11.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையின் நினைவை நீங்கள் எந்தளவிற்கு அதிகரிக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் புத்தியின் பூட்டும் அதிகளவு திறக்கப்படும். தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்வதற்கு மறந்து விடுபவர்கள் துரதிர்ஷ்டக் குழந்தைகள் ஆவார்கள்.
பாடல்:
உங்கள் கணக்கில் சேமிப்பதற்கு அடிப்படையாக இருப்பது என்ன? அதி சிறந்த வருமானத்தை ஈட்டித்தருவது எது?பதில்:
நீங்கள் தானம் செய்வதன் மூலம் உங்கள் கணக்கில் சேமிப்பீர்கள். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையின் அறிமுகத்தைப் பிறருக்கு வழங்குகிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் வருமானமும் அதிகரிக்கிறது. நீங்கள் முரளிகளைக் கற்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். இம்முரளிகள் உங்களை அவலட்சணமானவரிலிருந்து அழகானவர்களாக மாற்றுகின்றன. முரளியில் இறை மந்திரவித்தை உள்ளது. முரளியைக் கற்பதன் மூலமே நீங்கள் பெரும் செல்வந்தர்களாக ஆகுகிறீர்கள்.பாடல்:
நாங்கள் விழக்கூடிய பாதையைப் பின்பற்றுவதால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.....ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் வீழ்ச்சி அடைவீர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தையை மீண்டும் மீண்டும் மறந்துவிடுவது வீழ்ச்சி அடைதலும், தந்தையை நினைவு செய்வது எச்சரிக்கையாக இருத்தல் என்றும் அர்த்தமாகும். மாயையே தந்தையை மறந்துவிடச் செய்கிறாள். இது ஒரு புதிய விடயமாகும். உண்மையில், எவராலும் ஒருபோதும் தன்னுடைய தந்தையை மறந்துவிட முடியாது. ஒரு மனைவி ஒருபோதும் தனது கணவனை மறந்துவிட மாட்டாள். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே அவர்களின் புத்தியின் யோகம் ஒருவரோடொருவர் இணைக்கப்படுகிறது. இங்கு மறந்துவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு கணவன் கணவனே, ஒரு தந்தை தந்தையே. இப்பொழுது, இவரே அசரீரியான தந்தை, ஆனால் அவர் மணவாளன் எனவும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள் மணவாட்டிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நேரத்தில் அனைவரும் பக்தர்கள், ஆனால் கடவுள் ஒருவரே ஆவார். பக்தர்கள் மணவாட்டிகள் எனவும், கடவுள் மணவாளன் எனவும் அழைக்கப்படுகிறார். இதேபோன்று, பக்தர்கள் குழந்தைகள் எனவும், கடவுள் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். இப்பொழுது ஒரேயொருவரே கணவர்களுக்கெல்லாம் கணவரும், தந்தையர்களுக்கெல்லாம் தந்தையும் ஆவார். உண்மையில் பரமாத்மாவே ஒவ்வொரு ஆத்மாவினதும் தந்தையாவார். ஆனால் ஒவ்வொருவருக்கும் தமது தனிப்பட்டதொரு லௌகீகத் தந்தை உள்ளார். அப்பரலோகப் பரமதந்தையே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய ஒரேயொரு கடவுள் ஆவார். அவரின் பெயர் சிவபாபா. நீங்கள் தந்தையாகிய கடவுள், அபுமலை என ஒரு கடித உறையில் முகவரியிட்டால், உங்கள் கடிதம் இங்கு வருமா? நீங்கள் அதில் பெயரை எழுதவேண்டும். அவரே எல்லையற்ற தந்தை. அவரின் பெயர் சிவன். மக்கள் சிவகாசியைப் பற்றிப் பேசுகிறார்கள். அங்கு ஒரு சிவாலயம் உள்ளது. நிச்சயமாக அவர் அங்கும் இருந்திருக்கலாம். அவர்கள் இராமர் அங்குமிங்கும் சென்றார், காந்தி அங்குமிங்கும் சென்றார் எனக் காட்டுகின்றனர். ஆகவே, சிவபாபாவின் உருவம் அங்குமிங்கும் இருக்கின்றது என்பதும் உண்மையாகும். எவ்வாறாயினும், அவர் அசரீரியானவர். அவர் தந்தை என அழைக்கப்படுகிறார். அனைவரினதும் தந்தை என வேறு எவரும் அழைக்கப்பட மாட்டார்கள். அவரே பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் தந்தையும் ஆவார். அவரின் பெயர் சிவன். அவருக்குக் காசியில் ஓர் ஆலயமும், சோமநாதருக்கு உஜைனில் ஓர் ஆலயமும் இருக்கிறது. அவருக்கு ஏன் அவ்வளவு ஆலயங்கள் கட்டப்பட்டன என எவருக்கும் தெரியாது. அதேபோன்று, இலக்ஷ்மியையும் நாராயணனையும் பூஜிப்பவர்கள், தாங்களே சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தனர் என்றும் கூறுவர், ஆனால் சுவர்க்கம் எப்பொழுது இருந்தது என்றும், அவர்கள் எவ்வாறு அதன் அதிபதிகள் ஆகினார்கள் என்றும் எவருக்கும் தெரியாது. பூஜிப்பவர்களுக்குத் தாம் பூஜிப்பவரின் தொழில் என்ன என்று தெரியாவிடின், அவர்கள் மூடநம்பிக்கை உடையவர்கள் என அழைக்கப்படுவார்கள். இங்கும், உங்களிற் சிலர் “பாபா” எனக் கூறியபோதும், நீங்கள் இன்னும் அவரை முழுமையாக இனங்காணவில்லை. உங்களுக்குத் தாயையும், தந்தையையும் தெரியாது. இலக்ஷ்மி, நாராயணனின் பக்தர்கள் அவர்களைப் பூஜிப்பார்கள். அவர்கள் சிவாலயத்திற்குச் சென்று, அவரை “தாயும் நீங்களே, தந்தையும் நீங்களே” எனப் புகழ்ந்து பாடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர் எவ்வாறு அவர்களுடைய தாயும், தந்தையும் ஆகினார் என்பதோ, எப்போது அவர் அவ்வாறாகினார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. பாரத மக்களுக்கு எதுவும் புரிவதில்லை. கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் ஆகியோர் கிறிஸ்துவையும், புத்தரையும் நினைவு செய்கிறார்கள். கிறிஸ்து இன்ன காலத்தில் வந்து, கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபனை செய்தார் என அவர்களால் அவர்களுடைய சுயசரிதையை உடனடியாகக் கூறுமுடியும், ஆனால் பாரத மக்களுக்கோ தாம் பூஜிப்பவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்குச் சிவனைப் பற்றியோ அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பற்றியோ அல்லது உலகத் தாயையோ (ஜெகதம்பாள்) அல்லது உலகத் தந்தையையோ, இலக்ஷ்மி நாராயணனைப் பற்றியோ தெரியாது, ஆனால் அவர்கள் தொடர்ந்தும் அவர்களைப் பூஜிக்கின்றார்கள் அவர்களுக்கு அவர்களது சுயசரிதைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்;களுக்கு விளங்கப்படுத்துகிறார்: 'நீங்கள் சத்தியயுகத்தில் இருந்தபோது ஆத்மாவும் சரீரமும் தூய்மையாக இருந்ததால் நீங்கள் அங்;கு ஆட்சி செய்தீர்கள். உண்மையாக நீங்கள் அங்கு ஆட்சி செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். பின்னர், மறுபிறவி எடுத்து 84 பிறவிகளை அனுபவம் செய்ததால், நீங்கள் அந்த இராச்சியத்தை இழந்து, அழகானவர்களிலிருந்து அவலட்சணமானவர்கள் ஆகினீர்கள். அழகாக இருந்த நீங்கள் இப்பொழுது அவலட்சணமாகி விட்டீர்கள். கிருஷ்ணர் நாராயணராக இருந்தார் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்கள் இந்நாட்களில், கிருஷ்ணரின் படத்தைப் போலவே நாராயணனின் படத்தை உருவாக்குகிறார்கள். எவ்வாறாயினும், மக்களுக்கு இவ்விடயங்கள் புரிவதில்லை. யாதவர்களே ஏவுகணைகளைக் கண்டுபிடித்தனர், கௌரவர்களும் பாண்டவர்களும் சகோதரர்கள். அந்தச் சகோதரர்கள் அசுரத்தரமானவர்கள், இந்தச் சகோதரர்கள் தெய்வீகமானவர்கள். இந்தச் சகோதரர்களும் அசுரத்தனமாக இருந்தார்கள். எவ்வாறாயினும், தந்தை அவர்களை மேன்மையான தெய்வீகச் சகோதரர்களாக ஆக்குகிறார். ஆகவே, இரு சகோதரர்களுக்கும் என்ன நடந்தது? நிச்சயமாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள், கௌரவர்கள் அழிக்கப்பட்டார்கள். இங்கு அமர்ந்திருக்கும்போது, சிலர் "மம்மா" ~~பாபா" எனக் கூறியபோதும், அவர்களுக்கு அவர்களைத் தெரியாது. அவர்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. பாபாவே, அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என அவர்களுக்குத் தெரியாது. அவர்களால் அந்த நம்பிக்கையைப் பேணமுடியாது. சரீர உணர்வில் இருப்பதால், அவர்கள் தமது சரீர நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை நினைவு செய்கிறார்கள். இங்கு, நீங்கள் சரீரமற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது மனிதர்கள் எவராலும் விளங்கப்படுத்த முடியாத ஒரு புதிய விடயமாகும். இங்கு தாய், தந்தையுடன் அமர்ந்திருக்கும்போதும் சிலர் அவரை இனங்கண்டு கொள்வதில்லை. இதுவும் ஓர் அற்புதமாகும். அவர்கள்; இங்கு பிறவி எடுத்தபோதும், அவர் அசரீரியானவர் என்பதால், அவர்கள் அவரை இனங்கண்டு கொள்வதில்லை. அவர்களால் அவரைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர், அவர்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றாததால், ஞானத்தினால் வியப்படைந்த பின்னரும், அவர்கள் ஓடி விடுகிறார்கள். அவர்களுக்கு 21 பிறவிகளுக்கான சுவர்க்க ஆஸ்தியை வழங்குபவரை அவர்களால் இனங்கண்டுகொள்ள முடியாதுவிடின், அவர்கள் ஓடிவிடுவார்கள். தந்தையை இனங்கண்டு கொள்பவர்கள் பாக்கியசாலிகள் எனக் கூறப்படுகிறார்கள். தந்தை ஒருவரே, அனைவரையும் துன்பத்திலிருந்து விடுதலை செய்கிறார். உலகில் அதிகளவு துன்பம் உள்ளது. எவ்வாறாயினும். இந்த இராச்சியம் சீரழிந்துள்ளது. நாடகத்திற்கேற்ப 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே சீரழிந்த உலகம் இருக்கும். பின்னர், தூய மேன்மையான இராச்சியமாகிய, சத்திய யுகத்துச் சுய ஆட்சியை ஸ்தாபனை செய்வதற்குத் தந்தை மீண்டும் வருவார். மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். இது மனிதர்களின் உலகமாகும். தேவர்களின் உலகம் சத்தியயுகத்தில் இருக்கும். இங்கு, தூய்மையற்ற மனிதர்கள் இருக்கின்றனர். தூய தேவர்கள் சத்தியயுகத்தில் இருப்பார்கள். பிராமணர்கள் ஆகுபவர்களுக்கே இது விளங்கப்படுத்தப்படும். பிராமணர்கள் ஆகுபவர்கள் தொடர்ந்தும் விளக்கங்களைப் பெறுவார்கள். அனைவரும் பிராமணர்கள் ஆகுவார்கள் என்றல்ல. பிராமணர்களாக ஆகுபவர்களே பின்னர் தேவர்களாக ஆகுவார்கள். அவர்கள் பிராமணர்கள் ஆகாதுவிடின், தேவர்களாக ஆகமுடியாது. "மம்மா" "பாபா" எனக் கூறியவுடன் அவர்கள் பிராமண குலத்தவர் ஆகுகிறார்கள். பின்னர், அனைத்தையும்; கற்பதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. ஆபிரகாம், புத்தர் முதலானோர் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபிப்பதற்காக கிறிஸ்து தனியாக வந்து ஒருவரின் சரீரத்தில் பிரவேசித்தார். பின்னர், கிறிஸ்தவ சமயத்துக்கு உரியவர்கள் தொடர்ந்தும் மேலிருந்து இறங்கி, அவரைப் பின்பற்றினர். இப்பொழுது, கிறிஸ்தவ ஆத்மாக்கள் அனைவரும் இங்கு இருக்கின்றனர். இறுதியில் அனைவரும் மீண்டும் வீட்டிற்குச் செல்ல வேண்டும். தந்தை அனைவருக்கும் வழிகாட்டியாகி, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்கிறார். தந்தையே முழு மனித வர்க்கத்திற்கும் விடுதலை அளிப்பவரும், வழிகாட்டியும் ஆவார். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் மீண்டும் அழைத்துச் செல்வார். தூய்மையற்று இருப்பதால் ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது, அசரீரி உலகம் தூய்மையானது. இப்பௌதீக உலகம் இப்பொழுது தூய்மையற்றதாக உள்ளது. இப்பொழுது, அவர்கள் அசரீரியான உலகிற்குச் செல்வதற்கு அவர்கள் அனைவரையும் தூய்மையாக்குபவர் யார்? இதனால் அவர்கள் 'ஓ தந்தையாகிய கடவுளே வாருங்கள்!" எனக் கூவி அழைக்கின்றனர். தந்தையாகிய கடவுள் வந்து, “முழு உலகும் சீரழிந்து இருக்கும் போது ஒருமுறையே நான் வருவேன்” என எங்களுக்குக் கூறுகிறார். அவர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்குப் பல துப்பாக்கி ரவைகள், குண்டுகள் முதலியவற்றைத் தொடர்ந்தும் தயாரிக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்கள் குண்டுகள் தயாரிக்கின்றனர், மறுபுறத்தில் இயற்கை அனர்த்தங்கள் வெள்ளம், பூமி அதிர்வுகள் முதலியவையும் இடம்பெறுகின்றன. மின்னல் மின்னும்;;;;;, மக்களும் நோய்வாய்ப்படுவார்கள், ஏனெனில் பசளை தயாரிக்கப்பட வேண்டும்! பொதுவாகப் பசளை குப்பையினாலேயே தயாரிக்கப்படும். இம்முழு உலகிற்கும் முதற்தர அறுவடைக்கு பசளை தேவைப்படுகிறது. பாரதம் மாத்திரமே சத்தியயுகத்தில் இருந்தது. அதிகமானோர் அழிக்கப்படுவார்கள். 'நான் தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்க வருகிறேன், ஏனையவை அழிக்கப்பட்டு, பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்" எனத் தந்தை கூறுகிறார். அனைவரும் சுவர்க்கத்தை நினைவு செய்கின்றனர், ஆனால் எவருக்கும் சுவர்க்கம் என்றால் என்ன எனத் தெரியாது. எவராவது மரணிக்கும் போது அவர் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்;டார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எவராவது இக்கலியுகத்தில் மரணித்தால், அவர் நிச்சயமாகக் கலியுகத்தில் மறுபிறவி எடுப்பார். சிலருக்கு இந்தளவு புத்தியேனும் கிடையாது. அவர்கள் 'தத்துவ கலாநிதி|| போன்ற பட்டங்களைத் தமக்குத்தாமே கொடுத்துக் கொண்டபோதிலும் அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. மனிதர்கள் ஆலயங்களில் வாழ்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள். அது பாற்கடல், ஆனால் இது நச்சுக்கடல். தந்தையே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவர் மனிதர்களுக்குக் கற்பிக்கிறார். அவர் மிருகங்களுக்குக் கற்பிப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: 'இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்;டது. செல்வந்தர் ஒருவர் எவ்வாறோ, அவ்வாறே அவரின் தளபாடமும் இருக்கும். ஏழைகள் மட்பாத்திரங்கள் வைத்திருப்பார்கள். ஆனால் செல்வந்தர்கள் பல பௌதீக உடைமைகளைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சத்தியயுகத்தில் செல்வந்தர்களாக இருப்பீர்கள் என்பதால் உங்கள் மாளிகைகள் தங்கத்தினாலும் வைரங்களினாலும் ஆனதாக இருக்கும். அங்கு அசுத்தமோ அல்லது துர்நாற்றமோ இருக்காது. இங்கு, துர்நாற்றம் உள்ளது. இதனால் ஊதுபத்திகள் எற்றப்படுகின்றன. அங்கு மலர்களில் இயற்கை நறுமணம் போன்றவை இருக்கிறது. அங்கு ஊதுபத்திகள் ஏற்றவேண்டிய அவசியம் இல்லை. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்குவதற்காகத் தந்தை கற்பிக்கிறார். அவர் எவ்வளவு சாதாரணமானவர் என சற்றுப் பாருங்கள்! நீங்கள் அவ்வாறான ஒரு தந்தையை நினைவு செய்வதற்கு மறந்துவிடுகிறீர்கள். உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாததால் நீங்கள் அவரை மறந்து விடுகிறீர்கள். உங்களுக்குச் சுவர்க்க ஆஸ்தியைக் கொடுக்கின்ற தாய் தந்தையை நீங்கள் மறந்துவிடுவது ஒரு துர்ப்பாக்கியமான விடயம் ஆகும். தந்தை வந்து, உங்களை அனைவரையும் விட மேன்மையானவராக ஆக்குகிறார். நீங்கள் அவ்வாறான தாய்-தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதுவிடின், நீங்கள் 100 சதவீதம், மிகவும் துரதிஷ்;டசாலிகளாகக் கருதப்படுவீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. கற்று உலகின் அதிபதி ஆகுவதற்கும், ஒரு பணிப்பெண் அல்லது வேலையாள் ஆகுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. நீங்கள் எந்த அளவிற்குக் கற்கிறீர்கள் என நீங்களே புரிந்துகொள்ளலாம். ஏனைய இடங்களில் சமயஸ்தாபகர்கள் சமயத்தை ஸ்தாபனை செய்வதற்கு வந்தார்கள், இங்கு இது தூய இல்லறப்பாதை என்பதால் தாயும், தந்தையும் உள்ளனர். தூய இல்லறப்பாதை, இப்பொழுது தூய்மையற்ற இல்லறப்பாதையாகி விட்டது. இலக்ஷ்மி நாராயணன் தூய்மையாக இருந்தபோது, அவர்களின் குழந்தைகளும் தூய்மையாக இருந்தனர். நீங்கள் எவ்வாறு ஆகுவீர்கள் என உங்களுக்குப் புரிகிறது. தாயும் தந்தையும் உங்களை மிக மேன்மையானவர்களாக ஆக்குவதால், நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும். பாரதமே தாய்-தந்தை நாடு என அழைக்கப்படுகிறது. சத்தியயுகத்தில் அனைவரும் தூய்மையாக இருந்தனர், இங்கு அனைவரும் தூய்மையற்றவர்கள். அனைத்தும் உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளபோதும் நீங்கள் தந்தையை நினைவு செய்வதில்லை, ஆகவே உங்கள் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டுள்ளது. கேட்டுக்கொண்டிருக்கும் போதே நீங்கள் கற்பதைத் துறந்துவிடுவீர்கள், எனவே உங்கள் புத்தியின் பூட்டு முழுமையாக பூட்டப்படுகிறது. பாடசாலைகளிலும் அவர்கள் வரிசைக்கிரமமானவர்களே. கல்லுப் புத்தியும் தெய்வீகப் புத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்லுப் புத்தி உடையவர்கள் முழு நாளிலும் 5 நிமிடங்கள் கூடத் தந்தையை நினைவு செய்யாததால் அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. அவர்கள் அவரை 5 நிமிடங்களாவது நினைவு செய்திருந்தால், அந்தளவிற்கே அவர்களின் புத்தியின் பூட்டும் திறக்கப்பட்டிருக்கும். அவர்கள் அவரை அதிகளவு நினைவு செய்திருந்தால், அவர்களின் புத்தியின் பூட்டும் முழுவதாகத் திறக்கப்பட்டிருக்கும். அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. சில குழந்தைகள் 'அன்பின் பாபா" “அன்பின் தாதா" என முகவரியிட்டு பாபாவுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். இப்பொழுது, நீங்கள் 'அன்பின் தாதா" என முகவரியிட்டுக் கடிதத்தை அஞ்சல் செய்தால், அது இங்கு வந்து கிடைக்குமா? நீங்கள் நிச்சயமாகப் பெயரை எழுதவேண்டும். உலகில் பல தாதாக்களும், தாதிகளும் இருக்கின்றனர். நல்லது. தீபாவளி வரவிருக்கிறது. மக்கள் தீபாவளியில் புதிய கணக்குகளை ஆரம்பிப்பார்கள். நீங்கள் உண்மையான பிராமணர்கள். பிராமணப் பூசகர்கள் வியாபாரிகளைப் புதிய கணக்கைத் திறக்கச் செய்வார்கள். நீங்களும் ஒரு புதிய கணக்கைத் திறக்க வேண்டும். ஆனால் இவை புதிய உலகிற்கே ஆகும். பக்திமார்க்கத்துக் கணக்குகள் எல்லையற்ற நட்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஓர் எல்லையற்ற ஆஸ்தியையும், எல்லையற்ற அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுவீர்கள். எல்லையற்ற தந்தை இங்கிருந்து இந்த எல்லையற்ற விடயங்களை விளங்கப்படுத்துகிறார், ஆனால் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறவேண்டிய குழந்தைகளாலேயே இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். பல மில்லியன்களில் ஒரு கையளவானவர்களே தந்தையிடம் வருவார்கள். சிலர் நடமாடும்; போதே தமது வருமானத்தை இழப்பார்கள். பின்னர் அவர்கள் சேமித்த அனைத்தும் இரத்து செய்யப்படும். நீங்கள் ஏனையோருக்குத் தானம் செய்யும்போது உங்கள் கணக்கு அதிகரிக்கிறது. நீங்கள் ஏனையோருக்குத் தானம் செய்யாது விடின் உங்கள் கணக்கு அதிகரிக்காது. உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஏனையோருக்குத் தானம் செய்து அவர்களுக்கு நன்மையை செய்தாலே அது சாத்தியம். எவருக்காவது தந்தையின் அறிமுகத்தை கொடுப்பது என்றால் சேமிப்பது என்று அர்த்தமாகும். நீங்கள் தந்தையின் அறிமுகத்தை கொடுக்காது விட்டால், நீங்கள் எதனையும் சேமிக்கமாட்டீர்கள். உங்கள் வருமானம் மிகவும் மகத்தானது. முரளியைக் கற்பதன் மூலம் உங்களால் உண்மையான வருமானத்தை ஈட்டமுடியும், ஆனால் அது எவருடைய முரளி என உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவலட்சணமாகியவர்கள் அழகானவர்கள் ஆகுவதற்கு முரளியைக் கேட்க வேண்டும் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ~~உங்கள் முரளியில் வித்தை உள்ளது". அவர்கள் கடவுளின் வித்தையைப் பற்றிப் பேசுவார்கள் ஆகவே இந்த முரளிகளில் வித்தை உள்ளது. இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கிறீPர்கள். தேவர்களுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை. அவர்களுக்கே இந்த ஞானம் இல்லாதிருக்கும்போது எவ்வாறு அவர்களின் பின்னர் வந்தவர்களுக்கு இந்த ஞானம் இருக்க முடியும்? பின்னர் எழுதப்பட்ட சமயநூல்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிடும். உங்களுடைய உண்மையான கீதையில் மிகக் குறைந்தவர்கள் இருக்கும் வேளையில் அந்த உலகில் நூறாயிரக் கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். உண்மையில், இப்படங்களே உண்மையான கீதை. இப்படங்களினால் புரிந்து கொள்வதைப்போல கீதையை மக்களால் அந்தளவிற்கு புரிந்து கொள்ள முடியாது அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. மிக நன்றாகக் கற்று உங்களைப் பாக்கியசாலி ஆக்குங்கள். தேவர் ஆகுவதற்கு ஓர் உறுதியான பிராமணர் ஆகுங்கள்.2. சரீரமற்ற தந்தையை நினைவு செய்வதற்கு ஆத்ம உணர்வு உடையவராக ஆகுங்கள். உங்கள் சரீரத்தை மறந்துவிடுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
சதா உங்களை உப-தேரோட்டியாகவும் பற்றற்ற பார்வையாளராகவும் கருதுவதன் மூலம், யோக்யுக்தாக இருந்து, சரீர உணர்வுக்கு அப்பால் இருப்பீர்களாக.சதா உங்களை உப தேரோட்டியாகவும், பற்றற்ற பார்வையாளராகவும் கருதி முன்னேறிச் செல்வதே யோக்யுத் ஆகுவதற்கான இலகுவான வழியாகும். ~~இந்த ஆத்மாவான நானே, இந்த இரதத்தை ஓட்டுபவன்.|| இந்த விழிப்புணர்வு இயல்பாகவே உங்களை உங்கள் இரதமான சரீரத்திலிருந்தும், எவ்வகையான சரீர உணர்விலிருந்தும் விடுபட்டிருக்கச் செய்கிறது. உங்களுக்கு எந்தச் சரீர உணர்வும் இல்லாத போது, நீங்கள் இலகுவாக யோக்யுத்தாகுகிறீர்கள், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் யுக்தியுக்தாக இருக்கும். உங்களை உப-தேரோட்டியாக கருதுவதன் மூலம், உங்கள் புலன்கள் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அத்தகைய ஆத்மா தனது புலன் உறுப்புகளின் கட்;டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை.
சுலோகம்:
ஒரு வெற்றியான ஆத்மா ஆகுவதற்கு, ~~கவனம் செலுத்துதல்|| மற்றும் ~~இதனை பயிற்சி செய்தல்|| என்பவற்றை உங்கள் ஆதி சம்ஸ்காரங்கள் ஆக்குங்கள்.