13.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உருத்திர ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். பிராமணர்களாகிய நீங்களே அதைப் பராமரிப்பவர்கள். எனவே, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்க வேண்டும்.

கேள்வி:
எக்குழந்தைகளுக்குத் தந்தை இறுதியில் உதவி செய்வார்?

பதில்:
இறுதியில், பல அனர்த்தங்கள் வரும்போது, மிக நன்றாகச் சேவை செய்கின்ற குழந்தைகள் தந்தையிடமிருந்து உதவி பெறுவார்கள். தனது உதவியாளர்கள் ஆகியுள்ள குழந்தைகளுக்குத் தந்தை நிச்சயமாக உதவி செய்வார்.

கேள்வி:
யாருடைய முகம் அற்புதமானது? எந்த ரூபத்தில் அதன் ஞாபகார்த்தம் உள்ளது?

பதில்:
தனக்கென ஒரு முகத்தைக் கொண்டிராத சிவபாபா இந்த முகத்தின் ஆதாரத்தை எடுக்கும்போது, அது ஓர் அற்புதமான முகமாகின்றது. இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள் இந்த முகத்தைப் பார்ப்பதற்காக நேர் முன்னிலையில் வருகின்றீர்கள். இதன் ஞாபகார்த்தமே ருண்டா மாலையிலுள்ள முகங்களாகும் (முகங்கள் கொண்ட மணிகள்).

பாடல்:
கள்ளங்கபடமற்ற கடவுள் சிவன் எத்தனை இனிமையும், அழகும் கொண்டவர்!

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை கூறுகிறார்: ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒரு முறை மாத்திரமே நான் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கின்றேன். தந்தைக்கென ஒரு முகம் இல்லை. சிவபாபா ஒரு வயதான சரீரத்தைக் கடனாக எடுக்கின்றார். எனவே, நீங்கள் பாப், தாதா இருவரினதும் முகத்தைப் பார்க்கின்றீர்கள். இதனாலேயே கூறப்படுகின்றது: பாப், தாதா இருவரிடமிருந்தும் அன்பையும், நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். முகங்கள் காட்டப்படுகின்ற ருண்டா மாலையைக் குழந்தைகளாகிய நீங்கள் பார்த்துள்ளீர்கள். ருண்டா மாலை உருவாக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவின் முகத்தையும் பார்க்கின்றீர்கள். சிவபாபா வந்து ஒரு சரீரத்தைக் கடனாக எடுப்பதை எவரும் அறியமாட்டார்கள். சிவபாபா இந்த பிரம்மாவின் வாய் மூலமாகவே பேசுகின்றார். எனவே, இது அவரது முகமேயாகும். தந்தை இந்நேரத்தில் ஒரு தடவை மாத்திரமே வந்து குழந்தைகளின் முகங்களைப் பார்க்கின்றார். சிவபாபா இந்த முகத்தைக் கடனாக எடுத்துள்ளதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இத்தகைய ஒரு தந்தைக்கு அவரது(பிரம்மாவின்) முகத்தைக் கடனாகக் கொடுப்பதில் அதிக நன்மை பெறப்படுகின்றது. அவரது செவிகளே அனைத்தையும் முதலில் செவிமடுக்கின்றன. நீங்களும் அதை உடனடியாகவே செவிமடுத்தாலும், அவரது செவிகளே அனைத்தையும்விட நெருக்கமாக உள்ளன. ஆத்மாக்களாகிய நீங்கள் ஓர் இடைவெளி விட்டே அமர்ந்திருக்கின்றீர்கள். ஆத்மா செவிகள் மூலமாகவே செவிமடுப்பதால் சற்று வேறுபாடு உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அவரது முகத்தைப் பார்ப்பதற்காக தனிப்பட்ட முறையில் வருகின்றீர்கள். இதுவே அற்புதமான முகம் ஆகும். மக்கள் சிவராத்திரியைக் கொண்டாடுகின்றனர். எனவே, அது நிச்சயமாக இங்கே இவரில் பிரவேசிக்கின்ற அசரீரியான சிவபாபாவே ஆவார். எனவே, பாரத தேசமே அவரது தேசமாகும். பாரதம் பரம தந்தை, பரமாத்மாவின் அழிவற்ற பிறப்பிடம் ஆகும். எவ்வாறாயினும், அவரது பிறப்பு மனிதர்களினுடையதைப் போன்றதல்ல. அவரே கூறுகின்றார்: நான் வந்து, இவரில் பிரவேசித்து, பின்னர் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைப் பேசுகின்றேன். ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்கும் சொந்த சரீரங்கள் உள்ளன. எனக்கென ஒரு சரீரம் இல்லை. அவர்கள் சிவனை நீள்கோள வடிவிலும் காட்டுகின்றார்கள். அவர்கள் யாகங்கள் வளர்க்கும்போது, களிமண்ணாலான நீள்கோள வடிவ உருவங்களைச் செய்கின்றனர். அவர்கள் சாலிகிராம்களைச் சிறியதாகவும், சிவலிங்கத்தைப் பெரிதாகவும் செய்கின்றனர். உண்மையில், அவை சிறியனவோ, பெரியனவோ அல்ல. தந்தையையும், குழந்தைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே அவர்கள் வெவ்வேறு பருமன்களில் அவற்றைச் செய்கின்றனர். அவர்கள் இரண்டையும் வழிபடுவதும் வெவ்வேறு விதங்களிலேயே ஆகும். ஒன்று சிவன், மற்றையவை சாலிகிராம்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். குறைந்த பட்சம் அனைத்தும் சிவனே என்றாவது அவர்கள் கூறாமாலிருக்கின்றார்கள்! இல்லை, அவர்கள் சிவலிங்கத்தைப் பெரிய உருவமாகவும், சாலிகிராம்களைச் சிறியனவாகவும் செய்கின்றார்கள். இக்குழந்தைகள் யாவரும் அவருடனேயே உள்ளனர். அவர்கள் ஏன் அந்த சாலிகிராம்கள் அனைத்தையும் வழிபடுகின்றார்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஏனெனில், நீங்கள் யாவரும் ஆத்மாக்கள் என்பதாலாகும். உங்கள் சரீரங்கள் மூலமாக நீங்கள் பாரதத்தை மேன்மையானதாக ஆக்குகின்றீர்கள். சாலிகிராம்கள் சிவபாபாவின் ஸ்ரீமத்தைப் பெறுகின்றனர். உருத்திர சிவபாபாவின் ஞான யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவபாபா பேசுகின்றார், சாலிகிராம்களும் பேசுகின்றனர். இதுவே சத்திய நாராயணனின் கதையான, அமரத்துவக் கதையாகும். அது மனிதர்களை சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக்குகின்றது. அவரை(சிவன்) வழிபடுவதே அதி மேன்மையானதாகும். ஆத்மாக்கள் மிகவும் பெரியவையல்ல, அவை சின்னஞ்சிறிய புள்ளிகள் ஆகும். ஆத்மாவிடம் அதிக ஞானம் உள்ளது. அவரில் பெரியதொரு பாகம் பதிவாகியுள்ளது. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா கூறுகின்றார்: நான் இச்சரீரத்தில் பிரவேசித்து ஒரு பாகத்தை நடிக்கின்றேன். சரீரம் மிகப்பெரியது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசித்ததும், குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு பாகத்தை நடிக்க ஆரம்பிக்கின்றார். ஆத்மாக்கள் அநாதியான, அழிவற்ற பாகமொன்றைப் பெற்றுள்ளனர். சரீரம் உயிரற்றது. ஓர் உயிருள்ள ஆத்மா அதில் பிரவேசித்ததும், கர்ப்பத்தில் தண்டனையை அனுபவிக்க ஆரம்பிக்கின்றார். எவ்வாறு ஓர் ஆத்மா தண்டனையை அனுபவிக்கின்றார்? ஓர் ஆத்மா வெவ்வேறு சரீரங்களை ஏற்கும்போது, அச்சரீரத்தின் மூலமாக அவர் எவ்வாறு மற்றவர்களுக்குத் துன்பம் விளைவித்தார் என்பது பற்றிய காட்சிகளைப் பெறுவதுடன், தொடர்ந்தும் தண்டனை பெறுகின்றார். ஆத்மா தொடர்ந்தும் விரக்திக் கூக்குரலிடுகின்றார். இதனாலேயே அது கர்ப்பச்சிறை எனப்படுகின்றது. நாடகம் எவ்வளவு நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது எனப் பாருங்கள்! ஆத்மா அத்தகையதோர் பாகத்தை நடிக்கின்றார். ஆத்மா ஒரு சத்தியம் செய்கின்றார்: நான் ஒருபோதும் பாவம் செய்யமாட்டேன். ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா மிகப்பெரிய பாகமொன்றைப் பெற்றுள்ளார். ஆத்மா தனது 84 பிறவிகளின் பாகத்தை நடிக்கின்றார், அதையே மீண்டும் மீண்டும் நடிக்கின்றார். இது ஓர் அற்புதமாகும். தந்தை இங்கிருந்து இதை விளங்கப்படுத்துகின்றார். இது மிகச்சரியானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஒரு சின்னஞ்சிறிய ஆத்மா அழிவற்ற பாகமொன்றைப் பெற்றுள்ளார். பலரும் ஓர் ஆத்மாவின் காட்சிகளைப் பெற்றுள்ளனர். ஆத்மா நெற்றிப் புருவ மத்தியில் வசிக்கின்ற ஒரு நட்சத்திரம் என அவர்கள் பாடுகின்றனர். அவர் மிகப்பெரிய பாகமொன்றை நடிக்கின்றார். இது இயற்கை எனப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் மிகப்பெரிய பாகங்களை நடிக்கின்றீர்கள். பாபா வந்து, எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது அத்தகைய மேன்மையான ஞானம் ஆகும்! உலகிலுள்ள வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. இவரும் ஒரு மனிதரே ஆவார். தந்தை இப்பொழுது இவரில் பிரவேசித்துள்ளார். இவர் ஒரு குருவின் சீடராகி, அவரிடமிருந்து மந்திர வித்தையைக் கற்றார் என்றில்லை. அவர் ஒரு குருவிடமிருந்து ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றார் என்றோ அல்லது அவர் தனது குருவிடமிருந்து ஏதோ விஷேட சக்தியைப் பெற்றுள்ளார் என்றோ சிலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் வேறுபட்டதாகும். நீங்கள் அவர் கூறுவதை நேரடியாகச் செவிமடுப்பதால் மிகவும் குதூகலமடைகின்றீர்கள். பாபா உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா ஆத்மாக்களாகிய உங்களைப் போன்று, சின்னஞ்சிறியவரே ஆவார். அவர் பரமதந்தை பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். அப்பாலுள்ள தேசமான பரந்தாமத்தில் வசிக்கின்ற அவரே அதியுயர்ந்தவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்களும் அப்பாலுள்ள தேசத்திலேயே வசிக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் சூட்சுமமான விடயங்களைக் கூறுகின்றார். அவர் ஆரம்பத்திலேயே இவற்றை விளங்கப்படுத்தவில்லை. நாளுக்கு நாள், குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் ஆழமான ஞானத்தைத் தொடர்ந்தும் பெறுகின்றீர்கள். இதனைக் கொடுப்பவர் யார்? அதி மேலான கடவுளே ஆவார். அவர் வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்மாக்கள் எவ்வாறு அங்கங்கள் மூலமாகப் பேசுகின்றனர்? நெற்றியின் புருவ மத்தியில் ஓர் ஆத்மா பிரகாசிக்கின்றார் என அவர்கள் பேசுகின்றார்கள். அவர்கள் அதனைக் கூறவேண்டும் என்பதற்காகக் கூறுகின்றனர். அது எவரது புத்தியிலும் புகுவதில்லை. பிறருக்கு விளங்கப்படுத்தக்கூடிய அளவிற்கு, வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. உங்களில் வெகு சிலரே இவற்றைப் புரிந்து கொள்கின்றீர்கள். புரிந்துகொள்பவர்கள் அதை மிக நன்றாகக் கிரகித்து, மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுகின்றனர். அதாவது அவர்கள் அதைப்பற்றிப் பேசுகின்றனர். அவரே பரம தந்தை பரமாத்மா என நீங்கள் கூறுவதால் நிச்சயமாக நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறவேண்டும். நீங்களே சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக வேண்டும். அவர்கள் நிச்சயமாக சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும். அவர் அந்த ஆஸ்தியை எப்பொழுது கொடுத்தார்? அவர் அதனை சத்திய யுகத்திலா கொடுத்தார்? கடந்தகால செயல்கள் நிச்சயமாக உள்ளன. நீங்கள் இப்பொழுது கர்ம தத்துவத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறு ஆகக்கூடியதான செயல்களைப் பற்றி பாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே சிவபாபா பிரம்மாவின் வாய் மூலமாக உங்களுக்கு ஞானத்தைப் பேசுகின்றார்;. இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. அத்தகைய காரிருள் சூழ்ந்துள்ளது. ஒளியைத் தரக்;கூடிய தந்தையை எவருக்கும் சற்றேனும் தெரியாது. நடிகர்களான நாங்கள் இந்தக் கர்ம ஷேத்திரத்தில் பாகங்களை நடிப்பதற்காக வந்துள்ளோம் என அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், தாங்கள் யார் என்றோ, தங்களின் பாபா யார் என்றோ அவர்களுக்குத் தெரியாது. உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. கடவுள் வந்து, கல்லுப் புத்தி உடையவர்களுக்கும், கூன் முதுகு உடையவர்களுக்கும், நற்பண்புகள் அற்றவர்களுக்கும் கற்பிக்கின்றார் என நினைவுகூரப்பட்டுள்ளது. முக்கியஸ்தர்கள் பலர் கண்காட்சிகளுக்கு வருகின்றனர். எவ்வாறாயினும், அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. தந்தை ஏழைகளின் பிரபு ஆவார். 100 பேரில், அரிதாக ஒரு செல்வந்தரே வெளிப்படுகின்றார். அதிலும், உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்பவர்கள் மிக அரிதாக ஒரு சிலரேயாவர். நீங்கள் ஏழைகள். தாய்மாரிடம் அதிக பணம் இல்லை. புதல்விகள் எங்கிருந்து பணத்தைப் பெறுவார்கள்? தாய்மார்கள் அரைப் பங்காளர்களாகவாவது உள்ளனர். ஒரு புதல்வியோ எதனையும் பெறுவதில்லை. அவள் தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, அரைப் பங்காளி ஆகுகின்றாள். அவளால் ஓர் ஆஸ்தியைக் கோர முடியாது. புத்திரர்கள் முழு அதிபதிகள். தந்தை முதலில் அத்தகைய குமாரிகளைத் தனக்குரியவர்கள் ஆக்குகின்றார். அவர்கள் ஒரு மாணவருக்குரிய பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் ஏழைகள், தூய்மையானவர்கள், எனவே, பூஜிக்கப்படுகின்றனர். அவையனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. இந்நேரத்தில் தொடர்கின்ற உங்கள் செயல்கள் பின்னர் பூஜிக்கப் படுகின்றன. முதலில் சிவனின் பிறந்த தினமில்லாது, கிருஷ்ணரின் பிறந்த தினம் இருக்க முடியாது. முதலில் சிவனின் பிறந்ததினமும், பின்னர், கிருஷ்ணரதும் அதன் பின்னர் இராமரது பிறந்த தினமும் உள்ளன. சிவனின் பிறப்பின் மூலம், உலகத் தாயினதும் உலகத் தந்தையினதும் பிறப்பும் நிகழ்கின்றன. எனவே, நீங்கள் நிச்சயமாக உலக ஆஸ்தியைப் பெறுவீர்கள். நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உலகத்தாயே உலகின் அதிபதி ஆவார். உலகத்; தாயின் பெயரில் பல திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. பிரம்மா அந்தளவிற்கு வழிபடப்படுவதில்லை. தந்தை தாய்மாரை முன்னிலையில் வைக்கின்றார். அனைவரும், விஷேடமாக கணவன்மார், சிவசக்திகளான தாய்மாரை உதைத்துத் தள்ளி விட்டனர். அவரே கணவன்மாருக்கெல்லாம் கணவன் ஆவார். அவர் குமாரிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். உலகத்தாயின் புதல்விகள் மாஸ்டர் உலகத் தாய்மார் ஆவார்கள். இப்புதல்விகளும் தாயின் (மம்மாவின்) அதே பணியை மேற்கொள்கின்றார்கள். மம்மாவைப் போன்று, நீங்களும் முக்காலங்களையும் அறிந்தவர்கள். ஆண்கள், பெண்கள் இருபாலரும் உள்ளனர். இது இல்லறப் பாதையாகும். பெரும்பான்மையானோர் தாய்மார்களே ஆவர். அவர்களின் பெயர் போற்றப்படுகின்றது. பிரம்மாவின் பெயர் அந்தளவிற்குப் போற்றப்படுவதில்லை. சர்சித் பிராமணர்கள் (குறித்த ஒரு வகையான பிராமணர்கள்) விஷேடமாக பிரம்மாவையே வழிபடுகின்றார்கள். இருவகையான பிராமணர்கள் உள்ளனர்: சர்சித், புஷ்கர்ணி. சமயநூல்களை உபதேசிப்பவர்கள் வேறானவர்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதையும் அவர் எவ்வாறு வருகின்றார் என்பதையும் விளங்கப்படுத்துகிறார். அவர் 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதாக சத்தியம் செய்துள்ளார். அது பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை யாவும் பின்னர் பக்தி மார்க்கத்தில் நினைவுகூரப்படுகின்றன. இந்நாடகம் அநாதியானது. அது ஒருபோதும் படம் பிடிக்கப்படுவதில்லை. அதற்கு ஆரம்பம், மத்தி, இறுதி எதுவும் இல்லை. அது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்நாடகம் எவ்வாறு தொடர்கின்றது என்பதைத் தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் 84 பிறவிகளை அனுபவம் செய்யவேண்டும். நீங்கள் பிராமண குலத்தவராகி, பின்னர் தேவ குலத்தவராகி, அதன் பின்னர் சத்திரிய குலத்தவர் ஆகுகின்றீர்கள். அவர்கள் சிவபாபாவையும், பிராமணர்களையும் மறைத்துவிட்டனர். நீங்கள் பிரம்மாவின் மூலம் பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். பிராமணப் புரோகிதர்கள் ஒரு யாகத்தைப் பராமரிக்கின்றனர். தூய்மையற்றவர்களால் ஒரு யாகத்தைப் பராமரிக்க முடியாது. அவர்கள் யாகங்கள் வளர்க்கும்போது விகாரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் யாத்திரை செல்லும்போதும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. நீங்கள் ஆன்மீக யாத்திரை செல்கின்றீர்கள். எனவே, நீங்கள் விகாரத்தில் ஈடுபடமுடியாது. இல்லாவிடில், தடைகள் ஏற்படும். உங்கள் யாத்திரை ஆன்மீகமானது. பாபா கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை மீண்டும் அழைத்துச்செல்ல வந்துள்ளேன். நான் உங்களை ஒரு நுளம்புக்கூட்டத்தைப் போன்று அழைத்துச்செல்வேன். ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கேயே வசிக்கின்றோம். அது ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்ற பரந்தாமம் ஆகும். பின்னர் நாங்கள் இங்கே வந்து, தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகின்றோம். இப்பொழுது நாங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளோம். பிராமணர்கள் ஆகுபவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். அங்கேயும் அவர்கள் ஊஞ்சல்களில் ஆடுவார்கள். அங்கே, நீங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட ஊஞ்சல்களில் ஆடுவீர்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் தொட்டிலை மிகவும் அழகாக அலங்கரிக்கிறார்கள். அனைவரும் அவர்மீது அன்பு கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பாடுகிறார்கள்: இராதை-கோவிந்தா என்ற நாமத்தை ஓதி நாங்கள் பிருந்தாவனத்திற்குச் செல்வோம். நீங்கள் இப்பொழுது நடைமுறையில் அங்கே செல்லத் தயாராக இருக்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் மனதிலுள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது கடவுளின் தேசத்திற்குச் செல்கின்றீர்கள். அங்கே அனைவரையும் பாபா எவ்வாறு அழைத்துச் செல்லப்போகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அது வெண்ணெயில் மயிரை எடுப்பதைப் போன்றதாகும். தந்தை உங்களுக்கு சற்றேனும் சிரமத்தைக் கொடுப்பதில்லை. அவர் உங்களுக்கு இராச்சியத்தை மிகவும் இலகுவாகக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் செல்லவிருக்கும் உங்களின் கிருஷ்ண தாமத்தை நினைவு செய்யுங்கள். முதலில், சிவபாபா நிச்சயமாக உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அங்கிருந்து, அவர் உங்களை சுவர்க்கத்திற்கு அனுப்புவார். நீங்கள் டெல்கி வழியாகச் செல்வதைப் போன்று, இப்பொழுது நீங்கள் மௌன தாமத்தின் வழியாகக் கிருஷ்ண தாமத்திற்கு செல்லப்போகின்றீர்கள். நீங்கள் மீண்டும் திரும்பிச் செல்கின்றீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். பின்னர் நீங்கள் கிருஷ்ண தாமத்திற்குச் செல்வீர்கள். நாங்கள் பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றோம். எனவே, தந்தையை நினைவு செய்து, தூய்மையாகுங்கள்! அவர்கள் யாத்திரை செல்லும்பொழுது, நிச்சயமாகத் தூய்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் கற்கும்பொழுதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். தூய்மை நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். இந்நேரத்தில் நீங்கள் செய்கின்ற முயற்சியே ஒவ்வொரு கல்பத்திற்குமான முயற்சியாகின்றது. நீங்கள் முயற்சி செய்யவேண்டும். இப்பாடசாலை மிகவும் மகத்தானது. எனவே, நீங்கள் நிச்சயமாகக் கற்கவேண்டும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார்! ஒரு நாளையேனும் தவறவிடாதீர்கள். இதுவே அதி பெறுமதியான கல்வியாகும். இந்த பாபா ஒருபோதும் ஒரு நாளையேனும் தவறவிடுவதில்லை. இங்கே குழந்தைகளாகிய நீங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உங்கள் புத்தியை நிரப்பிக்;கொள்ளலாம். நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிக போதையை அனுபவம் செய்வீர்கள். உங்களுக்கு எந்த பந்தனமும் இல்லாவிட்டால், நீங்கள் இங்கேயே தங்கலாம். எவ்வாறாயினும், மாயை உங்களை பந்தனத்தில் பிணைத்துவிடுகிறாள். பலர் விடுமுறையும் எடுத்துக்கொள்கிறார்கள்! பாபா கூறுகின்றார்: முழுமையாகப் புத்துணர்ச்சி பெறுங்கள். நீங்கள் வெளியே செல்லும்பொழுது அந்த போதை இருக்க மாட்டாது. முரளியை வாசிப்பதன் மூலம், போதையடைகின்ற பலர் உள்ளனர். பல அனர்த்தங்களும் வரவுள்ளன. உதவியாளர்களாகி, நன்றாகச் சேவை செய்பவர்கள் உதவியைப் பெறுவார்கள். பின்னர் இறுதியிலும், அவர்களுக்கு உதவி கிடைக்கும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக்கல்வி அதி பெறுமதிவாய்ந்தது. கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே, ஒரு நாளையேனும் தவறவிடாதீர்கள். ஞானப் பொக்கிஷத்தால் உங்கள் புத்தியைத் தினமும் நிரப்பிக்கொள்ளுங்கள்.

2. இதுவே கற்பதற்கான நேரமாகும், அத்துடன் நீங்கள் ஒரு யாத்திரையிலும் உள்ளீர்கள். உருத்திர யாகத்தைப் பராமரியுங்கள், இதைச் செய்வதற்கு நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்கவேண்டும். எந்த விகாரத்தினதும் ஆதிக்கத்திற்குள்ளாகி, ஒரு தடையை உருவாக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:
பாக்கியத்தை அருள்பவராகிய தந்தையிடமிருந்து நீங்கள் பெற்ற சந்தோஷ பாக்கியத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் அதனை அதிகரித்துக் கொள்வீர்களாக.

பாக்கியத்தை அருள்பவராகிய தந்தை உங்களைத் தனக்கு உரியவராக ஆக்கியது உங்களின் மிகப்பெரிய பாக்கியமாகும். உலகில் உள்ள மக்கள் கடவுளிடமிருந்து ஒரு கணப்பார்வையை பெறுவதற்கு அதிகளவு ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நீங்களோ சதா அவருடைய கண்களில் அமிழ்ந்திருக்கின்றீர்கள். இதுவே பாக்கியசாலியாக இருப்பது எனப்படுகின்றது. பாக்கியம் உங்களுடைய ஆஸ்தியாகும். முழு கல்பத்திலும், இப்பொழுது மாத்திரமே இத்தகைய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். எனவே, தொடர்ந்தும் பாக்கியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். அதனை பகிர்ந்து கொள்வதே அதனை அதிகரித்துக் கொள்வதற்கான வழியாகும். நீங்கள் எந்தளவிற்கு பிறருடன் அதனை அதிகளவு பகிர்ந்து கொள்கிறீர்களோ, அதாவது அவர்களை நீங்கள் பாக்கியசாலிகள் ஆக்குகிறீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாக்கியம் அதிகரிக்கும்.

சுலோகம்:
தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதை அனுபவம் செய்து, சதா ஸ்திரமான ஸ்திதியை கொண்டிருப்பதற்கு ஒருமுகப்படுத்தும் பயிற்சியை அதிகரியுங்கள்.