12.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, மகாவீரர்கள் ஆகுங்கள். மாயையின் புயல்களோடு சண்டையிடுவதற்குப் பதிலாக, ஆட்ட, அசைக்க முடியாதவராக இருங்கள்.

கேள்வி:
பிரம்மபாபாவின் முன்னால் பல குழப்பங்கள் வந்தபொழுதும், அதனால் அவர் ஏன் குழப்பமடையவில்லை?

பதில்:
தந்தையிடமிருந்து தனது ஆஸ்தியைக் கோருகின்ற போதையை பாபா கொண்டிருந்ததால் ஆகும். முன்னைய சக்கரத்தில் நடந்தது போன்றே, மிகச்சரியாக அனைத்தும் நடைபெறுகின்றது; அது புதியதல்ல. தந்தையே (பிரம்மபாபா) அதிகளவில் அவமதிக்கப்பட்டார். அவர்கள் கிருஷ்ணரையும் அவமதிக்கின்றனர். ஆகவே நாங்கள் அவமதிக்கப்பட்டால் என்ன! உலகிற்கு எங்களது விடயங்கள் எதுவும் தெரியாதென்பதால், அவர்கள் நிச்சயமாக எங்களை அவமதிப்பார்கள். இதனாலேயே அவர் எதனையிட்டும் குழப்பமடையவில்லை. அதேபோன்று தந்தையைப் பின்பற்றுங்கள்.

பாடல்:
அப்பாவி பிரபுவைப் போல் தனித்துவமானவர் எவருமில்லை!

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் பக்தி மார்க்கத்தவர்களால் உருவாக்கப்பட்டது. ஞான மார்க்கத்தில் பாடல்கள் பாடப்படுவதுமில்லை, இங்கு பாடல்கள் உருவாக்கப்படுவதுமில்லை. அவற்றிற்கு அவசியமில்லை, ஏனெனில் நீங்கள் தந்தையிடமிருந்து ஒரு விநாடியில் உங்கள் ஆஸ்தியாகிய ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அதில் பாடல்கள் போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள் இங்கு தொடர முடியாது. குழந்தைகள் எழுதுகின்ற கவிதைகள் போன்றவை ஏனையோருக்குக் கூறுவதற்கே ஆகும், ஆனாலும் நீங்கள் அவர்களுக்கு அதனைத் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்தும்வரை, அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள், ஆகவே உங்களது சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். தந்தை 84 பிறவிச் சக்கரத்தைப் பற்றிய ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் இப்பொழுது சுயதரிசனச் சக்கரதாரிகளாகியுள்ளீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் மூலம் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். தங்கள் புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் வெற்றியாளர்கள் ஆகுகின்றார்கள். நம்பிக்கையுடையவர்கள் நிச்சயமாகச் சத்தியயுகத்திற்குச் செல்வார்கள். ஆகவே குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்: தந்தையைப் பின்பற்றுங்கள். இவரினுள் அசரீரியான தந்தை பிரவேசித்ததிலிருந்து இவர் பெருமளவு குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நகரங்களிலும்;, முழு சிந்தி இனத்திலும் சகோதர்களுக்குள் சண்டைகள் இடம்பெற்றன. இவரது குழந்தைகள் வளர்ந்ததும், இவர் தனது குழந்தைகளுக்கு விரைவாகத் திருமணம் செய்ய வேண்டும் என மக்கள் விரும்பினர். அவர்கள் வினவினார்கள்: திருமணம் செய்யாமல், எவ்வாறு அனைத்தும் தொடர முடியும்? இவர் ஒருபொழுதும் கீதையைக் கற்பதைத் தவற விடுவதில்லை. கீதையின் கடவுள் சிவனே என்பதைக் கண்டு கொண்டதும், இவர் கீதையைக் கற்பதை நிறுத்தினார். அப்பொழுது இவர் உலக அதிபதியாகுகின்ற போதையைக் கொண்டிருந்தார். இவை கடவுளாகிய சிவனின் வாசகங்கள், ஆகவே இவர் அந்தக் கீதையை வாசிப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் தூய்மை காரணமாகப் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. பல சகோதரர்களும், மாமன்மார்களும் இருந்தனர். இதனையிட்டு ஒருவர் தைரியத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் மகாவீரர்களும், மகாவீரிணிகளும் (சிறந்த போராளிகளான ஆண்களும், பெண்களும்) ஆவீர்கள். நீங்கள் ஒரேயொருவரைத் தவிர, வேறு எவரைப் பற்றியும் கரிசனை கொள்வதில்லை. ஓர் ஆணே படைப்பவர் ஆவார். படைப்பவரே தூய்மையாகுவதால், அவர் தனது படைப்புக்களையும் தூய்மையாக்க வேண்டும். எவ்வாறு ஒரு தூய்மையான அன்னமும், தூய்மையற்ற நாரையும் ஒன்றாக வாழ முடியும்? ஒரு படைப்பவர்; தனது வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும், இல்லாவிடின் சென்றுவிடுமாறும் தனது படைப்புக்களுக்கு உடனடியாகவே கட்டளை பிறப்பிப்பார். பாபாவின் மகள் திருமணமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஞானத்தைப் பெற்றபொழுது, கூறினார்: அற்புதம்! எனது தந்தை என்னைத் தூய்மையாகுமாறு கூறுகின்றார், ஆகவே நான் ஏன் அதைச் செய்யக்கூடாது? நான் விஷம் கொடுக்க மாட்டேன் என அவர் தனது கணவரிடம்; கூறினார். இவ்விடயத்தினால் பலருக்கும் பெருமளவு சண்டைகள் ஏற்பட்டன. பல புதல்விகள் பெரிய குடும்பங்களிலிருந்து வந்தார்கள். அவர்கள் வேறு எவரையிட்டும் கரிசனை கொள்ளவில்லை. தங்கள் பாக்கியத்தில் அதனைக் கொண்டிராதவர்களால், இதைப் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் தூய்மையாக இருக்க விரும்பினால், அவ்வாறிருங்கள். இல்லாவிடின், இங்கிருந்து சென்று நீங்கள் விரும்;பியதைச் செய்யுங்கள். ஒருவர் அதிகளவு தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை அதிகளவு குழப்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது. பாபா குழப்பம் அடைவதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்துள்ளீர்களா? தூரத்திலுள்ள அமெரிக்காவின் பத்திரிகைகள் போன்றவற்றிலும் கதைகள் வந்தன. அவை புதிதல்ல. முன்னைய சக்கரத்தில் இடம்பெற்றது போன்று மிகச்சரியாக இது இடம்பெற்றது. இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். நாங்கள் எங்கள் சொந்தப் படைப்புக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்நேரத்தில் முழுப் படைப்புக்களுமே தூய்மையற்றவை என்பது தந்தைக்குத் தெரியும். நானே அனைவரையும் தூய்மையாக்க வேண்டும். தந்தைக்கே அனைவரும் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, விடுதலை அளிப்பவரே, வாருங்கள்! ஆகவே அவர் கருணை கொண்டுள்ளார். அவர் கருணைநிறைந்தவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, எதனையிட்டும் பயப்படாதீர்கள். பயப்படுவதால், உங்களால் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. அப்பாவித் தாய்மார்களே துன்புறுத்தப்படுகின்றனர். இது (மகா பாரத நூலில்) சித்தரிக்கப்பட்டள்ளது. அவர்கள் திரௌபதியைத் துகிலுரிய முயன்றனர். தந்தை இப்பொழுது உங்களை 21 பிறவிகளுக்குத் துகிலுரியப்படுவதிலிருந்து பாதுகாக்கிறார். உலகிற்கு இவ்விடயங்கள் தெரியாது. நான் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருளுபவர். மக்கள் சீரழிவில் இல்லாதுவிடின், எவ்வாறு என்னால் வந்து சற்கதியை வழங்க முடியும்? உலகம் தூய்மையற்றதாகவும், தமோபிரதானாகவும் ஆகவேண்டும். அனைத்தும் புதியதிலிருந்து நிச்சயமாகப் பழையதாக வேண்டும். நீங்கள் நிச்சயமாக உங்கள் பழைய வீட்டை நீங்க வேண்டும். சத்தியயுகமே புதிய உலகமும், கலியுகம் பழைய உலகமும் ஆகும். அது சதாகாலமும் புதிதாக இருக்க முடியாது. உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தேவ இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் மீண்டும் ஒருமுறை கீதை ஞானத்தை உங்களுக்குடன் பேசுகிறேன். இங்கே இராவண இராச்சியத்தில் துன்பமே இருக்கிறது. இராம இராச்சியம் என்றால் என்ன என்பதை எவரும் அறிந்துகொள்வதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. தந்தை கூறுகிறார்: நான் இராம இராச்சியமான, சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்கு வந்துள்ளேன். குழந்தைகளாகிய நீங்கள் பல தடவைகள் இராச்சியத்தை வென்றும், இழந்தும் உள்ளீர்கள். இது உங்கள் அனைவரது புத்தியிலும் உள்ளது. நீங்கள் 21 பிறவிகளுக்குச் சத்திய யுகத்தில் வாழ்கின்றீர்கள்; அது 21 வம்சங்கள் எனப்படுகிறது. அதன் அர்த்தம் நீங்கள் வயது முதிர்ந்ததும் உங்கள் சரீரங்களை நீக்குகின்றீர்கள் என்பதாகும். அங்கு ஒருபொழுதும் அகால மரணம் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது திரிகாலதரிசிகளாகி விட்டதைப் போலுள்ளது. நீங்கள் பிறவிபிறவியாகப் பக்தி செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இராவண இராச்சியத்தில் எவ்வளவு ஆடம்பரம் உள்ளது எனப் பாருங்கள்! இது இறுதி நேரத்தின் ஆடம்பரம். சத்தியயுகத்தில் இராம இராச்சியம் இருக்கும். அவ் விமானங்கள் போன்ற அனைத்தும் அங்கு இருந்து, பின்னர் அவை அனைத்தும் மறைந்து விட்டன. இப்பொழுது அவ்விடயங்கள் அனைத்தும் மீண்டும் தோன்றியுள்ளன. அவர்கள் இப்பொழுது அனைத்தையும் கற்கின்றனர். இவற்றைக் கற்பவர்கள் தங்களுடன் அந்தச் சமஸ்காரங்களை எடுத்துச் சென்று, பின்னர் அங்கு சென்று, அந்த விமானங்களை உருவாக்குவார்கள். எதிர்காலத்தில் அவை உங்களுக்குச் சந்தோஷமளிக்கும். பாரத மக்களாலும் அந்த விமானங்கள் போன்றவற்றை உருவாக்க முடியும்; அவை புதிதல்ல. மக்கள் திறமைசாலிகள். இந்த விஞ்ஞானம் உங்களுக்குப் பின்னர் பயனுள்ளதாக இருக்கும். விஞ்ஞானம் இப்பொழுது துன்பத்தைக் கொடுக்கிறது, ஆனால் அங்கு அது உங்களுக்குச் சந்தோஷத்தையே கொடுக்கும். அங்கு அனைத்தும் புதியவையாகவே இருக்கும். புதிய உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை புதிய உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் மகாவீரர்களாக வேண்டும். கடவுள் வந்துள்ளார் என்பது உலகிலுள்ள எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகிறார்: வீட்டில் வாழும்பொழுதிலும், ஒரு தாமரை போல் தூய்மையாக இருங்கள். பயப்படுவதற்கு எதுவுமில்லை. ஒருவேளை, அதிகபட்சம் அவர்கள் உங்களை அவதூறு செய்வார்;கள். இவரும் அதிகளவில் அவதூறு செய்யப்பட்டார். கிருஷ்ணர் பெருமளவில் அவதூறு செய்யப்பட்டதையும் அவர்கள் காட்டுகின்றனர். எவ்வாறாயினும் கிருஷ்ணர் அவதூறு செய்யப்பட முடியாது. கலியுகத்திலேயே அவர் அவமதிக்கப்படுகிறார். ஒரு சக்கரத்திற்குப் பின்னர் இப்பொழுது கொண்டிருக்கின்ற அதே ரூபங்களை நீங்கள் மிகச்சரியாக மீண்டும் கொண்டிருப்பீர்கள். அந்த அதே ரூபங்கள் இடைப்பட்ட காலத்தில் ஒருபொழுதும் இருக்க மாட்டாது. 84 பிறவிகளில் ஒவ்வொரு பிறவியிலும் உங்களது முகச்சாயல்கள் மாற்றமடைகின்றன் எந்த ஆத்மாவும் ஒரேமாதிரியான முகச்சாயல்களைப் பெற முடியாது. நீங்கள் தொடர்ந்தும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறீர்கள், அப்பொழுது தொடர்ந்தும் உங்கள் முகச்சாயல்கள் மாற்றம் அடைகின்றன. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. 84 பிறவிகள் ஒவ்வொன்றிலும் கொண்டிருந்த அதே முகச்சாயல்களை நீங்கள் மீண்டும் கொண்டிருப்பீர்கள். அவர்களின் அடுத்த பிறவியில் அவர்களது முகச்சாயல்கள் மாறும்; அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களது புத்தியின் பூட்டுக்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. இது புதிய விடயமாகும். பாபாவும் புதியவர், ஞானமும் புதியது. எவராலும் இவ்விடயங்களை மிக விரைவாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அது அவர்களது பாக்கியத்தில் உள்ளபொழுதே, அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. புயல்களையிட்டு, மகாவீரர்கள்; என்றுமே பயப்படுவதில்லை. அந்த ஸ்திதி இறுதியில் இருக்கும். இதனாலேயே அதீந்திரிய சுகத்தைப் பற்றி அறிய விரும்பினால், கோப, கோபிகைகளிடமும் வினவுங்கள் என நினைவுகூரப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். முன்னைய சக்கரத்தைப் போன்று நரகம் அழிக்கப்படல் வேண்டும். சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மமே இருக்கும். அங்கு ஏகத்துவம் (ழநெநௌள) இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஒரு தர்மமே இருக்க வேண்டும். இராம இராச்சியம் இராவண இராச்சியத்திலிருந்து வேறுபட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கு விகாரமின்றிப் பிறப்பு இருக்க முடியாது. அவை அனைத்தும் தூய்மையற்ற அழுக்கான ஆடைகளாகும். உங்களுக்குத் தந்தையில் நம்பிக்கை இருந்தால், நீங்கள் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரது நாடித் துடிப்பும் உணரப்பட்டு, அதற்கேற்ப ஆலோசனையும் வழங்கப்படுகிறது. பாபா தனது குழந்தைகளிடம் அவர்கள் திருமணம் செய்ய விரும்பினால் அவர்களாகவே அதனைச் செய்யலாம் எனக் கூறினார். பல உறவினர்களும், நண்பர்களும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். ஒவ்வொருவரது நாடித் துடிப்பும் உணரப்படுகிறது. சிலர் வினவுகின்றனர்: பாபா, நான் இவ்வாறான சூழ்நிலையில் உள்ளேன். நான் தூய்மையாக இருக்கவே விரும்புகிறேன், ஆனால் எனது உறவினர்கள் என்னை வீட்டிலிருந்து விரட்டிவிட விரும்புகின்றனர். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தூய்மையாக இருக்க விரும்புவதைப் பற்றி வினவுகிறீர்கள்! உங்களால் தூய்மையாக இருக்க முடியாவிடின் சென்று திருமணம் செய்யுங்கள்! சரி, உதாரணமாக, எவருக்காவது நிச்சயதார்த்தம் ஆகி இருந்தால், நீங்கள் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஒரு தம்பதிக்குத் திருமணமாகியதும் அவளது கணவனே அவளது குரு என மணப்பெண்ணிற்குக் கூறப்படுகிறது. சரி, அந்நேரத்தில் எழுத்தில் வாங்குங்கள்: என்னை உனது குரு எனவும், கணவன் எனவும் நம்புகின்றாயா? சரி, நான் இப்பொழுது உனக்குத் தூய்மையாகுமாறு கட்டளையிடுகிறேன்! தைரியம் தேவைப்படுகின்றது. இலக்கு மிக உயர்ந்தது. நீங்கள் இருவரும் எவ்வாறு சேர்ந்து வாழ முடியும் என்பதை அனைவருக்கும் காட்ட வேண்டும். பேறு மிக சிறந்தது. நீங்கள் பெற்றுக்கொள்ளும் பேற்றைப் பற்றி அறியாதிருக்கும்பொழுதே, தீ உருவாக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நீங்கள் அத்தகைய பெரும் பேற்றைப் பெறுகிறீர்கள். ஆகவே ஒரு பிறவியில் தூய்மையாக இருங்கள். அது பெரியதொரு விடயமல்ல. உனது கணவனான நானே, உன் கடவுள் ஆவேன். எனது கட்டளைகளுக்கேற்ப நீ தூய்மையாக இருக்க வேண்டும். தந்தை உங்களுக்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார். மணமகளுக்கு அவளது கணவனே அவளது கடவுள் எனவும், அவள் அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவள் அவனது பாதங்களைப் பிடித்துவிட வேண்டும் எனவும் கூறப்படுவது பாரதத்தில் உள்ள நடைமுறையாகும். இது ஏனெனில் நாராயணனின் பாதங்களை இலக்ஷ்மி பிடித்து விட்டதாக அவர்கள் நம்புவதாலேயே ஆகும். அந்தப் பழக்கம் எங்கிருந்து வந்தது? பொய்யான படங்கள் மூலமாகும். சத்தியயுகத்தில் அத்தகைய விடயங்கள் இருப்பதில்லை. இலக்ஷ்மி அவரின் பாதங்களைப் பிடித்து விடுவதற்கு நாராயணன் எப்பொழுதாவது களைப்படைகின்றாரா? அங்கு களைப்படைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அது துன்பத்திற்குரிய விடயமாகும். அங்கு எவ்வாறு துன்பம் இருக்க முடியும்? அவர்கள் பல்வேறு பொய்யான விடயங்களை எழுதி வைத்துள்ளார்கள். பாபா குழந்தைப் பருவத்திலிருந்தே விருப்பமின்மையைக் கொண்டிருந்தார், அதனாலேயே அவர் பக்தி செய்தார். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிக நல்ல வழிமுறைகளைக் கூறுவது வழக்கம். சில குழந்தைகளை உறவினர்கள் துன்புறுத்தும்பொழுது, பாபா அவர்களைத் திருமணம் செய்யும்படி கூறுவார். மனைவி உங்களுக்குச் சொந்தமாகியவுடன், எவரும் எதுவுமே கூறமுடியாது. நீங்கள் ஒன்றாக வாழ்ந்து சகவாசிகளாகத் தூய்மையாக இருக்க முடியும். வெளிநாட்டில், அவர்கள் வயோதிபராகும்பொழுது, தம்மைப் பராமரிப்பதற்காக ஒரு சகபாடியைத் தேடிக்கொள்கின்றனர். விகாரத்தில் ஈடுபடாமல் ஒன்றிணைந்து வாழும் திருமணங்களை அவர்கள் செய்கின்றனர். நீங்கள் இப்பொழுது ஒரேயொரு தந்தையின் குழந்தைகள் என்பதும், அதனால் நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பதும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். நீங்கள் பாட்டனாரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தூய்மையற்ற உலகிற்கு வரும்படி நீங்கள் தந்தையைக் கூவியழைக்கிறீர்கள். ஓ தூய்மையாக்குபவரே! ஓ சீதையின் இராமரே! மக்கள் இராமரின் பெயரை உச்சரிக்கின்றார்கள், ஆனால் அவ்வேளையில் அவர்கள் சீதையை நினைவுசெய்வதில்லை. இலக்ஷ்மி சீதையை விட உயர்வானவர். எவ்வாறாயினும் அவர்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்கின்றார்கள். அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனைத் தெரியும், ஆனால் எவருக்கும் சிவபாபாவைத் தெரியாது. ஓர் ஆத்மா ஒரு புள்ளியே, ஆத்மாக்களின் தந்தையும் ஒரு புள்ளியே. ஆத்மா அனைத்து ஞானத்தையும் கொண்டிருக்கின்றார். அவர் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். ஞானக்கடல் இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் உயிருள்ளவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானக்கடல்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். இனிய குழந்தைகளாகிய, உங்களிடம் தைரியம் இருக்க வேண்டும். நாங்கள் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். எல்லையற்ற தந்தை குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் படைப்பினை உங்கள் கைக்குள் வைத்திருக்க வேண்டும். உங்களது மகன் உங்களுக்குக் கீழ்ப்படியாது விட்டால், அந்த மகன் உங்கள் மகனல்ல் அவர் கீழ்ப்படிவற்றவர். உங்கள் மகன் கீழ்ப்படிபவராக இருந்து அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றினால், அவரால் ஆஸ்திக்கான உரிமையைக் கோர முடியும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். இல்லாவிடின் நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள். தந்தை உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காக வந்துள்ளார். இதுவே சத்திய நாராயணனின் உண்மையான கதையாகும். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள். மம்மாவும் பாபாவும் அரசியும் அரசரும் ஆகுவதால், நீங்களும் தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை நிச்சயமாக மற்றவர்களைத் தனக்குச் சமமாக்குகின்றார். வெறுமனே பிரஜைகள் ஆகுவதில் சந்தோஷமடையாதீர்கள். தந்தையிடமிருந்து உங்கள் முழுமையான ஆஸ்தியைக் கோருவதற்கும், உங்களை முழுமையாக அர்ப்பணிப்ப்தற்கும் முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவரை உங்கள் வாரிசு ஆக்கும்பொழுது, அவர் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பார். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் தன்னை அர்ப்பணிக்கின்றார். குழந்தைகள் கூறுகின்றார்கள்: பாபா, இந்தச் சரீரம், மனம், செல்வம் அனைத்தும் உங்களுடையதே. நீங்களே தந்தையும், குழந்தையும் ஆவீர்கள். நீங்களே தாயும், நீங்களே தந்தையும் ஆவீர்கள். ஒரேயொரு தந்தையின் புகழ் மிகவும் மகத்தானது! உலகிலுள்ள எவருக்கும் இந்த விடயங்களைப் பற்றித் தெரியாது. அனைத்தும் பாரதத்தையே குறிக்கின்றது. இது 5000 வருடங்களுக்கு முந்திய அதே யுத்தம் என்பது குழந்தைகளான உங்களுக்குத் தெரியும். சுவர்க்கம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். கடவுள் உங்களைத் தத்தெடுத்துள்ளதால், நீங்கள் அச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை குழந்தைகளான உங்களை இப்பொழுது அலங்கரிக்கின்றார். அத்துடன் அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே ஞானக் கடலாகிய எல்லையற்ற தந்தை. அவர் உங்களுக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். தந்தையை அறியாதவர்கள் நாஸ்திகர்கள். உங்களுக்குத் தந்தையையும், படைப்பையும் தெரியும், எனவே நீங்கள் ஆஸ்திகர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் நாஸ்திகர்களா அல்லது ஆஸ்திகர்களா? நீங்கள் என்ன கூறுவீர்கள்? எவருமே சத்தியயுகத்தில் கடவுளை நினைவுசெய்வதில்லை என நீங்களே கூறுகின்றீர்கள். அங்கு சந்தோஷம் உள்ளதால், எவரும் சந்தோஷ வேளையில் கடவுளை நினைவுசெய்வதில்லை, ஏனெனில் அந்த நேரத்தில் அவர்களுக்குக் கடவுளைத் தெரியாது. இந்நேரத்தில் நீங்கள் ஆஸ்திகர்களாகி, உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பின்னர் அங்கு நீங்கள் அவரை நினைவுசெய்ய மாட்டீர்கள். இங்கு மக்கள் அவரை நினைவுசெய்கின்றார்கள். ஆனாலும் அவர்கள் அவரை அறியாததால், அவர்கள் நாஸ்திகர்களே ஆவார்கள். அங்கு அவரை அவர்கள் அறிந்து கொள்வதுமில்லை, அவரை நினைவுசெய்வதுமில்லை. அங்கு, சிவபாபாவிடமிருந்து தங்களுடைய ஆஸ்தியைத் தாங்கள் பெற்றதை அவர்கள் அறியார்கள், ஆனால்; அவர்கள் தூய்மையானவர்கள் என்பதால், அவர்களை நாஸ்திகர்கள் என அழைக்க முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்கு முழுமையான தைரியத்தைக் கொண்டிருங்கள். எதனையிட்டும் பயப்படவோ, குழப்பமடையவோ வேண்டாம்.

2. உங்கள் படைப்புக்களை உங்கள் கைகளில் வைத்திருங்கள். அவர்களை விகாரங்களிலிருந்து காப்பாற்றுங்கள். தூய்மையாகுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பற்றை வென்றவராக இருந்து, உங்கள் சரீரத்தை உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு பெறுமதி மிக்க சொத்தாகக் கருதி, அதனை இறை சேவைக்குப் பயன்படுத்துவீர்களாக.

உங்களிடம் பெறுமதி மிக்க ஒன்று பராமரிக்கும்படி கொடுக்கப்படும்பொழுது, நீங்கள் அதனை உங்களுiடையது என்று கருதுவதில்லை, அதன் மீது உங்களுக்குப் பற்றும் இருப்பதில்லை. அந்தச் சரீரமும் இறை சேவைக்காக உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தந்தை அதனை உங்களிடம் ஒப்படைத்துள்ளார், எனவே நீங்கள் நிச்சயமாக ஆன்மீகத் தந்தையை நினைவுசெய்வீர்கள். அது உங்களிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகக் கருதுவதால், ஆன்மீகம் இருப்பதுடன், அது உங்களுடையது என்ற பற்றும் இருக்க மாட்டாது. இதுவே ஒரு சதா யோகியாக இருப்பதற்கும், பற்றை வென்றவர் ஆகுவதற்குமான இலகு வழி ஆகும். ஏனவே, இப்பொழுது, உங்க்ள ஆன்மீக ஸ்திதியை வெளிப்படுத்துங்கள்.

சுலோகம்:
ஓய்வு ஸ்திதிக்குள் செல்வதற்கு, உங்கள் பார்வையிலும், மனோபாவத்திலும் தூய்மையைக் கீழ்க்கோடிடுங்கள். ஓம் சாந்தி