11-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, தற்பொழுது நீங்கள் உலக சேவையாளர்கள். எந்த விதத்திலேனும் நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகக்கூடாது.

கேள்வி:

எந்தப் பழக்கம் ஆன்மீக விதிகளுக்கு முரணானதாகவும், பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது?

பதில்:

சினிமாக் கதைகளைச் செவிமடுப்பதோ அல்லது நாவல்கள் வாசிப்பதோ முற்றிலும் விதிகளுக்கு முரணானது. இதைச் செய்வது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குழந்தைகளாகிய உங்களை அத்தகைய புத்தகங்களை வாசிக்கலாகாதென பாபா தடை விதித்துள்ளார். யாராவது பிரம்மகுமார், குமாரிகள்; அத்தகைய புத்தகங்களை வாசித்தால் நீங்கள் அவர்களை எச்சரிக்கை செய்யலாம்.

பாடல்:

ஓ மனமே! உன் இதயக் கண்ணாடியில் உனது முகத்தைப் பார்.

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான தந்தை, இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: நீங்கள் நினைவு யாத்திரையில் எவ்வளவிற்கு முன்னேறியுள்ளீர்கள் என்பதையும், எவ்வளவிற்குத் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகியுள்ளீர்கள் என்பதையும் பார்ப்பதற்கு உங்களையே சோதியுங்கள், ஏனெனில் நீங்கள் எவ்வளவிற்கு அதிகமாக நினைவிலிருக்கிறீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்தப் பதங்கள் எந்தச் சமயநூல்களிலேனும் குறிப்பிடப்பட்டுள்ளனவா? சமய ஸ்தாபகர்கள் விளங்கப்படுத்தியவற்றின் அடிப்படையிலேயே சமயநூல்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் மக்கள் அவற்றைக் கற்;கின்றார்கள். அப்புத்தகங்களை அவர்கள் வணங்குகின்றனர். "உங்கள் சரீரத்தையும், சகல சரீர உறவுகளையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்” எனக் கூறப்பட்டுள்ளதால், இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயம். ஆரம்பத்தில் நீங்கள் முதலில் சரீரமற்றவர்களாகவே இங்கு வந்தீர்களென்பதைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவூட்டுகிறார். அங்கே நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் முக்திக்குள் அல்லது ஜீவன்முக்திக்குள் செல்ல முடியாது. அதுவே அசரீரியான, விகாரமற்ற உலகம். இது பௌதீக, விகார உலகம் என அழைக்கப்படுகிறது. பின்னர் சத்திய யுகத்தில் இந்த உலகம் விகாரமற்றதாக ஆகும். சத்தியயுகத்தில் வாழ்ந்த தேவர்கள் பற்றிய பெருமளவு புகழ் உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது: இவை அனைத்தையும் நீங்கள் மிக நன்றாகக் கிரகித்து, ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் வந்தபொழுது தூய்மையாகவே இருந்தீர்கள். நீங்கள் இங்கு வந்ததும் நிச்சயமாகத் தூய்மையற்றவராக வேண்டியுள்ளது. சத்தியயுகமானது விகாரமற்ற உலகம் எனவும், கலியுகமானது விகார உலகம் எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களைத் தூய்மையானவர்களாகவும், விகாரமற்றவர்களாகவும் ஆக்குவதற்கு ஒரு விகார சரீரத்தில் இந்த விகார உலகிற்கு வாருங்கள். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: மக்கள் பிரம்மாவின் படத்தையிட்டுக் குழப்பமடைந்து, "ஏன் தாதாவின் இந்தப் படத்தை இங்கு வைத்திருக்கின்றீர்கள்?” எனக் கேட்கின்றார்கள். இவரே ‘பாக்கிய இரதம்’ என்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கடவுள் சிவன் பேசுகிறார்: சடப்பொருளின் ஆதாரத்தை நான் நிச்சயமாகப் பெற வேண்டியுள்ளதால், இந்த இரதத்தை ஏற்றுக்கொண்டேன். வேறெந்த விதத்தில் நான் உங்களைத் தூய்மையற்றவர்களிருந்து தூய்மையானவர்கள் ஆக்கமுடியும்? நிச்சயமாக நான் தினமும் உங்களுக்குக் கற்பிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை இப்பொழுது கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை மட்டுமே சதா நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். கிருஷ்ணர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாக இருக்க முடியாது. அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இருக்கிறது. தந்தை இதை உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகிறார். நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்களுக்குக் கூறுங்கள்: நீங்கள் சரீரமற்றவர்களாக வந்தீர்கள். நீங்கள் சரீரமற்றவர்களாகவே திரும்பிச் செல்ல வேண்டும் எனத் தந்தை கூறுகின்றார். தூய ஆத்மாக்களே அங்கிருந்து வருகின்றனர். யாரேனும் நாளை வந்தாலும் தூய்மையாகவே இருப்பதுடன், நிச்சயமாகப்; புகழவும்;படுவார்கள். எந்தச் சந்நியாசிகளினதும், இல்லறத்தவர்களினதும் பெயர்கள் புகழப்படுகின்றனவோ, அவர்களும் நிச்சயமாகத் தமது முதற் பிறப்பிலேயே இருக்க வேண்டும். தமது சமயத்தை ஸ்தாபிப்பதற்காகவே அவர்கள் வருகிறார்கள். பாபா குருநானக் பற்றி விளங்கப்படுத்துகிறார். இங்கு பலரும் நானக் என்ற பெயரைக் கொண்டிருப்பதால் நீங்கள் ‘குரு’ என்ற வார்த்தையை நிச்சயமாக எழுத வேண்டும். ஒருவர் புகழப்படும்பொழுது அந்தப் புகழ்ச்சிக்கு அர்த்தம் இருக்க வேண்டும். நீங்கள் சரியான புகழைப் பயன்படுத்தாது விட்டால், அது சரியானதாகத் தோன்றாது. உண்மையில் அந்த ஒரேயொருவரைத் தவிர வேறு குரு இல்லையென்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றியே நீங்கள் கூறுகிறீர்கள்: சற்குரு அமரத்துவமானவர். அவரே அமரத்துவமான ரூபத்தைக் கொண்டவர், அதாவது, ஒருபொழுதும் மரணத்தை அனுபவம் செய்யாதவர். அவர் ஓர் ஆத்மா. அதனாலேயே அவர்கள் அமர்ந்திருந்து அந்தக் கதைகளை உருவாக்கியுள்ளனர். உங்களிற் பலர் இன்னமும் சினிமாக் கதைகளையும், நாவல்களையும் வாசிக்கிறீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களை எச்சரிக்கின்றார்: நீங்கள் நாவல்கள் போன்றவற்றை வாசிக்கலாகாது. சிலரிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இங்கு நீங்கள் நூறுமடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். சில பிரம்மகுமார், குமாரிகளும் நாவல்களை வாசிக்கிறார்கள். இதனாலேயே பாபா குழந்தைகள் அனைவருக்கும் கூறுகின்றார்: யாராவது நாவல் வாசிப்பதைக் கண்டால் அதைப் பறித்துக் கிழித்தெறியுங்கள்! சிலசமயம் உங்களை யாராவது சபிப்பார்கள் அல்லது கோபப்படுவார்கள் என நீங்கள் அஞ்ச வேண்டும் என்றில்லை. அவ்வாறு எதுவுமே இல்லை. ஒருவரையொருவர் எச்சரிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. சினிமாக் கதைகளை கேட்பதோ, வாசிப்பதோ சட்டத்திற்கு முரணானது. எவரது நடத்தையேனும் சட்டத்தை மீறுவதாக இருந்தால் உடனே நீங்கள் அதை பாபாவிற்கு முறைப்பாடு செய்ய வேண்டும். வேறு எவ்விதம் அவர்கள் தங்களை சீர்திருத்திக்; கொள்வார்கள்? தொடர்ந்தும் அவர்கள் தமக்குத் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். நீங்களே யோகசக்தியைக் கொண்டிருக்காது விட்டால், நீங்கள் அமர்ந்திருந்து எதனை மற்றவர்களுக்குக் கற்பிப்பீர்கள்? பாபா உங்களுக்குத் தடைவிதிக்கின்றார். இம்மாதிரியான காரியத்தை ஒருவர் செய்தால், அவரது மனச்சாட்சி அவரை உறுத்தும். சுயத்திற்கும் இழப்பு ஏற்படும். எனவே நீங்கள் இப்பலவீனத்தை மற்றவர்களில் பார்க்கும்பொழுது, பாபாவிற்கு எழுதியே ஆகவேண்டும். அவர்களது செயல் சட்டத்திற்கு விரோதமானதா? இவ்வேளையில் பிராமணர்களாகிய நீங்கள் சேவையாளர்கள். பாபாவும் கூறுகிறார்: குழந்தைகளே, வணக்கம்! அவர் அர்த்தமுள்ள வகையில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். மற்றவர்களுக்குக் கற்பிக்கின்ற குழந்தைகள் எவ்விதமான சரீர உணர்வையும் கொண்டிருக்கக்கூடாது. ஓர் ஆசிரியர் மாணவர்களின் சேவையாளன். ஆளுநர் போன்றவர்கள் தங்கள் கடிதங்களின் இறுதியில் ‘உங்கள் கீழ்ப்படிவான சேவையாளன்’ என்று எழுதி, கையொப்பம் இடுகின்றனர். அதற்குக் கீழ் அவர்கள் தங்கள் பெயரைக் கையொப்பம் இடுகின்றார்கள். இலிகிதர் ஒருவர் தனது கையாலேயே கடிதம் எழுதுவார். அவர் தன்னைப் புகழ்ந்து எழுத மாட்டார். இந்நாட்களில் குருமார் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற தங்கள் சொந்தத் தலைப்பை எழுதுகிறார்கள். இங்கும் சிலர் ‘ஸ்ரீ இன்னார்’ என்று எழுதுகிறார்கள். உண்மையில் நீங்கள் இதை எழுதக்கூடாது; ஒரு பெண்ணும் தன்னை ‘ஸ்ரீமதி’ என்று எழுதக்;கூடாது. ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவே வந்து, உங்களுக்கு வழிகாட்டல்களைத் தரும்பொழுதே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பெறமுடியும். எவரோ ஒருவரது வழிகாட்டல்களைப் பின்பற்றியதால், அவர்கள் நிச்சயமாகத் தேவர்கள் ஆகினார்கள் என நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். அவர்;கள் எவ்வாறு அத்தகைய மேன்மையான உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பதைப் பாரதத்திலுள்ள எவரும் அறியாதுள்ளனர். உங்களுக்குள் இப்போதை உயர்ந்து செல்ல வேண்டும். உங்கள் இலக்கினதும், குறிக்கோளினதும் படம் எப்பொழுதும் உங்கள் இதயத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் இதை எவருக்கும் காண்பித்து, அவர்களிடம் கூறலாம்: கடவுள் எங்களுக்குக் கற்பித்து, எங்களை உலகச் சக்கரவர்த்திகள் ஆக்குகிறார். இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்துள்ளார். பழைய உலகின் விநாசம் முன்னிலையில் உள்ளது. இளம் புத்திரிகளாகிய நீங்கள் உங்கள் மழலை மொழியில் ஏனையோருக்கு விளங்கப்படுத்தலாம். இடம்பெறுகின்ற பெரிய மகாநாடுகளுக்கு அவர்கள் உங்களை அழைக்கும்பொழுது, நீங்கள் இப்படத்தை எடுத்துச் சென்று, அமர்ந்திருந்து, அவர்களுடைய இராச்சியம் பாரதத்தில் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என விளங்கப்படுத்தலாம். எந்தப் பெரிய ஒன்றுகூடலுக்கும் நீங்கள் இதை விளங்கப்படுத்தலாம். நாள் முழுவதும் நீங்கள் சேவை செய்கின்ற போதையைக் கொண்டிருக்க வேண்டும். பாரதத்தில் அவர்களது இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. பாபா எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். கடவுள் சிவன் பேசுகிறார்: ஓ குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, என்னை நினைவுசெய்யுங்கள், 21 சந்ததிகளுக்கு நீங்கள் இவ்வாறு ஆகுவீர்கள். நீங்கள் தெய்வீக குணங்களையும் கிரகிக்க வேண்டும். தற்பொழுது அனைவரும் அசுர குணங்களையே கொண்டுள்ளனர். ஒரேயொரு ஸ்ரீ ஸ்ரீ சிவபாபாவே உங்களை மேன்மையானவர்கள் ஆக்குகிறார். அந்த அதிமேலான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் சிவன் பேசுகிறார்: மன்மனாபவ! ‘பாக்கிய இரதமும்’ மிகப் பிரசித்தி பெற்றது. பிரம்மாவே ‘பாக்கிய இரதம்’ என்று அழைக்கப்படுகிறார். அவர் ‘மகாவீரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அவர் இங்கு தில்வாலா ஆலயத்தில் அமர்ந்திருக்கிறார். அவ்வாலயத்தைக் கட்டிய ஜெயின்கள் இதில் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இளம் புத்திரிகளாகிய நீங்கள்; சென்று அவற்றைப் பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் மிகவும் மேன்மையானவராகுகிறீர்கள். பாரதத்தின் இலக்கும், குறிக்கோளும் இதுவே. உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும்! இங்கு பாபா உங்கள் போதையை அதிகரிக்கச் செய்கிறார். நீங்கள் அனைவரும் இலக்ஷ்மியாகவோ, நாராயணனாகவோ ஆகுவீர்களெனக் கூறுகிறீர்கள். இராமராகவோ, சீதையாகவோ ஆகுவதற்கு நீங்கள் ஒருவரும் கரங்களை உயர்த்துவது இல்லை. நீங்கள் இப்பொழுது அகிம்சாவாதப் போராளிகள். அகிம்சாவாதப் போராளிகளான உங்களை எவரும் அறியார். நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். கீதையில் ‘மன்மனாபவ’ என்ற பதம் உள்ளது. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! இதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். வேறெவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். குழந்தைகளே! ஆத்ம உணர்வுடையவர்களாகுங்கள். உங்களுடைய இந்தப் பழக்கமானது பின்னர் 21 பிறவிகளுக்குத் தொடரும். உங்களுக்குக் கிடைக்கும் இக் கற்பித்தல்கள் 21 பிறவிகளுக்கானவை. பாபா உங்களுக்குப் பிரதான விடயத்தை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு இங்கமர்ந்திருங்கள். பரமாத்மாவான தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களாகிய எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வு உடையவர்களாகி, உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் நினைவுசெய்கிறீர்கள். இது சதா காலமும் நடைபெறுகிறது. பக்தி மார்க்கத்திலும், தங்கள் பக்தியைச் செய்யும்பொழுது, அவர்களின் புத்தி வேறு திசைகளில் அலைகிறது. தீவிர பக்தி செய்பவர்களாலேயே அந்த மன ஒருமைப்பாட்டுடன் அமர்ந்திருக்க முடிகிறது. அது ஆழமான பக்தி எனவும் அழைக்கப்படுகின்றது. அவர்கள் முற்றாக அன்பில் மூழ்கியிருப்பவர்கள் ஆகுகின்றார்கள். சில சமங்களில் நீங்கள் நினைவிலிருக்கும்பொழுது, முற்றாகச் சரீரமற்றவர்கள் ஆகுகின்றீர்கள். நல்ல குழந்தைகளே அத்தகைய ஸ்திதியில் இருப்பார்கள். சரீரத்தைப் பற்றிய விழிப்புணர்வு நீக்கப்பட்டுவிடும். சரீரமற்றவர்களாகி அந்தப் போதையுடன் அமர்ந்திருங்கள். இந்தப் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சந்நியாசிகள் தத்துவங்களைப் பற்றிய ஞானத்தையும், ஒளியாகிய பிரம்ம தத்துவத்தினது ஞானத்தையும்; கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அதனுடன் இரண்டறக் கலந்து விடுவோம். நாங்கள் இப்; பழைய சரீரங்களை நீக்கி, பிரம்ம தத்துவத்துடன் கலந்து விடுவோம். ஒவ்வொருவருக்கும் தத்தமது சமயம் உள்ளது. எவரும் மற்றவரின் சமயத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்களும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். கீதையின் கடவுள் எப்பொழுது வந்தார்? கீதையின் யுகம் எப்பொழுது இருந்தது? எவருக்கும் இது தெரியாது. சங்கமயுகத்திலேயே தந்தை வந்து, எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் எங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குகிறார். இது பாரதத்தைக் குறிப்பிடுகிறது. நிச்சயமாக எண்ணற்ற சமயங்கள் உள்ளன. ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்படுவதும், எண்ணற்ற சமயங்கள் அழிக்கப்படுவதும் நினைவுகூரப்படுகின்றது. சத்திய யுகத்தில் ஒரு தர்மமே இருந்தது. ஆனால் இப்பொழுது கலியுகத்தில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பின்னர் ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனை இருக்கும். ஒரு தர்மமே இருந்தது. ஆனால் அது இப்பொழுது இல்லை. ஏனைய அனைத்தும் இன்னமும் இங்கு உள்ளன. ஆலமரத்தினது உதாரணம் முற்றிலும் மிகச்சரியானது. அதன் அத்திவாரம் இப்பொழுது இல்லை, ஆனால் முழுமரமும் இன்னமும் இருக்கிறது. உண்மையில் தேவ தர்மம் முற்றாகவே இப்பொழுது இல்லை. அடிமரமாக விளங்கிய ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது தந்தை மீண்டும் ஒருமுறை ஸ்தாபனையை மேற்கொள்கிறார். ஏனைய பல்வேறு சமயங்கள் அனைத்தும் பின்னரே வந்தன, ஏனெனில் சக்கரம் நிச்சயமாகச் சுழல வேண்டும், அதாவது, பழைய உலகம் மீண்டும் புதியதாகும். புதிய உலகில் அது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது. உங்களிடம் பெரிய படங்களும், சிறிய படங்களும் உள்ளன. நீங்கள் பெரியது ஒன்றைச் சுமந்து செல்வதைக் கண்டதும், "நீங்கள் எதனைச் சுமந்து செல்கின்றீர்கள்?” என்று மக்;கள் கேட்கும்பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: மனிதர்களைப் பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்களாக மாறுவதற்குக் கற்பிப்பவற்றையே நாங்கள் சுமந்து செல்கின்றோம். உங்கள் இதயங்களில் பெரும் உற்சாகமும், சந்தோஷமும் இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுள் ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார்! பாபா எங்களைத் தனது கண்களிலிருத்தி திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இந்த அசுத்த உலகத்தில் நாங்கள் இனியும் இருக்கத் தேவையில்லை. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, அத்தகைய விரக்திக் குரல்;கள் கேட்கும், பேசவே வேண்டாம்! மில்லியன் கணக்கில் மக்கள் மரணிப்பார்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இது உள்ளது. உங்கள் கண்களால் நீங்கள் காணும் எப்பொருட்களும் எஞ்சியிருக்கப் போவதில்லை. இங்குள்ள மனிதர்கள் முட்களைப் போன்றவர்கள். சத்திய யுகம் ஒரு மலர்த்தோட்டம். அப்பொழுது உங்கள் கண்கள் குளிர்ச்சியடையும். நீங்கள் ஒரு பூந்தோட்டத்திற்குச் செல்லும்பொழுது, உங்கள் கண்கள் மிகவும் குளிர்ச்சியடைகின்றன. நீங்கள் இப்பொழுது பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். பிராமணர்களாக ஆகியவர்களின் காலடியில் மில்லியன்கள் இருக்கும். நீங்களே இந்த இராச்சியத்தை ஸ்தாபிப்பதாகக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இதற்காகவே பாபா இந்த பட்ஜ்களைச் செய்வித்துள்ளார். வெள்ளைச் சேலை அணிந்து, உங்கள் பட்ஜ்;ஜையும் கொண்டிருந்தீர்களாயின், இது இயல்பாகவே தொடர்ந்தும் சேவை செய்யும். மக்கள் பாடுகிறார்கள்: ஆத்மாக்கள் நீண்டகாலமாக பரமாத்மாவிடமிருந்து பிரிந்திருந்தனர், ஆனால் "நீண்டகாலம்” என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நீண்ட காலத்தின் பின்னர், 5000 வருடங்களுக்குப் பின்னர் நீங்கள் தந்தையைச் சந்திக்கின்றீர்கள் என்பதைத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். மேலும் இராதையும் கிருஷ்ணருமே இவ்வுலகில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவர்களே சத்திய யுகத்தின் முதலாவது இளவரசரும், இளவரசியும் ஆவார்கள். அவர்கள் எவ்வாறு இங்கு வந்தார்கள் என்பது எவரது மனதிலும் தோன்றுவதில்லை. நிச்சயமாகச் சத்திய யுகத்திற்கு முன்னதாகக் கலியுகம் இருக்க வேண்டும் உலகின் அதிபதிகளாகும் அளவிற்கு அவர்கள் என்ன செயல்களைச் செய்தார்கள்? பாரதமக்கள் தங்களை உலக அதிபதிகளாகக் கருதுவதில்லை. பாரதத்தில் அவர்களது இராச்சியம் இருந்தபொழுது, வேறு சமயங்கள் இருக்கவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இதுவே உங்கள் இலக்கும், குறிக்கோளுமாகும். ஆலயங்களில் அவர்களது படங்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் ஸ்தாபனை இடம்பெறுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்களும் வரிசைக்கிரமமாகவே இதைப் புரிந்துகொள்கிறீர்கள். சிலர் இவையனைத்தையும் முற்றாகவே மறந்து விடுகின்றனர்; அவர்களின் நடத்தையும் முன்னர் இருந்ததைப் போலவே ஆகுகின்றது. இங்கு அவர்கள் அனைத்தையும் நன்கு புரிந்துகொண்டாலும், வெளியே சென்றதும் அனைத்துமே முடிந்து விடுகிறது. சேவை செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும். இந்த செய்தியை அனைவருக்கும் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் போதையுடன் அனைவருக்கும் கூறவேண்டும்: "என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்” என சிவபாபா கூறுகிறார். நாங்கள் வேறெவரையும் அன்றி சிவபாபா ஒருவரையே நினைவுசெய்கின்றோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. உங்கள் இலக்கினதும், குறிக்கோளினதும் படத்தை உங்களுடன் எப்பொழுதும் வைத்திருங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்ற போதையைக் கொண்டிருங்கள். எங்கள் கண்கள் சாந்தமடையும் வகையில், அத்தகைய ஒரு பூந்தோட்டத்திற்கு நாங்கள் செல்கின்றோம்.
  2. சேவை செய்வதில் பெருமளவில் ஆர்வம் கொண்டிருங்கள். பெரிய படங்களைப் பயன்படுத்தி, பெருமளவு உற்சாகத்துடனும், பெரிய இதயத்துடனும், சேவை செய்யுங்கள். யாசிப்போரை இளவரசர்களாக மாற்றுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் சகலதுறைச் சேவையாளராக இருந்து, யக்யாவிற்குச் சேவை செய்வதால், அனைத்துப் பேறுகளும் எனும் பிரசாதத்தைப் பெறுவீர்களாக.

சங்கமயுகத்தில் சகலதுறைச் சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுவதும் நாடகத்தில் உள்ள ஓர் உயர்த்தி ஆகும். அன்புடன் யக்யாவின் சகலதுறைச் சேவை செய்பவர்கள் இயல்பாகவே அனைத்துப் பேறுகளும் எனும் பிரசாதத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் தடைகளிலிருந்து விடுபட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒருமுறை சேவை செய்து, அந்தச் சேவையின் பலனாக ஆயிரம் மடங்குகளைப் பெறுகின்றார்கள். சூட்சுமமான, பௌதீகமான "லங்கார்” (தொடர்ச்சியாக உணவு படைத்தல்) சதாகாலமும் தொடர வேண்டும். எவரையும் திருப்தியாக்குவதே, அனைத்திலும் மிகப்பெரிய சேவையாகும். விருந்தோம்பல் செய்வதே, அனைத்திலும் மகத்தான பாக்கியமாகும்.

சுலோகம்:

உங்கள் சுய மரியாதையில் ஸ்திரமாக இருங்கள், இயல்பாகவே சகல வகையான அகங்காரமும் முடிவடையும்.


---ஓம் சாந்தி---