11.09.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
சாராம்;சம்: இனிய குழந்தைகளே, சத்தியமான தந்தை சத்திய உலகை ஸ்தாபிக்கிறார். சாதாரண மனிதரில் இருந்து எவ்வாறு நாராயணன் ஆகுவது என்ற உண்மை ஞானத்தை செவிமடுப்பதற்காகவே நீங்கள் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள்.

கேள்வி:
இல்லறத்தில் வாழும் பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஏன் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பதில்:
உங்களது வழிகளும் முறைகளும் தனித்துவமானவை என்பதாலாகும். உங்களது ஞானம் மறைமுகமானது. இதனாலேயே அனைவருக்குமான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக நீங்கள் எல்லையற்ற புத்தியைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளார்த்;தமாக நீங்கள் அனைவரும் சகோதரர்கள் அல்லது சகோதர சகோதரிகள் என்ற விழிப்புணர்வைப் பேணுங்கள். எனினும்; ஒரு மனைவி தனது கணவரிடம் நீங்கள் என் சகோதரர் என்று கூற வேண்டும் என்று அர்த்தம் அல்ல. ஏனையவர்கள் இதைச் செவிமடுக்கும் பொழுது இவருக்கு என்ன நடந்தது என வியப்படைவார்கள். நீங்கள் மிகவும் சாதுரியமாக இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் ஆன்மிகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாது, தந்தை என்று கூறுவீர்களாயினும் இவர் ஆன்மிகத் தந்தை என்பது புரிந்துகொள்ளப்படும். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அனைவரும் சகோதரர்கள் எனக் கூறுகிறீர்கள். ஆகவே தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் அனைவருக்கும் விளங்கப்படுத்துவதில்லை. கடவுள் பேசுகிறார் என்பதும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாருடன்? அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்தக் கடவுளே தந்தை, ஆகவே கடவுளின் குழந்தைகள் அனைவரும் சகோதரர்கள். கடவுள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இராஜ யோகத்தைக் கற்பித்திருக்கிறார். உங்களது புத்தியின் பூட்டுக்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. உங்களைத் தவிர வேறு எவராலும் இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்க முடியாது. செய்தியைப் பெறுபவர்கள் தொடர்ந்து இப் பாடசாலைக்கு வந்து கற்பார்கள். கண்காட்சியை பார்த்த பின்னர், தாம் இப்பொழுது சென்று, இதைப் பற்றி மேலும் செவிமடுக்க வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள். ஞானக்கடலும் தூய்மையாக்குபவரும் கீதை ஞானத்தை அருள்பவருமாகிய கடவுள் சிவனே பேசுகிறார் என்பதே முதலாவதும் அதிமுக்கியம் வாய்ந்ததுமான விடயமாகும். உங்களுக்கு விளங்கப்படுத்திக் கற்பிப்பது யார் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்த ஞானக்கடலாகிய பரமாத்மா அசரீரியானவர். அவர் சத்தியமானவர். அவர் உங்களுக்கு சத்தியத்தையே கூறுகிறார். ஆகவே அதனைப்பற்றி எந்தக் கேள்வியும் இருக்க முடியாது. நீங்கள் அனைத்தையும் சத்தியமானவரிடம் கொடுத்திருக்கின்றீர்கள் என்பதால் பரமாத்மாவாகிய பரமதந்தையே, பிரம்மாவின் மூலம் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதை முதலில் நீங்கள் விளங்கப்படுத்துங்கள். இது இராஜரீக அந்தஸ்தாகும். அனைவரது தந்தையானவரும், இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையுமான ஒரேயொருவரே அமர்ந்திருந்து எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்றும் அவரே அதியுயர் அதிகாரம் உடையவர் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள் எக் கேள்விகளையும் கொண்டிருக்க மாட்டார்கள். அவரே தூய்மையாக்குபவர். அவர் இங்கு வரும் போது அவர் நிச்சயமாக தனக்குரிய நேரத்திலேயே வரவேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதை உங்களால் பார்க்க முடிகிறது. விநாசத்திற்குப் பின்னர் விகாரமற்ற உலகம் இருக்கும். பாரதம் விகாரமற்றிருந்தது என்பது மக்களுக்குத் தெரியாது. அவர்களது புத்தி வேலை செய்வதில்லை. அவர்கள் தம்மை கோட்ரீஜ் பூட்டினால் பூட்டிக் கொண்டுள்ளார்கள். ஒரேஒரு தந்தையிடமே அவற்றிற்கான திறப்பு இருக்கிறது. இதனாலேயே உங்களுக்குக் கற்பிப்பது யார் என்பது எவருக்கும் தெரியாது. இந்த தாதாவே என அவர்கள் நினைப்பதனால் தகாத விடயங்களைக் கூறி, அவரை அவதூறு செய்கிறார்கள். ஆகையால், கடவுள் சிவன் பேசுகிறார், என எழுதப்பட்டுள்ளதை அனைத்திற்கும் முதலில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவரே சத்தியமானவர். தந்தை ஞானம் நிறைந்தவர். அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம் மத்தி இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இப்பொழுது இக் கற்பித்தல்களை எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். அவர் உலகைப் படைப்பவரும், தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குபவரும் ஆவார். ஆகவே அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து பரமாத்மா பரமதந்தையுடனான உங்களது உறவு முறையை விளங்கப்படுத்துங்கள். அவர் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்குரிய உண்மையான ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை சத்தியமானவர், தந்தையே சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் சட்டத்தரணியிடம் கல்வி கற்கச் செல்லும் போது, நீங்கள் சட்டத்தரணி ஆகுவதற்கே அங்கு சென்றுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இப்பொழுது இருக்கிறது. சிலரிடம் இந்த நம்பிக்கை உள்ளது ஆனால் பின்னர் அவர்கள் சந்தேகங்களை வளர்ப்பதனால் அனைவரும் அவர்களிடம் கூறுகின்றனர்: கடவுளே உங்களுக்கு கற்பிக்கிறார் என நீங்கள் கூறுவது வழமை, ஆகவே ஏன் கடவுளை விட்டு வந்துவிட்டீர்கள்? அவர்களிடம் சந்தேகங்கள் உள்ளபோது அவர்கள் ஓடிவிடுகின்றனர். பின்னர் அவர்கள் ஏதோவொரு பாவச் செயலைச் செய்கின்றனர். கடவுள் பேசுகிறார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வெற்றிகொண்டவர் ஆகுவீர்கள். தூய்மையாகுபவர்கள் தூய உலகிற்குச் செல்வார்கள். இங்கு இது இராஜயோகத்திற்கான விடயமாகும். நீங்கள் அங்கு சென்று அங்கு ஆட்சிபுரிவீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் தங்கள் கர்மக்கணக்குகளைத் தீர்த்து வீட்டிற்குத் திரும்புவார்கள். இது தீர்வுக்கான நேரமாகும். உங்களது புத்தி இப்பொழுது கூறுகிறது: சத்தியயுகம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். சத்தியயுகமே தூய்மையான உலகம் என அழைக்கப்படுகிறது. ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். பின்னர் அவர்கள் தங்கள் சொந்தப் பாகங்களை மீண்டும் நடிக்க வேண்டும். நீங்களும் தூய்மையாகுவதற்கும் தூய உலகின் அதிபதிகள் ஆகுவதற்குமாக முயற்சியைத் தொடர்ந்தும் செய்கிறீர்கள். நீங்கள் உங்களை அதிபதிகளாகவே கருதுகிறீர்கள். இல்லையா? பிரஜைகளுமே அதிபதிகள் ஆவார்கள். இப்பொழுது கூட மக்கள் கூறுகின்றனர்: எங்களது பாரதம்! தற்பொழுது அனைவரும் நரக வாசிகளே என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சுவர்க்க வாசிகளாகுவதற்காக நாங்கள் இப்பொழுது இராஜ யோகத்தைக் கற்கின்றோம். அனைவரும் சுவர்க்க வாசிகள் ஆகுவார்கள் என்றில்லை. தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கம் முடிவுக்கு வரும்போது மாத்திரமே நான் வருகின்றேன். நான் வந்து பக்தர்கள் அனைவருக்கும் அவர்களது பக்தியின் பலனைக் கொடுக்க வேண்டும். பக்தர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். தொடர்ந்து அனைவரும் கூவியழைக்கின்றனர்: ஓ கடவுளாகிய தந்தையே! இந்த ஓ கடவுளாகிய தந்தையே! ஓ கடவுளே! என்ற வார்த்தைகள் நிச்சயமாக பக்தர்களின் வாயிலிருந்து வெளிவரும். பக்திக்கும் ஞானத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. நீங்கள் ஓ ஈஸ்வர்! ஓ கடவுளே என ஒருபோதும் கூறமாட்டீர்கள். மனிதர்கள் இப் பயிற்சியை அரைக்கல்பமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர் உங்களது தந்தை என்பது உங்களுக்குத் தெரியும். ஓ பாபா என நீங்கள் கூற வேண்டியதில்லை. நீங்கள் உங்களது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறவேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைக் கோரிக் கொள்கிறீர்கள் என்ற நம்பிக்கையை முதலில் கொண்டிருங்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை, ஆஸ்தியைக் கோருவதற்கு தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறார். அவரே சத்தியமான தந்தை. தந்தை எந்தக் குழந்தைகளுக்கு ஞான அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தாரோ, எவரை ஞானச் சிதையில் அமரச் செய்தாரோ, எவரை உலக அதிபதிகளாகிய தேவர்கள் ஆக்கினாரோ, அவர்கள் இப்பொழுது காமச்சிதையில் அமர்ந்ததன் மூலம் எரிந்துபோய் உள்ளனர் என்பது தந்தைக்குத் தெரியும். நான் இப்பொழுது அவர்களை ஞானச் சிதையில் அமரச் செய்து, அவர்களை ஆழமான அவர்களது தூக்கத்தில் இருந்து விழிதெழச் செய்து, அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாமத்திலும் சந்தோஷதாமத்திலும் வசிக்கிறீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். சந்தோஷதாமம் விகாரமற்ற உலகம் அதாவது முற்றிலும் விகாரமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது. தேவர்கள் அங்கு வசிக்கின்றனர், மற்றையது ஆத்மாக்களின் வீடாகிய இனிமையான வீடு ஆகும். அனைத்து நடிகர்களும் தமது பாகங்களை நடிப்பதற்காகவே அமைதிதாமத்திலிருந்து இங்கு வருகின்றனர். ஆத்மாக்களாகிய நாங்கள் இவ்விடத்து வாசிகள் அல்ல. அந்த நடிகர்கள் இவ்விடத்து வாசிகள் ஆவர்கள். அவர்கள் வீட்டிலிருந்து வந்து தங்கள் ஆடைகளை மாற்றித் தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். உங்களது வீடு நீங்கள் திரும்பிச் செல்ல உள்ள அமைதிதாமம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நடிகர்கள் அனைவரும் மேடைக்கு வந்ததும் தந்தை வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறார். இதனாலேயே அவர் முக்தியளிப்பவர் என்றும் வழிகாட்டி என்றும் அழைக்கப்படுகிறார். அவரே துன்பத்தை அகற்றி சந்தோஷத்தை அருள்பவர். ஆகவே மனிதர்கள் அனைவரும் எங்கு செல்வார்கள்? இதைப் பற்றி சிந்தியுங்கள்! ஏன் நீங்கள் தூய்மையாக்குபவரை வருமாறு அழைத்தீர்கள்? உங்களது மரணத்திற்காகவே ஆகும்! துன்ப உலகில் வாழ உங்களுக்கு விரும்பமில்லை இதனாலேயே வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறீர்கள். இங்கு, அனைவரும் முக்தியை நம்புகின்றனர். பாரதத்தின் புராதன யோகம் மிகவும் பிரபல்யமானது. புராதன இராஜ யோகத்தைக் கற்பிப்பதற்காக மக்கள் வெளிநாட்டிற்குச் செல்கின்றனர். சந்நியாசிகளுக்கு மரியாதை கொடுக்கின்ற பல கிறிஸ்தவர்கள் உள்ளனர். காவியுடை ஹத்த யோகிகளின் ஆடை ஆகும். நீங்கள் உங்களது வீட்டையும் குடும்பத்தையும் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளை ஆடைகளையே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் கூட உங்களுக்கு இல்லை. எவ்வாறாயினும் வெண்மை சிறந்தது. நீங்கள் பத்தியில் இருந்தமையால் இது உங்களது ஆடையாகிவிட்டது. தற்காலத்தில் மக்கள் வெண்ணிறத்தை பெருமளவு விரும்புகின்றனர். எவராவது மரணிக்கும் போது அவர்கள் அவரை வெள்ளை துணியினால் மூடுகின்றனர். ஆகவே வருபவர்கள் எவராக இருப்பினும் அனைத்திற்கும் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். இரு தந்தையர் உள்ளனர். இவ் விடயத்தப் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். கண்காட்சிகளில் உங்களால் அவர்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்த முடிவதில்லை. சத்தியயுகத்தில் ஒரு தந்தையே உள்ளார் ஆனால் இந்நேரத்தில் நீங்கள் மூன்று தந்தையரைக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் கடவுள் பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்திலேயே பிரவேசிக்கிறார். அவரும் அனைவரதும் தந்தையாவார். சரி, மூன்று தந்தையரில் யார் அதியுயர்ந்த ஆஸ்தியைக் கொடுக்கிறார்? எவ்வாறு அசரீரியான தந்தையால் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்? ஆகவே அவர் அதனை பிரம்மா மூலமாகவே கொடுக்கிறார். அவர் பிரம்மா மூலமாக ஸ்தாபனையை மேற்கொள்வதுடன் பிரம்மா மூலமாகவே ஆஸ்தியையும் கொடுக்கிறார். இப்படத்தைப் பயன்படுத்தி உங்களால் மிகத் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். சிவபாபாவும் பின்னர் பிரஜாபிதா பிரம்மாவும், ஆதிதேவும் ஆதிதேவியும் உள்ளனர். இவர் முப்பாட்டனார் ஆவார். தந்தை கூறுகிறார்: சிவனாகிய நான் முப்பாட்டனார் என அழைக்கப்படுவதில்லை. நான் அனைவரதும் தந்தையே ஆவேன். இவரே பிரஜாபிதா பிரம்மா ஆவார். நீங்கள் சகோதர சகோதரிகள். நீங்கள் ஒருவரோடு ஒருவர் குற்றமான துன்புறுத்தலில் ஈடுபட முடியாது. காமப் பார்வை தம்பதியினரை ஈர்க்கும் போது அவர்கள் வீழ்வதுடன் தந்தையையும் மறந்து விடுகின்றனர். தந்தை கூறுகிறார்: நீங்கள் எனது குழந்தையாகி பின்னர் உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொள்கிறீர்கள்! எல்லையற்ற தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இந்தப் போதையைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்; இல்லறத்திலேயே வாழ வேண்டும் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களது பௌதீக உறவினர்களுக்கான பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும். லௌகீகத் தந்தையை நீங்கள் தந்தை என்றே அழைப்பீர்கள். அவரை சகோதரர் என நீங்கள் அழைக்க முடியாது. சாதாரணமான முறையில் உங்கள் தந்தையை நீங்கள் தந்தை என்றே அழைப்பீர்கள். அவர் உங்களது லௌகீகத் தந்தை என்பது உங்கள் புத்தியில் உள்ளது. உங்களிடம் ஞானம் உள்ளது. இந்த ஞானம் தனித்துவமானது! இக்காலத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் முதற் பெயரைக் கூறியே அழைக்கின்றனர். எவ்வாறாயினும் விருந்தாளி ஒருவருக்கு முன்னால் நீங்கள் அவரை உங்கள் சகோதரர் என அழைத்தால், உங்களுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்றே அவர் நினைப்பார். நீங்கள் மிகவும் சாதுரியமாக இருக்க வேண்டும். உங்களது ஞானம் மறைமுகமானது, அத்துடன் உங்களது உறவுமுறைகளும் மறைமுகமானவை. பொதுவாக, பெண்கள் தங்களது கணவன்மார்களின் பெயரை கூறுவதில்லை. கணவன்மார் தங்கள் மனைவிமாரின் பெயரைக் கூறுவார்கள். நீங்கள் ஒருவருடன் ஒருவர் மிக சாதுரியமாகத் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் லௌகீக உறவினர்களுடனான உங்கள் பொறுப்புக்களை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். உங்கள் புத்தியோ மேலே செல்ல வேண்டும். நாம் எங்களது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருகின்றோம் எவ்வாறாயினும், நீங்கள் உங்கள் மாமனாரை மாமா என்றும், உங்கள் தந்தையை அப்பா என்றும் அழைக்க வேண்டும். பிரம்ம குமாரர்கள், குமாரிகள் ஆகாதவர்கள், தம்மை சகோதர சகோதரிகளாகக் கருத மாட்டார்கள். பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆனவர்களே இவற்றை புரிந்து கொள்வார்கள். வெளியாட்கள் இதனைக் கேட்டு வியப்படைவார்கள். இந்த விடயங்களைப் புரிந்து கொள்ள மிக நல்ல புத்தி தேவைப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்கள் புத்தியை தந்தை பரந்ததாக்குகின்றார். முதலில், நீங்கள் எல்லைக்குட்பட்ட புத்தியைக் கொண்டிருந்தீர்கள். உங்கள் புத்தி இப்பொழுது எல்லையற்றதாகிறது. அவரே எங்கள் எல்லையற்ற தந்தை. இவர்கள் அனைவருமே சகோதர சகோதரிகள். வீட்டில் மாமியாரை மாமி என்றே அழைக்க வேண்டும், சகோதரி என்றல்ல. வீட்டில் இருக்கும் போது சாதுரியமாகத் தொடர்பு கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கணவரை நீங்கள் சகோதரர் என்றும் உங்கள் மாமியாரை சகோதரி என்றும் அழைத்தால், மக்கள் இது என்ன? என்று யோசிப்பார்கள். வேறெவருமன்றி, நீங்கள் மட்டுமே இந்த ஞான விடயங்களை அறிவீர்கள். கூறப்படுகின்றது: பிரபு (கடவுள்), நீங்கள் மட்டுமே உங்கள் வழிகளையும், முறைகளையும் அறிவீர்கள். நீங்கள் இப்போது அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். எனவே நீங்கள் மட்டுமே உங்கள்; வழிகளையும், முறைகளையும் அறிவீர்கள். எவருமே குழப்பம் அடையாதவாறு நீங்கள் மிக எச்சரிக்கையுடன் முன்னேற வேண்டும். கண்காட்சிகளில், கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் முதலில் விளங்கப்படுத்த வேண்டும். இப்போது, யார் கடவுள் என எமக்குக் கூறுங்கள்? அசரீரியான சிவனா அல்லது சரீரதாரியான ஸ்ரீ கிருஷ்ணரா? கீதையில் கூறப்பட்டுள்ளது: கடவுள் பேசுகிறார்: அந்த வாசகங்கள் பரமாத்மாவான சிவனால் பேசப்பட்டதா, அல்லது ஸ்ரீ கிருஷ்ணரால் பேசப்பட்டதா? கிருஷ்ணரே சத்தியயுகத்தின் முதல் இளவரசர். கிருஷ்ணரின் ஜெயந்தியே சிவ ஜெயந்தி என உங்களால் கூற முடியாது. கிருஷ்ண ஜெயந்தி, சிவ ஜெயந்தியின் பின்னரே வருகின்றது. சிவஜெயந்தியின் பின்னர் அவர் எவ்வாறு இளவரசனான ஸ்ரீ கிருஷ்ணராகினார் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். சிவஜெயந்தி, அதன்பின்னர் கீதை ஜெயந்தி, அதை அடுத்து உடனடியாகவே கிருஷ்ண ஜெயந்தியும் வருகின்றது. ஏனெனில், தந்தை இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் புகுந்துள்ளது. பரமாத்மா சிவன் இங்கு வரும்வரைக்கும் நீங்கள் சிவஜெயந்தியினைக் கொண்டாட முடியாது. சிவன் வந்து கிருஷ்ணரின் பூமியை ஸ்தாபிக்காவிடின், கிருஷ்ணஜெயந்தி எவ்வாறு கொண்டாடப்படும்? அவர்கள் கிருஷ்ணஜெயந்தியைக் கொண்டாடுகின்றார்கள், ஆனால் அவர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ணர் ஒர் இளவரசர், எனவே அவர் நிச்சயமாகச் சத்தியயுகத்திலேயே இருப்பார். தேவர்களுக்கான இராச்சியம் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆட்சி உரிமையைப் பெற்றவர் ஒரேயொரு கிருஷ்ணராக மட்டும் இருக்க முடியாது. நிச்சயமாக கிருஷ்ணரின் தேசம் இருக்க வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் தேசத்தை பற்றிப் பேசுகின்றார்கள். இது பின் அசுரனான கம்சனின் தேசம் ஆகின்றது. கிருஷ்ணரின் தேசம் புதிய உலகம். ஆனால் கம்சனின் தேசமோ பழைய உலகமாகும். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையில் யுத்தம் இடம்பெற்றதாகவும் அதில் தேவர்கள் வென்றதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். எப்படியாயினும், அது அப்படியல்ல. கம்ச தேசம் அழிக்கப்படும்போதே கிருஷ்ண தேசம் ஸ்தாபிக்கப்படுகின்றது. கம்ச தேசம் பழைய உலகிலேயே இருக்கும். கம்சனும் அசுரர்களும் புதிய உலகில் இருக்கமாட்டார்க்ள. இப்போது எவ்வளவு மனிதர்கள் இங்கு இருக்கின்றார்கள் என்று பாருங்கள். சத்தியயுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள். இதனையும் உங்;களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் புத்தி இப்போது இந்த விடயங்களைப் பற்றிச் சிந்திக்கின்றது. தேவர்கள் போரிடுவதில்லை. தேவ சமுதாயம் சத்தியயுகத்தில் மட்டுமே இருக்கின்றது. அசுர சமுதாயம் இங்கு உள்ளது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலோ அல்லது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையிலோ யுத்தம் இடம்பெறவில்லை. நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இந்;த விகாரங்களை வெல்லுங்கள்;, நீங்கள் உலகை வெல்வீர்கள். இதில் சண்டையிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் யுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது வன்முறையாகும். நீங்கள் இராவணனை அஹிம்சையின் மூலமே வெல்ல வேண்டும். தந்தையை நினைப்பதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பாரதத்தின் புராதன இராஜயோகம் மிகவும் பிரபல்யமானது. தந்தை கூறுகின்றார்: உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணையுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையே தூய்மையாக்குபவர், எனவே உங்கள் புத்தியின் யோகம் அந்தத் தந்தையுடன் இணைக்கப்பட வேண்டும். அதன் மூலம் நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் இப்போது நடைமுறைரீதியாக அவருடன் யோகம் செய்கிறீர்கள். இதில் சண்டை இடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. நன்றாகக் கற்று தந்தையுடன் யோகம் செய்பவர்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியை சென்ற கல்பத்தில் தாம் பெற்றுக் கொண்டது போன்று பெற்றுக்கொள்வார்கள். இந்தப் பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்படப் போகின்றது. அவர்கள் அனைவரும் தமது கர்மக்கணக்குகளை தீர்த்து வீடு திரும்புவார்கள். எனவே, வகுப்பு மாற்றப்பட்டு அவர்கள் வரிசைக்கிரமமாக அமர்த்தப்படுகின்றார்கள். நீங்களும் சென்று இராச்சியத்தை வரிசைக்கிரமமாக ஆட்சி புரிவீர்கள். இவை அத்தகைய தருக்க ரீதியான விடயங்கள் என்பதால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. கணக்குகள் தீர்ப்பதற்குரிய இந்த நேரத்திலேயே சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஆகவே நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தந்தையைப் பற்றியோ அல்லது அவரது பணியைப் பற்றியோ ஒருபோதும் சந்தேகங்களைக் கொண்டிராதீர்கள்.

2. ஞானமும் உறவுமுறைகளும் மறைமுகமானவை. ஆகவே எல்லையற்ற புத்தியைக் கொண்டிருந்து உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சாதுரியமான முறையில் தொடர்புகொள்ளுங்கள். செவிமடுப்பவர்கள் குழப்பமடையத்தக்க வகையிலான அத்தகைய வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய சொந்த கட்டளைகளையும் பிறரின் கட்டளைகளையும் முடிப்பதன் மூலம் ஸ்ரீமத்தின் அடிப்படையில் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாக இருந்து, பலமில்லியன் மடங்கு வருமானம் ஈட்டுவீர்களாக.

ஸ்ரீமத்தை பின்பற்றுபவர்கள் தமது சொந்த கட்டளைகளுக்கு அல்லது பிறரின் கட்டளைகளுக்கு ஏற்ப ஒரு எண்ணத்தையேனும் கொண்டிருக்க முடியாது. உங்கள் ஸ்திதியின் வேகம் விரைவாக இல்லாதிருப்பின், நிச்சயமாக உங்கள் சொந்தக் கட்டளைகள் அல்லது பிறரின் கட்டளைகள் ஸ்ரீமத்துடன் கலக்கப்பட்டுள்ளன. ஓர் ஆத்மாவின் எல்லைக்குட்பட்ட சம்ஸ்காரங்களிற்கு ஏற்ப உருவாகின்ற எண்ணங்களே மனதின் கட்டளைகளாகும், இதுவே ஆத்மாவிற்கு தளம்பலை ஏற்படுத்துகின்றது. ஆகையால், உங்களை சோதியுங்கள் அல்லது ஏனையோர் உங்களை சோதிக்கட்டும். ஸ்ரீமத் இல்லாது ஒரு அடியையேனும் எடுத்து வைக்காதீர்கள், அப்பொழுதே நீங்கள் பல மில்லியன் வருமானத்தை சேர்த்து, பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாக ஆக முடியும்.

சுலோகம்:
உங்கள் மனதில் அனைவரையிட்டும் சதா உபகாரமிக்க உணர்வுகளை கொண்டிருப்பதே ஓர் உலக உபகார ஆத்மாவின் கடமையாகும்.