11.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, பிராமணர்கள் ஆகியபின்னர், தந்தையின் பெயர் அவதூறு செய்யப்படும் வகையில் அத்தகைய நடத்தை எதுவும் இருக்கக்கூடாது. வியாபாரம் போன்றவற்றைச் செய்யும்பொழுது, தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்.

கேள்வி:
இறை மாணவர்களின் உதடுகளிலிருந்து எவ்வார்த்தைகள் வெளிப்படக்கூடாது?

பதில்:
எங்களுக்குக் கற்பதற்கு நேரமில்லை என்பதாகும். உங்கள் உதடுகளிலிருந்து இவ்வார்த்தைகள் வெளிப்படக்கூடாது. தந்தை குழந்தைகளின் தலைமீது எச்சிரமத்தையும் வைப்பதில்லை. அவர் கூறுகிறார்: அதிகாலைப் பொழுதில் விழித்தெழுந்து என்னை நினைவு செய்வதுடன், ஒரு மணித்தியாலத்துக்கு அல்லது அரை மணித்தியாலத்துக்குக் கற்றிடுங்கள்.

கேள்வி:
மனிதர்களின் திட்டம் என்ன? தந்தையின் திட்டம் என்ன?

பதில்:
ஒற்றுமையாகி, ஒன்றாகுவதே மனிதர்களின் திட்டமாகும். மனிதர்கள் ஒன்றை விரும்புகிறார்கள், ஆனால் பொய்யான பூமியைச் சத்தியபூமியாக ஆக்குவதே தந்தையின் திட்டமாகும். ஆகவே, சத்திய பூமிக்குச் செல்வதற்கு, நீங்கள் நிச்சயமாக உண்மையானவர்கள் ஆகவேண்டும்.

பாடல்:
இன்றைய மனிதர்களுக்கு என்ன நடந்துவிட்டது?

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்களும் ஓம் சாந்தி எனக் கூறுகிறீர்கள், ஆத்மாக்களால் தங்களின் சரீரங்களினூடாக ஓம் சாந்தி எனக் கூற முடியும். ஆத்மாவாகிய எனது ஆதி தர்மம் அமைதி ஆகும். நீங்கள் இதனை மறக்கக்கூடாது. தந்தையும் வந்து ஓம் சாந்தி எனக் கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் அமைதி நிறைந்தவர்களாக இருக்கின்ற இடமே தந்தை வசிக்கின்ற இடமும் ஆகும். அது எங்களுடைய அமைதி தாமமும், எங்கள் வீடும் ஆகும். வெளியுலகிலுள்ள கல்விமான்களோ அல்லது பண்டிதர்களோ இதனை அறியார்கள். ஆத்மா பரமாத்மாவைப் போன்றவரே என அவர்கள் கூறுகிறார்கள். எவரிடமும் ஆத்மாக்களின் ஞானம் இல்லை; ஆத்மா என்றால் என்ன என்பதை அவர்கள் அறியார்கள். பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் ஆவார்கள். ஒவ்வொரு ஆத்மாவிலும் ஓர் அழிவற்ற பாகம் பதியப்பட்டுள்ளதுடன், அது அவருடைய சொந்த நேரத்தில் வெளிப்படுகிறது. தந்தை இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். ஒரு மனித சரீரத்தில் பிரவேசித்து, மனிதர் ஆகாமல் தந்தையால் மனிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. எனக்கும் நிச்சயமாக ஒரு சரீரம் தேவையாகும். படைப்பு படைக்கப்பட வேண்டியுள்ளபொழுதே, ஒரு சரீரம் தத்தெடுக்கப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மாவினூடாகவே படைப்பு இடம்பெறுகிறது. அசரீரியான சிவனே படைப்பவர் ஆவார். அவர் பிரஜாபிதா பிரம்மாவினூடாக பிரம்மகுமார்களுக்கும் குமாரிகளுக்கும் விளங்கப்படுத்துகிறார், சூத்திரர்களுக்கு அல்ல. இது இப்பொழுது எங்களுடைய பிராமண குலம் ஆகும். முன்னர், நாங்கள் சூத்திர குலத்தில் இருந்தோம், அதற்கு முன்னர், நாங்கள் வைசிய, சத்திரிய குலங்களுக்கு உரியவர்களாக இருந்தோம். உலகிலுள்ள மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. பிராமணர்கள் நிச்சயமாக, பின்னர் சத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஆகுகின்ற தேவர்களாக ஆகுகிறார்கள். பிராமணர்களே உச்சிக்குடுமிகள் ஆவர். முன்னர், ஒரு பசுவின் குளம்பைப் போன்ற ஒரு உச்சிக்குடுமியை அணிந்தார்கள். நீங்கள் குத்துக்கரண விளையாட்டை விளையாடுகிறீர்கள்;. நான் அதனை விளையாடுவதில்லை. நீங்கள் இந்தக் குலங்களின் சக்கரத்தினுள் செல்கிறீர்கள். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! உங்களுடைய பெயரே சுயதரிசனச் சக்கரதாரிகள், ஆனால் சமய நூல்களில் மக்கள் அனைத்து வகையான விடயங்களையும் எழுதியுள்ளார்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். எவ்வாறாயினும், தேவர்கள் முழுமையானவர்கள் என்பதால், தேவர்களுக்கே இந்த ஆபரணங்களின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாத்திரமே அடையாளங்கள் பொருந்துகின்றன. இந்த ஞானத்தைக் கிரகிப்பதனால், நீங்கள் மீண்டும் ஒருமுறை பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் இப்பொழுது இங்கே நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். இதுவே உருத்திர ஞான யாகமாகும். ஒரு யக்ஞத்துக்கு பிராமணர்கள் நிச்சயமாகத் தேவையாகும். ஒரு சூத்திரரால் ஒரு யக்ஞத்தைப் படைக்க முடியாது. உருத்திராகிய சிவபாபா இந்த யாகத்தை உருவாக்கியுள்ளார், ஆகவே பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் பிராமணக் குழந்தைகளுடன் மாத்திரமே பேசுகிறேன். இது அத்தகையதொரு பெரிய யாகமாகும். தந்தை வந்தவுடன், இந்த யாகத்தை உருவாக்கினார். இது குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, யாகம் என, அதாவது, இதுவே சுய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கான யாகம் என அறியப்படுகிறது. எங்கே? பாரதத்தில் ஆகும். பாபா சத்தியயுகத்து, சுய இராச்சியத்தை உருவாக்குகிறார். ஆகவே, நீங்கள் இதனை சிவ கியான் (ஞான) யக்ஞம் எனவோ அல்லது உருத்திர கியான் யக்ஞம் எனவோ அழைக்க முடியும். சோமநாதர் ஆலயமும் அவருடையதே ஆகும். அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு யக்ஞம் என அறியப்படுகிறது. இது ஒரு பாடசாலை என அழைக்கப்படுவதில்லை. தந்தை உருத்திர கியான் யக்ஞத்தை உருவாக்கியுள்ளார், ஒரு யக்ஞம் (யாகம்) ஒரு பாடசாலை என அழைக்கப்படுவதில்லை. பிராமணர்களினூடாகவே யாகம் உருவாக்கப்படுகிறது. போலோநாத் (அப்பாவிப் பிரபு) ஆகிய அருள்பவரே பிராமணர்களுக்குத் தானம் அளிப்பவர் ஆவார். அவர் சிவன், அப்பாவிப் பிரபு, பொக்கிஷங்கள் அனைத்தினதும் அதிபதி என அழைக்கப்படுகிறார். நீங்கள் இப்பொழுது அவருடன் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். பாப்தாதா குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுத்துள்ளார். இவரே சிரேஷ்ட தாய் ஆவார். எவ்வாறாயினும், மம்மா தாய்மார்களைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவரே அனைவரிலும் திறமைசாலி ஆவார். அவருடைய (மம்மாவின்) பாகமே பிரதானமானதாகும். அவர் ஞான தேவியான, ஜெகதாம்பா ஆவார். மகா இலக்ஷ்மி ஞான தேவி என அழைக்கப்பட முடியாது. இலக்ஷ்மி என்னும் பெயர் செல்வத்தின் தேவி என அர்த்தப்படுகிறது. இன்னாரின் வீட்டில் இலக்ஷ்மி வாசம் செய்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள், அதாவது, அவர்களிடம் அதிகளவு செல்வம் உள்ளது. அவர்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்தை மாத்திரமே வேண்டுகிறார்கள். ஒவ்வொரு 12 மாதங்களின் இறுதியிலும் அவர்கள் இலக்ஷ்மியை வரவழைக்கிறார்கள். ஜெகதாம்பா அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறார். ஜெகதாம்பா பிரஜாபிதா பிரம்மாவின் புதல்வி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவருடைய பெயர் சரஸ்வதி ஆகும். ஒரு பெயரே போதுமானதாகும். தாயும் குழந்தைகளும் உள்ளார்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்து ஞானத்தைச் செவிமடுக்கிறீர்கள். தந்தை வந்து, இவரைத் தத்தெடுத்து, அவருக்கு பிரம்மா எனப் பெயரிட்டுள்ளார். அவரும் கூறுகிறார்: நான் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இவ்விடயங்கள் எதுவும் சமயநூல்களில் எழுதப்படவில்லை. நீங்கள் புதிய உலகிற்காக முயற்சி செய்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் முட்களிலிருந்து மலர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் சூத்திரர்களாக இருந்தபொழுது, முட்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மலர்களாகிய, பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். தந்தை பிராமணர்களை மலர்களாக மாற்றுகிறார். அவரே பூந்தோட்டத்தின் அதிபதியும், நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமான பூந்தோட்டக்காரர்களும் ஆவீர்கள். சிறந்த பூந்தோட்டக்கார்கள் ஏனையோர்களையும் தங்களைப் போன்ற பூந்தோட்டக்கார்கள் ஆக்குகிறார்கள்; அவர்கள் தொடர்ந்தும் மரக்கன்றுகளை நாட்டுகிறார்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள் ஆவார்கள். இது ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகிறது. கடவுளே ஞானத்தைக் கொடுப்பவர் ஆவார். மனிதர்களே சமயநூல்கள் போன்ற அனைத்தையும் பேசுபவர்கள் ஆவார்கள். இந்த ஆன்மீக ஞானம் பரமாத்மாவால் ஆத்மாக்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வேறு எவரும் படைப்பவரினதும், அவருடைய படைப்பினதும் ஞானத்தைப் பெறுவதில்லை. அவர்கள் கட்டுக்கதைகளைக் கூறுகிறார்கள். இதுவே அனைத்து விடயங்களும் பொய்யாக உள்ள பொய்யான பூமி ஆகும். ஆரம்பத்தில், செயற்கை நகை இருக்கவில்லை, ஆனால் அவை இப்பொழுது மிகவும் செயற்கையாக ஆகியுள்ளன! இப்பொழுது அதிகளவு செயற்கை நகைகள் உள்ளன் எவராலும் உண்மையான நகையை வைத்திருக்க இயலாதுள்ளது. இராவண இராச்சியமே பொய்ம்மை பூமி ஆகும். சத்தியபூமி இராமரினால் (கடவுள்) ஸ்தாபிக்கப்பட்ட இராச்சியம் ஆகும். இதுவே சிவபாபாவினால் உருவாக்கப்பட்டுள்ள யாகம் ஆகும். இது ஒரு பாடசாலையும், ஒரு யாகமும், ஒரு வீடும் ஆகும். நீங்கள் பரலோகத் தந்தைக்கும், பிரஜாபிதா பிரம்மாவுக்கும் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆகும்வரையில் எவ்வாறு ஆஸ்தி பெறப்பட முடியும்? உண்மையான பிராமணர்களே யக்ஞத்தைப் பராமரிப்பதற்குத் தேவைப்படுகிறார்கள். விகாரத்தில் ஈடுபடுபவர்களை பிராமணர்கள் என அழைக்க முடியாது. இராவணனின் படகில் ஒரு காலும், இராமரின் படகில் ஒரு காலும் இருந்தால், பெறுபேறு என்னவாகும்? நீங்கள் இரண்டாகக் கிழிக்கப்படுவீர்கள். பின்னர், அத்தகைய செயற்பாட்டைச் செய்வதால், நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்வீர்கள். நீங்கள் உங்களைப் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என அழைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு சூத்திரர்களின் செயல்களைச் செய்கிறீர்கள்! தந்தை கூறுகிறார்: எல்லாவிதமாகவும், உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யுங்கள், ஆனால் நீங்கள் அனைத்தையும் ஸ்ரீமத்துக்கேற்ப செய்தால், அது பாபாவின் பொறுப்பு ஆகுகிறது. இங்கு நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுவதற்கே வந்துள்ளீர்கள். அவை அசுர வழிகாட்டல்கள், ஆனால் நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவதற்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள். அதிமேலான தந்தை அதியுயர்ந்த வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்காக நீங்கள் மேன்மையான வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்களும் கூறுகிறீர்கள்: நாங்கள் சூரிய-வம்ச ஆட்சியாளர்கள் ஆகுவோம். இந்த யக்ஞம் ஓர் ஆட்சியாளர் ஆகுவதற்கானது, ஒரு பிரஜை ஆகுவதற்கல்ல. நீங்கள் அரசர்களும் அரசிகளும் ஆகுகிறீர்கள், ஆகவே பிரஜைகளும் உருவாக்கப்படுவார்கள். மம்மாவும் பாபாவும் முயற்சி செய்து அவ்வாறு ஆகியதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் அதேபோன்று ஆகவேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவின் பேரக் குழந்தைகளான, பிரம்மகுமார்களும் குமாரிகளுமாக இருப்பதில் அதே சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். சிவன், பிரஜாபிதா என அழைக்கப்படுவதில்லை. அவரே படைப்பவர், ஆனால் தேவர்களோ சுவர்க்கத்தில் வாழ்;பவர்கள் ஆவார்கள். தந்தையே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர் ஆவார். உங்கள் சரீரங்கள் கல்ப விருட்சத்தைப் போன்று புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அவர் அவலட்சணம் ஆகியுள்ள ஆத்மாக்களான உங்களைத் தூய்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும் ஆக்குகிறார். நீங்கள் முழுமையாகத் தூய்மையாகும்பொழுது, அச்சரீரங்கள் இருக்க மாட்டாது. இதனாலேயே அனைவரும் அழிக்கப்படவுள்ள வைக்கோற்போர் தீ மூட்டப்படவுள்ளது. இவை எல்லையற்ற விடயங்கள் ஆகும். இது ஓர் எல்லையற்ற தீவு, அவை எல்லைக்குட்பட்டவை ஆகும். பல பெயர்கள் உள்ளதைப் போன்றே பல மொழிகளும் உள்ளன. பல தீவுகள் உள்ளன, ஆனால் இந்த முழு உலகமுமே ஒரு தீவு (இலங்கா) ஆகும். இராவண இராச்சியம் முழு உலகிலும் உள்ளது. நீங்கள் பாடலிலும் கேட்டுள்ளீர்கள்: மனிதர்களின் நிலை என்னவாகியுள்ளது? அங்கே, அவர்கள் ஒருவரையொருவர் கொல்வதில்லை. இராமர் இருந்ததைப் போன்றே, அதியுயர்ந்த மரியாதைக் கோட்பாட்டைப் பின்பற்றிய அவருடைய பிரஜைகளும் இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. துன்பத்தைப் பற்றிய கேள்வியே கிடையாது. எவருக்கேனும் துன்பம் விளைவிப்பது ஒரு பாவம் ஆகும். அங்கே எவ்வாறு இராவணன், அனுமன் போன்றோர் இருக்க முடியும்? உங்களால் மக்களுக்கு முதலாவது பிரதான விடயத்தைக் கூற முடியும்: நீங்கள் அவரை தந்தையாகிய கடவுள் என அழைப்பதால், அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? இல்லாவிட்டால், அது தந்தைத்துவமாக இருக்கும். அனைவரும் தந்தையாக முடியாது. நீங்கள் அரைக்கல்பமாக ஒரு பொய்யான வருமானத்தைச் சம்பாதித்து வருகிறீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்த வேண்டும். இப்பொழுது, சத்திய பூமிக்குச் செல்வதற்கு நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அவர்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்காகச் சமயநூல்களையும் உரைக்கிறார்கள். சிவபாபா அச்சமயநூல்கள் போன்றவற்றைக் கற்கவில்லை. அவர் ஞானம்-நிறைந்த, ஞானக்கடல் ஆவார். அவரே சத்தியமும், உயிர்வாழ்பவரும் ஆவார். சத்திய பூமிக்குச் செல்வதற்காக பாபாவிடமிருந்து ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பொய்யான பூமி அழிக்கப்படும்பொழுது, சரீரங்களுடன் அனைத்தும் அழிக்கப்படும். எவ்வாறு யுத்தம் நடைபெறுகிறது என்பதை நீங்கள் அனைவரும் காண்பீர்கள். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். மனிதர்கள் ஒன்றை விரும்புகிறார்கள், கடவுள் வேறொன்றை விரும்புகிறார். அவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் விநாசத்துக்கானதாகும். கடவுளின் திட்டம் என்ன? இப்பொழுது நீங்கள் அதனை அறிவீர்கள். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கு, பொய்யான பூமியைச் சத்திய பூமியாக மாற்றுவதற்குத் தந்தை வந்துள்ளார். சத்தியம்நிறைந்த தந்தையினூடாக நீங்கள் உண்மையானவர்கள் ஆகுகிறீர்கள், நீங்கள் இராவணனினூடாகப் பொய்யானவர்கள் ஆகுகிறீர்கள். தந்தையே உண்மை ஞானத்தைக் கொடுப்பவர் ஆவார். பிராமணர்களாகிய நீங்கள் உங்களின் கரங்களை நிறைத்தவாறே திரும்புவீர்கள், ஆனால் சூத்திரர்களின் கரங்களோ வெறுமையாக இருக்கும். நீங்கள் தேவர்களாக ஆகவுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: உங்கள் இல்லறத்தில் இருங்கள், ஒரு தாமரை மலர் போன்று ஆகி, என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் ஏன் பாபாவை நினைவு செய்வதற்கு மறக்கிறீர்கள்? நீங்கள் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை மறந்து விடுகிறீர்கள்! இது புதியதொன்றாகும்; இங்கே நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். ஓர் ஆத்மா அழிவற்றவர்; அவர் ஒரு சரீரத்தை நீக்கி விட்டு, இன்னுமொன்றைப் பெறுகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் வீடு திரும்பவுள்ளீர்கள் என்பதால், ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். சரீர உணர்வைத் துறந்து விடுங்கள். இதுவே 84 பிறவிகளின் உக்கிய, பழைய சப்பாத்து ஆகும். அதிக காலத்துக்கு ஆடைகள் அணியப்பட்டு வரும்பொழுது, ஒரு காலத்தில் அவை கிழிந்து விடுகின்றன. நீங்களும் அந்தப் பழைய சரீரங்களை விட்டு நீங்க வேண்டும். இப்பொழுது காமச்சிதையை விட்டகன்று, ஞானச்சிதையில் அமருங்கள். விகாரத்திலிருந்து விலகியிருக்க முடியாத பலர் உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: துவாபர யுகத்திலிருந்து, இவ்விகாரங்களின் காரணமாக, நீங்கள் அதிகளவுக்கு நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகுகிறீர்கள். இப்பொழுது இவ்விகாரங்களை வெற்றி கொள்ளுங்கள். காம விகாரத்தில் ஈடுபடாதீர்கள்; தூய்மையாக இருங்கள். இது ஒரு தூய்மையற்ற சரீரமாகும். ஆகவே, தூய்மை ஆகுங்கள்! இங்கே அனைவரும் விகாரத்தினூடாகவே பிறக்கிறார்கள். சத்திய, திரேதா யுகங்களில் விகாரங்கள் இருப்பதில்லை. அங்கே அவை இருக்குமானால், அது ஏன் சுவர்க்கம் எனவும், இது நரகம் எனவும் அழைக்கப்பட வேண்டும்? தந்தை கூறுகிறார்: சமயநூல்களில் இலக்கும் இலட்சியமும் இருப்பதில்லை. இங்கே, உங்களுக்கு ஓர் இலக்கும் இலட்சியமும் உள்ளது. நாங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறோம். தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்றுள்ள அனைத்தையும் மறந்து விடுங்கள். அதில் சாராம்சம் இல்லை. உங்கள் மேலேறும் ஸ்திதி ஒருமுறையே இடம்பெறுகிறது. அதன்பின்னர், அது கீழிறங்கும் ஸ்திதி ஆகும். நீங்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், நீங்கள் கீழிறங்கி, தூய்மையற்றவர்கள் ஆகவேண்டும். இது அழுக்கான உலகமாகும். எங்கள் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதையும், அது இப்பொழுது நரகமாக இருக்கிறது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். முதலில், ஓர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது, அது இப்பொழுது இல்லை. அந்தத் தர்மம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. பாபா வந்து, பிரம்மாவினூடாக மீண்டும் ஒருமுறை ஸ்தாபனையை மேற்கொள்கிறார். நீங்கள் மீண்டும் ஒருமுறை இராச்சியத்தைப் பெறுகிறீர்கள் என நீங்களும் கூறுகிறீர்கள். நீங்கள் இராச்சியத்தைப் பெற்ற பின்னர், இந்த ஞானம் மறைந்து விடும். தூய்மையற்றவர்கள் மாத்திரமே தூய்மையாகுவதற்காக இந்த ஞானத்தைப் பெறுகிறார்கள். ஆகவே, தூய உலகில், ஏன் இந்த ஞானம் இருக்க வேண்டும்? இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்ததிலிருந்து எத்தனை வருடங்களாகி விட்டன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நாங்கள் இராச்சியத்தைப் பெறுவதற்காக, 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒருமுறை வந்துள்ளோம். இந்த ஆத்மாவாகிய நான், தந்தையின் ஒரு குழந்தை ஆவேன். தன்னை ஓர் எருமை என அழைக்க ஆரம்பித்த ஒரு நபரின் உதாரணம் உள்ளது. அவர் அதனைத் தனக்குள் மீண்டும் மீண்டும் கூறியவாறு இருந்தார். அதனால் தான் ஓர் எருமை என்ற நம்பிக்கையை வளர்த்து, தனக்குக் கொம்புகள் இருந்ததால், தன்னால் ஒரு யன்னலினூடாக வெளியேற முடியவில்லை எனவும் அவர் நம்பினார்! இந்த உதாரணம் உங்களுக்கும் பொருந்துகிறது. நீங்கள் பாபாவின் குழந்தைகள் என்னும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. நான் ஒரு சதுர்புஜ் (விஷ்ணுவின் நான்கு கரங்களின் உருவம்) எனக் கூறுவதால், நீங்கள் அவ்வாறு ஆகுவீர்கள் என்பதல்ல. இல்லை, உங்களை அவ்வாறு ஆக்குபவர் நிச்சயமாகத் தேவைப்படுகிறார். இது சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான ஞானமாகும். நன்கு கிரகிப்பவர்களும், ஏனையோரையும் அவ்வாறு செய்யத் தூண்டுபவர்களுமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள் ஆவார்கள். ஒரு மாணவனால் தனக்குக் கற்பதற்கு நேரம் இல்லை எனக் கூற முடியாது. பின்னர் நீங்கள் சென்று வீட்டில் அமர்ந்திருக்க முடியும். கற்காமல் ஆஸ்தி பெறப்பட முடியாது. நீங்கள் இறை தந்தையின் மாணவர்கள், இருப்பினும், உங்களுக்கு நேரமில்லை என நீங்கள் கூறுகிறீர்கள்! தந்தைக்கு உரியவராகிய பின்னர், நீங்கள் அவரை விட்டு விலகினால், நீங்கள் ஒரு பெரிய முட்டாள் என அவர் கூறுவார். உங்களுக்கு ஒரு மணித்தியாலமோ அல்லது அரை மணித்தியாலமோ நேரம் இல்லையா? அதிகாலைப் பொழுதில் அமர்ந்திருந்து பாபாவை நினைவு செய்யுங்கள், இதில் உங்களுக்கு எச்சிரமமும் இல்லை. அதிகாலைப் பொழுதில் விழித்தெழுந்து, தந்தையை நினைவு செய்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். ஏனையோருக்கு நன்மை செய்யாவிட்டாலும், குறைந்தபட்சம், உங்களுக்காவது நன்மை செய்யுங்கள்! நீங்கள் அதிகளவு கருணைநிறைந்தவராகி, அதிகளவுக்குச் சுயத்துக்கும் பின்னர் ஏனையோருக்கும் நன்மை செய்தால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். இது ஒரு பெரும் வருமானமாகும். தங்களுக்கு நேரமில்லை என அதிகளவு செல்வமுடையவர்கள் கூறுகிறார்கள். செல்வந்தர்கள் அங்கே ஏழையாக இருப்பார்கள், ஏழைகள் செல்வந்தர்களாக இருப்பார்கள். தாய்மார்கள் அதிகளவுக்கு அழுகிறார்கள். நீங்கள் அவர்களைச் சிரிக்கவைக்க வேண்டும். சதா நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். மதுவனத்தில் அமைதி உள்ளது, ஆகவே உங்களால் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்க முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சத்திய பூமிக்குச் செல்வதற்காக ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதியுங்கள். ஆத்ம உணர்வுடையவராக இருங்கள். அந்த உக்கிய, பழைய சப்பாத்தின் (சரீரம்) உணர்வைத் துறந்து விடுங்கள்.

2. கருண நிறைந்தவர்களாகி, உங்களுக்கும் ஏனையோருக்கும் நன்மையைக் கொண்டு வாருங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையை நினைவு செய்து, சுய தரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய நல்லாசிகளினால் எந்தவொரு வீணானவற்றையும் சக்தி வாய்ந்தவையாக மாற்றுகின்ற ஒரு புனித அன்னம் ஆகுவீர்களாக.

ஒரு புனித அன்னம் எல்லா எதிர்மறையானவற்றையும் ஒதுக்கிவிட்டு நேர்முகமானவற்றை மட்டுமே கிரகிக்கும். எதையும் பார்க்கும் போதும் கேட்கும் போதும் எதையும் பார்க்காமலும் கேட்காமலும் இருங்கள். எதிர்மறையானவை என்றால் வீணான விடயங்கள் என்று அர்த்தமாகும். எனவே வீணான விடயங்களை கேட்கவோ செய்யவோ பேசவோ வேண்டாம். எந்தவொரு வீணானவற்றையும் சக்தி வாய்ந்தவையாக மாற்றுங்கள். இதற்கு நீங்கள் ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் நல்லாசிகளைக் கொண்டிருக்க வேண்டும். நல்லாசிகளினால் பிழையானதும் கூட சரியாகிவிடும். எனவே ஒருவர் எவ்வாறானவராக இருந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்தும் நல்லாசிகளை மட்டுமே வழங்குங்கள். நல்லாசிகள் கல்லையும் தண்ணீராக மாற்றுவதுடன் எந்தவொரு வீணானவற்றையும் சக்தி வாய்ந்தவையாக மாற்றிவிடும்.

சுலோகம்:
அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு அமைதி சொரூபம் எனும் ஸ்திதியில் நிலைத்திருங்கள்.