13.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம், அகநோக்கு உடையவர்களாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். புறநோக்குடையவர்கள் ஆகாதீர்கள். அப்பொழுது மாத்திரமே உங்;கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும்.

கேள்வி:
தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிக்கின்ற, மேலேறும் ஸ்திதிக்காக நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
1. குழந்தைகளே, நீங்கள் மேலேறும் ஸ்திதிக்குள் செல்ல விரும்பினால், உங்கள் புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணையுங்கள். இன்னார் இவ்வாறானவர், இவர் அதையும், இதையும் செய்கின்றார்; இவருக்குக் குறைபாடுகள் உள்ளன போன்ற அத்தகைய விடயங்களுக்குள் நீங்கள் செல்லத் தேவையில்லை. எவரதும் குறைபாடுகளிலிருந்தும் உங்கள் முகத்தை அப்பால் திருப்புங்கள். 2. ஒருபொழுதும் இக்கல்வியுடன் முரண்படாதீர்கள். முரளியிலிருந்து நல்ல கருத்துக்களைத் தொடர்ந்தும் கிரகியுங்கள். ஏனெனில் அப்பொழுது மாத்திரம் உங்களால் மேலேறும் ஸ்;திதிக்குள் செல்ல முடியும்.

ஓம் சாந்தி.
இப்பொழுது நடைபெறுகின்ற, இந்த வகுப்பு ஞானத்திற்குரியது, ஆனால் காலை வகுப்பு யோகத்திற்குரியது. எந்த யோகம்? நீங்கள் இதனை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும், ஏனெனில், மனிதர்களால் கற்பிக்கப்படும் ஹத்தயோகத்தில் பல மனிதர்கள் சிக்கியுள்ளனர். இங்கு இராஜயோகத்தைக் கற்பிக்கக்கூடிய அரசர்;கள் இல்லை என்பதால் இது பரமாத்மாவினால் கற்பிக்கப்படுகின்ற இராஜயோகமாகும். இந்த இலக்ஷ்மியும் நாராயணனும் ஓர் இறைவரும் இறைவியும் ஆவார்கள். அவர்கள் இராஜயோகத்தைக் கற்கும்பொழுது மாத்திரமே, அவர்களால் எதிர்காலத்தில் ஓர் இறைவரும் இறைவியும் ஆகமுடியும். இந்த ஞானம் இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் விளங்கப்படுத்தப்படுகின்றது. இது அதிமங்களகரமான யுகம் என்று அழைக்கப்படுகின்றது; இது பழைய உலகிற்கும் புதிய உலகிற்கும் இடையில், அதாவது, பழைய மனிதர்களுக்கும் புதிய தேவர்களுக்கும் இடையில் உள்ளது. இந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் பழையவர்களாக உள்ளார்கள். புதிய உலகில் புதிய ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தேவர்கள்; அவர்கள் மனிதர்கள் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் மனிதர்களாக இருந்தபொழுதிலும், அவர்களுக்குத் தெய்வீகக் குணங்கள் உள்ளன. இதனாலேயே அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் தூய்மையானவர்களாகவும் இருக்கின்றனர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: காமமே கொடிய எதிரி. அது இராவணனின் அதிமுதன்மையான தீய ஆவி. ஒருவர் மிகவும் கோபப்படும்பொழுது, மக்;கள் கூறுகிறார்கள்: நீங்கள் ஏன் குரைக்கின்றீர்கள்? இந்த இரு விகாரங்களும் உங்கள் மிகப்பெரிய எதிரிகள். குரைத்தல் என்ற வார்த்தை பேராசை அல்லது பற்றுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. சிலர் விஞ்ஞானத்தின் அகங்காரத்தினால் அதிகளவு கோபத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. காமம் என்னும் தீய ஆவி அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதிவரை அதிகளவு துன்பத்தை விளைவிக்கின்றது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காமவாளைப் பயன்படுத்துகின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்ட பின்னர், அவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவராலும் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கான உண்மையான பாதையை எவருக்கும் காட்ட முடியாது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே அவர்களுக்கு இப்பாதையைக் காட்ட முடியும் - அதாவது, எவ்வாறு எல்லையற்ற தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுவது என்பதாகும். உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியாதிருந்தால், நீங்கள் இக் கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்றும், உங்கள் புத்தியின் யோகம் வேறு எங்கோ அலைகின்றது என்பதுமே அர்த்தமாகும். இது ஒரு யுத்தகளம். இது இலகுவானது என்று எவரும் எண்ணக்கூடாது. நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட, பல புயல்களும், வீணான எண்ணங்களும் உங்கள் மனதில் தோன்றும். அவற்றினால் குழப்பம் அடையாதீர்கள். உங்கள் யோகசக்தியின் மூலம் மாத்திரமே, மாயை ஓடுவாள். இதற்குப் பெருமளவு முயற்சி தேவை. நீங்கள் சரீர உணர்வில் இருப்பதால், உங்கள் வியாபாரம் மற்றும் வேலை போன்றவற்றில் அதிகளவு களைப்படைந்து விடுகின்றீர்கள். சரீர உணர்வின் காரணமாகவே நீங்கள் அதிகளவு பேச வேண்டியுள்ளது. தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதால், நீங்கள் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற விடயங்களை மாத்திரம் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவீர்கள்: உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, புறநோக்குடையவர்கள் ஆகாதீர்கள். அகநோக்குடையவர்கள் ஆகுங்கள். சிலவேளைகளில் நீங்கள் புறநோக்குடையவர்களாக ஆக நேர்ந்தாலும்;, உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம், அகநோக்குடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்பொழுது மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இல்லாவிட்டால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதும் இல்லை, நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடையப் போவதுமில்லை. உங்கள் தலைமீது பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. பிராமணர்களே அதிக பாவத்தைச் செய்துள்ளார்கள். அவர்கள் இதில் வரிசைக்கிரமமாகவும் உள்ளார்கள். மிகவும் உயர்வானவர்கள் ஆகுபவர்களே மிகவும் தாழ்வானவர்களும் ஆகுகின்றார்கள். இளவரசர்கள் ஆகுபவர்கள், பின்னர் பிச்சைக்காரர்கள் ஆகவேண்டும். நீங்கள் இந்த நாடகத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வருபவர்களே, இறுதியிலும் வருவார்கள். முதலில் தூய்மையாகுபவர்களே முதலில் தூய்மையற்றவர்களும் ஆகுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் இவரது பல பிறவிகளின் இறுதிப்பிறவியிலேயே இவரது சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன்;, அதுவும் அவர் தனது ஓய்வு ஸ்திதியில் உள்ளபொழுதாகும். இந்நேரத்தில், முதியோர், இளைஞர் அனைவரும் தங்கள் ஓய்வு ஸ்திதியில் உள்ளனர். அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்ற தந்தைக்கான புகழும் உள்ளது; அது அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே இடம்பெறுகின்றது. நீங்கள் மங்களகரமான சங்கமயுகத்தை நினைவுசெய்ய வேண்டும். மக்கள் கலியுகத்தை நினைவுசெய்கின்றார்கள், ஆனால் நீங்கள் மாத்திரமே மங்களகரமான சங்கமயுகத்தை நினைவுசெய்கின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. உங்களிற் பலர் உங்கள் நாளாந்தக் கடமைகளையே நினைவு செய்கின்றீர்கள். புற விடயங்களிலிருந்து உங்கள் முகம் திரும்பியதும் உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியும். உங்கள் இறுதிக் கணத்தில் நீங்கள் எதனை நினைவுசெய்கின்றீர்களோ, அதற்கேற்பவே உங்களது அடுத்த பிறவி அமையும் என்றொரு கூற்றுண்டு. எங்கள் ஞானத்திற்குப் பொருத்தமான நல்ல கூற்றுக்களும், பாடல்களும் வைத்திருப்பதற்குப் பெறுமதியானவை. உதாரணமாக, ஒரு பாடல் உள்ளது: இந்த அழுக்கான உலகை நீங்கள் இப்பொழுது விட்டுச் செல்ல வேண்டும் இன்னொன்று உள்ளது: குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள். அத்தகைய பாடல்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மனிதர்கள் இவற்றை இயற்றியுள்ளபொழுதிலும் அவர்களுக்குச் சங்கமயுகத்தைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. இந்நேரத்தில், அனைவரும் குருடர்களாகவும், ஞானக்கண் இல்லாதவர்களாகவும் உள்ளனர். பரமாத்மா வரும்பொழுது மாத்திரமே அவரால் அனைவருக்கும் பாதையைக் காட்ட முடியும். அவர் ஒரு நபருக்கு மாத்திரமே இதனைக் காட்டுவதில்லை. இது அவரது சிவசக்தி சேனை. இச் சக்திசேனை என்ன செய்கின்றது? அவர்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் புதிய உலகை ஸ்தாபிக்கின்றார்கள். வேறு எவரும் அன்றி, கடவுள் மாத்திரமே கற்பிக்கின்ற இராஜயோகத்தை நீங்களும் கற்கின்றீர்கள். கடவுள் அசரீரியானவர். அவருக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஏனைய அனைவரும் சரீரதாரிகள். ஒரேயொரு தந்தையே அதிமேலானவர். அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். ஆகவே நீங்கள் ஓர் எச்சரிக்கையை விடுக்க வேண்டும். பெரிய பத்திரிகையில், மனிதர்கள் கற்பிக்கின்ற யோகம் ஹத்தயோகம், ஆனால் பரமாத்மாவாகிய பரமதந்தையான ஒரேயொரு தந்தையால் மாத்திரமே இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும், அதன் மூலம், நீங்கள் முக்தியையும் ஜீவன்முக்தியையும் பெறுகின்றீர்கள் எனப் பிரசுரியுங்கள். ஹத்தயோகத்தின் மூலம், உங்களால் இரண்டையும் பெற முடியாது. அது ஆரம்பம் முதல் இருந்துள்ள ஹத்தயோகம். அது பழையது. இந்த இராஜயோகம்; சங்கமயுகத்தில் தந்தையால் மாத்திரம் கற்பிக்கப்பட முடியும். நீங்கள் சொற்பொழிவொன்றை ஆற்றும்பொழுது முதலில், ஒரு தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஆனாலும், நீங்கள் அதனைச் செய்வதில்லை. இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்ற வெகுசிலரே உள்ளார்கள். நீங்கள் முதலில் உங்கள் சொற்பொழிவை எழுதித் தயாரியுங்கள், அப்பொழுது உங்களால் அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் சொற்பொழிவை ஒரு தாளில் பார்த்து வாசிக்காமல் நேரடியே வாய் மூலம் பேச வேண்டும். ஞானக்கடலைக் கடைந்து, தங்களை ஆத்மாக்கள் என்று கருதியவாறே பேசுகின்றவர்களுக்கே ஒரு சொற்பொழிவை ஆற்றுவதற்கான சக்தி இருக்கும். உங்கள் சகோதரர்களுடன் பேசுகின்றோம் என்ற உணர்வில் நிலைத்திருப்பதனால், சக்தி இருக்கும். இது மிகவும் உயர்ந்த இலக்காகும். பொறுப்பெடுத்தல் என்பது உங்கள் மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் போன்றதல்ல! நீங்கள் எந்தளவுக்குச் சக்திவாய்ந்தவர்கள் ஆகுகின்;றீர்களோ, மாயையும் அந்தளவு சக்தியுடன், உங்களைத் தாக்குவாள். அங்கதனும் மகாவீரரும் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதனாலேயே அவர்கள் இராவணனிடம், தங்களை அசைப்பதற்கு முயற்சி செய்யுமாறு சவால் விடுத்தார்கள். அது பௌதீகமான விடயமல்ல. சமயநூல்களில் பல கற்பனைக் கதைகள் உள்ளன. ஒரு காலத்தில் பரமதந்தையான கடவுளின் தங்கமான வாசகங்களைச் செவிமடுத்துப் பழகியிருந்த உங்கள்; செவிகள், பக்தி மார்க்கத்தின் கற்பனைக் கதைகளைச் செவிமடுப்பதால் இப்பொழுது கற்களைப் போன்று ஆகியுள்ளன. பக்தி மார்க்கத்தில், நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்க ஆரம்பித்ததால், உங்கள் பணம் முழுவதையும் இழந்ததுடன், உங்கள் நெற்றியையும் தேய்த்துக் கொண்டீர்கள். 84 பிறவிகளின் கதையும் உள்ளது. பக்தி மார்க்கத்தைப் பின்பற்றியதனால், நீங்கள் தொடர்ந்தும் கீழே வந்தீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு எவ்வாறு மீண்டும் மேலேறுவது எனக் கற்பிக்கின்றார். இப்பொழுது இது உங்கள் மேலேறும் ஸ்திதியாகும். நீங்கள் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையோடு ஈடுபடுத்தாது விட்டால், நிச்சயமாக விழுவீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்யும்பொழுது, மேலே ஏறுகிறீர்கள். அதற்குப் பெருமளவு முயற்;சி தேவை. ஆனால் சில குழந்தைகள் கவனயீனமானவர்கள் ஆகுகின்றார்கள். நீங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்பொழுது, தந்தையையும் ஞானத்தையும் மறந்துவிடுகின்றீர்கள். மாயை பல புயல்களை ஏற்படுத்துகின்றாள்: இன்னார்; இப்படியானவர்; அவர் அதனைச் செய்கின்றார்; இந்த ஆசிரியர் இவ்வாறானவர், இவருக்கு இக் குறைபாடுள்ளது. ஓ! உங்களுக்கு அதனையிட்டு என்ன அக்கறை உள்ளது? எவருமே இன்னமும் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவராகவும், முழுமையானவராகவும் ஆகவில்லை. மற்றவர்களின் குறைபாடுகளைப் பார்க்காதீர்கள், ஆனால் அவர்களின் நற்குணங்களைக் கிரகியுங்கள். எவரது குறைபாடுகளிலிருந்தும் உங்கள் முகத்தை அப்பால் திருப்புங்கள். நீங்கள் முரளியைப் பெறுகின்றீர்கள் என்பதால் அவற்றைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகிக்க வேண்டும். பாபா உங்களுக்குக் கூறுகின்ற விடயங்கள் சரியானவையா எனப் புரிந்துகொள்வதற்கு, உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விடயங்கள் எதனையும் ஒருபுறம் ஒதுக்குங்கள். இக் கல்வியுடன் என்றுமே முரண்படாதீர்கள். நீங்கள் ஓர் ஆசிரியருடனோ அல்லது கல்வியினுடனோ முரண்பட்டால், நீங்கள் தந்தையுடன் முரண்படுகின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். நிலையம் ஒன்றிற்குச் செல்லாத பல குழந்தைகள் உள்ளனர். ஒருவர் எவ்வாறு இருந்தாலும், உங்கள் அக்கறை முரளியிலேயே உள்ளது. எவர் முரளியை வாசித்தாலும், அதனைச் செவிமடுத்து, அதிலுள்ள நல்ல கருத்துக்களைக் கிரகியுங்கள். எவருடனும் நீங்கள் பேசுவதில் மகிழ்ச்சி அடையாதுவிட்டால், அப்பொழுது மௌனமாக இருந்து, முரளியைச் செவிமடுத்து வீட்டிற்குச் செல்லுங்கள். முரண்படவோ அல்லது நான் இங்கு வரமாட்டேன் என்றோ கூறாதீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். நீங்கள் அதிகாலையில் நினைவில் அமர்வதும் நல்லதே. பாபா ஒரு சேர்ச்லைட்டை கொடுக்கவே வருகிறார். பாபா தனது அனுபவத்தைக் கூறுகின்றார். அவர் அமரும் பொழுது, முதலில் தனது விசேடமான குழந்தைகளை நினைவுகூருகின்றார். அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலென்ன அல்லது கல்கத்தாவில் இருந்தாலென்ன, அவர் விசேடமானவர்களை நினைவுசெய்து, அவர்களுக்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருந்தாலும், பாபா சேவை செய்பவர்களை நினைவுசெய்கின்றார். சேவை செய்த நல்ல குழந்தைகள், தங்கள் சரீரங்களை நீங்கிச் செல்லும்பொழுது, அவர்கள் பெருமளவு சேவை செய்த பின்னரே சென்றுள்ளார்கள் என்று பாபா அந்த ஆத்மாக்களை நினைவுசெய்கின்றார். அவர்கள் நிச்சயமாக அருகாமையில் உள்ள ஒரு வீட்டிலேயே பிறப்பெடுத்திருப்பார்கள். ஆகவே, பாபா அவர்களையும் நினைவுசெய்து அவர்களுக்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுக்கின்றார். உண்மையில் அனைவரும் பாபாவின் குழந்தைகளே, ஆயினும் யார் நல்ல சேவை செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். பாபா கூறியுள்ளார்: இங்கு ஒரு சேர்ச்லைட்டைக் கொடுங்கள். பின்னர் அவர் அதனைக் கொடுக்கின்றார். இரு இயந்திரங்கள் உள்ளன. இவர் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைவதால், நிச்சயமாக இவருக்குச் சக்தி உள்ளது. இருப்பினும், எப்பொழுதும் சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்று கருதுமாறும், அவரையே நினைவுசெய்ய வேண்டும் என்றும், பாபா கூறுகின்றார். இரு ஒளிகள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். வேறு எவரிலும் இரு ஒளிகள் இருக்க முடியாது. இதனாலேயே நீங்கள் இரு ஒளிகளின் முன்னிலையில் வந்து, மிகவும் நன்றாகப் புத்துணர்ச்சி பெறுகின்றீர்கள். அதிகாலை வேளைகள் மிகவும் சிறப்பானவை. நீராடிய பின்னர், நீங்கள் மொட்டைமாடிக்குச் சென்று ஏகாந்தத்தில் அமர முடியும். இதனாலேயே பாபா பெரிய மொட்டைமாடிகளைக் கட்டியுள்ளார். போதகர்களும் முழுமையான மௌனத்தில் நடந்து செல்கின்றார்கள். அவர்கள் நிச்சயமாக கிறிஸ்துவை நினைவுசெய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கடவுளைத் தெரியாது. அவர்கள் கடவுளை நினைவுசெய்திருந்தால், அவர்களின் புத்தியில் சிவலிங்கம் பிரவேசித்திருக்கும். அவர்கள் தங்கள் சொந்தப் போதையில் நிலைத்துள்ளனர். நீங்கள் அவர்களிடமிருந்து அந்த நற்குணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தத்தாத்திரேயர் அனைவரிடமிருந்தும் நற்குணங்களைத் தேர்ந்தெடுந்தார் என அவரையிட்டுக் கூறப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்களும் தத்தாத்திரேயர்கள், ஆனால் வரிசைக்கிரமமானவர்கள். இங்கே உங்களுக்கு மிக நல்ல ஏகாந்தம் உள்ளதால், உங்களுக்குத் தேவையான அளவு சம்பாதிக்க முடியும். வெளியில், நீங்கள் உங்கள் நாளாந்தத் தொழிலை நினைவு செய்கின்றீர்கள். அதிகாலை 4.00 மணி மிகவும் சிறந்த நேரம். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்திருப்பதுடன், காவலாகவும் உள்ளீர்கள். யக்ஞத்தில் உள்ள அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த யாகத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் இந்த யக்ஞத்தின் ஒவ்வொரு பொருளும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. ஆகவே, பாதுகாப்பே முதன்மையானது! எவரும் இங்கு வரமாட்டார்கள். இங்கே நகைகள் போன்றவை இருக்க மாட்டாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இது ஓர் ஆலயமும் இல்லை. இந்நாட்களில் எங்கும் திருட்டு இடம்பெறுகின்றது. புராதனப் பொருட்கள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. உலகம் மிகவும் அசுத்தமாகி உள்ளது. காமமே கொடிய எதிரி. அது உங்களை அனைத்தையும் மறக்கச் செய்கின்றது. உங்களுக்கு அதிகாலையில் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுவதற்கான வகுப்பு உள்ளது. பின்னர் என்றென்றும் செல்வந்தர் ஆகுவதற்கான வகுப்பு இடம்பெறுகின்றது. நீங்கள் தந்தையை நினைவுசெய்வதுடன், ஞானக்கடலையும் கடைய வேண்டும். தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்வீர்கள். இது மிகச்சிறந்த, இலகுவான வழிமுறை. தந்தை விதையாக இருந்து, விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்திருப்பதைப் போன்று, இதுவும் உங்கள் தொழிலாகும். விதையை நினைவுசெய்வதனால், நீங்கள் தூய்மையானவர் ஆகுகின்றீர்கள். சக்கரத்தை நினைவுசெய்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகின்றீர்கள். அதாவது, நீங்கள் செல்வத்தைப் பெறுவீர்கள். மக்கள் மன்னன் விக்கிரமாஜீத்தினதும் (பாவத்தை வென்றவர்) மன்னன் விக்கிரமனதும் (பாவம் செய்பவர்) காலப்பகுதிகளைக் கலந்துள்ளார்கள். விக்கிரமனின் நாட்காட்டி இராவணன் வந்தபொழுது ஆரம்பித்தது. அதன்பின்னர் காலம் மாற்றமடைந்தது. முதலாவது நாட்காட்டியின் திகதிகள் வருடம் 1 இலிருந்து 2500 வருடங்கள் வரை கொண்டவை. அதன்பின்னர் உள்ள நாட்காட்டியின் திகதிகள் 2500 இலிருந்து, 5000 வருடங்கள் வரை கொண்டவை. இந்துக்களுக்குத் தங்கள் சொந்தத் தர்மத்தைத் தெரியாது. இதுவே அவர்கள் தங்கள் ஆதி தர்மத்தை மறந்து, அதர்மம் நிறைந்தவர்கள் ஆகியுள்ள ஒரேயொரு சமயம். அந்தத் தர்மத்தை ஸ்தாபித்தவரையும் அவர்கள் மறந்துள்ளார்கள். ஆரிய சமாஜம் எப்பொழுது ஆரம்பித்தது என்று நீங்கள் விளங்கப்படுத்த முடியும். ஆரியர்கள் (சீர்திருந்தியவர்கள்;) சத்தியயுகத்தில் இருந்தார்கள். இப்பொழுது சீர்திருந்தாதவர்;களே உள்ளார்கள். தந்தை இப்பொழுது உங்களைச் சீர்திருத்தவே வந்துள்ளார் உங்கள் புத்தியில் முழுச் சக்கரமும் உள்ளது. நல்ல முயற்சி செய்பவர்கள் இதனை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டு, பிறரையும் முயற்சி செய்யத் தூண்டுவார்கள். தந்தையே ஏழைகளின் பிரபு. நீங்கள் இந்தச் செய்தியைக் கிராமத்தில் வசிப்பவர்;களுக்கும் கொடுக்க வேண்டும். ஆறு படங்கள் போதுமானவை. 84 பிறவிகளின் சக்கரத்தின் படம் மிகவும் நல்லதாகும். நீங்கள் இப்படத்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், மாயை உங்களை அனைத்தையும் மறக்கச் செய்யும் வகையில் சக்திவாய்ந்தவள். இங்கே, இரு ஒளிகளும் ஒன்றாக உள்ளனர். ஒருவர் தந்தையும், மற்றவர் இவரும் ஆவார். இருவருமே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பினும், இவர் கூறுகின்றார்: நீங்கள் அதிசக்திவாய்ந்த ஒளியைப் பற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவரும் இங்கே ஓடோடி வருகின்றார்கள். இங்கே இரட்டை ஒளிகளும் உள்ளதை அவர்கள் புரிந்துகொள்கிறார்;கள். தந்தை உங்களுடன் நேரடியாகப் பேசுகின்றார். நான் உங்களுடன் மாத்திரமே பேச வேண்டும், நீங்கள் கூறுவதை மாத்திரமே செவிமடுக்க வேண்டும் என்று கூறுகின்ற ஒரு பாடல் உள்ளது. இதன் அர்த்தம் எப்பொழுதும் நீங்கள் இங்கேயே இருக்க முடியும் என்பதல்ல! எட்டு நாட்கள் போதுமானவை. அனைவருமே இங்கிருப்பதாயின், பலர் இருப்பார்கள். அனைத்தும் நாடகத்திற்கேற்பவே தொடர்கின்றது. எவ்வாறாயினும் நீங்கள் உள்ளார அந்த ஆழமான சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களைத் தங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குபவர்களே, அச்சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். நீங்கள் பிரஜைகளை உருவாக்கும்பொழுதே, உங்களால் ஓர் அரசராக முடியும். உங்களுக்கு ஒரு கடவுச்சீட்டு தேவை. நீங்கள் பாபாவிடம் வினவினால் பாபாவினால் உங்களுக்கு உடனடியாகவே கூற முடியும்: உங்களைப் பாருங்கள், உங்களுக்குள் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா எனப் பாருங்கள். நீங்கள் புகழ்ச்சி, அவதூறு அனைத்தையும் சகிக்க வேண்டும். யக்ஞத்திலிருந்து உங்களுக்குக் கிடைப்பவற்றின் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யக்ஞத்தில் கொடுக்கப்படும் உணவை நீங்கள் விரும்ப வேண்டும். சந்நியாசிகளும் தாங்கள் உணவு உண்ட பின்னர் உணவுத்தட்டைக் கழுவி அந்த நீரைப் பருகுகின்றார்கள். ஏனெனில் அவர்களுக்கு உணவின் முக்கியத்துவம் தெரியும். உங்களால் எத் தானியத்தையும் பெற முடியாத அத்தகைய காலமும் வரும். உங்களால் அனைத்தையும் சகிக்க முடியும் பொழுது மாத்திரமே, உங்களால் சித்தி எய்த முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எவரிலாவது குறைபாடுகளைப் பார்த்தால், உங்கள் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ளுங்கள். கல்வியுடன் முரண்படாதீர்கள். தத்தாத்திரேயர் போன்று ஆகி, அனைவரிடமிருந்தும் நற்ணங்களைத் தேர்ந்தெடுங்கள்.

2. உங்கள் புத்தியில் இருந்து புற விடயங்களை அகற்றி, அகநோக்குடையவர்களாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் வியாபாரம் அல்லது தொழில் போன்றவற்றைச் செய்யும்பொழுது, ஆத்ம உணர்வில் இருங்கள். அதிகளவு பேசாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் சந்தோஷத்தை அருள்பவராகி, ஒரு சந்தோஷ சொரூபமாக இருப்பதனால், ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சந்தோஷத்தைக் கொடுப்பீர்களாக.

சதா நீதியான செயல்களைச் செய்கின்ற குழந்தைகள் அச்செயல்களின் உடனடிப் பலனாக சந்தோஷத்தையும் சக்தியையும் பெறுகின்றார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களிலேனும் சிறிதளவு துன்ப அலைகளையும் அனுபவம் செய்ய முடியாத வகையில் அவர்களின் இதயங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கின்றன. சங்கமயுகத்துப் பிராமணர்களாக இருப்பது என்றால் துன்பத்தின் பெயரையோ அல்லது சுவட்டையோ கொண்டிருக்காமை என அர்த்தம் ஆகும், ஏனெனில் நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள். அத்தகைய சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகளும் மாஸ்டர் சந்தோஷத்தை அருள்பவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். அவர்கள் என்றுமே துன்பத்தைக் கொடுக்கவோ அல்லது துன்பத்தைப் பெறவோ மாட்டார்கள்.

சுலோகம்:
மாஸ்டர் அருள்பவராகி, ஒத்துழைப்பையும், அன்பையும், இரக்கத்தையும் கொடுப்பதே, ஒரு கருணைமிக்க ஆத்மாவின் அடையாளம் ஆகும்.