12.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அகநோக்குடையவராகி நினைவில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு ஆத்ம உணர்விலும், இறை உணர்விலும் இருந்தீர்கள் என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

கேள்வி:
ஏகாந்தத்தில் இருந்து ஆத்ம உணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்கின்ற குழந்தைகளின் அடையாளங்கள் என்ன?

பதில்:
1. அவர்களின் உதடுகளில் இருந்து தவறான வார்த்தைகள் வெளிப்படுவதில்லை. 2. அவர்கள் ஒருவரோடொருவர் சகோதரத்துவ அன்பைக் கொண்டிருந்து, பாலும் சீனியும் போல் இருக்கிறார்கள். 3. அவர்கள் மிகவும் சிறந்த தாரணையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் என்றுமே எந்தப் பாவச் செயல்களையும் செய்வதில்லை. 4. அவர்களின் பார்வை மிகவும் இனிமையானதாக இருக்கும். அவர்கள் ஒருபொழுதும் சரீர உணர்விற்கு வருவதில்லை. 5. அவர்கள் என்றுமே எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். அவர் 'ஆத்மாக்களுக்கு மாத்திரம்" எனக் கூறுவாராயின், அது மனிதர்களுக்காக இருக்க முடியாது. இதனாலேயே ஆன்மீகத் தந்தை கூறுகின்றார்: ஆன்மீகக் குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்;கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இந்த ஞானத்தைத் தந்தையிடமிருந்து பெறுகின்றோம். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வில் நிலைத்திருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் வீட்;டிற்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். சத்தியயுகத்தில் நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்த பொழுதிலும், அங்கே நீங்கள் இறை உணர்வில் இருக்கவில்லை. இங்கே, நீங்கள் ஆத்ம உணர்வுடையவராகவும், இறை உணர்வுடையவராகவும் ஆகுகின்றீர்கள். அதாவது, நீங்கள் தந்தையின் குழந்தைகள். அங்கே இருப்பதற்;கும், இங்கே இருப்பதற்;கும்; இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. இங்கே, இந்தக் கல்வி உள்ளது. ஆனால் அங்கே இந்தக் கல்வி என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்றும், தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்தும் செவிமடுத்தால், உங்களால் ஞானத்தை நன்றாகக் கிரகிக்க முடிவதுடன், தொடர்ந்தும் ஆத்ம உணர்வுடையவர்களாகவும் ஆகுவீர்கள். இது கேட்பதற்கு மிகவும் இலகுவானதைப் போன்றிருந்தாலும்; ஒருவர் இந்த ஸ்திதியில் நிலைத்திருத்தல் எனும் இலக்கு மிகவும் உயர்ந்தது. பிறருடன் உரையாடும்பொழுது, நீங்கள் எவ்வாறு உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, அவர்களை எவ்வாறு ஆத்மாக்களாகப் பார்க்கின்றீர்கள் என்ற உங்கள் சொந்த அனுபவத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் கூறவேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் இந்தச் சரீரத்தில் அமர்ந்திருந்தாலும், இது எனது இயல்பான பயிற்சியாகும். நான் குழந்தைகளை ஆத்மாக்கள் என்றே கருதுகின்றேன். நான் ஆத்மாக்களுக்கே கற்பிக்கின்றேன். பக்தி மார்க்கத்திலும் ஆத்மாக்களே பாகங்களை நடிக்கின்றார்கள். தமது பாகங்களை நடிக்கும்பொழுது அவர்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஆத்மாக்கள் மீண்டும் தூய்மையாக வேண்டும். தந்தையை நீங்கள் பரமாத்மா எனக் கருதி அவரை நினைவுசெய்யும்வரை, உங்களால் எவ்வாறு தூய்மையாக முடியும்? இதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அகநோக்குடையவராகி, நினைவுசெய்வதைப் பயிற்சி செய்ய வேண்டும். ஞானம் மிக இலகுவானது. ஆனால் நீங்கள் இந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்: 'ஆத்மாவாகிய நான் கற்கின்றேன், பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். அப்பொழுது உங்களால் ஞானத்தைக் கிரகிக்க முடிவதுடன், நீங்கள் எந்தப் பாவமும் செய்ய மாட்டீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பாவம் செய்வதில்லை என்றில்லை. இறுதியிலேயே நீங்கள் பாவத்தை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். சகோதரத்துவப் பார்வை மிகவும் இனிமையானது. இதில் எந்தச் சரீர உணர்வும் இருப்பதில்லை. தந்தையின் ஞானம் மிகவும் ஆழமானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் அதிமேலானவராக வேண்டுமாயின், இதனை நீங்கள் மிகவும் நன்றாகப் பயிற்சி செய்து, இதனைப் பற்றி மிக நன்றாகச் சிந்திக்கவும் வேண்டும். அகநோக்குடையவர் ஆக வேண்டுமாயின் உங்களுக்கு ஏகாந்தம் தேவைப்படுகிறது. இங்கு உங்களுக்கு கிடைக்கும் ஏகாந்தத்தைப் போன்று, வீட்டிலோ அல்லது தொழில் செய்யும்பொழுதோ, கிடைக்காது. இங்கே, நீங்கள் இதனை மிகவும் நன்றாகப் பயிற்சி செய்யலாம். நீங்கள் ஆத்மாவை மாத்திரமே பார்க்க வேண்டும். உங்களையும் நீங்கள் ஓர் ஆத்மா என்;றே கருத வேண்டும். இங்கே இதனை நீங்கள் பயிற்சி செய்வதனால், அந்தப் பழக்கம் நிலைத்திருக்கும். பின்னர் நீங்கள் உங்கள் சொந்த அட்டவணையை வைத்திருக்க வேண்டும்: எந்தளவிற்கு நான் ஆத்ம உணர்வுடையவர் ஆகியுள்ளேன்? நாங்கள் ஆத்மாக்களுடனேயே பேசுகிறோம். நாங்கள் அவர்களுடனேயே உரையாடுகிறோம். நீங்கள் இதனை நன்றாகப் பயிற்சி செய்வது அவசியம். இந்த விடயம் சரியானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சரீர உணர்வை அகற்றி ஆத்ம உணர்வு உடையவராகுதல், இதனைக் கிரகித்துப் பிறரையும் கிரகிக்குமாறு தூண்டுதல், உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவுசெய்தல் என்பன மிகவும் ஆழமான அட்டவணை ஆகும். தினமும், நாங்கள் கடைவதற்காக பாபா கொடுக்கின்ற விடயங்கள் மிகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைச் சிறந்த மகாராத்திகளும் புரிந்துகொள்கிறார்கள். அதன்பின்னர், உங்கள் உதடுகளிலிருந்து பிழையான வார்த்தைகள் வெளிப்பட மாட்டாது. சகோதரர்கள் மத்தியில் அதிகளவு அன்பிருக்கும். நாங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். தந்தையின் புகழை நீங்கள் அறிவீர்கள். கிருஷ்ணரின் புகழ் வேறானது. அவர் 'தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர், முற்றிலும் விகாரமற்றவர்" என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அவர் எங்கிருந்து அந்தத் தெய்வீகக் குணங்களைப் பெற்றார்? அவரின் புகழ் வேறுபட்டது. அவர் ஞானக்கடலான தந்தையினாலேயே முழுமையாகத் தெய்வீகக் குணங்களுடையவர் ஆக்கப்பட்டார், அல்லவா? உங்களை நீங்கள் மிகவும் கவனமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் அடியிலும் நீங்கள் மிகச்சரியான கணக்கைக் வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள்; முழு நாளுக்கான தங்கள் கணக்குகளையும் தினமும் இரவில் எழுதுகின்றார்கள். உங்களுக்கும் ஒரு வியாபாரம் உள்ளது. நீங்களும், பிறரை உங்கள் சகோதரர்கள் எனக் கருதி அவர்களுடன் உரையாடினீர்களா, நான் எவருக்கும் துன்பம் விளைவித்தேனா என உங்களை நீங்கள் இரவில் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் பாற்கடலிற்குச் செல்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இது நச்சுக்கடலாகும். இப்பொழுது நீங்கள் இராவண இராச்சியத்திலும் இல்லை, இராம இராச்சியத்திலும் இல்லை. நீங்கள் இடையில் இருக்கின்றீர்கள் என்பதால் உங்களை நீங்கள் ஆத்மாக்கள் எனக் கருதி, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சகோதரத்துவப் பார்வை என்ற ஸ்திதியை உங்களால்; எந்தளவிற்குப் பேண முடிகின்றது என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நாங்கள் எங்கள் பாகங்களை இந்தச் சரீரங்களின் மூலம் நடிக்கின்றோம். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், சரீரங்கள் அழியக்கூடியவை. நாங்கள் இப்பொழுது எங்களின் 84 பிறவிகளின் பாகங்களை நடித்துள்ளோம். தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவர் கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். உங்களை நீங்கள் ஆத்மாக்கள் எனக் கருதுவதனால், நீங்கள் சகோதரர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை இதனை விளங்கப்படுத்துகின்றார். இவ்விடயங்களை விளங்கப்படுத்தும் பாகத்தை தந்தையைத் தவிர வேறு எவரும் கொண்டிருக்கவில்லை. தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. ஓர் ஆசிரியர் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துவதைப் போன்றே, தந்தையும் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். இவை சிந்திப்பதற்கான விடயங்கள். இதற்கென நீங்களும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய வியாபாரம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபடுவதற்குத் தந்தை உங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதும் அவசியமாகும். நீங்கள் இதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒவ்வொருவரின் சேவையும் வேறுபட்டது. சிலரால் பெருமளவு நேரத்தை ஒதுக்க முடியும். இங்கே நீங்கள் தந்தையை எவ்வாறு நினைவுசெய்யலாம் என்பதைச் சஞ்சிகைகளில் யுக்தியுடன் எழுத வேண்டும். ஒருவரையொருவர் சகோதரர்கள் என நீங்கள் கருத வேண்டும். தந்தை வந்து ஆத்மாக்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றார். இப்பொழுதே நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்மாவைத் தெய்வீகக் குணங்களுடைய சம்ஸ்காரங்களினால் நிரப்பிக் கொள்ள வேண்டும். பாரதத்தின் புராதன யோகம் எது என மக்கள் உங்களிடம் வினவுகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். எனினும் உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள். உங்கள் பெயர் இன்னமும் அந்தளவிற்கு மிகவும் பிரபல்யம் அடையவில்லை. கடவுள் உங்களுக்கு யோகம் கற்பிக்கின்றார். அவருக்கும் நிச்சயமாகக் குழந்தைகள் உள்ளனர். எவ்வாறு தந்தையாகிய அசரீரியான கடவுள் வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது எவருக்கும் தெரியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். அவரே கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்திலும் வந்து, நான் எவ்வாறு வருகின்றேன் என்பதையும், நான் எவரின் சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என்பதையும் உங்களுக்குக் கூறுகின்றேன். இதைப் பற்றிக் குழப்பம் அடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது ஏற்கனவே நிச்சயிக்கபட்ட நாடகம். நான் ஒரேயொருவரில் மாத்திரமே வருகின்றேன். ஸ்தாபனையானது மக்களின் தந்தை மூலம் இடம்பெறுகின்றது. அவரே முதலாவது, விசேட, அன்பிற்கினிய குழந்தை ஆகுகின்றார். நான் அவரின் ஊடாக ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன். பின்னர் மீண்டும் அவர் முதலாம் இலக்கத்தைக் கொண்டவர் ஆகுகின்றார். இந்தப் படத்தில் உள்ள விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. பிரம்மா எவ்வாறு விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு எவ்வாறு பிரம்மா ஆகுகின்றார் என்பதை வேறெவராலும் விளங்கப்படுத்த முடியாது. விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் புத்திசாலித்தனமான வழிமுறைகள் தேவை. பாபா எவ்வாறு ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்பதையும், எவ்வாறு சக்கரம் சுழலுகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு எவராலும் இவற்றை அறிந்துகொள்ள முடியாது. ஆகையால் தந்தை கூறுகின்றார்: அத்தகைய திறமையான வழிமுறைகளைப் பயன்படுத்தி எழுதுங்கள்: யாரால் உங்களுக்குச் சரியான யோகத்தை கற்பிக்க முடியும்? மக்கள் இதனை உணர்ந்துகொள்ளும்பொழுது, பலர் உங்களிடம் வருவார்கள். பின்னர் அந்தப் பெரிய ஆச்சிரமங்கள் அனைத்தும் ஆட்டம் காணும். இது இறுதியில் இடம்பெறும். அப்பொழுது அவர்கள் பக்தி மார்க்கத்தில் இத்தனை நிறுவனங்கள் இருந்தும், ஏன் ஞான மார்க்கத்தில் ஒன்றேனும் இல்லை என வியப்படைவார்கள். அப்பொழுதே உங்களுக்கு வெற்றி இருக்கும். தந்தை 5000 வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தந்தையுடன் கற்று, பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். எழுத்தில் உங்களால் எவ்வாறு பிறருக்கு விளங்கப்படுத்த முடியும்? ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவராலும் தர்மத்தை ஸ்தாபிக்க முடியாது என்பதைப் பலரும் அறிந்துகொள்வதற்கே இவ் வழிமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு கல்பத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. ஒருபுறத்;;;;;;தில் இராவணனும், இன்னொரு புறத்தில் இராமரும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்;. நீங்கள் இராவணனை வெற்றிகொள்கின்றீர்கள். ஏனைய அனைவரும் இராவண சமுதாயத்தினர். உங்களில் வெகுசிலரே கடவுளின் சமுதாயத்திற்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் பல வெளிப்பகட்டு உள்ளது. எங்கெல்லாம் நீர் இருக்கின்றதோ அங்கெல்லாம் ஒன்றுகூடல் இடம்பெறுகிறது. அவர்கள் அதிகளவு பணத்தையும் செலவழிக்கின்றார்கள். பலர் மூழ்கி மரணிக்கின்றார்கள். இங்கே அவ்வாறு இடம்பெறுவதில்லை. இருந்தும் பாபா கூறுகின்றார்: சிலர் என்னை இனங்கண்டு, நான் கூறுவதைச் செவிமடுக்கின்றார்கள், பிறருக்கும் விளங்கப்படுத்துகிறார்கள், தூய்மையைக் கடைப்பிடிக்கிறார்கள், ஆனால் அதன்பின்னர் ஓ மாயா! உன்னால் அவர்கள் தோற்கடிக்கப்படுகின்றார்கள் என்பது ஓர் அற்புதமே! இது ஒவ்வொரு கல்பத்திலும் இடம்பெறுகின்றது. மாயையினால் தோற்கடிக்கப்படுகின்றவர்கள் உள்ளார்கள். மாயையுடன் ஒரு யுத்தம் இடம்பெறுகின்றது. மாயையின் ஆதிக்கமும் உள்ளது. பக்தி மார்க்கம் ஆட்டங்காண வேண்டும். நீங்கள் அரைக்கல்பத்திற்கு வெகுமதியை அனுபவம் செய்கின்றீர்கள். பின்னர் இராவண இராச்சியத்தில் பக்தி ஆரம்பமாகுகின்றது. இதன் அடையாளங்கள் எக்காலமும் நிலைத்திருக்கின்றன. அவர்கள் விகாரத்தில் ஈடுபடும்பொழுது, தேவர்களாக இருக்க முடியாது. உலகிலுள்ள எவருக்குமே தாங்கள் எவ்வாறு விகாரம் நிறைந்தவர் ஆகினார்கள்; என்பது தெரியாது. தேவர்கள் பாவப் பாதையில் சென்றார்கள் என்பது சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எப்பொழுது சென்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்கள் புத்தி நம்பிக்கையைக் கொண்டிருக்கும்பொழுது மாத்திரமே இவ்விடயங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் ஓர் ஈர்ப்பை உணர்ந்து கூறுவார்கள்: நாங்களும் அத்தகையதொரு தந்தையைச் சந்திக்க வேண்டும். எவ்வாறாயினும்; அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற பின்னரும் அந்தப் போதையைக் கொண்டிருக்கின்றார்களா, அவர்கள் புத்தி இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றதா என்பதை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். நினைவுசெய்வதற்குத் தீவிர ஆவல் அவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்களே எங்களின் உண்மையான பாபா எனக் கூறுவதற்கு அவர்கள் ஒரு கடிதம் எழுதுவார்கள். நாங்கள் உங்களிடமிருந்து அதியுயர்ந்த ஆஸ்தியைப் பெறுகின்றோம். உங்களைச் சந்திக்காமல் எங்களால் இருக்க முடியாது. நிச்சயதார்த்தத்தின் பின்னரே சந்திப்பு நிகழ்கின்றது. நிச்சயதார்த்தத்தின் பின்னர் ஒருவரையொருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். எங்கள் எல்லையற்ற தந்தையே எங்களின் ஆசிரியரும், எங்கள் மணவாளனும், அவரே எங்களுக்கு அனைத்தும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் துன்பத்தையே பெறுகின்றீர்கள்;, ஆனால் அதற்கு மாறாகத் தந்தை உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தை வழங்குகின்றார். அங்கேயும், அனைவரும் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தையே கொடுக்கின்றார்கள். அந்த நேரத்தில் நீங்கள் சந்தோஷ உறவுமுறையில் கட்டுண்டுள்ளீர்கள். இதுவே நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற, அதி மங்களகரமான சங்கமயுகமாகும். உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, பெருமளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயம். இந்த நினைவின் மூலமே உங்கள் சந்தோஷப் பாதரசம் உயரும். நாங்களே அதிகளவு பக்தி செய்துள்ளவர்களும், அதிகளவு தடுமாறித் திரிந்தவர்களும் ஆவோம். தந்தை இப்பொழுது எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார் என்பதால் நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகி, தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் எத்தனை பேருக்கு நாள் முழுவதும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள் என்பதற்கான அட்டவணையையும் வைத்திருக்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காமல் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. இதனைக் கொடுப்பதற்குப் பெரும் ஆவல் உள்ளது. இந்த யாகத்தில் பல தடைகள் உருவாக்கப்படுகின்றன. பலரும் துன்புறுத்தப்படுகின்றார்கள். தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கான கேள்வி உள்ள, ஆன்மீக ஒன்றுகூடல்;கள் வேறு எதுவும் இல்லை. இங்கு நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். அசுர குணமுடைய மக்கள் தடைகளை உருவாக்குகின்றார்கள். இங்கேயே நீங்கள் தூய்மையாகி, வீடு திரும்ப வேண்டும். ஆத்மாவே சம்ஸ்காரங்களைக் கொண்டு செல்கின்றார். கூறப்படுகின்றது: நீங்கள் யுத்தகளத்தில் மரணித்தால் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆகையாலேயே அவர்கள் மிகவும் சந்தோஷமாக யுத்தத்திற்குச் செல்கின்றார்கள். பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் பல தளபதிகள்;, மேஜர்கள், இராணுவ வீரர்கள் எனப் பலரும் உங்களிடம் வருகின்றார்கள். அவர்களால் எவ்வாறு சுவர்க்கத்திற்கு செல்ல முடியும்? யுத்த களத்தில் அவர்கள் தமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவுசெய்கின்றார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: அனைவரும் வீடு திரும்ப வேண்டும். உங்களை ஒரு சகோதர ஆத்மா எனக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தை நீங்கள் பெறுவீர்கள். 'நாங்கள் அனைவரும் சகோதரர்கள்" என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்குத் தந்தையையும் தெரியாது. மக்கள் தாங்கள் தன்னலமற்ற சேவையைச் செய்வதாகவும், தங்களுக்கு எந்த வெகுமதியும் தேவையில்லை எனவும் அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் நிச்சயமாக அதன் பலனைப் பெறுகின்றார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே தன்னலமற்ற சேவையைச் செய்கின்றார். தந்தையே அதிகளவு அவதூறு செய்யப்படுகின்றார் என்பதையும், தேவர்களும் அவதூறு செய்யப்படுகின்றார்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது, தேவர்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. இங்கே நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள் ஆகுகின்றீர்கள்;; நீங்கள் காமவாளைப் பயன்படுத்துவதும் இல்லை, அல்லது கோபப்படுவதும் இல்லை. கோபம் மிகப் பெரிய விகாரம். சிலர் கூறுகின்றார்கள்: நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் கோபப்படுகின்றோம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் என்றுமே அவர்களை அறையக்கூடாது. அவர்கள் உங்கள் சகோதரர்கள். அந்தச் சரீரத்திலும் ஓர் ஆத்மா உள்ளார். ஆத்மா என்றுமே சிறிதாகவோ பெரிதாகவோ ஆகுவதில்லை. அவர்கள் உங்கள் குழந்தைகள் அல்ல, ஆனால் அவர்கள் உங்கள் இளைய சகோதரர்கள். நீங்கள் அவர்களை ஆத்மாக்கள் என்றே கருத வேண்டும். நீங்கள் உங்கள் இளைய சகோதரரை அடிக்கக்கூடாது. இதனாலேயே கிருஷ்ணரை உரலில் கட்டியதாகக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறான விடயங்கள் என்றுமே நிகழ்வதில்லை. ஆனால் அவை வெவ்வேறான அறநெறிக் கற்பித்தல்களாகும். கிருஷ்ணர் ஏன் வெண்ணெயைத் திருட விரும்புவார்;? வெண்ணெயைத் திருடியதாக அவர்கள் அவரைப் பிழையாகப் புகழ்கிறார்கள். நீங்கள் அவரைப் புகழும்பொழுது, சரியாகப் புகழுகின்றீர்கள்: அவர் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர், 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர். எவ்வாறாயினும், இந்த அவதூறு நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அனைவரும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். தந்தை வந்து உங்களைச் சதோபிரதான் ஆக்குகின்றார். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இதுவே அனைத்திலும் மிகக் கடினமான பாடம். நீங்கள் மிகவும் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். இலகுவாக இருந்தால் இந்தப் பரீட்சையில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இதற்கு அதிக முயற்சி தேவை. சரீர உணர்வுடையவராகியதனால் நீங்கள் பாவம் செய்கிறீர்கள். இதனாலேயே 'தொட்டாச்சிணுங்கி" செடியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் உஷார் ஆகுகின்றீர்கள். அவரை மறந்துவிடுவதனால், நீங்கள் ஏதோவொரு தவறைச் செய்வதன் மூலம் உங்கள் அந்தஸ்தும் குறைவடைகின்றது. அனைவருக்கும் இக் கற்பித்தல்கள் கொடுக்கப்படுகின்றன் பின்னர் இந்தக் கற்பித்தல்களினால் அவர்கள் கீதையை எழுதினார்கள். மக்களைப் பயப்படுத்துவதற்காக, கருட புராணத்தில் பயங்கரமான கதைகள் பல எழுதப்பட்டுள்ளன. இராவண இராச்சியத்தில் பாவம் உள்ளது. ஏனெனில் அது முட்காடாகும். தந்தை கூறுகின்றார்: உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் பல காலமாக அந்தப் பார்வையில் பழக்கமாகி விட்டதால் உங்கள் அன்பு சரீரதாரிகள் மீதே ஈர்க்கப்படுகின்றது. அழிகின்ற பொருட்களின் மீது அன்பு கொண்டிருப்பதால் என்ன நன்மை உள்ளது? அழிவற்ற ஒரேயொருவர் மீது அன்பு கொண்டிருப்பதனால், உங்கள் பேறும் அழியாததாகுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு இவ் வழிகாட்டல்;கள் கொடுக்கப்பட்டுள்ளன: நடக்கும்பொழுதும், பேசும்பொழுதும், நடமாடித்திரியும் பொழுதும் தந்தையை நினைவுசெய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அழிகின்ற சரீரங்களின் மீதுள்ள உங்கள் அன்பை அகற்றி, அநாதியான ஆத்மாக்கள் மீது அன்பு கொண்டிருங்கள். அழிவற்ற தந்தையை நினைவுசெய்யுங்கள். பயிற்சி செய்யுங்கள்: ஆத்மாக்கள் சகோதரர்கள். நான் எனது சகோதர ஆத்மாவுடன் உரையாடுகின்றேன்.

2. ஞானக்கடலைக் கடைந்து, உங்கள் உதடுகளிலிருந்து என்றுமே பிழையான வார்த்தைகள் எதுவும் வெளிவராத வகையில் அத்தகையதொரு ஸ்திதியை உருவாக்குங்கள். உங்கள் கணக்கை ஒவ்வோர் அடியிலும் சோதித்துப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கடவுளின் சகவாசத்தில் நிலைத்திருப்பதனால், தவறான சகவாசத்தினால் தாக்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாத்து, எப்பொழுதும் சத்தியத்தின் சகவாசத்தில் (சற்சங்கம் - சத்தியத்தின் ஒன்றுகூடல்) இருப்பீர்களாக.

நீங்கள் எவ்வளவு பெரிய தீய சகவாசத்தில் இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுடன் ஒப்பிடும்பொழுது உங்கள் மேன்மையான சகவாசம் மேலும் பல மடங்குகள் சக்திவாய்ந்தது. கடவுளின் சகவாசத்தின் முன்னால் அந்தச் சகவாசம் எதுவுமேயில்லை. அனைவரும் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவீனமாகும்பொழுது, தவறான சகவாசத்தினால் தாக்கப்படுகின்றீர்கள். ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் சதா நிலைத்திருப்பவர்கள், அதாவது, சத்தியத்தின் சகவாசத்தில் எப்பொழுதும் இருப்பவர்கள், வேறு எவரது சகவாசம் எனும் வர்ணத்தினால் ஆதிக்கம் செலுத்தப்பட மாட்டார்கள். வீணான சூழ்நிலைகளும், வீணான சகவாசமும், அதாவது, தவறான சகவாசத்தினால் அவர்களைக் கவர முடியாது.

சுலோகம்:
தீயதொன்றை நல்லதொன்றாக மாற்றுபவர்களே, சதா சந்தோஷமான இதயமுடையவர்களாக இருக்க முடியும்.