13.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பாபா உங்களுக்கு வீட்டிற்கான பாதையைக் காட்டுவதற்காகவே வந்துள்ளார். நீங்கள் ஆத்ம உணர்வில் நிலைத்திருக்கும்பொழுது, உங்களால் இலகு பாதையைக் காணக்கூடியதாக இயலும்.

கேள்வி:
சங்கமயுகத்தில் நீங்கள் பெறுகின்ற எந்த ஞானத்தின் மூலம் சத்திய யுகத் தேவர்கள் பற்றை வென்றவர்கள் என அழைக்கப்படுகின்றனர்?

பதில்:
சங்கமயுகத்தில் தந்தை உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுவதுடன், அநாதியான ஆத்மாக்களின் ஞானத்தையும் கொடுக்கிறார். இது அழிவற்ற, ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம், ஒவ்வோர் ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார் என்ற ஞானத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீக்கி இன்னுமொன்றை எடுக்கிறார். ஆகவே அழுவதற்கான தேவை இல்லை. ஆத்மாக்கள் இந்த ஞானத்தை இப்பொழுது பெறுவதனாலேயே சத்தியயுகத் தேவர்கள் பற்றை வென்றவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அங்கு மரணம் என்ற குறிப்பே இல்லை. அவர்கள் தமது பழைய சரீரங்களைச் சந்தோஷமாக நீக்கி, புதியதொன்றை எடுக்கின்றனர்.

பாடல்:
குருடர்களுக்குப் பாதையை காட்டுங்கள், ஓ கடவுளே!

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளுக்குக் கூறுகிறார்: நான் உங்களுக்குப் பாதையை காட்டுகிறேன், ஆனால் முதலில் உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கும்;பொழுது நீங்கள் இப்பாதை மிக இலகுவாக இருப்பதைக் காண்பீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் அரைக்கல்பமாகத் தடுமாறினீர்கள். பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. ஒரேயொரு எல்லையற்ற தந்தையே உள்ளார் எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறேன். அவர் எந்தப் பாதையைக் காட்டுகிறார் என்பதைக் கூட உலகில் உள்ள எவரும் அறியார். அது முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையாகும்: முக்தியும், சற்கதியும் ஆகும். அமைதிதாமமே முக்தி என அழைக்கப்படுகிறது. ஓர் ஆத்மாவால் ஒரு சரீரமின்றிப் பேச முடியாது. இந்த அங்கங்களின் மூலமே சத்தம் எழுப்ப முடியும். சத்தம் ஒரு வாய் மூலமே எழுப்பப்படுகிறது. வாய் இல்லாவிடின் எங்கிருந்து சத்தம் வரமுடியும்? செயல்கள் செய்வதற்காக ஆத்மாக்கள் இவ் அங்கங்களைப் பெறுகின்றனர். இராவண இராச்சியத்தில் நீங்கள் பாவச் செயல்களையே செய்கிறீர்கள். இந்தப் பாவச் செயல்கள் மிகவும் அழுக்கான செயல்களாகும். சத்திய யுகத்தில் இராவணன் இல்லை. ஆகவே அங்கு செயல்கள் நடுநிலையானவை. அங்கு ஐந்து விகாரங்களும் இல்லை. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. பாரதவாசிகளே சுவர்க்கவாசிகளாக இருந்தனர், ஆனால், அவர்கள் இப்பொழுது நரகவாசிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் நச்சாற்றில் மூழ்குகின்றனர். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் துன்பம் விளைவிக்கின்றனர். பாபா, எங்களைத் துன்பமே இல்லாத இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அங்கு துன்பம் எனும் குறிப்பு கூட இருக்கவில்லை. அவர்கள் சுவர்க்கத்திலிருந்து நரகத்திற்கு வந்தனர். அவர்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இது ஒரு நாடகம். தந்தையே இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இதுவே சத்தியத்தின் (சற்சங்கம்) உண்மையான சகவாசமாகும். நீங்கள் சத்தியமான தந்தையை நினைவுசெய்கிறீர்கள். அவரே அதிமேன்மையான கடவுள். அவரே படைப்பவர். நீங்கள் அவரிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களது ஆஸ்தியை வழங்குகிறார். அவர்கள் எல்லைக்குட்பட்ட தந்தையர்களைக் கொண்டிருந்தபொழுதிலும், அவர்கள் அவரை நினைவுசெய்து கூறுகின்றனர்: ஓ கடவுளே, ஓ பரமாத்மா பரம தந்தையே, கருணை காட்டுங்கள்! அவர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு தடுமாறியதனால் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்: ஓ பாபா, எங்களுக்கு, எங்களது ஆஸ்தியாகிய சந்தோஷத்தையும், அமைதியையும் கொடுங்கள்! இதனைத் தந்தையால் மாத்திரமே, அதுவும் 21 பிறவிகளுக்குக் கொடுக்க முடியும். நீங்கள் இதனைக் கணக்கிட முடியும். சத்தியயுகத்தில் அது அவர்களது இராச்சியமாக இருந்தபொழுது, நிச்சயமாக மிகக் குறைவான மக்களே இருந்திருப்பார்கள். அங்கு ஒரு தர்மமும், ஓர் இராச்சியமும் மாத்திரமே இருந்தன. அது சந்தோஷ பூமியாகிய, சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. புதிய உலகம் சதோபிரதான் (முற்றிலும் தூய்மை) என அழைக்கப்படுகிறது. பழைய உலகம் தமோபிரதான் (முற்றிலும் தூய்மையற்றது) என அழைக்கப்படுகிறது. அனைத்தும், முதலில் சதோபிரதானாக உள்ளது, பின்னர் அது சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாகச் செல்கின்றது. இளம் குழந்தைகள் சதோபிரதான் என அழைக்கப்படுகின்றனர். இளம் குழந்தைகள் மகாத்மாக்களை விடவும் மேன்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றனர். மகாத்மாக்கள் பிறப்பெடுத்து, வளர்ந்து, விகாரங்களை அனுபவம் செய்து, பின்னர் வீட்டை விட்டுச் செல்கின்றனர். சிறிய குழந்தைகள் விகாரத்தைப் பற்றி எதுவும் அறியார்கள்; அவர்கள் முற்றிலும் கள்ளங்கபடம் அற்றவர்கள். இதனாலேயே, அவர்கள் மகாத்மாக்களை விடவும் மேன்மையானவர்கள் எனக் கூறப்;படுகின்றனர். தேவர்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் எனப் புகழப்படுகின்றனர். சாதுக்களுக்கு இப் புகழ் என்றுமே கொடுக்கப்படுவதில்லை. வன்முறை, அகிம்சை ஆகியவற்றின் அர்த்தங்களைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒருவரை அடித்தல் வன்முறை எனப்படுகி;றது. காம வாளை உபயோகித்தலே பாரிய வன்முறை. தேவர்கள் அகிம்சாவாதிகள். அவர்கள் காம வாளைப் பயன்படுத்துவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் இப்பொழுது உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காகவே வந்துள்ளேன். தேவர்கள் சுவர்க்கத்தில் உள்ளனர். இங்கு எவரும் தன்னை ஒரு தேவர் என அழைப்பதில்லை. ஒவ்வொருவரும் தன்னை ஒரு சீரழிந்த, விகாரமான, பாவி என்று புரிந்துகொள்கின்றார். ஆகவே எவ்வாறு அவர்களால் தம்மைத் தேவர்கள் என அழைக்க முடியும்? அதனால்தான் அவர்கள் அதை இந்து சமயம் என அழைத்துள்ளனர். உண்மையில் அது ஆதி சனாதன தேவிதேவதா தர்மமாக இருந்தது. இந்து என்ற வார்த்தை இந்துஸ்தான் என்பதிலிருந்தே உருவாகியது, ஆகவே அவர்கள் அதை இந்து சமயம் என அழைத்தனர். நீங்கள் தேவ தர்மத்தைச் சார்ந்தவர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள், இருப்பினும் அவர்கள் உங்களை இந்து சமயத்து நிரலின் கீழேயே இடுகின்றனர். இந்து சமயத்திற்கான ஒரு நிரல் மாத்திரமே தம்மிடம் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். தூய்மையற்று இருப்பதனால் அவர்களில் எவராலும் தம்மைத் தேவர்கள் என அழைக்க முடியாது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள் என்றும், இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதையும்; இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். முன்னர் நீங்கள் சிவனின் கலப்படமற்ற வழிபாட்டைச் செய்தீர்கள். பின்னர் நீங்கள் கலப்படமான வழிபாட்டைச் செய்பவர்கள் ஆகினீர்கள். தந்தை ஒரேயொருவரே. நீங்கள் உங்களது ஆஸ்தியை அவரிடமிருந்தே பெறுகிறீர்கள். பலவகையான தேவர்கள் போன்றோர் உள்ளனர். நீங்கள் அவர்களிடமிருந்து ஆஸ்தி எதனையும் பெறுவதில்லை. நீங்கள் இந்தப் பிரம்மாவிடமிருந்தும் ஆஸ்தியைப் பெற முடியாது. ஒருவர் அசரீரியான தந்தை. மற்றவர் உங்களுடைய பௌதீகத் தந்தை. அவர்களுக்குப் பௌதீகத் தந்தையர் இருந்தபொழுதிலும் அவர்கள்: ஓ கடவுளே! ஓ பரம தந்தையே! எனத் தொடர்ந்தும் கூறுகின்றனர். அவ்வாறு நீங்கள் உங்கள் பௌதீகத் தந்தைக்குக் கூறமாட்டீர்கள். ஒரு தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகின்றது. ஒரு கணவனும், மனைவியும் அரைப்பங்காளர்கள். எனவே, அவள் அனைத்தினதும் அரைவாசியைப் பெற வேண்டும். முதலில் அவளுக்கு அவளது பங்காக அரைவாசி கொடுக்கப்பட வேண்டும், பின்பு குழந்தைகளுக்கு மற்ற அரைவாசி கொடுக்கப்பட வேண்டும். எவ்;வாறாயினும், இக்காலத்தில் குழந்தைகளுக்கே முழுச் செல்வமும் கொடுக்கப்படுகின்றது. சிலர் பெருமளவு பற்றினைக் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் இறக்கும்பொழுது, குழந்தைகளே முழு உரிமைகளையும்; கொண்டிருப்பார்கள் என அவர்கள் எண்ணுகின்றார்கள். தந்தையரின் மறைவின் பின்னர் தற்காலக் குழந்தைகள் தங்கள் தாயைப் பற்றி வினவுவதுமில்லை. சிலர் தங்கள் தாயின் மீது அன்பு செலுத்துகின்றனர். சிலர் எவ்வாறாயினும் தங்கள் தாயாரை எதிர்க்கின்றனர். இந்நாட்களில் பெரும்பான்மையினர் தங்கள் தாயிடம் எதுவும் கேட்பதில்லை. அவர்கள் அனைத்துப் பணத்தையும் வீணாக்கின்றனர். தத்தெடுக்கப்பட்ட சில குழந்தைகளும் அவ்வாறே உள்ளனர். அவர்கள் தங்கள் தாயாரைப் பெருமளவில் தொந்தரவு செய்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். அவர்கள் கூறுகின்றனர்: பாபா, ஓய்வுள்ள சந்தோஷத்திற்கான பாதையை எங்களுக்குக் காட்டுங்கள். இராவண இராச்சியத்தில் சந்தோஷம் இருப்பதில்லை. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் சிவன் சங்கரிலிருந்து வேறுபட்டவர் என்பதைப் புரிந்துகொள்வதுமில்லை. அவர்கள் தொடர்ந்தும் தலை வணங்குவதுடன், சமயநூல்களையும் வாசிக்கின்றனர். சரி. அதிலிருந்து எதனைப் பெறுகிறீர்கள்? அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் அமைதியையும், சந்தோஷத்தையும் அருள்பவர். சத்தியயுகத்தில் சந்தோஷத்துடன், அமைதியும் உள்ளன. பாரதத்தில் அமைதியும் சந்தோஷமும் இருந்தன, ஆனால் அவை இப்பொழுது இல்லை. இதனாலேயே, அவர்களது பக்தியில் அவர்கள் தொடர்ந்தும் வாசலுக்கு வாசல் தடுமாறுகின்றனர். ஒரேயொரு தந்தையே உங்களை அமைதிதாமத்திற்கும், சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். பாபா, நாங்;கள் உங்களை மாத்திரமே நினைவுசெய்வோம். நாங்கள் எங்களது ஆஸ்தியை உங்களிடமிருந்து மாத்திரமே கோரிக்கொள்வோம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்கள் அனைவரையும் மறக்க வேண்டும். ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு தூய்மையாக வேண்டும். நீங்கள் அவரை நினைவுசெய்யாவிட்டால், தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். உங்கள் அந்தஸ்;தும் குறைக்கப்படும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அவர், ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஓ ஆன்மீகக் குழந்தைகளே எனக் கூறுகின்ற, வேறெந்தச் சற்சங்கங்கள் போன்றவையும் இல்லை. இது குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து பெறுகின்ற ஆன்மீக ஞானம் ஆகும். உயிர் என்றால் அசரீரி என்று அர்த்தம். சிவனும் அசரீரியானவர். ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகள்; நீங்கள் சின்னஞ்சிறியவர்கள். தெய்வீகப் பார்வை இல்லாவிடின் எவராலும் ஆத்மாவைப் பார்க்க முடியாது. தந்தை மாத்திரமே தெய்வீகக் காட்சிகளை வழங்குகிறார். பக்தர்கள் அமர்ந்திருந்து அனுமனையும், கணேஷ் போன்றவர்களையும் வழிபடுகின்றார்கள். இப்பொழுது, அவர்கள் எவ்வாறு அவர்களுடைய காட்சிகளைக் காண்பார்கள்? தந்தை கூறுகின்றார்: நானே தெய்வீகக் காட்சிகளை அருள்பவர். பெருமளவு பக்தி செய்துள்ளவர்களுக்கு நானே காட்சிகளை வழங்குகிறேன். எனினும், அதில் எவ்வித நன்மையுமில்லை. அவர்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்கின்றார்கள். அவர்கள் எதனையும் அடைவதில்லை. கல்வி கற்காமல் அவர்களால் எவ்வாறு ஏதாவதொன்றாக முடியும்? தேவர்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள். நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும். ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்தின் காட்சிகள். நீங்கள் உண்மையாகவே கிருஷ்ணருடன் ஊஞ்சலாடி, அவருடன் சுவர்க்கத்தில் இருப்பீர்கள். அது நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. எந்தளவிற்கு நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்களோ, அதற்கேற்பவே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். ஸ்ரீமத் கடவுளினால் கொடுக்கப்படுகின்றது. அதனை நீங்கள் கிருஷ்ணரின் ஸ்ரீமத் என அழைப்பதில்லை. கிருஷ்ணரின் ஆத்மா பரமாத்மாவாகிய பரமதந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், தனது அந்தஸ்தைப் பெற்றார். ஆத்மாக்களாகிய நீங்களும் தேவ தர்மத்தில் இருந்தீர்கள். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமாயின், நீங்கள் கிருஷ்ணரின் வம்சத்தில் இருந்தீர்கள். பாரத மக்களுக்கு இராதைக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள உறவுமுறை என்ன என்பது தெரியாது. (அவர்கள்) இருவரும் வேறுபட்ட இராச்சியத்திலிருந்து வருகின்றார்கள். பின்னர், அவர்களது திருமணத்தின்பொழுது, அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றார்கள். தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துவதற்கு வந்து விட்டார். நீங்கள் சுவர்க்கத்து இளவரசர்கள், இளவரசிகள் ஆகுவதற்கே இப்பொழுது கற்கின்றீர்கள். இளவரசர், இளவரசியின் திருமண நேரத்திலேயே அவர்களுடைய பெயர்களும் மாறுகின்றன. ஆகவே, தந்தை குழந்தைகளாகிய உங்களை அத்தகைய தேவர்கள் ஆக்குகின்றார். எனினும், அதுவும் நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால் மாத்திரமே நடைபெறும். குழந்தைகளான நீங்கள் வாய்வழித்தோன்றல்கள். அவர்கள்; ஒரு கருப்பையினூடாகப் பிறக்கின்றனர். அப்பிராமணர்கள் ஒரு தம்பதியினரை ஒன்றுசேர்த்து அவர்களைக் காமச்சிதையில் அமரச் செய்கின்றார்;கள். உண்மையான பிராமணர்களான நீங்கள் இப்பொழுது அவர்களைக் காமச்சிதையிலிருந்து அகற்றி, அவர்களை ஞானச்சிதையில் அமரச் செய்யும் பந்தத்தினால் கட்டுகின்றீர்கள். ஆகவே அவர்கள் மற்றைய பந்தத்தை விட்டுவிட வேண்டும். இங்குள்ள குழந்தைகள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு, தங்கள் பணம் அனைத்தையும் வீணாக்குகிறார்கள். இந்நாட்களில் உலகில் அதிகளவு அழுக்கானவை உள்ளன. அனைத்திலும் படுமோசமான நோய் சினிமா ஆகும். மிக நல்ல குழந்தைகள் கூடச் சினிமாவிற்குச் செல்வதினால் பாழாகுகிறார்கள். ஆகவே பிரம்மகுமார், குமாரிகள் சினிமாவிற்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், உறுதியானவர்களுக்கு பாபா கூறுகின்றார்: அங்கும் சேவை செய்யுங்கள். அந்தச் சினிமா எல்லைக்குட்பட்டது என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். எல்லையற்ற சினிமாவும் உள்ளது. அந்த எல்லைக்குட்பட்டதும், பொய்யானதுமான சினிமாக்கள் எல்லையற்ற சினிமாவிலிருந்தே ஆரம்பித்தன. அது ஆத்மாக்கள் அனைவரும் வாழுகின்ற ஆத்ம உலகம் என்றும், அதற்கும், இந்த இடத்திற்குமிடையில் சூட்சும உலகம் உள்ளது என்பதையும் இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். இது நாடகம் முழுவதுமே இடம்பெறுகின்ற, பௌதீக உலகம். இச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களாக ஆகவேண்டும். தேவர்கள் இவ்வாறு ஆகவேண்டும் என்றில்லை. எனினும், பிராமணர்கள் முயற்சியாளர்கள் என்பதால், அவர்களுக்கு இந்த அடையாளச் சின்னங்கள் கொடுக்கப்படவில்லை. இன்று அவர்கள் நன்றாக முன்னேறுகின்றார்கள். நாளையே அவர்கள் வீழ்கின்றார்;கள். இதனாலேயே இந்த அடையாளச் சின்னங்கள் தேவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகிருஷ்ணர் அகாசூரன், பகாசூரன் போன்ற அசுரர்களைச் சக்கரத்தினால் கொல்வதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். எவ்வாறாயினும்., அவர், அதிமேலான அகிம்சா தர்மத்திற்குரியவர் என்று கூறப்பட்டுள்ளதால், அவரால் எவ்வாறு கொலை செய்ய முடியும்? அவை அனைத்தும் பக்திமார்க்கத்தின் சம்பிரதாயங்கள். எங்கு நீங்கள் சென்றாலும், சிவனின் நீள்கோள வடிவ ரூபம் (லிங்கம்) இருக்கின்றது. பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பல தேவர்களின் வடிவங்களைக் களிமண்ணினால் செய்கின்றார்கள். அவற்றை, அவர்கள் அலங்கரிக்கின்றார்கள். அவற்றிற்காக அவர்கள் ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கின்றார்கள். அவர்கள் அவற்றை உருவாக்கிய பின்னர், அவற்றை வழிபட்டு, அவற்றைப் பராமரித்துப் பின்னர், நீரில் மூழ்கடிக்கின்றார்கள்! அவர்கள் பொம்மை வழிபாட்டிற்காக அதிகளவு பணத்தைச் செலவழிக்கின்றார்கள். அதிலிருந்து அவர்கள் எதனையும் பெறுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அந்தப் பக்தி அனைத்தும் பணத்தை வீணாக்குவதற்கானது. அவர்கள் ஏணியில் தொடர்ந்தும் கீழிறங்கி வந்துள்ளார்கள். தந்தை வரும்பொழுது, அது அனைவருக்கும் மேலேறுகின்ற ஸ்திதியாக ஆகுகின்றது. அவர் உங்கள் அனைவரையும் அமைதிதாமத்திற்கும், சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்கின்றார். இதில் பணத்தை வீணாக்குதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பக்திமார்க்கத்தில், பணத்தை வீணாக்குவதால், நீங்கள் கடளாளிகள் ஆகினீர்கள். வளமுள்ளவர்கள் ஆகுதல், கடனாளிகள் ஆகுதலின் கதையைத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இந்த இலக்ஷ்மி நாராயணனின் வம்சத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள், அப்படித்தானே? நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கற்பித்தல்களைத் தந்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். அம்மக்;கள் மூன்றாம் கண்ணின் கதை, அமரத்துவக் கதை போன்றவற்றைக் கூறுகின்றார்கள். ஆனால் அவை அனைத்தும் பொய்யாகும். இதுவே மூன்றாம் கண்ணின் கதையாகும், இதன் மூலமே, ஒவ்வோர் ஆத்மாவினதும் ஞானமாகிய மூன்றாவது கண் திறக்கின்றது. முழுச் சக்கரமும் புத்தியில் புகுகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெறுகின்றீர்கள். நீங்கள் அமரத்துவக் கதையையும் செவிமடுக்கின்றீர்கள். அமரத்துவ பாபா உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். அவர் உங்களை அமரத்துவ உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். அங்கே நீங்கள் என்றுமே மரணத்தை அனுபவம் செய்ய மாட்டீர்கள். இங்குள்ள மக்கள் மரணத்தையிட்டு அதிகளவு பயப்படுகின்றார்கள். அங்கே, மக்களிடம் மரண பயமோ அல்லது அழுகையோ இருக்க மாட்டாது. நீங்கள் உங்களுடைய பழைய சரீரத்தைச் சந்தோஷத்தில் நீக்கி, புதியதொன்றை எடுக்கின்றீர்கள். இங்கே, மக்கள் அதிகளவு அழுகின்றார்கள்; இது கண்ணீரின் உலகமாகும். தந்தை கூறுகின்றார்: இந்த நாடகம், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தத்தமது சொந்தப் பாகத்தை நடிக்கின்றார். தேவர்கள் பற்றை வென்றவர்கள். உலகில் எண்ணற்ற குருமார்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் அபிப்பிராயமும் அவரவருக்கு உரியதாகும். இங்கே, திருப்தித் தேவியின் வழிபாடு இடம்பெறுகின்றது. சத்தியயுகத்தில் மாத்திரமே திருப்தித் தேவர்கள் இருக்க முடியும். இங்கே, எவ்வாறு அவர்கள் இருக்க முடியும்? சத்தியயுகத்தில் தேவர்கள் எப்பொழுதும் திருப்தியாகவே இருக்கின்றார்கள். இங்கே அனைவருக்குமே, ஏதோவோர் ஆசை இருக்கின்றது. அங்கே, ஆசைகள் இருப்பதில்லை. தந்தை அனைவரையும் திருப்தியுடையவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே அடைய முடியாதது எதுவும் இல்லாததால், எதையும் அடைய வேண்டும் என்ற கவலை அங்கில்லை. அங்கே கவலைகள் எதுவும் இல்லை. தந்தை கூறுகின்றார்;: நானே அனைவருக்கும் சற்கதி அருள்பவர். குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷம் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் அத்தகைய தந்தையை நினைவுசெய்ய வேண்டும். அவரின் நினைவைக் கொண்டிருப்பதாலேயே, உங்கள் பாவங்கள் அழிவதுடன், நீங்கள் சதோபிரதானாகவும் ஆகுகின்றீர்கள். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். நீங்கள் மேன்மையானதோர் அந்தஸ்தைக் கோருவதுடன், பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு ஏற்ப உங்கள் பிரஜைகளும் உருவாக்கப்படுவார்;கள். உங்களுக்குச் சில சாதுக்களின்; கதை கூறப்படுவதில்லை. கடவுளே இங்கமர்ந்திருந்து, இவரின் வாயினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது திருப்தித் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் என்றுமே தூய்மையாக இருப்பதற்கான ஒரு சத்தியத்தையும் இப்பொழுது செய்ய வேண்டும், ஏனெனில் நீங்கள் தூய உலகிற்குச் செல்ல வேண்டும். ஆகவே தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள். தந்தை உங்களுக்கு இந்தச் சத்தியத்தைக் கற்பித்துள்ளார். மனிதர்கள் இப்பொழுது பல்வகையான விரதங்களை அனுட்டிக்கின்றார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, சதா திருப்தியாக இருந்து, திருப்தித் தேவர்கள் ஆகுங்கள். இங்கே எந்த ஆசைகளையும் கொண்டிராதீர்கள். தந்தையிடமிருந்தே சகல பேறுகளையும் பெற்று, பல்கோடீஸ்வரர்கள் ஆகுங்கள்.

2. சினிமாவே உங்களை அதிகளவு அழுக்கானவர் ஆக்குகின்றது. திரைப்படங்கள் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் தைரியமானவராக இருந்து, உங்களால் எல்லைக்குட்பட்ட சினிமாவுக்கும், எல்லையற்ற சினிமாவுக்கும் இடையிலான முக்கியத்துவத்தையும்; புரிந்துகொள்ள முடியுமாயின், அதனை விளங்கப்படுத்துவதன் மூலம் உங்களால் சேவை செய்ய முடியும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் முற்றுப்புள்ளியை இடுகின்ற ஸ்திதியைக் கொண்டிருப்பதாலும், சடப்பொருளின் குழப்பம் எதனையும் நிறுத்துவதாலும், சடப்பொருளின் பிரபுவாக ஆகுவீர்களாக.

தற்போதைய நேரம் குழப்பங்கள் அதிகரிப்பதற்கான நேரமாகும். இறுதிப் பரீட்சைத் தாளில், ஒருபுறம் சடப்பொருளின் பயங்கரமான ரூபங்கள் இருக்கும், மறுபுறத்தில் ஐந்து விகாரங்களினதும் பயங்கரமான ரூபங்கள் இருக்கும். தமோகுணி ஆத்மாக்களிடமிருந்தான தாக்குதல்களும், பழைய சம்ஸ்காரங்களும் இறுதிக் கணங்களில் தங்கள் வாய்ப்பைப் பெறுவதற்கு வரும். அத்தகைய நேரத்தில் தயாராகும் சக்தியைக் கொண்டிருப்பதுடன், ஒரு கணம் பௌதீக ரூபத்தில் ஸ்திரமாகவும், மறுகணம் சூட்சும ரூபத்தில் ஸ்திரமாகவும், அடுத்த கணம் அசரீரி ரூபத்தில் ஸ்திரமாகவும் இருக்கின்ற பயிற்சியைக் கொண்டிருப்பது உங்களுக்கு அவசியமாகும். பார்த்தும் பார்க்காதிருங்கள்; கேட்டும் கேட்காதிருங்கள். ஒரு முற்றுப்புள்ளியை இடுகின்ற அத்தகைய ஸ்திதி உங்களுக்கு இருக்கும்பொழுது, உங்களால் சடப்பொருளின் பிரபுவாகி, சடப்பொருளின் குழப்பம் எதனையும் நிறுத்தவும் இயலும்.

சுலோகம்:
தடைகளிலிருந்து விடுபட்டிருக்கின்ற இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பதற்கு, தடைகளிலிருந்து விடுபட்டுள்ள சேவகர் ஆகுங்கள்.