13.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் உண்மையான தீபமாலா (தீப விழா) புதிய உலகிலேயே இருக்கும். இதனாலேயே இப்பழைய உலகின் பொய்யான விழாக்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாது.

பாடல்:
நீங்களே புனித அன்னங்கள். உங்கள் கடமை என்ன?

பதில்:
ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதும், அனைவரதும் புத்தியின் யோகத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைப்பதுமே உங்கள் பிரதான கடமையாகும். நீங்களும் தூய்மையாகிப் பிறரையும் தூய்மையாக்குகின்றீர்கள். நீங்கள் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற பணியில் சதா ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவித்;து, வழிகாட்டிகளாகி, அவர்களுக்கு முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்ட வேண்டும்.

பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதால், முழு உலகையும் கண்டுகொண்டோம். பூமி, ஆகாயம் அனைத்தும் எங்களுக்கே சொந்தம்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். நீங்கள் உங்களுடைய சுவர்க்க இராச்சியம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் எனக் குழந்தைகளான நீங்கள் கூறுகின்றீர்கள். அதனை எவராலும் என்றுமே எரிக்க முடியாது; அதனை எவராலும் எங்களிடமிருந்து அபகரிக்கவும் முடியாது. அந்த ஆஸ்தியை எங்களிடமிருந்து எவராலும் வெற்றி கொள்ளவும் முடியாது. ஆத்மாக்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். அத்தகைய தந்தையே உண்மையில் தாயும் தந்தையுமானவர் என்று அழைக்கப்படுகின்றார். தாயும் தந்தையுமானவரை இனங்காண்பவர்களாலேயே இந்த நிறுவனத்திற்கு வர முடியும். தந்தையும் கூறுகின்றார்: நான் குழந்தைகளான உங்களின் முன்னிலையில் நேரடியாக என்னை வெளிப்படுத்தி, உங்;களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். உயிருடன் உள்ளபொழுதே, குழந்தைகள் வந்து, எல்லையற்ற தந்தையைத் தங்களுக்கு உரியவர்கள் ஆக்குகின்றார்கள். குழந்தைகளான நீங்கள் உயிருள்ளபொழுதே தத்தெடுக்கப்படுகின்றீர்கள். நீங்கள் எனக்குரியவர்கள், நான் உங்களுக்கு உரியவர். நீங்கள் ஏன் எனக்குரியவர்கள் ஆகுகின்றீர்கள்;? நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் உங்களிடமிருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெறுவதற்காகவே, உங்களுக்கு உரியவர்களாகி விட்டோம். நல்லது குழந்தையே; அத்தகையதொரு தந்தையை என்றுமே விட்டு நீங்காதீர்கள். இல்லாவிடின், அதன் விளைவு என்னவாக இருக்கும்? சுவர்க்க இராச்சியத்தின் முழு ஆஸ்தியையும் உங்களால் பெற முடியாது. பாபாவும், மம்மாவும் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியுமாக ஆகுகின்றார்கள். ஆகவே, நீங்களும் முயற்சி செய்து, அத்தகைய ஆஸ்தியைப் பெற வேண்டும். எவ்வாறாயினும், முயற்சி செய்யும்பொழுது, குழந்தைகளிற் சிலர் தந்தையை விட்டு நீங்கிய பின்னர், சென்று, விகாரங்களில் சிக்கி, நரகத்தினுள் வீழ்ந்;து விடுகின்றார்கள். நரகம் நரகமே, சுவர்க்கம் சுவர்க்கமே. நீங்கள் கூறுகின்றீர்கள்: சதாகாலமும் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதற்காகவே, நாங்கள் தந்தையை எங்களுக்கு உரியவர் ஆக்குகின்றோம், ஏனெனில், இப்பொழுது நாங்கள் நரகத்தில் இருக்கின்றோம். சுவர்க்கத்தைப் படைப்பவரான, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் வரும்வரை, எவராலும் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் என்பதே அவரின் பெயராகும். உங்களுக்கு அதனை இந்த நேரத்திலேயே தெரியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே, உண்மையிலேயே தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், முன்னேறிச் செல்லும்பொழுது, மாயையின் புயல்கள் உங்களை முற்றாக அழித்து விடுகின்றன. அப்பொழுது நீங்கள் கற்பதை நிறுத்தி விடுகின்றீர்கள், அதாவது, நீங்கள் மரணித்து விடுகின்றீர்கள். கடவுளுக்கு உரியவர்களாகிய பின்னர், அவரைக் கை விட்டால், நீங்கள் புதிய உலகிற்கு மரணித்து, பழைய உலகிற்குச் சென்று விட்டீர்கள் என்பதே அர்த்தமாகும். தந்தையான சுவர்க்கக் கடவுள் மாத்திரமே, உங்களை நரகத்தின் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களின் வழிகாட்டியாகி, ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கிருந்து வந்தோமோ, அந்த இனிய மௌன வீட்டிற்கே உங்களை மீண்டும் அழைத்துச் செல்கின்றார், பின்னர் அவர் எங்களுக்கு இனிய சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கின்றார். இரு விடயங்களைக் கொடுப்பதற்காகவே தந்தை வருகின்றார்: அவை முக்தியும், சற்கதியும் ஆகும். சத்திய யுகம் சந்தோஷ தாமமாகும், கலியுகம் துன்ப உலகமாகும், அத்துடன் அமைதி தாமம் என்ற இடத்திலிருந்தே ஆத்மாக்களாகிய நாங்கள் வருகின்றோம். அந்தத் தந்தையே எதிர்காலத்திற்கான அமைதியை அருள்பவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். இந்த அமைதியற்ற உலகிலிருந்து, முதலில் நாங்கள் அமைதி தாமத்திற்குச் செல்வோம். அது இனிய மௌன வீடு என்று அழைக்கப்படுகின்றது. நாங்கள் அங்கே வசிக்கின்றோம். ஆத்மாக்களே கூறுகின்றார்கள்: அது எங்கள் இனிய வீடாகும், அதன்பின்னர், இந்நேரத்தில் இந்த ஞானத்தைக் கற்பதன் மூலம், நாங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெறுவோம். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், விடுதலையளிப்பவர், வழிகாட்டி, ஞானம் நிறைந்தவர், பேரானந்தமிக்கவர், ஞானக் கடல் என்பன தந்தையின் பெயர்களாகும். அவர் கருணை மிக்கவரும் ஆவார். அவர் அனைவர் மீதும் கருணை கொண்டுள்ளார். அவருக்குத் தத்துவங்களின் மீதும் கருணை உள்ளது. அனைவரும் துன்பத்திலிருந்து விடுதலை அடைகின்றனர். மிருகங்கள் போன்றனவும் துன்பத்தை அனுபவம் செய்கின்றன. நீங்கள் எதனையாவது கொன்றால், அது துன்பத்தை அனுபவம் செய்யும் அல்லவா? தந்தை கூறுகின்றார்: நான் மனிதரை மாத்திரமல்ல, அனைவரையும் துன்பத்திலிருந்து விடுதலை செய்கின்றேன். எவ்வாறாயினும் நான் மிருகங்களை என்னுடன் அழைத்துச் செல்ல மாட்டேன். இது மனிதர்களையே குறிக்கின்றது. ஒரேயொருவரே அத்தகைய எல்லையற்ற தந்தை; ஏனைய அனைவரும் உங்களைச் சீரழிவிற்கே அழைத்து செல்கின்றார்கள். எல்லையற்ற தந்தை மாத்திரமே சுவர்க்கம் என்ற வெகுமதியை அல்லது முக்தி தாமத்தை உங்களுக்குக் கொடுப்பார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார். ஒரேயொரு தந்தையே அதிமேலானவர். பக்தர்கள் அனைவரும் அந்தத் தந்தையான கடவுளையே நினைவுசெய்கின்றனர். கிறிஸ்தவர்களும் கடவுளை நினைவுசெய்கின்றனர். சிவனே தந்தையாகிய சுவர்க்கக் கடவுள். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவரும், பேரானந்தமிக்கவரும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்களும் வரிசைக்கிரமமானவர்;களே. சிலரை எந்தளவிற்கு இந்த ஞானத்தால் அலங்கரித்தாலும், அவர்கள் விகாரத்தில் விழுந்து, அழுக்கான உலகினால் கவரப்படுபவர்களாக இருக்கின்றார்கள். குழந்தைகளிற் சிலர் தீபாவளியைக் காணச் செல்கின்றார்கள். உண்மையில், எனது குழந்தைகள் அந்தப் பொய்யான தீபாவளியைப் பார்க்கக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கு ஞானம் இல்லாததால், அந்த ஆசை உள்ளது. நீங்கள் தூய்மையாகி விட்டதும், உங்கள் தீபாவளி சத்திய யுகத்திலேயே இருக்கும். தந்தை உங்களை இனிய வீட்டிற்கும், இனிய சுவர்க்கத்திற்கும் அழைத்துச் செல்வதற்கே வருகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நன்றாகக் கற்று, ஞானத்தைக் கிரகிப்பவர்களே சுவர்க்க இராச்சியத்திற்குச் செல்வார்கள். எவ்வாறாயினும், அது உங்கள் பாக்கியத்தில் இருக்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாதிருந்தால், நீங்கள் மேன்மையானவர்களாக மாட்டீர்கள். இவை ஸ்ரீ ஸ்ரீ கடவுள் சிவனின் வாசகங்கள். மனிதர்கள் கடவுளை இனங்காணும் வரை, தொடர்ந்தும் பக்தி செய்வார்கள். நம்பிக்கை உறுதியாகும்பொழுது, பக்தி இயல்பாகவே துறக்கப்படுகின்றது. நீங்கள் “புனிதமானவர்கள்”. நீங்கள் தந்தையான கடவுளின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப, அனைவரையும் தூய்மையாக்குகின்றீர்கள். அம்மக்கள் இந்துக்களையும் இஸ்லாமியரையும் கிறிஸ்வர்களாக ஆக்குகின்றார்கள். நீங்கள் அசுரத்தனமான மனிதர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகின்றீர்கள். அவர்கள் தூய்மையாகும்பொழுதே, சுவர்க்கத்திற்கோ அல்லது இனிய வீட்டிற்கோ செல்ல முடியும். ஒரேயொருவரே அன்றி, வேறெவரும் இல்லை. நீங்கள் ஒரேயொரு தந்தையை அன்றி, வேறெவரையும் நினைவுசெய்வதில்லை. ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் ஆஸ்தியைப் பெறவுள்ளதால், நீங்கள் நிச்சயமாக அந்த ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்வீர்கள். நீங்களும் தூய்மையாகி, ஏனையோரும் தூய்மையாகுவதற்கு உதவி செய்கின்றீர்கள். அந்தக் கன்னியாஸ்திரிகள் எவரையும் தூய்மையாக்குவதோ அல்லது பிறரையும் தம்மைப் போன்று கன்னியாஸ்திரிகள் ஆக்குவதோ இல்லை. அவர்கள் இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுகின்றார்கள். புனித கன்னியாஸ்திரிகளாகிய நீங்கள் அனைவரையும் தூய்மையாக்கி, ஆத்மாக்கள் அனைவரது புத்தியின் யோகத்தையும் ஒரேயொரு தந்தையாகிய கடவுளுடன் இணைக்கின்றீர்கள். கீதையில் கூறப்படுகின்றது: உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்கள் அனைவரையும் துறந்து, உங்களை ஓர் ஆத்மா எனக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். பின்னர், ஞானத்தைக் கிரகிப்பதனால் மாத்திரமே, நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். தந்தையை நினைவுசெய்வதனால் மட்டுமே, நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுவீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் என்றென்றும் செல்வந்தர்கள் ஆகுவீர்கள். தந்தை ஞானக் கடல். அவர் வேதங்களினதும், சமயநூல்களினதும் சாராம்சம் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். பிரம்மா கரத்தில் சமயநூலை வைத்திருப்பதாக அவர்கள் சித்தரித்துள்ளார்கள். இவர் பிரம்மா ஆவார். சிவபாபா வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை இவரினூடாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவரே ஞானக் கடல். நீங்கள் தொடர்ந்தும் இவரினூடாக இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பின்னர் ஏனையோர் தொடர்ந்தும் உங்களினூடாக அதனைப் பெறுகின்றார்கள். குழந்தைகளிற் சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் இந்த ஆன்மீக வைத்தியசாலையை ஆரம்பிக்கின்றேன், அங்கு நோயுற்ற மனிதர்கள் வந்து, நோயிலிருந்து விடுதலை அடைந்து, தங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற முடியும். அவர்களால் தங்கள் வாழ்வுகளைத் தகுதிவாய்ந்தவை ஆக்கி, பெருமளவு சந்தோஷத்தையும் பெற முடியும். ஆகவே, அவர்கள் பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் பெறுவார்கள். கீதை, பாகவதம், வேதங்கள், உபநிடதம் போன்ற பாரதத்தின் சமயநூல்களைக் கற்பதும், யாகங்கள் வளர்த்தல், தபஸ்யா செய்தல், விரதம் அனுட்டித்தல், குறித்த சத்தியத்தைச் செய்தல், யாத்திரை செய்வது போன்ற அனைத்தும் மோரைப்; போன்றவை; அவை பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். ஒரேயொரு பகவத்கீதையான ஒரேயொரு கடவுளின் ஸ்ரீமத்தை மாத்திரமே பின்பற்றுவதனால், பாரதம் வெண்ணெயைப் பெற்றுக் கொள்கின்றது. ஸ்ரீமத் பகவத்கீதையும் பொய்யாக்கப்பட்டுள்ளதால், தூய்மையாக்குபவரும், அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையுமான ஞானக் கடலின் பெயருக்குப் பதிலாக அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதால், அதனை மோர் ஆக்கி விட்டார்கள். இதுவே ஒரேயொரு பெருந் தவறாகும். ஞானக் கடல் குழந்தைகளாகிய உங்களுக்கு, இந்த ஞானத்தை நேரடியாகவே கொடுக்கின்றார். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதும், உலக விருட்சம் எவ்வாறு வளர்கின்றது என்பதும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். பிராமணர்களாகிய நீங்களே உச்சிக் குடுமிகளும், சிவபாபா பிராமணர்களின் தந்தையும் ஆவார். அதன்பின்னர் நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாகவும், பின்னர் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுவீர்கள். இதுவே குத்துக்கரணம் ஆகும். இது 84 பிறவிகளின்; சக்கரம் என்று அழைக்கப்படுகின்றது. ‘பக்தி மோர் என்றும், ஞானம் வெண்ணெய் என்றும், அதனூடாக நீங்கள் முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறலாம்’ என நீங்கள் வேதங்களை வாசிக்கின்ற ஒன்றுகூடல்களில் அவற்றை வாசிப்பவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் ஞானத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அப்பொழுது அதனைப் பொறுமையாகக் கேளுங்கள். பிரம்மாகுமாரிகளினால் அதனை உங்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பீஷ்ம பிதாமகருக்கும், அஷ்வத்தாமா (மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்கள்) போன்றோருக்கும் இறுதியில், இந்தக் குழந்தைகள் இந்த ஞானத்தைக் கொடுத்தார்கள் என்று சமயநூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் கூறுவது சரியானது என்பதை இறுதியில் அனைவரும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் நிச்சயமாக இறுதியில் வருவார்கள். நீங்கள் கண்காட்சிகளை நடாத்தும்பொழுது, பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகின்றார்கள், ஆனால் அனைவருமே புத்தியில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர்கள் ஆகுவதில்லை. பல மில்லியன் மக்களில் ஒரு கைப்பிடி அளவினரே மிகவும் நன்றாகப் புரிந்துகொள்வதுடன், இந்த நம்பிக்கையையும் கொண்டுள்ளார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கும், அதிர்ஷ்ட ஞான நட்சத்திரங்களுக்கும், உங்களின் முயற்சிகளுக்கு எற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய்மையாகி, உங்களைப் போன்று பிறரையும் தூய்மையாக்குங்கள். ஒரேயொரு தந்தையைத் தவிர, வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள்.

2. ஆத்மாக்கள் பலரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு, ஓர் ஆன்மீக வைத்தியசாலையைத் திறவுங்கள். அனைவருக்கும் முக்திக்கும், சற்கதிக்குமான பாதையைக் காட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதுடன், தந்தை பிரம்மாவைப் பின்பற்றுவதால், முதல் வகுப்பினுள் வருவீர்களாக.

குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் தந்தை பிரம்மாவின் மீது பெரும் அன்பு உள்ளது, அன்பைக் கொண்டிருப்பதன் அடையாளமானது அவருக்குச் சமமானவர் ஆகுவதே ஆகும். இதற்கு, சதா இந்த இலக்கைக் கொண்டிருங்கள்: நான் முதலில்! பொறாமையின் அடிப்படையிலான “நான் முதலில்” என்பதல்ல, ஏனெனில் அது சேதத்தை ஏற்படுத்துகின்றது. எவ்வாறாயினும், “நான், முதலில்” என்று நீங்கள் கூறுவது தந்தையைப் பின்பற்றுபவராக இருந்து, அதனை நீங்கள் உண்மையில் நடைமுறையில் செய்யும்பொழுது, முதலாமவருடன் நீங்களும் முதலில் வருவீர்கள். தந்தை பிரம்மா முதல் இலக்கத்தவர் ஆகியதைப் போல், அவரைப் பின்பற்றுபவர்களும் முதல் இலக்கத்தவர்கள் ஆகுகின்ற இலக்கை வைத்திருக்க வேண்டும். முதல் அடியை எடுத்து வைப்பவர்களே அர்ச்சுனரான, முதலாமவர் ஆவர். அனைவருக்கும் முதலில் வருகின்ற ஒரு வாய்ப்பு உள்ளது. முதல் வகுப்பானது எல்லையற்றது, குறைவானதல்ல.

சுலோகம்:
ஒரு வெற்றி சொரூபம் ஆகுவதற்கு, பிறருக்குச் சேவை செய்கின்ற அதேநேரத்தில் உங்களுக்கும் சேவையாற்றுகின்ற, சேவையைச் செய்யுங்கள்.

மாதேஷ்வரியின் மேன்மையான வாசகங்கள் 21ஃ01ஃ57

இந்த இறை சற்சங்கம் (ஆன்மீக ஒன்றுகூடல்) பொதுவான சற்சங்கம் அல்ல.

எங்களுடைய இந்த இறை சற்சங்கம் பொதுவான ஒரு சற்சங்கம் அல்ல. இது நாங்கள் தினமும் ஒழுங்காகக் கற்க வேண்டிய ஓர் இறை பாடசாலை அல்லது கல்லூரி ஆகும். மற்றையது, சென்று 'சற்சங்கத்தில் கலந்துகொள்வது” ஆகும், அவர்கள் ஒரு குறுகிய காலப் பகுதிக்கு அவற்றைச் செவிமடுத்து, பின்னர் அவர்கள் முன்னர் எவ்வாறிருந்தார்களோ, அந்த நிலைக்கு மீண்டும் திரும்புதல் என்பதாகும். நீங்கள் முன்னர் இருந்ததைப் போல ஆகுகின்றீர்கள், ஏனெனில் நீங்கள் ஒரு வெகுமதியை உருவாக்கக்கூடிய ஒழுங்கான கல்வியை அங்கு பெறுவதில்லை. இதனாலேயே, எங்களது சற்சங்கம் ஒரு பொதுவான சற்சங்கம் அல்ல. இது கடவுளே அமர்ந்திருந்து, எங்களுக்குக் கற்பிக்கும் எங்கள் இறை கல்லூரி, இங்கு நாங்கள் முழுமையாக இந்தக் கல்வியைக் கிரகித்து உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருகிறோம். ஆசிரியர் ஒருவர் தினமும் உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்கு ஒரு பட்டத்தை வழங்குவதைப் போன்று, இங்கு, கடவுளே குருவினதும், தந்தையினதும் ஆசிரியரினதும் ரூபத்தில் ஒவ்வொரு நாளும் எங்களுக்குக் கற்பித்து, தேவர்கள் என்ற அதியுயர்ந்த அந்தஸ்தை நாங்கள் அடையுமாறு செய்கிறார். இதனாலேயே, இந்தப் பாடசாலையில் இணைந்துகொள்வது முக்கியமானது. இங்கு வருபவர்கள் இந்த ஞானத்தையும், இங்கு என்ன கற்பித்தல்கள் பெறப்படுகின்றன என்றும், இந்தக் கற்பித்தல்களால் நீங்கள் எதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்றும் புரிந்துகொள்வது அவசியமாகும். கடவுளே வந்து, எங்களைப் பட்டப் படிப்பில் சித்தியடையுமாறு செய்கிறார் என்பதையும், இந்த ஒரு பிறவியில் இந்த முழுப் பாடநெறியையும் நாங்கள் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதையும் நாங்கள் இப்பொழுது அறிவோம். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இந்த ஞானம் எனும் பாடநெறி முழுவதையும் கற்பவர்கள் முழுமையாகச் சித்தி எய்துவார்கள். இந்தப் பாடநெறியின் இடைநடுவில் வருபவர்கள் அந்தளவிற்கு இந்த ஞானத்தைப் பெற மாட்டார்கள். பாடநெறியில் ஆரம்பத்தில் என்ன கற்பிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிந்;துகொள்ள மாட்டார்கள். இதனாலேயே, இங்கு நீங்கள் ஒழுங்காகக் கற்க வேண்டும். இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் முன்னேறுவீர்கள், இதனாலேயே நீங்கள் ஒழுங்காகக் கற்க வேண்டும்.

கடவுளின் உண்மையான குழந்தையாகிய பின்னர், எந்தவிதமான சந்தேகங்களையும் கொண்டிராதீர்கள்.

கடவுளே இந்தப் பூமிக்கு வந்திருப்பதனால், நாங்கள் அவருக்கு எங்களது கரங்களை முழுமையாகக் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும், பாபாவின் உண்மையான, உறுதிவாய்ந்த குழந்தைகள் மட்டுமே தங்கள் கரங்களை பாபாவிற்குக் கொடுப்பார்கள். அந்தத் தந்தையின் கரத்தை என்றும் கைவிடாதீர்கள். நீங்கள் கைவிட்டால், ஓர் அநாதை ஆகியபின்னர், எங்கு செல்வீர்கள்? இப்பொழுது நீங்கள் கடவுளின் கரத்தைப் பற்றியிருப்பதனால், சூட்சுமமான முறையிலேனும் அதைக் கைவிடுகின்ற எண்ணம் சிறிதளவு கூட உங்களுக்கு ஏற்படவும் கூடாது, 'என்னால் அக்கரைக்குச் செல்ல முடியுமா, முடியாதா என எனக்குத் தெரியவில்லை” என்ற சந்தேகங்களையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. தந்தையை இனங்கண்டு கொள்ளாத இத்தகைய குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் தாம் எவரையிட்டும் அக்கறை கொள்வதில்லை எனத் தந்தைக்குத் திரும்பவும் பதில் அளிக்கிறார்கள். உங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருந்தால், இத்தகைய தகுதியற்ற குழந்தைகளைத் தந்தையால் எவ்வாறு பராமரிக்க முடியும்? நீங்கள் வீழப் போகின்றீர்;கள் என்பதை அப்பொழுது புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் மாயை உங்களை வீழ்த்துவதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்கிறாள், எந்தளவிற்கு நீங்கள் திறமைசாலியான, உறுதிவாய்ந்த போராளியாக இருக்கிறீர்கள் எனப் பார்ப்பதற்கு அவள் நிச்சயமாக உங்களைப் பரீட்சிப்பாள். இதுவும் அத்தியாவசியமானது. நாங்கள் கடவுள் மூலம் உறுதியானவர்கள் ஆகுமளவிற்கு, மாயையும் பலசாலியாகி எங்களை வீழ்த்துவதற்கு முயற்சி செய்வாள். மிகச்சரியான எதிருக்கு எதிரான இணைப்பு காணப்படும். கடவுள் பலசாலியாக இருப்பதைப் போன்று, மாயையும் அவளது பலத்தைக் காட்டுவாள். ஆனால் இறுதியாகக் கடவுளே அதிபலசாலி என்றும், இறுதியாக வெற்றியும் அவருடையதே என்றும் உறுதியான நம்பிக்கையை நாங்கள் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மூச்சிலும் நாங்கள்; இந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மாயை தனது பலத்தைக் காட்ட வேண்டியுள்ளது; அவள் கடவுளுக்கு முன்னால் தனது பலவீனத்தைக் காட்ட முடியாது. நீங்கள் உங்களுடைய பலவீனத்தை ஒரு தடவையேனும் காட்டுவீர்களாயின், அனைத்துமே முடிவடைந்து விடுகின்றது. எனவே, மாயை தனது விசையைக் காட்டினாலும், நாங்கள் மாயாபதியின் (மாயையின் பிரபு) கரத்தைக் கைவிடக்கூடாது. அவரின் கரத்தை முழுமையாகப் பற்றியிருப்பவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்கள். கடவுள் எங்களது அதிபதியாக இருப்பதனால், அவரின் கரத்தைக் கைவிடும் எண்ணம் கூட எங்களுக்கு இருக்கக்கூடாது. கடவுள் கூறுகிறார்: குழந்தைகளே, நான் சக்திசாலியாக இருப்பதனால், என்னுடன் இருப்பதன் மூலம் நீங்கள் நிச்சயமாகச் சக்திசாலி ஆகுவீர்கள். குழந்தைகளே, நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களா? ?