12.11.23 Avyakt Bapdada Tamil Lanka Murli 22.03.96 Om Shanti Madhuban
சகல கேள்விகளுக்கும் அப்பால் சென்று, சதா திருப்தியாக இருப்பதே, பிராமண வாழ்க்கையின் ஆளுமை ஆகும்.
இன்று, சகல பேறுகளையும் அருளும் அருள்பவரான பாப்தாதா, முழுமையான பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் தனது குழந்தைகள் எல்லோரையும் பார்க்கிறார். நீங்கள் பாப்தாதாவிடமிருந்து அதிகளவு பேறுகளைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அவற்றின் பட்டியல் ஒன்றைச் செய்திருந்தால், அது மிக நீண்டதொரு பட்டியலாக இருந்திருக்கும். அதனால், நீண்ட பட்டியலைப் பற்றிப் பேசாமல், ‘இந்தப் பிராமண வாழ்க்கையில் குறைவொன்றும் இல்லை’ என நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, உங்களிடம் அதிகளவு பேறுகள் இருப்பதை பாப்தாதா காண்கிறார். இது ஒரு நீண்ட பட்டியல்தானே? சகல பேறுகளையும் கொண்டுள்ளவர்களின் நடைமுறை வாழ்க்கையின் அடையாளம் என்ன? உங்களுக்கு இது தெரியுமல்லவா? சகல பேறுகளின் அடையாளம் என்னவென்றால், மனநிறைவெனும் ஆளுமை அந்த நபரின் முகத்திலும் அவரின் நடவடிக்கைகளிலும் எப்போதும் புலப்படும். ஆளுமையே ஒருவரைக் கவர்கிறது. எனவே, சகல பேறுகளும் இருப்பதன் அடையாளம், மனநிறைவெனும் ஆளுமையாகும். அதைத் திருப்தி என்றும் அழைக்க முடியும். எவ்வாறாயினும், அவர்களின் முகங்களில் சதா புலப்பட வேண்டிய மனநிறைவின் பிரகாசம் புலப்படவில்லை. சிலவேளைகளில், அவர்கள் மனநிறைவாக (பிரசன்சித்) இருக்கிறார்கள். சிலவேளைகளில், அவர்களுக்குள் கேள்விகள் இருக்கின்றன (பிரஸ்னசித்). இரண்டு வகையான குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு வகையினர், கேள்விகளின் சொரூபமாகி, ஒரு சூழ்நிலை வந்ததுமே, ‘ஏன்? என்ன? எப்படி? எப்போது?’ என்ற கேள்விகளைக் கேட்பவர்கள். அவர்கள் கேள்விகளின் சொரூபமாக இருப்பவர்கள். மற்றைய வகையினர், சதா பேறுகளின் சொரூபமாக இருப்பவர்கள். அதாவது, அவர்கள் முற்றிலும் மனநிறைவாக இருப்பவர்கள். அவர்களுக்கு ஒருபோதும் எந்தவிதமான கேள்விகளும் இருக்காது. ஏனென்றால், அவர்கள் சகல பேறுகளும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே, ‘ஏன்? எப்படி?’ என்ற கேள்விகள் தளம்பலை ஏற்படுத்தும். நிறைந்திருப்பவர்கள் ஒருபோதும் தளம்பல் அடைவதில்லை. வெறுமையாக இருக்கும் எதுவும் தளம்பும். எனவே, உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் சதா மனநிறைவுடன் இருக்கிறேனா? சிலவேளைகளில் மட்டுமன்றி, எப்போதும் மனநிறைவாக இருக்கிறேனா? ஞானத்தில் பத்து வருடங்கள் இருப்பவர்கள் இவ்வாறு சதா இருக்கிறார்களா அல்லது இல்லையா? நீங்கள் ‘ஆமாம்’ என்று சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் இன்னமும் இதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களா? மனநிறைவு குறைவாக இருக்குமாயின், அங்கே பேறுகள் குறைவாக இருக்கின்றன என்று அர்த்தம். அத்துடன் பேறுகள் குறைவாக இருந்தால், இன்னமும் ஏதோவோர் ஆசை எஞ்சியுள்ளது என்று அர்த்தம். ஏதாவது ஆசைகளும் குறைவான பேறுகளுமே பொறாமையின் அத்திவாரம் ஆகும். மிகச் சூட்சுமமான ஆசைகள், உங்களின் பேறுகள் குறைவதை நோக்கி உங்களை ஈர்க்கும். அதன்பின்னர், இராஜரீகமான மொழியில், ‘அது எனது ஆசை இல்லை, ஆனால் இது நடந்தால் நன்றாக இருக்கும்’ என நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, இந்த ஞானப் பாதைக்குரிய உங்களின் வாழ்க்கையில், ஏதாவது இராஜரீகமான ஆசைகள் உள்ளனவா அல்லது வெளிப்படையான ஆசைகள் உள்ளனவா எனச் சோதித்துப் பாருங்கள். வெளிப்படையான ஆசைகள் முடிந்து விட்டதை இப்போது காணக்கூடியதாக உள்ளது. ஆனால், இந்த ஞானத்திற்கு வந்தபின்னரும், இராஜரீகமான ஆசைகள் சூட்சுமமான வடிவில் இன்னமும் எஞ்சியுள்ளன. எனவே, இவற்றைச் சோதித்துப் பாருங்கள். பாப்தாதா இப்போது குழந்தைகளான உங்கள் எல்லோரையும் தந்தையைப் போல் நிரம்பியவர்களாகவும் முழுமையாகவும் ஆக்க விரும்புகிறார். யாரிடம் நீங்கள் அன்பு வைத்திருக்கிறீர்களோ, அவரைப் போல் ஆகுவது கஷ்டமான விடயம் அல்ல.
உங்களுக்கு பாப்தாதாவிடம் அதிகளவு அன்பு உள்ளதா? அல்லது வெறுமனே அன்பு உள்ளதா? (அதிகளவு அன்பு). உறுதியாகவா? எனவே, அன்பினால் எதையாவது துறத்தல் அல்லது எதையாவது மாற்றுதல் பெரிய விடயமா? (இல்லை). ஆகவே, உங்களின் துறவு சம்பூரணமாகிவிட்டதா? தந்தை விரும்பியதையும் அவர் உங்களிடம் செய்யும்படி கேட்டதையும் நீங்கள் செய்து விட்டீர்களா? எல்லா வேளையும் செய்கிறீர்களா? இதைச் சிலவேளைகளில் மட்டும் செய்வதென்பது போதாது. நீங்கள் எல்லா வேளையும் இராச்சிய பாக்கியத்தைக் கோர விரும்புகிறீர்களா அல்லது சிலவேளைகளில் மட்டுமா? நீங்கள் அதை எல்லா வேளையும் கோரவே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? எனவே, சதா மனநிறைவு இருக்க வேண்டும். உங்களின் முகங்களிலோ அல்லது உங்களின் நடவடிக்கைகளிலோ வேறெந்த உணர்வுகளும் தென்படக்கூடாது. சிலவேளைகளில், ‘இன்று, இந்தச் சகோதரியின் அல்லது இந்தச் சகோதரனின் மனோநிலை வித்தியாசமாக உள்ளது’ எனக் கூறப்படுகிறது. ‘இன்று, எனது மனோநிலை வித்தியாசமாக உள்ளது’ எனச் சிலவேளைகளில் நீங்களும் கூறுகிறீர்கள். இதை என்னவென்று அழைப்பது? இது சதா மனநிறைவா? பல குழந்தைகள் தமது புகழ்ச்சியின் (பிரசன்சா) அடிப்படையிலேயே மனநிறைவை (பிரஷன்தா) அனுபவம் செய்கிறார்கள். எவ்வாறாயினும், அந்த மனநிறைவானது தற்காலிகமானது. இன்று, அவர்களிடம் அந்த மனநிறைவு காணப்படும். ஆனால் அது சிறிது நேரத்தின் பின்னர் மறைந்துவிடும். அத்துடன் உங்களின் மனநிறைவானது எந்தவொரு புகழ்ச்சியின் அடிப்படையிலும் இல்லையே எனச் சோதித்துப் பாருங்கள். இது தற்காலத்தில் அவர்கள் கட்டடங்களைக் கட்டுவதைப் போன்றதே: அவர்கள் சீமெந்தைவிட சிறிதளவு அதிகமான மணலைக் கலக்கிறார்கள். அது கலப்படமாகிவிடுகிறது. இதுவே இங்கும் நடக்கிறது. அத்திவாரம் கலப்படமாகியுள்ளது. அது சரியானதாக இல்லை. அதன்பின்னர், ஏதாவது இக்கட்டான சூழ்நிலை அல்லது ஏதாவதொரு வகையான தளம்பல் என்ற சிறிய புயல் அடித்தாலும், அது உங்களின் மனநிறைவை முடித்துவிடுகிறது. உங்களிடம் இத்தகையதோர் அத்திவாரம் இல்லையல்லவா?
பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். அத்துடன் இப்போது அவர் அதைக் கீழ்க்கோடிடுகிறார். அதாவது, இராஜரீகமான ஆசையின் வடிவம், பெயர், புகழ், கௌரவம் என்பவையே ஆகும். நீங்கள் சேவையின் ஆதாரத்தை எடுத்துக் கொண்டு, நீங்கள் செய்யும் சேவையில் உங்களின் பெயர் போற்றப்பட வேண்டும் என விரும்புவீர்கள். எவ்வாறாயினும், ஒரு பெயரின் பின்னால் துரத்தியவண்ணம் சேவை செய்பவர்கள், அவர்கள் மிகவும் சேவை செய்பவர்களாகவும் மற்றவர்களை மிக நன்றாகக் கவர்பவர்களாகவும் இருந்தாலும், அவர்களின் பெயர்கள் ஒரு தற்காலிகமான காலப்பகுதிக்கு மட்டுமே போற்றப்படும். ஒரு பெயரைச் சம்பாதிக்கும் அடிப்படையில் சேவை செய்பவர்கள், உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்களின் பட்டியலில் பின்னாலேயே தமது பெயரைப் போட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், அவர்கள் காயை உண்டுவிடுகிறார்கள். அந்தக் காய் ஒருபோதும் பழுக்கப் போவதில்லை. எனவே, நீங்கள் ஏற்கனவே காயை உண்டுவிட்டால், எப்படிப் பழத்தை உண்பீர்கள்? நீங்கள் சேவை செய்து ஒரு பெயரைச் சம்பாதித்தீர்கள். அது பழுக்காத காய் ஆகும். அல்லது, உங்களுக்கு ஓர் ஆசை இருக்கும்: நான் அதிகளவு சேவை செய்தேன், நானே கூடுதலான சேவை செய்வதற்குக் கருவி ஆகியுள்ளேன். எனவே, ஒரு பெயரைச் சம்பாதிக்கும் அடிப்படையில் சேவை செய்பவர்கள், பழுக்காத காயை உண்பவர்கள் ஆவார்கள். பழுக்காத காயில் ஏதாவது வலிமை கிடைக்குமா? நீங்கள் நினைக்கிறீர்கள்: நான் அதிகளவு சேவை செய்தேன். அதனால் அதன் பலனாக எனக்கு மரியாதை கிடைக்க வேண்டும். அது மரியாதை (மான்) அல்ல. ஆனால் அகங்காரம் (அபிமான்). எங்கு அகங்காரம் உள்ளதோ, அங்கே எந்தவிதமான மனநிறைவும் இருக்க முடியாது. பாப்தாதாவின் இதயத்தின் கௌரவத்தைப் பெறுவதே, மகத்தான கௌரவம் ஆகும். நீங்கள் ஏனைய ஆத்மாக்களின் இதயங்களின் கௌரவத்தைப் பெற்றாலும், அந்த ஆத்மாக்கள் பெறுபவர்கள் அல்லது மாஸ்ரர் அருள்பவர்கள் ஆவார்கள். அவர்கள் அருள்பவர் அல்ல. எனவே, நீங்கள் கௌரவத்தைப் பெற விரும்பினால், சதா உங்களின் கௌரவத்தை பாப்தாதாவின் இதயத்தில் பெறுங்கள். அந்த இராஜரீகமான ஆசைகள் அனைத்தும் உங்களைப் பேறுகளின் சொரூபங்கள் ஆகுவதற்கு அனுமதிப்பதில்லை. அதனால், மனநிறைவின் ஆளுமை சதா உங்களின் முகத்திலோ அல்லது உங்களின் செயல்களிலோ புலப்படுவதில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்களின் மனநிறைவிற்கான மனோநிலை மாறுமாக இருந்தால், அது நிரந்தரமான மனநிறைவு இல்லை. பிராமண வாழ்க்கையின் மனோநிலை, சதா மலர்ச்சியாகவும் கவனமானவராகவும் இருப்பதாகும். உங்களின் மனோநிலையை மாற்றாதீர்கள். எவ்வாறாயினும், இராஜரீகமான வார்த்தைகளில், ‘இன்று, எனக்குத் தனிமை தேவை’ என நீங்கள் சொல்கிறீர்கள். உங்களுக்கு ஏன் இது தேவைப்படுகிறது? நீங்கள் சேவை செய்வதில் இருந்து அல்லது குடும்பத்துடன் இருப்பதில் இருந்து அப்பால் விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். அதனால் உங்களுக்கு அமைதியும் தனிமையும் தேவை எனச் சொல்லுகிறீர்கள். ‘இன்று, எனது மனோநிலை இப்படி உள்ளது’. எனவே, உங்களின் மனோநிலையை மாற்றாதீர்கள். ஏதாவது காரணம் இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் அந்தக் காரணத்தையும் ஒரு தீர்வாக மாற்றக்கூடியவர்களா அல்லது அந்தக் காரணங்களில் அகப்பட்டுக் கொள்பவர்களா? நீங்கள் தீர்வுகளைக் காண்பவர்கள். நீங்கள் என்ன ஒப்பந்தத்தைச் செய்துள்ளீர்கள்? நீங்கள் ஒப்பந்தக்காரர்கள்தானே? எனவே, என்ன ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்? அதாவது, நீங்கள் பஞ்சபூதங்களின் மனோநிலையையும் மாற்றுவீர்கள். நீங்கள் பஞ்சபூதங்களையும் மாற்ற வேண்டும். அதனால், பஞ்சபூதங்களின் மனோநிலையை மாற்றுபவர்களால், தமது மனோநிலைகளை மாற்ற முடியாதா? உங்களின் மனோநிலை மாறுகிறதா இல்லையா? நீங்கள் சிலவேளைகளில் உங்களின் மனோநிலையை மாற்றுகிறீர்களா? அதன்பின்னர், நீங்கள் சென்று ஒரு கடற்கரையில் அமர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறுகிறீர்கள். ஞானக்கடலின் அருகில் அல்ல, ஆனால் பௌதீகமான கடலின் அருகே. வெளிநாட்டவர்களான நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள்தானே? அல்லது, ‘எனக்கு ஏன் என்று தெரியவில்லை, இன்று நான் மிகவும் தனிமையை உணர்கிறேன்’ என நீங்கள் சொல்வீர்கள். ஆகவே, தந்தையுடனான ஒன்றிணைந்த ரூபம் எங்கே சென்றது? நீங்கள் உங்களை அவரிடமிருந்து பிரித்துவிட்டீர்களா? நீங்கள் ஒன்றிணைந்தவராக இருப்பதில் இருந்து பிரிந்துள்ளீர்கள் - இதை அன்பு என்று அழைக்க முடியுமா? உண்மையில், மனோநிலை சரியில்லாமல் இருத்தல் என்பது மிகவும் சீரியஸான விடயமாகும். ஆனால், உங்களின் மனோநிலையை மாற்றிக் கொண்டே இருப்பதும் நல்லதல்ல. மனோநிலை சரியில்லாமல் இருப்பவர்கள் பல வகையான விளையாட்டுக்களை விளையாடுவார்கள். அவர்கள் தமது மூத்தவர்களுக்கும் தமது சகபாடிகளுக்கும் கூடப் பல விளையாட்டுக்களைக் காட்டுவதை பாப்தாதா பார்க்கிறார். இத்தகைய விளையாட்டுக்களை விளையாடாதீர்கள். ஏனென்றால், பாப்தாதாவிற்குக் குழந்தைகள் எல்லோரிடமும் அதிகளவு அன்பு உள்ளது. பாப்தாதாவிற்கு விசேடமான கருவி ஆத்மாக்கள்தான் தந்தையை ஒத்தவர்களாக ஆகவேண்டும் என்றும் ஏனையோர் அவ்வாறு ஆகுவார்களா இல்லையா என்ற அக்கறை இல்லை என்றும் இல்லை. இல்லை. பாப்தாதா எல்லோரையும் சமமானவர்கள் ஆக்க வேண்டியுள்ளது. இதுவே பாப்தாதாவின் அன்பாகும். அந்த அன்பிற்கான பதிலை எப்படிக் கொடுப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது, உங்களின் விஷமத்தனமான விளையாட்டுக்களால் இதற்கான பதிலைக் கொடுக்கிறீர்களா? சிலவேளைகளில், நீங்கள் விஷமத்தனமான விளையாட்டுக்களைக் காட்டுகிறீர்கள். சிலவேளைகளில், சமமானவர் ஆகுவதன் மூலம் ஒரு பதிலைக் கொடுக்கிறீர்கள். அந்த நேரம் இப்போது முடிவடைந்துவிட்டது.
நீங்கள் இப்போது வைர விழாவைக் கொண்டாடுகிறீர்கள்தானே? 60 வருடங்களின் பின்னர், பொதுவாக உங்களின் ஓய்வெடுக்கும் வயது ஆரம்பமாகின்றது. நீங்கள் இனியும் சிறுவர்கள் இல்லை. ஆனால், ஓய்வெடுக்கும் ஸ்திதியில் இருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் எல்லாவற்றையும் அறிந்த அனுபவசாலி ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள், சக்திசாலிகள், வெற்றிநிறைந்தவர்கள். எனவே, நீங்கள் சதா ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதைப் போல், நீங்கள் சக்திநிறைந்தவர்களும் வெற்றி நிறைந்தவர்களும் ஆவீர்கள், அப்படித்தானே? ஏன் நீங்கள் சிலவேளைகளில் வெற்றிநிறைந்தவர்கள் ஆகுவதில்லை? இதற்கான காரணம் என்ன? உண்மையில், வெற்றி என்பது உங்கள் எல்லோருடைய பிறப்புரிமை ஆகும். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்தானே? நீங்கள் இதை வெறுமனே சொல்கிறீர்களா அல்லது நீங்கள் அதை நம்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஏன் வெற்றியை அனுபவம் செய்வதில்லை? இது உங்களின் பிறப்புரிமையாக இருப்பதனால், அதற்கான காரணம் என்ன? ஆகவே, இந்தப் பிறப்புரிமையை அடைவதில் அல்லது அதை அனுபவம் செய்வது ஏன் குறைவாக உள்ளது? இதற்கான காரணம் என்ன? உங்களில் பெரும்பாலானோர் முன்கூட்டியே பலவீனமான எண்ணங்கள் வெளிப்படுவதற்கு அனுமதிக்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்துள்ளார் : இது நடக்குமா இல்லையா என எனக்குத் தெரியாது. உங்களின் இந்தப் பலவீனமான எண்ணங்கள் உங்களை மனநிறைவின் சொரூபம் ஆகுவதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால், அது உங்களைக் கேள்விகளின் சொரூபம் ஆக்குகிறது. ‘இது நடக்குமா? அது நடக்கமாட்டாதா? என்ன நடக்கும்? எனக்குத் தெரியாது, இப்படி நடந்தால்.......’ இந்த எண்ணங்கள் ஒரு சுவர் போன்று ஆகிவிடும். வெற்றியானது இந்தச் சுவரின் பின்னால் மறைந்துவிடும். புத்தியில் நம்பிக்கையுள்ளவர் வெற்றி பெறுவார் என்பதே உங்களின் சுலோகம் ஆகும். இந்த சுலோகம் இந்த நேரத்திற்கு உரியதாக இருப்பதனால், இது நிகழ்காலத்திற்குரியது. எதிர்காலத்திற்கு உரியதல்ல. இது நிகழ்காலத்திற்குரிய சுலோகமாக இருப்பதனால், நீங்கள் எல்லா வேளையும் எப்படி இருக்க வேண்டும்? மனநிறைவுடையவரா அல்லது கேள்விகள் நிறைந்தவரா? எனவே, மாயை உங்களின் சொந்தப் பலவீனமான எண்ணங்களின் வலையைப் பரப்புகிறாள். நீங்கள் உங்களின் சொந்த வலையிலேயே அகப்பட்டுக் கொள்கிறீர்கள். ‘நான் வெற்றியாளன்’ என்ற இந்த விழிப்புணர்வுடன் பலவீனமான எண்ணங்களின் வலையை முடித்துவிடுங்கள். அதில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஆனால் அதை முடித்துவிடுங்கள். அதை முடிப்பதற்கான சக்தி உங்களுக்கு இருக்கிறதா? அதை மெதுவாக முடிக்காதீர்கள். ஆனால், ஒரு விநாடியில் அதை உடனடியாக முடித்துவிடுங்கள். இந்த வலை வளர அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஒரு முறை இந்த வலையில் அகப்பட்டதும், அதை விட்டு நீங்குவது மிகவும் கஷ்டமாகும். ‘வெற்றி எனது பிறப்புரிமை. வெற்றி எனது பிறப்புரிமை’. இந்தப் பிறப்புரிமை, இறை பிறப்புரிமையாகும். இதை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. இத்தகைய நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டவர்கள், இலகுவாகவும் இயல்பாகவும் சதா மனநிறைவாக இருப்பார்கள். அவர்கள் இதற்காகக் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
வெற்றி குறைவதற்கான இரண்டாவது காரணம் என்ன? நீங்கள் மற்றவர்களுக்கு அவர்களின் நேரம், எண்ணங்கள், செல்வத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துமாறு சொல்கிறீர்கள். தகுதிவாய்ந்த முறையில் எதையாவது பயன்படுத்துவது என்றால் வெற்றி அடைதல் என்று அர்த்தம். வெற்றியின் அடிப்படை, எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதாகும். நீங்கள் வெற்றி பெறாவிட்டால், நீங்கள் ஏதாவதொரு பொக்கிஷத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தவில்லை. இதனாலேயே, நீங்கள் வெற்றி பெறுவதில்லை. பல பொக்கிஷங்கள் உள்ளன. நீங்கள் சகல பொக்கிஷங்களின் பட்டியலை அறிவீர்கள்தானே? எனவே, எந்தப் பொக்கிஷத்தை நீங்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்தவில்லை என்பதையும் எதை வீணாக்கினீர்கள் என்பதையும் சோதித்துப் பாருங்கள். அப்போது இயல்பாகவே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது ஓர் ஆஸ்தியும் அத்துடன் ஓர் ஆசீர்வாதமும் ஆகும். எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தி, வெற்றி பெறுங்கள். எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் எப்படிப் பயன்படுத்துவது என உங்களுக்குத் தெரியுமா? அதன்பின்னர் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா? எதையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதே விதையாகும். வெற்றி அதன் பழம் ஆகும். விதை நன்றாக இருந்தால், அதிலிருந்து எந்தப் பழத்தையும் நீங்கள் பெறாமல் விடுவதென்பது சாத்தியமே இல்லை. எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்தும் விதையில் ஏதோ குறைகிறது. இதனாலேயே, நீங்கள் வெற்றியின் பலனை அடைவதில்லை. எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சதா உங்களின் மனநிறைவின் ஆளுமையைப் பேணுங்கள். மனநிறைவாக இருப்பவர்கள், மிக நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். உண்மையில், மனநிறைவுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கும்போது, அவர்கள் மிக அழகாகத் தென்படுவார்கள். அவர்களின் சகவாசத்தில் இருப்பதும், அவர்களுடன் அமர்ந்திருந்து பேசுவதும் மிக நன்றாக இருக்கும். ஆனால், பல கேள்விகளைக் கேட்கும் ஒருவர் வந்தால், உங்களுக்கு வேண்டாம் என்று போய்விடும். எனவே, நீங்கள் என்னவாக வேண்டும் என்ற இலட்சியத்தைப் பேணுங்கள். பல கேள்விகள் கேட்பவர்கள் ஆகாதீர்கள். ஆனால், மனநிறைவுடையவர் ஆகுங்கள்.
இன்று, இந்தப் பருவகாலத்தின் கடைசி நாளாகும். எனவே, இறுதி நாளில் என்ன செய்யப்படும்? மக்கள் ஒரு யாகத்தை வளர்க்கும்போது, அவர்கள் இறுதியாக என்ன செய்வார்கள்? அவர்கள் எல்லாவற்றையும் அதில் அர்ப்பணிப்பார்கள். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? கேள்விகளின் சொரூபங்களாக இருப்பதைத் தியாகம் செய்யுங்கள். ‘இது ஏன் நடந்தது? என்ன நடக்கிறது....?’ இல்லை. நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால், ஏன் அல்லது என்ன என்ற கேள்விகள் எவையும் இருக்கக்கூடாது. எனவே, இன்றில் இருந்து, வீணான கேள்விகள் எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள். உங்களின் நேரமும் மற்றவர்களின் நேரமும் பாதுகாக்கப்படும். தாதிகளின் நேரமும் இதில் கழிகிறது: இது ஏன் இப்படி உள்ளது? இது என்ன? இது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, இந்த நேரத்தைச் சேமியுங்கள். உங்களின் சொந்த நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் சேமியுங்கள். உங்களின் சேமிப்புக் கணக்கில் சேமியுங்கள். பின்னர், 21 பிறவிகளுக்கு சௌகரியமாக உண்டு, பருகி மகிழ்ந்திருங்கள். அங்கே நீங்கள் எதையும் சேமிக்க வேண்டியதில்லை. எனவே, நீங்கள் இதை அர்ப்பணித்து விட்டீர்களா அல்லது இன்னமும் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளதா? நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தால், அப்படிச் செய்யுங்கள். உங்களையே கேட்டுப் பாருங்கள்: இது எப்படிச் சாத்தியமாகும்? என்னால் இதைச் செய்ய முடியுமா இல்லையா? இதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பணியை மிக நன்றாக நிறைவேற்றுங்கள். ஒரு நிமிடத்தில் நீங்கள் விரும்பிய அளவு கேள்விகளை உங்களிடமே கேளுங்கள். உங்களையே கேட்டீர்களா? நீங்கள் அவற்றைத் தியாகம் செய்தீர்களா அல்லது வெறுமனே கேள்விகளை மட்டும் கேட்டீர்களா? நீங்கள் எதிர்காலத்திற்கான சகல கேள்விகளையும் முடித்துவிட்டீர்களா? (ஒரு நிமிட மௌனத்தின் பின்னர்). நீங்கள் அவற்றை முடித்துவிட்டீர்களா? (ஹா ஜி). சொல்ல வேண்டுமென்பதற்காக ‘ஆமாம்’ என்று சொல்லாதீர்கள். கேள்விகள் கேட்பதென்றால், நீங்களும் துயரத்திற்குள்ளாகி மற்றவர்களையும் துயரப்படுத்துதல் என்பதை நீங்கள் நீண்ட காலமாக அனுபவம் செய்துள்ளீர்கள். ஆகவே, உங்களின் நம்பிக்கையினதும் உங்களின் பிறப்புரிமையினதும் கௌரவத்தைப் பேணுங்கள். நீங்கள் துயரப்பட மாட்டீர்கள். நீங்கள் கௌரவத்தை அவமரியாதை செய்யும்போதே, துன்பத்திற்கு உள்ளாகுகிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களா? அல்லது, இப்போது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள், ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றதும் அது கஷ்டம் என்று சொல்வீர்களா? அப்படி இல்லைத்தானே? அச்சா.
ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுவதற்கான பாடம் உறுதியாக உள்ளதா? ஒரு கணம், விரிவாக்கத்திற்குள் செல்லுங்கள். அடுத்தகணம், உங்களை சாரத்திற்குள் அமிழ்த்திக் கொள்ளுங்கள். (பாப்தாதா அப்பியாசத்தைச் செய்வித்தார்). அச்சா. சதா இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்.
கேள்விகளின் சொரூபங்களாக இருப்பதில் இருந்து தங்களை மாற்றிக் கொள்ளும் சகல திசைகளிலும் உள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும், மனநிறைவின் ஆளுமையை சதா கொண்டிருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், தமது வெற்றியையும் தமது பிறப்புரிமையையும் உணர்ந்திருக்கும் ஆத்மாக்களுக்கும் நினைவின் சொரூபங்களாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும் எல்லாவற்றையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவதனால் இலகுவான வெற்றியைப் பெறும் ஆத்மாக்களுக்கும் தந்தைக்கு நெருக்கமான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
நானா திசைகளிலும் உள்ள ஞானத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் எல்லோருக்கும் விசேடமான வாழ்த்துக்களும் அன்பும் நினைவுகளும்.
பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:
குடும்பத்தின் கிரீடங்களாக விளங்கும் கருவி ஆத்மாக்களான உங்களுக்காக பாப்தாதா சதா இந்த எண்ணத்தைக் கொண்டுள்ளார்: ‘நீங்கள் அநாதியாக வாழ்வீர்களாக! நீங்கள் சதா பறந்தவண்ணம் மற்றவர்களையும் பறக்கச் செய்வீர்களாக!’ நீங்கள் உங்களின் சரீரங்களைத் தவத்தின் சக்தியால் இயங்கச் செய்கிறீர்கள். பாப்தாதாவிற்கு உங்களைவிட அதிக அக்கறை உள்ளது. ஆகவே, இப்போது காலத்திற்கேற்ப, துரிதமான பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். சௌகரியமாகச் சென்று, சௌகரியமாகத் திரும்பி வாருங்கள். இப்போது, உலகின் நிலைமைகளும் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சேவை செய்வதை பாப்தாதா தடுக்கவில்லை. ஆனால், ஒரு சமநிலையைப் பேணுங்கள் என்றே சொல்கிறார். எல்லோருடைய வாழ்க்கையும் தாதிகளான உங்களின் சரீரங்களிலேயே தங்கியுள்ளது. உங்களின் சரீரங்கள் நலமாக இருந்தால், நல்ல சேவை இடம்பெற முடியும். ஆகவே, அதிகளவு சேவை செய்யுங்கள். ஆனால் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டாம். சிறிதளவில் உங்களைத் தள்ளுங்கள். நீங்கள் அளவிற்கு மீறிச் செய்யும்போது என்ன நடக்கும்? பற்றரி கீழிறங்கிவிடும். ஆகவே, இப்பொழுதில் இருந்து, ஒரு சமநிலையைப் பேணுவது அவசியமாகும். இந்த வருடம் நான் இதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் அடுத்த வருடம் என்ன நடக்குமோ என்று எனக்குத் தெரியாது என நினைக்காதீர்கள். இல்லை, நீங்கள் வாழவேண்டும். அத்துடன் மற்றவர்களையும் பறக்கச் செய்ய வேண்டும். இதுவே இப்போது உங்களின் பாகங்கள், அப்படித்தானே? எனவே, உங்களின் பாகங்களைப் புரிந்து கொண்டு, உங்களைத் தள்ளுங்கள். ஆனால் ஒரு சமநிலையைப் பேணியவண்ணம் தள்ளுங்கள். ஓகே? இரண்டு நாட்கள் ஓரிடத்திலும் மூன்றாம் நாள் வேறோர் இடத்திலும் இருப்பது போன்ற வேகமான நிகழ்ச்சிகளைச் செய்யாதீர்கள். இல்லை. இன்னமும் அதற்கான நேரம் வரவில்லை. அத்தகைய நேரம் வரும்போது, நீங்கள் ஒரு நாளில் நான்கு வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அச்சா.
ஆசீர்வாதம்:
உங்களின் குறைகள் எல்லாவற்றையும் யாகத்திற்குள் அர்ப்பணிப்பதன் மூலம் தெய்வீகக் குணங்களை வெளிப்படுத்தும் திருப்தி ஆத்மா ஆகுவீர்களாக.தீபாவளி தினத்தில், சுத்தம் செய்வதற்கும் வருமானம் சம்பாதிப்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. அதேபோல், நீங்கள் ஒவ்வொரு வழிமுறையிலும் சுத்தத்தைக் கொண்டிருப்பதுடன் வருமானத்தைச் சம்பாதித்து, திருப்தியான ஆத்மா ஆகுகின்ற இலக்கைக் கொண்டிருக்க வேண்டும். திருப்தியால் மட்டுமே உங்களால் உங்களின் தெய்வீகக் குணங்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியும். அப்போது குறைபாடுகளை அர்ப்பணித்தல் இயல்பாகவே இடம்பெறும். உங்களுக்குள் எஞ்சியிருக்கும் பலவீனங்கள், குறைபாடுகள், சக்தியற்றவராக இருக்கும் உணர்வுகள் மற்றும் ஏதாவது பலவீனமான சுபாவம் எல்லாவற்றையும் முடித்து, இப்போது புதியதொரு கணக்கை ஆரம்பியுங்கள். புதிய சம்ஸ்காரங்கள் என்ற புதிய ஆடைகளை அணிந்து, உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
சுலோகம்:
தந்தைக்குக் கீழ்ப்படிவானவராக இருங்கள். சரியான வேளையில், ஆசீர்வாதங்கள் தொடர்ந்து உங்களுக்கு உதவி செய்யும்.