12.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, முதியவர்களாகவோ, இளைஞர்களாகவோ அல்லது குழந்தைகளாகவோ இருந்தாலும் - இப்பொழுது இது அனைவரினதும் ஓய்வு ஸ்திதியாகும், ஏனெனில் அனைவரும் சப்தத்திற்கு அப்பாலுள்ள, முக்தி தாமத்துக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்கு வீட்டுக்கான பாதையைக் காட்டுங்கள்.

கேள்வி:
ஏன் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையின் ஸ்ரீமத் வேறுபடுகிறது? அது ஏன் ஒரேமாதிரி; இருப்பதில்லை?

பதில்:
ஏனெனில், தந்தை ஒவ்வொருவருடைய நாடித்துடிப்பையும் சூழ்நிலைகளையும் பார்த்து, ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்ரீமத் கொடுக்கிறார். உதாரணமாக, ஒருவர் பந்தனத்திலிருந்து விடுபட்டு, சேவைக்குத் தகுதியானவராக இருக்கும்பொழுது, அவர் முதியவராகவோ அல்லது ஒரு குமாரியாகவோ இருந்தாலும், பாபா அவரை இச்சேவையில் முழுமையாக ஈடுபடுமாறு ஆலோசனை கூறுவார், ஆனால் அவர் அனைவரையும் இங்கே வந்து தங்குமாறு கூறமாட்டார். தந்தையிடமிருந்து எவர் எந்த ஸ்ரீமத்தைப் பெற்றாலும், அதில் நன்மை உள்ளது. சிவபாபாவிடமிருந்து மம்மாவும், பாபாவும் தங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டதைப் போன்றே, அவர்களைப் பின்பற்றி, அவ்விதமாகச் சேவை செய்து, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போல் தனித்துவமானவர் எவருமில்லை.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, நீண்ட காலம் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். சிவன் கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகிறார். உடுக்கை அடிப்பவரே சங்கரர் என அழைக்கப்படுகிறார். இங்கே அவர்கள் வேதங்கள், சமயநூல்கள், உபநிடதங்கள் போன்றவற்றை உரைக்கின்ற, பல்வேறு ஆச்சிரமங்கள் உள்ளன. அதுவும் உடுக்கை அடிப்பது போன்றதாகும். மக்கள் சென்று தங்குகின்ற பல்வேறு ஆச்சிரமங்களும் உள்ளன, ஆனால் அவர்களுக்கு எந்த இலக்கோ அல்லது இலட்சியமோ இருப்பதில்லை. குருமார்கள் தங்களைச் சப்தத்துக்கு அப்பாலுள்ள, மௌன தாமத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். அங்கேயே தங்கள் சரீரங்களை விட்டு நீங்கும் எண்ணத்துடன் அவர்கள் செல்கிறார்கள். எவ்வாறாயினும், எவராலும் வீடு திரும்பிச் செல்ல முடியாதுள்ளது. அம்மக்கள் தங்கள் சொந்த பக்தியைக் கற்பிக்கிறார்கள். இங்கே, இதுவே உண்மையான ஓய்வு ஸ்திதி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவருமே ஓய்வு ஸ்திதியில் உள்ளார்கள். எவ்வாறாயினும், நீங்கள் முக்தி தாமத்துக்குச் செல்வதற்கான முயற்சியைச் செய்வதற்குத் தூண்டப்படுகிறீர்கள். சற்கதிக்கோ அல்லது சப்தத்திற்கு அப்பால் செல்வதற்கான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்கோ வேறு எவரும் இல்லை. ஒரேயொருவரே முக்தியையும், சற்கதியையும் அருள்பவர் ஆவார். உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் துறந்து, இங்கே வந்து தங்குமாறு தந்தையால் உங்கள் அனைவரிடமும் கூற முடியாது. ஆம், சேவை செய்வதற்குத் தகுதியானவர்களே, இங்கே தங்குமாறு கேட்கப்படுகிறார்கள். நீங்களும் ஏனையோருக்கு ஓய்வு ஸ்திதிக்குள் செல்லும் பாதையைக் காட்ட வேண்டும், ஏனெனில் இப்பொழுது அனைவரும் சப்தத்திற்கு அப்பால் செல்லும் நேரமாகும். ஒரேயொரு தந்தையே அனைவரையும் முக்தி தாமத்துக்கும், ஓய்வு ஸ்திதிக்கும் அழைத்துச் செல்கிறார். நீங்கள் அந்தத் தந்தையுடன் அமர்ந்திருக்கிறீர்கள். அம்மக்கள் ஓய்வு ஸ்திதியை அடைந்திருப்பினும் அவர்கள் எவராலும் வீட்டுக்குத் திரும்ப இயலாதுள்ளது. ஒரேயொரு தந்தையே அனைவரையும் ஓய்வுக்குள் அழைத்துச் செல்கிறார், அவர் மாத்திரமே உங்களுக்குச் சிறந்த வழிகாட்டல்களையும் கொடுக்கிறார். தாங்கள் தங்களுடைய குடும்பத்தை அழைத்து வந்து, இங்கே தங்குவார்கள் எனச் சிலர் பாபாவுக்குக் கூறுகிறார்கள். இல்லை, அவர்கள் சேவை செய்வதற்குத் தகுதியானவர்களா இல்லையா என்பது முதலில் பார்க்கப்;பட வேண்டும். ஒருவர் முதியவராகவும், பந்தனத்திலிருந்து விடுபட்டவராகவும், சேவாதாரியாகவும் இருந்தால், அவருக்கு ஸ்ரீமத் கொடுக்கப்படுகிறது. சில குழந்தைகள் கூறுகிறார்கள்: கருத்தரங்குகளை நடாத்துங்கள், அதனால் நாங்கள் சேவை செய்வதற்கான வழிகளைக் கற்க முடியும். குமாரிகளுடன், தாய்மார்களும், ஆண்களும் தொடர்ந்து கற்பார்கள். இது ஒரு கருத்தரங்கு ஆகும். எவ்வாறு ஏனையோருக்கு விளங்கப்படுத்துவது என பாபா உங்களுக்குத் தினமும் கற்பிக்கிறார். அவர் உங்களுக்குத் தொடர்ந்தும் ஆலோசனை கூறுகிறார். எல்லாவற்றுக்கும் முதலில், ஒரு விடயத்தை விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையை நினைவு செய்யுங்;கள். நீங்கள் அவருடன் வைத்திருக்கும் உறவுமுறை என்ன? அவர் தந்தையாக இருந்தால், நீங்கள் அவரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் தந்தையை அறியவில்லை. அனைவரிலும் கடவுள் இருக்கிறார் என நீங்கள் கூறுகிறீர்கள். கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருந்தால்;, உங்கள் நிலை என்னவாகும்? நீங்கள் இப்பொழுது பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுவதனால், பாபா எங்களைத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். பின்னர் அவர் எங்களை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்வார். ஏனைய அனைவரும் உங்களுக்குக் காடுகளுக்குச் செல்வதற்கான பாதையையே காட்டுகிறார்கள். தந்தை உங்களுக்கு அத்தகையதோர் இலகுவான பாதையைக் காட்டுகிறார். ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்பது நினைவுகூரப்படுகிறது. அது ஒரு பொய் அல்ல. நீங்கள் பாபா என்று கூறியதுமே வாழ்வில் விடுதலை அடைகிறீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், பாபா உங்களைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டை மறந்து விட்டீர்கள். தந்தையாகிய கடவுள், ஒரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு தூதுவர்கள் அனைவரையும் அனுப்புகிறார் என அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, பின்னர் ஏன் அவர்கள் அவரைச் சர்வவியாபி எனக் கூறுகிறார்கள்? அவர் அனைவரையும் மேலிருந்து அனுப்புகிறார். அவர்கள் ஒரு விடயத்தைக் கூறுகிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அதனை நம்புவதில்லை. தந்தை அவர்களை ஒரு சமயத்;தை ஸ்தாபிப்பதற்கு அனுப்புகிறார், ஆகவே, அவர்களின் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து கீழே வருகின்றனர். எல்லாவற்றுக்கும் முதலில், தேவர்களின் ஸ்தாபனம் உள்ளது. முதலில், ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்குரிய இலக்ஷ்மியும் நாராயணனும் தங்களின் மக்களுடன் வருவார்கள். வேறு எவரும் தங்கள் மக்களுடன் வருவதில்லை. அங்கே, முதலில் ஒருவர் வருவார், பின்னர் இன்னுமொருவரும், அதன்பின்னர் மூன்றாவது நபரும் வருவார். இங்கே, நீங்கள் அனைவரும் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்குத் தயாராகிறீர்கள். இது ஒரு பாடசாலை ஆகும். வீட்டில் வசிக்கும்பொழுது, நீங்கள் பாபாவை ஒரு கணம், அரைக் கணம், அரைக்கணத்திலும் அரைக்கணம் நினைவு செய்கிறீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன என்பது உங்களுக்கு ஒரு விநாடியில் கூறப்படுகிறது. அவரே பரமதந்தை எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அவரே அனைவரினதும் தந்தை ஆவார். அவரே படைப்பவர் ஆவார். எவ்வாறாயினும், அப்படியிருந்தும், அவர்கள் அவரைத் தந்தையாகக் கருதாவிட்டால், அப்பொழுது உங்களால் என்ன கூற முடியும்? தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர், ஆகவே அவர் நிச்சயமாக உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுப்பார். அவர் அதனைப் பாரதத்துக்குக் கொடுத்தார். சாதாரண மனிதனை நாராயணனாக மாற்றுகின்ற இராஜயோகம் மிகவும் பிரபல்யமானதாகும். இதுவும் சத்திய நாராயணனின் கதையாகும். இது அமரத்துவக் கதையும், மூன்றாவது கண்ணைப் பெறும் கதையுமாகும். பாபா உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். நிச்சயமாக அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நன்மை மாத்திரமே இருக்க முடியும். பாபா ஒவ்வொருவருடைய நாடித் துடிப்பையும் உணர்கிறார். இவருக்கு எப்பந்தனமும் இல்லை, இவர் சேவை செய்யத் தகுதியானவர் ஆவார். நீங்கள் தகுதியானவர் என்பதைத் தந்தை பார்க்கும்பொழுதே, வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். உங்கள் சூழ்நிலைகளைப் பார்த்து, உங்களுக்குக் கூறப்படுகிறது: நீங்கள் இங்கே தங்கியிருந்து, தேவை ஏற்படும்பொழுதெல்லாம் தொடர்ந்தும் சேவை செய்ய முடியும். கண்காட்சிகளில் அதிகளவில் பலருக்கான தேவை உள்ளது. முதியவர்கள் தேவைப்படுகிறார்கள், குமாரிகளும் தேவைப்படுகிறார்கள். அனைவரும் தொடர்ந்தும் கற்பித்தல்களைப் பெறுகிறார்கள். இது ஒரு கல்வி ஆகும். கடவுள் பேசுகிறார். அசரீரியானவரே கடவுள் என அழைக்கப்படுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆவீர்கள். ஓ கடவுளே, தந்தையே! என மக்கள் கூறுகிறார்கள், ஆகவே அவர் சர்வவியாபி என அழைக்கப்பட முடியாது. உங்கள் லௌகீகத் தந்தை சர்வவியாபியா? இல்லை. அவரே தந்தை என நீங்கள் கூறுகிறீர்கள், பின்னர் நீங்கள் ஓ தூய்மையாக்குபவராகிய தந்தையே! எனப் பாடுகிறீர்கள், ஆகவே அவர் நிச்சயமாக இங்கே வந்து, உங்களைத் தூய்மையாக்குவார். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் என்னைச் சந்தித்துள்ள எனது குழந்தைகளே தங்கள் ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை பெறுவதற்காக வந்துள்ளார்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிவபாபாவிடமிருந்து மம்மாவும் பாபாவும் தங்கள் ஆஸ்தியைக் கோரியதைப் போன்றே, நீங்களும் அவரிடமிருந்து அதனைக் கோருகிறீர்கள். அவர்களைப் பின்பற்றுங்கள். மம்மாவையும் பாபாவையும் போன்று, அவ்விதமாகவே சேவை செய்யுங்கள். ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுகின்ற கதையை உங்களுக்கு மம்மாவும் பாபாவும் கூறுகிறார்கள். ஆகவே, நீங்கள் ஏன் அதனிலும் குறைந்த எதனையும் செவிமடுக்கிறீர்கள்? அவர்கள் சூரிய வம்சத்தவராகி, பின்னர் சந்திர வம்சத்தவர் ஆகுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதலில் நீங்கள் சூரிய வம்சத்தினுள் செல்ல வேண்டும். உங்களுக்கு இப்புரிந்துணர்வு உள்ளது. இப்புரிந்துணர்வு இன்றி, எவராலும் இப்பாடசாலையில் அமர்ந்திருக்க முடியாது. பாபா உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். பாபா இவரில் பிரவேசித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இல்லாவிட்டால், பிரஜாபிதா (மக்களின் தந்தை) எங்கேயிருந்து வருவார்? அந்த பிரம்மா ஒரு சூட்சும உலகவாசி ஆவார். இங்கேயே மக்களின் தந்தை தேவைப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான் பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறேன். எதன் ஸ்தாபனையை? பிராமணர்களின் ஸ்தாபனையை ஆகும். நான் இந்த பிரம்மாவில் பிரவேசிக்கிறேன். ஆத்மாக்களாகிய நீங்களும் சரீரங்களில் பிரவேசிக்கிறீர்கள். நான் ஞானக்கடல் என அழைக்கப்படுகிறேன். ஆகவே, எவ்வாறு அசரீரியான என்னால் ஞானத்தைப் பேச இயலும்? கிருஷ்ணர் ஞானக்கடல் என அழைக்கப்பட முடியாது. பல பிறவிகளின் இறுதியில் கிருஷ்ணரின் ஆத்மா ஞானத்தைப் பெற்று, கிருஷ்ணர் ஆகுகிறார். அவர் இப்பொழுது அவ்வாறு இல்லை. நீங்கள் கடவுளுடன் இராஜயோகத்தைக் கற்று, சுவர்க்க அதிபதிகளாகிய தேவர்கள் ஆகினீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நீங்கள் இதனைக் கற்பதனூடாகவே ஓர் இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவீர்கள். இதுவே உங்களுடைய இலக்கும் இலட்சியமும் ஆகும். நீங்கள் மீண்டும் ஒருமுறை சூரிய-வம்சத்துத் தேவர்கள் ஆகுவதற்கே இங்கே வந்துள்ளீர்கள். ஒரு தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது பல்வேறு சமயங்கள் உள்ளன. பல்வேறு குருமார்கள் உள்ளார்கள். அவை அனைத்தும் முடிவடையும். அக்குருமார்கள் அனைவரினதும் குரு, சற்கதியை அருள்பவராகிய ஒரேயொரு தந்தையே ஆவார். நான் சாதுக்கள் போன்ற அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கே வந்துள்ளேன். நீங்கள் மேலும் முன்னேறுகையில், அவர்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று, உங்களை வணங்குவார்கள். குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நாடகத்தின் இரகசியங்கள் அனைத்தும் உள்ளன. பிரம்மாவும், விஷ்ணுவும், சங்கரரும் சூட்சும உலகத்தில் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவரே மக்களின் தந்தையாவார். அவர்(சிவன்) கூறுகிறார்: நான் பிரம்மாவின் பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். அவர் உங்களுக்கு இதையும் கூறுகிறார்: ஓ! குழந்தைகளே, நீங்கள் அனைவரும் பிராமணர்கள், நான் உங்கள் மீது கலசத்தை வைக்கிறேன். நீங்கள் இத்தனை பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இந்நேரத்தில், ஆழ்நரகமே உள்ளது. அங்கே நரகம் என அழைக்கக்கூடிய ஆறுகள் போன்றவை இல்லை. அவர்கள் கருட புராணத்தில் அத்தகைய பல கதைகளை எழுதியுள்ளார்கள். இப்பொழுது பாபா இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இவரும் கற்றுள்ளார். அப்பாவிப் பிரபுவான தந்தை இங்கமர்ந்திருந்து, அப்பாவிக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் ஏழை, அப்பாவிக் குழந்தைகளை அதிமேலான, செல்வந்தர்கள் ஆக்குகிறார். நீங்கள் சூரிய-வம்ச அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் படிப்படியாகக் வீழ்ச்சியடைந்து, என்னவாக ஆகியுள்ளீர்கள் எனப் பாருங்கள்! இது அத்தகையதோர் அற்புதமான நாடகம்! நீங்கள் சுவர்க்கத்தில் மிகவும் செழிப்பாக இருந்தீர்கள்! இப்பொழுதும், அரசர்கள் அத்தகைய பெரிய மாளிகைகளைக் கொண்டிருக்கிறார்கள். ஜெய்ப்;பூரிலும் மாளிகைகள் உள்ளன. இப்பொழுதும் அத்தகைய மாளிகைகள் காணப்படுகின்றன என்றால் முன்னர் இருந்தவை எத்தகையவையாக இருந்திருக்கும் என உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். அரசாங்க வீடு அவ்வாறு கட்டப்படுவதில்லை. அரசர்களின் மாளிகைகளின் ஆடம்பரம் முற்றிலும் வேறுபட்டதாகும். நல்லது, நீங்கள் சுவர்க்கத்தின் ஒரு மாதிரியுருவைப் பார்க்க விரும்பினால், அஜ்மீருக்குச் செல்லுங்கள். ஒரு மாதிரியுருவை உருவாக்குவதற்கு அவர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள். நீங்கள் அதனைப் பார்த்தவுடனேயே அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். இங்கே, பாபா உங்களுக்கு விரைவிலேயே ஒரு காட்சியைக் கொடுக்கிறார். நீங்கள் காட்சிகளில் காண்கின்ற அனைத்தையும், நடைமுறை ரூபத்தில் பார்க்கப் போகின்றீர்கள். பக்தர்கள் பக்தி மார்க்கத்தில் காட்சிகளைக் கண்டிருந்தாலும், அவர்கள் வைகுந்தத்தின் அதிபதிகள் ஆகவில்லை. நீங்கள் நடைமுறை ரீதியில் அதிபதிகள் ஆகுகிறீர்கள். இது இப்பொழுது நரகம் ஆகும். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவரை கடித்துக்குதறிச் சண்டையிடுகிறார்கள். சில புதல்வர்கள் தங்கள் தந்தையை அல்லது சகோதரரைக் கொல்லவும் தயங்குவதில்லை. சத்தியயுகத்தில், சண்டையிடல் போன்றவற்றின் கேள்வியே கிடையாது. நீங்கள் இந்நேரத்தில் சம்பாதிக்கின்ற வருமானத்திலிருந்து 21 பிறவிகளுக்கான ஓர் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். அவர்கள் தந்தையின் அறிமுகமும், அவருடைய சுயசரிதையும் என்ற முதலாவது விடயத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், அப்பொழுது பாபா எனக் கூறுவதில் என்ன நன்மை இருக்கும்? பல்வேறு தானங்களையும், அதிகளவு புண்ணியத்தையும் செய்த பின்னரும் இதுவே பாரதத்தின் நிலைமை ஆகிவிட்டது! எவ்வாறாயினும், எவரும் இதனைப் புரிந்து கொள்வதில்லை. பக்தி செய்த பின்னர் தாங்கள் கடவுளைக் காண்பார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் யார், எப்பொழுது கடவுளைக் காண்பார்கள்? அனைவரும் பக்தி செய்கிறார்கள், ஆனால் அனைவருமே ஓர் இராச்சியத்தைப் பெற மாட்டார்கள். இவை அனைத்தையும் புரிந்துகொள்வதில் அதிகளவு குழப்பம் உள்ளது! நீங்கள் அனைவரிடமும் கூற முடியும்: அச்சமயநூல்கள் போன்றவற்றை மறந்து விடுங்கள். மரணித்து வாழுங்கள்! பிரம்மம் ஒரு தத்துவமே ஆகும். நீங்கள் அதிலிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. தந்தையிடமிருந்து மாத்திரமே உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெறமுடியும். நாங்கள் அதனை ஒவ்வொரு கல்பத்திலும் கோருகிறோம். அது ஒரு புதிய விடயமல்ல. நாடகம் இப்பொழுது முடிவடையவுள்ளது. நாங்கள் அச்சரீரங்களை விட்டு நீங்கி, வீடு திரும்ப வேண்டும். நீங்கள் எந்தளவுக்குத் தந்தையை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு இட்டுச் செல்லும். இது தீர்வுக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. பாவாத்மாக்களின் கர்மக் கணக்குகள் தீர்க்கப்படவுள்ளன. நீங்கள் இப்பொழுது யோகசக்தி மூலம் தூய, புண்ணியாத்மா ஆகவேண்டும். வைக்கோற் போர் தீ மூட்டப்படவுள்ளது. ஆத்மாக்கள் வீடு திரும்புவார்கள். ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்படும் பொழுது, எண்ணற்ற சமயங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். அவர்கள் தங்களுடன் தங்கள் சரீரங்களை எடுத்துச் செல்லமாட்டார்கள். தங்களுக்கு அநாதி முக்தி வேண்டும் எனச் சிலர் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அது சாத்தியமில்லை, ஏனெனில் இது முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நாடகம், அது தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால், அதற்கு முடிவு கிடையாது. இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து, எவ்வாறு சக்கரம் அநாதியாகத் தொடர்கிறது என்னும் இரகசியத்தை விளங்கப்படுத்துகிறார். இவ்விடயங்கள் அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அதிகமாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் பொழுது, இங்கே விரிவாக்கம் ஏற்படும். இது உங்களுடைய மிகவும் மேன்மையான தர்மம் ஆகும். பறவைகள் அதனை உண்கின்றன. அவை வேறெந்தச் சமயத்தையும் உண்பதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு இவ்வுலகில் எந்த ஆர்வமும் இருக்கக்கூடாது. இது ஓர் இடுகாடாகும். நீங்கள் ஏன் பழைய உலகத்தின் மீது பற்று வைக்க வேண்டும்? அமெரிக்காவில் விவேகிகளாக உள்ளவர்கள், தங்களைச் சிலர் தூண்டுவதாக உணர்கிறார்கள். மரணம் முன்னிலையில் உள்ளது. விநாசம் நடைபெற வேண்டும். அனைவருடைய மனச்சாட்சியும் தொடர்ந்தும் உறுத்துகிறது. இவ்விதமாகவே நாடகத்தின் நியதி உருவாக்கப்பட்டுள்ளது. சிவபாபாவே அருள்பவர் ஆவார். அவர் எதனாலும் கவரப்படவில்லை. அவர் அசரீரியானவர்;. இவை அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கே உரியவையாகும். புதிய உலகமும் குழந்தைகளாகிய உங்களுக்கே உரியதாகும். நாங்கள் உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கிறோம். பின்னர் அதனை நாங்கள் ஆட்சி செய்வோம். பாபா மிகவும் தன்னலமற்றவர்! நீங்கள் பாபாவை நினைவு செய்யும்பொழுது, உங்கள் புத்தியின் பூட்டு திறக்கப்படுகிறது. நீங்கள் இரட்டிப்பு தானம் செய்பவர்கள். நீங்கள் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை பாபாவுக்குக் கொடுக்கிறீர்கள். நீங்கள் அழிவற்ற ஞான இரத்தினங்களையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் சிவபாபாவுக்கு எதனைக் கொடுக்கிறீர்கள்? ஒருவர் மரணிக்கும்பொழுது, அவருடைய உடைமைகள் அனைத்தையும் ஒரு விசேட பிராமணக் குருக்களுக்கு அவர்கள் கொடுக்கிறார்கள். நீங்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறுகிறீர்கள், ஆனால் கடவுளுக்குப் பேராசை உள்ளதா? தாங்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் அவர்கள் இருவரையும் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள். எவ்வாறாயினும், அவரே அருள்பவர் ஆவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பழைய உலகிலுள்ள எதன் மீதும் பற்று வைக்காதீர்கள். இந்த உலகிலுள்ள எதனிலும் எந்த ஓர் ஆர்வத்தையும் கொண்டிருக்காதீர்கள், ஏனெனில் அனைத்துமே ஓர் இடுகாடாக மாறவுள்ளது.

2. நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது. நீங்கள் உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்த்து, வீடு திரும்ப வேண்டும். ஆகவே, யோகசக்தி மூலம் உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையடைந்து, தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுங்கள். இரட்டை தானிகள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
சந்தோஷப் போசாக்கினால், உங்கள் மனதையும் புத்தியையும் சக்திமிக்கதாக ஆக்கி, ஆட்ட அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

ஆஹா பாபா! ஆஹா எனது பாக்கியமே! ஆஹா! சதா இந்த சந்தோஷ பாடலைப் பாடுங்கள். சந்தோஷமே மிகச் சிறந்த போசாக்காகும். சந்தோஷத்தைப் போன்றதொரு போசாக்கு வேறு எதுவும் இல்லை. நாளாந்தம் சந்தோஷப் போசாக்கை உண்பவர்கள், சதா ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் பலவீனம் அடைவதில்லை. ஆகையால், சந்தோஷப் போசாக்கினால் உங்கள் மனதையும் புத்தியையும் பலமானதாக ஆக்கினால், உங்கள் ஸ்திதி சக்திமிக்கதாக ஆகுகின்றது. அத்தகைய சக்திமிக்க ஸ்திதியை கொண்டிருப்பவர்கள் சதா ஆட்ட அசைக்க முடியாதவர்கள் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
உங்கள் மனதையும் புத்தியையும் அனுபவம் என்ற ஆசனத்தில் ஸ்திரமாக்கிக் கொண்டால் நீங்கள் என்றுமே குழப்பம் அடைய மாட்டீர்கள்.