11.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நன்றாகக் கற்று, சுயராச்சியம் என்ற திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு அக்கறையை மாத்திரம் சதா கொண்டிருங்கள். இக்கல்வியின் மூலம் மட்டுமே நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள்.

கேள்வி:
எந்த ஒரு விடயத்தையிட்டு நீங்கள்; மனந்தளர்வடையாது, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்?

பதில்:
இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதையிட்டு நீங்கள் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க வேண்டும். இதற்காக முயற்சி செய்ய வேண்டுமேயன்றி, என்றுமே மனம் தளர்வடையாதீர்கள். இதற்;கான கல்வி மிகவும் இலகுவானதாகும். நீங்கள் வீட்டில் வாழும் பொழுதும் இதனைக் கற்கலாம். இதற்கான கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. ஆனால் நிச்சயமாக தைரியம் தேவையாகும்.

பாடல்:
நீங்களே தாயும், நீங்களே தந்தையும்..

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள், உங்கள் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். ஒரேயொருவருக்கான புகழே உள்ளது. பிரம்மாவும் விஷ்ணுவும், சங்கரரும் போற்றப்படாத போது, வேறு எவருக்கான புகழும் பாடப்பட முடியாது. படைப்பு பிரம்மாவினூடாகவும், அழிவு சக்கரரினூடாகவும், பராமரிப்பு விஷ்ணூவினூடாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. சிவபாபாவே இலக்ஷ்மிக்கும், நாராயணணுக்கும் அத் தகுதியைப் பெற்றுக் கொடுத்தார். அவர் மட்;டுமே போற்றப்படுகின்;றார். அவரையன்றி வேறு யாரைப் புகழ முடியும்? அவர்களை அவ்வாறு ஆக்குவதற்கு ஓர் ஆசிரியர் இல்லாதிருந்தால், அவர்களால் அவ்வாறு ஆகியிருக்க முடியாது. அதன் பின்னர் இராச்சியத்தை ஆட்சி செய்த சூரிய வம்சத்திற்குப் புகழ் உள்ளது. சங்கமயுகத்தில் தந்தை வந்திருக்காது விட்டால், அவர்;களால் தமது இராச்;சியத்திதைப் பெற்றிருக்க முடியாது. வேறு எவருக்கான புகழும் இல்லை. வெளிநாட்டினர் போன்றோரையும் புகழ வேண்டிய அவசியம் இல்லை. ஓரேயொருவரை அன்றி வேறு எவருக்கான புகழும் இல்லை. சிவாபாபாவே அதிமேலானவர். அவரினூடாகவே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக் கொள்கின்றீர்கள். ஆகையால் அவர் மிகவும் நன்றாக நினைவு செய்யப்பட வேண்டும். சட்டநிபுணர் ஆகுவதற்கு முன்னர், ஒருவர் கற்க வேண்டியிருப்பதைப் போன்று, நீங்கள் ஓர் அரசராக வேண்டுமாயின், அதற்காக நீங்கள் கற்க வேண்டும். சிவபாபாவே கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நன்றாகக் கற்பவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். கற்காதவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. நீங்கள் கற்பதற்காகவே ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். தூய்மை ஆகுதலே பிரதான விடயம் என்பதாலேயே நீங்கள் இதனைக் கற்க வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் தமோபிரதானாகவும், தூய்மையற்றவராக இருப்பதும் உங்களுக்குத் தெரியும். நல்ல மனிதர்களும், தீய மனிதர்களும் உள்ளனர். தூய்மையாக இருப்பவர்கள் நல்லவர்கள் எனப்படுகின்றார்கள். ஒருவர் நன்றாகக் கற்று, ஒரு முக்கியஸ்தர் ஆகினால்;, அவர் புகழப்படுகின்றார். எவ்வாறாயினும் அனைவரும் தூய்மையற்றவர்களே. தூய்மையற்றவர்கள் தூய்மையற்றவர்களைப் புகழ்கின்றார்கள். சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையானவர்கள். அங்கே எவரையும் எவரும் புகழ்வதில்லை. இங்கே தூய்மையான சந்நியாசிகளும், தூய்மையற்ற இல்லறத்தினரும் உள்ளனர். ஆகையால், தூய்மையானவர்கள் புகழப்படுகின்றார்கள். அங்கே, அரசரும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும் இருக்கின்றார்கள். தூ}ய்மையானது தூய்மையற்றது எனக் கூறுவதற்கு, அங்கே வேறு எந்தத் தர்மமும் இருக்க மாட்டாது. இங்கே இல்லறத்தினரைக்கூட சிலர் தொடர்ந்தும் புகழ்ந்து பாடுகின்றார்கள். உலகில் காரிருள் சூழ்ந்துள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் கற்பதில் அக்கறை கொண்டு, உங்களை அரசர்கள் ஆக்க வேண்டும். நன்றாக முயற்சி செய்பவர்கள் சுயாட்சி என்ற திலகத்தை இட்டுக் கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவதை இட்டு உற்சாகமாக இருக்க வேண்டும். இதனையிட்டு குழப்பம் அடைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமேயன்றி விரக்தி அடையக் கூடாது. இது படுக்கையில் படுத்தவாறே கற்கக் கூடிய ஒரு கல்வியாகும். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் உங்களால் இதனைக் கற்க முடியும். நீங்கள் வீட்டிலும் கற்கலாம். இது மிகவும் இலகுவானதொரு கல்வியாகும்! உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்வதுடன், பிறருக்கும் விளங்கப்படுத்துங்கள். ஏனைய சமயத்தினருக்கும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் எவரிடமும் கூறலாம். ஆத்மாக்கள் அனைவரதும் ஆதிசமயம் ஒன்றேயாகும். அதில் எந்த வேறுபாடும் இருக்க மாட்டாது. சரீர்த்தினாலேயே எண்ணிக்கையற்ற சமயங்கள் உள்ளன. ஆனால் ஆத்மாக்கள் ஒன்றேயாகும். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையின் குழந்தைகளாவார்கள். பாபா ஆத்மாக்களாகிய உங்களை தத்தெடுத்துள்ளார். ஆகையாலேயே பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் நினைவுகூரப்பட்டுள்ளன. ஆத்மாக்களின் தந்தை யார் என நீங்கள் எவருக்குமே விளங்கப்படுத்தலாம். நீங்கள் அவர்களிடம் நிரப்பக் கொடுக்கும் படிவம் மிகவும் அர்த்தம் நிறைந்தது. அனைவராலும் நினைவு செய்யப்படுகின்ற தந்தை ஒருவர் நிச்சயமாக உள்ளார். ஆத்மாக்கள் தமது தந்தையை நினைவு செய்கின்றார்கள். இக்காலத்தில், பாரதத்;தில், அவர்கள் எவரையுமே தந்தை என்று அழைக்கின்றார்கள். நகர பிதாவையும் (மேயர்) அவர்கள் தந்தை என்றே அழைக்கின்றார்கள்! எவ்வாறாயினும், ஆத்மாக்களின் தந்தை யார் என்பதை எவரும் அறியாதுள்ளார்கள். நீங்களே தாயும் தந்தையும் என அவர்;கள் பாடுகின்றார்கள். ஆனால், எவருக்குமே அவர் யார் என்பதோ அவர் எவ்வாறானவர் என்பதோ தெரியாது. பாரதத்தில் மாத்திரமே அவர் நீங்களே தாயும், தந்தையும் என அழைக்கின்றீர்கள். தந்தை தானே இங்கு வந்து, வாய்வழித் தோன்றல்களாகிய உங்களை படைக்கின்றார். பாரதம் தாய்நாடு என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இங்கேயே சிவபாபா தாயும், தந்தையும் என்ற தனது பாகத்தை நடிக்கின்றார். இங்கு மாத்திரமே கடவுள் தாயும் தந்தையும் என நினைவு கூரப்படுகின்றார். வெளிநாட்டில், அவர்கள், தந்தையான கடவுள் என்று மட்டுமே அவரை அழைக்கின்றார்கள். எனினும், குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ஒரு தாயும் இருக்க வேண்டும். ஒரு மனிதன் ஒரு மனைவியை ஏற்றுக்கொண்ட பின்னரே அவளுடன் இணைந்து குழந்தைகளை உருவாக்குகின்றார். ஒரு படைப்பு உருவாக்கப்படுகின்றது. இங்கும், பரமதந்தை, பரமாத்மாவான தந்தை இவருக்குள் பிரவேசித்து, அவரை தத்தெடுக்கின்றார். குழந்தைகள் உருவாக்கப்படுகின்றார்கள். ஆகையாலேயே அவர் தாயும் தந்தையும் என்று அழைக்கப்படுகின்றார். அவர் ஆத்மாக்களின் தந்தை ஆவார். அதன் பின்னர் அவர் இங்கே வந்து படைப்பை உருவாக்குகின்றார். இங்கே நீங்கள் அவரின் குழந்தைகள் ஆகுவதாலேயே நீங்கள் அவரை தாயும் தந்தையும் என அழைக்கின்றீர்கள். அது ஆத்மாக்கள் அனைவரும் வசிக்கின்ற உங்கள் இனிய வீடாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை அங்கே மீண்டும் அழைத்துச் செல்ல முடியாது. நீங்கள் சந்திக்கின்ற எவரிடமும் நீங்கள் உங்கள் இனிய வீட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்புகின்றீர்களா? என வினவுங்கள். அவ்வாறாயின் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும்! இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்களாக இருக்கின்றீர்கள். இது தமோபிரதான் உலகமான கலியுகமாகும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். கலியுக ஆத்மாக்களினால் வீடு திரும்ப முடியாது. ஆத்மாக்கள் இனிய வீட்டில் வாழும்பொழுது தூய்மையாகவே இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: தந்தையை நினைவு செய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிய முடியும். சரீரதாரிகளை நினைவு செய்யாதீர்கள். நீங்கள் அதிகளவு தந்தையை நினைவுசெய்யும் அளவிற்கு ஏற்ப அதிகளவு நீங்கள் தூய்மையாகி, வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தையும் கோருவீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் படத்தை எவருக்குமே இலகுவாக விளங்கப்படுத்தலாம். பாரதத்தில் அவர்களின் ஆட்சியே நிலவியது. அவர்கள் இராட்சியத்தை ஆட்சி செய்த போது, உலகில் அமைதி நிலவியது. தந்தையால் மாத்திரமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். அதனைச் செய்வதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. தந்தை புதிய உலகிற்காக இப்பொழுது எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். நாங்கள் எவ்வாறு அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக முடியும் என அவர் உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை மாத்திரமே ஞானம் நிறைந்தவர். ஆனால் அவரிடம் என்ன ஞானம் உள்ளது என்பதை எவருமே அறியாதுள்ளார்கள். எல்லையற்ற தந்தை மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் வரலாற்றையும் புவியியலையும் உங்களுக்குக் கூறுகின்றார். கடவுளை சர்வவியாபி என மனிதர்கள் சிலவேளைகளில் கூறிய போதிலும், அனைவருக்குள்ளும் என்ன உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும் என்றும் சிலவேளைகளில் கூறுகின்றார்;கள். அவ்வாறாயின் அவர்கள் தம்மை கடவுள் என்று அழைக்கக் கூடாது! தந்தை இங்கமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயங்கள் அனைத்தையும் மிகவும் நன்றாகக் கிரகித்து, மிகவும் மலர்ச்சியாக இருங்கள். இலக்ஷ்மி நாராயணனின் படங்கள் எப்பொழுதும் முகமலர்ச்சியுடனே சித்தரிக்கப்பட்டுள்ளது. பாடசாலையிலும், உயர்ந்த வகுப்புகளுக்கு கற்கச் செல்லும் மாணவர்கள் மிகவும் முகமலர்ச்சியுடனே இருப்பதுண்டு. ஏனையோரும் அவர்கள் மிகவும் பிரதானமான பரீட்சையில் சித்தியடைய உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். இதுவும் மிகவும் மேன்மையானதொரு கல்வியாகும். இங்கே கட்டணம் போன்ற எதற்கான அவசியமும் இல்லை. தைரியம் மாத்திரமே தேவையாகும். உங்களை ஆத்மாவெனக் கருதி தந்தையை நினைவு செய்யுங்கள். இதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! சிலர் இதற்கான சத்தியத்தைச் செய்த போதிலும் பின்னர் தமது முகத்தை அவலட்சணம் ஆக்கிக் கொள்கின்றார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள். அவர்கள் சித்தி அடையாத போது, அவர்களின் பெயர்கள் நினைவு கூரப்படுவதில்லை. பிறரைப் பொறுத்தவரை நிச்சயமாக இன்ன இன்னார் ஆரம்பம் முதல் தொடர்ந்தும் மிகவும் நன்றாக முன்னேறுகின்றார்கள்; என்று கூறப்படுகின்றது. அவர்கள் போற்றப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்காக நீங்கள் முயற்சி செய்து, ஓர் இராச்சியத்தைக் கோருங்கள். இக்கல்வியின் மூலம் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டும். இது இராஜயோகமே அன்றி பிரஜாயோகம் (பிரஜைகளாகுகின்ற யோகம்) அல்ல. எவ்வாறாயினும், பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். சிலரது முகத்திலிருந்தும் அவர்கள் செய்கின்ற சேவையிலிருந்தும் அவர்கள் எதற்குத் தகுதியானவர்கள் என்பதைக் கூறமுடியும். ஒரு மாணவன் வீட்டில் நடந்து கொள்வதைக் கொண்டு, அவன் முதற்தரத்திலா அல்லது மூன்றாம் தரத்திலா சித்தியெந்துவான் என்று புரிந்து கொள்ள முடியும். இங்கும் அவ்வாறே நிகழ்கின்றது. இறுதியில் பரீட்சை முடியும் போது, நீங்கள் அனைத்திற்கான காட்சியையும் காண்பீர்கள். ஒரு காட்சி கிடைப்பதற்கு அதிக காலம் எடுக்க மாட்டாது. அப்பொழுது நீங்கள் சித்தியடையாது விட்டதையிட்டு நீங்கள் வெட்கப்படுவீர்கள். சித்தி அடையாதவர்களை யார் விரும்புவார்கள்? மக்கள் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிகளவு மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் தந்தை கூறுகின்றார்: உங்களை அழுக்கடைந்தவர் ஆக்குவதில் முதல் இலக்கத்தைப் பெறுவது திரைப்படங்கள் ஆகும். பொதுவாக திரைப்படங்கள் பார்க்கச் செல்பவர்கள் தோல்வியடைந்து வீழ்ந்துவிடுகிறார்கள். திரைப்படம் பார்க்காது உறக்கத்திற்குச் செல்ல முடியாத சில பெண்களும் உள்ளனர். திரைப்படம் பார்ப்பவர்கள் நிச்சயமாக தூய்மையற்றவர்கள் ஆகுவதற்கான முயற்சியையே செய்கின்றார்கள். இங்கு நடக்கின்ற அனைத்தும், தமது சந்தோஷத்திற்கென மக்கள் நினைக்கின்ற அனைத்தும் அவர்களுக்குத் துன்பத்தையே கொடுக்கின்றன. அந்த சந்தோஷம் அழியக்கூடியதாகும். அநாதியான தந்தையிடம் இருந்து மட்டுமே உங்களால் அழியாத சந்தோஷத்தைப் பெற முடியும். உங்களை இலக்ஷ்மி நாராயணனைப் போன்றவர்களாக பாபா ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். முன்னர் நீங்கள் 84 பிறவிகளைப் பற்றி எழுதினீர்கள். இப்பொழுது பாபா 50 முதல் 60 வரையானப் பிறவிகளைப் பற்றிப் பேசுகின்றார், ஏனெனில் துவாபர யுகத்தில் கூட நீங்கள் செல்வந்தராகவும்; சந்தோஷமாகவும் இருந்தீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிய போதிலும், உங்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது. நீங்கள் முற்றாக தமோபிரதான் ஆகும் போதே உங்களுக்கு துன்பம் ஆரம்பமாகின்றது. முதலில் நீங்கள் சந்தோஷமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் மிகவும் சந்தோஷமற்றவர்கள் ஆகும் பொழுதே தந்தை வருகின்றார். அவர் மகாபாவிகளாகிய அஜ்மில் போன்றவர்களையும் ஈடேற்றுகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் மீண்டும் முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அதன் பின்னர் நான் உங்களுக்கு சத்திய உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். அனைவரும் நன்மை அடைகின்றனர். நான் அனைவரையும் அமைதி அல்லது சந்தோஷம் என்ற இலக்கிற்கு அழைத்துச் செல்கின்றேன். சத்தியயுகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அமைதி தாமத்திலும் அனைவரும் சந்தோஷமாகவே இருக்கின்றார்கள். உலகில் அமைதி நிலவ வேண்டும் என அனைவருமே விரும்புகின்றார்கள். அவர்களிடம் கூறுங்கள்: இலக்ஷ்மி நாராயணனின் ஆட்சி நிலவிய போது உலகில் அமைதி நிலவியது எனக் கூறுங்கள். அங்கே துன்பம் இருப்பதில்லை: துன்பமோ அமைதியின்மையோ இருக்க முடியாது. இங்கே ஒவ்வொரு வீட்டிலும் அமைதியின்மை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அமைதியின்மையே நிலவுகின்றது. முழு உலகிலும் அமைதியின்மை நிலவுகின்றது. அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பற்பல பகுதிகள் உள்ளன. 100 மைல்களுக்கு இடையே வெவ்வேறு மொழிகள் உள்ளன. சமஸ்கிருதமே பாரதத்தின் புராதன மொழி என அவர்கள் கூறிய போதிலும், எவருக்கும் ஆதிசனாதன தேவ தர்மத்தைப் பற்றித் தெரியாது. அவ்வாறாயின் அதுவே புராதன மொழியென அவர்களால் எவ்வாறு கூறமுடியும்? எப்பொழுது ஆதி சனாதன தேவ தர்மம் நிலவியது என்பதை நீங்கள் அவர்களிடம் கூறவேண்டும். உங்கள் மத்தியிலும் இது வரிசைக்கிரமமாகவே உள்ளது. சிலர் மந்த புத்தியுடையவர்களாக உள்ளார்கள். ஒருவருக்குக் கற்புத்தி உடையவர்களை இனங்கண்டுவிட முடியும். அறியாமைப் பாதையில் அவர்கள் கூறுகின்றார்கள்: அன்புள்ள கடவுளே, இவரின் புத்தியின் பூட்டைத் திறந்து விடுங்கள்! தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் ஞானம் என்ற ஞானோதயத்தை கொடுப்பதனால் பூட்டு திறக்கின்றது. இருப்பினும், சிலரின் புத்தியோ சிறிதளவேனும் திறக்கப்படுவதில்லை. பாபா, நீங்களே விவேகத்தின் புத்தி, தயவு செய்து எனது கணவரின் புத்தியைத் திறந்து விடுங்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: அதற்காக நான் இங்கு வரவில்லை. நான் இங்கமர்ந்திருந்து, ஒவ்வொருவரின் புத்தியின் பூட்டையும் திறப்பதில்லை. அவ்வாறாயின், அனைவரது புத்தியும் திறக்கப்பட்டு, அனைவருமே சக்கரவர்;த்தியும் சக்கரவர்த்தினியும் ஆகுவார்கள். நான் எவ்வாறு அனைவரது புத்தியின் பூட்டையும் திறக்க முடியும்? அவர்கள் சத்தியயுகத்திற்குச் செல்லாதவர்களாயின், என்னால் எவ்வாறு அவர்களின் பூட்டைத் திறக்க முடியும்? நாடகத்திற்கு ஏற்ப, அவரது புத்தி சரியான நேரத்தில் திறக்;கப்படும். என்னால் எவ்வாறு திறக்க முடியும்? அதுவும் நாடகத்தில் தங்கியுள்ளது. அனைவராலும் முழுமையாகச் சித்தி எய்த முடியாது. ஒரு பாடசாலையிலும் அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. இதுவும் ஒரு கல்வியாகும். பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். அனைவரது புத்தியும் திறக்கப்பட வேண்டுமாயின், பிரஜைகள் எங்கிருந்து வர முடியும்? அது நியதி அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரின் முயற்சியிலிருந்தும் கூறிவிடலாம். நன்றாகக் கற்பவர்கள் எங்கும் அழைக்கப்படுகின்றார்கள். யார் நன்றாகச் சேவை செய்கின்றார்கள் என்பதை பாபா அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாகக் கற்கவேண்டும். நீங்கள் நன்றாகக் கற்றால், நான் உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். அல்லாவிட்டால், தண்டனை கடுமையாக இருக்கும். அத்துடன் அந்தஸ்தும் அழிந்து விடும். ஒரு மாணவர் தனது ஆசிரியரை பெருமைபடுத்த வேண்டும். நீங்கள் சத்தியயுகத்தில் இருந்த பொழுது, நீங்கள் தெய்வீகப் புத்தி கொண்டிருந்தீர்கள். இப்பொழுது இது கலியுகம் என்பதால், எவ்வாறு எவரேனும் சத்தியயுகப் புத்தியைக் கொண்டிருக்க முடியும்? ஒரேயொரு இராச்சியமும், ஒரேயொரு தர்மமும் இருந்த பொழுது, உலகில் அமைதி நிலவியது. பாரதத்தில் அவர்களது இராச்சியம் இருந்தபோது, உலகில் அமைதி நிலவியது என்று நீங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கலாம். நாளடைவில், அனைவரும் நிச்சயமாக இதனைப் புரிந்துகொள்வார்கள். குழந்தைகளாகிய உங்கள் பெயர்கள் போற்றப்படும். மக்கள் ஏனைய கல்விகளில், பல புத்தகங்கள் போன்றவற்றைக் கற்கின்றார்கள். இங்கே உங்களுக்கு அது போன்ற எதுவும் இல்லை. இக்கல்வி மிக இலகுவானது. ஆனால், நல்ல மகாராத்திகளுமே நினைவு செய்வதில் சித்தியெய்துவதில்லை. நினைவுச் சக்தி இல்லாத போது, ஞானவாள் வேலை செய்ய மாட்டாது. நீங்கள் அதிகளவு நினைவு செய்தாலே, அந்தச் சக்தி இருக்க முடியும். ஒருவர் பந்தனத்தில் இருந்தாலும், அவர் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்தால், அதில் அதிகளவு நன்மை உள்ளது. சிலர் பாபாவை என்றுமே சந்திக்காமல் இருந்தபோதிலும், அவர்கள் பாபாவின் நினைவில் சரீரத்தை விட்டு; நீங்கிச் செல்கின்றார்கள். ஆகையால், அவர்கள் அதிகளவு பாபாவை நினைவு செய்ததால், அவர்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றார்கள். அவர்கள் தந்தையின் நினைவில் அன்புக் கண்ணீர்; சிந்துகின்றார்கள். அக்கண்ணீர், முத்துக்கள் ஆகுகின்றன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்குரிய முயற்சியைச் செய்யுங்கள். இக் கல்வியைக் கற்று, இராச்சியம் என்ற திலகத்தை நீங்கள் இட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஞானத்தை மிகவும் நன்றாகக் கிரகித்து, சதா மலர்ச்சியாக இருங்கள்.

2. நினைவுச் சக்தியின் மூலம், ஞானவாளை நிரப்பிக் கொள்ளுங்கள். நினைவு செய்வதன் மூலம், சகல பந்தனங்களையும் துண்டித்து விடுங்கள். என்றுமே தீய திரைப்படங்களை பார்க்கவோ அல்லது உங்கள் எண்ணங்களை தூய்மையற்றதாகவோ ஆக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
ஓய்வு என்ற எல்லையற்ற ஸ்திதியில் நிலைத்திருந்து, ஏகாந்தத்திலும் நினைவுசெய்வதிலும் ஈடுபட்டிருப்பீர்களாக.

தற்காலத்திற்கு ஏற்ப, நீங்கள் அனைவருமே ஓய்வு ஸ்திதியை அண்மித்துள்ளீர்கள். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்கள் குழந்தைப்பருவ விளையாட்டை விளையாட மாட்டார்கள். அவர்கள் சதா ஏகாந்தத்திலும் நினைவுசெய்வதிலும் நிலைத்திருப்பார்கள். ஓய்வு என்ற எல்லையற்ற ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற நீங்கள் அனைவருமே ஒரேயொருவரின் ஆழத்தில் திளைத்திருக்கிறீர்கள், அதாவது சதா ஏகாந்தத்தில் நிலைத்திருக்கிறீர்கள். அத்துடன், நீங்கள் ஒரேயொருவரை மாத்திரமே தொடர்ந்தும் நினைவுசெய்து, நினைவுசொரூபம் ஆகவேண்டும். குழந்தைகள் தந்தைக்குச் சமம் ஆகுதலே குழந்தைகள் அனைவர் மீதும் பாப்தாதா கொண்டுள்ள தூய எதிர்பார்ப்பாகும். எப்பொழுதும்; நினைவுசெய்வதில் அமிழ்ந்திருங்கள். சமம் ஆகுதல் என்றால் அமிழ்ந்திருத்தல்: இதுவே ஓய்வு ஸ்திதியில் இருப்பது என்பதன் அடையாளமாகும்.

சுலோகம்:
தைரியம் என்ற ஒரு அடியை எடுத்து வைக்கும்போது, தந்தை உதவி என்ற ஆயிரம் அடிகளை எடுத்து வைப்பார்.