12.02.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆசிரியர் சரீரமற்றவர் என்பதால், நீங்கள் நினைவுசெய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். பாபாவை நினைவுசெய்வதனால், நீங்கள் உங்கள் பரீட்சையை முடித்து, பின்னர் வீடு திரும்புவீர்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். எனவே நீங்கள் எதனால் ஒருபொழுதும் ஏமாற்றப்படக்கூடாது?

பதில்:
ஓர் ஆத்மாவின் காட்சியைக் காணும்பொழுதும், நீங்கள் ஒரு பிரகாசிக்கும் ஒளியைக் காணும்பொழுதும், அதில் எவ்வித நன்மையுமில்லை. ஒரு காட்சியைக் காண்பதால் அல்லது பாபாவின் திருஷ்டியைப் பெறுவதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் அல்லது நீங்கள் முக்தியைப் பெறுவீர்கள் என்பதில்லை. இல்லை; அவ்வாறாயின் நீங்கள் மேலும் ஏமாற்றப்படுவீர்கள். நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். இம்முயற்சியைச் செய்வதனால் மாத்திரமே, நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். பாபா உங்களுக்குத் திருஷ்டியைக் கொடுக்கும்பொழுது, நீங்கள் தூய்மையாகுகிறீர்கள் என்றில்லை. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.


ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்குக் கல்வியைப் புகட்டுவதுடன், யோகத்தையும் உங்களுக்குக் கற்பிக்கிறார். யோகம் ஒரு பெரிய விடயமல்ல. குழந்தைகள் கற்கும்பொழுது, அவர்கள் நிச்சயமாகத் தங்கள் ஆசிரியருடன் யோகத்தைக் கொண்டிருக்கிறார்கள்;. அவர்கள் எண்ணுகிறார்கள்: இன்ன ஆசிரியர்;, எங்களைத் தன்னைப் போல் ஆக்குவதற்குக் கற்பிக்கின்றார்;. உங்களிடம் அந்த இலக்கும் இலட்சியமும் உள்ளது. நீங்கள்; அந்தக் குறிப்பிட்ட வகுப்பில் கற்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அங்குள்ள ஆசிரியர் தன்னுடன் யோகம் செய்யுமாறு உங்களுக்குக் கூறவேண்டியதில்லை. உங்களுக்குக் கற்பிப்பவருடன் நீங்கள் இயல்பாகவே யோகம் செய்கிறீர்கள். அவர் நாள் முழுவதும் உங்களுக்குக் கற்பிப்பதில்லை. நீங்கள் பிறவிபிறவியாகக் கற்றுக் கொண்டிருந்ததால் அந்தப் பயிற்சியை விருத்தி செய்துள்ளீர்கள். இங்கு உங்களின் இந்தப் பயிற்சி முற்றிலும் புதியதாகும். அந்த ஒரேயொருவர், ஒரு சரீரதாரி ஆசிரியர் அல்ல. அந்த ஒரேயொருவரே நீங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களிற்கும் ஒருமுறை சந்திக்கும் சரீரமற்ற ஆசிரியர். அவரே கூறுகிறார்: நான் உங்கள் சரீரதாரி ஆசிரியரல்ல. அதனாலேயே இந்த நினைவு நிலைத்திருப்பதில்லை. நீங்கள் உங்களை ஓர் ஆத்மா எனவும், ஆசிரியரான பரமாத்மாவாகிய பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார்; எனவும் கருத வேண்டும். நீங்கள் உங்கள் பரீட்சையில் சித்தியடையும்வரை நிச்சயமாக ஆசிரியரை நினைவுசெய்ய வேண்டும். அவரை நினைவுசெய்வதனால், நீங்கள் உங்கள் பரீட்சையில் சித்தியடைந்து, பின்னர் வீட்டிற்குச்; செல்வீர்கள். உங்கள் பரீட்சை முடிந்ததும், நாடகமும் முடிவடைந்துவிடும். ஆத்மாவாகிய உங்களில் பதிந்திருக்கும் 84 பிறவிகளின் பாகங்களை நீங்கள் நடிக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது இதனை நீங்கள் அறிவீர்கள். இறுதியில், நீங்கள் அங்கிருக்கும்பொழுது, இதனை நீங்கள் நினைவுசெய்ய மாட்டீர்கள். இங்கு, நீங்கள் ஞானம் அனைத்தையும் பெறுகிறீர்கள். ஆசிரியரே இங்கமர்ந்திருந்து, நீங்கள் தொடர்ந்தும் புரிந்துகொள்ள வேண்டிய, ஞானம் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அத்துடன், நீங்கள் நிச்சயமாக நினைவில் நிலைத்திருக்கவும் வேண்டும். தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: மன்மனாபவ. மன்மனாபவ என்பதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. அந்த வார்த்தை சரியானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையே கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதற்கு நேரம் எடுக்கின்றது. நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். ஒரு கல்வியில் வரலாறு, கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏனைய பாடங்கள் இருப்பதைப் போன்று, மாணவர்களும் தாங்கள் எந்தளவிற்குச் சித்தியெய்துவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோன்று குழந்தைகளாகிய நீங்களும், இத்தனை புள்ளிகளுடன் சித்தியடைவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. எனவே நீங்கள் பாபாவை மறந்து விடவில்லை என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும். பலர் எழுதுகிறார்கள்: பாபா, மாயை எங்களை மீண்டும் மீண்டும் உங்களை மறக்குமாறு செய்கின்றாள். எங்களுக்கு மாயையின் பல புயல்கள் ஏற்படுகின்றன. எங்களிடம் பல எதிர்மறையான எண்ணங்கள் உள்ளன. அவர்கள் புரிந்துகொள்ளாததால் எழுதுகிறார்கள்: பாபா இதில் எவ்விதப் பாவமும் இல்லை, அல்லவா? எங்களுக்கு அத்தகைய எதிர்மறையான எண்ணங்கள் உள்ளன. எவரையேனும் பார்க்கும்பொழுது, நான் இதனைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகின்றது. இதில் எவ்விதப் பாவமும் இல்லை, அல்லவா? தந்தை கூறுகிறார்: இல்லை. பௌதீகப் புலன்கள் மூலம் நீங்கள் அச்செயல்களைச் செய்யும்பொழுதே பாவம் செய்யப்படுகிறது. பாபா மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய உங்களிடம் ஞானம் உள்ளது. விஷ்ணுவிடமும், கிருஷ்ணரிடமும் ஏன் சுயதரிசனச் சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே அகாசூரனையும், பகாசூரனையும் (அசுரர்கள்) அதனால் கொல்வதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். எவரையும் கொல்வது என்ற கேள்விக்கே இடமில்லை. அது உங்களின் பாவங்களை அழிப்பதைப் பற்றிய விடயமாகும். சிவபாபாவும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர் என அழைக்கப்படுகிறார். அவரிடம் முழுச் சக்கரத்தினதும் ஞானம் உள்ளது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்ற ஞானத்தை ஆத்மா தந்தையிடமிருந்து பெற்றுள்ளார். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதனால், உங்கள் பாவங்களை எரித்துவிட வேண்டும். ஞானத்தைக் கிரகிப்பதுடன் தந்தையையும் நினைவுசெய்யுங்கள். தந்தையை நினைவுசெய்வதனால் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக முயற்சி செய்யவேண்டும். பாபா அமர்ந்திருந்து, உங்களுக்குத் திருஷ்டி கொடுப்பதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்றில்லை. தந்தை அமர்ந்திருந்து அந்தத் தொழிலைச் செய்வதில்லை. உண்மையில் அவர் அனைவரையும் பார்க்கிறார். அவர் உங்களைப் பார்ப்பதனாலோ அல்லது உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதனாலோ பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார்: இதனைச் செய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். நல்லது. உதாரணத்திற்குத் தந்;தை வரும்பொழுது, உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்களைப் பார்க்கிறார். அவர் அவ்வாறு செய்வதனால், எங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்றில்லை. இல்லை. எங்களுடைய சொந்த முயற்சியின் மூலமே பாவங்கள் அழிக்கப்படும். தந்தை அமர்ந்திருந்து அதனைச் செய்வாரானால், அது ஒரு தொழிலாகி விடும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்களால் உங்கள் லௌகீகத் தந்தையை அவ்வாறு நினைவுசெய்ய முடியும். இந்த ஒரேயொரு தந்தையே உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பவர். நீங்களே உங்கள் சொந்த முயற்சியைச் செய்ய வேண்டும். இன்ன சாதுவின் அல்லது இன்ன சந்நியாசியின் திருஷ்டி போதும் என்று பலர் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களின் கருணையையும், ஆசீர்வாதங்களையும் அனுபவம் செய்த பின்னரும் மக்;கள் தொடர்ந்தும் வீழ்கின்றனர். அவர்கள் எவ்விதமான கருணையைக் கொண்டிருப்பார்கள்? அவர்கள் தங்களின் மகா பிரம்ம தத்துவத்தை மாத்திரமே நினைவுசெய்கிறார்கள். தந்தை உங்களுக்குத் தெளிவாகப் பாதையைக் காட்டுகிறார். அவர் கூறுகிறார்: அதனையும் இதனையும் செய்யுங்கள். நீங்கள் பாடுகிறீர்கள்: நாங்கள் சரீரமற்றவர்களாக வந்தோம். நாங்கள் சரீரமற்றவர்களாக வீடு திரும்பிச் செல்ல வேண்டும்;. அது இந் நேரத்தையே குறிக்கின்றது. தந்தையின் வாசகங்கள் பக்தி மார்க்கத்தில் பின்னர் பயனுள்ளவை ஆகுகின்றன. தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். நாடகத்தில் இதுவே அவரது பாகமாகும். இதனை அவரது உதவி என்று நீங்கள் கூறலாம். நாடகத்திற்கு ஏற்ப ஸ்ரீமத் நினைவுகூரப்படுகின்றது. தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்க வேண்டும். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்து, உங்களைக் கர்மாதீத ஸ்திதிக்கு எடுத்துச் செல்வார் என்றில்லை, இல்லை. அதற்கு நேரம் எடுக்கிறது. நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்;டும். நீங்கள், உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகின்ற சிறந்த பயிற்சியைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையில், தாய்மாருக்குப் பெருமளவு நேரம் உள்ளது. ஆண்கள் தங்கள் வியாபாரத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள், அனைத்துத் துருவும் அகற்றப்படும் வகையில், தந்தையை நினைவுசெய்து, உங்கள் அதிர்ஷ்ட இலாபச்சீட்டைப் பெற வேண்டும். இன்ன இன்னார் தனது அட்டவணையை வைத்திருப்பதனால், அவர்; சிறந்த முயற்சியாளர் என்று நீங்கள் உணர்கிறீர்கள். அதேபோன்று பக்தி மார்க்கத்திலும் அவர்கள் இரண்டு முதல் மூன்று மணித்தியாலங்கள் அமர்ந்திருக்கின்றனர். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்கள் பல குருமார்கள் போன்றவர்களைக் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தேவர்களை நினைவுசெய்யுமளவுக்கு அவர்களை (குருமார்களை) நினைவுசெய்வதில்லை. உண்மையில், தேவர்களை நினைவுசெய்ய வேண்டியதில்லை, தேவர்கள் என்றுமே உங்களுக்கு எதனையும் கற்பிப்பதுமில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இது ஒன்றும் புதியதுமல்ல, பல நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்ற விடயமும் அல்ல. ஸ்தாபனையினதும் விநாசத்தினதும் பணிகள் இடம்பெற வேண்டிய நேரத்திலேயே தந்தை வருகிறார். ஒவ்வொரு கல்பத்திலும் விநாசம் இடம்பெறுகிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். முன்னைய கல்பத்திலும் அது இடம்பெற்றது. 5000 வருடங்களுக்கு முன்னரும் இது இடம்பெற்றது என்று நீங்;கள் தொடர்ந்தும் எழுதுகிறீர்கள். தந்தையைக் கண்டுகொள்வதற்கு அவர் காட்டும் பாதை புதியதல்ல. தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறேன். உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பூஜிக்கின்ற தேவர்களின் இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. 5000 வருடங்களின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. மக்கள் பித்துப் பிடித்தவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் அனைவரும் மாயையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்கள். இராவணனை எரிப்பது என்பதன் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. உங்களுடைய பெயர் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்பதாகும். உங்களுடைய இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னால் உள்ளன. பாபா தன்னிடமுள்ள ஞானத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கொடுத்;துள்ளார். நாடகச் சக்கரம் முடிவுக்கு வரும்பொழுது, தந்தை வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தையே வந்து, உங்களுக்கு இந்தச் செயல்களைக் கற்பிக்கின்றார். பின்னர் பாவப் பாதையில் நீங்கள் செல்லும்பொழுது இரவு ஆரம்பமாகி, நாங்கள் தொடர்ந்தும் கீழ் இறங்குகிறோம்; சந்தோஷம் தொடர்ந்தும் குறைவடைகிறது. தந்தையின் புத்தியில் உள்ளதைப் போன்றே முழுச் சக்கரத்தின் ஞானமும் உங்கள் புத்தியில் உள்ளது. எவ்வாறாயினும் தூய்மையாகுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதனாலேயே பாபா, வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்;மையாக்குங்கள் என்று நீங்கள் கூவி அழைக்கிறீர்கள். எனவே ஞானம் தேவைப்படுகிறது. நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்குத் தந்தை வருகிறார். அதனை உங்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்பது வேறெவருக்கும் தெரியாது. தூய்மையாக்குகின்ற தந்தையை நீங்கள் கூவி அழைக்கிறீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்களாகவும், புண்ணியாத்மாக்களாகவும் ஆகுகின்றீர்கள். உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறுகிறது. இவை அத்தகைய ஆழமான விடயங்கள். மக்களுக்கு ஆத்மாக்களையோ அல்லது பரமாத்மாவையோ தெரியாது. ஆத்மாக்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதையும், அவர்களின் பாகங்கள்; எவை என்பதையும் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகிறார். ஒரு சின்னஞ் சிறிய ஆத்மாவில் முழுப் பாகமும் எவ்வாறு பதிந்துள்ளது என்பது அதிசயமே. நீங்கள் இதனைக் கேட்டவுடன், நீங்கள் புளகாங்கிதம் அடைகிறீர்கள். சிலருக்கு ஓர் ஆத்மாவின் காட்சி கிடைக்கிறது; அவர்கள் ஒரு பிரகாசமான ஒளியைக் காண்கிறார்கள். எவ்வாறாயினும் அதில் என்ன நன்மை உள்ளது? இங்கு நீங்;கள் யோகம் செய்ய வேண்டும். காட்சியைக் காண்பதனால், தாங்கள் முக்தியடைந்து விட்டதாக அல்லது தங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மேலும் ஏமாற்றப்படுகிறார்கள். தந்தை தொடர்ந்தும் அனைத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் கூறுகிறார்: நான் உங்களுக்கு ஆழமான விடயங்களைக் கூறுகிறேன். உங்கள் புத்தியில் முழுச் சக்கரத்தினதும் ஞானம் உள்ளது. பாபாவையும், சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள். அத்துடன் ஆசிரியரையும், ஞானத்தையும் நினைவுசெய்யுங்கள். நாடகத்திற்கேற்ப, அவரை நினைவுசெய்வதனால், நீங்;கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். நீங்கள் சரீரமற்றே வந்ததைப் போன்று, சரீரமற்றுத் திரும்பவும் வேண்டும். நீங்கள் தெய்வீகச் சம்ஸ்காரங்களை உங்களுடன் கொண்டு செல்கிறீர்;கள். அங்கு ஞானம் இல்லை. இது இலகுவான நினைவு என்று அழைக்கப்படுகின்றது. யோகம் என்ற வார்த்தையால் மக்கள் குழப்பமடைகிறார்கள். அந்த மக்கள் ஹத்த (பலவந்தம்) யோகிகள்;. தந்தை மாத்திரமே உங்களுக்கு இலகு யோகத்தைக் கற்பிக்கின்றார். கீதையின் கடவுள் இலகு யோகத்தைக் கற்பித்ததாக நீங்கள் முன்னரும்; கேள்விப்பட்டீர்கள். எவ்வாறாயினும் நீங்;கள் அவரை அறிந்திருக்கவில்லை. மக்கள் 100மூ தவறான புரிந்துணர்வைக் கொண்டிருப்பதால், தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளார்கள். எண்ணற்ற வழிகாட்டல்கள் உள்ளன. கீதை என்ற சமயநூல் வீட்டில்; தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்களுக்கே ஆகும். நீங்களும் இல்லறப் பாதையில் உள்ளவர்கள். முதலில் உங்கள் பாதை தூய இல்லறப் பாதையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்ற இல்லறப்; பாதையாகியுள்ளது. அது இப்பொழுது மீண்டும் ஒருமுறை தூய்மையாக வேண்டும். தந்தை என்றென்;றும் தூய்மையானவர். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பதற்காகவே வருகின்றார். தந்தை கூறுகிறார்: இந்நேரத்தில் அனைவரும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். முதலில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். நாங்கள் முதலில் சதோபிரதானாக இருந்தோம். பின்னர் நாங்கள் தமோபிரதான் ஆகினோம். வருபவர்கள் எவராயினும் - போப்பாண்டவர், சமயக் குருமார்கள் போன்றவர்கள் முதலில் சதோபிரதானாக இருக்கிறார்கள். பின்னர் மேலும் விரிவாக்கம் ஏற்படும்பொழுது, முழு விருட்சமும் தமோபிரதான் ஆகுகின்றது. அது இப்பொழுது முற்றிலும் உக்கிய ஸ்திதியை அடைந்துள்ளது. நீங்கள் சதோபிரதானாக இருந்து, பின்னர் வரிசைக்கிரமமாகத் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒருமுறை சதோபிரதான் ஆகவேண்டும். நாடகத்திற்கேற்ப, நீங்கள் வரிசைக்கிரமமாக அவ்வாறு ஆகுவீர்கள். அதிகமான விபரங்கள் உள்ளன. விதையானவரிலிருந்து எவ்வாறு விருட்சம் வெளித்தோன்றுகிறது என்பது விதையானவருக்குத் தெரியும். இந்த மனித உலக விருட்சத்தின் இரகசியங்களைத் தந்தை மாத்திரமே உங்களுக்குக் கூறுகிறார். பூந்தோட்டத்தின் அதிபதியும் அவரே. தன்னுடைய பூந்தோட்டம் மிகவும் அழகாக இருந்தது என்பதை அவர் அறிவார். தந்தையிடம் இந்த ஞானம் உள்ளது. அங்கு அத்தகைய முதற்தரமான கடவுளின் பூந்தோட்டம் இருந்தது. அது இப்பொழுது அசுர தோட்டம் ஆகும். இராவணனின் இராச்சியம் சாத்தான் என்று அழைக்கப்படுகிறது. எங்கும் வன்முறையே உள்ளது. அவர்கள் அனைவரும் அணுகுண்டு போன்றவற்றுடன் தயாராக அமர்ந்திருக்கின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கல்ல என்பதும், இவற்றின் மூலம் நிச்சயமாக விநாசம் இடம்பெற வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரியும். விநாசம் இடம்பெறவில்லை என்றால் எவ்வாறு சத்திய யுகம் வர முடியும்? இது மிகவும் தெளிவானது. எவ்வாறாயினும், மகாபாரத யுத்தம் இடம்பெற்றது என்றும், அதில் ஐந்து பாண்டவர்கள் மாத்திரமே காப்பாற்றப்பட்டார்கள் என்றும், பின்னர் அவர்களும் உருகிப் போனார்கள் என்றும் அவர்கள் காட்டுகிறார்கள். எவ்வாறாயினும், அதன் மூலம் எவ்விதப் பலனும் இருந்திருக்க முடியாது. தந்தை இங்கு அமர்ந்திருந்து, இந் நாடகம் முன்னரே நிச்சயிக்கப்பட்டது என்பதை விளங்கப்படுத்துகின்றார். பாரதம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் அதன் பிரதிபலனைக் கொடுக்கிறார்கள். இறுதி வரை அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள். விநாசத்தில் அனைத்தும் அழிந்துவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எங்கள் இராச்சியமாக இருந்தபொழுது, அங்கு வேறெந்த இராச்சியங்களும் இருக்கவில்லை. வரலாறு மீண்டும் இடம்பெறவேண்டும். பாரதம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கமாகும். அங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கும். அங்கு வேறு எந்தத் தேசங்களும் இருக்கவில்லை. இப்பொழுது இது கலியுகத்தின் இறுதியாகும். பின்னர் இங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே இருக்கும். நாங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றோம். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்துள்ளேன். ஒவ்வொரு சக்கரத்திலும், பல தடவைகள் நீங்கள் அந்த அதிபதிகள் ஆகியுள்ளீர்கள். முழு உலகிலும் அவர்களின் இராச்சியம் இருந்தது. அவர்கள் மிகவும் விவேகமுள்ளவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. இந் நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அது மீண்டும் இடம்பெறும். அவர்கள் கிருஷ்ணரின் ஆலயத்தை சந்தோஷ பூமி என்று அழைக்கிறார்கள். சிவபாபா வந்து, சந்தோஷ பூமியை ஸ்தாபிக்கின்றார். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர், பாரதம் சுவர்க்கமாக இருந்தது என அவர்களே கூறுகிறார்கள். முதலில் அங்கு ஒரு தர்மமே இருந்தது. பின்னர் ஏனைய சமயங்கள் வந்தன. பாபா உங்களுக்கு எவ்வாறு இராச்சியத்தைக் கொடுக்கின்றார் என்பதையிட்டுக் குழந்தைகளாகிய நீங்;கள் வியப்படைய வேண்டும். தந்தை வந்து, பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுக்கிறார். அது மிகவும் இலகுவானது. எவ்வாறாயினும், முன்னைய கல்பத்தில் அதைப் புரிந்துகொண்டவர்களே, மீண்டும் அதனை அவர்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.


தாரணைக்கான சாராம்சம்:
1. சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதனால், உங்கள் பாவங்களை அழியுங்கள். உங்கள் பௌதீகப் புலன்கள் மூலம் நீங்கள் எவ்விதமான பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனமாக இருங்கள். கர்மாதீத் ஆகுவதற்கு நீங்களே முயற்சி செய்ய வேண்டும்.

2. ஒரு காட்சியைக் காண வேண்டும் என்ற ஆசையைக் கொண்டிராதீர்கள். காட்சியைக் காண்பதனால், நீங்கள்; முக்தியடைவதும் இல்லை, உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதுமில்லை. காட்சியைக் காண்பதால் எவ்வித நன்மையும் இல்லை. தந்தையை நினைவுசெய்வதாலும், ஞானத்தினாலும் மட்டுமே துரு அகற்றப்பட முடியும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களை ஒரு கருவியாகக் கருதி, வீணான எண்ணங்களிலிருந்தும் வீணான மனோபாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓர் உலக உபகாரி ஆகுவீர்களாக.

நான் உலக நன்மை எனும் பணிக்கு ஒரு கருவி ஆவேன். இப்பொறுப்பின் விழிப்புணர்வைப் பேணுங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் மீதோ அல்லது பிறர் மீதோ வீணான எண்ணங்களையோ அல்லது ஒரு வீணான மனோபாவத்தையோ என்றுமே கொண்டிருக்க மாட்டீர்கள். பொறுப்பான ஆத்மாக்களால் நன்மையற்ற ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்க முடியாது. அவர்களால் ஒரு விநாடியேனும் வீணான மனோபாவத்தைக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அவர்களின் மனோபாவம் மூலமே சூழல் உருவாக்கப்படுவதால், அவர்கள் இயல்பாகவே அனைவருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கின்றனர்.

சுலோகம்:
அறியாமையின் சக்தி கோபமும், ஞானத்தின் சக்தி அமைதியும் ஆகும்.