலில், சதோபிரதானாகவே உள்ளது. பின்னர், அது படிப்படியாக, தமோபிரதான் ஆகுகிறது. தந்தை கூறுகிறார்: நான் உங்களை ஆகாயம் வரையில் அழைத்துச் செல்கிறேன், பின்னர் நீங்கள் படிப்படியாகக் கீழே வருகிறீர்கள். மனிதர்களின் புகழ் எதுவும் கிடையாது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். எவ்வாறு பலவகையான யாத்திரைகள் போன்றவற்றுக்குச் செல்வது என அந்த குருமார்கள் உங்களுக்குக் கற்பிக்கிறார்கள், அப்படியிருந்தும், நீங்கள் தொடர்ந்தும் வீழ்கிறீர்கள். மீரா பக்தி மார்க்கத்தில் காட்சிகளைக் கண்டிருந்தாலும், அவள் உலக அதிபதி ஆகவில்லை. பாபா உங்களை ஜீனி ஆகுமாறு கூறுகிறார். நான் உங்களுக்கு எதனையேனும் செய்வதற்குக் கொடுக்கிறேன்: தொடர்;ந்தும் அல்பாவையும், பீற்றாவையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் களைப்படைந்து, என்னை நினைவுசெய்யாது விட்டால், மாயை உங்களைப் பச்சையாகவே உண்டுவிடுவாள். ஒருவரைப் பச்சையாகவே ஜீனி உண்டதாக ஒரு கதையும் உள்ளது. பாபா கூறுகிறார்: நீங்கள் என்னை நினைவுசெய்யாது விட்டால், மாயை உங்களைப் பச்சையாகவே உண்டுவிடுவாள். நீங்கள் நினைவில் அமரும்பொழுது, சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். பாபா எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். பாபா உங்களின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அவரைச் செவிமடுக்கிறீர்கள். இனிய, அன்பிற்கினிய குழந்தைகளே, நான் உங்களை முக்திதாமத்துக்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். மக்கள் பலரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கு முயற்சித்தாலும், எவராலும் அதனைச் செய்ய முடியவில்லை. கலியுகத்தின் பின்னர் சத்திய யுகம் வர வேண்டும்; இரவின் பின்னர் பகல் வர வேண்டும். சத்திய யுகத்தில் நாங்கள் மாத்திரமே இருப்போம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா எங்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கிறார். இறுதியில் சந்தோஷப் பாதரசம் உயர்ந்தே இருக்கும். இறுதிக் கணங்களில் விநாசம் நடைபெறும். நீங்கள் தொடர்ந்தும் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளர்களாகப் பார்ப்பீர்கள். தேவையற்ற இரத்தக்களறி இருக்கும். அனைவரையும் கொல்வதற்குக் குண்டுகள் உற்பத்தி செய்யப்படும் வகையில் மக்கள் புரிந்துள்ள குற்றம் என்ன? நிச்சயமாக அனைவரும் மரணிப்பார்கள். தங்கள் விருப்பத்துக்கு மாறாக, அக்குண்டுகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு யாரோ தங்களைத் தூண்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள். பெருமளவு செலவு உள்ளது. அவற்றினூடாக விநாசம் நடைபெற வேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஏனைய பல சமயங்களின் மத்தியில் ஒரு தர்மம் ஆட்சிசெய்ய முடியாது. இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்பட்டு, ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நாங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அம்மக்கள் களத்தில் அப்பியாசத்தைப் பயில்வதற்குச் செல்கிறார்கள். தாங்கள் கொல்ல வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என அவர்கள் நம்புகிறார்கள். இங்கே அவ்வாறில்லை. பாபா வந்துவிட்டார் என்பதால், உங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அசரீரியான கடவுளே பாரதத்தின் புராதன இராஜயோகத்தைக் கற்பித்தார். அவர்கள் பெயரை மாற்றி, கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டு விட்டார்கள். தங்கள் யோகமே புராதன யோகம் எனச் சந்நியாசிகள் நம்புகிறார்கள். உங்களுக்கு அனைத்தும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்படுகிறது. குழந்தைகளே, நீங்கள் என்னை இனங்கண்டு கொள்கிறீர்களா? நான் உங்களுடைய தந்தை. நான் மாத்திரமே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும் என அழைக்கப்படுகிறேன். கிருஷ்ணரால்; தூய்மையற்ற உலகினுள் வர முடியாது. அவர்கள் கிருஷ்ணரை துவாபர யுகத்தில் சித்தரித்துள்ளார்கள். அது அத்தகையதொரு பெரும் தவறாகும். அவர்கள் முற்றிலும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். அனைவரும் முக்தி தாமத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டியுள்ளபொழுதே, நான் வருகிறேன். நீங்கள் கற்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் இறை மாணவர்கள். இதனைத் தொடர்ந்தும் கடையுங்கள், உங்களுக்குச் சந்தோஷப் புல்லரிப்பு ஏற்படும். பாபா குழந்தைகளாகிய உங்களை ஞானக் கருத்துக்களைப் புரிந்துகொள்ளுமாறு செய்கிறார். ஆகவே, நீங்கள் ஏன் அவற்றை மறந்து விடுகிறீர்கள்? ஒரு குழந்தை பிறந்தவுடன், பாபா எனக் கூற ஆரம்பிக்கிறார். நீங்கள் வாரிசுகள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். ஆகவே, சதா பாட்டனாரை நினைவுசெய்யுங்கள். பாபா வழிகாட்டலைக் கொடுக்கிறார்: குழந்தைகளே, காமமே கொடிய எதிரி. அது ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக இறுதிவரை உங்களுக்குப் பெருமளவு துன்பத்தை விளைவித்தது. இதுவே விலைமாதர் இல்லமாகிய, மரணபூமி ஆகும். பாபா, தேவர்களின் இராச்சியம் உள்ள ஆலயமாகிய, சிவாலயத்தை ஸ்தாபிக்கிறார். எவ்வாறாயினும், அவர்கள் எவ்வாறு, எப்பொழுது தங்கள் இராச்சியத்தைக் கோரினார்கள்? நீங்கள் இப்பொழுது இதனை அறிவீர்கள். இறைவர்களும், இறைவிகளும் ஒருபொழுதும் மறுபிறவி எடுப்பதில்லை என அம்மக்கள் எண்ணுகிறார்கள். இவ்விடயங்களை ஒரு முக்கியஸ்தர் புரிந்துகொண்டால், ஒலியானது பரவும். எவரும் ஏழைகளைச் செவிமடுப்பதில்லை. உங்கள் மத்தியிலும், இதனை வரிசைக்கிரமமாகக் கிரகிப்பவர்கள் உள்ளார்கள். ஒரு பாடசாலையும், ஓர் ஆசிரியருமே உள்ளார், ஆனால் மாணவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் எத்தாக்குதலிலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்கு, ஒரு ஜீனியாகி, தொடர்ந்தும் அல்பாவையும், பீற்றாவையும் நினைவு செய்யுங்கள். யோக சக்தி மூலம் உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமையை அகற்றுங்கள். அதீந்திரிய சுகத்தில் நிலைத்திருங்கள்.

2. உங்கள் வாயினூடாகச் சிவனின் பெயரை வெறுமனே செபிக்காதீர்கள். தந்தை மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள். முட்களை மலர்களாக மாற்றுகின்ற சேவையில் மும்முரமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய கவலையற்ற ஸ்திதி மூலம் மிகச்சரியான தீர்மானங்கனை எடுத்து, உங்கள் புத்தியிலுள்ள நம்பிக்கை மூலம் ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.

ஒரே பலத்தையும், ஒரே ஆதாரத்தையும் கொண்டிருப்பதே சதா வெற்றியாளர் ஆகுவதற்கான இலகுவான வழியாகும். உங்களுக்கு ஒரேயொருவரில் நம்பிக்கை இருக்கும்பொழுது, சக்தியைப் பெறுகின்றீர்கள். நம்பிக்கை உங்களைச் சதா கவலையற்றவர்கள் ஆக்குகின்றது, கவலையற்ற ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் புரிகின்ற ஒவ்வொரு பணியிலும் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். கவலையற்றவர்களாக இருப்பதால், உங்கள் புத்தியால் மிகச்சரியான தீர்மானங்களை எடுக்க முடியும். எனவே, மிகச்சரியான தீர்மானங்களை உருவாக்குவதற்கான அடிப்படை நம்பிக்கையுடைய புத்தியைக் கொண்டிருப்பதும், கவலையற்றவராக இருப்பதும் ஆகும். நீங்கள் சிந்திக்கவும் தேவையில்லை, ஏனெனில் தந்தையைப் பின்பற்றி, உங்கள் அடிகளை அவருடைய அடியில் வைத்து, நீங்கள் பெறுகின்ற ஸ்ரீமத்திற்கேற்ப முன்னேறிச் செல்ல வேண்டியது மாத்திரமே உள்ளது. தொடர்ந்தும் ஸ்ரீமத்தின் அடிச்சுவட்டில் உங்கள் அடிகளை வையுங்கள், நீங்கள் ஒரு வெற்றி இரத்தினம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
அனைவருக்காகவும் உங்கள் மனதில் நன்மையளிக்கும் உணர்வுகளைக் கொண்டிருப்பதே, ஓர் உலக உபகாரியாக இருப்பதாகும்.

மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்.

நாங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் பெறுகின்ற இறை ஞானத்தைச் சத்திய யுகத்திலும் பெறுவோமா? இதற்கு, சத்திய யுகத்தில், நாங்கள் ஞான சொரூபங்களாக இருப்போம் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுடைய தேவ வெகுமதியை அனுபவம் செய்து கொண்டிருப்போம். அங்கே ஞானப் பரிமாற்றம் கிடையாது. ஞானமற்றவர்களுக்கே ஞானம் தேவை. சத்திய யுகத்தில், அனைவரும் ஞான சொரூபங்கள் ஆவர். அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமளவுக்கு அங்கே எவரும் ஞானமற்றவர்கள் இல்லை. இந்நேரத்தில், எல்லையற்ற நாடகம் முழுவதினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை நாங்கள் அறிவோம். ஆரம்பத்தில், நாங்கள் எவராக இருந்தோம்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எவ்வாறு நாங்கள் மத்தியில் கர்ம பந்தனத்தில் அகப்பட்டவர்கள் ஆகினோம்? பின்னர் எவ்வாறு நாங்கள் வீழ்ந்தோம்? இறுதியில் நாங்கள் கர்ம பந்தனத்திற்கு அப்பாற் சென்று, கர்மாதீதம் அடைந்த தேவர்களாக வேண்டும். இப்பொழுது செய்கின்ற முயற்சிகள் மூலம் நாங்கள் எதிர்கால வெகுமதியை, அதாவது, சத்திய யுகத்துத் தேவர்களாக இருக்கின்ற வெகுமதியைக் கொண்டிருப்போம். தேவர்களான நாங்கள் வீழ்வோம் எனும் ஞானம் எங்களுக்கு அங்கே இருந்திருந்தால், அந்த எண்ணத்தின் மூலம் எங்கள் சந்தோஷம் மறைந்து விட்டிருக்கும். எனவே, நாங்கள் வீழ்ந்துவிடுவோம் என்ற ஞானம் அங்கே எங்களுக்கு இருப்பதில்லை. இந்த எண்ணங்கள் எங்களுக்கு இருப்பதில்லை. இந்த ஞானத்தின் மூலம், நாங்கள் மேலேறி, எங்களுடைய சந்தோஷ வாழ்வுகளை உருவாக்க வேண்டும் என்பதை இப்பொழுது அறிவோம். அரைக் கல்பத்திற்கு நாங்கள் எங்களுடைய வெகுமதியை அனுபவம் செய்வோம், பின்னர் எங்களை மறந்து, மாயையின் ஆதிக்கத்திற்குள்ளாகி, வீழ்கின்றோம். இந்த மேலேறுதலும், கீழிறங்குதலும் ஓர் அநாதியாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டாகும். இந்நேரத்தில் எங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தும் உள்ளது. அது சத்திய யுகத்தில் இருப்பதில்லை. அச்சா.