12.07.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    22.02.86     Om Shanti     Madhuban


ஆன்மீக சேவை, சுயநலமற்ற சேவை.


இன்று, சகல ஆத்மாக்களுக்கும் உலக உபகாரியான தந்தை, சேவையில் தனது சகபாடிகளான சேவையாளர் குழந்தைகளைப் பார்க்கிறார். ஆரம்பத்தில் இருந்தே, சேவையாளர் குழந்தைகள் பாப்தாதாவின் சகபாடிகளாக இருக்கிறார்கள். பாப்தாதா குழந்தைகளை மறைமுகமான கருவிகள் ஆக்கினார். இறுதிவரை உலகச் சேவை செய்வதற்காக இப்போது அவர்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில், தந்தை பிரம்மாவும் பிராமணக் குழந்தைகளும் சேவைக்காக மறைமுகமான கருவிகளாகவே இருந்தார்கள். இப்போது, சேவையாளர் குழந்தைகளின் சக்தி சேனையும் பாண்டவ சேனையும் உலகின் முன்னால் புலப்படத்தக்க முறையில் பணியைச் செய்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளில் மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே சேவைக்கான அன்பு காணப்படுகிறது. அது இறுதிவரை தொடரும். பிராமண வாழ்க்கை என்பது சேவைக்கான வாழ்க்கை ஆகும். சேவை இல்லாமல் பிராமண ஆத்மாக்களால் உயிர்வாழ முடியாது. உங்களை மாயையிடமிருந்து பாதுகாத்து, உயிர்வாழ்வதற்கான மேன்மையான வழிமுறை, சேவை மட்டுமே. சேவை உங்களை யோகியுக்த் ஆக்குகிறது. ஆனால், என்ன சேவை? ஒன்று, வாயினால் செய்யும் சேவை. நீங்கள் செவிமடுத்தவற்றைக் கூறும் சேவை. மற்றையது, உங்களின் மனதால் பேசும் சேவை. நீங்கள் செவிமடுத்த இனிய வார்த்தைகளின் சொரூபம் ஆகுதல். உங்களின் ரூபத்தினால் சேவை செய்தல். சுயநலமற்ற சேவை, தியாகம் மற்றும் தவத்தால் செய்யப்படும் சேவை. எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கு அப்பாற்பட்ட சுயநலமற்ற சேவை. இது இறை சேவை, ஆன்மீகச் சேவை என்று அழைக்கப்படுகிறது. வாயினால் மட்டும் செய்யும் சேவை, வெறுமனே ஒருவரைக் களிப்படையச் செய்வதற்கான சேவை எனப்படுகிறது. அனைவரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, மனதால் செய்யும் சேவையும் வாயினால் செய்யும் சேவையும் ஒரே வேளையில் இடம்பெற வேண்டும். மனதினால் சேவை செய்தல் என்றால், மன்மனாபவ என்ற நிலையில் இருந்தவண்ணம் வார்த்தைகளால் சேவை செய்வதாகும்.

இன்று, பாப்தாதா தனது வலது கரமான சேவையாளர் குழந்தைகளையும், தனது இடது கரமான சேவையாளர் குழந்தைகளையும் பார்த்தார். இரண்டு வகையினரும் சேவையாளர்களே. ஆயினும், வலதிற்கும் இடதிற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. வலது கை எப்போதும் ஒரு சுயநலமற்ற சேவையாளராக இருப்பார். இடதுகை, இந்தப் பிறவியில் சேவைக்கான ஏதாவது எல்லைக்குட்பட்ட பழத்தை உண்ணும் ஆசையுடன் சேவைக்காகக் கருவி ஆகுவார். அவர் மறைமுகமான சேவையாளர். மற்றவரோ, பெயருக்காகச் சேவையாளர். ஒரு கணம் அவர் சேவை செய்வார். அடுத்த கணம், மிகவும் நல்லது! மிகவும் நல்லது! என்ற பெயரைச் சம்பாதிப்பார். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது எதையாவது செய்து, உடனடியாக அதன் பழத்தை உண்டுவிடுகிறீர்கள். உங்களின் கணக்கில் நீங்கள் சேமிப்பதில்லை. மறைமுகமான சேவையாளர் என்றால், சுயநலமற்ற சேவையாளர் என்று அர்த்தம். ஒன்று, சுயநலமற்ற சேவையாளர். மற்றையது, பெயரை விரும்புகின்ற சேவையாளர். ஒரு மறைமுகமான சேவையாளர், தற்சமயம் பெயரளவில் மறைமுகமாக இருந்தாலும், அவர் சதா வெற்றியின் சந்தோஷத்தால் நிறைந்திருப்பார். நான் அனைத்தையும் செய்கிறேன், ஆனால் எனது பெயர் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், பகட்டினால் சேவையில் புகழ் பெறுபவர்களின் பெயர்கள் அதிகளவில் குறிப்பிடப்படுகின்றன எனச் சில குழந்தைகள் நினைப்பார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறில்லை. சுயநலமற்ற முறையில் அழியாத பெயரைச் சம்பாதிப்பவர்களின் இதயங்களின் ஒலியானது, இதயத்தைச் சென்றடையும். அதை மறைக்க முடியாது. உண்மையான சேவையாளராக இருப்பவரின் பிரகாசம் நிச்சயமாக அவரின் முகத்திலும் அவரின் ரூபத்திலும் புலப்படும். பெயருக்காகச் சேவையாளராக இருப்பவர், இங்கு தனது பெயரைச் சம்பாதித்தால், அது எதிர்காலத்திற்காகச் செய்யப்பட்டிருந்தாலும், அவர் அந்தப் பழத்தை உண்டு முடித்து விடுகிறார். அதனால் அவர் எதிர்காலத்தை மேன்மையானதாக அல்லது அழியாததாக ஆக்கவில்லை. இதனாலேயே, பாப்தாதாவிடம் சகல சேவையாளர்களினதும் முழுமையான பதிவேடுகளும் உள்ளன. தொடர்ந்து சேவை செய்யுங்கள். பெயரைச் சம்பாதிப்பதைப் பற்றி நினைக்காதீர்கள். சேமிப்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். அழியாத பலனின் உரிமையைப் பெறுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் என்றும் நிலைத்திருக்கும் ஆஸ்திக்காகவே இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் சேவையின் பழத்தைத் தற்காலிகமான காலத்திற்கு உண்டால், என்றென்றும் நிலைத்திருக்கும் ஆஸ்திக்கான உரிமை குறைந்துவிடும். ஆகவே, தற்காலிகமான ஆசைகளில் இருந்து விடுபட்ட ஒரு சுயநலமற்ற சேவையாளராக இருங்கள். வலது கரமாகித் தொடர்ந்து சேவையில் முன்னேறுங்கள். மறைமுகமான தானங்கள் செய்வதற்கும், மறைமுகமான சேவை செய்வதற்கும் பெரிய முக்கியத்துவம் உள்ளது. இத்தகையதோர் ஆத்மா எப்போதும் தனக்குள் நிறைந்திருப்பார். அவர் கவலையற்ற சக்கரவர்த்தியாகி, தனது பெயரை அல்லது புகழைப் பற்றி அக்கறைப்பட மாட்டார். அவர் இதில் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பார். அதாவது, அவர் எப்போதும் சுயமரியாதை என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். எல்லைக்குட்பட்ட மரியாதை என்ற சிம்மாசனத்தில் அல்ல. அவர் சுயமரியாதை சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அத்துடன் என்றென்றும் நிலைத்திருக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவர் அநாதியான, எல்லையற்ற பேறுகளின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இதுவே உலக உபகாரி சேவையாளராக இருத்தல் எனப்படுகிறது. உலக சேவை என்ற பணியில் சாதாரணமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம், ஒருபோதும் வெற்றி பெறுவதில் பின்னடையாதீர்கள். துறவறத்தினாலும் சேவையாலும் தொடர்ந்து வெற்றி பெறுவதுடன், தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

ஒரு சேவையாளர் என யார் அழைக்கப்படுகிறார்? எனவே, நீங்கள் அனைவரும் சேவையாளர்களா? உங்களின் ஸ்திதியைத் தளம்பச் செய்யும் எந்தவொரு சேவையும் சேவையே இல்லை. சேவையில் அதிகளவு தளம்பல் உள்ளதெனச் சிலர் நினைக்கிறார்கள். சேவையில் தடைகள் உள்ளன. சேவையே உங்களைத் தடைகளில் இருந்து விடுவிக்கிறது. எவ்வாறாயினும், தடையின் ரூபத்தை எடுக்கும் எந்தவொரு சேவையும் சேவை இல்லை. அதை உண்மையான சேவை என்று அழைக்க முடியாது. அதைப் பெயரளவிலான சேவை என்றே அழைக்க முடியும். உண்மையான சேவை என்பது உண்மையான வைரம் ஆகும். உண்மையான வைரத்தின் பிரகாசத்தை எப்படி ஒருபோதும் மறைக்க முடியாதோ, அவ்வாறே, உண்மையான சேவையாளர்களும் உண்மையான வைரங்களே. செயற்கை வைரத்தின் பிரசாகம் எத்தனை அழகானதாக இருந்தாலும், எது பெறுமதிவாய்ந்தது? நிஜ வைரத்திற்கே மதிப்புள்ளது. செயற்கை வைரத்திற்கு மதிப்புக் கிடையாது. உண்மையான சேவையாளர்கள் விலைமதிப்பற்ற இரத்தினங்கள் ஆவார்கள். உண்மையான சேவையாளருக்குப் பல பிறவிகளுக்கு மதிப்பு உள்ளது. பெயரளவில் மட்டும் செய்யப்படும் சேவை தற்காலிகமான பிரகாசத்தையே காட்டும். ஆகவே, சதா சேவையாளராகி, அந்தச் சேவையால் தொடர்ந்து உலகிற்கு நன்மை செய்யுங்கள். சேவையின் முக்கியத்துவம் என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? எவரும் மற்றவரை விட சளைத்தவர் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் தனிப்பட்ட சிறப்பியல்புடன் கூடிய விசேடமான சேவையாளர் ஆவீர்கள். உங்களை எந்தவிதத்திலும் குறைந்தவராகக் கருதாதீர்கள். எதையாவது செய்தபின்னர், உங்களுக்காக ஒரு பெயரைச் சம்பாதிப்பதற்கான எந்தவிதமான ஆசையும் வைத்திருக்காதீர்கள். உங்களின் சேவையைத் தொடர்ந்து உலக நன்மைக்காக அர்ப்பணியுங்கள். பொதுவாக, பக்தி மார்க்கத்தில், மறைமுகமான தானிகள், புண்ணியாத்மாக்கள், எப்போதும் அனைத்தும் அனைவரின் நன்மைக்காக என்றே நினைப்பார்கள். அதில் ஏதாவது தமக்கும் இருக்க வேண்டும் அல்லது தாமும் ஏதாவது பலனைப் பெற வேண்டும் என அவர்கள் நினைக்க மாட்டார்கள். இல்லை. அனைவரும் அதன் பலனைப் பெற வேண்டும். அனைவருக்காகவும் சேவை செய்வதற்காக அவர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். தங்களுக்காக அவர்களிடம் எந்தவிதமான ஆசைகளும் இருக்காது. எனவே, இந்த முறையில் அனைவருக்கும் சேவை செய்யுங்கள். அனைவருக்கும் நன்மை என்ற வங்கியில் தொடர்ந்து சேமியுங்கள். அப்போது நீங்கள் அனைவரும் என்னவாகுவீர்கள்? சுயநலமற்ற சேவையாளர்கள். இப்போது உங்களை எவரும் கேட்கவில்லை என்றாலும், அவர்கள் உங்களைப் பற்றி 2500 வருடங்களுக்குக் கேட்பார்கள். ஒருவர் உங்களைப் பற்றி ஒரு பிறவியில் கேட்பதா அல்லது 2500 வருடங்களுக்குக் கேட்பதா, எது பெரியது? அது பெரியது, இல்லையா? எல்லைக்குட்பட்ட எண்ணங்களுக்கு அப்பாற்பட்டிருங்கள். எல்லையற்ற சேவையாளர் ஆகுங்கள். தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கவலையற்ற சக்கரவர்த்தி ஆகித் தொடர்ந்து, சங்கமயுகத்தின் சந்தோஷத்திலும் களிப்பிலும் கொண்டாடுங்கள். ஏதாவது சேவை உங்களைச் சந்தோஷமற்றவர் ஆக்கினால், அது சேவை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏதாவது உங்களைத் தளம்பல் அடையச் செய்தால் அல்லது உங்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கினால், அது சேவை இல்லை. சேவை என்பது உங்களைப் பறக்கச் செய்வது. சேவை உங்களைத் துன்பமற்ற உலகின் சக்கரவர்த்தி ஆக்குகிறது. நீங்கள் இத்தகைய சேவையாளர்கள், இல்லையா? கவலையற்ற சக்கரவர்த்திகள். துன்பமற்ற உலகின் சக்கரவர்த்திகள். மேலும், இத்தகைய ஆத்மாக்களை வெற்றி பின்தொடரும். அவர்கள் வெற்றியின் பின்னால் துரத்திச் செல்ல வேண்டியதில்லை. வெற்றி எப்பேதும் அவர்களைப் பின்தொடரும். அச்சா. நீங்கள் எல்லையற்ற சேவைக்கான திட்டங்களைச் செய்கிறீர்கள், இல்லையா? எல்லையற்ற ஸ்திதியுடன் எல்லையற்ற சேவைக்காகச் செய்யப்படும் திட்டங்கள் இலகுவாக வெற்றி பெறுகின்றன. (இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகள் அமைதிக்கான மில்லியன் நிமிடங்கள் என்ற ஆத்மாக்களிடமிருந்து அமைதிக்கான சில நிமிடங்களைத் தானம் செய்யும்படி கேட்பதற்கான ஒரு திட்டத்தைச் செய்துள்ளார்கள்.)

உலகை ஒரு மகாதானி ஆக்குவதற்காக நீங்கள் செய்திருக்கும் இந்தத் திட்டம் நல்லது. அவர்கள் அதை அதிக தேவை என்பதனால் செய்தாலென்ன அல்லது அன்புடன் செய்தாலென்ன, அமைதிக்கான சம்ஸ்காரங்கள் குறுகிய காலத்திற்கு வெளிப்படும். அவர்கள் ஒரு நிகழ்ச்சியைப் பின்பற்றினாலும், குறைந்தபட்சம் அமைதியின் சம்ஸ்காரங்கள் வெளிப்படும். ஏனெனில், ஆத்மாக்களின் ஆதி தர்மம் அமைதியே. நீங்கள் அமைதிக் கடலின் குழந்தைகள். நீங்கள் அமைதிதாமத்தின் வாசிகளும் ஆவீர்கள். எனவே, நிகழ்ச்சிக்கேற்ப அவர்கள் அதை வெளிக் கொண்டு வந்தாலும், அந்த அமைதி சக்தியானது அவர்களைத் தொடர்ந்து கவரும். ஒருவர் இனிமையான ஒன்றை ஒருதடவை சுவைத்திருந்தாலும், அவர்கள் இனிப்பான எதையும் பெற்றாலும் பெறாவிட்டாலும், அவர்கள் உண்ட அந்த இனிப்பின் சுவை அவர்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கும். எனவே, இதுவும் அமைதித் தேனைச் சுவைப்பதைப் போன்றதே ஆகும். ஆகவே, அமைதிக்கான இந்த சம்ஸ்காரங்கள் இயல்பாகவே தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டும். ஆகவே, படிப்படியாக ஆத்மாக்களில் அமைதியை விழித்தெழச் செய்தல் நிகழ வேண்டும். இதுவும் அந்த ஆத்மாக்களுக்கு அமைதித் தானத்தைக் கொடுப்பதுடன், அவர்களையும் தானிகள் ஆக்குவதாகும். எந்த முறையில் சாத்தியமோ, அவ்வாறு அந்த ஆத்மாக்கள் அமைதியை அனுபவம் செய்ய வேண்டும் என்பதே உங்கள் அனைவரினதும் தூய எண்ணமாகும். ஆத்மாக்களின் அமைதியிலேயே உலக அமைதியும் தங்கியுள்ளது, அல்லவா? இயற்கையும் மனிதர்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. ஆத்மாக்கள் அமைதியை உணரும்போது, இயற்கையின் கூறுகளும் அமைதிநிறைந்தவை ஆகும். அவர்கள் அதை என்ன முறையில் செய்தாலும் அது பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்கள் அமைதியின்மைக்கு அப்பால் செல்வார்கள். ஒரு நிமிடத்தின் அமைதியானது தொடர்ந்து அவர்களை மீண்டும் மீண்டும் கவரும். ஆகவே, நீங்கள் நல்லதொரு திட்டத்தைச் செய்திருக்கிறீர்கள். இது மக்களுக்குச் சிறிதளவு ஒட்சிசனைக் கொடுத்து, அவர்களை அமைதியாக மூச்சு விடச் செய்வது போன்றதாகும். அவர்கள் உண்மையில் அமைதி என்ற மூச்சு இல்லாமல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, இந்தத் திட்டம் ஒட்சிசனைப் போன்றது. சிலர் சிறிதளவு மூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள். சிலரை ஒட்சிசனால் புத்துணர்ச்சி பெறச் செய்ய முடியும். எனவே, அனைத்திற்கும் முதலில், நீங்கள் அனைவரும் எல்லா வேளையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் அமைதி இல்லங்களாகி, அமைதிக் கதிர்களைப் பரப்ப வேண்டும். அதன்பின்னர், உங்களின் அமைதிக்கதிர்களின் உதவியாலும் உங்களின் அமைதி எண்ணங்களாலும், தாமும் அதை எவ்வாறாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். எவ்வாறாயினும், உங்கள் அனைவரினதும் அமைதி அதிர்வலைகள் அவர்களைச் சரியான வழிமுறையை நோக்கி ஈர்க்கும். இதுவும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கைக் கதிர்களைக் காட்டுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். இது நம்பிக்கையிழந்தவர்களில் நம்பிக்கையை உருவாக்குவதற்கான வழிமுறை ஆகும். எந்தளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு உங்களுடன் தொடர்பில் வருபவர்களுக்கு, நீங்கள் நிச்சயமாக ஆத்ம உணர்வு அமைதியைப் பற்றியும் மன அமைதியைப் பற்றியும் சில வார்த்தைகளில் கூற முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், அனைவரும் நிச்சயமாகத் தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் அதைக் கடிதங்களின் மூலம் செய்தாலும், அவர்கள் உங்களுடன் தொடர்பில் வருவார்கள், இல்லையா? அவர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள், இல்லையா? எனவே, எந்தளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு சில வார்த்தைகளில் அமைதியின் அர்த்தத்தைத் தெளிவுபடுத்த முயற்சி செய்யுங்கள். ஒரு நிமிடத்திலும் ஓர் ஆத்மாவிற்கு விழிப்புணர்வு ஏற்பட முடியும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை விரும்புகிறீர்கள், அல்லவா? மற்றவர்கள் பெயரளவிலேயே வேலை செய்கிறார்கள். ஆனால் நீங்களோ உண்மையான பணியைச் செய்கிறீர்கள். நீங்களே அமைதித் தூதுவர்களாக இருப்பதனால், அமைதித் தூதுவர்களிடமிருந்து இந்த ஒலியானது எங்கும் எதிரொலிக்கும். அமைதி தேவதைகள் தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவார்கள். இதை உங்களுக்கிடையே கலந்துரையாடுங்கள். அமைதி என்ற வார்த்தையுடன் சேர்க்கக்கூடிய ஒரு வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். ஏனைய உலக விடயங்களில் இருந்து வேறுபட்ட ஒரு வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். உலகிலுள்ள மக்கள் அமைதிப் பேரணி அல்லது அமைதி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அமைதி என்ற வார்த்தையுடன், உலகளாவிய முறையில் ஒரு விசேடமான வார்த்தை இருக்க வேண்டும். அதை மக்கள் கேட்டவுடன், இது வேறுபட்ட ஒரு விடயம் என்பதை அவர்கள் உணர வேண்டும். எனவே, எதையாவது கண்டுபிடியுங்கள். எவ்வாறாயினும், இது நல்ல விடயமே. இந்த நிகழ்ச்சி தொடரும்வரைக்கும், என்ன நிகழ்ந்தாலும், குறைந்தபட்சம் அந்தக் காலப்பகுதியில், நீங்கள் அமைதியற்றவர்கள் ஆகக்கூடாது. அல்லது மற்றவர்களை அமைதியற்றவர்கள் ஆக்கக்கூடாது. நீங்கள் அமைதியைக் கைவிடக்கூடாது. அனைத்திற்கும் முதலில், பிராமணர்களான நீங்கள், உங்கள் மீது ஒரு கைக்காப்பினைக் கட்டிக் கொள்ள வேண்டும். (இந்தச் சத்தியத்தைச் செய்ய வேண்டும்). பிராமணர்களான நீங்கள் இந்தக் காப்பை மற்றவர்களின் மீது கட்டுவதற்கு எண்ணியிருப்பதனால், முதலில் நீங்கள் இதை உங்களில் கட்டிக் கொண்டால் மட்டுமே உங்களால் மற்றவர்களில் அதைக் கட்ட முடியும். பொன்விழாவிற்கான உங்களின் எண்ணங்கள் என்ன? உங்களுக்கு எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்றே நீங்கள் நினைத்தீர்கள், இல்லையா? இதை மீண்டும் மீண்டும் கீழ்க்கோடிடுங்கள். நீங்கள் ஒரு பிரச்சனையாகி, நீங்கள் பிரச்சனைகளின் சொரூபம் ஆகமாட்டீர்கள் எனக் கூறக்கூடாது. எனவே, நீங்கள் இந்தக் காப்பைக் கட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள்தானே? அனைத்திற்கும் முதலில், உங்களில் கட்டுங்கள். பின்னர் உலகிற்குக் கட்டுங்கள். அப்போது உங்களால் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அச்சா.

இன்று, ஐரோப்பாவின் முறையாகும். ஐரோப்பாவும் மிகப் பெரியது, இல்லையா? ஐரோப்பா எந்தளவிற்குப் பெரியதோ, அந்தளவிற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களிடமும் பெரிய இதயங்கள் இருக்கிறதா? ஐரோப்பாவில் விரிவாக்கம் ஏற்படும் அளவிற்கு, சேவையில் சாரம் உள்ளது. விநாசத்தின் தீப்பொறி எங்கிருந்து வெளிப்பட்டது? அது ஐரோப்பாவில் இருந்தே வெளிப்பட்டது, இல்லையா? எனவே, விநாசத்தின் வழிமுறைகள் ஐரோப்பாவில் இருந்து வெளிப்பட்டதைப் போல், ஸ்தாபனைப் பணியிலும் ஐரோப்பாவில் இருந்து விசேடமான ஆத்மாக்கள் வெளிப்பட வேண்டும். ஆரம்பத்தில் குண்டுகள் பாதாளத்தில் செய்யப்பட்டுப் பின்னர் பயன்படுத்தப்படுவதைப் போல், தற்சமயம் மறைமுகமாகவும் பாதாளத்திலும் இருக்கும் இத்தகைய ஆத்மாக்களைத் தயார் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படுவார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு இருப்பதைப் போல், அங்கும், ஒவ்வோர் இடத்திற்கும் அதற்கேயுரிய சிறப்பியல்பு உள்ளது. ஐரோப்பாவின் கருவிகள் பெயரைப் பெருமைப்படுத்துவதில் பயன்படுவார்கள். விஞ்ஞானத்தின் கருவிகள் பயன்படுத்தப்படுவதைப் போல், ஐரோப்பாவின் கருவிகளும் சத்தத்தைப் பரப்புவதில் கருவிகள் ஆகுவார்கள். புதிய உலகை உருவாக்குவதில் ஐரோப்பா உதவி செய்யும். ஐரோப்பாவின் பொருட்கள் எப்போதும் பலம் வாய்ந்தவை. ஜேர்மனியின் பொருட்களுக்கு அனைவரும் அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே, அதைப்போல், சேவைக்குக் கருவிகளாக இருக்கும் முக்கியமான ஆத்மாக்களும் தொடர்ந்து வெளிப்படுத்தப்படுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா? ஐரோப்பா வேறு எந்த இடத்தையும் விடக் குறைந்ததல்ல. வெளிப்படுத்தலுக்கான திரை இப்போது திறக்க ஆரம்பித்துள்ளது. சரியான நேரத்தில், நீங்கள் மேடையில் வருவீர்கள். குறுகிய காலத்தில் மிக நல்ல விரிவாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், மிக நல்லதொரு படைப்பை உருவாக்கியிருப்பதும் நல்லதே. இப்போது அந்தப் படைப்பிற்கு நீங்கள் பராமரிப்பெனும் நீரை ஊற்றி, அதைப் பலம்வாய்ந்தது ஆக்குகிறீர்கள். எவ்வாறு ஐரோப்பாவின் பௌதீகப் பொருட்கள் பலம் வாய்ந்தவையோ, அதேபோல், அங்கிருந்து வரும் ஆத்மாக்களும் குறிப்பாக ஆட்ட, அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் பலமானவர்களாக இருப்பார்கள். நீங்கள் அன்புடன் முயற்சி செய்கிறீர்கள். ஆகவே, முயற்சி என்பது முயற்சி இல்லை. ஆனால் சேவைக்காக உங்களிடம் மிக நல்ல அன்பு உள்ளது. எங்கு அன்பு உள்ளதோ, அங்கு தடைகள் உடனடியாக முடிந்துவிடும். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். எந்தவொரு நிலையிலும், முழுமையாக ஐரோப்பாவின் தரத்தைப் பார்த்தால், அது மிகவும் நன்றாக உள்ளது. பிராமணர்களும் ஐபி க்களே. எவ்வாறாயினும், அவர்கள் ஐபி க்களே. ஆகவே, ஐரோப்பாவின் கருவி சேவையாளர்களை, அவர்களுக்கு அன்பு நிறைந்த மேன்மையான பராமரிப்பைக் கொடுப்பதன் மூலம் மேலும் பலம் வாய்ந்தவர்கள் ஆக்குங்கள். குறிப்பாகத் தொடர்ந்து அவர்களைச் சேவைக்களத்திற்குள் அழைத்து வாருங்கள். அந்த நிலம் பழங்களைக் கொடுக்கக்கூடியது. அச்சா. நீங்கள் தந்தைக்குச் சொந்தமாகிய உடனேயே மற்றவர்களையும் தந்தைக்குச் சொந்தமாக்க ஆரம்பிக்கும் சிறப்பியல்பு உங்களிடம் உள்ளது. உங்களிடம் நல்ல தைரியம் உள்ளது. இந்தத் தைரியத்தினால், சேவை நிலையங்கள் தொடர்ந்து விரிவடையச் செய்யும் பரிசை நீங்கள் பெற்றுள்ளீர்கள். தரத்தை அதிகரியுங்கள். எண்ணிக்கையையும் அதிகரியுங்கள். இரண்டினதும் சமநிலை இருக்க வேண்டும். எண்ணிக்கையின் அழகு, தரத்தின் அழகை விட வேறுபட்டது. இரண்டும் தேவைப்படுகிறது. தரம் மட்டும் இருந்து, எண்ணிக்கை இல்லாவிட்டால், சேவை செய்பவர்கள் களைத்துவிடுவார்கள். இதனாலேயே, இரண்டும் தமக்குரிய சொந்தச் சிறப்பியல்புகளுடன் பயனுள்ளவை. இரண்டு வகையான சேவைகளும் அவசியமாகும். ஏனெனில், 900000 உருவாக்கப்பட வேண்டும். இந்த 900000 பேரில் வெளிநாடுகளில் இருந்து எத்தனை பேர் உருவாக்கப்பட்டுள்ளார்கள்? (5000). அச்சா. குறைந்தபட்சம் ஒரு கல்பத்திற்கான காலம் பூர்த்தியாகியுள்ளது. பிந்தி வந்து முந்திச் செல்லும் ஆசீர்வாதம் வெளிநாடுகளுக்கு உள்ளது. எனவே, நீங்கள் பாரதத்தை விட விரைவாகச் செல்ல வேண்டும். ஏனெனில், நிலத்தைத் தயார் செய்வதற்குப் பாரதத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு நிலங்களோ தரிசான நிலங்கள் அல்ல. இங்கு, முதலில் தவறான விடயங்களைக் கேட்டவர்களை மீண்டும் நல்லவர்கள் ஆக்க வேண்டியுள்ளது. அங்கு, அவர்கள் தவறாக எதையும் கேட்கவில்லை. அவர்கள் தீங்கான அல்லது தவறான எதையும் கேட்டதில்லை. அதனால் அவர்கள் மிகவும் சுத்தமாக இருக்கிறார்கள். பாரதத்தைச் சேர்ந்தவர்கள் முதலில் தமது சிலேட்டுக்களைச் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. பின்னர் அதில் எழுத வேண்டியுள்ளது. காலத்திற்கேற்ப, வெளிநாடுகளுக்கு பிந்தி வந்து வேகமாகச் செல்லும் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. எனவே, ஐரோப்பா எத்தனை நூறாயிரக்கணக்கானவர்களை உருவாக்கும்? அமைதிக்கான மில்லியன் நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியை நீங்கள் உருவாக்கியிருப்பதைப் போல், பிரஜைகளை உருவாக்குவதற்கும் நிகழ்ச்சியொன்றை உருவாக்குங்கள். பிரஜைகளை உருவாக்க முடியுமல்லவா? உங்களால் மில்லியன் நிமிடங்களைச் சேகரிக்க முடியுமானால், உங்களால் மில்லியன் பிரஜைகளை உருவாக்க முடியாதா? ஒரு மில்லியனுக்கு நூறாயிரம் குறைவாகவே பாபா கூறுகிறார். அவர் 900000 பேர்களை மட்டுமே கேட்கிறார்! ஐரோப்பாவில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்து கொண்டீர்களா? அதிகளவு விசையுடன் ஆயத்தங்களைச் செய்யுங்கள். அச்சா. இரட்டை வெளிநாட்டவர்களுக்கு இரட்டை அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் ஒரேயொரு முரளியைக் கேட்பதற்கான வாய்ப்பே உள்ளது. ஆனால் உங்களுக்கு இரட்டை வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் கருத்தரங்கையும் பொன்விழாவையும் பார்த்தீர்கள். நீங்கள் மூத்த தாதிகளையும் கண்டீர்கள். நீங்கள் கங்கா, ஜமுனா, கோதாவாரி, பிரம்மாபுத்ரா போன்றவற்றைக் கண்டீர்கள். (இந்தியாவின் நான்கு பிரதானமான நதிகள்). நீங்கள் மூத்த தாதிகள் அனைவரையும் கண்டீர்கள், அல்லவா? ஒவ்வொரு தாதியிடமிருந்தும் ஒரு சிறப்பியல்பைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள். அவை பயனுள்ளதாக இருக்கும். சிறப்பியல்புகளின் பரிசுகளால் உங்களின் மடிகளை நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். இந்தப் பரிசுகளுக்காக சுங்கப் பரிசோதனை செய்பவர்கள் உங்களை நிறுத்த மாட்டார்கள். அச்சா.

சதா உலக உபகாரிகளாகவும் உண்மையான சேவையாளர்களாகவும், உலக சேவைக்குக் கருவிகளாகவும் இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், எப்போதும் வெற்றியின் பிறப்புரிமையைப் பெற்றுள்ள விசேடமான ஆத்மாக்களுக்கும், நெருக்கமாக இருப்பதுடன், தமது ரூபத்தினால் மற்றவர்களுக்கு அவர்களின் ரூபங்களை நினைவூட்டும் ஆத்மாக்களுக்கும், எப்போதும் எல்லையற்ற முறையில் சுயநலமற்ற சேவையாளர்கள் ஆகுபவர்களுக்கும், பறக்கும் ஸ்திதியில் பறந்து கொண்டிருப்பவர்களுக்கும், இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தேவதை ரூபத்தினூடாக, முக்தி மற்றும் சத்கதி என்ற புனித பிரசாதத்தைப் பகிர்ந்தளிக்கும் மாஸ்ரர் முக்தியும் சத்கதியும் அருள்பவர் ஆகுவீர்களாக.

தற்சமயம், உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் இக்கட்டான சூழ்நிலைகளால் அழுகிறார்கள். அனைத்தும் விலையுயர்ந்ததாக இருப்பதால் சிலர் அழுகிறார்கள். சிலர் பௌதீகமாக வாய்விட்டே அழுகிறார்கள். சிலர் உடல் நோயால் அழுகிறார்கள். சிலர் தமது மனதில் அமைதியின்மையால் அழுகிறார்கள். அனைவரின் பார்வையும் அமைதிக் கோபுரத்தை நோக்கியே செல்கிறது. துன்ப அழுகுரலின் பின்னர் எப்போது வெற்றி முழக்கங்கள் ஒலிக்கும் என்றே அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்போது உங்களின் பௌதீக தேவதை ரூபத்தால், உலகின் துன்பத்தை நீக்குங்கள். மாஸ்ரர் முக்தி, சத்கதியை அருள்பவராகி, பக்தர்களுக்கு முக்தியினதும் சத்கதியினதும் புனித பிரசாதத்தைக் கொடுங்கள்.

சுலோகம்:
பாப்தாதாவின் ஒவ்வொரு கட்டளையையும் நடைமுறை வடிவில் போடுபவர்கள் மட்டுமே ஓர் உதாரணம் ஆகுவார்கள்.