12.01.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    11.04.85     Om Shanti     Madhuban


ஆதார மூர்த்திகளின் ஒன்றுகூடலின் சிறப்பியல்பு பெருந்தன்மை ஆகும்.


இன்று, உலக மாற்றத்திற்கு ஆதாரமான விசேட ரூபங்களாகவும், உலகின் எல்லையற்ற சேவைக்கு ஆதாரமாகவும், தமது மேன்மையான விழிப்புணர்வினதும் தமது எல்லையற்ற மனோபாவத்தினதும் தமது இனிய வார்த்தைகளினதும் அடிப்படையில் மற்றவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதுடன் பணிவான கருவிகளாகவும் இருக்கும் விசேடமான ஆத்மாக்களைச் சந்திப்பதற்காக பாபா வந்துள்ளார். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த முறையில் உங்களை ஆதார மூர்த்திகளாக அனுபவம் செய்கிறீர்களா? ஆதார மூர்த்திகளாக இருக்கும் ஆத்மாக்களின் ஒன்றுகூடலுக்கு இத்தகைய எல்லையற்ற பொறுப்பு உள்ளது. ஆதார மூர்த்தியாக இருப்பதெனில், நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் சதா உங்களைப் பொறுப்பானவராகக் கருதுதல் என்று அர்த்தம். இந்த ஒன்றுகூடலுக்குள் வருவதெனில், எல்லையற்ற பொறுப்பிற்கான கிரீடத்தை அணிந்து கொள்ளுதல் என்று அர்த்தம். இந்த ஒன்றுகூடலை நீங்கள் மீட்டிங் என்று அழைக்கிறீர்கள். இந்தச் சந்திப்பிற்கு வருதல் என்றால், எப்போதும் தந்தையிடமும் சேவையிலும் குடும்பத்திடமும் மேன்மையான அன்பான எண்ணங்கள் என்ற நூலால் கட்டப்பட்டிருப்பதுடன் மற்றவர்களையும் கட்டுதல் என்று அர்த்தம். நீங்களே இதற்கு ஆதாரங்கள். குறிப்பாக இந்த நோக்கத்துடன் இந்த ஒன்றுகூடலுக்குள் வருவதெனில், உங்களை அனைவருக்கும் ஓர் உதாரணம் ஆக்கிக் கொள்ளுதல் என்று அர்த்தம். இது ஒரு சந்திப்பல்ல. ஆனால், உங்களை சதா அதிமேலான ஒழுங்குமுறைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மேன்மையானவர் ஆகுவதன் தூய எண்ணத்தின் பந்தனத்தில் கட்டிக் கொள்வதாகும். எங்கும் உள்ள விசேடமான தேர்ந்தெடுக்கப்பட்ட இரத்தினங்கள் அனைவரும் ஆதாரங்களான இருப்பவர்களின் இந்த ஒன்றுகூடலில் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் தந்தைக்குச் சமமானவர் ஆகியுள்ளவர்கள் என்று அர்த்தம். சேவைக்கு ஆதாரமாக இருப்பதன் அடிப்படை என்றால், சுயத்தையும் ஏனைய அனைவர்களையும் ஈடேற்றும் ரூபம் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் எந்தளவிற்கு உங்களை ஈடேற்றுகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் ஏனையவர்களையும் ஈடேற்றுவதற்கான கருவிகள் ஆகுவீர்கள். இந்த ஒன்றுகூடலில் ஆதார மூர்த்திகளாகவும் ஈடேற்றும் ரூபங்களாகவும் இருக்கும் குழந்தைகளை பாப்தாதா கண்டார். அத்துடன் அவர் குறிப்பாக உங்களின் சிறப்பியல்புகளையும் பார்த்தார். நீங்கள் ஆதார மூர்த்திகள் ஆகியுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் ஈடேற்றும் ரூபங்களும் ஆகியுள்ளீர்கள். இந்த இரண்டு விடயங்களிலும் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்குத் தேவையான மூன்றாவது விடயம் என்ன? நீங்கள் ஆதார மூர்த்திகள் என்பதனாலேயே இந்த அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் ஈடேற்றும் ரூபங்கள் என்பதனால், நீங்கள் திட்டங்களைச் செய்துள்ளீர்கள். ஈடேற்றுதல் என்றால் சேவை செய்தல் என்று அர்த்தம். பாபா கண்ட மூன்றாவது விடயம் என்ன? நீங்கள் எந்தளவிற்கு இந்த விசேடமான ஒன்றுகூடலில் ஒருவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் பெருந்தன்மை மிக்கவராக இருப்பீர்கள். எந்தளவிற்கு உங்களிடம் பெருந்தன்மையான வார்த்தைகளும் பெருந்தன்மையான உணர்வுகளும் உள்ளன? ஏனெனில், பெருந்தன்மையான இதயம் என்றால், சதா ஒவ்வொரு பணியிலும் பெருந்தன்மையாகவும் பெரிய இதயத்துடனும் இருத்தல் என்று அர்த்தம். எந்த விடயத்தில் உங்களுக்கு பெருந்தன்மையான, பெரிய இதயம் இருக்க வேண்டும்? அனைவருக்காகவும் உங்களின் நல்லாசிகளின் மூலம் அனைவரையும் முன்னேற்றுவதில் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர் ஆகுங்கள். உங்களுடையது எதுவோ அது என்னுடையது. என்னுடையது எதுவோ அது உங்களுடையது. ஏனெனில் அனைத்தும் ஒரேயொரு தந்தைக்கே சொந்தமானது. இந்த எல்லையற்ற மனோபாவத்தைக் கொண்டிருப்பதில் பெருந்தன்மையான இதயத்தையும் பெரிய இதயத்தையும் கொண்டிருங்கள். பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருங்கள். அதாவது, அருள்பவரின் உணர்வுகளைக் கொண்டுள்ள இதயத்தைக் கொண்டவராக இருங்கள். நீங்கள் பெற்றுள்ள நற்குணங்கள், சக்திகள், சிறப்பியல்புகளை மகாதானம் செய்யும் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர் ஆகுங்கள். வார்த்தைகளால் ஞானச் செல்வத்தைத் தானம் செய்தல் பெரிய விடயம் அல்ல. ஆனால் நீங்கள் நற்குணங்களைத் தானம் செய்து, நற்குணங்களைக் கொடுப்பதில் ஒத்துழைப்பவர் ஆகவேண்டும். தானம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துதல் பிராமணர்களுக்குத் தகுதிவாய்ந்தது அல்ல. உங்களின் சொந்த நற்குணங்களால் ஒருவரைக் குணவான் ஆக்குதல், சிறப்பியல்புகளால் ஆத்மாக்களை நிரப்புவதில் ஒத்துழைத்தல் என்பவையே மகாதானியும் பெருந்தன்மையான இதயமும் ஆகும். இத்தகைய பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருப்பது, தந்தை பிரம்மாவைப் பின்பற்றுதல் என்று அழைக்கப்படுகிறது. இந்தளவிற்குப் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருப்பவர்களின் அடையாளங்கள் என்ன?

பாபா குறிப்பாக மூன்று அடையாளங்களைக் கண்டார். இத்தகையதோர் ஆத்மா எப்போதும் பொறாமை, வெறுப்பு, எவரையும் விமர்சித்தல் (குறைகூறுதல்) என்ற மூன்றில் இருந்தும் விடுபட்டிருப்பார். இது பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். பொறாமை என்பது உங்களையும் துன்புறுத்துகிறது. மற்றவர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. கோபம் ஒரு நெருப்பு என நீங்கள் குறிப்பிடுவதைப் போல, பொறாமையும் ஒரு நெருப்பைப் போலவே செயற்படும். கோபம் பெரிய நெருப்பு. இது சிறியதொரு நெருப்பு. வெறுப்பு என்பது நீங்கள் மற்றவர்களுக்காகத் தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஸ்திதியை அனுபவிக்க விடாது. அல்லது உங்களுக்காகவும் சதா தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்க அனுமதிக்காது. வெறுப்பு என்றால் அது ஒருவரை விழச் செய்துவிடும். அத்துடன் மற்றவர்களையும் விழச் செய்துவிடும். அதேபோன்று, விமர்சித்தலும் - இது நகைச்சுவையாகக் கூறினாலும் அல்லது சீரியஸாகக் கூறினாலும் - துன்பத்தை ஏற்படுத்தும். இது அவர்கள் முன்னேறும்போது அவர்களைத் தள்ளி விடுவதைப் போன்றே இருக்கும். அதாவது அவர்களை எட்டி உதைப்பதைப் போன்றதாகும். யாராவது உங்களைத் தள்ளிவிட்டு நீங்கள் விழுந்தால், உங்களுக்குச் சிறிய அல்லது பெரிய ஒரு காயம் ஏற்பட்டாலும், நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்களின் காயத்தைப் பற்றியே நினைப்பீர்கள். இவ்வாறு புண்பட்டிருப்பதனால், நீங்கள் நிச்சயமாகத் தொடர்ந்து ஏதாவதொரு முறையில் இவ்வாறு உங்களைக் காயப்படுத்தியவரையே நினைப்பீர்கள். இது சாதாரணமான விடயம் இல்லை. இதுவும் துன்பம் விளைவிக்கும் பட்டியலில் உள்ளது. எனவே, உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் எந்தளவிற்கு ஆதார மூர்த்திகளாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு ஈடேற்றும் ரூபமாகவும் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருக்கும் ஒரு கருவியாகவும் ஆகுவீர்கள். நீங்கள் இந்த அடையாளங்களைப் புரிந்து கொண்டீர்கள், அல்லவா? பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்தப் பெருந்தன்மை இருக்கும்.

ஒன்றுகூடல் மிகவும் நல்லது. பிரபல்யமானவர்கள் அனைவரும் வந்துள்ளார்கள். நீங்கள் மிக நல்ல திட்டங்களையும் செய்துள்ளீர்கள். நீங்கள் திட்டங்களை நடைமுறை வடிவில் இடுவதற்கான கருவிகள் ஆவீர்கள். நீங்கள் செய்த நல்ல திட்டங்களைப் போன்றே நீங்களும் நல்லவர்கள். தந்தை உங்களை விரும்புகிறார். உங்களுக்குச் சேவையில் மிகுந்த அன்பு உள்ளது. எல்லா வேளையும் சேவையில் வெற்றி பெறுவதன் அடிப்படை, பெருந்தன்மையே. உங்கள் அனைவரினதும் இலக்கும் தூய எண்ணங்களும் மிகவும் நல்லவை. உங்கள் அனைவருக்கும் ஒரே எண்ணம் உள்ளது. நீங்கள் ஒரேயொரு வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக இருந்து, ஒரேயொருவரை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் இதை மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அறியாமைப் பாதையில் இருப்பவர்கள் ஒரேயொரு தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்காகத் தமது ஒரு விரலை மேல்நோக்கிக் காட்டுவார்கள். அவர்கள் இரண்டு விரல்களைக் காட்டுவதில்லை. ஒத்துழைப்பதன் அடையாளமும் ஒரு விரலால் காட்டப்பட்டுள்ளது. விசேட ஆத்மாக்களான உங்களின் சிறப்பியல்பின் அடையாளமே தொடர்கிறது.

எனவே, பொன் விழாவைக் கொண்டாடுவதற்கும் திட்டங்களைச் செய்வதற்கும், சதா இரண்டு விடயங்களை நினைவில் வைத்திருங்கள்: ஒற்றுமை (ஏக்தா), ஒருமுகப்படுத்தல் (ஏகாக்கிரதா). ஒரு பணியைச் செய்வதற்கு இவையே இரண்டு மேன்மையான வெற்றிக் கரங்கள் ஆகும். ஒருமுகப்படுத்தல் என்றால், சதா வீணான மற்றும் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருத்தல். எங்கு ஒற்றுமையும் ஒருமுகப்படுத்தலும் உள்ளதோ, அங்கு வெற்றி உங்களின் கழுத்து மாலை ஆகும். நீங்கள் இந்த இரண்டு விசேடமான கைகளாலும் பொன்விழா என்ற பணியைச் செய்ய வேண்டும். உங்கள் அனைவருக்கும் இரண்டு கைகள் உள்ளன. எனவே, இந்த இரண்டு கைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நான்கு கர ரூபங்;கள் ஆகுவீர்கள். உண்மையான நாராயணனும் மகாலக்ஷ்மியும் நான்கு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளார்கள். நீங்கள் அனைவரும் உண்மையான நாராயணர்கள், மகாலக்ஷ்மிகள். ஒவ்வொரு பணியையும் நான்கு கரத்துடன் செய்யுங்கள். அதாவது, காட்சிகளை அருளும் ரூபம் ஆகுங்கள். இரண்டு கைகளால் மட்டும் எதையும் செய்யாதீர்கள். அனைத்தையும் நான்கு கைகளுடன் செய்யுங்கள். நீங்கள் பொன்விழாவை இப்போதே ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள். (கணேஷின் வழிபாட்டுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது). கணேஷ் நான்கு கரங்களுடன் காட்டப்படுகிறார். பாப்தாதா உங்களைச் சந்திப்பதற்காகத் தினமும் வருகிறார். இங்கு ஒரு தடவை செல்வதன் மூலம் அவர் சகல செய்திகளையும் அறிந்து கொள்கிறார். நீங்கள் அனைவரும் எவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள் என்ற புகைப்படத்தையும் பாப்தாதா எடுத்துக் கொள்கிறார். பௌதீகமாக இல்லை. உங்களின் மனதின் ஸ்திதியின் ஆசனத்தின் புகைப்படத்தையே பாபா எடுக்கிறார். ஒருவர் வார்த்தைகள் மூலம் எதையாவது கூறலாம். ஆனால், பாபா மனதின் வார்த்தைகளையே, உங்களின் மனதில் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அவற்றைப் பதிவு செய்கிறார். பாப்தாதாவிடம் அனைவரின் பதிவுசெய்யப்பட்ட கசெற்றுகளும் உள்ளன. அவரிடம் படங்களும் உள்ளன. அவரிடம் இரண்டும் உள்ளன. உங்களுக்கு என்ன வேண்டுமோ - வீடியோ, ரீவி - அனைத்தும் அவரிடம் உள்ளன. உங்கள் அனைவரிடமும் உங்களின் சொந்தக் கசெற் உள்ளதல்லவா? எவ்வாறாயினும், சிலரால் தமது மனங்களின் அல்லது தமது எண்ணங்களின் ஒலியைச் சொல்ல முடிவதில்லை. அச்சா.

அனைவரும் இளைஞர்களுக்கான திட்டங்களை விரும்புகிறார்கள். இதுவும் ஊக்கம், உற்சாகத்திற்கான விடயம் ஆகும். இது விசைக்குரிய விடயம் அல்ல. உங்களின் இதயத்தில் எத்தகைய உற்சாகம் உள்ளதோ, அது இயல்பாகவே மற்றவர்களிலும் உற்சாகத்திற்கான சூழலை உருவாக்கும். எனவே, இது ஒரு பேரணி இல்லை. ஆனால் உற்சாகத்தின் பேரணி ஆகும். இது பெயரளவிலேயே உள்ளது. ஒரு கருவியாக நீங்கள் என்ன பணியைச் செய்தாலும், அதில் ஊக்கம், உற்சாகம் என்ற சிறப்பியல்பு இருக்க வேண்டும். அனைவரும் திட்டங்களை விரும்புகிறார்கள். எதிர்காலத்திலும், நீங்கள் தொடர்ந்து நான்கு கரங்களைக் கொண்டவராக இருந்து நடைமுறை ரூபத்தில் திட்டங்களைச் செய்யும்போது, மேலதிகமான சேர்க்கைகள் தொடர்ந்து இடம்பெறும். அனைத்திலும் பாப்தாதா மிகவும் விரும்பிய விடயம், அனைவரும் மிகுந்த ஆடம்பரத்துடன் பொன்விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற ஊக்கமும் உற்சாகமும் மிக்க ஒரே எண்ணத்தைக் கொண்டிருந்ததே ஆகும். அனைவரின் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த எண்ணம் என்ற இந்த அத்திவாரம் ஒன்றே ஆகும். சதா ஒன்று என்ற இந்த வார்த்தையைக் கீழ்க்கோடிட்டவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் ஒருவரே. இந்தப் பணியும் ஒரேயொருவருடையதே. எந்த மூலையில் பணி செய்யப்பட்டாலும், அது இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாட்டிலோ என்றாலும் எந்தப் பிராந்தியமாக இருந்தாலும், அது கிழக்கோ அல்லது மேற்கோ, நீங்கள் அனைவரும் ஒன்றே. அத்துடன் இது ஒரேயொருவரின் பணியே. இதுவே அனைவரின் எண்ணமும், அல்லவா? நீங்கள் ஏற்கனவே இந்தச் சத்தியத்தைச் செய்துள்ளீர்கள், அல்லவா? வார்த்தைகளில் செய்த சத்தியம் அல்ல. ஆனால், உங்களின் மனங்களில் செய்த சத்தியம். அதாவது, இந்தத் தடைபடாத எண்ணத்தைக் கொண்டிருப்பதாகும். என்ன நிகழ்ந்தாலும், அதை நிறுத்த முடியாது. அதைத் தடுக்க முடியாது. நீங்கள் அனைவரும் இத்தகைய சத்தியத்தைச் செய்திருக்கிறீர்களா? எங்கு ஒரு புண்ணியப் பணி நடைபெறுகிறதோ, அங்கு, ஒரு சத்தியத்தைச் செய்வதற்காக, அனைவரும் முதலில் ஓர் எண்ணத்தை உருவாக்குவார்கள். அதன் அடையாளமாக கையில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். அவர்கள் மணிக்கட்டில் ஒரு நூலைக் கட்டிக் கொள்வார்கள். அல்லது, அந்தப் பணியைச் செய்ய இருப்பவர்களுக்கு ஏதாவதொன்றால் செய்யப்பட்ட காப்பொன்றைக் கட்டுவார்கள். எனவே, இது மேன்மையான எண்ணங்களின் காப்பு, அல்லவா? இன்று, அனைவரும் மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பண்டாரியைத் (சமையலறை) திறந்து வைத்ததைப் போன்று, இப்போது இந்த பண்டாரியையும் உருவாக்குங்கள். இதில் அனைவரும் தடைபடாத சத்தியமாகக் கருதி இந்தக் குறிப்பை எழுத வேண்டும். இரு பண்டாரிகளும் (சமையலறையும் பாபாவின் பெட்டியும்) ஒன்றுசேர்ந்திருக்கும்போது வெற்றி ஏற்படும். இது உங்களின் இதயபூர்வமாக இருக்க வேண்டும். பகட்டிற்காக மேலோட்டமாக அல்ல. இதுவே அத்திவாரம் ஆகும். இதுவே தங்கமாகிப் பொன்விழாவைக் கொண்டாடுவதன் அடிப்படை ஆகும். இதற்கு, ஒரு சுலோகனை நினைவு செய்யுங்கள்: நான் ஒரு பிரச்சனை ஆகமாட்டேன். ஒரு பிரச்சனையைக் கண்டு நான் தளம்பல் அடையவும் மாட்டேன். நான் மற்றவர்களுக்குத் தீர்வுகளைக் கொடுக்கும் தீர்வுகளின் சொரூபம் ஆகுவேன். இந்த விழிப்புணர்வு இயல்பாகவே பொன்விழாவை வெற்றி நிறைந்தது ஆக்கும். இறுதியான பொன் விழா நடைபெறும்போது, அனைவரும் உங்களின் பொன்னான ரூபத்தை அனுபவம் செய்வார்கள். நீங்கள் உங்களில் பொன்னுலகைக் காண்பீர்கள். பொன்னுலகம் வரவுள்ளது என்று மட்டும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் நீங்கள் அதை நடைமுறையில் அவர்களுக்குக் காட்டுவீர்கள். மந்திரவாதிகள் எதையாவது உங்களுக்குக் காட்டும்போது, அதேவேளையில் தொடர்ந்து, இதைப் பாருங்கள் என்று சொல்வதைப் போன்று, உங்களின் பொன்னான முகங்களும், உங்களின் பிரகாசிக்கும் நெற்றிகளும், உங்களின் பிரகாசிக்கும் கண்களும், உங்களின் பிரகாசிக்கும் உதடுகளும் அனைத்தும் தங்க யுகத்தின் காட்சியைக் காட்ட வேண்டும். நீங்கள் அந்தச் சித்திரங்களைச் செய்கிறீர்கள், அல்லவா? ஒரு படத்தில், ஒரு நிமிடம் நீங்கள் பிரம்மாவைக் காண்பீர்கள். அடுத்த நிமிடம், கிருஷ்ணரை அல்லது விஷ்ணுவைக் காண்பீர்கள். அதேபோன்று, அவர்களும் உங்களின் காட்சிகளைக் காண வேண்டும். ஒரு நிமிடம் தேவதையாகவும் ஒரு கணம் உலகச் சக்கரவர்த்தியாகவும் உலகச் சக்கரவர்த்தினியாகவும், ஒரு கணம் சாதாரணமான வெள்ளை ஆடை அணிந்தவராகவும் தோன்ற வேண்டும். உங்களின் பொன்னான ரூபத்தில் இந்த வெவ்வேறு ரூபங்கள் அனைத்தும் புலப்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மீக ரோஜாக்களின் பூங்கொத்தொன்று ஒன்றாகக் கூடியிருக்கும்போது, ஒரு ஆன்மீக ரோஜாவிற்வே அதிகளவு நறுமணம் இருந்தால், அந்தப் பெரிய பூங்கொத்தால் அதிகளவு அற்புதங்களைச் செய்ய முடியும்! ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஓர் உலகமே உள்ளது. நீங்கள் தனியே இல்லை. அந்த நட்சத்திரங்களில் உலகம் கிடையாது. ஆனால், நட்சத்திரங்களான உங்களுக்குள் ஓர் உலகம் உள்ளது. அற்புதம் நிகழவுள்ளது! அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. ஒருவர் அதை ஆரம்பித்து வைத்து அர்ஜூனர் ஆகவேண்டும். அவ்வளவே. வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் அர்ஜூனர் ஆகவேண்டும். அர்ஜூனர் என்றால் முதலாம் இலக்கத்தவர் என்று அர்த்தம். இப்போது, இதன் அடிப்படையில் ஒரு பரிசை வழங்குங்கள். பொன்விழா முழுவதிலும் ஒரு பிரச்சனை ஆகாதீர்கள். பிரச்சனைகளைப் பார்க்காதீர்கள். மூன்று சிறப்பியல்புகளும் இருக்க வேண்டும்: தடைகளில் இருந்து விடுபடுதல், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடுபடுதல், விகாரம் அற்றிருத்தல். இத்தகைய பொன்னான ஸ்திதியைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பரிசைக் கொடுங்கள். பாப்தாதாவும் சந்தோஷப்படுகிறார். பரந்த, எல்லையற்ற புத்திகளை உடைய குழந்தைகளைப் பார்க்கையில் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களிடம் எல்லையற்ற புத்திகள் இருப்பதைப் போன்று, எல்லையற்ற இதயங்களையும் கொண்டிருங்கள். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற புத்திகள் உள்ளன. இதனாலேயே, நீங்கள் இங்கு திட்டங்களைச் செய்வதற்காக வந்துள்ளீர்கள். அச்சா.

சதா ஆதார மூர்த்திகளாகவும் ஈடேற்றும் மூர்த்திகளாகவும் இருப்பவர்களுக்கும், தமது பெருந்தன்மையான இதயங்களால் சதா பெருந்தன்மையாக இருப்பவர்களுக்கும், ஒரேயொருவரின் பணியைச் செய்வதில் சதா ஒற்றுமையான ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், சதா ஒற்றுமை மற்றும் ஒருமுகப்படுத்துதலில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், இத்தகைய எல்லையற்ற புத்திகளையும் எல்லையற்ற இதயங்களையும் எல்லையற்ற உள்ளுணர்வையும் கொண்டிருப்பவர்களுக்கு பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா மூத்த சகோதர, சகோதரிகளுடன் பேசுகிறார்:
நீங்கள் அனைவரும் மீட்டிங் வைத்தீர்கள். மேன்மையான எண்ணங்களில் வெற்றி உள்ளது. ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சதா முன்னேறுவதே சிறப்பியல்பு ஆகும். குறிப்பாக மனதினூடாகச் சேவை செய்வதன் மூலம் முயற்சி செய்து பரிசோதனை செய்யுங்கள். மனதின் மூலம் சேவை செய்தல் ஒரு காந்தம் போன்றது. ஒரு காந்தத்தால் தொலைவில் உள்ள ஊசியையும் ஈர்க்க முடியும். அதேபோன்று, உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம், நீங்கள் வீட்டில் இருக்கும்போதே ஆத்மாக்கள் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள். தற்சமயம், நீங்கள் அதிகளவில் வெளியிலேயே மும்முரமாக ஈடுபட்டுள்ளீர்கள். இப்போது மனச் சேவையைப் பயன்படுத்துங்கள். இடம்பெற்ற பெரிய பணிகளின் வெற்றிகள், மனதின் மூலமான சேவையாலேயே பெறப்பட்டன. அவர்கள் ராமனின் தெய்வீகச் செயல்களை (ராம் லீலா) நடித்துக் காட்டும்போது அல்லது ஒரு பணியைச் செய்யும்போது, அந்தப் பணியைத் தொடங்க முன்னர், அந்தப் பணிக்கேற்ப தமது ஸ்திதியை வைத்திருப்பதற்கான சத்தியத்தைச் செய்வார்கள். எனவே, நீங்கள் அனைவரும் மனதினூடாகச் சேவை செய்வதற்கான சத்தியத்தைச் செய்ய வேண்டும். இந்தச் சத்தியத்தைச் செய்யாததால், நீங்கள் அதிகளவில் குழப்பத்திற்கு உள்ளாகுகிறீர்கள். இதனாலேயே, சிலவேளைகளில் பெறுபேறு ஒன்றாக உள்ளது. சிலவேளைகளில் வேறொன்றாக உள்ளது. மனதின் மூலம் சேவை செய்வதில் மகத்தான பயிற்சி அவசியம். மனதினூடாகச் சேவை செய்வதற்கு, ஒளி மற்றும் சக்தி வீட்டின் ஸ்திதி அவசியம். ஒளியும் சக்தியும் ஒன்றாகத் தேவைப்படும். சக்திவாய்ந்தவராகி, ஒரு மைக்கின் முன்னால் பேசுங்கள். சக்தி இருக்க வேண்டும். ஒரு மைக் இருக்க வேண்டும். உங்களின் வாயும் ஒரு மைக்கே ஆகும்.

எனவே, சக்திவாய்ந்தவராகி, மைக்கினூடாகப் பேசுங்கள். அது, நீங்கள் சக்திவாய்ந்த ஒரு ஸ்திதியில், ஒரு அவதாரம் போன்று மேலே இருந்து கீழிறங்கி வந்து, அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். அவதாரமான நான் பேசுகிறேன். நான் இப்போது அவதாரம் செய்துள்ளேன். அவதாரம் என்ற ஸ்திதி சக்திவாய்ந்தது. மேலே இருந்து கீழே வருகின்ற ஒருவர் தங்க யுகத்தின் ஸ்திதியைக் கொண்டிருப்பார். எனவே, நீங்கள் உங்களை ஓர் அவதாரமாகக் கருதும்போது, அது சக்திவாய்ந்த ஒரு ஸ்திதி ஆகும். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் அதியுயர்ந்த ஸ்திதியாலும் ஒரு பற்றற்ற பார்வையாளராக இருப்பதனாலும், ஆத்மாக்கள் அனைவருக்கும் சகாஷைக் கொடுப்பதன் மூலம் தந்தையை ஒத்த அவ்யக்த தேவதை ஆகுவீர்களாக.

நடக்கும்போதும் அசையும்போதும், எப்போதும் உங்களை ஓர் அசரீரி ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். செயல்களைச் செய்யும்போது, உங்களை ஓர் அவ்யக்த தேவதையாகக் கருதியவண்ணம் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருங்கள். தேவதை என்றால் அதியுயர்ந்த ஸ்திதியில் இருப்பவர் என்று அர்த்தம். பௌதீக உலகில் என்ன நிகழ்ந்தாலும், பற்றற்ற பார்வையாளராகித் தொடர்ந்து அனைவரின் பாகத்தையும் அவதானியுங்கள். தொடர்ந்து அவர்களுக்கு சகாஷ் கொடுங்கள். உங்களின் ஆசனத்தில் இருந்து இறங்கி வந்து சகாஷ் கொடுக்க முடியாது. அதியுயர்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். உங்களின் மனோபாவத்தாலும் திருஷ்டியாலும் நன்மைக்கான சகாஷைக் கொடுங்கள். கலப்படமான மனோநிலையில் இருந்தவண்ணம் அல்ல. அப்போது மட்டுமே எந்த வகையான சூழலில் இருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும். அத்துடன் தந்தையைப் போன்று அவ்யக்த தேவதை ஆகுவதற்கான ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

சுலோகம்:
நினைவின் சக்தியால், துன்பத்தைச் சந்தோஷமாக மாற்றுங்கள். அமைதியின்மையை அமைதியாக மாற்றுங்கள்.


இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேடமான வீட்டுவேலை.
உங்களுக்குத் தந்தை பிரம்மாவிடம் அன்பிருந்தால், அந்த அன்பின் அடையாளங்களை நடைமுறையில் காட்டுங்கள். தந்தை பிரம்மாவிற்கு முரளியிடம் முதலாம் இலக்க அன்பு இருந்தது. இதனால் அவர் முரளிதார் ஆகினார். தந்தை பிரம்மாவிற்கு எதில் அன்பு இருந்ததோ, இப்போதும் எதில் அன்பு உள்ளதோ, அவற்றில் உங்களின் அன்பும் சதா புலப்பட வேண்டும். ஒவ்வொரு முரளியையும் மிகுந்த அன்புடன் படித்து, அதன் சொரூபம் ஆகுங்கள்.