13.10.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இரத்தத் தொடர்புகளில்; துன்பமே உள்ளது. நீங்கள் அவற்றைத் துறந்து, ஒருவர் மீது ஒருவர் ஆன்மீக அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே சந்தோஷத்திற்கும், பேரானந்தத்திற்குமான அடிப்படையாகும்.

கேள்வி:
வெற்றி மாலையில் ஒருவராகுவதற்கு, நீங்கள் எவ்விசேட முயற்சியைச் செய்வது அவசியம்;?

பதில்:
வெற்றி மாலையில் ஒருவராக வேண்டுமானால், புனிதமானவர் (தூய்மை) ஆகுவதற்கான விசேட முயற்சியைச் செய்யுங்கள். நீங்கள் உண்மையான சந்நியாசிகள் ஆகும்பொழுதே, அதாவது, நீங்கள் விகாரமற்றவர்களாக ஆகும்பொழுது மாத்திரமே, வெற்றி மாலையில் ஒரு மணியாகுவீர்கள். கர்ம பந்தனத்தின் கணக்குகள் இருக்குமாயின், உங்களால் ஒரு வாரிசாக முடியாது; மாறாக நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுவீர்கள்.

பாடல்:
விட்டில்பூச்சிகளின் சந்தோஷ ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி.
பாருங்கள், நாங்கள் எங்கள் தந்தையைப் புகழ்கின்றோம். ஆத்மாவான நான், நிச்சயமாக எனது தந்தையைக் காட்டுவேன் (வெளிப்படுத்துவேன்). மகன் தந்தையைக் காட்டுகின்றார். நான் ஓர் ஆத்மா என்பதால் நீங்கள் கூறுவீர்கள்: நாங்கள் ஆத்மாக்கள், எங்கள் தந்தையே அனைவரதும் தந்தையான, ஒரேயொரு பரமாத்மா. அனைவருமே இதனை ஏற்றுக் கொள்வார்கள்; ஆத்மாக்களாகிய எங்களது தந்தை வேறானவர் என்று அவர்கள் கூறமாட்டார்கள். அனைவரது தந்தையும் ஒரேயொருவரே ஆவார். நாங்கள் இப்பொழுது அவரது குழந்தைகள் என்பதால், அவரது தொழில் எங்களுக்குத் தெரியும். கடவுள் சர்வவியாபி என்று எங்களால் கூற முடியாது. அவ்வாறாயின், கடவுள் அனைவரிலும் இருப்பார். (லௌகீக) தந்தையிடம் இருப்பவை அனைத்தையும் அவரது குழந்தைகள் ஆஸ்தியாகப் பெறுவதால், குழந்தைகள் தமது தந்தையை நினைவுசெய்யும்பொழுது, மகிழ்ச்சி அடைகின்றார்கள். நாங்கள் இப்பொழுது கடவுளின் வாரிசுகள்; எனவே அவரிடம் என்ன உள்ளது? அவர் பேரானந்தக்கடலும், ஞானக்கடலும், அன்புக்கடலும் ஆவார். இதனை நாங்கள் அறிந்திருப்பதாலேயே, அவரது புகழைப் பாடுகின்றோம். ஏனையோர் இவ்வாறு கூற மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் அவ்வாறு கூறினாலும், அவர் எப்படி அவ்வாறாக இருக்கின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஏனைய அனைவருமே கடவுள் சர்வவியாபி என்றே கூறுவார்கள். எவ்வாறாயினும், நாங்கள் அவரது குழந்தைகள் என்பதால், எங்கள் அசரீரியான, அமரத்துவமான தந்தையின் புகழை நாங்கள் பாடுகின்றோம்: அதாவது அவரே பேரானந்தக்கடலும், ஞானக்கடலும், அன்பின் பொக்கிஷத்தின் களஞ்சியமும். எவ்வாறாயினும், எவரேனும் கேள்வி எழுப்பலாம்: அசரீரி உலகில் உங்கள் ஸ்திதி இன்ப, துன்பத்திற்கு அப்பாலுள்ளது என்று நீங்கள் கூறுகின்றீர்கள், அவ்வாறாயின், அங்கு சந்தோஷம், அதாவது, பேரானந்தமும், அன்பும் எங்கிருந்து வரும்? இவை புரிந்துகொள்ளப்பட வேண்டிய விடயங்கள். நீங்கள் பேரானந்தம், சந்தோஷம், அன்பைப் பற்றிப் பேசும்பொழுது, அது சந்தோஷத்திற்கான ஸ்திதியாகும், ஆனால் அமைதி உலகில் எவ்வாறு பேரானந்தமும், அன்பும், ஞானமும் இருக்க முடியும்? அந்தச் சந்தோஷக்கடல் இந்தச் சரீர உலகிற்கு வரும்பொழுதே, எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அங்கே, நீங்கள் இன்ப, துன்பத்திற்கு அப்பாலுள்ள ஸ்திதியில் இருக்கின்றீர்கள், ஏனெனில் அவ்வுலகம் அசரீரி உலகம் என்றும் அழைக்கப்படுகின்ற, இன்ப, துன்பத்திற்கு அப்பாலுள்ள உலகம் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், மற்றைய உலகம் சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்ற, சதா சந்தோஷமும், பேரானந்தமும் நிலவுகின்ற, சந்தோஷ உலகமாகும். இதுவோ நரகம் என்று அழைக்கப்படுகின்ற, துன்ப உலகமாகும், அதாவது, கலியுக உலகமாகும். இப்பொழுது, சந்தோஷக் கடலான பரமாத்மாவான பரமதந்தை வந்து, இக்கலியுக உலகை, சந்தோஷமும், அதிகளவு சந்தோஷமும், அன்பும், அதிகளவு அன்பும் அன்றி, வேறு எதுவுமே இல்லாத உலகமாக மாற்றி, அதனைப் பேரானாந்தமும், சந்தோஷமும், அன்பும் நிறைந்த பொக்கிஷக் களஞ்சியமாக ஆக்குகின்றார். அங்கே, மிருங்கங்களும் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கின்றன. பசுக்களும், சிங்கங்களும் ஒரே ஆற்றில் ஒன்றாக நீர் பருகுகின்றன. அவை ஒன்றின் மீது ஒன்று அதிகளவு அன்பு கொண்டிருக்கின்றன. எனவே, கடவுள் வந்து ஸ்தாபிக்கின்ற இராச்சியத்தில் சந்தோஷமும், பேரானந்தமும் உள்ளன. எவ்வாறாயினும், அசரீரி உலகில் சந்தோஷம், பேரானந்தம், அன்பு என்ற கேள்விக்கு இடமில்லை. அது அசரீரியான ஆத்மாக்களின் வசிப்பிடமாகும். அது ஓய்வு வாழ்க்கையாகும், அதாவது, இன்பம், துன்பம் என்ற உணர்வுகள் இல்லாத, அனைவரினதும் நிர்வாணா ஸ்திதியாகும். இந்தச் சரீர உலகிலேயே இன்ப, துன்பத்திற்கான பாகங்கள் நடிக்கப்படுகின்றன. இவ்வுலகில் சுவர்க்கம் இருக்கும்பொழுது, அநாதியான ஆன்மீக அன்பு உள்ளது. ஆனால் இரத்தத் தொடர்புகளில் துன்பமே உள்ளது. சந்நியாசிகளுக்கும் எந்த இரத்தத் தொடர்பும் இருப்பதில்லை. இதனாலேயே அவர்களுக்கு எதனையிட்டும் எந்தத் துன்ப உணர்வுகளும் இருப்பதில்லை. அவர்கள் தமது இரத்தத் தொடர்பைத் துறந்துள்ளதால், நானே சத்தியமும், உணர்வுள்ளவனும், பேரானந்த சொரூபமும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறே, இங்கும் உங்களுக்கும் எந்தத் இரத்தத் தொடர்புகளும் இல்லை. இங்கே நாங்கள் அனைவரும் கடவுளே எங்களுக்குக் கற்பிக்கின்ற, ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நீங்கள் எனது அன்பிற்கினிய புத்திரர்கள். எனது பேரானந்தம், சந்தோஷம், அன்பு போன்றன உங்களுடையவை, ஏனெனில் நீங்கள் அவ்வுலகைத் துறந்து, எனது மடிக்கு வந்துள்ளீர்கள் (தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்). உங்கள் நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் எனது மடியில் வந்தமர்ந்திருக்கின்றீர்கள். இது அம்மக்;கள் ஒரு குருவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வது போன்றதல்ல. அவர்கள் அன்பிற்கினிய புத்திரர்களே என்று அழைக்கப்படுவதில்லை. அம்மக்கள் குருவின் பிரஜைகள் போன்றவர்கள். எவ்வாறாயினும், துறவறத்தை மேற்கொண்டு, குருவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், அவர்களும் அன்பிற்கினிய புத்திரர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அந்தக் குரு மரணித்ததும் இவர்களே குருவின் கதியில் அமர்கின்றார்கள். குழந்தைகளுக்கும், பிரஜைகளுக்கும் இடையில் பகலிற்கும், இரவிற்குமான வேறுபாடுள்ளது. குழந்தைகள் வாரிசுகளாகி, ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள்; அவ்வாறே உங்கள் இரத்தத் தொடர்புகளை நீங்களும் துறந்து, அசரீரியானவரினதும், சரீரியானவரினதும் மடிக்கு வந்திருப்பதால், வாரிசுகள் ஆகிவிட்டீர்கள். இதிலும், நீங்கள் அதிக ஞானத்தைப் பெற்றால், அதிகளவு பேரானந்தத்தை அனுபவம் செய்வீர்கள். கல்வியே பேரானந்தம் எனக் கூறப்படுகின்றது. எனவே, இக்கல்வியை நீங்கள் அதிகளவு கற்பதற்கேற்ப, அந்த இராச்சியத்தில் பிரஜைகளாக அதிகச் சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இந்த இறை கல்வியே பேரானந்தமாகும், இதனூடாகவே நீங்கள் பரம அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுகின்றீர்கள். சந்தோஷமும் அமைதியும் கொண்ட, இந்த அசைக்க முடியாத, நிலையான சுய இராச்சியமே குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்ற, இறை சொத்து ஆகும். அதன்பின்னர், இந்த ஞானத்தை நீங்கள் கிரகிக்குமளவிற்கேற்ப, தந்தையின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உதாரணத்திற்கு, தேடுதலுடன் உங்களிடம் அனைவரும் வருகின்றார்கள்; அவர்கள் உங்கள் அன்பிற்கினிய பிரஜைகளே. அவர்கள் குழந்தைகளல்ல, ஏனெனில் அவர்கள் தொடர்ந்தும் வருவதும் போவதுமாக இருக்கின்றார்கள். அவர்களால் குழந்தைகளாக முடியும், ஏனெனில் சிலர் பிரஜைகளிலிருந்து வாரிசுகளாக மாறுகின்றார்கள். அவர்கள் இந்த ஞானத்தைப் பெற்று, இங்கு எல்லையற்ற சந்தோஷமும் அமைதியும் உள்ளதையும், அவ்வுலகில் துன்பமே உள்ளது என்பதையும் காணும்பொழுது, அவர்களும் கடவுளின் மடிக்கு வருகின்றார்கள்;. எவருமே உடனடியாக ஒரு குழந்தை ஆகுவதில்லை. முன்னர் நீங்களும் வருவதும் போவதுமாகவே இருந்தீர்கள். இதனைச் செவிமடுத்த பின்னரே, இங்கு தங்கியதால், நீங்கள் வாரிசுகள் ஆகினீர்கள். சந்நியாசிகளுக்கும் இதுவே நடக்கின்றது. செவிமடுக்கையில், துறவறத்தில் அமைதியும், சந்தோஷமும் உள்ளதைப் புரிந்துகொள்ளும்பொழுது, அவர்கள் அனைத்தையும் துறக்கின்றார்கள். இங்கும், அவர்கள் இதன் சுவையைக் கண்டதும், அன்பிற்கினிய புத்திரர்கள் ஆகுவதால், பிறவிபிறவியாக ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் தொடர்ந்தும் தேவ வம்சாவளி விருட்சத்தில் வருகின்றார்கள். பிரஜைகள் உங்களுடன் நிலைத்திருப்பதில்லை; அவர்கள் தமது கர்ம பந்தனங்களின் காரணமாக எங்கேனும் சென்று விடுகின்றார்கள். பாடல் கூறுகின்றது: விட்டில்பூச்சிகளின் சந்தோஷ ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது. எனவே விட்டில்பூச்சிகளும் சுவாலை மீது நடனமாடி, அதில் மரணிக்கின்றன. சில சுற்றி வட்டமிட்டுப் பறந்து சென்று விடுகின்றன. சர்வசக்திவான் பாபா பிரவேசித்துள்ள இச்சரீரத்திற்குரியவர் ஒரு சுவாலையைப் போன்றவர். இங்கே நீங்கள் விட்டில்பூச்சிகளாக வந்தீர்கள், நீங்கள் இரகசியங்களைப் புரிந்துகொண்டபொழுது, இங்கேயே தங்கினீர்கள். ஆயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கான மக்கள் இங்கே வருகின்றார்கள், அவர்கள் நீங்கள் கூறுவதைத் தொடர்ந்தும் செவிமடுக்கின்றார்கள். எந்தளவிற்கு அவர்கள் செவிமடுக்கின்றார்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்தும் பேரானந்தத்தினதும், அமைதியினதும் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், ஏனெனில் அமரத்துவமான தந்தையின் இக்கல்வி அழிக்க முடியாதது. இது அழியாத ஞானச் செல்வம் எனப்படுகின்றது; இதனை என்றுமே அழிக்க முடியாது. எனவே, இதனைச் சிறிதளவு செவிமடுப்பவர்களும் நிச்சயமாகப் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். அங்கே பிரஜைகளும் மிக, மிகச் சந்தோஷமாக இருக்கின்றார்கள். அங்கே அனைவரும் ஆத்ம உணர்வில் இருப்பதால், உள்ளார்த்தமான பேரானந்தம் உள்ளது. இங்கே, நாங்கள் சரீர உணர்வுடையவர்களாகி விட்டோம், இதனாலேயே நாங்கள் சந்தோஷம் அற்றிருக்கின்றோம். அது சுவர்க்கமாகும்; அங்கே துன்பத்தின் பெயரோ, சுவடோ இருப்பதில்லை. மிருகங்களும் அதிகளவு அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கின்றன, அவ்வாறாயின், பிரஜைகள் மத்தியில் எவ்வளவு அமைதியும், அன்பும் இருக்கும்? நிச்சயமாக அனைவருமே ஒரு வாரிசு ஆகுவதில்லை. இங்கே, 108 உறுதியான துறவிகள் வெற்றி மாலையில் மணிகளாகுவார்கள். இன்னமும் அவர்கள் அவ்வாறு ஆகவில்லை; இன்னமும் அவர்கள் அவ்வாறாகிக் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரத்தில் பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றார்கள். அவர்களும் நிலையத்திற்கு வெளியில் வாழ்ந்து கொண்டு, இதனைத் தொடர்ந்தும் செவிமடுக்கின்றார்கள். அவர்கள் வீட்டிலிருந்தவாறே யோகம் செய்கின்றார்கள். யோகம் செய்யும்பொழுது, அவர்கள் இங்குள்ள அங்கத்தவர்களில் ஒருவராகுவதால், பிரஜைகளிலிருந்து வாரிசுகளாக மாறுகின்றார்கள். கர்ம பந்தனத்தின் கணக்குகள் சில இன்னமும் அவர்களுக்கு உள்ளதால், அவர்கள் தொடர்ந்தும் வெளியில் வாழ்ந்து கொண்டு, யோகம் செய்வதுடன், தொடர்ந்தும் விகாரமற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே, வீட்டில் வாழும்பொழுது, விகாரமற்றவர்களாக இருப்பதைப் பயிற்சி செய்தால், நிச்சயமாகச் சச்சரவு ஏற்படும்;, ஏனெனில் காமமும், கோபமும் நிறைந்தவர்களும் உள்ளனர்.. நீங்கள் உங்களுடைய கொடிய எதிரியாகிய, காமத்தை வென்று நஞ்சைக் கொடுப்பதை நிறுத்தும்பொழுது, சச்சரவு இடம்பெறுகின்றது. கடவுள் கூறுகின்றார்: குழந்தைகளே, மரணம் உங்கள் முன்னிலையில் உள்ளது; முழு உலகமும் அழிவடைய உள்ளது. மக்கள் முதியோரை நோக்கிக் கூறுகின்றார்கள்: மரணம் முன்னிலையில் உள்ளதால், கடவுளை நினைவுசெய்யுங்கள். தந்தை இங்கமர்ந்திருந்து கூறுகின்றார்: குழந்தைகளே, விகாரமற்றவர்களாகுங்கள்! கடவுளை நினைவுசெய்யுங்கள்! அதேபோன்று, நீங்கள் யாத்திரை ஒன்றைச் செய்யும்பொழுது, விகாரத்தில் ஈடுபடுவதை நிறுத்துவதுடன், கோபப்படுவதும் இல்லை. செல்லும் வழியிலும் நீங்கள் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. அவர்கள் வழி நெடுகிலும் அமரத்துவ பிரபுவிற்கு வெற்றி என்று தொடர்ந்தும் பாடுகின்றார்கள், ஆனால் திரும்பி வந்ததும், மீண்டும் அந்த அதே விகாரங்களில் மூழ்க ஆரம்பிக்கின்றார்கள். நீங்களோ திரும்பி வரப் போவதில்லை. நீங்கள் காமம் நிறைந்தவராகவோ, கோபப்படுபவராகவோ ஆகப்போவதில்லை. நீங்கள் விகாரங்களில் ஈடுபட்டால், உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நீங்கள் புனிதர் ஆகமாட்டீர்கள். புனிதமானவர்களாக ஆகுபவர்களே, வெற்றி மாலையில் ஒருவர் ஆகுவார்கள். சித்தியெய்;தாதவர்கள் சந்திர வம்சத்தில் ஒருவராகுகின்றார்கள். பரமாத்மாவான பரமதந்தை இங்கமர்ந்திருந்து உங்கள் அனைவருக்கும் கற்பிக்கின்றார். அவர் மாத்திரமே ஞானக்கடல். அவர் அங்கு அசரீரி உலகிலிருந்தவாறே ஆத்மாக்களுக்கு ஞானத்தைக் கொடுக்க மாட்டார். அவர் இங்கு வந்தே, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் எனது குழந்தைகள். நான் தூய்மையாக இருப்பதைப் போன்றே, நீங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் வைகுந்தம் என்று அழைக்கப்படுகின்ற, அன்பும், சந்தோஷமும் நிறைந்த சத்தியயுக உலகை ஆட்சிசெய்வீர்கள். இவ்வுலகம் இப்பொழுது மாறுகின்றது, ஏனெனில் இது கலியுகத்திலிருந்து சத்திய யுகம் ஆகுகின்றது. பின்னர் அது சத்திய யுகத்திலிருந்து திரேதா யுகமாக மாறும். திரேதா யுகத்திலிருந்து துவாபர யுகமாகவும், பின்னர் துவாபர யுகத்திலிருந்து கலியுகமாகவும் மாறும். இவ்வாறாகவே உலகம் தொடந்தும் மாறுகின்றது. எனவே, இப்பொழுது இந்த உலகம் மாறுகின்றது. அதனை மாற்றுபவர் யார்? இறைவனே ஆவார், நீங்கள் அவரது அன்பிற்கினிய குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். பிரஜைகளும் உருவாக்கப்படுகின்றார்கள், ஆனால் குழந்தைகள் குழந்தைகளே. பிரஜைகள் பிரஜைகளே. துறவறத்தைக் ஏற்றுக் கொண்டவர்கள் வாரிசுகள் ஆகுகின்றார்கள். அவர்கள் நிச்சயமாக இராஜ குடும்பத்தில் ஒருவர் ஆகுவார்கள். எவ்வாறாயினும் நீங்கள் அந்தளவு ஞானத்தைப் பெற்றிராது விட்டால், உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெற முடியாது. நன்றாகக் கற்பவர்கள் பிரபுக்கள் ஆகுவார்கள். தொடர்ந்தும் வருவதும் போவதுமாக இருப்பவர்கள், பிரஜைகளில் ஒருவர் ஆகுகின்றார்கள். பின்னர் நீங்கள் எந்தளவிற்குப் புனிதமானவர்கள் ஆகுகின்றீர்களோ, அந்தளவிற்கே சந்தோஷத்தைப் பெறுவீர்கள். அவர்களும் அன்பிற்கினியவர் ஆகுவார்கள், ஆனால் அவர்கள் குழந்தைகளாகும்பொழுதே, அவ்வாறு முழுமை அடைகின்றார்கள். உங்களுக்குப் புரிகின்றதா? பலவகையான துறவிகள் உள்ளனர். ஒருவகையினர் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறப்பவர்கள்;, மற்றவர்கள் வீட்டில் வாழ்ந்தாலும் விகாரத்தில் ஈடுபடாதவர்கள். அவர்கள் அமர்ந்திருந்து, தங்களைப் பின்பற்றுபவர்களுக்குச் சமயநூல்கள் போன்றவற்றைக் கூறுகின்றார்கள். அவர்கள் ஆத்மாவின் ஞானத்தைக் கொடுக்கின்றார்கள். அவர்களுக்கும் சிஷ்;யர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் சிஷ்யர்களால் அவர்களது அன்பான புத்திரர்கள் ஆக முடியாது, ஏனெனில் அவர்களுக்கென ஓர் இல்லறமும், குழந்தைகளும் உள்ளனர். எனவே அவர்களால் எவரையுமே தங்களுடன் தங்கியிருக்குமாறு செய்ய முடியாது. அவர்களால் துறவறம் மேற்கொள்ளவும் முடியாது, பிறரைத் துறவறம் மேற்கொள்ளச் செய்யவும் முடியாது. அவர்களது சிஷ்யர்களும் தத்தமது சொந்தக் குடும்பங்களுடனேயே வாழ்கின்றார்கள்; அவர்கள் தொடர்ந்தும் அத்துறவியிடம் செல்கின்றார்கள். அவர் அவர்களுக்குத் தொடர்ந்தும் ஞானத்தை வழங்குகிறார் அல்லது ஒரு மந்திரத்தைக் கொடுக்கிறார்; அவ்வளவுதான். அவர்கள் அவரது வாரிசுகள் ஆகுவதில்லை, ஆகவே, அவர்களுக்குள் எவ்வாறு விரிவாக்கம் இடம்பெற முடியும்? அவர்கள் ஞானத்தை மாத்திரம் கொடுக்கின்றார்கள், பின்னர் தங்கள் சரீரங்களை நீங்கிச் சென்று விடுகின்றார்கள். பாருங்கள், ஒன்று 108 அடங்கிய மாலையும், மற்றையது 16,108 அடங்கிய பெரியதொரு மாலையுமாகும். அது சந்திர வம்சத்தின் இளவரசர், இளவரசிகள் அடங்கிய இராஜ குடும்பத்தின் மாலையாகும். எனவே, இங்கு அந்தளவு ஞானத்தைக் கிரகிக்க முடியாதவர்கள், தூய்மையாக்கப்பட்டாலும் தண்டனையை அனுபவம் செய்து, சந்திர வம்சத்து மாலையில் ஒருவர் ஆகுவார்கள். பல இளவரசர்களும், இளவரசிகளும் உள்ளனர். இந்நேரத்திலேயே நீங்கள் இந்த இரகசியங்களைச் செவிமடுப்பதுடன், அறிந்தும் கொள்கின்றீர்கள். இந்த ஞான விடயங்கள் அங்கே இருப்பதில்லை. இந்த ஞானம் இப்பொழுது சங்கமயுகத்தில், அதாவது, தேவ தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றபொழுது மட்டுமே பெறப்படுகின்றது. எனவே உங்களுக்குக் கூறப்படுகின்றது: தங்களது பௌதீகப் புலன்களை முற்றாக வெற்றிகொள்ளாதவர்கள், சந்திரவம்ச குலத்தின் மாலையில் ஒருவர் ஆகுவார்கள். அவற்றை வெற்றிகொள்பவர்கள் சூரிய குலத்தில் ஒருவர் ஆகுவார்கள். அவர்களின் மத்தியிலும், அவர்கள் நிச்சயமாக வரிசைக்கிரமமானவர்களே. ஒருவர் தனது ஸ்திதிக்கு ஏற்பவே, ஒரு சரீரத்தைப் பெறுகின்றார். பாருங்கள்! மம்மா அனைவரையும் முந்திச் சென்றதால், புலமைப்பரிசிலைப் பெற்றார்; அவர் தலைவி ஆகினார். அவரிடம் முழு ஞானக் கலசமும் ஒப்படைக்கப்பட்டது. நானும் அவரை மம்மா என்றே அழைக்கின்றேன், ஏனெனில், நான் அவரது காலடியில் எனது சரீரம், மனம், செல்வம் அனைத்தையும் அர்ப்பணித்தேனே அன்றி, இரத்தத் தொடர்புள்ள, எனது லௌகீகக் குழந்தைகளுக்கு எதனையும் கொடுக்கவில்லை. இங்கே, நீங்கள் அநாதியான குழந்தைகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் துறந்தே இங்கே வந்துள்ளதால், உங்கள் மீது பெரும் அன்பு உள்ளது. அநாதியான அன்பே அனைத்திலும் உறுதியானது. சந்நியாசிகளும் தங்களது வீடுகளை நீங்கிச் செல்கின்றார்கள். நீங்கள் இங்கு அனைத்தையும் எடுத்து வந்து, அவற்றை அர்ப்பணித்துள்ளீர்கள். கடவுளே நடைமுறைரீதியில் உங்களுக்குச் செயற்பட்டுக் காட்டுகின்றார். இங்கே உங்களுக்கு எத்தகைய கேள்விகளுக்கும் பதிலைப் பெற முடியும். கடவுளே வந்து அதனை உங்களுக்குக் கூறவும் முடியும். அவர் மந்திரவாதியாவார், அவரது மந்திர வித்தையின் பாகம் இப்பொழுது நடிக்கப்படுகின்றது. நீங்கள் மிகவும் அன்பான குழந்தைகள்; தந்தையால் என்றுமே உங்களைக் குழப்பமடையச் செய்ய முடியாது. அவர் உங்களைக் குழப்பமடையச் செய்தால், குழந்தைகளாகிய நீங்களும் கோபப்படுவதைக் கற்றுக் கொள்வீர்கள். இங்கே அனைவரிடமும் உள்ளார்ந்த அன்பு உள்ளது. சுவர்க்கத்திலும் அவர்களிடம் அதிகளவு அன்பு உள்ளது. அங்கு அவர்கள் சதோபிரதானாக இருக்கின்றார்கள். இங்கே, வருகின்ற விருந்தாளிகளுக்குப் பெருமளவு சேவை செய்யப்படுகின்றது, ஏனெனில் அவர்கள் மீதும் அமைதியும், சந்தோஷமும் பொழியப்படுகின்றன. அவர்களும் அன்பிற்கினிய பிரஜைகளாக உள்ளார்கள். பெற்றோரும் (மம்மாவும், பாபாவும்), குழந்தைகள் அனைவரும் அவர்களுக்குச் சேவை செய்வதில் ஈடுபடுகின்றார்கள். நீங்கள் தேவர்களாகிக் கொண்டிருந்தாலும், இங்கு அந்த அந்தஸ்தின் அகங்காரம் எதனையும் கொண்டிருப்பதில்லை. நீங்கள் அனைவரும் கீழ்ப்படிவான சேவகர்;களாகி, சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். கடவுளும் கீழ்ப்படிவான சேவகராகி, தனது அன்பிற்கினிய புத்திரர்களுக்கும், பிரஜைகளுக்கும் சேவை செய்கின்றார். அவர் தனது குழந்தைகள் மீது பேரானந்தத்தைப் பொழிகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, ஒவ்வொரு சக்கரமும் பிரிந்திருந்து மீண்டும் ஒருமுறை இங்கே வந்திருக்கும் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் கண்களின் ஒளிகளான அத்தகைய குழந்தைகளுக்கு, இதயத்தின் ஆழத்திலிருந்து பெருமளவு அன்பும் நினைவும் காலை வந்தனங்களும், தாய் தந்தையான பாப்தாதாவிடமிருந்தும் பெருமளவு அன்பும் உரித்தாகட்டும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாப்தாதா என்றுமே குழந்தைகளான உங்களைக் குழப்பமடையச் செய்யாததைப் போல, குழந்தைகளான நீங்களும் எவரையும் குழப்பமடையச் செய்யக்கூடாது. ஒருவரோடு ஒருவர் உள்ளார்ந்தமாக அன்புடன் வாழுங்கள். என்றுமே கோபப்படாதீர்கள்.

2. அமைதி, பேரானந்தம் போன்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, முழுமையாகவே உங்களைச் சுவாலையில் அர்ப்பணியுங்கள். இக்கல்வியின் மூலம் பரம அமைதிக்கும், பரம சந்தோஷத்திற்குமான இறை உரிமையைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒன்றுகூடலில் ஒத்துழைப்புச் சக்தியால் அனைவரினதும் நலன்விரும்பியாகவும், வெற்றியாளராகவும் ஆகுவீர்களாக.

ஒன்றுகூடலிலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாளர்களாகவும், நலன்விரும்பிகளாகவும் இருந்தால், அப்பொழுது ஒன்றுகூடலில் உங்கள் ஒத்துழைப்புச் சக்தி மூலம் முற்றுகையிடுவதால், அற்புதங்களை நிகழ்த்த முடியும். ஒருவர் மற்றவரின் நலன்விரும்பியாகவும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பவராகவும் இருப்பதால், இந்த வட்டத்திற்குள் பிரவேசிக்கின்ற தைரியத்தை மாயை கொண்டிருக்க மாட்டாள். எவ்வாறாயினும், நீங்கள் எத்தனை விடயங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், நிச்சயமாக நீங்கள் அவற்றை எதிர்நோக்கி, வெற்றியாளர்களாகி, அனைவருக்கும் காட்டுவீர்கள் என்ற திடசங்கற்பமான எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும்பொழுது மாத்திரமே, ஒன்றுகூடலில் ஒத்துழைப்புச் சக்தி இருக்கும்.

சுலோகம்:
எந்த ஆசைகளும் (இச்சா) உங்களை நல்லவராக (அச்சா) அனுமதிக்க மாட்டாது. ஆகவே, ஆசைகளின் அறிவையே அறியாதவர்கள் ஆகுங்கள்.