12.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
சாராம்;சம்: இனிய குழந்தைகளே, உங்களுக்கு ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். இக்கல்வியின் மூலம் ஒரு வருமானம் சம்பாதிக்கப்படுகிறது.

கேள்வி:
ஞானம் இல்லாதபொழுது, சந்தோஷத்தைத் தருகின்ற எவ்விடயம் ஒரு தடையாக ஆகுகிறது?

பதில்:
காட்சிகளைக் காண்பது பெருஞ் சந்தோஷத்துக்குரிய ஒரு விடயமாகும். எவ்வாறாயினும், உங்களிடம் மிகச்சரியான ஞானம் இல்லாதுவிட்டால், நீங்கள் மேலும் குழப்பமடைகிறீர்கள். உதாரணமாக, ஒருவருக்குத் தந்தையின் காட்சி கிடைத்தால், அவர் ஒரு புள்ளி ரூபத்தையே காண்கிறார். இதனால் புரிந்துகொள்ளப்படுவது என்ன? அவர் மேலும் குழப்பமடைந்து விடுவார். உங்களிடம் ஞானம் இல்லாதபொழுது, காட்சிகளைக் காண்பதில், நன்மை இல்லை. அதில் மேலும் மேலும் மாயையின் தடைகள் உள்ளன. காட்சிகளைக் காண்பதன் மூலம் பலர் தவறான போதையைக் கொண்டிருக்கிறார்கள்.

பாடல்:
எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து நான் வந்துள்ளேன்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அதைப் புதியவர்கள் கேட்டார்கள், அதைப் பழையவர்களும் கேட்டார்கள். இது ஒரு பாடசாலை என்பதைக் குமாரர்களும் கேட்டார்கள். ஒரு பாடசாலையில் ஏதோவொரு பாக்கியம் உருவாக்கப்படுகிறது. அங்கு அனைத்து விதமான பாக்கியங்களும் உள்ளன. சிலர் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராக ஆகும் தங்களின் பாக்கியத்தை உருவாக்குகிறார்கள், ஏனையோர்கள் ஒரு சட்டநிபுணராக ஆகுகின்ற தங்களின் பாக்கியத்தை உருவாக்குகிறார்கள். பாக்கியமானது இலக்கும், இலட்சியமும் எனக் கூறப்படுகிறது. எவ்வாறு உங்கள் பாக்கியத்தை உருவாக்குவது என்பதைத் தவிர, எதை நீங்கள் ஒரு பாடசாலையில் கற்பீர்கள்? இங்கு, உங்கள் பாக்கியத்தை நீங்கள் உருவாக்கியே வந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் புதிய உலக இராச்சியமாகிய உங்கள் பாக்கியத்தைக் கோருவதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த இராஜயோகம் புதிய உலகத்துக்கானதாகும். அவர்களுடையது பழைய உலகத்துக்கானதாகும். அவர்கள் பழைய உலகின் சத்திரசிகிச்சை நிபுணர், சட்டநிபுணர் அல்லது பொறியியலாளர்கள் போன்றோர்களாக ஆகுகிறார்கள். அவ்வாறு ஆகுவதற்கு இப்பொழுது பழைய உலகில் மிகக் குறுகிய நேரமே எஞ்சியுள்ளது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். அப்பாக்கியம், இம்மரண பூமிக்கானது, அதாவது, இப்பிறவிக்கானதாகும். உங்களுடைய இக்கல்வி புதிய உலகத்துக்குhனதாகும். புதிய உலகத்துக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கு நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் புதிய உலகில் இராச்சிய பாக்கியத்தைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? எல்லையற்ற தந்தையிடமிருந்தே நீங்கள் உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். ஒருவர் ஒரு வைத்தியரிடமிருந்து ஒரு வைத்தியராகுகின்ற ஆஸ்தியைப் பெறும்பொழுது, அது இப்பிறவிக்கான ஓர் ஆஸ்தியேயாகும். மக்கள் தங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியையும் மற்றைய ஆஸ்தியை தமது கல்வியினாலும் பெறுகின்றார்கள். பின்னர், அவர்கள் வயோதிபம் அடையும்பொழுது, அவர்கள் தங்கள் குருவிடம் செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் கூறுகிறார்கள்: எங்களுக்கு அமைதி தாமத்துக்குச் செல்வதற்கான கற்பித்தல்களைக் கொடுங்கள்! எங்களுக்கு சற்கதியை அருளுங்கள்! எங்களை இங்கிருந்து அப்பால் அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் இப்பிறவிக்கான ஓர் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தும், தங்கள் ஆசிரியிரிடமிருந்து ஓர் ஆஸ்தியையும் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் எதையும் ஒரு குருவிடமிருந்து பெறுவதில்லை. அவர்கள் ஓர் ஆசிரியருடன் கற்று, ஒரு சிறிய ஆஸ்தியைக் பெறுகிறார்கள். அவர்கள் ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் போன்றோர்களாக ஆகுவார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பது அவசியமாகும். அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் ஆஸ்தி இருந்தாலும், அவர்கள் தங்கள் வருமானத்தைச் சம்பாதிப்பதற்குக் கற்கிறார்கள். ஒரு குருவிடமிருந்து வருமானம் சம்பாதிக்கப்படுவதில்லை. ஆம், சிலர் கீதை போன்றவற்றை மிகவும் நன்றாகக் கற்றுப் பின்னர் அதன் அடிப்படையில் சொற்பொழிவுகள் போன்றவற்றை ஆற்றுகிறார்கள். அவை அனைத்தும் தற்காலிகச் சந்தோஷத்துக்கானதாகும். இப்பொழுது நீங்கள் இம்மரண பூமியில் ஒரு குறுகிய காலத்துக்கே இருக்கிறீர்கள். பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. நீங்கள் புதிய உலகத்துக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே இங்கு வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீPர்கள். இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. உங்கள் சொத்தும், உங்கள் தந்தையின் சொத்தும் எரிக்கப்படும். நீங்கள் வெறுங்கையை உடையவர்கள் ஆகுவீர்கள். இப்பொழுது உங்களுக்கு புதிய உலகத்துக்கான வருமானமே தேவையாகும். இப்பொழுது பழைய உலக மக்கள் நீங்கள் அதைச் சம்பாதிக்க உதவுவதற்கு இயலாதுள்ளார்கள். சிவபாபாவே உங்களைப் புதிய உலகத்துக்கான ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்கிறார். புதிய உலகத்துக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். அந்தத் தந்தை உங்கள் தந்தையும், உங்கள் ஆசிரியரும், உங்கள் குருவும் ஆவார். அவர் சங்கமயுகத்தில் வருகிறார். எவ்வாறு எதிர்காலத்துக்கான ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பது என அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். இப்பொழுது இப்பழைய உலகில் மிகச் சொற்ப நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. உலக மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் வினவுகிறார்கள்: புதிய உலகம் எப்பொழுது வரும்? இம்மக்கள் பொய்களைக் கூறுகிறார்கள் எனக் கூறுகின்ற பலர் இருக்கிறார்கள்! தந்தை கூறுவார்: புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. இவை பொய்கள் என ஒரு குழந்தை கூறுவார். அவர் புதிய உலகத்துக்கான உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களை அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் அழைத்துச் செல்லவே தந்தை வருகிறார். ஒருவர் தனது பாக்கியத்தை உருவாக்காதபொழுது, அவர் எதையும் புரிந்துகொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். ஒரே வீட்டில், மனைவி இக்கல்வியைக் கற்றுக் கொண்டிருப்பார், ஆனால் கணவன் கற்க மாட்டார், அல்லது, குழந்தைகள் கற்றுக் கொண்டிருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் கற்க மாட்டார்கள். இது எல்லாக் காலத்திலும் தொடர்கிறது. ஆரம்பத்தில், முழு குடும்பங்கள் பல வந்தன. எவ்வாறாயினும், மாயையின் புயல்கள் வந்தபொழுது, இந்த ஞானத்தைக் கேட்பதில் வியப்படைந்து, அதை ஏனையோருக்குக் கூறியவர்கள், பின்னர் தந்தையை விட்டு விலகிச் சென்றார்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: இந்த ஞானத்தைச் செவிமடுப்பதில் வியப்படைபவர்கள், தந்தைக்கு உரியவர்களாகுவார்கள். அவர்கள் இதைக் கற்பார்கள், பின்னர், அது நாடகத்தின் அற்புதமாகும்! தந்தையே கூறுகிறார்: அது நாடகத்தினதும், மாயையினதும் அற்புதமாகும்! இது நாடகத்துக்குரிய ஒரு விடயமாகும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விவாகரத்துச் செய்கிறார்கள், குழந்தைகள் தங்கள் தந்தையை விட்டு விலக முடியும். இங்கு அது அவ்வாறில்லை. நீங்கள் இங்கு எவரையும் விட்டு விலக முடியாது. குழந்தைகளாகிய உங்களை ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்வதற்குத் தந்தை வந்துவிட்டார். தந்தை எவரையும் விரக்திக்குள் இடுவதில்லை! தந்தையே தூய்மையாக்குபவரும், கருணை நிறைந்தவரும் ஆவார். தந்தை வந்து உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கிறார். அவர் உங்களுடைய வழிகாட்டியாகவும் ஆகி, உங்களைத் திரும்பவும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தான் திரும்பவும் உங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என ஒரு பௌதீகக் குரு கூறுவதில்லை. நீங்கள் எப்பொழுதாவது இதை ஒரு குருவிடமிருந்து கண்டதோ அல்லது கேட்டதோ உண்டா? நீங்கள் அக்குருமார்களை வினவு முடியும்: உங்களுக்குப் பல சீடர்கள் இருக்கிறார்கள்! நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, உங்கள் சீடர்களையும் உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா? தான் தன்னுடன் தனது சீடர்களையும் அழைத்துச் செல்வார் என அவர்களில் எவரும் கூறுவதில்லை. அது சாத்தியமில்லை. அனைவரையும் நிர்வாணா தாமத்துக்கு அல்லது அமைதி தாமத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் என எவரும் கூற மாட்டார்கள். அத்தகையதொரு கேள்வியைக் கூட எவரும் கேட்க மாட்டார்கள்: நீங்கள் உங்களுடன் எங்களையும் அழைத்துச் செல்வீர்களா? சமயநூல்களில், கடவுளின் வாசகங்கள் உள்ளன: நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வேன். அனைவரும் ஒரு நுளம்புக் கூட்டம் போன்று திரும்பிச் செல்வார்கள். சத்தியயுகத்தில், மிகச் சொற்ப மனிதர்களே இருக்கிறார்கள், ஆனால் கலியுகத்திலோ பல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆத்மாக்கள் தங்கள் சரீரங்களை விட்டுநீங்கி, தங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்புவார்கள். அவர்கள் நிச்சயமாகத் திரும்பவும் விரைந்து செல்வார்கள். இங்கு பலர் தங்க முடியாது. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் சரீரங்களை விட்டு நீங்க வேண்டும். நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமும் மரணிக்கிறது. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை விட்டு நீங்க வேண்டும். இவ்வுலகமும் பழையதாகும். நீங்கள் ஒரு பழைய வீட்டில் இருந்து, ஒரு புதிய வீடு கட்டப்படும்;பொழுது, உங்களுக்காகவே ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் புத்தி புதிய வீட்டை நோக்கியே செல்லும். 'இந்த வீட்டில் இது இருக்க வேண்டும், இதை இங்கு செய்யுங்கள்". பழைய வீட்டுடனான பற்றுக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுப் புதியதுடன் தொடர்புகள் உருவாக்கப்படுகின்றன. அது ஓர் எல்லைக்குட்பட்ட விடயமும், இவ்விடயம் எல்லையற்ற உலகத்துக்கானதுமாகும். நீங்கள் பழைய உலகத்துடனான உங்கள் பற்றைத் துண்டித்து, உங்களைப் புதிய உலகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இப்பழைய உலகம் அழியவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். புதிய உலகமே சுவர்க்கமாகும். நாங்கள் அங்கு ஓர் இராஜ அந்தஸ்தைக் கோருவோம். நீங்கள் அதிகளவுக்கு யோகத்தில் நிலைத்திருக்கும்பொழுது, அதிக ஞானத்தை உங்களால் கிரகிக்கவும், ஏனையோருக்கு விளங்கப்படுத்தவும் முடியும், உங்கள் சந்தோஷப் பாதரசமும் உயரும். இது ஒரு மிகவும் முக்கியமான பரீட்சையாகும். நாங்கள் 21 பிறவிகளுக்கு எங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறோம். செல்வந்தர் ஆகுவது சிறப்பானது, இல்லையா? நீங்கள் ஒரு நீண்ட ஆயுளைப் பெற்றால், அது நல்லது, இல்லையா? நீங்கள் உலகச் சக்கரத்தை நினைவுசெய்து, ஏனையோரை உங்களுக்குச் சமமாக்கினால், நீங்கள் அந்தளவுக்கு நன்மையடைவீர்கள். நீங்கள் அரசர் ஆக விரும்பினால், நீங்கள் உங்கள் பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். பலரும் கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் பிரஜைகள் ஆகுவார்கள், ஏனெனில் இந்த அழிவற்ற ஞானம் ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாதாகும். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்பதும், தூய உலகின் அதிபதிகள் ஆகவேண்டும் என்பதும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கிறது. நீங்கள் பெருமளவு முயற்சி செய்தால், பிரஜைகளின் மத்தியில் உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும். இல்லாவிட்டால், நீங்கள் குறைந்த தர பிரஜைகள் ஆகுவீர்கள். அனைத்தும் வரிசைக்கிரமமானதாகும். இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது, பின்னர் இராவண இராச்சியம் அழிக்கப்படும். சத்தியயுகத்தில், தேவர்கள் மாத்திரமே இருப்பார்கள். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நினைவுயாத்திரையில் நிலைத்திருப்பதனால், நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். பிரஜைகள், அரசர்கள் அனைவரும் அதிபதிகளே ஆவர். பிரஜைகளும் கூறுகிறார்கள்: எங்கள் பாரதமே அதிமேன்மையானது. உண்மையில் பாரதமே மிகவும் உயர்வானதாக இருந்தது. இப்பொழுது அது அவ்வாறில்லை; அது நிச்சயமாக அவ்வாறு இருந்தது. அது இப்பொழுது செழிப்பில் குன்றிவிட்டது. புராதன பாரதமே அனைத்திலும் அதிசெல்வம் மிக்கதாக இருந்தது. பாரத மக்களாகிய நாங்கள் உண்மையில் அதிமேன்மையான தேவ குலத்துக்கு உரியவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவரையும் தேவர்கள் என அழைக்க முடியாது. புதல்விகளாகிய நீங்கள் இதைக் கற்கிறீர்கள், பின்னர் நீங்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் மனிதர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறு அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள் என்பதைக் காண்பிக்கின்ற படங்களையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள். மிகச்சரியான நேரத்தையும் திகதியையும் கொடுத்து, நீங்கள் அனைத்தையும் அவர்களுக்குச் சுருக்கமாகக் காண்பிக்;க முடியும். அவர்கள் சிவபாபாவிடமிருந்து மீண்டும் ஒருமுறை தங்கள் அந்தஸ்தைக் கோருகிறார்கள். அவர்களுடைய உருவங்களும் இருக்கின்றன. சிவனே பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவார். தந்தை கூறுகிறார்: யோகசக்தி மூலம் பிரம்மாவினூhக 21 பிறவிகளுக்கு உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் சூரிய வம்சத்துத் தேவர்களாக, விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாக ஆகமுடியும். சிவபாபா உங்களுக்கு இந்த ஆஸ்தியை தாதாவாகிய பிரம்மாவினூடாகக் (மூத்த சகோதரர்) கொடுக்கிறார். இவரின் ஆத்மா அனைத்தையும் முதலாவதாகச் செவிமடுக்கிறார். ஆத்மாவே அனைத்தையும் கிரகிக்கிறார். இதுவே பிரதான விடயமாகும். அவர்கள் சிவனின் ஓர் உருவத்தைக் காண்பிக்கிறார்கள். அந்த உருவம் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனுடையதாகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகத்தின் தேவர்கள் ஆவர். பிரஜாபிதா பிரம்மா இங்கு நிச்சயமாக இருக்க வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகிய, பல பிரம்மா குமார்களும், குமாரிகளும் இருக்கிறார்கள். நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாகவும், பிராமணர்களாகவும் ஆகும்வரையில் எவ்வாறு உங்களால் சிவபாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியை பெற முடியும்? இது ஒரு பௌதீகப் படைப்பாக இருக்க முடியாது. "வாய்வழித்தோன்றல்" என்பது நினைவுகூரப்படுகிறது. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அவர்கள் குருமார்களின் சீடர்கள் ஆவார்கள். இங்கு, நீங்கள் அவரைத் தந்தை எனவும், ஆசிரியர் எனவும், சற்குரு எனவும் அழைக்கிறீர்கள். நீங்கள் இவரை அவ்வாறு அழைப்பதில்லை. அசரீரியான சிவபாபா இருக்கிறார். அவர் ஞானக்கடலும் ஆவார். அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கிறார். அசரீரியானவர் ஆசிரியரும் ஆவார், அவர் உங்களுக்கு இந்த ஞானத்தைப் பௌதீகமானவரின் மூலம் கொடுக்கிறார். ஆத்மாவே பேசுகிறார். ஆத்மா கூறுகிறார்: எனது சரீரத்துக்குத் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள். ஆத்மாக்கள் சந்தோஷமற்றவர்கள் ஆகும்பொழுது, அவர்களுக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது. விநாசம் நேர் முன்னிலையில் உள்ளது, அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு இறுதியில் பரலோகத்தந்தை வருகிறார். இருக்கின்ற அனைத்தும் அழியப் போகிறது. இது மரணபூமி என அழைக்கப்படுகிறது. இங்கு இந்தப் பூமியிலேயே சுவர்க்கம் இருக்கிறது. தில்வாலா ஆலயம் கட்டப்பட்டுள்ளது. தரையில், அவர்கள் தபஸ்யா செய்வதைக் காண்பித்துள்ளார்கள், சுவர்க்கம் அவர்களுக்கு மேலே காண்பிக்கப்பட்டுள்ளது. வேறு எங்கே அவர்கள் அதைக் காண்பிப்பார்கள்? அவர்கள் தேவர்களின் உருவங்களை மேலே காண்பித்துள்ளார்கள். அவர்களும் இங்கேயே இருப்பார்கள். நீங்கள் சாதுரியமாக விளங்கப்படுத்துவது அவசியமாகும். நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: இதுவே எங்களுக்குக் கற்பிக்கின்ற சிவபாபாவின் ஞாபகார்த்தமாகும். உண்மையில், சிவன் ஒரு புள்ளியே ஆவார், ஆனால் எவ்வாறு புள்ளியை வழிபட முடியும்? எவ்வாறு அதற்கு மலர்களை அர்ப்பணிக்க முடியும்? இதனாலேயே அவர்கள் அவருக்கு ஒரு பெரிய உருவத்தைக் கொடுத்துள்ளார்கள். அவர் அவ்வளவு பெரிய உருவமல்லர்! ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கிறது என்பது நினைவுகூரப்படுகிறது. அது மிகவும் சூட்சுமமான, ஒரு புள்ளியாகும். அது பெரியதாக இருந்திருப்பின், விஞ்ஞானிகளால் அதை மிகவும் விரைவாகப் பிடிக்க இயலும். அவர் ஆயிரம் சூரியன்களைப் போன்று பிரகாசமானவரும் அல்லர். அவ்வாறு எதுவுமில்லை! இங்கு வரும் சில பக்தர்கள் கூறுகிறார்கள்: இந்த முகத்தை மாத்திரமே எங்களால் பார்க்க முடியும். அவர்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் முழு அறிமுகத்தைப் பெற்றிருக்கவில்லை என பாபா விளங்கப்படுத்துகிறார். அவர்களுடைய பாக்கியம் இன்னமும் திறக்கவில்லை. அவர்கள் தந்தையை அறியும்வரையில், ஓர் ஆத்மா ஒரு புள்ளி என்பதையும் சிவபாபாவும் ஒரு புள்ளியே என்பதையும், அவர்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும் என்பதையும் அறிய மாட்டார்கள். அவர்கள் இதைப் புரிந்துகொண்டு, அவரை நினைவுசெய்யும்;பொழுது மாத்திரமே, அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியும். எவ்வாறாயினும், "என்னால் அவரைப் பார்க்க முடியும், என்னால் இதைப் போன்று அவரைப் பார்க்க முடியும்" என அவர்கள் கூறும்பொழுது, அது மாயையின் ஒரு தடை எனக் கூறப்படுகிறது. நீங்கள் தந்தையைக் கண்டுகொண்டு விட்டீர்கள் என நீங்கள் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: அவர்கள் கிருஷ்ணரின் ஒரு காட்சியைக் காணும்பொழுது, அவர்கள் பெருமளவு சந்தோஷத்துடன் நடனடாடுகிறார்கள், ஆனால் எவரும் அதன் மூலம் சற்கதியை அடைவதில்லை. அவர்கள் சந்தர்ப்ப வசத்தினால் காட்சிகளைப் பெறுகிறார்கள். நீங்கள் நன்றாகக் கற்காது விட்டால், பிரஜைகளின் மத்தியில் செல்வீர்கள். காட்சிகளினூடாக ஒருவர் நன்மையைப் பெற வேண்டும். பக்தி மார்க்கத்து மக்கள் பெருமளவு முயற்சியைச் செய்துள்ளபொழுதே, காட்சிகளைப் பெறுகிறார்கள். இங்கு, அவர்கள் ஒரு சிறிதளவு முயற்சியைச் செய்வதனால், காட்சிகளைப் பெறுகிறார்கள், ஆனால் அதில் நன்மை இல்லை. அவர்கள் சென்று, கிருஷ்ண தாமத்தில் சாதாரண பிரஜைகள் ஆகுவார்கள். சிவபாபாவே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரி;ந்துகொள்கிறீர்கள். தந்தையின் கட்டளைகள்: நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள்! எவ்வாறாயினும், சிலரால் தூய்மையாக இருக்க இயலாதுள்ளது. சிலவேளைகளில், இங்கு தூய்மையற்றவர்களும் இங்கு இரகசியமாக வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஓர் இழப்பை மாத்திரமே ஏற்படுத்துகிறார்கள்; அவர்கள் தங்களையே ஏமாற்றுகிறார்கள். தந்தையை ஏமாற்றுவதற்கான கேள்வியே கிடையாது. தந்தையை ஏமாற்றுவதனால், உங்களுக்கு செல்வம் கிடைக்கப் போகின்றதா? நீங்கள் சிவபாபாவின் ஸ்ரீமத்தை மிகச்சரியாகப் பின்பற்றாதுவிட்டால், உங்கள் நிலைமை என்னவாகும்? அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்துகொள்ளப்படும். நீங்கள் கற்காமல், ஆனால் ஏனையோருக்குத் தொடர்ந்தும் துன்பத்தை விளைவித்தால், பெருமளவு தண்டனை இருப்பதுடன், இரண்டாவதாக, உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். சட்டத்துக்கு முரணாக எதையும் செய்யாதீர்கள்! உங்கள் செயற்பாடு சிறந்ததாக இல்லை எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காண்பிக்கிறார், ஆனால், பின்னர், அதைப் பின்பற்றுவதோ அல்லது இல்லையோ, அது உங்கள் பாக்கியமாகும்! தண்டனையை அனுபவித்த பின்னர் அனைவரும் அமைதி தாமத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அந்தஸ்து அழிக்கப்படும், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள். இங்கு பலர் வருகிறார்கள், ஆனால் அது தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைக் கோருவதற்கான ஒரு கேள்வியாகும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நான் சுவர்க்கமாகிய சூரியவம்சத்து அந்தஸ்தைக் கோருவேன். இது இராஜயோகம் ஆகும். மாணவர்கள் ஒரு புலமைப்பரிசிலைக் கோருகிறார்கள். சித்தியடைபவர்கள் ஒரு புலமைப்பரிசிலைப் பெறுகிறார்கள். ஒரு புலமைப்பரிசிலைக் கோருபவர்களினால் இந்த மாலை உருவாக்கப்பட்டது. ஒருவர் சித்தியடையும் அளவிற்கேற்ப, அவர் ஒரு புலமைப்பரிசிலைப் பெறுகிறார். இந்த மாலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆயிரக் கணக்கானோர் இருக்கும்வரையில், ஒரு புலமைப்பரிசிலைக் கோருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்; இராஜ அந்தஸ்தே புலமைப்பரிசில் ஆகும். நன்றாகக் கற்பவர்களால் மறைமுகமாக இருக்க முடியாது. பல புதியவர்கள் பழையவர்களை விடவும் முன்னேறிச் செல்கிறார்கள். தாங்கள் இக்கல்வியை மிகவும் நன்றாக விரும்புவதாகப் பல புதல்விகள் வந்து கூறுகிறார்கள், தங்களுடைய லௌகீகக்கல்வியைத் தாங்கள் பூர்த்தி செய்தபின்னர், தாங்கள் இக்கல்வியில் ஈடுபடுவார்கள் எனவும், தாங்கள் தங்களுடைய வாழ்வை ஒரு வைரம் போன்று ஆக்குவார்கள் எனச் சத்தியமும் செய்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் எங்களுடைய உண்மையான வருமானத்தைச் சம்பாதித்து, 21 பிறவிகளுக்கு எங்கள் ஆஸ்தியைக் கோருவோம். அவர்களுக்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது! அவர்கள் இப்பொழுது இந்த ஆஸ்தியைக் கோராது விட்டால், அவர்களால் அதை ஒருபொழுதும் கோர முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் கற்பதில் ஆர்வமுற்றிருக்கிறார்கள். சிலர் எதையும் புரிந்துகொள்வதிலும்; சிறிதளவு ஆர்வத்தைக் கூட கொண்டிராமல் இருக்கிறார்கள். சில பழையவர்களுக்குக் கூட, புதியவர்களுக்கு இருப்பதைப் போன்று அதிகளவு ஆர்வம் இருப்பதில்லை. அது ஓர் அற்புதமாகும். நாடகத்துக்கேற்ப, அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே கடவுளால் கூட என்ன செய்ய முடியும்? ஆசிரியர் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிக்கிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பலவீனத்தை மறைப்பது எனில், உங்களை ஏமாற்றுவதாகும். ஆகவே, ஒருபொழுதும் உங்களை ஏமாற்றாதீர்கள்.

2. உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு, சட்டத்துக்கு முரணாக எதையும் செய்யாதீர்கள். கற்பதில் ஆர்வத்தைக் கொண்டிருங்கள். ஏனையோரை உங்களுக்குச் சமமாக்கும் சேவையைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து, ஓர் இலகுயோகி ஆகி, மாயையை உங்களுக்கு அர்ப்பணிக்கச் செய்வீர்களாக.

வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் குழந்தைகள் முழு உலகையும் தமக்கு அர்ப்பணிக்கச் செய்கின்றார்கள். அத்துடன், மாயையும், முழு வம்சத்துடன் தன்னை அர்ப்பணிக்கின்றாள். முதன் முதலில், நீங்கள் தந்தையிடம் உங்களை அர்ப்பணியுங்கள். அதன் பின்னர் மாயை உங்களிடம் தன்னை அர்ப்பணிக்கின்றாள். உங்கள் மேன்மையான சுயமரியாதையை பேணிக் கொள்வதுடன், ஒவ்வொரு கட்டளையையும் தொடர்ந்தும் பின்பற்றினால், நீங்கள் பிறவிபிறவியாக சகல சிரமங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றீர்கள். இப்பொழுது, நீங்கள் இலகுயோகியாக இருக்கிறீர்கள், எதிர்காலத்தில் நீங்கள் இலகுவாக வாழ்வீர்கள். எனவே, உங்கள் வாழ்வை மிக இலகுவானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

சுலோகம்:
உங்கள் சொந்த மாற்றத்தினூடாக பல ஆத்மாக்களை மாற்றுவதே அவர்களுக்கு வாழ்க்கை என்ற தானத்தை வழங்குவதாகும்.