14.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பாப், தாதா ஆகிய இருவரும் ஆணவமற்று, சுயநலமற்ற சேவை செய்வதுடன், எதிலும் பேராசையைக் கொண்டிருப்பதில்லை, எனவே குழந்தைகளாகிய நீங்களும், தந்தையைப் போல் ஆகவேண்டும்.

கேள்வி:
ஏழைகளின் பிரபுவாகிய பாபா, எதன் அடிப்படையில் ஏழைக் குழந்தைகளின் பாக்கியத்தை மேன்மையாக்குகின்றார்?

பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்கள் குடும்பங்களுடன் நீங்கள் வீட்டில் வாழ்ந்து, அனைத்தையும் பராமரிக்கின்ற போதிலும், உங்களிடமுள்ள அனைத்தும் தந்தைக்கே உரியது என்று உங்கள் புத்தி எப்போதும் நினைவு செய்ய வேண்டும். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதனால் உங்கள் பாக்கியம் மேன்மையானதாகும். இதில் உங்களுக்கு அதிகளவு நேர்மை இருப்பது அவசியமாகும். உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால், நீங்கள் யக்ஞத்தினால்; பராமரிக்கப்படுவதைப் போன்றிருக்கும். நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வீட்டில் இருந்து கொண்டு சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உண்கிறீர்கள்;. நீங்கள் அனைத்தையும் பாபாவிடம் நேர்மையாகக் கூற வேண்டும்.

ஓம் சாந்தி.
இந்த ஞானமார்க்கத்தின் ஆன்மீக ஒன்றுகூடல்கள் பக்தி மார்க்கத்தின் அந்தச் சமய ஒன்றுகூடல்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானவை. உங்களுக்குப் பக்தி மார்க்கத்தின் அனுபவம் உண்டு பக்தி மார்க்கத்தில் பல சாதுக்களும் புனிதர்களும் சமயநூல்களை உரைப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இங்கு அனைத்துமே முற்றிலும் வேறுபட்டதாகும். இங்கு நீங்கள் யார் முன்னிலையில் அமர்ந்துள்ளீர்கள்? இந்த இரட்டைத் தந்தை, தாய் முன்னிலையில்; அமர்ந்திருக்கின்றீர்கள். அங்கு இவ்வாறு இல்லை. எல்லையற்ற தந்தை இங்கு இருக்கின்றார் அத்துடன் தாயும், கனிஷ்ட தாயும் உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் பல உறவுமுறைகளைக் கொண்டுள்ளீர்கள். அங்கு இவ்வாறான உறவுமுறைகளும் இல்லை, பின்பற்றுபவர்கள் எவரும் இல்லை. அவர்களுடையது துறவறப் பாதையாகும். அவர்களின் சமயம் உங்களின் சமயத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதில் பகலுக்கும் இரவுக்குமான வித்தியாசமுள்ளது. நீங்கள் ஒரு பிறவிக்கு உங்கள் லௌதீகத் தந்தையிடமிருந்து குறுகிய காலச் சந்தோஷத்தை மாத்திரமே பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் நீங்கள் ஒரு புதிய தந்தையையும் புதிய விடயங்களையும் பெறுவீர்கள். இங்கே பரலோகத் தந்தையும் லௌகீகத் தந்தையும், அத்துடன் அலௌகீகத் தந்தையர்கள் உள்ளனர். நீங்கள் லௌதீகத் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதுடன், பரலோகத் தந்தையிடமிருந்தும் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எனினும், இந்த அலௌகீகத் தந்தை அற்புதமானவர். அவரிடம் இருந்து நீங்கள் எந்த ஆஸ்தியையும் பெறுவதில்லை. ஆம். இவரின் மூலமாக சிவபாபா உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்கின்றார். இதனாலேயே மக்கள் அந்தப் பரலோகத் தந்தையை அதிகளவு நினைவு செய்கின்றார்கள். அவர்கள் தங்கள் லௌதீகத் தந்தையையும் நினைவு செய்கின்றார்கள். ஆனால் எவருமே இந்த அலௌகீகத் தந்தையான பிரம்மாவை நினைவு செய்வதில்லை. இவரே மனிதகுலத்தின் தந்தையாவார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஒருவரின் தந்தை மாத்திரமல்ல. முப்பாட்டனாரே மனித குலத்தின் தந்தை ஆவார். சிவபாபாவை முப்பாட்டன் என்று அழைப்பதில்லை. ஒரு லௌகீக உறவுமுறையில் ஒரு லௌகீகத் தந்தையும் ஒரு பாட்டனாரும் உள்ளனர். இவரே முப்பாட்டனாவார். இதனை ஒரு லௌகீகத் தந்தைக்கோ, பரலோகத் தந்தைக்கோ கூற முடியாது. நீங்கள் இந்த முப்பாட்டனாரிடமிருந்து எந்த ஆஸ்தியையும் பெற மாட்டீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். பக்திமார்க்கத்தின் விடயங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அந்தப் பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் நடிக்கப்படும். நீங்கள் எவ்வாறு 8.4 மில்லியன் பிறவிகளை அல்ல, 84 பிறவிகளையே எடுக்கிறீ;ர்கள் என்பதைத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை வந்து இப்போது எங்களையும், முழு உலகையும் தர்மம் நிறைந்ததாக ஆக்குகின்றார். இந்நேரத்தில் எவரும் தர்மாத்மாக்களாக இல்லை. புண்ணியாத்மாக்களின் உலகம் முற்றிலும் வேறுபட்டது. பாவாத்;மாக்கள் வசிக்கும் இடத்தில் புண்ணிய ஆத்மாக்கள் வசிப்பதில்லை. இங்கே தூய்மையற்ற ஆத்மாக்கள் தூய்மையற்ற ஆத்மாக்களுக்குத் தானம் செய்கின்றார்கள். புண்ணிய ஆத்மாக்களின் பூமியில் தானங்கள் கொடுப்பதோ, புண்ணியங்கள் போன்றவற்றைச் செய்வதற்கோ அவசியமில்லை. எவ்வாறு நாங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைச் சங்கம யுகத்தில் பெறுகின்றோம் என்ற இந்த ஞானம் அங்கு இருப்பதில்லை. இல்லை. இப்போது மாத்திரமே எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் பெறுகின்ற இந்த ஞானத்தின் மூலம் 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷம், ஆரோக்கியம், செல்வம் போன்றவற்றைப் பெறுகிறீர்கள். அங்கே உங்கள் ஆயுட்காலம் நீண்டதாகும். அதன் பெயரே அமரத்துவ பூமியாகும். பார்வதிக்கு அமரத்துவக் கதையை சங்கர் கூறியதாகக் கூறப்படுகின்றது. இவ்விடயங்கள் சூட்சும உலகில் இருப்பதில்லை. அதிலும் அமரத்துவக் கதை ஒருவருக்கு மாத்திரம் கூறப்பட முடியாது. அவை பக்திமார்க்கத்துக்குரிய விடயங்கள். மக்கள் இன்னமும் அவற்றைத் தொடர்ந்தும் நம்புகின்றார்கள். கடவுள் சர்வவியாபி எனக் கூறுவது மிகப்பெரிய பொய்யாகும். இதுவே அவரை அவதூறு செய்வதாகும். உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற எல்லையற்ற தந்தையைச் சர்வவியாபி என்றும், அவர் கூழாங்கற்களிலும கற்களிலும்; இருக்கின்றார் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் உங்களை விடவும் அதிகளவில் அவரை அவதூறு செய்தீர்கள். நான் உங்களுக்குத் தன்னலமற்ற சேவையைச் செய்கின்றேன். முதலாம் இலக்கத்துக்கு வர வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை. இல்லை. இதைப் போன்று மற்றவர்களும் ஆக வேண்டும் என அக்கறையை மாத்திரம் நான் கொண்டுள்ளேன். இதுவே தன்னலமற்ற சேவை என அழைக்கப்படுகின்றது. அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு வந்தனம் செலுத்துகின்றார். பாபா அசரீரியானவரும், ஆணவமற்றவரும் ஆவார். அவர் முற்றிலும் ஆணவமற்றவர். அவர் ஒரே ஆடை போன்றவற்றையே அணிகின்றார். அவர் தனது ஆடைகளை வெவ்வேறு விதமாக மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் அம்மக்களோ தொடர்ந்தும் தமது ஆடை அலங்காரங்களை முழுமையாக மாற்றிக் கொள்கின்றார்கள். இவர் அணியும் ஆடை சாதாரணமானது. அலுவலர்களின் ஆடைகளையும் மாற்றுகின்றார்கள். ஆனால் இவரோ தொடர்ந்தும் சாதாரண ஆடைகளையே அணிகின்றார். அதில் எவ்வித வேறுபாடும் இல்லை. தந்தை கூறுகின்றார்: நான் ஒரு சாதாரண சரீரத்தின் ஆதாரத்தையே எடுக்கின்றேன். எந்தச் சாதாரண சரீரம்? தனது சொந்தப் பிறவிகளினதும், தான் எத்தனை பிறவிகள் எடுத்தோம் என்பதனையும் அறியாதவரின் சரீரத்தின் ஆதாரத்தையாகும். 8.4 மில்லியன் பிறவிகள் உள்ளதென அவர்கள் கூறுகிறார்கள். அவை அனைத்தும் அவர்கள் கேள்விப்பட்ட விடயங்கள் ஆகும். இவற்றிலிருந்து எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. நீங்கள் அத்தகைய செயல்களைச் செய்தால் ஒரு கழுதை அல்லது நாய் போன்று ஆகுவீர்கள் என அவர்கள் கூறி உங்களைப் பயப்படுத்துவார்கள். நீங்கள் பசுவின் வாலைப் பிடித்தவாறு அக்கரைக்குச் செல்வீர்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது பசு எங்கிருந்து வந்தது? உண்மையில் சுவர்க்கத்திலுள்ள பசுக்கள் முற்றிலும் வேறுபட்டவை. அங்குள்ள பசுக்கள் முதற்தரமானவை. நீங்கள் 100வீதம் முழுமையானவர்கள் ஆகுகின்றீர்கள், எனவே அங்குள்ள பசுக்களும் முதற்தரமானவையாக உள்ளன. கிருஷ்ணர் ஒருபோதும் பசுக்களை மேய்க்கவில்லை. அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவ்வாறாகவே அந்நேரத்தின் அழகை அவர்கள் சித்தரித்துள்ளார்கள். எனினும், கிருஷ்ணர் பசுக்களைப் பராமரித்தார் என்றில்லை. அவரை ஓர் இடையன் என்றே அவர்கள் சித்தரித்துள்ளார்கள். தெய்வீகக்குணங்கள் அனைத்தும் நிறைந்துள்ள சத்தியயுக முதல் இளவரசருக்கும் ஓர் இடையனுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் தேவ தர்மம் இப்பொழுது இல்லை. இத் தர்மம் மாத்திரமே மறைந்து விட்டது. இவ்விடயங்கள் எச்சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை உலக அதிபதிகளாக்குவதற்காகவே, நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். நீங்கள் அதிபதிகள் ஆகியதும் உங்களுக்கு ஞானம் தேவையில்லை. ஞானம் எப்பொழுதும் அறியாமையில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. கூறப்பட்டுள்ளது: ஞான சூரியன் உதிக்கும்பொழுது, அறியாமை இருள் அகல்கின்றது. உலகம் முழுவதும் இருளில் உள்ளது என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். பல சமய ஒன்றுகூடல்கள் உள்ளன. இங்கே, இது பக்தி மார்க்கம் அல்ல. இது சற்கதிக்கு இட்டுச் செல்லும் பாதையாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்குச் சற்கதியை அருள்பவர். பக்திமார்க்கத்தில் நீங்கள் கூவியழைத்தீர்கள்: நீங்கள் வரும் போது, நாங்கள் உங்களுக்கே உரியவர் ஆகுவோம். உங்களைத் தவிர வேறு எவருக்கும் நாங்கள் உரியவர்கள் அல்ல, ஏனெனில் நீங்களே ஞானக்கடலும், சந்தோஷக்கடலும், தூய்மைக்கடலும், செல்வத்தின் கடலும் ஆவீர்கள். அவர் உங்களுக்குச் செல்வத்தையும் கொடுக்கின்றார். உங்களை அவர் மிகுந்த செல்வந்தர்கள் ஆக்குகின்றார். 21 பிறவிகளுக்கு சிவபாபாவினால் உங்கள் புத்தியை நிரப்புவதற்காகவே நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள், அதாவது, ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவதற்காக நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். பக்திமார்க்கத்தில் நீங்கள் பல கதைகளைச் செவிமடுத்திருந்த போதும், தொடர்ந்தும் நீங்கள் ஏணியில் கீழிறங்கியே வந்துள்ளீர்கள். எவராலும் ஏறும் ஸ்திதிக்குள் செல்ல முடியவில்லை. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையை நீடித்துள்ளனர். நாடகத்தின் கால எல்லை நூறாயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு சக்கரத்தினதும் கால எல்லை 5000 வருடங்கள் என இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறவிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 84 ஆகவும்; குறைந்தபட்ச எண்ணிக்கை ஒரு பிறவியாகவும் உள்ளது. ஆத்மாக்கள் அசரீரியான விருட்சத்திலிருந்து தொடர்ந்தும் கீழிங்குகின்றார்கள். அவர்கள் தங்கள் பாகங்களை நடிப்பதற்காகத் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றார்கள். நாங்கள் ஆதிமுதல் அசரீரியான விருட்சத்திலிருந்து வருபவர்கள். நாங்கள் அங்கிருந்து எங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே கீழிறங்கி இங்கு வந்துள்ளோம். அங்கு அனைவரும் தூய்மையானவர்கள், எவ்வாறாயினும், ஒவ்வொருவரினது பாகமும் வேறுபட்டது. இதனை உங்கள் புத்தியில் கொண்டிருப்பதுடன், விருட்சத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருங்கள். சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரை உள்ள அனைத்தையும் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். இதனை மனிதர்கள் எவராலும் உங்களுக்குக் கூறமுடியாது. இந்த தாதாவினாலுமே இதனை உங்களுக்கு கூறமுடியாது. ஒரேயொரு சற்குருவினால் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள முடியும். ஏனைய குருமார்கள் அனைவரும் பக்தி மார்க்கத்திற்குரியவர்களே. பல வழிபாட்டு முறைகள் உள்ளன. பக்தி மார்க்கத்தில் பெருமளவு பகட்டு உள்ளது. அது ஒரு கானல்நீர் போன்றது. அவர்களை மீட்டெடுக்க முயற்சிப்பவர்களும், அதில் சிக்குண்டு விடும் வகையில், மக்கள் அதில் அகப்பட்டுள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எதுவுமே புதிதல்ல! கடந்து செல்கின்ற ஒவ்வொரு விநாடியும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்திற்கேற்ப இடம்பெறுகிறது. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையிடமிருந்து இராஜயோகத்தைக் கற்று, ஒரு சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாகவும், உலக அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போதையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை பாரதத்திற்கு மாத்திரம் வருகிறார், அவர் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே வருகின்றார். அவரே அமைதிக் கடலும் சந்தோஷக்கடலும் ஆவார். இப்புகழ் பரலோகத் தந்தைக்கு மாத்திரமே உரியதாகும். இப்புகழ் முற்றிலும் சரியானதே என்றும், ஒரேயொருவரிடமிருந்தே நீங்கள் அனைத்தையும் பெறுகின்றீர்கள் என்றும் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். நீங்கள் எவர் முன்னிலையில் அமர்ந்துள்ளீர்களோ, அவரே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவராவார். உங்கள் நிலையத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் யாருடன் நீங்கள் யோகத்தைக் கொண்டிருக்கின்றீர்கள்? சிவபாபா மதுவனத்தில் உள்ளாரென்றும், அவரை நீங்கள் நினைவு செய்கின்றீர்கள் என்பதுவும் உங்கள் புத்தியில் பிரவேசிக்கின்றது. சிவபாபாவே கூறுகின்றார்: மீண்டும் ஒருமுறை பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்காகவே நான் ஒரு பழைய, சாதாரண சரீரத்தினுள் பிரவேசித்துள்ளேன். நானும் நாடகப் பந்தனத்தினுள் கட்டுப்பட்டுள்ளேன். நீங்கள் என்னைப் பெருமளவு அவதூறு செய்துள்ளீர்கள். நான் உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்குகிறேன். இது நேற்றைய விடயம் மாத்திரமே. நீங்கள் என்னை அதிகளவில் பூஜித்தீர்கள். நான் உங்களுக்கு இராச்சியத்தையும் பாக்கியத்தையும் கொடுத்தேன், நீங்கள் அதனை முற்றாகவே தொலைத்து விட்டீர்கள். இப்பொழுது நான் மீண்டும் ஒருமுறை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். இது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. இவர்கள் தெய்வீகக் குணங்களுடைய தேவர்கள் ஆவார்கள். அவர்கள் மனிதர்கள், 80 தொடக்கம் 100 அடி உயரமானவர்கள் அல்ல. அவர்களுடைய ஆயுட்காலம் நீண்டதாக இருப்பதனால், அவர்கள் கூரை வரை உயரமானவர்களாக இருப்பார்கள் என்றில்லை. கலியுகத்தில் உங்கள் ஆயுட்காலம் மிகக் குறுகியதாகும். தந்தை வந்து உங்கள் ஆயுட்காலத்தை நீடிக்கிறார். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: சுகாதார அமைச்சர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள்;;. அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் ஒருபோதும் நோயுறாதவாறு அத்தகைய வழிமுறைகளை எங்களால் உங்களுக்குக் கூற முடியும். கடவுள் பேசுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அப்போது நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர் ஆகுவதுடன், என்றும் ஆரோக்கியமானவராகவும் இருப்பீர்கள். இதற்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம். யோகிகள் தூய்மையானவர்கள். எனவே அவர்களின் ஆயுட்காலமும் நீண்டதாகும். இப்பொழுது நீங்கள் இராஜயோகிகளும், இராஜரிஷிகளும் ஆவீர்கள். அந்தச் சந்நியாசிகள் ஒருபோதும் இராஜயோகத்தைக் கற்பிக்க மாட்டார்கள். கங்கை தூய்மையாக்குபவர் என அவர்கள் கூறுகிறார்கள். அதற்குத் தானம் வழங்குமாறு அவர்கள் கேட்கின்றார்கள். இப்பொழுது எவ்வாறு நீங்கள் கங்கைக்குத் தானம் அளிப்பீர்கள்? அதனுள் மனிதர்கள் காசுகளை வீசுகிறார்கள். பண்டிதர்கள் தங்களுக்காக அதனைச் சேகரிக்கிறார்கள். நீ;ங்கள் இப்பொழுது தந்தையினால் தூய்மையாகுகின்றீர்கள். நீங்கள் தந்தைக்கு என்ன கொடுப்பீர்கள்? எதுவுமே இல்லை! தந்தையே அருள்பவர். பக்திமார்க்கத்தில் நீங்கள் கடவுளின் பெயரால் ஏழைகளுக்குக் கொடுத்தீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் தூய்மையற்றவர்களுக்கே கொடுத்தீர்கள். நீங்கள் தூய்மையற்றவர்கள், அத்துடன் பெற்றுக் கொண்டவர்களும் தூய்மையற்றவர்களே. இப்போது நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். அங்கே, (பக்தி மார்க்கத்தில்) தூய்மையற்றவர்கள் தூய்மையற்றவர்களுக்குத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு குமாரி தூய்மையாக இருக்கும் போது அவளைத் தானம் செய்கின்றார்கள். அவர்கள் அவளுக்குத் தலை வணங்குகிறார்கள், உணவூட்டுகிறார்கள், அத்துடன் பணமும் கொடுக்கிறார்கள். எவ்வாறாயினும், அவள் திருமணம் முடித்ததும் அவள் வாழ்க்கை சீரழிந்துவிடுகின்றது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் இடம்பெறும். பக்திமார்க்கத்தில் இடம்பெற்றது அனைத்தும் மீண்டும் இடம்பெறும். தந்தையும் சத்தியயுகச்; செய்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். முன்னர் விவேகம் இல்லாதிருந்தீர்கள். சமயநூல்கள் பக்திமார்க்கத்தின் விடயங்களைக் கொண்டுள்ளன. எவராலும் அவற்றின் மூலம் என்னை அடைய முடியாது. நான் வரும் போது மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள முடியும். அத்துடன் நான் பழைய உலகைப் புதிய உலகாக மாற்றுவதற்கு ஒரேயோரு முறை மாத்திரமே வருகிறேன். நான் ஏழைகளின் பிரபு. நான் ஏழைகளைச் செல்வந்தர்கள் ஆக்குகிறேன். ஏழைகள் உடனடியாகவே தந்தைக்கு உரியவர்களாகி விடுகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா நான் உங்களுக்குரியவன். என்னிடமுள்ள அனைத்தும் உங்களுக்கு உரியவை. தந்தை கூறுகின்றார்: ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். அவை தந்தைக்குரியவை, உங்களுடையவை அல்ல எனப் புரிந்தகொள்வதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள். இதற்கு மிக நல்ல விவேகமான குழந்தைகள் தேவைப்படுகிறார்கள். நீங்கள் யக்ஞத்திற்கு உரியவர்கள் என்பதால், வீட்டில் சமைக்கும் போதும், அதுவும் சிவபாபாவின் யக்ஞத்திலிருந்து உண்பது போன்றிருக்கும். உங்களிடமுள்ள அனைத்தும் யக்ஞத்திற்குரியவை. ஆகவே ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக வீட்டில் வாழும் போதும், சிவபாபாவின் பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்தே உண்ணுவது போலாகும். எவ்வாறாயினும், உங்களுக்கு முழு நம்பிக்கை தேவை. உங்கள் நம்பிக்கை தளம்பினால், அரிச்சந்திர அரசனின் உதாரணம் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் அனைத்தையும் பாபாவுக்குக் கூறவேண்டும். நானே ஏழைகளின் பிரபு.

பாடல்: நாங்கள் காத்திருந்த அந்த நாள் வந்து விட்டது. நீங்கள் அரைக்கல்பமாக என்னை நினைவு செய்து வந்தீர்கள், நீங்கள் இறுதியில் என்னைக் கண்டுகொண்டீர்கள். இப்போது ஞானத்திற்கு விரைவில் வெற்றி கிடைக்கும். சத்திய யுகம் நிச்சயமாக வரவேண்டும். நீங்கள் மனிதர்கள் அனைவரிலும் பார்க்க அதி உயர்வானவர்களாகும் சங்கமயுகம் இடையில் உள்ளது. நீங்கள் தூய இல்லறப் பாதைக்கு உரியவர்களாக இருந்தீர்கள். பின்னர் 84 பிறவிகளுக்கூடாகச் செல்லும் போது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள், மீண்டும் நீங்கள் தூய்மையானவர்களாக வேண்டும். நீங்கள் முன்னைய சக்கரத்திலும் இவ்வாறு ஆகினீர்கள். முன்னைய கல்பத்தில் முயற்சி செய்தவர்கள் மீண்டும் முயற்சி செய்து தங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வார்கள். தந்தை அனைத்தையும் ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தூதுவர்கள். மற்றவர்கள் தூதுவர்கள் அல்ல. ஒரேயொரு சற்குரு மாத்திரமே சற்கதி அருள்கிறார். ஏனைய சமய ஸ்தாபகர்கள் தங்கள் சமயங்களை ஸ்தாபிப்பதற்கு வருகிறார்கள். எனவே அவர்கள் எவ்வாறு குருமார்களாக முடியும்? நான் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அமைதிக்கடல், சந்தோஷக்கடல், செல்வத்தின் கடலான தந்தையைக் கண்டுகொண்டீர்கள், நீங்கள் அந்த ஒரேயொருவரிடம் இருந்து அனைத்தையும் பெறுகிறீர்கள் என்ற போதையை எப்பொழுதும் பேணுங்கள். அத்தகைய தந்தையின் முன்னால் நீங்கள் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள், அவரே உங்களுக்குக் கற்பிக்கின்றார்.

2. உங்கள் ஆணவத்தைத் துறந்து தந்தையைப் போல் தொடர்ந்தும் தன்னலமற்ற சேவையைச் செய்யுங்கள். ஆணவமின்றி இருங்கள். ஒரு தூதுவராகி, பாபாவின் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அமரத்துவ சிம்மாசனத்திலும் இதயசிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பதன் மூலம் எப்பொழுதும் மேன்மையான செயல்களைப் புரியும் ஓர் கர்மயோகி ஆகுவீர்களாக.

இந்நேரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் இரு சிம்மாசனங்களைப் பெறுகின்றீர்கள். ஒன்று அமரத்துவ சிம்மாசனம், மற்றையது இதய சிம்மாசனமும் ஆகும். அவரவரின் இராச்சியத்திற்கான சிம்மாசனத்திலேயே ஒருவரால் அமர முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதால், தந்தையின் ஆஸ்திக்கு உங்களுக்கு உரிமை உள்ளது, அதில் இராச்சியத்திற்கான சகல பாக்கியமும் அடங்கியுள்ளது. ஒரு கர்மயோகி என்றால் இரண்டு சிம்மாசனத்திலும் அமர்ந்திருப்பவர் என்று அர்த்தமாகும். அத்தகைய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஓர் ஆத்மாவின் ஒவ்வொரு செயலும் மேன்மையானதாக இருக்கும், ஏனெனில், பௌதிக புலன்கள் அனைத்தும் நியதிக்கும் கட்டளைக்கும் கீழப்படிவாக இயங்குகின்றது.

சுலோகம்:
சுயமரியாதை என்ற ஆசனத்தில் ஸ்திரமாக அமர்ந்திருப்பவர்கள் தெய்வீக-குணங்கள் நிறைந்தவர்களும் மகத்துவமானவர்களும் ஆவார்கள்.