14.02.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய உங்களின் ஆதி தர்மம் அமைதியாகும். ஆத்மாக்களின் உலகம் அமைதிதாமமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். ஆதலால் நீங்கள் அமைதி வேண்டும் என்று கேட்க முடியாது.

கேள்வி:
உங்கள் யோக சக்தி என்ன அற்புதங்களைப் புரிகின்றது?

பதில்:
யோக சக்தியினால் நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்குகிறீர்கள். யோக சக்தியினால் இந்த முழு மலையையும் அகற்றி தங்க மலையை ஸ்தாபிப்பதற்கு, உங்களில் வெகு சில குழந்தைகளே உள்ளீர்கள், பஞ்ச பூதங்களும் சதோபிரதானாகி மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும். சடப்பொருள் சதோபிரதானாக இருக்கும்போது, உங்கள் சரீரமும் சதோபிரதான் ஆகும். அங்கிருக்கும் பழம் மிகவும் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஓம் சாந்தி.
நீங்கள் ஓம்சாந்தி என்று கூறும்போது, அதிகளவு சந்தோஷம் இருக்கவேண்டும். உண்மையில் ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். ஆத்மாக்களாகிய உங்களின் ஆதி தர்மம் அமைதியாகும். அமைதி உங்கள் கழுத்து மாலையாகும் என்றே சந்நியாசிகள் அமைதியையிட்டுக் கூறுகின்றார்கள். அமைதியை நீங்கள் ஏன் வெளியில் தேடுகின்றீர்கள்? ஆத்மாக்கள், தாமே அமைதி சொரூபங்களாவார்கள். ஆத்மாக்கள் தமது பாகத்தை நடிப்பதற்காக சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். ஆத்மாக்கள் எப்பொழுதும் அமைதியில் நிலைத்திருந்தால், அவர்களால் எவ்வாறு செயல்களைச் செய்ய முடியும்? செயல்கள் செய்யப்பட வேண்டும். ஆம். மௌன தாமத்தில், ஆத்மாக்கள் மௌனமாகவே இருக்கின்றார்கள். அங்கு சரீரங்கள் இருப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்பதையும், அவர்கள் மௌனதாமவாசிகள் என்பதையும் சந்நியாசிகள் எவருமே புரிந்து கொள்ளவில்லை. மௌனதாமமே உங்கள் வீடு என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பின்னர் நீங்கள் சந்தோஷதாமத்திற்குச் சென்று உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். பின்னர் துன்ப பூமியில் இராவணனின் இராச்சியம் உள்ளது. இதுவே 84 பிறவிகளின் கதையாகும். கடவுள் அர்ஜுனனிடம் கூறுகின்றார்: உங்கள் சொந்தப் பிறவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர் ஏன் ஒருவருடன் மாத்திரம் பேசுகின்றார்? ஏனெனில், ஒருவருக்கே உத்தரவாதம் உள்ளது. இராதைக்கும் கிருஷ்ணருக்கும் உத்தரவாதம் உள்ளதால் அவர்களுடன் அவர் பேசுகின்றார். குழந்தைகள்; அனைவரும் 84 பிறவிகளையும் எடுப்பதில்லை என்பதைத் தந்தையும் அறிவார், குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். சிலர் இடையிலும், சிலர் இறுதியிலும் வருகின்றார்கள், எனினும் இவரைப் பொறுத்தவரை இது நிச்சயமாகும். ஓ குழந்தையே! என்று பாபா இவரிடம் கூறுகின்றார்: ஓ குழந்தையே, ஆகையால் இவரே அர்ஜுனன் ஆவார். அவர் இந்த இரதத்தில் அமர்ந்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு பிறப்பு எடுப்பீர்கள் என்பதை, நீங்களாகவே புரிந்துகொள்ள முடியும். நீங்கள் எச்சேவையையும் செய்யாதிருந்தால், உங்களால் எவ்வாறு புதிய உலகான சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் வரமுடியும்? அது உங்கள் பாக்கியத்தில் இருக்க முடியாது. இறுதியில் பிறப்பெடுப்பவர்கள், வீடு பழையதாகிய பின்னரே வருகின்றார்கள். இது நிச்சயமாகியுள்ள இவருக்காகவே, நான் பேசுகின்றேன். மம்மாவும் பாபாவும் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதை உங்களாலும் புரிந்துகொள்ள முடியும். குமார்க்காவும் ஜனக்கும் உள்ளார்கள். அத்தகைய மகாராத்திகள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். சேவை செய்யாதவர்கள் நிச்சயமாக சில பிறவிகளின் பின்பே வருகின்றார்கள். அவர்கள் சித்தியெய்தாது, தாமதமாகியே வருகின்றார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும். பாடசாலையிலும் அவர்கள் தமக்கான முடிவுக்கோடுவரை ஓடிய பின்னர் திரும்பி வருகின்றார்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓட்டப்போட்டியிலும், கால் அங்குல வித்தியாசம் இருப்பினும் முந்தியவரே வெற்றியீட்டுகின்றார். இதுவும் ஓரு குதிரை ஓட்டப்பந்தயமாகும். இதுவே அஷ்வா பந்தயமாகும். அஷ்வா என்றால் குதிரையாகும். இந்த இரதமும் குதிரை என்றே அழைக்கப்படுகின்றது. தக்ஷ பிரஜாபிதா, யாகம் ஒன்றை உருவாக்கி, அந்த யாகத்தில் ஒரு குதிரையை பலியிட்டார் என்று கூறப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தக்ஷபிரஜாபிதா இருக்கவும் இல்லை, அவர் யாகம் எதையும் உருவாக்கவும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பல பொய்யான புத்தங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை கதைகள் என்றே கூறப்பட்டுள்ளன. அவர்கள் பல கதைகளை செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் நீங்களோ கற்கின்றீர்கள். கல்வியை கதை என்று அழைக்க முடியாது. நீங்கள் பாடசாலையில் கற்கும் போது, ஓர் இலக்கும் இலட்சியமும் உள்ளது. அக் கல்வியின் மூலம் உங்களுக்கு ஒரு தொழில் கிடைக்கின்றது. அதில் ஏதோ ஒன்றைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதிகளவு ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவையாகும். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிய முடியும். நீங்கள் அவரை விசேடமாக நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும் நான் சிவபாபாவின் குழந்தைதானே, நான் ஏன் அவரை நினைவு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இல்லை. உங்களை அவரின் மாணவர் என நீங்கள் கருதும் அதேவேளை அவரை நினைவு செய்யவும் வேண்டும். சிவபாபா ஆத்மாக்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார். இதனையும் நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள். சிவபாபா மாத்திரமே உலகின் ஆரம்பம் மத்தி இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கற்பிக்கும் ஒரேயொரு ஆசிரியர் ஆவார். இதுகூட உங்களுக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவருமே, தந்தையின் நினைவில் எவ்வளவு நேரம் இருக்கின்றீர்கள் என்பதை இதயபூர்வமாக வினவ வேண்டும். நீங்கள் அதிகளவு நேரத்தை வெளி விடயங்களில் கழிக்கின்றீர்கள். இந்த நினைவே பிரதானமானதாகும். பாரதத்தின் இந்த யோகத்திற்கு அதிக புகழ் உள்ளது. ஆனால் பாரதத்தின் இந்த யோகத்தை யாரால் கற்பிக்க முடியும்? எவருக்கும் இது தெரியாது. அவர்கள் கீதையில் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். கிருஷ்ணரை நினைவு செய்வதனால் ஒரு பாவமேனும் அழியமாட்டாது. ஏனெனில் அவர் பஞ்சபூதங்களினால் ஆக்கப்பட்ட சரீரத்தை உடையவர் ஆவார். அவரை நினைவு செய்வது என்றால் களிமண்ணை நினைவு செய்வது என்று அர்த்தமாகும். நீங்கள் பஞ்சபூதங்களை நினைவு செய்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். சிவபாபா சரீரமற்றவர் என்பதால் அவர் கூறுகின்றார்: சரீரமற்றவர் ஆகுங்கள்! உங்கள் தந்தையான என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் கூவி அழைக்கின்றீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே! ஆகையால் அவர் ஒரேயொருவரே ஆவார். கீதையின் கடவுள் யார் என்று அவர்களிடம் சாதூரியமாகக் கேளுங்கள். படைப்பவர் ஒரேயொரு கடவுளே ஆவார். மக்கள் தம்மை கடவுள் என்று அழைத்துக் கொண்டாலும், அனைவருமே தமது குழந்தைகள் என்று அவர்கள் என்றுமே கூறுவதில்லை. நான் கடவுள், அதுவே உங்களுக்கும் பொருந்தும்; என்றோ அல்லது கடவுள் சர்வவியாபி என்றோ அவர்கள் கூறுகின்றார்கள். நானும் கடவுள், நீங்களும் கடவுள், பார்க்கும் இடமெல்லாம், நான் உங்களையே பார்க்கின்றேன். நீங்கள் கற்களிலும்கூட இருக்கின்றீர்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இதனை அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் தமது குழந்தைகள் என்று அவர்கள் கூறுவதில்லை. தந்தை மாத்திரமே கூறுகின்றார்: ஓ எனது அன்பிற்கினிய, ஆன்மீகக் குழந்தைகளே. வேறு எவருமே இவ்வாறு கூறுவதில்லை. ஒரு இஸ்லாமியரிடம் நீங்கள் ஓ எனது அன்பிற்கினிய குழந்தையே என நீங்கள் கூறினால், அவர் உங்களை அறைந்து விடக்கூடும். பரலோகத் தந்தை மாத்திரமே இவ்வாறு கூறமுடியும். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை உங்களுக்கு வேறு எவராலுமே கூற முடியாது. ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ள 84 பிறவிகளின் இரகசியங்களை அசரீரியான தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்ட போதிலும், அவரின் உண்மையான பெயர் சிவன் ஆகும். பல மொழிகள் உள்ளதால், அவர்கள் தத்தமது மொழிகளில் அவருக்குப் பெயரிட்டுள்ளனர். உதாரணத்திற்கு பம்பாயில் அவரை பபுல்நாத் (முட்களின் பிரபு) என்று அழைக்கின்றார்கள். எவ்வாறாயினும் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அவரே முட்களை மலர்களாக மாற்றுபவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதத்தில் சிவபாபாவிற்கு 1000 பெயர்கள் வரை கொடுக்கப்பட்டிருக்கலாம். எனினும் அவற்றின் அர்த்தம் எவருக்கும் தெரியாது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இதிலும் அவர் தாய்மாரை முன்னிலையில் வைத்துள்ளார். தந்தை வந்ததால், பெண்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கப்படுகின்றது. தந்தை தாய்மாரின் புகழை அதிகரித்துள்ளார். நீங்கள் சிவசக்தி சேனையாவீர்கள். உங்களுக்கு மாத்திரமே சிவபாபாவைத் தெரியும். ஒரேயொருவர் மாத்திரமே சத்தியம் என்று அழைக்கப்படுகின்றார். சத்தியப்படகு அசைந்தாலும், அது ஒருபோதும் மூழ்காது என்று நினைவு கூரப்பட்டுள்ளது. ஆகையால் நீங்களே உண்மையானவர்களும், புதிய உலகைப் படைப்பவர்களும் ஆவீர்கள். பொய்யான விடயங்கள் அனைத்தும் அழிய உள்ளன. நீங்கள் இங்கே ஆட்சி செய்யப் போவதில்லை. உங்கள் அடுத்த பிறவியில் நீங்கள் இங்கு வந்து ஆட்சி செய்வீர்கள். இவ் விடயங்கள் மிகவும் மறைமுகமானவை, அவற்றை நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பாபாவை சந்தித்திருக்காவிட்டால் உங்களுக்கு எதுவும் புரிந்திருக்க மாட்டாது. இதனை நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். இவரே யுத்தகளத்தில் உங்களை உஷாராக்குகின்ற யுதிஷ்ரன் ஆவார். இது வன்முறையற்ற யுத்தமாகும். ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதே வன்முறை என்று மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: காம வாளை பயன்படுத்துதலே முதன்மையானதும் பிரதானமானதுமான வன்முறையாகும். ஆகையாலேயே காமம் உங்களது கொடிய எதிரி எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வெற்றி கொள்ள வேண்டும். பிரதானமாக நீங்கள் வெற்றி கொள்ள வேண்டியது காமவிகாரத்தை ஆகும். தூய்மையற்றவராக இருத்தல் என்றால் விகாரம் நிறைந்தவர் என்று அர்த்தமாகும். தூய்மையற்றவர்கள் விகாரம் நிறைந்தவர்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் விகாரத்தில் ஈடுபடுகின்றவர்கள். கோபப்படுகின்ற ஒருவரை விகாரம் நிறைந்தவர் என நீங்கள் கூறுவதில்லை. கோபப்படுகின்ற ஒருவர் கோபக்காரர் ஆவார், பேராசை உடையவர் பேராசைக்காரர் ஆவார். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் அதாவது, பேராசையிலிருந்து விடுபட்டவர்களும், பற்றிலிருந்து விடுபட்டவர்களும் விகாரத்திலிருந்தும் விடுபட்டவர்கள் எனப்படுகின்றார்கள். அவர்கள் என்றும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை. விகாரமில்லாது எவ்வாறு குழந்தைகளை உருவாக்க முடியும் என அவர்கள் குழந்தைகளாகிய உங்களிடம் வினவும் பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் தேவர்களை விகாரமற்றவர்கள் என்று கருதுகின்றீர்கள். அத்துடன் அது விகாரமற்ற உலகமாகும். துவாபரயுகமும், கலியுகமுமே விகாரம் நிறைந்த உலகமாகும். உங்களை விகாரமானவர்கள் என்றும் தேவர்களை விகாரமற்றவர்கள் என்றும் நீங்கள் அழைக்கின்றீர்கள். நீங்கள் விகாரம் நிறைந்தவர்களாகவும், இப்பொழுது அவர்களைப் போன்று விகாரமற்றவர்களாகவும் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலக்ஷ்மியும் நாராயணனும் யோகசக்தியினால் தமது அந்தஸ்தைப் பெற்றார்கள். அவர்கள் மீண்டும் அதனைப் பெறுகின்றார்கள். நாங்கள் தேவர்களாக இருந்தோம் என்பதால் எங்கள் இராச்சியத்தை நாங்கள் ஒரு கல்பத்தின் முன்னரும் பெற்றோம். பின்னர் நாங்கள் அதனை இழந்ததுடன், மீண்டும் ஒருமுறை அதனை நாங்கள் பெறுகின்றோம். உங்கள் புத்தி இதனைக் கடைந்தாலே நீங்கள் மிகவும்; சந்தோஷத்துடன் இருப்பீர்கள். எவ்வாறாயினும் மாயை இந்த விழிப்புணர்விலிருந்து உங்களை மறக்கச் செய்கின்றாள். உங்களால் சதா நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை என்பதை பாபா அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் ஆட்ட அசைக்க முடியாதவர்களாக நினைவில் நிலைத்திருந்தால், நீங்கள் விரைவில் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவதுடன், ஆத்மாக்களாகிய உங்களால் வீடு திரும்பவும் முடியும். ஆனால் முடியாது! முதலில் இவரே செல்ல வேண்டும். சிவபாபாவின் திருமண ஊர்வலம் இடம்பெறும். தாய்மார்கள் திருமணத்தின் போது சிட்டிவிளக்குகளை கையேந்திச் செல்வதுண்டு. இந்த விளக்கு சதா ஏற்றப்பட்டுள்ள தீபமாகவிருக்கும் மணவாளனான சிவபாபாவின் அடையாளமாகும். அவர் இப்பொழுது தீபங்களாகிய எங்களை ஏற்றியுள்ளார். இந்நேரத்தின் விடயங்களையே பக்தி மார்க்கத்தில் அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். உங்கள் சுவாலையை யோகசக்தியினால் நீங்கள் ஏற்றுகின்றீர்கள். நீங்கள் யோகத்தின் மூலம் தூய்மையாகவும், ஞானத்தின் மூலம் செல்வந்தராகவும் ஆகுகின்றீர்கள். இக் கல்வியே உங்கள் வருமானத்திற்கான மூலாதாரமாகும். யோக சக்தியினால் விசேடமாக பாரதத்தையும், பொதுவாக முழு உலகையும் நீங்கள் தூய்மையாக்குகின்றீர்கள். இதில் குமாரிகளினால் மிகவும் நல்ல உதவியாளர்கள் ஆக முடியும். இந்த சேவையை செய்வதன் மூலம், நீங்கள் மிகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வைரம் போன்றதாக்க வேண்டுமேயன்றி அதிலும் குறைவானதாக அல்ல. தாயையும் தந்தையையும் பின்பற்றுங்கள் என்று கூறப்படுகின்றது. தாயையும், தந்தையையும் விசேடமான சகோதர சகோதரிகளையும் பாருங்கள். உங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர் என்று நீங்கள் கண்காட்சிகளில் விளங்கப்படுத்தலாம்: உங்கள் லௌகீகத் தந்தையும், பரலோகத்தந்தையும். இவர்களில் யார் உயர்ந்தவர்? எல்லையற்ற தந்தையே நிச்சயமாக உயர்ந்தவர் ஆவார். அவரிடமிருந்தே நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவரே இப்பொழுது உங்களது ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். கடவுள் பேசுகின்றார்: நான் இப்பொழுது உங்களுக்கு ராஐயோகம் கற்பிக்கிறேன், பின்னர் அடுத்த பிறவியில் நீங்கள் உலக அதிபதிகள் ஆகின்றீர்கள். ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை பாரத்தில் பிரவேசித்து பாரதத்தை மிகவும் செல்வம் நிறைந்ததாக்குகின்றார். நீங்கள் இக் கல்வியின் மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். ஏனைய கல்வியினால் நீங்கள் பெறுவது என்ன? இங்கே நீங்கள் 21 பிறவிகளுக்கு வைரங்கள் ஆகுகின்றீர்கள். இக் கல்விக்கும் ஏனைய கல்விகளுக்கும் இடையில் இரவிற்கும் பகலிற்குமான வேறுபாடு உள்ளது. இங்கே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஒருவரே. ஆகையால் தந்தையின் மூலம் நீங்கள் ஒரு ஆஸ்தியையும், ஆசிரியரின் மூலம் ஒரு ஆஸ்தியையும், குருவின் மூலம் ஒரு ஆஸ்தியையும் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்துவிடுங்கள். நீங்கள் மரணிக்கும்போது, உங்களுக்கு முழு உலகமும் மரணிக்கின்றது. நீங்கள் தந்தையினால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகையால் வேறு எவரை நீங்கள் நினைவு செய்ய முடியும்? பிறரை பார்க்கும் போதும், அவர்களைப் பார்க்காது இருக்க வேண்டும். உங்கள் பாகத்தை நடிக்கவே நீங்கள் வந்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்றும் உங்கள் பாகத்தை நடிக்க மீண்டும் நீங்கள் கீழே வரவேண்டும் என்றும் உங்கள் புத்தி புரிந்து கொண்டுள்ளது. இதனை உங்கள் புத்தியில் நீங்கள் வைத்திருந்தாலே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். உங்கள் சரீர உணர்வை நீங்கள் விட்டு விட வேண்டும். இப் பழைய விடயங்களை நீங்கள் இங்கேயே விட்டு விட வேண்டும், ஏனெனில், நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது நாடகம் ஒரு முடிவிற்கு வருகின்றது. பழைய உலகம் எரியூட்டப்படவுள்ளது. குருடர்களும் குருடர்களின் குழந்தைகளும் அறியாமை என்ற உறக்கத்தில் உறங்குகின்றார்கள். இது மக்களின் வழக்கமான உறக்கம் அல்ல. இது அறியாமை என்ற உறக்கமாகும். நீங்கள் இதிலிருந்து அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். சத்தியயுகமான பகலே ஞானமாகும். கலியுகமான இருளே இரவாகும். இவ்விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் திருமணம் செய்யும் போது தனது பெற்றோரையும், தனது புகுந்த வீட்டாரையும் நினைவு செய்கின்றாள். இப்பொழுது அவர்கள் மறக்கப்படல் வேண்டும். சிலர் தம்பதியினராக இருந்த போதும், ஞான வாளை தமக்கிடையில் வைத்திருப்பதன் மூலம், காமத்திலிருந்து தாம் விலகியிருப்பதை சந்நியாசிகளுக்கு எடுத்துக் காட்டுகின்ற தம்பதியினராக உள்ளனர். தந்தையின் கட்டளை: தூய்மையாக இருங்கள்! ரமேஷையும் உஷாவையும் பாருங்கள். அவர்களுக்கிடையில் என்றுமே தூய்மையின்மை இருந்ததே இல்லை. ஏனெனில் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தை இழந்து விடுவோம் அதாவது, தாம் கடனாளிகள் ஆகிவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. இதில் சித்தியெய்யாதவர்களும் உள்ளனர். பெயரளவில் இடம்பெறுகின்ற திருமணமும் உள்ளது. தூய்மையாக இருப்பதன் மூலம் உங்களால் உயரந்ததோர் அந்தஸ்தைப் பெற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஒரு பிறவியில் மாத்திரமே நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நீங்கள் யோகசக்தியைப் பெறும்போது, உங்கள் புலன் அங்கங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். யோக சக்தியினால், நீங்கள் முழு உலகையும் தூய்மையாக்குகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களில் மிகச்; சிலரே யோக சக்தியினால் முழு மலையை அகற்றி, தங்க மலையை ஸ்தாபனை செய்கின்றீர்கள். இவை எதனையும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கோவர்த்தன மலையைச் சுற்றி வருகின்றார்கள். தந்தையே முழு உலகையும் சத்தியயுகமாக ஆக்குகின்றார். இமாலயம் தங்கம் ஆகும் என்றில்லை. அங்கு தங்கச் சுரங்கங்கள் நிரம்பி இருக்கும். பஞ்சபூதங்கள் சதோபிரதானாக இருப்பதால் அவை நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் சடப்பொருள் சதோபிரதான் ஆகும்போது, உங்கள் சரீரமும் சதோபிரதான் ஆகும். அங்குள்ள பழங்கள் மிகவும் பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும். அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நீங்கள் நினைவு செய்யும்பொழுது, உங்களால் விகாரத்தில் இருந்து விடுபட முடியும். நீங்கள் சரீர உணர்வுடையவராகும்பொழுதே காமத்தின் மீது ஆசை ஏற்படும். யோகிகள் என்றுமே விகாரத்தில் ஈடுபடுவதில்லை. உங்களுக்கு ஞானத்தின் சக்தி இருந்தாலும், நீங்கள் யோகிகளாக இல்லாதிருந்தால் நீங்கள் வீழ்ந்துவிடுவீர்கள். முயற்சியா அல்லது வெகுமதியா சிறந்தது என்று உங்களிடம் வினவினால் நீங்கள் முயற்சியே சிறந்தது என்று கூறுவீர்கள். அதே போன்று, இதில் யோகமே சிறந்தது எனக் கூறுவீர்கள். யோகத்தின் மூலமே நீங்கள் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக முடியும். நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் கற்கின்றீர்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். மனிதர்களுடன் கற்பதால் உங்களால் என்ன பெறமுடியும்? உங்கள் மாதச் சம்பளம் எவ்வளவாக இருக்க முடியும்? இங்கு நீங்கள் கிரகிக்கின்ற இரத்தினங்கள் ஒவ்வொன்றும் நூறாயிரம் ரூபாய்களுக்குச் சமமாகும். அங்கே, பணம் என்றும் எண்ணப்பட மாட்டாது. அங்கு அளவற்ற செல்வம் உள்ளது. ஒவ்வொருவரும் தத்தமக்கென பண்ணை போன்றவற்றை வைத்திருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுதே நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். அதுவே இலக்கும் இலட்சியமும் ஆகும். முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் மேன்மையானவர் ஆக வேண்டும். உங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு தமது வெகுமதியை பெற்றனர்? அவர்களின் வெகுமதியை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைவிட, வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வந்து, பாரத மக்களை சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார். ஆகையால், நீங்கள் எவருக்காவது பாதையைக் காட்டாது உணவு உண்ணுவதில்லை என்றளவிற்கு குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதில் உற்சாகம் இருக்க வேண்டும். அத்தகைய ஆர்வமும் உற்சாகமும் இருக்கும்போதே, உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் இறைசேவை செய்வதன் மூலம் 21 பிறவிகளுக்கு உங்கள் வாழக்கையை வைரம் போல ஆக்க வேண்டும். தாயையும் தந்தையையும், விசேடமான சகோதர சகோதரிகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.

2. உங்கள் ஸ்திதியை கர்மாதீத் ஆக்குவதற்கு உங்கள் சொந்த சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் நினைவை அசைக்க முடியாததாகவும் நிலையானதாகவும் ஆக்க வேண்டும். நீங்கள் பேராசையிலிருந்தும் பற்றிலிருந்தும் விடுபட்டவராகுவதுடன் தேவர்களைப் போல விகாரமற்றவர்களாகவும் ஆக வேண்டும்.

ஆசீர்வாதம்:
சகல தெய்வீகக் குணங்களாலும் நிறைந்திருக்கின்ற போதிலும், ஒரு குறிப்;பிட்ட சிறப்பியல்பில் விசேடமாக செல்வாக்குடையவர் ஆகுவீர்களாக.

வைத்தியர்கள் பொதுவாக சகல நோய்களைப் பற்றிய அறிவையும் கொண்டிருந்த போதிலும், சிலர் ஒரு குறிப்பிட்ட பிரிவில் விசேட அறிவைக் கொண்டிருப்பதில் பிரசித்தி பெற்றுள்ளார்கள். அவ்வாறே, குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக சகல தெய்வீகக் குணங்களாலும் நிறைந்திருக்க வேண்டும், ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு குறிப்பிட்ட சிறப்பியல்பில் அனுபவசாலிகள் ஆகி அதனை சேவைக்காக பயன்படுத்தி, தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல வேண்டும். சரஸ்வதி ஞானத்தின் தேவி என்றும், இலக்குமி செல்வத்தின் தேவி என்றும் வழிபாடு செய்யப்படுவதைப் போன்று, நீங்கள் சகல தெய்வீகக் குணங்களால் நிறைந்திருப்பதுடன், விசேடமாக ஒரு சிறப்பியல்பை குறித்து ஆய்வு செய்து அதில் உங்களை பிரசித்தி பெறச் செய்யுங்கள்.

சுலோகம்:
விகாரங்கள் என்ற பாம்பை இலகுயோகம் என்ற படுக்கை ஆக்கினால், நீங்கள் சதா கவலையற்றவர்களாக இருப்பீர்கள்.