13.09.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    22.03.86     Om Shanti     Madhuban


தூய்மையே சந்தோஷம், அமைதி, சுகத்தின் அத்திவாரம் ஆகும்.


இன்று, எங்கும் உள்ள, புனிதத்தன்மையும் சந்தோஷமும் உடைய தனது குழந்தைகளை பாப்தாதா பார்க்கிறார். இந்த முழு நாடகத்திலும் வேறு எந்த வேளையிலும், புனிதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் சிறப்பியல்பைக் கொண்டிருக்கும் பெரிய எண்ணிக்கையிலான பல குழந்தைகளின் ஒன்றுகூடல் இருக்க முடியாது. தற்காலத்தில், மக்களுக்கு தவத்திரு (ர்ளை ர்ழடiநௌள) அல்லது மாண்புமிகு (ர்ளை ர்iபாநௌள) என்ற பட்டங்களைக் கொடுக்கிறார்கள்;. ஆனால், அதன் நடைமுறை அத்தாட்சியை நீங்கள் பார்த்தால், அந்தத் தூய்மையும் மகத்துவமும் புலப்படுவதில்லை. இத்தகைய மகத்துவமான, தூய ஆத்மாக்களின் ஒன்றுகூடல் வேறு எங்கு இடம்பெற முடியும் என பாப்தாதா பார்த்தார். தமது செயல்களில் மட்டுமில்லாமல், நிச்சயமாக எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றிலும் தூய்மை ஆகவேண்டும் என்ற திடசங்கற்பமான எண்ணம் ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ளது. வேறு எங்கும் எவருக்கும் தூய்மை ஆகுவதற்கான இந்த மேன்மையான, திடசங்கற்பமான எண்ணம் இருக்க முடியாது. வேறு எங்கும் இது என்றும் நீடித்திருப்பதாக இருக்காது. வேறு எங்கும் இது இலகுவானதாக இருக்காது. எவ்வாறாயினும், நீங்கள் எல்லோரும் தூய்மையைக் கிரகிப்பதை மிகவும் இலகுவானதாகக் கருதுகிறீர்கள். இது ஏனென்றால், நீங்கள் பாப்தாதாவிடமிருந்து ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். ஞானத்தின் சக்தியால், ஆத்மாவான நான் என்பதன் ஆதியான, அநாதியான ரூபத்தைத் தூய்மை என நீங்கள் இனங்கண்டுள்ளீர்கள். உங்களின் ஆதியான, அநாதியான ரூபத்தை நீங்கள் உணர்ந்ததால், இந்த விழிப்புணர்வானது உங்களைச் சக்திநிறைந்தவர்களாக ஆக்கி, அனைத்தையும் இலகுவாக அனுபவம் பெறச் செய்கிறது. உங்களின் நிஜமான ரூபம் உண்மையில் தூய்மை என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். தீய சகவாசத்தின் ஆதிக்கத்தின் வடிவம் தூய்மையின்மையே. ஆகவே, நிஜத்தை ஏற்றுக் கொள்வது இலகுவாகி உள்ளது.

நீங்கள் உங்களின் ஆதி தர்மம், ஆதி இல்லம், உங்களின் தந்தை, உங்களின் ஆதி ரூபமும் அதன் செயல்களையும் பற்றிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே, உங்களிடம் ஞானத்தின் சக்தி இருப்பதனால், கஷ்டமான விடயமும் மிகவும் சுலபமாகி உள்ளது. இன்று, மகாத்மாக்கள் என்று அழைக்கப்படும் ஆத்மாக்களும் அதை அசாத்தியமாகவும் இயற்கைக்கு மாறானதாகவும் கருதுகிறார்கள். ஆனால், தூய ஆத்மாக்களான நீங்களோ அந்த அசாத்தியமானதையும் மிக இலகுவானதாக அனுபவம் செய்கிறீர்கள். தூய்மையை ஏற்றுக் கொள்வது இலகுவானதா அல்லது கஷ்டமா? தூய்மை உங்களின் ஆதி ரூபம் என உங்களால் முழு உலகிற்கும் ஒரு சவால் விடுக்க முடியும். தூய்மை சக்தியால், எங்கு தூய்மை உள்ளதோ, அங்கு இயல்பாகவே அமைதியும் சந்தோஷமும் இருக்கும். தூய்மையே அத்திவாரம் ஆகும். தூய்மையானது அதன் குழந்தைகளான அமைதிக்கும் சந்தோஷத்திற்கும் தாய் எனக் கூறப்படுகிறது. எனவே, எங்கு தூய்மை உள்ளதோ, அங்கு இயல்பாகவே அமைதியும் சந்தோஷமும் இருக்கும். இதனாலேயே, நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். உங்களால் ஒருபோதும் சந்தோஷமற்றவர் ஆகமுடியாது. நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பவர்கள். நீங்கள் புனிதமானவர்கள் ஆகும்போது, நிச்சயமாக சந்தோஷமாகவும் இருப்பீர்கள். தூய ஆத்மாக்களின் அடையாளம், அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். எனவே, புத்தியில் நம்பிக்கை உள்ள எத்தனை தூய ஆத்மாக்கள் இங்கிருக்கிறார்கள் என பாப்தாதா பார்த்தார். உலகிலுள்ள மக்கள் அமைதிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் ஓடித் திரிகிறார்கள். ஆனால், அமைதிக்கும் சந்தோஷத்திற்கும் அடிப்படை தூய்மையே ஆகும். அவர்களுக்கு அந்த அடிப்படை என்னவென்று தெரியாததால், தூய்மை என்ற அத்திவாரம் பலமானதாக இல்லாததால், அவர்கள் தற்காலிகமான அமைதியையும் சந்தோஷத்தையும் மட்டுமே பெறுகிறார்கள். ஒரு கணம் அவர்களிடம் அது இருக்கிறது. அடுத்த கணம் அது இருப்பதில்லை. தூய்மை இல்லாமல், நிரந்தரமான அமைதியை அல்லது சந்தோஷத்தைப் பெறுவது அசாத்தியமானதே. நீங்கள் அனைவரும் அந்த அத்திவாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் அமைதிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் ஓடித்திரிய வேண்டியதில்லை. குழந்தைகள் தானாகவே தமது தாயிடம் செல்வதைப் போல், அமைதியும் சந்தோஷமும் தானாகவே தூய ஆத்மாக்களிடம் வரும். குழந்தைகளை நீங்கள் எந்தளவிற்குப் பிரிக்க முயற்சி செய்தாலும், அவர்கள் தமது தாயிடமே செல்வார்கள். எனவே, தூய்மையே அமைதியினதும் சந்தோஷத்தினதும் தாய் ஆகும். எங்கு தூய்மை உள்ளதோ, அங்கு இயல்பாகவே அமைதியும் சந்தோஷமும் சுகமும் இருக்கும். எனவே, நீங்கள் என்னவாகி உள்ளீர்கள்? துன்பம் அற்ற உலகின் சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இந்தப் பழைய உலகின் சக்கரவர்த்திகள் இல்லை. ஆனால் துன்பற்ற உலகின் சக்கரவர்த்திகள். இந்த பிராமணக் குடும்பமும் எந்தவிதத் துன்பமும் அற்றது. அதாவது, இது சந்தோஷ உலகம் ஆகும். எனவே, நீங்கள் இந்த சந்தோஷ உலகின் சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். துன்பற்ற உலகின் சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். நீங்களும் அதிபுனிதமானவர்கள் அல்லவா? உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கிரீடமும் ஒரு சிம்மாசனமும் உள்ளன. வேறு என்ன குறை உள்ளது? இது அழகானதொரு கிரீடம். ஒளிக்கிரீடம் தூய்மையின் அடையாளம். நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, துன்பமற்ற உலகின் சக்கரவர்த்திகளின் கிரீடங்கள், தனித்துவமானவை. உங்களின் சிம்மாசனமும் தனித்துவமானது. உங்களின் இராச்சியம் தனித்துவமானது. சக்கரவர்த்திகளான நீங்களும் தனித்துவமானவர்கள்.

தற்காலத்தில் மனித ஆத்மாக்கள் அதிகளவில் ஓடித்திரிவதைக் காணும்போது, பாப்தாதா அந்தக் குழந்தைகளில் கருணை கொள்கிறார். அவர்கள் தொடர்ந்து அதிகளவு முயற்சி செய்கிறார்கள். முயற்சி என்றால் ஓடித்திரிதல். அவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். ஆனால் என்ன பேறுகளைப் பெறுகிறார்கள்? சந்தோஷம் ஏற்படும். ஆனால், சந்தோஷத்துடன் கூடவே, ஏதாவதொன்றின் மூலம் அவர்கள் துன்பத்தையும் பெற்றிருப்பார்கள். வேறு எதுவும் இல்லாவிட்டாலும், தற்காலிக சந்தோஷத்துடன், கவலை மற்றும் பயம் என்ற இரண்டு விடயங்களும் காணப்படும். எனவே, எங்கு கவலை உள்ளதோ, அங்கு ஓய்வு என்பது இருக்காது. எங்கு பயம் உள்ளதோ, அங்கு அமைதி இருக்க முடியாது. எனவே, சந்தோஷத்துடன் கூடவே, துன்பத்தையும் அமைதியின்மையையும் விளைவிக்கும் காரணிகளும் உள்ளன. ஆனால் நீங்கள் அனைவரும் துன்பத்தை விளைவிக்கும் காரணிகளுக்கான தீர்வைக் கண்டுபிடித்துள்ளீர்கள். நீங்கள் இப்போது சகல பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டுள்ள, தீர்வுகளின் சொரூபம் ஆகியுள்ளீர்கள். பிரச்சனைகள் பொம்மைகளைப் போல் உங்களுடன் விளையாடவே வருகின்றன. அவை உங்களுடன் விளையாடவே வருகின்றன. உங்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல. நீங்கள் பயப்படுபவர்கள் இல்லையல்லவா? சகல சக்திகளின் பொக்கிஷத்தை உங்களின் பிறப்புரிமையாக நீங்கள் பெற்றிருக்கும்போது, என்ன குறை ஏற்பட முடியும்? நீங்கள் நிரம்பியிருக்கிறீர்கள், அல்லவா? ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானின் முன்னால் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது. ஒரு யானையின் காலடியில் ஓர் எறும்பு மிதிபட்டால், அதை அறிந்து கொள்ள முடியுமா? எனவே, அந்தப் பிரச்சனைகளும் மகாராத்திகளான உங்களின் முன்னால் எறும்புகள் போன்றவையே. அனைத்தையும் ஒரு விளையாட்டு எனக் கருதுவதன் மூலம், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அப்போது, ஒரு சந்தர்ப்பம் எத்தனை பெரியதாக இருந்தாலும், அது சிறியதாகிவிடும். தற்காலத்தில் குழந்தைகள் அவர்களின் புத்திகளால் என்ன விளையாட்டை விளையாடச் செய்கிறார்கள்? நீங்கள் குழந்தைகளிடம் கணக்கு செய்யச் சொன்னால் அவர்கள் சலிப்படைந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் தமது கணிதத்தை ஒரு விளையாட்டாக மிகவும் சந்தோஷமாகச் செய்வார்கள். அதனால் உங்கள் அனைவருக்கும் பிரச்சனைகள் எறும்புகளைப் போன்றவை, இல்லையா? எங்கு தூய்மை சக்தி, அமைதி சக்தி, சந்தோஷ சக்தி என்பவை உள்ளனவோ, அங்கு உங்களின் கனவுகளில்கூட துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் எந்தவிதமான அலைகளும் இருக்க முடியாது. சக்திசாலி ஆத்மாக்களின் முன்னால் துன்பத்திற்கும் அமைதியின்மைக்கும் வருவதற்கான தைரியமும் இருக்காது. தூய ஆத்மாக்கள் எப்போதும் மலர்ச்சியாக இருப்பபவர்கள். எப்போதும் இதை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். நீங்கள் இப்போது குழப்பம், தடுமாற்றம், துன்பம், அமைதியின்மை என்ற பல வகையான வலைகளில் இருந்தும் அப்பால் விலகிவிட்டீர்கள். ஏனென்றால், இப்போது அவற்றில் ஒன்றினாலும் துன்பம் இல்லை. ஒரு துன்பம் வந்தாலும் அதன் சந்ததி அனைத்தையும் அது கொண்டுவந்துவிடும். எவ்வாறாயினும், நீங்கள் அந்த வலைகளில் இருந்து அப்பால் விலகிவிட்டீர்கள். நீங்கள் உங்களைப் பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்கள், இல்லையா?

இன்று, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். பாப்தாதா எப்போதும் அவுஸ்திரேலியாவில் இருப்பவர்களின் தபஸ்யாவும் மகாதானிகளாக இருக்கும் மனோபாவமும் என்ற சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசுவார். சதா சேவை செய்வதற்கான ஆழ்ந்த அன்பின் தபஸ்யா தொடர்ந்து தபஸ்வி ஆத்மாக்களான உங்களுக்கும் வேறு பல ஆத்மாக்களுக்கும் பலனைக் கொடுக்கும். நிலத்திற்கேற்ற வழிமுறையையும் விரிவாக்கத்தையும் பார்க்கும்போது, பாப்தாதா மேலதிகமாக மகிழ்ச்சி அடைகிறார். அவுஸ்திரேலியா எப்படியும் அசாதாரணமானதே. அங்குள்ள அனைவரும் சேவை செய்வதற்காக மிக விரைவாக துறவறத்தின் மனோபாவத்தை விருத்தி செய்து கொள்கிறார்கள். இதனாலேயே பல நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாம் பாக்கியத்தைப் பெற்றுள்ளதைப் போல், நாம் இப்போது மற்றவர்களின் பாக்கியத்தையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருத்தலே தபஸ்யா ஆகும். எனவே, தியாகம் மற்றும் தபஸ்யா என்ற வழிமுறையால் நீங்கள் முன்னேறுகிறீர்கள். சேவை செய்வதற்கான நோக்கம், பல்வேறுபட்ட, எல்லைக்குட்பட்ட உணர்வுகளை முடித்துவிடும். வெற்றிக்கான அடிப்படை, தியாகமும் தபஸ்யாவுமே ஆகும். உங்களுக்குப் புரிகிறதா? உங்களிடம் ஒன்றுகூடலின் சக்தி உள்ளது. ஒருவர் ஒன்றைக் கூறியதும் மற்றவர் அதைச் செய்கிறார். ஒருவர் ஒன்றைக் கூறியதும், மற்றவர் அது சாத்தியமில்லை எனக் கூறுவதில்லை. அதனூடாக ஓர் ஒன்றுகூடல் பிளவுபட்டுவிடும். ஒருவர் ஒன்றைக் கூறினால், மற்றவர் உற்சாகத்துடன் ஒத்துழைத்து, அதை நடைமுறையில் இடுகிறார். இதுவே ஒன்றுகூடலின் சக்தி ஆகும். பாண்டவர்களின் நல்லதொரு ஒன்றுகூடலும் காணப்படுகிறது. அவர்கள் ஒருபோதும் நீங்கள் அல்லது நான் என்பதில் ஈடுபடுவதில்லை. அவர்கள் பாபா, பாபா எனக் கூறுகிறார்கள். அதனால் சூழ்நிலைகள் முடிந்துவிடுகின்றன. நீங்கள் அல்லது நான் அல்லது எனது, உனது என்பதில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளும்போது மட்டுமே முரண்பாடு தோன்றுகிறது. நீங்கள் தந்தையை உங்களின் முன்னால் வைக்கும்போது, எந்தவிதமான தடைகளும் உங்களின் முன்னால் வர முடியாது. நீங்கள் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதை அனுபவம் செய்கிறீர்கள். அத்துடன் நீங்கள் துரித கதியில் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யும் ஆத்மாக்கள். நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் ஸ்திதியே பலமான ஸ்திதி ஆகும். மீண்டும் மீண்டும் தடைகளின் ஆதிக்கத்திற்கு உட்படுபவர்கள் தமது அத்திவாரத்தைப் பலவீனமானதாக்கி விடுகிறார்கள். நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டுள்ள ஆத்மாக்கள், தாமும் சக்திசாலிகளாக இருப்பதுடன், மற்றவர்களையும் சக்திசாலிகள் ஆக்குகிறார்கள். ஏனெனில் அவர்களிடம் பலமான அத்திவாரம் உள்ளது. உடைந்துபோன எதையும் ஒன்றாக ஒட்டி வைத்தாலும், அது பலவீனமாகவே இருக்கும். நீண்ட காலத்திற்கு சக்திசாலிகளாகவும் தடைகளில் இருந்து விடுபட்டும் இருக்கும் ஆத்மாக்கள், இறுதியிலும் தடைகளில் இருந்து விடுபட்டு, திறமைச் சித்தி எய்தி, முதல் பிரிவிற்குள் செல்வார்கள். எனவே, சதா நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான இலக்கை நிச்சயமாகக் கொண்டிருங்கள். ஒரு தடை வந்தாலும், உங்களால் அதை முடிக்க முடிந்தது, அதனால் அது பரவாயில்லை என நினைக்காதீர்கள். மீண்டும் மீண்டும் தடைகள் வரும்போது அவற்றை முடிப்பதனால், உங்களின் நேரமும் சக்தியும் வீணாகிவிடும். நீங்கள் அந்த நேரத்தையும் சக்தியையும் சேவைக்காகப் பயன்படுத்தினால், ஒன்றுக்குப் பலனாகப் பலமில்லியன்மடங்குளை நீங்கள் சேமிப்பீர்கள். இதனாலேயே, நீண்ட காலத்திற்குத் தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் ஆத்மாக்கள், தடைகளை அழிப்பவர்களாகப் பூஜிக்கப்படுகிறார்கள். தடைகளை அழிப்பவர்கள் என்ற தலைப்பு, பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்களுக்கே உரியது. நான் தடைகளை அழிக்கும் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா. இந்த விழிப்புணர்வுடன் நீங்கள் சதா தடைகளில் இருந்து விடுபட்டவராகி, தொடர்ந்து பறக்கும் ஸ்திதியில் பறப்பீர்கள். மற்றவர்களையும் பறக்கச் செய்வீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் உங்களின் சொந்தத் தடைகளை அழித்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் மற்றவர்களின் தடைகளை அழிப்பவர்களாகவும் ஆகவேண்டும். பாருங்கள், ஆரம்பத்தில் இருந்தே ஒருபோதும் தடைகளை எதிர்நோக்காத ஒரு கருவி ஆத்மாவை (னுச.நிர்மலா) நீங்கள் பெற்றுள்ளீர்கள். அவர் எப்போதும் அன்பானவராகவும் பற்றற்றவராகவும் இருக்கிறார். அவர் சிறிது கண்டிப்பானவரே. ஆனால் இதுவும் அத்தியாவசியமானதே. இத்தகைய கண்டிப்பான ஆசிரியர் உங்களுக்கு இல்லாவிட்டால், இத்தகைய விரிவாக்கம் இடம்பெற்றிருக்க மாட்டாது. இதுவும் அத்தியாவசியமானதே. நோயைக் குணப்படுத்த கசப்பான மருந்து தேவையாக இருப்பதைப் போல், நாடகத்தின்படி, நீங்கள் நிச்சயமாகக் கருவி ஆத்மாக்களின் நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். எவ்வாறு அவர் வந்தவுடன் சேவைக்குக் கருவி ஆகினாரோ, அதேபோல், ஆத்மாக்கள் அவுஸ்திரேலியாவிற்குச் சென்றதும், அவர்களும் நிலையங்களைத் திறப்பதற்கான சேவைக்குக் கருவிகள் ஆகுகிறார்கள். தியாக உணர்வுகளின் இந்த அதிர்வலைகளால் அவுஸ்திரேலியாவிலும் அதனுடன் தொடர்புடைய இடங்களிலும் விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது. தபஸ்யாவும் தியாகமும் உள்ளவர்;கள் மேன்மையான ஆத்மாக்கள் ஆவார்கள். ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் வேகமான முயற்சியாளர்களே. ஆனால் நீங்கள் முயற்சியாளர்களாக இருந்தாலும், சிறப்பியல்புகளும் நிச்சயமாக அவற்றின் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த வேளையில் அனைவரும் சம்பூரணமானவர்கள் ஆகுகிறார்கள். எவரும் இன்னமும் சம்பூரணம் ஆகிவிட்ட சான்றிதழைப் பெறவில்லை. எவ்வாறாயினும், நீங்கள் முழுமைக்கு நெருக்கமாக வந்துவிட்டீர்கள். இது வரிசைக்கிரமமாக உள்ளது. சிலர் மிகவும் நெருக்கமாக வந்திருக்கிறார்கள். ஏனையோர் வரிசைக்கிரமமாக முன்னால் அல்லது பின்னால் இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். தியாகத்தின் விதையானது, நீங்கள் உங்களின் பாக்கியத்தைப் பெறச் செய்கிறது. சக்தி சேனையை பாப்தாதா மிகவும் விரும்புகிறார். ஏனெனில் உங்களிடம் தைரியம் உள்ளது. எங்கு தைரியம் உள்ளதோ, பாப்தாதாவின் உதவி சதா உங்களுடன் இருக்கும். நீங்கள் சதா திருப்தியாக இருப்பவர்கள், அல்லவா? திருப்தியே வெற்றியின் அடிப்படை ஆகும். நீங்கள் அனைவரும் திருப்தியான ஆத்மாக்கள். அதனால் வெற்றி உங்களின் பிறப்புரிமை. உங்களுக்குப் புரிகிறதா? அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அதி அன்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே, அவர்களின் மீது மேலதிக உரிமை உள்ளது. அச்சா.

அவ்யக்த முரளிகளில் இருந்து கேள்விகளும் பதில்களும்.

கேள்வி: சக்தி சேனையின் பெயர் எப்போது உலகில் போற்றப்படும்?

பதில்: நிலையான, ஸ்திரமான ஸ்திதியின் ஒன்றுதிரட்டிய பயிற்சியும் ஒரேயொரு தூய எண்ணத்தில் ஸ்திரமாகும் நிலையும் இருக்கும்போதே அது நிகழும். ஓர் ஒன்றுகூடலில், ஒருவருக்கேனும் வேறோர் எண்ணம் இருக்கக்கூடாது. அனைவரும் ஒரேயொருவரில் திளைத்திருக்கும் பயிற்சியுடன், சரீரமற்றவராக இருக்கும் ஒரேயொரு தூய எண்ணத்தில் ஸ்திரமாக இருக்கும்போது, சக்திசேனையின் பெயர் உலகில் போற்றப்படும்.

கேள்வி: பௌதீகமானதொரு யுத்தத்தில் போர்க்களத்தில் எதன் அடிப்படையில் போர்வீரர்கள் வெற்றி பெறுகிறார்கள்? உங்களின் வெற்றி முரசங்கள் எப்போது அடிக்கும்?

பதில்: இராணுவ வீரர்கள் போர்க்களத்திற்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு கட்டளையின்படி சுட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டளைக்கேற்ப, அவர்கள் ஒரே வேளையில் எதிர்த்தரப்பைச் சுற்றிவளைக்கிறார்கள். அப்போது மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடியும். அதேபோன்று, ஆன்மீக சேனையிலுள்ள அனைவரும் ஒன்றுதிரட்டிய முறையில், ஒன்றுசேர்ந்து, ஒரு சமிக்கையால் ஒரு விநாடியில் நிலையான ஸ்திதியில் ஸ்திரமாகினால் மட்டுமே வெற்றி முரசங்கள் அடிக்கும்.

கேள்வி: கலியுக மலையை உயர்த்துவதற்காகத் தந்தையின் எந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்?

பதில்: தந்தை இந்தக் கட்டளையை வழங்குவார்: ஒரு விநாடியில் அனைவரும் நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமடைய வேண்டும். அனைவரின் எண்ணங்களும் ஓர் எண்ணத்தில் அமிழ்ந்திருக்கும்போது. கலியுக மலையை உயர்த்த முடியும். அந்த ஒரு விநாடி, அநாதியாக நிலைத்திருக்கும் ஒரு விநாடி ஆகும். நீங்கள் ஒரு விநாடியில் ஸ்திரமாகிவிட்டுப் பின்னர் கீழே வருவதாக இருக்கக்கூடாது.

கேள்வி: ஒவ்வொரு பிராமணக் குழந்தையினதும் பொறுப்பு என்ன?

பதில்: முழு ஒன்றுகூடலுடனும் ஒத்துழைத்தல், நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமடைதல் ஒவ்வொரு பிராமணரினதும் பொறுப்பு ஆகும். அறியாமையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஞான ஒளியைத் தொடர்ந்து முயற்சி செய்து கொடுப்பதற்கு நீங்கள் எப்போதும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கிறீர்கள். அதேபோல், இந்த தெய்வீக ஒன்றுகூடலை நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் ஸ்திரமடையச் செய்வதற்கும் ஒன்றுகூடலின் சக்தியை அதிகரிப்பதற்கும், பல்வேறு வழிமுறைகளில் ஒருவருக்கொருவர் நல்லாசிகளைக் கொண்டிருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதற்கான திட்டங்களைச் செய்யுங்கள். நான் நன்றாகவே இருக்கிறேன் என நினைத்து மனநிறைவு அடையாதீர்கள்.

கேள்வி: இறை ஞானத்தின் சிறப்பியல்பு என்ன?

பதில்: ஒன்றுகூடலின் சக்தியே இறைஞானத்தின் சிறப்பியல்பு ஆகும். பிராமண ஒன்றுகூடல்களின் சிறப்பியல்பானது, நடைமுறையில் தேவ ரூபத்தில் ஒரு தர்மம், ஒரு இராச்சியம், ஒரு வழிகாட்டல் எனத் தொடர்வதாகும்.

கேள்வி: எந்த ஒரு விடயத்தில் ஏற்படும் முழுமையான மாற்றம், சம்பூரணத்தையும் முழுமையையும் நெருக்கமாகக் கொண்டுவரும்?

பதில்: ஒவ்வொருவரிடமும் சரீர உணர்வின் ஒரு பிரதானமான சம்ஸ்காரம் உள்ளது. இதை நீங்கள் அனைவரும் சுபாவம் எனக் குறிப்பிடுகிறீர்கள். அந்த சம்ஸ்காரத்தின் சிறிதளவு சுவடேனும் எஞ்சியிருக்க அனுமதிக்காதீர்கள். உங்களின் அந்த சம்ஸ்காரத்தை மாற்றி, பாப்தாதாவின் சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். இதுவே இறுதி முயற்சி ஆகும்.

கேள்வி: பாப்தாதாவின் வெளிப்படுத்துகை எதன் அடிப்படையில் நிகழும்?

பதில்: பாப்தாதாவின் சம்ஸ்காரங்கள் ஒவ்வொருவரிலும் புலப்படும்போது. பாப்தாதாவின் சம்ஸ்காரங்களைப் பிரதி செய்து, அவருக்குச் சமமானவர் ஆகுங்கள். அப்போது நேரமும் சக்தியும் சேமிக்கப்படும். அத்துடன் உங்களால் இலகுவாக பாப்தாதாவை வெளிப்படுத்த முடியும். பக்தி மார்க்கத்தில், நான் எங்கு பார்த்தாலும், உங்களை மட்டுமே காண்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு நீங்கள் யாரைப் பார்த்தாலும், உங்களால் பாப்தாதாவின் சம்ஸ்காரங்களைக் காண முடியும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அதிகாரத் தோரணையின் எந்தவொரு சுவட்டையும் துறப்பதன் மூலம், சுயமரியாதை உள்ள புண்ணியாத்மா ஆகுவீர்களாக.

சுயமரியாதை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் மரியாதை அளிக்கும் அருள்பவர்கள் ஆவார்கள். அருள்பவர் என்றால் கருணைநிறைந்தவர் என்று அர்த்தம். அவருக்கு எந்தவோர் ஆத்மாவை இட்டும் சிறிதளவேனும் அதிகாரத்தோரணையின் எண்ணம் இருக்காது. இது ஏன் இவ்வாறு உள்ளது? நீங்கள் இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இது இவ்வாறு இருக்கக்கூடாது. ஞானம் இதையா கூறுகிறது? இவை அனைத்தும் அதிகாரத் தோரணையின் சூட்சுமமான வடிவின் சுவடுகள் ஆகும். எவ்வாறாயினும், சுயமரியாதை உள்ள புண்ணியாத்மாக்கள் விழுந்தவர்களை ஈடேற்றி, அவர்களை ஒத்துழைக்கச் செய்வார்கள். அவர் தனது சொந்தக் கர்மத்தின் பலனையே அனுபவிக்கிறார் அல்லது எதையாவது செய்யும் ஒருவர் நிச்சயமாக அதற்கான பலனைப் பெறுவார், அதனால் அவர் விழ வேண்டும் என அவர்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். குழந்தைகளான உங்களிடம் இத்தகைய எண்ணங்கள் இருக்கவே முடியாது.

சுலோகம்:
திருப்தி மற்றும் சந்தோஷம் என்ற சிறப்பியல்புகள், உங்களைப் பறக்கும் ஸ்திதியை அனுபவிக்கச் செய்யும்.