11.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, யோக அக்;கினியில் உங்கள் பாவங்களை அழித்து, முற்றாகவே சதோபிரதான் ஆகுங்கள். எவ்விதமான பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.

கேள்வி:
சத்திய யுகத்திலே எதன் அடிப்படையில் நீங்கள் ஒரு மேன்மையான அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள்? இந்த இடத்தின் எந்த வழக்கத்தைப் பற்றி நீங்கள் அனைவருக்கும் கூறவேண்டும்?

பதில்:
சத்திய யுகத்தில் உங்கள் தூய்மையின் அடிப்படையிலேயே ஒரு மேன்மையான அந்தஸ்து பெறப்படுகின்றது. குறைந்தளவிற்குத் தூய்மையைக் கிரகிப்பவர்கள், சத்திய யுகத்தில் தாமதித்தே வருவதுடன், ஒரு குறைந்த அந்தஸ்தையும் பெறுகின்றார்கள். இங்கு எவரும் வரும்பொழுது, அவர்களிடம் இவ்விடத்தின் வழக்கத்தைப் பற்றிக் கூறுங்கள்: நீங்கள் தானம் ஒன்றைச் செய்யும்பொழுது, கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்பட முடியும். ஐந்து விகாரங்களையும் தானம் செய்தால்;, நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்திடம் வினவ வேண்டும்: என்னிடம் ஏதாவது விகாரங்கள் உள்ளனவா?

ஓம் சாந்தி.
சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் எவ்வாறு மனிதர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்பதை ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். 5000 வருடங்களுக்கு முன்னரும் பாரதத்தில் சுவர்க்கம் இருந்தது. அதுவே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அப்பொழுது எவ்வளவு பேர்; இருந்தார்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சத்தியயுக ஆரம்பத்திலே அதிகபட்சம் 900,000 பேர் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்களே இருப்பார்கள். ஆரம்பத்தில் விருட்சம் சிறிதாகவே இருக்கின்றது. இந்நேரத்தில், கலியுகத்தின் இறுதியில் விருட்சம் மிகப் பெரிதாக வளர்ந்துள்ளது; இப்பொழுது அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இந்த நேரத்திலேயே கீதையின் கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்து, தேவ தர்மத்தை ஸ்தாபித்தார். சங்கம யுகத்திலேயே எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. 5000 வருடங்களின் முன்னர் பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதும், அப்பொழுது வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அத்தகைதொரு புதிய உலகை ஸ்தாபிப்பதற்காகத் தந்தை சங்கமயுகத்தில் வருகிறார். அது இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது, பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. சத்தியயுகத்தில் பாரதம் என்ற ஒரேயொரு தேசமே இருந்தது; வேறு எந்தத் தேசமும் இருக்கவில்லை. இப்பொழுது பல தேசங்கள் உள்ளன. பாரத தேசமும் இருக்கின்றது, ஆனால்; ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருப்பதில்லை; அது மறைந்து விட்டது. பரமாத்மாவான பரமதந்தை இப்பொழுது மீண்டும் ஒருமுறை பிரம்மாவின் மூலம் அதனை ஸ்தாபிக்கிறார். ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. சத்திய, திரேதா யுகங்களிலே வேறு எந்த இராச்சியமும் இருக்கவில்லை என்பதை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஏனைய சமயங்கள் பின்னரே வந்தன. அதிகளவு துன்பமும், அமைதியின்மையும், வன்முறையும் இருக்கின்றன. இது அதே மகாபாரத யுத்தமாகும். ஒருபுறம், ஐரோப்பிய வாசிகளான, யாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 5000 வருடங்களின் முன்னரும் ஏவுகணைகளைக் கண்டுபிடித்தார்கள். கௌரவர்களும் பாண்டவர்களும் இருந்தனர். பரமாத்மாவான பரமதந்தையே பாண்டவர்களின் உதவியாளராக இருந்தார். அவர் அனைவருக்கும் கூறினார்: வீட்டில் வாழ்ந்து, என்னை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அதிகரிக்காததுடன், கடந்த காலத்தின் பாவங்களும் அழிக்கப்படும். தந்தை இப்பொழுதும் விளங்கப்படுத்துகிறார்: சத்திய யுகத்தில் சதோபிரதானாக இருந்த பாரத மக்களாகிய நீங்களே, 84 பிறவிகளை எடுக்கையில், தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது உங்களால் எவ்வாறு சதோபிரதான் ஆக முடியும்? தூய்மையாக்குகின்ற தந்தையாகிய என்னை நினைவுசெய்தால் மாத்திரமே, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இந்த யோக அக்கினியின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். பின்னர் உங்கள் 21 பிறவிக்கான ஆஸ்தியை நீங்கள் சுவர்க்கத்தில் பெறுவீர்கள். எவ்வாறாயினும், இப்பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். சத்திய யுகத்திலே பாரதம் மிகவும் மேன்மையானதாக இருந்தது, புதிய உலகின் ஆரம்பத்தில் வெகுசில மனிதர்களே வாழ்ந்தனர். பாரதமே சுவர்க்கமாக இருந்தது, வேறு எந்தத் தேசங்களும் இருக்கவில்லை. இப்பொழுது ஏனைய சமயங்கள் பல அதிகரித்த பின்னர், விருட்சம் மிகவும் பெரிதாக வளர்ந்து, முற்றிலும் உக்கிய நிலையை அடைந்துள்ளது. இப்பொழுது இந்தத் தமோபிரதான் விருட்சத்திற்கு அழிவு ஏற்பட்டு, தேவ தர்மம் எனும் புதிய விருட்சத்தின் ஸ்தாபனை இடம்பெற வேண்டும். இது சங்கமயுகத்தில் மாத்திரமே நடைபெறுகிறது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்திலே இருக்கிறீர்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தின் மரக்கன்று இப்பொழுது நாட்டப்பட்டுள்ளது. தூய்மையற்ற மனிதர்கள் தந்தையால் தூய்மையாக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தேவர்கள் ஆகுவார்கள். முதலிலக்க ஆத்மாக்களாக இருந்து, 84 பிறவிகளை எடுத்தவர்கள் மீண்டும் முதல் இலக்க ஆத்மாக்கள் ஆகுவார்கள். முதலில்; தேவர்களின் பாகங்களே இருந்தன. அவர்களே முதலில் பிரிந்து சென்றவர்கள். அவர்களின் பாகங்கள் மீண்டும் வர வேண்டும். சத்திய யுகத்திலே அவர்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்திருக்கின்றார்கள். இது இப்பொழுது விகாரம் நிறைந்த உலகம். இதில் பகலிற்கும், இரவிற்குமான வேறுபாடு உள்ளது. விகாரமான உலகை யார் விகாரமற்றதாக மாற்றுவார்? மக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவர் இப்பொழுது வந்துள்ளார். தந்தை கூறுகின்றார். நான் இப்பொழுது உங்களை விகாரங்கள் அற்றவர்கள் ஆக்குகிறேன். இந்த விகார உலகின் விநாசத்திற்காக யுத்தம் நடந்தேற வேண்டும். இப்பொழுது எண்ணற்ற நம்பிக்கைகள் இருக்கும் பொழுது, எவ்வாறு ஒரேயொரு நம்பிக்கை இருக்க முடியும் என அவர்கள் வினவுகிறார்கள். பல்வேறு விதமான நம்பிக்கைகள் இருக்கும்பொழுது, யாரால் ஒரேயொரு சமயத்தில் நம்பிக்கையை உருவாக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒரேயொரு நம்பிக்கை இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டு, ஏனைய அனைத்தும் அழிக்கப்படும். தூய்மையானவர்களாகவும், ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்களாகவும் இருந்தவர்கள், 84 பிறவிகளை எடுத்து, தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். தந்தை வந்து, மீண்டும் ஒருமுறை பாரத மக்களுக்குச் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைக் கொடுக்கிறார், அதாவது, அவர் அசுரர்களைத் தேவர்கள் ஆக்குகிறார். உங்களால் எவருக்குமே விளங்கப்படுத்த முடியும்: தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதால், நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இப்பொழுது ஞானச் சிதையில் அமர்ந்திருக்கிறீர்கள். இந்தச் சிதையில் அமர்ந்திருப்பதனால். நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். துவாபர யுகத்தில் அது இராவண இராச்சியம் ஆகும்பொழுது, நீங்கள் காமச் சிதையில் அமர்வதுடன், உலகமும் சீரழிகின்றது. 5000 வருடங்களுக்கு முன்னர் தேவர்கள் இருந்தார்கள், வெகுசிலரே இருந்தனர். இப்பொழுது அவர்கள் மிகவும் அசுரத்தனமாக உள்ளார்கள். ஏனைய சமயங்களும் இணைந்ததால், விருட்சம் பெரிதாக வளர்ந்துள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: விருட்சம் முற்றாகவே உக்கிய நிலையை அடைந்துள்ளது. நான் ஒரேயொரு நம்பிக்கையைக் கொண்ட இராச்சியத்தை இப்பொழுது ஸ்தாபிக்க வேண்டும். ஒரேயொரு தர்மத்தில் ஒரேயொரு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று பாரத மக்கள் கூறுகிறார்கள். சத்திய யுகத்திலே ஒரேயொரு தர்மமே இருந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். இங்கு எண்ணற்ற சமயங்கள் உள்ளன. தந்தை இங்கே வந்து, மீண்டும் ஒருமுறை ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இராஜயோகத்தைக் கற்கிறீர்கள். நிச்சயமாக, கடவுள் மாத்திரமே இராஜயோகத்தைக் கற்பிப்பார். எவருக்குமே இது தெரியாது. ஒருவர் கண்காட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்ய வரும்;பொழுது, அவர் எதனைத் திறந்து வைக்கின்றார் என்பதை நீங்கள் அவருக்கு விளங்கப்படுத்த வேண்டும்: தந்தை இந்தப் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகின்றார். நரகவாசிகள் அனைவரும் அழிக்கப்பட உள்ளார்கள். விநாசம் நடைபெறுவதற்கு முன்னர் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற விரும்புவோர் இங்கு வந்து புரிந்துகொள்ள வேண்டும். பிரம்மாகுமாரர்கள், குமாரிகளின் ஆச்சிரமமே தொற்றுநோய் தீர்க்கின்ற, தனிமைப்படுத்தும் வகுப்பாகும் (ஙரயசயவெiநெ உடயளள). இங்கு ஏழு நாட்கள் வகுப்புக்கு நீங்கள் வந்தால், ஐந்து விகாரங்களும் அகற்றப்பட முடியும். தேவர்களிடம் இந்த ஐந்து விகாரங்களும் இருக்கவில்லை. இப்பொழுது இங்கே ஐந்து விகாரங்களையும் நீங்கள் தானம் செய்தால் மாத்திரமே கிரகணம் அகற்றப்படும். அந்தத் தானத்தைச் செய்தால், கிரகணத்தின் சகனங்கள் அகற்றப்படும். பின்னர் நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள். சத்தியயுகத்திலே பாரதம் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்ததாக இருந்தது. இப்பொழுது எந்தக் கலைகளுமே இல்லை. அனைவரும் ஏழைகளாகி விட்டனர். எவராவது திறப்பு விழாவிற்கு வரும்பொழுது, அவருக்குக் கூறுங்கள், ஐந்து விகாரங்களையும் தானம் செய்வதனால், தீய சகுனங்கள் அகற்றப்படும் என்பதுஇங்குள்ள வழக்கம் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் பதினாறு சுவர்க்கக் கலைகளும் கொண்ட தேவர்கள் ஆகுவீர்கள். உங்கள் தூய்மைக்கேற்பவே நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். குறைந்தளவு கலைகளைக் கொண்டிருந்தால், நீங்கள் பின்னரே பிறப்பீர்கள். விகாரங்களைத் தானம் செய்தல் சிறந்தது, இல்லையா? ஆரம்பத்தில், சந்திர கிரகணம் ஏற்பட்டபொழுது, பிராமணர்கள்; தானங்களை ஏற்றுக் கொள்வது வழக்கம். இப்பொழுது பிராமணர்கள் முக்கியஸ்தர்களாகி விட்டார்கள். ஏழைகள் அனைவரும் பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் பழைய ஆடைகள் போன்றவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மையில், பிராமணர்கள் பழைய ஆடைகளை ஏற்பதில்லை; அவர்களுக்குப் புதிய ஆடைகளே கொடுக்கப்படுகின்றன. பாரதமே பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிறைந்ததாக இருந்தது என நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகிறீர்கள். அது இப்பொழுது கலியுகத்திற்குரியதாகி விட்டது. அதுவே ஐந்து விகாரங்களெனும்; கிரகணத்தினால் பீடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது ஐந்து விகாரங்களையும் தானம் செய்து, இந்த இறுதிப் பிறவியிலே தூய்மையாக இருப்பீர்களேயானால், உங்களால் புதிய உலகின் அதிபதிகளாக முடியும். சத்திய யுகத்தில் மிகச்சிலரே இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பின்னரே அதிகரித்தது. விநாசம் முன்னாலேயே இருக்கிறது. தந்தை கூறுகிறார்: ஐந்து விகாரங்களையும் தானம் செய்வதனால், கிரகணம் அகற்றப்படும். நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்களாகி, சூரிய வம்சத்துச் சுவர்க்க இராச்சியத்தைப் பெற வேண்டும். நீங்கள் சீரழிவிலிருந்து விடுபட வேண்டும். ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள். நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும், முற்றிலும் விகாரமற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்களா என்று உங்கள் இதயத்திடம் வினவ வேண்டும். நாரதரின் உதாரணமும் உள்ளது. ஒரு விகாரமேனும் இருந்தால், உங்களால் எவ்வாறு இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியும்? தொடர்ந்தும் முயற்சி செய்து கலப்படத்தை எரித்து விடுங்கள். தங்கத்தை அவர்கள் உருக்கும்பொழுது, நெருப்பின் சூடு குறைந்தால், கலப்படத்தை அகற்ற முடியாது. இதனாலேயே அவர்கள் மீண்டும் மிகவும் சூடான நெருப்பில் அதனை இட்டு உருக்குகிறார்கள். பின்னர் கலப்படம் விடுபட்டதை அவர்கள் பார்க்கும்பொழுது, அதனை அச்சில் ஊற்றுகிறார்கள். தந்தையே கூறுகிறார்: எந்த விகாரத்திலும் ஈடுபடாதீர்கள். துரித கதியில் முயற்சி செய்யுங்கள். முதலில் தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்யுங்கள்: பாபா, நீங்கள் என்னைத் தூய்மையாக்குவதற்கு வந்திருக்கிறீர்கள். நான் ஒருபொழுதும் விகாரத்தில் ஈடுபட மாட்டேன். ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள்! தந்தை ஆத்மாக்களான எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவரே பரமாத்மா. நீங்கள் தூய்மையற்றவர்கள் என உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களிலேயே சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. உங்கள் தந்தையாகிய நானே, ஆத்மாக்களான உங்களுடன் பேசுகிறேன். வேறு எவராலுமே கூற முடியாது: நான் பரமாத்மாவான உங்கள் தந்தை. நான் உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். நீங்கள் ஆரம்பத்தில் சதோபிரதானாகவே இருந்தீர்கள், பின்னரே நீங்கள் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் சென்றீர்கள். நீங்கள் தமோபிரதானாகி விட்டீர்கள். பஞ்ச தத்துவங்களுமே இப்பொழுது தமோபிரதானாக உள்ளன, இதனாலேயே, அவை துன்பத்தை விளைவிக்கின்றன. அனைத்தும் துன்பத்தையே விளைவிக்கின்றன. இந்த இதே தத்துவங்கள் சதோபிரதானாக இருக்கும்பொழுது, சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. அது சந்தோஷ தாமம் என அழைக்கப்படுகிறது. இது துன்ப பூமியாகும். சந்தோஷ தாமம் எல்லையற்ற தந்தையின் ஆஸ்தியாகும். துன்ப பூமியோ இராவணனின் ஆஸ்தியாகும். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். பின்னர் நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இத்தகைய ஒரு முயற்சியைச் செய்கின்ற மிகவும் பிரபல்யமானவர் ஆகுவீர்கள். இது ஒவ்வொரு கல்பத்திற்குமான விளையாட்டாகும். பெரும் முயற்சி செய்பவர்கள், இந்த இராச்சிய பாக்கியத்தைப் பெறுகிறார்கள். நன்றாக முயற்சி செய்யாதவர்கள் மூன்றாந் தரத்தினுள் செல்வார்கள். அவர்கள் பிரஜைகள் மத்தியில் எங்கு பிறப்பார்கள் என்பதுமே தெரியாது. ஒரு லௌகீகத் தந்தை கூறுகிறார்: நீ எனது பெயரை அவதூறு செய்கின்றாய். இந்த வீட்டிலிருந்து வெளியேறு! எல்லையற்ற தந்தையும் கூறுகிறார்: நீங்கள் சூரிய, சந்திர வம்சத்தினர் ஆகாதவாறு மாயையால் அத்தகைய வழியில் அறையப்படுவீர்கள். உங்களை நீங்களே அறைந்து கொள்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: வாரிசுகள் ஆகுங்கள். இராச்சிய திலகத்தைப் பெற விரும்பினால், என்னை நினைவுசெய்து, மற்றவர்களுக்கும் அதனை நினைவுபடுத்தினால் நீங்கள்; அரசர்களாகுவீர்கள். அது வரிசைக்கிரமமே. சில வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் மாத்திரமே நூறாயிரம் ரூபாய்களைச் சம்பாதிக்கும்பொழுது, சிலர் ஒரு கோட் வாங்குவதற்குத் தேவையானதைக் கூட உழைக்க முடியாதிருக்கிறார்கள். அனைத்தும் முயற்சியிலேயே தங்கியுள்ளது. நீங்கள் முயற்சி செய்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் அதிபதிகளாகவோ அல்லது பிரஜைகளாகவோ ஆகினாலும், மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். பிரஜைகளின் மத்தியிலும் பணிப்பெண்களும், வேலையாட்;களும் இருப்பார்கள். மாணவர்களின் செயற்பாடுகளிலிருந்து ஓர் ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியும். நாளுக்கு நாள், நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் சீரான கருத்துக்களைப் பெறுவதால், தாமதித்து வந்துள்ளவர்கள், முன்னர் வந்தவர்களை விட முன்னேறிச் செல்வதும் ஓர் அற்புதமே. நீங்கள் தொடர்ந்தும் மரக்கன்றுகளை நாட்டுகிறீர்கள். ஆரம்பத்தில் வந்தவர்களில் சிலர் ஓடி விட்டார்கள், தொடர்ந்தும் புதியவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நீங்கள் தொடர்ந்தும் புதிய கருத்துக்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இது பெரும் சாதுரியத்துடன் விளங்கப்படுத்தப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு மிகவும் ஆழமான, சுவாரசியமான விடயங்களைக் கூறுகிறேன், இதன்மூலம் உங்கள் புத்தியானது உடனடியாகவே நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும். எனக்கு இந்தப் பாகம் இருக்கும்வரை, நான் உங்களுக்குத் தொடர்ந்தும் கற்பித்துக் கொண்டேயிருப்பேன். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்கள் கர்மாதீத நிலையை அடையும்பொழுது, உங்கள் கல்வி நிறைவுபெற்றிருக்கும். குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இறுதியிலேயே நீங்களும் பரீட்சையின் பெறுபேறுகளை அறிந்து கொள்வீர்கள். தூய்மையே இக்கல்வியிலே முதலாவது பாடமாகும். பாபாவை நினைவுசெய்யும் வரையிலும், அவரது சேவையைச் செய்யும்வரையிலும், நீங்கள் ஓய்வெடுக்கக்கூடாது. உங்கள் யுத்தம் மாயையுடன் ஆகும். மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரித்தாலும், அவன் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தசேராவைப் பெருமளவு கொண்டாடுகிறார்கள். கடவுள் இராமரின் சீதாதேவி எவ்வாறு கடத்தப்பட்டார் என்பதையிட்டு நீங்கள் இப்பொழுது அதிசயிக்கிறீர்கள். அவர் பின்னர் குரங்குப் படையை அழைத்துச் சென்றார். இது எப்பொழுதாவது சாத்தியமாக இருக்க முடியுமா? அவர்கள் எதனையுமே புரிந்துகொள்வதில்லை! அவர்கள் கண்காட்சிகளுக்கு வரும்பொழுது, முதலில் நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும்: இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கும்பொழுது, எத்தனை பேர் பாரதத்தில் இருந்திருப்பார்கள்? இது 5000 வருடங்களுக்கு முன்னரான விடயமாகும். இது இப்பொழுது கலியுகம், அதே மகாபாரத யுத்தமே நடைபெறுகிறது. தந்தையே வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். விநாசமும் நடைபெறும். இங்கே எவ்வாறு ஒரே தர்மமும், ஒரே நம்பிக்கையும் இருக்க முடியும்? அதாவது, இங்;கே எவ்வாறு அமைதி நிலவ முடியும்? அவர்கள் ஒரே நம்பிக்கையின்; ஸ்தாபனைக்காகவே அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள், ஆனால் அந்தளவிற்கு அவர்கள் சண்டையும் பிடிக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது அவர்கள் மத்தியில் சண்டையைத் தூண்டி, உங்களுக்கு வெண்ணெயைத் தருகிறேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: செய்பவர் பலனைப் பெறுவார்கள். சில குழந்தைகள் தங்களது தந்தையை விட உயர்வடைகின்றார்கள். நீங்கள் என்னை விடவும் செல்வந்தர்களாகி, உலக அதிபதிகள் ஆகுவீர்கள். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களுக்குத் தன்னலம் கருதாது சேவை செய்கின்றேன். நான் அருள்பவன். நீங்கள் சிவபாபாவிற்கு 5 ரூபாவைக் கொடுப்பதாக உங்களில் எவருமே நினைக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் சுவர்க்கத்தில் தந்தையிடமிருந்து ஐந்து மடங்குகளாகப் பல மில்லியன்களைப் பெறுகிறீர்கள். ஆகவே இது கொடுப்பதா? நீங்கள் சிவபாபாவிற்குக் கொடுப்பதாக நினைத்தீர்களாயின், அது சிவபாபாவைப் பெருமளவு அவமதிப்பதாகும். தந்தை உங்களை மிகவும் மேன்மையானவர்கள் ஆக்குகிறார். நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் ஐந்து ரூபாய்களை இடுகின்றீர்கள். பின்னர் பாபா உங்களுக்கு ஐந்து மில்லியன்களைக் கொடுக்கின்றார். அவர் உங்களைச் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாற்றுகின்றார். சிவபாபாவிற்குக் கொடுத்து விட்டதாக என்றுமே எப்பொழுதுமே நினைக்காதீர்கள்! அவர் அத்தகைய கள்ளங்கபடமற்ற பிரபு! நீங்கள் பாபாவிற்குக் கொடுப்பதாக என்றுமே எப்பொழுதுமே நினைக்கக்கூடாது. இல்லை, நீங்கள் சிவபாபாவிடமிருந்து உங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியையே பெறுகிறீர்கள். நீங்கள் ஒரு தூய நோக்கத்துடன் கொடுத்திருக்காது விடின், அதனை எவ்வாறு ஏற்க முடியும்? இவ்விடயங்கள் அனைத்தினதும் புரிந்துணர்வு உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் தாங்கள் தானம் செய்வதாக மக்கள் கூறுகிறார்கள். அவருக்கு என்ன தேவை உள்ளது? இல்லை. தங்கள் அடுத்த பிறவியில் தாங்கள் அதற்கான பலனைப் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை இப்பொழுது இங்கமர்ந்திருந்து, உங்களுக்குச் செயல்;, நடுநிலைச் செயல், பாவச் செயலின் தத்துவத்தை விளங்கப்படுத்துகிறார். இது இராவண இராச்சியம் என்பதால், இங்கு செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பாவகரமானவை. சத்தியயுகத்திலே செயல்கள் நடுநிலையானவை. நீங்கள் எப் பாவமுமே செய்ய முடியாத, அவ்வுலகிற்கு நான் உங்களை இப்பொழுது இடமாற்றுகிறேன். பாபாவிற்குப் பல குழந்தைகள் இருக்கும்பொழுது, உங்கள் பணம் அனைத்தையும் வைத்துக் கொண்டு, என்ன செய்வார்? எனக்குப் பிரயோசனமற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு, பிரதிபலனைக் கொடுப்பதற்கு நான் அனுபவமற்ற பங்குத்தரகர் அல்ல. நான் மிகவும் சிறந்த பங்குத்தரகர். நான் உங்களிடம் கூறுகிறேன்: எனக்கு எதுவுமே தேவையில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தீவிர முயற்சி செய்து, விகாரங்கள் என்ற கலப்படத்தை யோக அக்கினியில் உருக்கி அகற்றுங்கள். தூய்மையாக இருப்பதற்கான உறுதியான சத்தியத்தைச் செய்யுங்கள்.

2. செயல், நடுநிலைச்செயல், பாவச்செயல் என்ற தத்துவத்தை உங்கள் புத்தியில் வைத்திருந்து, உங்களிடமுள்ள அனைத்தையும் புதிய உலகிற்கு இடமாற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய புத்தியின் கண்ணைத் தெளிவாகவும், அவதானமாகவும் வைத்திருப்பதால், மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகவும், சக்தி நிறைந்தவராகவும் இருப்பீர்களாக.

சோதிடர்களால் தங்கள் சோதிட ஞானம் மூலம் வரவுள்ள அனர்த்தங்கள் எதனையும், சகுனங்களையும்; அறிந்துகொள்ள முடியும். அதேபோன்று, குழந்தைகளாகிய உங்களால் மாயையிடமிருந்து வரவுள்ள பரீட்சைத் தாள்கள் பற்றி முற்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். எனவே, திறமைச்சித்தி எய்துவதற்கு, உங்கள் புத்தியின் கண்ணைத் தெளிவானதாகவும், அவதானமாக இருப்பதாக ஆக்குங்கள். நாளுக்கு நாள், உங்கள் நினைவினதும், மௌனத்தினதும் சக்திகளை அதிகரியுங்கள், நீங்கள் இன்ன நாளில் ஏதோவொன்று நடைபெறப் போகின்றது என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்வீர்கள். மாஸ்டர் ஞானம் நிறைந்தவராகவும், சக்தி நிறைந்தவராகவும் இருங்கள், நீங்கள் என்றுமே தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.

சுலோகம்:
தூய்மையே புதுமையாகும், அதுவே ஞானத்தின் அத்திவாரமாகும்.