12.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, எவ்வாறு நீந்துவது என உங்களுக்குக் கற்பிப்பதற்கே தந்தை வந்துள்ளார். இதனைக் கற்பதனால், நீங்கள் இவ்வுலகிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றீர்கள், பின்னர் முழு உலகமும் உங்களுக்காக மாற்றம் அடைகின்றது.

கேள்வி:
தந்தையின் உதவியாளர்கள் தாம் செய்யும் உதவிக்குப் பிரதிபலனாக எதனைப் பெற்றுக் கொள்கின்றார்கள்?

பதில்:
தந்தை இந்நேரத்தில் தனக்கு உதவியாளர்கள் ஆகுகின்ற குழந்தைகளை அரைக் கல்பத்திற்கு உதவியோ அல்லது ஆலோசனையோ பெறவேண்டிய தேவையில்லாதவாறு ஆக்குகின்றார். அவர் அத்தகைய மகத்துவமானதொரு தந்தை! அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் எனது உதவியாளர்கள் ஆகியிருக்காதிருந்தால் என்னால் எவ்வாறு சுவர்க்கத்தை ஸ்தாபிக்க முடியும்?

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான, வரிசைக்கிரமமான, பரம இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். பல குழந்தைகள் விவேகமற்றவர்கள் ஆகியுள்ளனர். இராவணன் உங்களை மிகவும் விவேகமற்றவர்கள் ஆக்கியுள்ளான். இப்பொழுது நாங்கள் மிகவும் விவேகமானவர்கள் ஆக்கப்படுகின்றோம். இந்தியன் சிவில் சேவைக்கான (ஐஊளு) பரீட்சையில் ஒருவர் சித்தியடையும்பொழுது, தான் மிகப் பெரியதொரு பரீட்சையில் சித்தியடைந்து விட்டதாக நினைக்கின்றார். நீங்கள் சித்தியடையும் பரீட்சை எவ்வளவு மகத்துவமானது எனப் பாருங்கள்! அதனைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் யார்? கற்பவர்கள் யார்? ஒவ்வொரு கல்பத்திலும், 5000 வருடங்களுக்கு ஒருமுறை தொடர்ந்தும் நீங்கள் தந்தை, ஆசிரியர், மற்றும் குருவை மீண்டும் சந்திக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. அதிமேலான தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற ஆஸ்தி எவ்வளவு மகத்தானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். ஆசிரியர் உங்களுக்குக் கற்பிப்பதன் மூலம் உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குக் கற்பிப்பதுடன், நீங்கள் ஆட்சிசெய்வதற்காக இவ்வுலகையும் புதியதோர் உலகமாக மாற்றுகின்றார். பக்தி மார்க்;கத்தில் அவரின் புகழை அவர்கள் அதிகளவு பாடுகின்றார்கள். நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பழைய உலகம் மாறுகின்றது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அனைவருமே சிவபாபாவின் குழந்தைகள் என நீங்கள்; கூறுகின்றீர்கள். பழைய உலகைப் புதிய உலகமாக்குவதற்குத் தந்தை இங்கு வரவேண்டும். திரிமூர்த்திப் படத்தில் புதிய உலகின் ஸ்தாபனை பிரம்மாவினூடாக இடம்பெறுவதாகக் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள்; நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். புதிய உலகைப் படைப்பவர் பிரம்மா அல்ல. படைப்பவர் தந்தையாவார். அவர் கூறுகின்றார்: நான் வந்து சாதுரியமாகப் பழைய உலகின் அழிவைத் தூண்டி, புதிய உலகைப் படைக்கின்றேன். புதிய உலகில் வெகுசிலரே வாழ்கின்றார்கள். அரசாங்கம் சனத்தொகையைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. எவ்வாறாயினும் அது இப்பொழுது குறைவடைய முடியாது. யுத்தத்தில் மில்லியன் கணக்கானோர் மரணிக்கின்றார்கள், இருப்பினும் சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. இதனை நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். உங்கள் புத்தியில் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்களை மாணவர்களாகக் கருதுகின்றீர்கள். எவ்வாறு நீந்துவது எனவும் நீங்கள் கற்றுக்கொள்கின்றீர்கள். மக்கள் கூறுகின்றார்கள்: எனது படகை அக்கரை சேருங்கள். நன்றாக நீந்தக் கற்றுக்கொள்பவர்கள் மிகவும் பிரபல்யம் அடைகின்றார்கள். இப்பொழுது நீங்கள் எவ்வாறு நீந்துகின்றீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள முற்றாகவே மேலே சென்று, பின்னர் கீழிறங்கி இங்கே வருகின்றீர்கள். தாம் எத்தனை மைல்கள் மேலே சென்றதாக அவர்கள் கூறுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் அதிகளவு மைல்களைக் கடந்து மேலே செல்கின்றீர்கள். அது கணக்கிடக்கூடிய, பௌதீகமான விடயமாகும். உங்களைப் பொறுத்தவரை இது கணக்கிட முடியாதது. நீங்கள் சூரியன், சந்திரன் போன்றன இல்லாத வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அது உங்கள் இல்லம் என்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளது; நாங்கள் அவ்விடத்து வாசிகள். மக்கள் பக்தி செய்து முக்தி தாமத்திற்குச் செல்ல முயற்சி செய்கின்றார்கள், ஆனால் எவராலும் அங்கே செல்ல முடியவில்லை. அவர்கள் கடவுளை முக்தி தாமத்தில் சந்திக்க முயற்சிக்கின்றார்கள்; அவர்கள் பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கின்றார்கள். சிலர் தாம் ஒளியுடன் இரண்டறக் கலப்போம் எனக் கூறுகின்றார்கள். சிலர் தாம் முக்தி தாமத்திற்குச் செல்வோம் எனக் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் எவருக்கும் முக்தி தாமத்தைத் தெரியாது. பாபா வந்திருக்கின்றார் என்பதையும், அவர் எங்களைத் தன்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இனிமையிலும் இனிமையான பாபா வந்து, தன்னுடன் எங்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, எங்களைத் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றார். இதற்காக நாங்கள் அரைக் கல்பமாக முயற்சி செய்து வந்தோம். ஆனால் எங்களால் அந்தளவிற்குத் தகுதியுடையவராக முடியவில்லை. எவராலும் ஒளியுடன் இரண்டறக் கலக்கவோ அல்லது எவராலும் முக்தி தாமத்திற்குச் செல்லவோ அல்லது அநாதியான முக்தியை அடையவோ முடியாது. அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. புpராமணக் குலத்தின் அலங்காரங்களாகிய நீங்கள் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் இப்பொழுது பலனளிக்கின்றன. இந்நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது? நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். உங்களுக்குத் தந்தையை மிக நன்றாகத் தெரியும். அத்துடன் நீங்கள் உலகச் சக்கரத்தைப் பற்றியும் தந்தையிடமிருந்து கற்றிருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்;: எவரிடமும் முக்தி அல்லது ஜீவன்முக்தி பற்றிய ஞானம் இல்லை. தேவர்களிடம் கூட அது இல்லை. எவருக்கும் தந்தையைத் தெரியாது. ஆகையால், அவரால் எவரையும் எவ்வாறு திரும்பவும் அழைத்துச் செல்ல முடியும்? பல குருமார்கள் உள்ளனர், பலரும் அவர்களின் சீடர்கள் ஆகுகின்றார்கள். சிவபாபாவே உண்மையான சற்குரு. அவருக்குப் பாதங்கள் இல்லை. அவர் கூறுகின்றார்;: எனக்குப் பாதங்கள் இல்லை. நான் எவ்வாறு என்னை வழிபட அனுமதிக்க முடியும்? குழந்தைகள் உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள், எனவே, அவர்கள் என்னை வழிபடுவதை எவ்வாறு நான் அனுமதிக்க முடியும்? பக்தி மார்க்கத்தில், குழந்தைகள் தமது தந்தையை விழுந்து வணங்குகின்றார்கள். உண்மையில், குழந்தைகளே தந்தையின் சொத்திற்கான அதிபதிகள், ஆனால், அவர்கள் தமது பணிவைக் காட்டுகின்றார்கள். சிறு குழந்தைகள் கூட அவர்களது பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றார்கள். இங்கே தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது பாதங்களில் வீழ்ந்து வணங்குவதிலிருந்து உங்களை நான் விடுவிக்கின்றேன். அவர் அத்தகைய மகத்துவமான தந்தை! அவர் கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் எனது உதவியாளர்கள். நீங்கள் எனது உதவியாளர்கள் ஆகாதிருந்தால் என்னால் எவ்வாறு சுவர்க்கத்தை ஸ்தாபிக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்நேரத்திலேயே நீங்கள் எனது உதவியாளர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் எவரது உதவியையும் நாட அவசியமில்லாத வகையில் நான் உங்களை அவ்வாறானவர்கள் ஆக்குகின்றேன். நீங்கள் எவரது ஆலோசனையையும் பெறவேண்டிய தேவை ஏற்படாது. இங்கே, தந்தை குழந்தைகளின் உதவியைப் பெறுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது அழுக்காகி விடாதீர்கள்! மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள். இல்லையேல், நீங்கள் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துவீர்கள். குத்துச் சண்டையில், வெற்றியீட்டியவர் புகழப்படுகின்றார், தோல்வியடைந்தவரின் முகம் வெளிறி விடுகின்றது. இங்கும் சிலர் தோற்கடிக்கப்படுகின்றார்கள். இங்கே தோற்கடிக்கப்படுபவர்களையிட்டு அவர்கள் தமது முகத்தை அழுக்காக்கி விட்டனர் எனக் கூறப்படுகின்றது. அவர்கள் இங்கே அழகானவர்கள் ஆகுவதற்கே வந்தார்கள், ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் என்ன செய்தார்கள்? இதுவரை அவர்கள் சம்பாதித்துள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு விடுவதால், அவர்கள் புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. தந்தையின் உதவியாளர்கள் ஆகியபின்னர், அவர்கள் தோற்கடிக்கப்பட்டு, தந்தையின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்துகின்றார்கள். இரு கட்சியினர் உள்ளனர்: 1. மாயையின் அடிமைகள் 2. இறை சேவகர்கள். நீங்கள் தந்தையை நேசிக்கின்றீர்கள். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள். என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் அன்பான புத்தியைக் கொண்டவர்கள். எனவே, பெயருக்கு அவதூறு ஏற்படுத்தக்கூடாது. நீங்கள் அன்பான புத்தியுடையவர்கள் என்பதால், ஏன் மாயையினால்; தோற்கடிக்கப்படுகின்றீர்கள்? தோற்கடிக்கப்படுவர்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். வெற்றியீட்டுபவர்களுக்கு மக்கள் கரகோஷம் செய்து, அவர்களைப் புகழ்கின்றார்கள். நீங்கள் மிகவும் உறுதியானவர்கள் என்பதையும், நிச்சயமாக மாயையை வெற்றிகொள்ள வேண்டும் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரம் உட்பட, நீங்கள் பார்க்கின்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். என்னை மாத்திரம் சதா நினைவு செய்யுங்கள். மாயை உங்களைச் சதோபிரதானிலிருந்து தமோபிரதான் ஆக்கியுள்ளாள். நீங்கள் மீண்டும் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் மாயையை வெற்றிகொள்வதனால், உலகை வெல்பவர்கள் ஆகவேண்டும். இது வெற்றியையும் தோல்வியையும், இன்பத்தையும் துன்பத்தையும் பற்றிய நாடகமாகும். இராவண இராச்சியத்தில் தோல்வி உள்ளது. தந்தை இப்பொழுது உங்களைப் பவுண்ட் பெறுமதியுடையவர்கள் ஆக்குகின்றார். சிவனின் பிறந்தநாள் மாத்திரம் பவுண்ட் பெறுமதியான பிறந்தநாள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி, நாராயணன் போன்று ஆகவேண்டும். அங்கே, ஒவ்வொரு வீட்டிலும் தீபமாலை உள்ளது. அனைவரது ஒளியும் ஏற்றப்பட்டுள்ளது! உங்கள் ஒளிகள் பிரதான சக்தியிலிருந்து ஏற்றப்படுகின்றன. பாபா இங்கமர்ந்திருந்து மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகிறார்! தந்தையைத் தவிர வேறு எவர், உங்களை இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் எனக்; கூறுவார்;? ஆன்மீகத் தந்தை கூறுகின்றார்: ஓ எனது இனிய, அன்பான குழந்தைகளே, நீங்கள் அரைக் கல்பமாகப் பக்தி செய்திருக்கின்றீர்கள். இருப்பினும், உங்களில் ஒருவராலேனும் இன்னமும் வீடு திரும்ப முடியாதுள்ளது. தந்தை வரும்பொழுதே, அவரால் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும். சங்கம யுகத்தைப் பற்றி நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்தலாம்: எவ்வாறு தந்தை வந்து ஆத்மாக்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இவ்வுலகில் உள்ள எவருக்கும் இந்த எல்லையற்ற நாடகத்தைப் பற்றித் தெரியாது. இது எல்லையற்ற நாடகமாகும். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கின்றீர்கள்; இதனை வேறு எவராலும் கூறமுடியாது. மக்கள் எல்லையற்ற நாடகத்தைப் பற்றிப் பேசுவார்களாயின், அவர்கள் எவ்வாறு நாடகத்தை விளங்கப்படுத்துவார்கள்? இங்கே, நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது ஞானம் உள்ளது; நீங்கள் இப்பொழுது நினைவில் நிலைத்திருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அனைத்தையும் மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அதிகளவு தடுமாறித் திரிந்தீர்கள். நீங்கள் நீராடுவதற்கு எவ்வளவு தூரம் செல்கின்றீர்கள்! இதில் மூழ்கி எழுந்தால், நீங்கள் தேவதைகள் ஆகுகின்றீர்கள் என ஓர் ஏரியைக் குறித்துக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது ஞானக் கடலில் மூழ்கி எழுந்து, இளவரசிகள் ஆகுகின்றீர்கள். மிகவும் நாகரிகமான ஒருவர் ஒரு தேவதையைப் போன்று தென்படுவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இரத்தினங்கள் ஆகுகின்றீர்கள். மனிதர்கள் பறந்து செல்வதற்குச் சிறகுகள் போன்றவற்றைக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு அவர்களால் பறக்க முடியாது. ஆத்மாக்களே பறக்கின்றார்கள். ரொக்கட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்ற ஆத்மாக்கள்;, சின்னஞ்சிறியவர்கள். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்பும்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் அக்காட்சியைக் காண்பது சாத்தியமாகும். உங்கள் புத்தியால் புரிந்துகொண்டு, விநாசத்தைக் காண்பது எவ்வாறு சாத்தியம் என்பது பற்றி நீங்கள் பேசுவதைப் போன்றே, ஆத்மாக்களின் கூட்டம் வீடு திரும்புகின்ற காட்சியைக் காண்பதும் சாத்தியமாகும். அனுமன், கணேஷ் போன்றோர் உண்மையில் இருப்பதில்லை, ஆனால் மக்கள் அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பிற்கும், பக்தி உணர்விற்கும் ஏற்ப அவர்களின் காட்சிகளைப் பெறுகின்றார்கள். பாபா ஒரு புள்ளி ஆவார். அவரை நீங்கள் எவ்வாறு விபரிக்க முடியும்? ஆத்மா இக்கண்களால் காண முடியாத, ஒரு சின்னஞ்சிறிய நட்சத்திரம் என்றும் கூறப்பட்டுள்ளது. செயல்கள் ஆற்றுகின்ற சரீரங்கள் மிகப் பெரியவை. ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ்சிறிய புள்ளிகளாக இருப்பினும், 84 பிறவிகளின் சக்கரம் அவர்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதை எந்தவொரு மனிதரின் புத்தியேனும் அறியாதுள்ளது. எவ்வாறு ஒவ்வோர் ஆத்மாவிலும், ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது என்பது அற்புதமாகும். ஆத்மாக்களே சரீரங்களை எடுத்து, தமது பாகங்களை நடிக்கின்றார்கள். அந்த நாடகங்கள் எல்லைக்குட்பட்டவை, இந்த நாடகமோ எல்லையற்றதாகும். எல்லையற்ற தந்தை, தனது அறிமுகத்தைக் கொடுப்பதற்காகத் தானே வந்துள்ளார். நல்ல சேவை செய்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் பிறருக்கு எவ்வாறு விளங்கப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்துத் தொடர்ந்தும் ஞானக்கடலைக் கடைகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவருடனும் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறிருந்தும், தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை எனச் சிலர் பாபாவிடம் கூறுகின்றார்கள். ஒருவர் கற்காதபொழுது, அவர் கல்லுப் புத்தியுடையவர் எனக் கூறப்படுகின்றார். சிலர் ஏழு நாட்கள் மாத்திரமே கற்றதும் மிகவும் சந்தோஷமடைந்து, தாம் பாபாவிடம் செல்ல விரும்புவதாகக் கூறுவதை உங்களால் காண முடிகின்றது. பிறர் எதனையும் புரிந்துகொள்வதில்லை. மக்கள் கல்லுப் புத்தியைப் பற்றியும், தெய்வீகப் புத்தியைப் பற்றியும் பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆத்மா தூய்மையாகும்பொழுது, தெய்வீகப் பிரபு ஆகுகின்றார். தெய்வீகப் பிரபுவிற்கும் ஓர் ஆலயம் உள்ளது. முழு ஆலயமும் தங்கத்தால் ஆக்கப்படவில்லை; அவ் ஆலயத்தின் உச்சியில் சிறிதளவு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீங்கள் பூந்தோட்டத்தின் அதிபதியைக் கண்டுவிட்டீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். முட்களிலிருந்து மலர்கள் ஆகுவதற்கான பாதையை அவர் எங்களுக்குக் காட்டுகின்றார். அல்லாவின் பூந்தோட்டத்திற்கான புகழும் உள்ளது. ஆரம்ப காலத்தில், ஒரு முஸ்லீம் நபர் திரான்ஸில் செல்வதுண்டு. குதா (கடவுள்) தனக்கு ஒரு மலரைக் கொடுத்ததாக அவர் கூறினார். நிற்கும்பொழுதே, குதாவின் பூந்தோட்டத்தை அவர் பார்த்துவிட்டு, பின்னர் கீழே விழுந்துவிடுவார். எவ்வாறாயினும், குதாவினால் மாத்திரமே குதாவின் பூந்தோட்டத்தை ஒருவருக்குக் காட்ட முடியும். வேறு எவராலும் அதனை எவ்வாறு பிறருக்குக் காட்ட முடியும்? அவர் உங்களுக்கு வைகுந்தத்தின் காட்சிகளை அருள்கின்றார். குதா உங்களை அங்கே அழைத்துச் செல்கின்றபொழுதிலும், அவர் அங்கிருப்பதில்லை. குதா அமைதி தாமத்தில் இருந்து, உங்களை வைகுந்தத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் சந்தோஷப்படும் வகையில் அத்தகைய நல்ல விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்கின்றீர்கள் என்பதையிட்டு உள்ளார அதிகளவு சந்தோஷப்பட வேண்டும். அங்கே துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: சந்தோஷ தாமத்தையும், அமைதி தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். நாங்கள் ஏன் எங்கள் வீட்டை நினைவுசெய்யக்கூடாது? ஆத்மாக்கள் வீடு திரும்புவதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள், அவர்கள் தபஸ்யா, கிரியைகள் போன்றவற்றைச் செய்து அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். ஆனால் ஆனால் எவராலும் வீடு திரும்ப முடியாதுள்ளது. விருட்சப் படத்தில், ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் கீழிறங்குவது காட்டப்பட்டுள்ளது. தந்தையே இங்கிருக்கும்பொழுது, எவ்வாறு எவராலும் இடையில் திரும்பிச் செல்ல முடியும்? அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு நாளும் கூறுகின்றார்: அமைதி தாமத்தையும், சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். தந்தையை மறந்து விடுவதாலேயே நீங்கள் சந்தோஷத்தை இழப்பதுடன், மாயையின் செருப்படியையும் அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது செருப்படியைச் சற்றேனும் அனுபவம் செய்யக்கூடாது. சரீர உணர்வே பிரதான விடயம். ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! என நீங்கள் யாரைக் கூவி அழைத்தீர்களோ, அந்தத் தந்தையிடம் இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். அவர் உங்கள் கீழ்ப்படிவான சேவகரும், ஆசிரியரும் ஆவார். தந்தையே கீழ்ப்படிவான சேவகர் ஆவார். முக்கியஸ்தர்கள் தங்கள் கையெழுத்திற்கு மேலே எப்பொழுதும் உங்கள் கீழ்ப்படிவான சேவையாளன் என எழுதுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: நான் எவ்வாறு இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன் எனப் பாருங்கள். தகுதிவாய்ந்த குழந்தைகள் மாத்திரமே தந்தையால் நேசிக்கப்படுகின்றார்கள். தகுதியற்ற, அதாவது, தந்தைக்குரியவர்கள் ஆகிய பின்னர் விகாரத்தில் ஈடுபடுவதால் துரோகிகள் ஆகிய குழந்தைகளையிட்டு அவர் கூறுகின்றார்: அத்தகையதொரு குழந்தை பிறக்காதிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! ஒருவரினால் ஏனைய பலரது பெயரிற்கு அவதூறு ஏற்படுகின்றது. அத்துடன் பலரும் சிரமங்களுக்கும் உள்ளாகுகின்றார்கள். இங்கே நீங்கள் அத்தகைய மேன்மையானதொரு பணியைச் செய்கின்றீர்கள்! நீங்கள் உலகை ஈடேற்றுகின்றீர்கள். உங்களிடமோ மூன்று சதுர அடி நிலம் கூட இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் எவரையும் வீட்டையும், குடும்பத்தையும் துறக்கச் செய்வதில்லை. நீங்கள் அரசர்களிடமும் கூறுகின்றீர்கள்: நீங்கள் இரட்டைக் கிரீடத்திற்கு உரியவர்களாகவும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தீர்கள், இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை இப்பொழுது உங்களை மீண்டும் ஒருமுறை பூஜிக்கத் தகுதியானவர்களாக ஆக்குவதால், நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும், அல்லவா? அதற்கு சற்றுக் காலம் எடுக்கும். ஒருவரிடம் நூறாயிரத்தைப் பெறுவதால், நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்? ஏழைகளே இராச்சியத்தைப் பெறவுள்ளனர். தந்தையே ஏழைகளின் பிரபு. நீங்களே தந்தை ஏழைகளின் பிரபு என அழைக்கப்படுவதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். பாரதம் மிகவும் ஏழ்மையானது. அதிலும் குறிப்பாகத் தாய்மார்களாகிய நீங்களே ஏழைகள். செல்வந்தர்களால் இந்த ஞானத்தைப் பெற முடியாது. அதிகளவு துன்புறுத்தப்பட்ட, பல கள்ளங்கபடமற்ற பெண்கள் இங்கே வருகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: தாய்மார்கள் முன்னேறிச் செல்வதற்கு உற்சாகமளிக்கப்பட வேண்டும். அதிகாலையில் நீங்கள் குழுக்களாக உலாவச் செல்லும்பொழுது, தாய்மார்களே முன்னால் செல்ல வேண்டும். உங்கள் பட்ஜும் முதற்தரமானது. முன்னால் செல்பவர்கள் திரான்ஸ் லைட் படங்களை எடுத்துச் செல்ல வேண்டும். உலகம் இப்பொழுது மாறப் போகின்றது என அனைவரிடமும் கூறுங்கள். நாங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்று, தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். சேவையை எவ்வாறு நடைமுறையில் இடலாம் என்பது பற்றி நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். அதற்குக் காலம் எடுக்கின்றது, அல்லவா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருந்து, அவரது உதவியாளர் ஆகுங்கள். ஒருபொழுதும் மாயையினால் தோற்கடிக்கப்பட்டு, குலத்தின் பெயரை அவதூறு செய்யாதீர்கள். உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, நீங்கள் காண்கின்ற அனைத்தையும் மறப்பதற்கான முயற்சியைச் செய்யுங்கள்.

2. நீங்கள் அமைதி தாமத்திற்கும், சந்தோஷ தாமத்திற்கும் செல்கின்றீர்கள் என்ற சந்தோஷத்தை உள்ளாரக் கொண்டிருங்கள். பாபா, ஒரு கீழ்ப்படிவான ஆசிரியராக, எங்களை வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகிறார். தகுதியானவராகவும், கீழ்ப்படிவானவராகவும் ஆகுங்கள். தகுதியற்றவர் ஆகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மூன்று விடயங்களினதும்; விழிப்புணர்வைக் கிரகிப்பதால், முழுமையான வெற்றியாளர்கள் ஆகுவீர்களாக.

சுயத்தின் விழிப்புணர்வு, தந்தையின் விழிப்புணர்வு, நாடகத்தின் ஞானத்தின் விழிப்புணர்வு: இம் மூன்று விடயங்களின் விழிப்புணர்வில் ஞானம் அனைத்தினதும் விரிவாக்கம் அமிழ்ந்துள்ளது. அவை ஞான விருட்சத்தின் மூன்று வகையான விழிப்புணர்வுகள் ஆகும். முதலில் ஒரு மரம் விதையாக இருந்து, பின்னர் அவ் விதையிலிருந்து இரு இலைகள் வளர்ச்சியடைந்து, பின்னர் மரத்தின் விரிவாக்கம் ஏற்படுகின்றது. அதேபோன்று விதையான தந்தையினதும், பின்னர் இரு இலைகளினதும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதே பிரதான விடயமாகும், அதுவே ஆத்மாவினதும், நாடகத்தினதும் ஞானம் முழுவதும் ஆகும். இம் மூன்று விடயங்களினதும்; விழிப்புணர்வைக் கிரகிப்பவர்களே ஒரு நினைவு சொரூபமாக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் முழுமையான வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள்.

சுலோகம்:
எப்பொழுதும் உங்கள் முன்னிலையில் உங்கள் பேறுகளை வைத்திருங்கள், அப்பொழுது பலவீனங்கள் அனைத்தும் இலகுவில் முடிவடையும்.