12.06.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.04.91     Om Shanti     Madhuban


சகல எல்லைகளுக்கும் அப்பால் சென்று, எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் ஆகுங்கள்.


இன்று, ஒரு கல்பத்தின் பின்னர் சந்திப்பைக் கொண்டாடுவதற்காகக் குழந்தைகள் எல்லோரும் தமது பௌதீகமான இனிய வீடான மதுவனத்தை வந்தடைந்துள்ளார்கள். மதுவனம் பௌதீக உலகின் இனிமையான வீடாகும். இங்கு தந்தையினதும் குழந்தைகளினதும் ஆன்மீக மேளாக்கள் இடம்பெறுகின்றன. இது ஒரு சந்திப்பிற்கான மேளா (ஒன்றுகூடல்) ஆகும். எனவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் இந்த ஒன்றுகூடலில் சந்திப்பதற்காக வந்துள்ளீர்கள். தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சந்திப்புகளுக்கான இந்த ஒன்றுகூடல்கள் சங்கமயுகத்தில் மட்டுமே இடம்பெறுகின்றன. அவை மதுவனத்தில் மட்டுமே இடம்பெறுகின்றன. இதனாலேயே, நீங்கள் எல்லோரும் ஓடோடி வந்து மதுவனத்தை அடைந்துள்ளீர்கள். மதுவனம் பாப்தாதாவுடன் பௌதீக ரூபத்தில் உங்களைச் சந்திக்க வைக்கிறது. அத்துடன்கூடவே, இலகுவான நினைவை நீங்கள் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் அவ்யக்த சந்திப்பை நடத்தச் செய்கிறது. ஏனென்றால், மதுவனபூமி உங்களுக்கு ஆன்மீகச் சந்திப்பினதும் பௌதீக வடிவிலான சந்திப்பினதும் அனுபவத்தை வழங்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. இது இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள இடம் என்பதனால், உங்களுக்கு இலகுவாக சந்திப்பின் அனுபவம் கிடைக்கிறது. வேறெந்த இடத்திலும் ஞானக்கடலுக்கும் ஞான கங்கைகளுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நிகழ்வதில்லை. கடலும் கங்கைகளும் சந்திக்கும் ஒரேயொரு இடம் இது மட்டுமேயாகும். ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ள இத்தகைய மகத்தான இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

இந்தத் தபஸ்யா வருடத்தில், குறிப்பாக இந்தக் கல்பத்தில் முதல் தடவையாக சந்திக்கும் குழந்தைகளுக்குப் பொன்னானதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்! தபஸ்யா வருடத்தின் ஆரம்பத்தில், புதிய குழந்தைகள் மேலதிக சக்தியைப் பெற்றுள்ளார்கள். ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட இந்த மேலதிக சக்தியானது, எதிர்காலத்தில் நீங்கள் முன்னேறிச் செல்வதற்கு உங்களுடன் ஒத்துழைக்கும். இதனாலேயே, நாடகமும் புதிய குழந்தைகள் முன்னேறிச் செல்வதற்கு ஒத்துழைக்கிறது. ஆகவே, நாங்கள் பிந்தி வந்துள்ளோம் என அவர்களால் முறைப்பாடு செய்ய முடியாது. இல்லை. தபஸ்யா வருடத்திற்கும் இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டுள்ளது. தபஸ்யா வருடத்தில் ஆசீர்வாதங்களின் பூமியில் காலடி எடுத்து வைக்கும் உரிமையையும் வாய்ப்பையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்த மேலதிக பாக்கியம் சிறியதல்ல. புதிய குழந்தைகளான நீங்கள் குறிப்பாக மூன்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள்: தபஸ்யா வருடம், மதுவனபூமி, உங்களின் முயற்சி. எனவே, நீங்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்! இந்த அழியாத பாக்கியத்தின் போதையை உங்களுடன் வைத்திருங்கள். நீங்கள் இங்கே இருக்கும்போது மட்டும் இந்தப் போதை உங்களுடன் இருக்கக்கூடாது. தந்தை அழியாதவர். மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அழியாதவர்கள். எனவே, உங்களின் பாக்கியமும் அழியாதது. அழியாத பாக்கியத்தை உங்களுடன் அநாதியாக வைத்திருங்கள். இது இலகுவான முறையில் அதில் கவனம் செலுத்துவதாகும். இது பதட்டத்துடன் கூடிய அவதானமாக இருக்கக்கூடாது. இலகுவாக அவதானம் செலுத்த வேண்டும். எது கஷ்;டமாக உள்ளது? நீங்கள் எனது பாபா என இனங்கண்டு, அவரை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அவரை அறிவீர்கள். அவரை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அவரை அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். எனவே, என்ன கஷ்டம்? தொடர்ந்து ஒரேயொருவரே எனது பாபா என்பதை அனுபவம் செய்யுங்கள். இது முழுமையான ஞானமாகும்.

இந்த முழுமையான ஞானமும் ஆரம்பத்தில் இருந்து மத்தியினூடாக இறுதிவரை, பாபா என்ற வார்த்தையிலேயே அமிழ்ந்துள்ளது. ஏனென்றால், பாபாவே விதையாவார். முழு மரமும் விதையில் அமிழ்ந்துள்ளதுதானே? விரிவாக்கத்தை மறப்பது சாத்தியம். ஆனால், பாபா என்ற வார்த்தையில் உள்ள சாரத்தை நினைப்பது கஷ்டமில்லை. இது எப்போதும் இலகுவானதுதானே? இது சிலவேளைகளில் கஷ்டமும் சிலவேளைகளில் இலேசாகவும் இல்லை. பாபா எப்போதும் உங்களுடையவரா? அல்லது அவர் சிலவேளைகளில் மட்டுமே உங்களுடையவரா? பாபா எப்போதும் உங்களுடையவர் என்பதனால், நினைவும் எப்போதும் இலேசாக இருக்க வேண்டும். இது கஷ்டமான விடயமல்ல. நீங்கள் என்னுடையவர் எனக் கடவுள் சொன்னார்;. நீங்கள் என்னுடையவர் என நீங்கள் சொன்னீர்கள். அப்படியென்றால், என்ன கஷ்டம்? இதனாலேயே புதிய குழந்தைகள் மேலும் முன்னேறிச் செல்கிறார்கள். இப்போதும், நீங்கள் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை, இறுதி நிறைவிற்கான ஊதுகுழல்கள் ஊதப்படவில்லை. ஆகவே, நீங்களும் பறப்பதுடன், மற்றவர்களையும் தொடர்ந்து பறக்கச் செய்யுங்கள். இதைச் செய்வதற்கான வழிமுறை, வீணானவற்றை நிறுத்துவதாகும். தொடர்ந்து உங்களின் சேமிப்புக் கணக்கில் சேமியுங்கள். ஏனென்றால், 63 பிறவிகளாக, நீங்கள் சேமிக்கவில்லை. ஆனால், நீங்கள் வீணாக்கியே வந்தீர்கள். நீங்கள் அவற்றை வீணாக்கியதால், உங்களின் கணக்குகள் அனைத்தும் அழிந்து விட்டன. நீங்கள் மூச்செனும் பொக்கிஷத்தை வீணாக்கினீர்கள். எண்ணம் என்ற பொக்கிஷத்தை வீணாக்கினீர்கள். நேரம் என்ற பொக்கிஷத்தையும் வீணாக்கினீர்கள். நற்குணங்கள் என்ற பொக்கிஷத்தையும் சக்திகள் என்ற பொக்கிஷத்தையும் வீணாக்கினீர்கள். அத்துடன் ஞானம் என்ற பொக்கிஷத்தையும் வீணாக்கினீர்கள். பல கணக்குகள் வெறுமையாகிவிட்டன! நீங்கள் இப்போது இந்தக் கணக்குகள் எல்லாவற்றிலும் சேமிக்க வேண்டும். அவற்றைச் சேமிக்கும் காலம் இப்பொழுதேயாகும். அவற்றைச் சேமிப்பதற்கான இலகுவான வழிமுறையும் உங்களுக்குத் தந்தையால் காட்டப்பட்டுள்ளது. அழிகின்ற பொக்கிஷங்களை நீங்கள் செலவழிக்கும்போது அவை குறைவடைகின்றன. ஆனால், இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் தூய மனோபாவத்துடன் நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். அத்துடன் சேமிக்கப்படும். இங்கு, பொக்கிஷங்களைப் பயன்படுத்துவதே அவற்றைச் சேமிப்பதற்கான வழிமுறையாகும். அங்கோ, பொக்கிஷங்களை வைத்திருப்பதே அவற்றைச் சேமிப்பதற்கான வழிமுறையாகும். இங்கு, அவற்றைப் பயன்படுத்துவதே சேமிப்பதற்கான வழிமுறையாகும். எனவே, இதில் ஒரு வேறுபாடு உள்ளது. உங்களின் நேரத்தை உங்களுக்காக அல்லது மற்றவர்களுக்காக ஒரு புண்ணியப் பணியில் பயன்படுத்துங்கள். அது தொடர்ந்து அதிகரிக்கும். ஞானத்தைப் பயன்படுத்துங்கள். அதேபோல், நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக உங்களின் நற்குணங்களையும் சக்திகளையும் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். ஏனைய மக்கள் நினைப்பதைப் போல் நினைக்காதீர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒரு பாதுகாப்புப் பெட்டியில் வைத்துவிட்டுத் தாம் அதிகளவில் சேமித்துள்ளதாக நினைக்கிறார்கள். அதேபோல், நீங்களும் உங்களின் புத்தியில் அதிகளவு ஞானம் உள்ளதாகவும் அதிகளவு நற்குணங்களும் சக்திகளும் உள்ளதாகவும் நினைக்கிறீர்கள். இவற்றைப் பூட்டி வைக்காதீர்கள்! அவற்றைப் பயன்படுத்துங்கள்! சேமிப்பிற்காக நீங்கள் பயன்படுத்த வேண்டிய வழிமுறையைப் புரிந்து கொண்டீர்களா? அது அவற்றைப் பயன்படுத்துவதாகும். அவற்றை உங்களுக்காகப் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், நீங்கள் அவற்றை இழந்துவிடுவீர்கள். சில குழந்தைகள் தமக்குள் சகல பொக்கிஷங்களும் அமிழ்ந்துள்ளதாகக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவை உங்களுக்குள் அமிழ்ந்துள்ளதென்றால் அதன் அடையாளம் என்ன? உங்களில் அவை அமிழ்ந்துள்ளதென்றால், நீங்கள் அவற்றைச் சேமித்துள்ளீர்கள் என்றே அர்த்தமாகும். இதன் அடையாளம் என்னவென்றால், தேவைப்படும் நேரங்களில் அவை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தாமல், நீங்கள் அதிகளவைச் சேமித்துள்ளீர்கள் எனச் சொன்னால், அது அவற்றைச் சேமிப்பதற்கான மிகச்சரியான வழிமுறை இல்லை. ஆகவே, நீங்கள் பயன்படுத்திய வழிமுறை மிகச்சரியாக இல்லாவிட்டால், உரிய நேரத்திற்குள் முழுமை அடைகின்ற பெறுபேற்றை உங்களால் அடைய முடியாதிருக்கும். நீங்கள் ஏமாற்றப்பட்டுவிடுவீர்கள். நீங்கள் வெற்றி அடைய மாட்டீர்கள்.

நற்குணங்களையும் சக்திகளையும் பயன்படுத்துங்கள். அவை தொடர்ந்து அதிகரிக்கும். எனவே, சேமிக்கின்ற மற்றும் சேகரிக்கின்ற வழிமுறையைப் பயன்படுத்துங்கள். அப்போது வீணான கணக்கு இயல்பாகவே மாற்றப்பட்டு, பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படும். பக்தி மார்க்கத்தில், தம்மிடம் உள்ளவற்றுக்கேற்ப பௌதீகமான செல்வத்தைத் தானம் செய்து, அதைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. ஆகவே, அது தொடர்ந்து அதிகரிக்கும். பக்தியிலும், எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதற்காக, அவர்கள் தமது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிப்பார்கள். எனவே, தபஸ்யா வருடத்தில், நீங்கள் எவ்வளவற்றை வீணாக்கினீர்கள் என மட்டும் சோதிக்காதீர்கள். எதையாவது வீணாக்குதல் என்பது வேறுபட்ட விடயம். ஆனால், எவ்வளவற்றை நீங்கள் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தினீர்கள் என்பதையும் சோதித்துப் பாருங்கள். உங்களுக்குச் சொல்லப்பட்ட சகல பொக்கிஷங்களும் அத்துடன் நற்குணங்களும் தந்தையிடமிருந்து நீங்கள் பெறும் பரிசுகளாகும். இது எனது நற்குணம், இது எனது சக்தி. உங்களின் கனவுகளில்கூட இந்தத் தவறைச் செய்யாதீர்கள். இவை தந்தையிடமிருந்து பெறப்பட்ட பரிசுகள். இறைவனின் பரிசுகள். இறைவனின் பரிசுகளை உங்களுடையவை எனக் கருதுவது மகாபாவம். பல குழந்தைகள், எனது இந்த நற்குணத்தைப் பயன்படுத்துவதில்லை, அல்லது, எனக்கு இந்தச் சக்தி உள்ளது, எனது புத்தி மிகவும் நல்லது, ஆனால் அதைப் பயன்படுத்துவதில்லை எனச் சிந்திப்பதுடன் சாதாரணமான மொழியில் இவ்வாறு பேசுகிறார்கள். எனது என்பது எங்கிருந்து வந்தது? எனது எனச் சொல்வது, அதை அழுக்காக்குவதாகும். பக்தியிலும் அவர்கள் 63 பிறவிகளாகத் தொடர்ந்து இந்தக் கற்பித்தலைக் கொடுக்கிறார்கள்: எனது என்று சொல்லாதீர்கள், உங்களுடையது எனச் சொல்லுங்கள். எவ்வாறாயினும், அந்த முறையில் நீங்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஞானப் பாதையிலும், உங்களுடையது எனச் சொல்லிவிட்டு, அதை எனது எனக் கருதுவது ஏமாற்றுவதாகும். அது இங்கே செயல்படாது. ஆகவே, இறைவனின் புனித பிரசாதத்தை உங்களுடையது எனக் கருதுவது என்றால், அகங்காரத்துடன் இருத்தல் மற்றும் அவமரியாதை செய்தல் என்று அர்த்தம். பாபா, பாபா என்ற வார்த்தையை ஒருபோதும் மறக்காதீர்கள். பாபா சக்தியைக் கொடுத்துள்ளார். பாபா புத்தியைக் கொடுத்துள்ளார். இது பாபாவின் பணி. இது பாபாவின் நிலையம். அனைத்தும் பாபாவிற்கே சொந்தமானது. இது எனது நிலையம், நான்தான் இந்த நிலையத்தை உருவாக்கினேன், எனவே இதில் எனக்கே உரிமை உள்ளது என நினைக்காதீர்கள். எனது என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? அது உங்களுடையதா? நீங்கள் கவனமாக ஒரு பொதியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துள்ளீர்களா? பல குழந்தைகள் இத்தகைய போதையைக் கொண்டுள்ளார்கள்: நானே நிலையத்திற்காக இந்தக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தேன். எனவே, இதில் எனக்கு உரிமையுள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் யாருடைய நிலையத்தைக் கட்டினீர்கள்? இது பாபாவின் நிலையம், அப்படித்தானே? நீங்கள் அதை பாபாவிற்கு அர்ப்பணித்திருந்தால், எவ்வாறு அது உங்களுடையதாகும்? எவ்வாறு அங்கே எனது என்பது வரமுடியும்? உங்களின் புத்தி மாறும்போது, இது எனது என நீங்கள் சொல்கிறீர்கள்;. எனது, எனது எனச் சொல்வதன் மூலம் நீங்கள் அதை அழுக்காக்கிவிட்டீர்கள். நீங்கள் மீண்டும் அழுக்காக விரும்புகிறீர்களா? நீங்கள் ஒரு பிராமணர் ஆகியபோது, உங்களின் பிராமண வாழ்க்கைக்காக நீங்கள் தந்தைக்குச் செய்த முதல் சத்தியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? புதியவர்கள் சத்தியம் செய்தீர்களா? அல்லது பழையவர்கள் மட்டும்தான் சத்தியம் செய்தார்களா? இப்போது வந்துள்ள புதியவர்களான நீங்களும் பழையவர்களாகவே வந்துள்ளீர்கள், இல்லையா? நீங்கள் புத்தியில் நம்பிக்கை வைத்த ரூபத்தைச் சம்பூரணம் ஆக்கியபின்னரே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? எனவே, மனம், உடல், புத்தி, செல்வம் அனைத்தும் உங்களுடையதே என்பதே எல்லோருடைய முதல் சத்தியமாகும். நீங்கள் எல்லோரும் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்களா?

நீங்கள் இப்போது ஒரு சத்தியத்தைச் செய்யப் போவதாக இருந்தால், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! எதிர்காலத்திற்காக எதையாவது வைக்க வேண்டும், எவ்வாறு நாங்கள் எல்லாவற்றையும் தந்தைக்குக் கொடுப்பது? நாங்கள் கொஞ்சத்தை எங்களுக்கென்று வைக்க வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு நினைப்பது விவேகமான செயல் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் எதையாவது உங்களுக்கென்று வைத்திருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்! எங்களை யார் பார்த்தது? இத்தகைய சனக்கூட்டத்திற்குள் யார் என்னைப் பார்க்கப் போகின்றார்கள்? எனப் பின்னர் சொல்லாதீர்கள். பாபாவிடம் மிகத் தெளிவானதொரு தொலைக்காட்சி உள்ளது. அதில் இருந்து உங்களை மறைக்க முடியாது. ஆகவே, கவனமாக யோசித்த பின்னர் சிறிதளவை ஒதுக்கி வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்யுங்கள். பாண்டவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் கொஞ்சத்தை ஒதுக்கி வைக்க வேண்டுமா? இதைப் பற்றி மிகக்கவனமாகச் சிந்தியுங்கள். சிறிதளவை ஒதுக்கி வைக்க விரும்புவர்கள், இப்போது உங்களின் கைகளை உயர்த்துங்கள்! நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். இல்லாவிட்டால், உங்களுக்கு இந்த நேரமும் இந்த ஒன்றுகூடலும் நீங்கள் ஆமோதித்ததும் பின்னர் காட்டப்படும். ஒருபோதும் எனது என்ற எந்தவொரு உணர்வும் வர அனுமதிக்காதீர்கள். நீங்கள் பாப் (தந்தை) எனச் சொல்லும்போது, பாவம் முடிந்துவிடும். நீங்கள் பாப் எனச் சொல்லாவிட்டால், பாவம் செய்யப்படும். நீங்கள் பாவத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாகும்போது, உங்களின் புத்தி செயல்படாது. ஒருவர் எவ்வளவுதான் உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்தாலும், இல்லை, இதுதான் சரி, இதுதான் நிகழவேண்டும், இதையே செய்ய வேண்டும் என நீங்கள் சொல்வீர்கள். தந்தைக்கும் கருணை பிறக்கும். ஏனென்றால், நீங்கள் அந்த வேளையில் பாவத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பீர்கள். தந்தையை மறக்கும்போது, பாவம் செய்யப்படும். நீங்கள் பாவத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன சொல்கிறீர்கள் என்பதையே நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். சதா ஞானத்துடனான உணர்வில் இருங்கள். எந்தவொரு பாவத்தின் விசைக்கும் உட்படாதீர்கள். இடையில், மாயையின் இந்த அலை வந்துவிடும். புதியவர்களான நீங்கள் உங்களை இதிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எனது, எனது என்ற எந்தவிதமான உணர்விலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஆத்மாக்கள் சிறிது பழையவர்கள் ஆகும்போது, எனது, எனது என்ற உணர்வின் மாயை அதிகளவில் அவர்களுக்கு ஏற்படுகிறது. எனது அபிப்பிராயங்கள். எவ்வாறாயினும், புத்தியே உங்களுடையதாக இல்லாதபோது, உங்களின் அபிப்பிராயம் என்பது எங்கிருந்து வந்தது? எனவே, எனவே, சேகரிப்பதற்கான வழிமுறை என்ன என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அதைப் பணியில் பயன்படுத்துங்கள். அதைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். உங்களின் இறை சம்ஸ்காரங்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். வீணானவற்றின் சம்ஸ்காரங்கள் போய்விடும். ஒரு பணியில் உங்களின் இறை சம்ஸ்காரங்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், அவை உங்களின் பெட்டகத்தில் இருக்கும். ஆனால் பழைய சம்ஸ்காரங்களே தொடர்ந்து வேலை செய்யும். பலருக்கும் எல்லாவற்றையும் ஒரு வங்கியில் அல்லது தமது அலுமாரிகளில் வைத்திருக்கும் பழக்கம் உள்ளது. அவர்களிடம் பல அழகான ஆடைகள் உள்ளன. பணம் உள்ளது. பொருட்கள் உள்ளன. எனினும் அவர்கள் பழைய பொருட்களையே பாவிப்பார்கள். அவர்கள் தமது பழைய பொருட்களையே விரும்புவார்கள். அதனால் அலுமாரியில் உள்ளவை அலுமாரியிலேயே இருக்கும். அவர்கள் பழையவற்றையே பயன்படுத்துவார்கள். உங்களின் பழைய சம்ஸ்காரங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு, உங்களின் புத்தியெனும் பெட்டகத்தில் இறைசம்ஸ்காரங்களைப் பூட்டி வைக்காதீர்கள். அவற்றை ஒரு பணிக்காகப் பயன்படுத்துங்கள். அவற்றைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். எனவே, நீங்கள் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் எந்தளவிற்குப் பயன்படுத்தினீர்கள் என்பதற்கு ஓர் அட்டவணை வைத்திருங்கள். எதையாவது பயனுள்ள முறையில் பயன்படுத்துவது என்றால், அதைப் பயன்படுத்துதல், அதை அதிகரித்தல் என்று அர்த்தம். உங்களின் மனதாலும் உங்களின் வார்த்தைகளாலும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் செயல்களாலும் உங்களின் மேன்மையான சகவாசத்தாலும் உங்களின் அதிகபட்ச சக்திவாய்ந்த மனோபாவத்தாலும் எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். எனது மனோபாவம் எப்போதும் மிகவும் நல்லது என நினைக்காதீர்கள். எனவே, அதில் எவ்வளவு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டது? எனது சம்ஸ்காரங்கள் எப்படியும் அமைதியானவை. எனவே, அவற்றில் எவ்வளவு தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டன? நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினீர்களா? அவற்றை ஒரு பணியில் பயன்படுத்தும் வழிமுறையை ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் இலகுவாக முழுமை ஆகுவதன் வெற்றியை அனுபவம் செய்வீர்கள். எதையாவது பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே, வெற்றிக்கான திறவுகோல் ஆகும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களுடன் மட்டும் சந்தோஷப்படாதீர்கள்: நான் மிகவும் நல்லவன், குணவான். என்னால் மிக நன்றாகச் சொற்பொழிவு ஆற்ற முடியும். நான் மிக நல்லதொரு ஞானி ஆத்மா. எனது யோகம் மிகவும் நல்லது. எனவே, அது அந்தளவு நல்லதென்றால், அதைப் பயன்படுத்துங்கள்! அதைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். அதை ஒரு பணிக்காகப் பயன்படுத்தி, அதை அதிகரியுங்கள். எந்தவித முயற்சியும் இல்லாமல் அது தொடர்ந்து அதிகரிக்கும். அதன்பின்னர் நீங்கள் அதைச் சௌகரியமாக 21 பிறவிகளுக்குப் பயன்படுத்துவீர்கள். அங்கு நீங்கள் எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டியதில்லை.

இது ஓர் எல்லையற்ற ஒன்றுகூடலாகும். (ஓம் சாந்தி பவன் முற்றாக நிரம்பியுள்ளது. அதனால், சிலர் தியான மண்டபத்திலும் ஹிஸ்ரி மண்டபத்திலும் அமர்ந்திருந்தார்கள்.) புராணங்களில் உங்களின் ஞாபகார்த்தத்தின் புகழ் உள்ளது: முதலில் ஒரு குவளையில் நீர் ஊற்றப்பட்டது. பின்னர் ஒரு பானையில் ஊற்றப்பட்டது. பின்னர் அது ஒரு குளத்தில் ஊற்றப்பட்டது. அதன்பின்னர் அந்தக் குளத்தில் இருந்து அந்த நீர் ஆற்றுக்குள் சென்றது. அது இறுதியாக எங்கே சென்றது? கடலுக்குள். எனவே, இந்த ஒன்றுகூடல் முதலில் ஹிஸ்ரி மண்டபத்தில் இடம்பெற்றது. பின்னர் தியான மண்டபத்தில் இடம்பெற்றது. இப்போது அது ஓம் சாந்தி பவனில் இடம்பெறுகிறது. இப்போது, அது எங்கே இடம்பெறப் போகிறது? எவ்வாறாயினும், ஒரு பௌதீக சந்திப்பு இல்லாமல் உங்களால் அவ்யக்த சந்திப்பை அனுபவம் செய்ய முடியாது என்பது இதன் அர்த்தமல்ல. காலத்திற்கேற்ப அவ்யக்த சந்திப்பின் பயிற்சியை அதிகரிக்க வேண்டும். நீங்கள் அதை அதிகரிக்க வேண்டும். தாதிகள் கருணைநிறைந்தவர்களாகி, புதியவர்களிடம் விசேடமான கருணை கொண்டுள்ளார்கள். எவ்வாறாயினும், அவ்யக்த் என்பதன் அனுபவத்தை அதிகரியுங்கள். அது சரியான நேரத்தில் உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும். பாருங்கள், பாப்தாதா இப்போதும் புதிய குழந்தைகளுக்காக பௌதீக சந்திப்பின் பாகத்தை நடிக்கிறார். ஆனால் எதுவரை இது தொடரும்?

எனவே, நீங்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறீர்களா? வெளியிலே தங்குவது உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா? இதுவும் நாடகத்தில் ஒரு பாகமே. அபு முழுவதும் உங்களுக்குச் சொந்தமாகும் என நீங்கள் சொல்கிறீர்கள். இத எவ்வாறு நிகழும்? எனவே, அனைத்திற்கும் முதலில், குறைந்தபட்சம் உங்களின் காலடிகளை அங்கே பதியுங்கள்! அப்போது தர்மசாலைகள் என்று அழைக்கப்படும் இடங்கள் எல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும். பாருங்கள், வெளிநாடுகளில், இது ஏற்கனவே நிகழ ஆரம்பித்துவிட்டது. அங்கு தேவாலயங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால், அவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்காக பிரம்மாகுமாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள். எனவே, மக்கள் தங்களிடம் உள்ள பெரிய இடங்களைத் தம்மால் பராமரிக்க முடியாமையினால், நீங்கள் பயன்படுத்துவதற்காக ஒப்படைக்கிறார்கள். எனவே, பிராமணர்களின் காலடி ஒவ்வொரு இடத்திலும் பதிகிறது. இதில் ஓர் அர்த்தமும் உள்ளது. பிராமணர்கள் தமது பாதங்களை அங்கே பதிக்கும் ஒரு பாகத்தை நாடகத்தில் நடிக்கிறார்கள். எனவே, இந்த அபு முழுவதும் உங்களுடையது ஆகியபின் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்களே இதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர்களே அதை உங்களிடம் ஒப்படைப்பார்கள். எங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள், ஆசிரமங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர்கள் சொல்வார்கள். ஆகவே, எந்தவொரு வேளையிலும் நீங்கள் என்ன பாகத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாகத்தை சந்தோஷத்துடன் நடியுங்கள். அச்சா.

எங்கும் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதுடன் ஞான இரத்தினங்களைக் கிரகிக்கும் சாதகப் பறவைகளுக்கும், சூட்சுமமான வடிவிலும் பௌதீகமான வடிவிலும் ஒரு சந்திப்பைக் கொண்டாடும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், சகல பொக்கிஷங்களையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தி வெற்றி சொரூபங்கள் ஆகும் ஆத்மாக்களுக்கும், எல்லையற்ற விருப்பமின்மையுடன், சதா எனது பாபா என்ற உணர்வைக் கொண்டிருப்பதுடன், எனது என்ற எந்தவிதமான எல்லைக்குட்பட்ட உணர்வின் சுவடேனும் இல்லாத ஆத்மாக்களுக்கும் மிகச்சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் சம்பூரணம் ஆகுகின்ற வெற்றியை சதா அடைகின்ற குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பு, நினைவு, நமஸ்காரங்கள்.

பாப்தாதா தாதிகளுடன் பேசுகிறார்: எப்போதும் புதிய காட்சிகள் இருக்க வேண்டும்தானே? இதுவும் நாடகத்தில் ஒரு புதிய காட்சியே. இது மீண்டும் நிகழ்கிறது. இந்த மண்டபமும் சிறியதாகிவிடும் என நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா? எல்லா வேளையும் ஒரே காட்சி நிகழ்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சிலவேளைகளில் புதிய காட்சியைக் காண விரும்புவீர்கள். இதுவும் ஆன்மீகச் சிறப்புத்தானே? இந்த ஆத்மாக்கள் எல்லோருடைய எண்ணமும் நிறைவேறியுள்ளது. இதனாலேயே, இந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது. நீங்கள் வரலாம்! என உங்களுக்கு இங்கிருந்து அனுமதி வழங்கப்பட்டது. எனவே, ஒருவர் என்ன செய்வார்? இப்போது, புதியவர்கள் அதிகரிப்பார்கள். பழையவர்கள் வயதானவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் உற்சாகத்துடன் வந்தீர்கள். அதற்கேற்ப உங்களை நிலைநிறுத்திக் கொண்டீர்கள். அது நல்லதே. இது பெரியதாகவே இருக்க வேண்டும். இது சிறியதாக ஆகப் போவதில்லை. உலக உபகாரி என்ற பட்டம் இருப்பதனால், உலகுடன் ஒப்பிடும்போது, இது எதுவுமேயில்லை. விரிவாக்கம் இடம்பெறப் போகிறது. வழிமுறையும் புதியதாகவே இருக்கும். வெவ்வேறு வழிமுறைகள் இருக்கப் போகின்றன. இப்போது, மனோபாவம் சக்திவாய்ந்தது ஆகிவிடும். தபஸ்யா செய்வதன் மூலம் உங்களின் மனோபாவம் சக்திவாய்ந்தது ஆகும்போது, உங்களின் மனோபாவத்தால், ஆத்மாக்களின் மனோபாவங்களும் இயல்பாகவே மாறிவிடும். அச்சா. நீங்கள் எல்லோரும் சேவை செய்வதனால் களைப்படைவதில்லைத்தானே? நீங்கள் சந்தோஷமாக இங்கே வருகிறீர்கள். எப்போதும் சந்தோஷமே உள்ளது. அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் மேன்மையான கர்மங்களைச் செய்வதன் மூலம் உங்களின் ஆசீர்வாதக் களஞ்சியத்தைச் சேமித்து, காட்சிகளை அருளும் உயிர்வாழும் ரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் என்ன செயல்களைச் செய்தாலும், ஆசீர்வாதங்களைப் பெற்று, ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். மேன்மையான செயல்களைச் செய்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே எல்லோருடைய ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள். எல்லோருடைய உதடுகளில் இருந்தும் இது வெளிப்படும்: இவர் மிகவும் நல்லவர். ஆஹா! உங்களின் செயல்கள் ஒரு ஞாபகார்த்தம் ஆகிவிடும். நீங்கள் என்ன செயலைச் செய்தாலும், சந்தோஷத்தைப் பெற்று, சந்தோஷத்தைக் கொடுங்கள். ஆசீர்வாதங்களைப் பெற்று, ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். நீங்கள் சங்கமயுகத்தில், ஆசீர்வாதங்களைப் பெற்று ஆசீர்வாதங்களைப் கொடுப்பதனால் மக்கள் தொடர்ந்து உங்களின் உயிரற்ற விக்கிரகங்களில் இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். அத்துடன் நீங்கள் இப்போதும் காட்சிகளை அருளும் உயிர்வாழும் ரூபங்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணுங்கள். உங்களின் சோம்பேறித்தனம் முடிவடைந்துவிடும்.