14.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காகச் செயல்களைச் செய்யுங்கள், ஆனால் குறைந்தபட்சம் எட்டு மணி;த்தியாலங்கள் தந்தையை நினைவு செய்து, முழு உலகத்துக்கும் அமைதியைத் தானம் செய்யுங்கள். உங்களைப் போன்று மற்றவர்களையும் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.

கேள்வி:
சூரிய-வம்ச குலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு எம்முயற்சி தேவைப்படுகிறது?

பதில்:
1. சூரிய-வம்ச குலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, தந்தையை நினைவு செய்வதுடன், ஏனையோரையும் அவரை நினைவுசெய்வதற்குத் தூண்டுங்கள். நீங்கள் அதிகளவில் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, ஏனையோரையும் அதனைச் செய்யுமாறு தூண்டினால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். 2. திறமைச்சித்தி அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யும்வகையில், அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள். தண்டனையை அனுபவம் செய்பவர்களின் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது.

பாடல்:
எங்களை இப்பாவ உலகிலிருந்து அப்பால் ஓய்வும் சௌகரியமும் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஓம் சாந்தி.
இது குழந்தைகளின் பிரார்த்தனை ஆகும். எக்குழந்தைகளின் பிரார்த்தனை? இன்னமும் புரி;ந்துகொள்ளாதவர்களின் பிரார்த்தனை ஆகும். பாபா எங்களை இப்பாவ உலகிலிருந்து தூய, புண்ணிய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அங்கே சதா சௌகரியம் உள்ளது. அங்கே துன்பத்தின் சுவடே கிடையாது. இப்பொழுது, உங்கள் இதயத்திடம் இவ்வினாவை வினவுங்கள்: நாங்கள் எவ்வாறு அச்சந்தோஷ பூமியிலிருந்து இத்துன்ப பூமிக்கு வந்தோம்? பாரதம் ஒரு புராதன தேசம் என்பதை அனைவரும் அறிவார்கள். பாரதம் சந்தோஷ பூமியாக இருந்தது. இறைவனதும், இறைவியினதும் ஒரேயொரு இராச்சியமே இருந்தது: இறைவன் கிருஷ்ணரும், இறைவி இராதையும். அதாவது, அங்கே இறைவன் நாராயணனும், இறைவி இலக்ஷ்மியும் ஆட்சிசெய்தார்கள். ஏன் பாரத மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களைத் தூய்மையற்றவர்களும், சீரழிந்தவர்களும் என அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பாரதம் தங்கச் சிட்டுக்குருவியாக இருந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அது தெய்வீகப் புத்தியுடையவர்களின் இராச்சியமாக இருந்தது. பின்னர், அவர்கள் எவ்வாறு அத்தகையதொரு சீரழிந்த ஸ்திதியை அடைந்தார்கள்? பாபா விளங்கப்படுத்துகிறார்: நானும் இங்கே பிறப்பெடுக்கிறேன், ஆனால் என்னுடைய பிறப்பு தெய்வீகமானதாகும். நீங்கள் சிவனின் குலத்துக்கு உரியவர்கள் என்பதையும், நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமார்களும் குமாரிகளும் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் முதலில் எதனை வினவ வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் தந்தையாகிய கடவுளை அறிவீர்களா? அவர்கள் கூறுவார்கள்: அவரே தந்தை. அவருடனான எங்கள் உறவுமுறை என்ன என்பதை ஏன் நீங்கள் வினவுகிறீர்கள்? அவர் தந்தை ஆகுகிறார். ஆத்மாக்கள் அனைவரும் அசரீரியான சிவனின் குலத்துக்கு உரியவர்கள்; ஆகையால், அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். பின்னர், சரீரியான பிரஜாபிதா பிரம்மாவுடனான (மக்களின் தந்தை) அனைவருடைய உறவுமுறையும் என்ன? அவர்கள் கூறுவார்கள்: அவரே ஆதிதேவர் (முதல் தேவர்) எனவும் அழைக்கப்படுகின்ற தந்தை ஆவார். அசரீரியான தந்தையாகிய சிவன் அமரத்துவமானவர். ஆத்மாக்களும் அமரத்துவமானவர்கள். அவர்கள் தங்களுடைய பௌதீகச் சரீரங்களை விட்டு நீங்கி, இன்னுமொன்றைப் பெறுகின்றார்கள். நீங்கள் அசரீரியான சிவனின் குலத்துக்குரியவர்கள் ஆதலால், குமார்களும் குமாரிகளும் சிவனின் குலத்துக்குரியவர்கள் என உங்களால் கூற முடியாது. ஆத்மாக்கள் என்னும் ரீதியில் குமார்களும் குமாரிகளும் என நீங்கள் கூற முடியாது. மக்களின் தந்தையாகிய பிரம்மாவின் குழந்தைகள் என்னும் ரீதியில் குமார்களும் குமாரிகளும் உள்ளார்கள். ஆரம்பத்திலிருந்தே நீங்கள் சிவனின் குலத்துக்கு உரியவர்கள். சிவபாபா பிறப்பு, மறுபிறப்புச் சக்கரத்தினுள் பிரவேசிப்பதில்லை, ஆனால் ஆத்மாக்களாகிய நீங்கள் மறுபிறவிக்குள் பிரவேசிக்கிறீர்கள். அச்சா, நீங்கள் அத்தகைய புண்ணியாத்மாக்களாக இருந்தீர்கள். நீங்கள் எவ்வாறு பாவாத்மாக்கள் ஆகினீர்கள்? தந்தை கூறுகிறார்: பாரத மக்களாகிய நீங்கள் உங்களையே அறைந்து கொண்டீர்கள். நீங்கள் அவரைப் பரமதந்தை என அழைக்கிறீர்கள், பின்னர், அவர் சர்வவியாபி என நீங்கள் கூறுகிறீர்கள். உங்களைப் புண்ணியாத்மாக்களாக ஆக்குகின்ற தந்தையை நீங்கள் பூனைகளிலும், நாய்களிலும், கூழாங்கற்களிலும், கற்களிலும் இட்டு விட்டீர்கள். அவரே நீங்கள் நினைவு செய்து வருகின்ற, உங்களுடைய எல்லையற்ற தந்தை ஆவார். மக்களின் தந்தையான பிரம்மாவின் வாயினூடாக அவர் பிராமணர்களைப் படைக்கிறார். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுகிறீர்கள். ஒரேயொரு தந்தையாலேயே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க முடியும், நீங்கள் அவரை அதிகளவுக்கு அவதூறு செய்துள்ளீர்கள், ஆகவே அங்கே தர்மராஜினால் உங்களுக்கெதிராக ஒரு வழக்கு போடப்படும். உண்மையில், ஐந்து விகாரங்களாகிய, இராவணனே உங்கள் கொடிய எதிரியாவான். உங்களுக்கு இப்பொழுது இறை புத்தி உள்ளது; ஏனைய அனைவருக்கும் ஓர் அசுர புத்தியே உள்ளது. நீங்கள் இராம இராச்சியத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் இராவவண இராச்சியத்திலோ மிகவும் விரக்தியுற்றிருக்கிறீர்கள். அங்கே, ஒரு தூய வம்சமே உள்ளது; இங்கே இது ஒரு தூய்மையற்ற வம்சமாக உள்ளது. இப்பொழுது, நீங்கள் யாருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்? அசரீரியானவரே தூய்மையாக்குபவர் ஆவார். கடவுள் சர்வவியாபி எனவும், அவர் எங்கும் இருக்கிறார் எனவும் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் மக்களை அவ்விழிப்புணர்வுடன் ஒரு சத்தியப் பிரமாணம் எடுக்கச் செய்;கிறார்கள். தந்தை இப்பொழுது பிரசன்னமாகி இருக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நாங்கள் எங்களுடைய கண்கள் மூலம் அதனைப் பார்க்க முடியும். பரமாத்மாவாகிய பரமதந்தை இச்சரீரத்தினுள் பிரவேசித்;துள்ளார் என்பதை ஆத்மா அறிவார். எங்களால் அவரை அறிந்துகொள்ளவும், இனங்காணவும் முடிகிறது. சிவபாபா மீண்டும் ஒருமுறை பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை வெளிப்படுத்தி, எங்களைத் திரிகாலதரிசி ஆக்குகிறார். சுயதரிதனச் சக்கரதாரிகளாக உள்ளவர்களே, திரிகாலதரிசிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். விஷ்ணு ஒரு சக்கரத்துடன் சித்தரிக்கப்படுகிறார். பிராமணர்களாகிய நீங்கள் பின்னர் தேவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களின் ஆத்மாக்களும், சரீரங்களும் தூய்மையானவை, ஆனால் உங்கள் சரீரங்களோ விகாரத்தினூடாக உருவாக்கப்படுகின்றன. இறுதியிலும் கூட, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருப்பினும், உங்கள் சரீரங்கள் தூய்மையற்றவையாகவே இருக்கும். ஆகவே, உங்களைச் சுயதரிசனச் சக்கரத்துடன் காண்பிக்க முடியாது. நீங்கள் சம்பூரணம் அடையும்பொழுது மாத்திரமே, விஷ்ணுவின் வெற்றிமாலையில் ஒருவராக இருக்க முடியும். முதலில், உருத்திர மாலையும், பின்னர் விஷ்ணுவின் மாலையும் உள்ளன. உருத்திர மாலை அசரீரியானவர்களுக்கு உரியது, பின்னர், அவர்கள் பௌதீக உலகத்தினுள் வந்து, இராச்சியத்தை ஆட்சிசெய்யும்பொழுது விஷ்ணுவின் மாலையில் ஒருவர் ஆகுகிறார்கள். இப்பொழுது மாத்திரமே நீங்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். மக்கள் பரமாத்மாவை நோக்கிப் பாடுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஆகவே அவர் ஒரேயொருவராகவே இருக்க முடியும். தூய்மையற்றவர்கள் அனைவரையும் தூய்மையாக்குகின்ற ஒரேயொரு தந்தையே உள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதி அன்பிற்கினி;ய அசரீரியான தந்தையாகிய கடவுளே தூய்மையாக்குபவர் என்பதை இது காட்டுகிறது. அவரே பெரிய தந்தை ஆவார். அவர்கள் தங்கள் சிறிய தந்தையைக் கூவியழைக்கிறார்கள், ஆனால், அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, பரமாத்மாவாகிய பரமதந்தையையே நினைவுசெய்கிறார்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முதலில், அவர்களுக்கு இந்த ஒரு விடயத்தை விளங்கப்படுத்துங்கள்: பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையின் புகழ் மிகவும் உயர்வானதாகும். பரீட்சை எவ்வளவு உயர்வானதாக உள்ளதோ, ஒருவர் பெறுகின்ற பட்டங்களும் அவ்வளவு உயர்வானதாகவே இருக்கும். பாபாவுக்கு ஒரு மிகப்பெரிய தலைப்பு உள்ளது. தேவர்களின் புகழ் சாதாரணமானது: முழுமையாக தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களும் என்பதாகும். காம வாளை உபயோகித்து, ஒருவருக்கொருவர் ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக, இறுதிவரை துன்பத்தை விளைவிப்பதே, பெரிய வன்முறையாகும். அது வன்முறையின் ஒரு பெரிய ரூபம் ஆகும். நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சாவாதிகள் ஆகவேண்டும். கடவுள் பேசுகிறார்: ஓ குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்களும், நான் பரமாத்மாவும் ஆவேன். நீங்கள் 63 பிறவிகளாக நச்சுக்கடலில் மூழ்கி வருகிறீர்கள். நான் இப்பொழுது உங்களைப் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறேன். இறுதிக் காலத்தில், இக்குறுகிய நேரத்துக்கு, தூய்மைக்கான ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். இது ஒரு சிறந்த வழிகாட்டல், இல்லையா? அவர்கள் கூறுகிறார்கள்: எங்களைத் தூய்மையாக்குங்கள்! முக்தி தாமத்தில் தூய ஆத்மாக்கள் வசிக்கிறார்கள். சத்தியயுகத்தில், ஜீவன்முக்தி உள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் சூரிய-வம்சத்தில் இருக்க விரும்பினால், முழு முயற்சி செய்யுங்கள். என்னை நினைவுசெய்வதுடன், ஏனையோரையும் அதனைச் செய்யத் தூண்டுங்கள். நீங்கள் எந்தளவிற்குச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு ஏனையோரையும் இதனைச் செய்யத் தூண்டி, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். இப்பொழுது, டெஹ்ராடூனில் வசிக்கின்ற இக்குழந்தை பிரேமைப் பாருங்கள். அந்த டெஹ்ராடூன் வாசிகளில் எவரும் சுயதரிதனச் சக்கரதாரிகளாக இருக்கவில்லை. எவ்வாறு அவர்கள் இப்பொழுது அவ்வாறு ஆகியுள்ளார்கள்? பிரேம் அவர்களைத் தன்னைப் போன்று ஆக்கினாள். ஏனையோரை உங்களைப் போன்று ஆக்குவதனால், தேவ விருட்சம் படிப்படியாக விரிவாக்கம் அடைகிறது. குருடர்களுக்குப் பார்வையைக் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் எட்டு மணித்தியாலங்களுக்கு ஓய்வாக உள்ளீர்கள். நீங்கள் உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காக, வியாபாரம் போன்றவற்றைச் செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் எங்கே சென்றாலும் என்னை நினைவுசெய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் பாபாவை அதிகம் நினைவுசெய்யுமளவுக்கேற்ப, முழு உலகத்துக்கும் அதிக அமைதியைத் தானம் செய்வீர்கள். யோகத்தினூடாக, அமைதி தானம் செய்வது, மிகவும் சிரமமானதல்ல. சிலசமயங்களில், சிலர் யோகத்தில் அமரச் செய்யப்படுகிறார்கள், எனெனில் ஒன்றுகூடலின் சக்தி மகத்தானதாகும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: சிவபாபாவை நினைவு செய்து, அவருக்குக் கூறுங்கள்: பாபா, இவர் என்னுடைய குடு;ம்பத்திலிருந்து வந்துள்ளார்; அவருடைய புத்தியின் பூட்டைத் திறவுங்கள். இதுவும் நினைவுக்கான ஒரு சிறந்த தந்திரம் ஆகும். இப்பயிற்சியைக் கொண்டிருங்கள். நீங்கள் உலாவித் திரியும்பொழுது, சிவபாபாவை நினைவுசெய்ய வேண்டும்: பாபா, அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுங்கள்! கருணைநிறைந்த தந்தையால் மாத்திரமே ஆசீர்வாதங்களைக் கொடுக்க முடியும்: ஓ கடவுளே! இவரில் கருணை கொள்ளுங்கள்! இது கடவுளுக்கு மாத்திரமே கூறப்படுகிறது. அவரே கருணைநிறைந்தவரும், ஞானம்-நிறைந்தவரும், பேரானந்தம் நிறைந்தவரும் ஆவார். அவர் தூய்மையும் அன்பும் நிறைந்தவரும் ஆவார். ஆகவே, பிராமணக் குல இரத்தினங்களாகிய உங்களின் மத்தியில் அதிகளவு அன்பு இருக்க வேண்டும். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள். அங்கே மிருகங்களும் எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் இல்லறங்களில் இருக்கிறீர்கள், இருப்பினும், சகோதரர்கள் தங்கள் மத்தியில் சிறிய விடயங்களுக்காகச் சண்டை செய்கிறார்கள்! அங்கே, மிருகங்கள் கூட ஒருபொழுதும் சண்டையிடுவதில்லை. நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்காது விட்டால், அதிகளவுக்குத் தண்டிக்கப்படுவீர்கள்; உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். நாங்கள் ஏன் தண்டனையைப் பெற வேண்டும்? நாங்கள் திறமைச்சி;த்தி அடைய வேண்டும். நீங்கள் மேலும் முன்னேறுகையில், பாபா உங்களுக்கு அனைத்தினதும் காட்சிகளைக் கொடுப்பார். இப்பொழுது நேரம் குறுகியதாக உள்ளது, ஆகவே விரைந்து செயற்படுங்கள்! மக்கள் நோயுற்றிருக்கும்பொழுது, ராம், ராம் எனக் கூறுமாறு அவர்களுக்குக் கூறப்படுகிறது. அவர்களும் அதனை உள்ளாரக் கூறுகிறார்கள். இறுதியில் மிகவும் திறமைசாலிகளாக இருக்கின்ற சிலர் உள்ளார்கள். அவர்கள் முயற்சி செய்து, முன்னேறிச் செல்வார்கள். நீங்கள் பல அற்புதங்களைக் காண்பீர்கள். நாடகத்தின் இறுதியில் ஓர் அற்புதமான பாகம் உள்ளது. இறுதியில் புகழ் பாடப்படுகிறது. அந்நேரத்தில், நீங்கள் பெரும் களிப்பை அனுபவம் செய்வீர்கள். ஞானம் இல்லாதவர்கள் அடிக்கடி மயக்கம் அடைவார்கள். ஒரு சத்திரசிகிச்சையின் பொழுது, சத்திரசிகிச்சை நிபுணர் பலவீனமான நபர் எவரையும் அருகில் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை. பிரிவினையின் பொழுது, என்ன நடைபெற்றது எனப் பாருங்கள்! என்ன நடைபெற்றது என்பதை அனைவரும் கண்டார்கள். அது மிகவும் வேதனை மிக்க ஒரு காலமாக இருக்கும்;. அது காரணமின்றிய இரத்தக் களறி என அழைக்கப்படுகிறது. அதனைப் பார்ப்பதற்கு உங்களுக்குத் தைரியம் பெருமளவில் தேவைப்படும். உங்கள் கதை 84 பிறவிகளுக்குரியதாகும். நாங்கள் ஆட்சிசெய்த தேவர்களாக இருந்தோம், பின்னர் மாயையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, பாவப் பாதையில் வீழ்ந்தோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகுகிறோம். தொடர்ந்தும் இதனை நினைவு செய்யுங்கள், உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். இதுவே சுயதரிசனச் சக்கரம் (சுய தரிசனச் சக்கரத்தைச் சுழற்றுதல்) ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போன்று தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகுங்கள். ஒருவருடன் ஒருவர் அதிகளவு அன்புடன் வாழுங்கள். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள்.

2. நடந்தும் உலாவியும் திரியும்பொழுது, தந்தையை நினைவுசெய்வதைப் பயற்சி செய்யுங்கள். நினைவில் நிலைத்திருந்து, முழு உலகத்துக்கும் அமைதியைத் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
ஞானத்தின் இரகசியங்களை அறிந்திருப்பதன் மூலம், தடைகளை அழிப்பவராகவும், புத்தியில் நம்பிக்கைக் கொண்டிருப்பவராகவும் இருந்து, சதா அசைக்க முடியாதவர் ஆகுவீர்களாக.

தடைகளை அழிப்பவராக இருக்கின்ற ஸ்திதியில் இருப்பதன் மூலம், ஒரு தடை எவ்வளவு பெரியதாக இருப்பினும், அதனை நீங்கள் ஒரு விளையாட்டாகவே அனுபவம் செய்வீர்கள். அதனை ஒரு விளையாட்டாகக் கருதுவதால், நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆனால் நீங்கள் சந்தோஷமான வெற்றியாளராகவும், இலேசாகவும், ஒளியாகவும் (டபிள் லைட்டாக) இருப்பீர்கள். உங்களுக்கு நாடகத்தின் விழிப்புணர்வு இருக்கும்பொழுது, ஒவ்வொரு தடையும் எதுவும் புதியது அல்ல என்பதாகவே இருக்கும். அது புதிதான ஒன்றாக அல்லாது, ஆனால் மிகப் பழையதாகவே உணரப்படும். நீங்கள் பல தடவைகள் வெற்றியாளர் ஆகியுள்ளீர்கள். புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஞானத்தின் இரகசியங்களைப் புரிந்துகொண்டிருப்பதுடன், அச்சல்காரை (ஸ்திதிரமான வீடு) ஞாபகார்த்தமாகக் கொண்டிருப்பார்கள்.

சுலோகம்:
நீங்கள் திடசங்கற்ப சக்தியைக் கொண்டிருந்தால், வெற்றி உங்கள் கழுத்து மாலையாகும்.

மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க, மேன்மையான வாசகங்கள்

நாங்கள் நல்ல அல்லது தீய செயல்கள் எதனைச் செய்தாலும், நாம்; நிச்சயமாக அதன் பலாபலன்களைப் பெறுகின்றோம். உதாரணமாக, மக்கள் தான தர்மங்களைச் செய்யும்போதோ, யாகங்களை வளர்க்கும்போதோ, கிரிகைகளை மேற்கொண்டு வழிபாடுகள் செய்யும்போதோ, அவர்கள் தாம் கடவுளின் பெயரில் செய்யும் தானம் கடவுளின் சபையில் சேமிக்கப்படுக்கின்றது என்றும், தாம் மரணித்த பின்னர், அவற்றிற்கான பலனைத் தாம் நிச்சயமாகப் பெற்று முக்தி அடைவோம் என்றும் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், இவற்றைச் செய்வதனால், நிலையானதொரு நன்மை இல்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். நாங்கள் செய்கின்ற செயல்களுக்கு நிச்சயமாக நாங்கள் தற்காலிகமாகவும்;, கணப்பொழுது சந்தோஷத்தையும் பெறுகின்றோம். நாங்கள் எங்கள் நடைமுறை வாழ்க்கையில் சதா திருப்தியாக இருக்கும் வரையில், எங்களால் அதற்கான பலனை அனுபவம் செய்ய முடியாது. நீங்கள் செய்கின்ற அனைத்தாலும் நீங்கள் முழுமையான நன்மையை அடைகின்றீர்களா? என நீங்கள் மக்களிடம் வினவினால், அவர்களால் இதற்கு உங்களுக்கு எந்தப் பதிலையும் கொடுக்க முடியாது. அவை கடவுளிடம் சேமிக்கப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என நாங்கள் எவ்வாறு கூற முடியும்? உங்கள் நடைமுறை வாழ்வில் நீங்கள் மேன்மையான செயல்களைச் செய்தால் மாத்திரமே, இதைவிட நீங்கள் வேறு என்ன முயற்சியை செய்தாலும், உங்களால் முக்தியையோ ஜீவன்முக்தியையோ அடைய முடியாது. பல புனிதர்கள், மகாத்மாக்கள் இருந்தாலும் அவர்களுக்குக் கர்மத்தைப் பற்றிய ஞானம் இல்லாதிருந்தால், அவர்களின் செயல்கள் நடுநிலைச் செயல்கள் ஆக முடியாது, அவர்களால் முக்தியையோ ஜீவன்முக்தியையோ அடைய முடியாது. அவர்களுக்கு உண்மையான தர்மம் என்னவென்பதோ அல்லது உண்மையான செயல்கள் என்னவென்பதோ தெரியாது. இராமா, இராமா எனக் உச்சரிப்பதால் மாத்;திரம் அவர்களால் முக்தியை அடைய முடியாது. அவர்கள் தாம் மரணித்த பின்னர், முக்தி அடைந்து விடுவோம் என நினைக்கின்றார்கள், மரணித்த பின்னர், எவ்வாறு தாம் நன்மை அடைவோம் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. எதுவுமே தெரியாது. ஒரு நபர் தனது வாழ்வில் நல்ல அல்லது தீய செயல்களைச் செய்தால், அவர் அச் செயல்களுக்கான விளைவுகளை இப்பிறவியிலேயே எதிர்கொள்ள வேண்டும். எவ்வாறு தூய்மையான செயல்களைச் செய்து, எங்கள் ஆசிரியரான கடவுளிடமிருந்து எங்கள் வாழ்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான அனைத்து ஞானத்தையும் நாங்கள் நடைமுறையில் பெறுகின்றோம். அச்சா.