14.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, 21 பிறவிகளுக்கான முழுமையான வெகுமதியைக் கோருவதற்கு, உங்களை அரைவாசியாகவன்றி, முழுமையாகவே தந்தையிடம் அர்ப்பணியுங்கள். சுயத்தை அர்ப்பணிப்பதென்றால், தந்தைக்குரியவராக ஆகுவதாகும்.

கேள்வி:
எந்தவோர் ஆழமான விடயத்தைப் புரிந்துகொள்வதற்கு, உங்களுக்கு ஓர் எல்லையற்ற புத்தி தேவை?

பதில்:
இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட எல்லையற்ற நாடகம். கடந்து சென்றவை யாவும் நாடகத்தில் இருந்தன. இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. நாங்கள் வீடு திரும்புவோம், பின்னர் எங்கள் பாகங்கள் மீண்டும் ஒருமுறை புதிதாக ஆரம்பிக்கும். இந்த ஆழமான விடயத்தைப் புரிந்துகொள்வதற்கு ஓர் எல்லையற்ற புத்தி தேவைப்படுகின்றது. எல்லையற்ற தந்தை மாத்திரமே எல்லையற்ற படைப்பின் இந்த ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கின்றார்.

கேள்வி:
மக்களை விரக்திக் கூக்குரலிடச் செய்கின்ற எவ்விடயமானது குழந்தைகளாகிய உங்களைச் சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றது?

பதில்:
அறியாமையிலுள்ள மக்கள் சிறிய நோய்களுக்குக் கூட புலம்புகின்றார்கள். ஆனால் குழந்தைகளாகிய நீங்களோ சந்தோஷமடைகின்றீர்கள், ஏனெனில் ஒரு பழைய கர்மக் கணக்கு தீர்க்கப்படுகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள்.

பாடல்:
நீங்கள் இரவை உறங்குவதிலும், பகலை உண்பதிலும் கழித்தீர்கள்!

ஓம் சாந்தி.
குழந
உண்மையில், ஓம் சாந்தி எனக் கூறுவது அவசியமற்றது, ஆனால், குழந்தைகளாகிய உங்களுக்கு ஏதாவது ஒன்று கூறப்பட வேண்டும்; ஓர் அறிமுகம் கொடுக்கப்பட வேண்டும். இந்நாட்களில் ஓம் சாந்தி, ஓம் சாந்தி என உச்சரித்துக் கொண்டிருக்கின்ற பலர் உள்ளனர், ஆனால்;, அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஓம் சாந்தி ஆத்மாவாகிய எனது ஆதி தர்மம் அமைதி ஆகும். இது சரியானது, ஆனால் பின்னர் அவர்கள் ஓம் சிவோஹம் (ஆத்மாவாகிய நானே சிவன்) என்றும் கூறுகின்றனர். அது தவறானது. உண்மையில், அப்பாடல்கள் போன்றவை தேவையில்லை. இன்றைய உலகில் செவிகளைத் திருப்திப்படுத்துகின்ற பல விடயங்கள் உள்ளன. செவிகளைத் திருப்திப்படுத்துகின்ற விடயங்களால் எவ்வித நன்மையும் இல்லை. இப்பொழுதுதான் நீங்கள் உங்கள் மனதில் ஒரேயொரு விடயத்தின் மீதான ரசனையை விருத்தி செய்கின்றீர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு முன்னால் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பெருமளவு பக்தி செய்துள்ளீர்கள், பக்தி எனும்; இரவு இப்பொழுது முடிவடைந்து, அதிகாலை வருகின்றது. அதிகாலை நேரத்திற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். மக்கள் அதிகாலையில் பெருமளவு பக்தி செய்கின்றனர். அவர்கள் மாலையின் மணிகளையும் உருட்டுகின்றனர். பக்தி மார்க்கத்தின் இவ்வழமை தொடர்கின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்நாடகம் முடிவிற்கு வருகின்றது, சக்கரம் இப்பொழுது மீண்டும் சுழலும். அங்கு பக்திக்கான அவசியமிருக்காது. பக்தி செய்துள்ள பின்னரே ஒருவர் கடவுளைச் சந்திப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர். அனைவரும் துன்பத்தை அனுபவம்செய்யும்பொழுது, கடவுளை நினைவு செய்கின்றனர். மக்களுக்கு ஏதாவது சிரமங்கள் அல்லது நோய்கள் ஏற்பட்டால், கடவுளை நினைவுசெய்கின்றனர். பக்தர்கள் மாத்திரமே கடவுளை நினைவுசெய்கின்றனர். சத்திய, திரேதா யுகங்களில் பக்தி கிடையாது. இல்லாவிடில், அதுவும் பக்தியின் பிரிவு ஆகிவிடும். முதலில் பக்தியும், பின்னர் ஞானமும், அதன்பின்னர் விருப்பமின்மையும் உள்ளன. பக்தியின் பின்னர், மீண்டும் ஒருமுறை பகல் வருகின்றது; புதிய உலகம் பகல் எனப்படுகின்றது. பக்தி, ஞானம், விருப்பமின்மை ஆகிய வார்த்தைகள் மிகச்சரியானவை. எதில் விருப்பமின்மை? பழைய உலகிலும், பழைய உறவினர்கள் போன்றவர்களிலும் ஏற்படுகின்ற விருப்பமின்மை ஆகும். மக்கள் முக்தி தாமத்திற்கு, பாபாவிடம் செல்ல விரும்புகின்றனர். பக்தி செய்த பின்னர் நாங்கள் நிச்சயமாகக் கடவுளைச் சந்திப்போம். பக்தர்கள் மாத்திரமே தந்தையாகிய கடவுளைச் சந்திப்பார்கள். பக்தர்களுக்குச் சற்கதியளிப்பது கடவுளின் பணி ஆகும். நீங்கள் தந்தையை இனங்காண்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை. தந்தையே மனித உலக விருட்சத்தின் விதை ஆவார். அது ஒரு தலைகீழான விருட்சம் எனப்படுகின்றது. எவ்வாறு விதையிலிருந்து விருட்சம் தோன்றுகின்றது என்பதைப் புரிந்துகொள்வது மிக இலகுவானது. எவ்வாறு வேதங்கள், சமயநூல்கள், கிரந்தம் போன்ற அந்தச் சமயநூல்களைக் கற்றல், நோன்பு இருத்தல், தபஸ்யா செய்தல் போன்றவை பக்தி மார்க்கத்திற்குரியவை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அது கடவுளைச் சந்திப்பதற்கான உண்மையான பாதையல்ல. கடவுள் மாத்திரமே முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான உண்மையான பாதையைக் காட்டுகின்றார். நாடகம் முடிவடையவுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். கடந்து சென்றவை யாவும் நாடகமே. இதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவைப்படுகின்றது. எல்லையற்ற அதிபதி மாத்திரமே முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய எல்லையற்ற ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் படைப்பவர் என்றும், ஞானக் கடவுள் (ஞானேஸ்வரர்) என்றும் அழைக்கப்படுகின்றார். ஞானேஸ்வரர் என்றால், ஞானமுள்ள கடவுள் என்பதாகும். இவை கடவுளின் வாசகங்கள் எனப்படுகின்றன. இது இறைதந்தையின் ஞானமான, ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் இறைதந்தையின் மாணவர்களாகி விட்டீர்கள். நிச்சயமாக, கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். எனவே, கடவுள் ஆசிரியரும் ஆவார். நீங்கள் மாணவர்களும், அத்துடன் குழந்தைகளும் ஆவீர்கள். குழந்தைகள் பாட்டனாரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றனர். இது ஒரு மிகவும் இலகுவான விடயம். ஒரு குழந்தை தகுதியானவராக இல்லாவிட்டால், அவரது தந்தை அவரை வெளியில் அனுப்பி விடுகின்றார். வியாபாரத்தில் சிறந்த உதவியாளர்களாக உள்ளவர்கள் தங்கள் பங்குகளையும் பெறுகின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கும் பாட்டனாரின் சொத்திற்கான உரிமை உள்ளது. அவர் அசரீரியானவர். நீங்கள் உங்களின் பாட்டனாரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அவர் ஞானம் நிறைந்தவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரைத் தூய்மையாக்குபவர்கள் என அழைக்க முடியாது; அவர்கள் தேவர்கள். அவர்கள் சற்கதி அருள்பவர்களாக அறியப்படுவதில்லை. ஒரேயொருவர் மாத்திரமே அதைச் செய்பவர், அவரையே அனைவரும் நினைவுசெய்கின்றனர். மக்கள் தந்தையை அறியாததால், கடவுள் அனைவரிலும் இருப்பதாகக் கூறுகின்றனர். மக்கள் காட்சியொன்றைப் பெற்றால், அனுமானே அவர்களுக்கு அக்காட்சியை அருளியதாக நினைக்கின்றனர். கடவுள் சர்வவியாபகர் என அவர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு எதிலாவது நம்பிக்கை இருக்குமாயின், நீங்கள் ஒரு காட்சியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், இங்கே, இது கற்பதற்கான கேள்வியாகும். தந்தை கூறுகின்றார்: நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அவர் எவ்வாறு கற்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்: ஏனைய ஆசிரியர்கள் கற்பிப்பது போன்று, ஒரு சாதாரண முறையிலேயே அவர் கற்பிக்கின்றார். ஒரு சட்டநிபுணர் இன்னொருவரைத் தன்னைப் போன்று சட்டநிபுணராக்குவார். பாரதத்தைச் சுவர்க்கமாக்கியவர் யார் என்பதையும், பாரதத்தில் வாழ்ந்த சூரிய வம்ச தேவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மக்களுக்கு முற்றிலும் எதுவுமே தெரியாது. இப்பொழுது இது சங்கமம் ஆகும். நீங்கள் சங்கம காலத்தில் நின்றுகொண்டிருக்கின்றீர்கள்; வேறு எவருமே சங்கம காலத்தில் இல்லை. சங்கம காலத்தின் சந்திப்பு மிக அழகானது! குழந்தைகளாகிய நீங்கள் உங்களது தந்தையைச் சந்திப்பதற்கு வந்துள்ளீர்கள். இச்சந்திப்பு மிகவும் நன்மை பயப்பதாகும். ஏனைய கும்ப மேலாக்கள் போன்றவை மூலம் எந்தப் பேறும் கிடைப்பதில்லை. சங்கம காலமே கும்பா எனும் உண்மையான சந்திப்பு எனப்படுகின்றது. ஆத்மாக்களும் பரமாத்மாவும் நீண்டகாலம் பிரிந்திருந்ததாகவும், அதன்பின்னர் அழகான சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நேரம் மிக அழகானது! சங்கம காலம் மிகவும் நன்மை பயப்பதாகும். ஏனெனில் இந்த வேளையிலேயே அனைவருக்கும் நன்மை உள்ளது. தந்தை வந்து, அனைவருக்கும் கற்பிக்கின்றார். அவரே அசரீரியானவர், ஒரு நட்சத்திரம் போன்றவர், ஆனால் விளங்கப்படுத்துவதற்காக ஒரு நீள்கோள வடிவம் வைக்கப்பட்டுள்ளது. புள்ளியின் மூலம் அவர்கள் எதையும் எளிதாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு நட்சத்திரம், தந்தையும் ஒரு நட்சத்திரமே என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். ஆத்மா எத்தகையவரோ, பரமாத்மாவான பரமதந்தையும் அத்தகையவNர் அதில் வேறுபாடு இல்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள். சிலரின் புத்தியில் அதிகளவு ஞானமும், ஏனையோரின் புத்தியில் சிறிதளவு ஞானமும் உள்ளது. ஆத்மாக்களாகிய நாங்கள் எவ்வாறு 84 பிறவிகளை அனுபவம் செய்கின்றோம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஒவ்வொருவரும் தமது சொந்தக் கர்மக் கணக்குகளுக்காக வேதனைப்பட வேண்டியுள்ளது. ஒரு நபர் நோய்வாய்ப்படும்பொழுது, அவர் தனது சொந்தக் கணக்குகளைத் தீர்க்கின்றார் என்றே அர்த்தமாகும். நாங்கள் கடவுளின் குழந்தைகள், எனவே நாங்கள் ஏன் வேதனைப்படுகின்றோம்? என்ற எண்ணத்தைக் கொண்டிராதீர்கள். இவை எண்ணற்ற பிறவிகளின் பாவங்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ஒருவர் குமாரியாக இருக்கலாம், ஒரு குமாரி இப்பொழுது எந்தப் பாவத்தையும் செய்திருக்க மாட்டார், எனினும், எண்ணற்ற பிறவிகளின் கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். நீங்கள் இப்பிறவியில் செய்த பாவங்களைப் பற்றிக் கூறவில்லை எனில், அவை தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அவற்றைப் பற்றி பாபாவிடம் கூறினால், அவை அதிகரிக்க மாட்டாது. பாரதமே அதி தூய்மையானதாக இருந்தது; இப்பொழுது பாரதம் அதிதூய்மையற்றதாகி விட்டது. எனவே அவர்களும் பெருமளவு முயற்சி செய்வது அவசியமாகும். தாங்கள் ஓர் உயர்ந்த இலக்கத்தைக் கோருவோம் என்பதைப் பெருமளவு சேவை செய்பவர்கள் புரிந்துகொள்கின்றனர். ஏதாவது கர்மக் கணக்குகள் இன்னமும் எஞ்சியிருக்குமாயின், வேதனை இருக்கும். இவ்வேதனை சந்தோஷமாகத் தீர்க்கப்பட முடியும். அறியாமையில் உள்ளவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால், அவர்கள் புலம்ப ஆரம்பக்கின்றனர். இங்கே, நீங்கள் அதைச் சந்தோஷமாகத் தீர்க்கின்றீர்கள். நாங்கள் தூய்மையாக இருந்தோம், பின்னர் நாங்கள் அதி தூய்மையற்றவர்கள் ஆகினோம். நாங்கள் எங்களது பாகங்களை நடிப்பதற்காகவே இந்த ஆடைகளைப் பெற்றுள்ளோம். நீங்கள் அதி தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் வேறொருவரின் நோயைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடாது. அவலட்சணமானரும், அழகானவரும் என்ற கிருஷ்ணரின் பெயர் எவ்வாறு நினைவுகூரப்படுகின்றது எனப் பாருங்கள். இருந்தும் படங்களை உருவாக்கியவர்கள் புரிந்துகொள்வதில்லை. சிலவேளைகளில், அவர்கள் இராதையை வெள்ளை நிறமாகவும், கிருஷ்ணரைக் கருநீல நிறமாகவும் காட்டுகின்றனர். இராதை ஒரு குமாரி என்பதை அவர்கள் புரிந்துகொள்வதால், அவருக்கு அவர்கள் மரியாதை கொடுக்கின்றனர். அவர் எவ்வாறு அவலட்சணமானவராக இருக்க முடியும் என அவர்கள் அதிசயிக்கின்றனர். நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். தேவ தர்மத்திற்குரியவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது தங்களை இந்துக்களாகக் கருதுகின்றனர். நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் உங்கள் குலத்தை ஈடேற்றுகின்றீர்கள். நீங்கள் முழுக் குலத்தையும் தூய்மையாக்க வேண்டும். நீங்கள் அவர்களை மீட்டு, ஈடேற்ற வேண்டும். எனவே, நீங்களே மீட்புப் படையினர். தந்தை மாத்திரமே உங்களைச் சீரழிவிலிருந்து சற்கதிக்கு அழைத்துச் செல்கின்றார். அவரே படைப்பவரும், இயக்குநரும், முதன்மை நடிகரும் என்று புகழப்படுகின்றார். அவர் எவ்வாறு ஒரு நடிகர் ஆவார்? தூய்மையாக்குபவரான தந்தை தூய்மையற்ற உலகிற்கு வந்து, அனைவரையும் தூய்மையாக்குகின்றார், எனவே, அவரே பிரதான நடிகர், இல்லையா? பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோர் கரன்கரவன்ஹார்; என அழைக்கப்படுவதில்லை. கரன்கரவன்ஹார் என அழைக்கப்படுகின்ற பாபா இவ்வேளையில் தனது பாகத்தை நடிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அனுபவத்திலிருந்து கூறலாம். அவர் சங்கம யுகத்திலேயே தனது பாகத்தை நடிப்பார். எவருக்கும் அவரைத் தெரியாது. மக்கள் 16 கலைகள் உடையவர்களாகிய பின்னர் வீழ ஆரம்பிக்கின்றனர். படிப்படியாகக் கலைகள் குறைவடைகின்றன. ஒவ்வொரு பிறவியிலும்; கலைகள் சற்றுக் குறைவடைகின்றன. நாங்கள் சத்திய யுகத்தில் எட்டுப் பிறவிகள் எடுக்க வேண்டும். நாடகத்தின்படி ஒவ்வொரு பிறவியிலும் கலைகள் குறைவடைகின்றன. இது இப்பொழுது ஏறுகின்ற காலமாகும். நாங்கள் முழுமையாக மேலேறியதும், மீண்டும் படிப்படியாகக் கீழிறங்குவோம். இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஓர் இராச்சியத்தில் சகல வகையினரும் தேவைப்படுகின்றனர். ஸ்ரீமத்தை நன்றாகப் பின்பற்றுபவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். ஆனால், அவர்களும் ஆலோசனை பெற வேண்டும். நீங்கள் உங்களின் முழுக் கணக்கையும் பாபாவிற்குக் கொடுக்கும்பொழுது மாத்திரமே, பாபாவால் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். பாபா அனைத்தையும் அறிவார் என நினைக்காதீர்கள். அவருக்கு முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும், ஆனால், ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன இருக்கின்றது என்பதை அவர் அமர்ந்திருந்து அறிந்துகொள்ள மாட்டார். அவர் ஞானம் நிறைந்தவர். பாபா கூறுகின்றார்: நான் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவேன், இதனாலேயே, இவ்வாறே நீங்கள் வீழ்கின்றீர்கள், பின்னர் இவ்வாறே நீங்கள் ஏறுகின்றீர்கள் என என்னால் உங்களுக்குக் கூற முடிகின்றது. இது பாரதத்தின் பாகத்தில் உள்ளது. அனைவரும் பக்தி செய்கின்றனர். அதிகபட்ச பக்தி செய்பவர்களே முதலில் சற்கதியைப் பெற வேண்டும். அவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தனர், அவர்கள் 84 பிறவிகளை எடுத்தனர். அவர்களே வரிசைக்கிரமமாகப் பக்தி செய்தவர்கள். நீங்கள் இப்பொழுது நல்ல வாழ்க்கை வாழக்கூடும், ஆனால், முன்னைய பிறவிகளின் பாவங்கள் இன்னமும் உள்ளன. நினைவுச் சக்தி மூலம் மாத்திரமே அவை அழிக்கப்பட முடியும். நினைவு சிரமமானது. பாபா உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் நினைவில் அமர்ந்திருந்தால், உங்கள் சரீரங்கள் நோயிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. நீங்கள் பாபாவிடமிருந்து அமைதியும், சந்தோஷமும், தூய்மையும் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அத்துடன் நீங்கள் நினைவின் மூலம் நோயிலிருந்து விடுபட்ட சரீரத்தையும், நீண்ட ஆயுட்காலத்தையும் பெறுகின்றீர்கள். ஞானத்தின் மூலம் நீங்கள் திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள். திரிகாலதரிசியாக இருப்பதன் அர்த்தத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. மந்திர சக்தி கொண்ட பலர் உள்ளனர். இங்கிருந்தவாறே அவர்கள் இலண்டன் பாராளுமன்றத்தைப் பார்க்கின்றனர். எவ்வாறாயினும் அத்தகைய மந்திர சக்தியால் எவ்வித நன்மையும் இல்லை. சிலர் தமது பௌதீகக் கண்களால் அன்றி, தெய்வீகப் பார்வையால் காட்சிகளைப் பெறுகின்றனர். இவ்வேளையில் அனைவரும் அவலட்சணமானவர்களாகவே உள்ளனர். நீங்கள் உங்களை அர்ப்பணிக்கின்றீர்கள், அதாவது, நீங்கள் தந்தைக்குரியவர்கள் ஆகுகின்றீர்கள். பாபாவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். தங்களை அரைவாசியாக அர்ப்பணிப்பவர்கள் அரைவாசியளவை மட்டுமே பெறுகின்றார்கள். பாபா தன்னை அர்ப்பணித்தார்; அவர் தன்னிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணித்தார். தங்களை அர்ப்பணிப்பவர்கள் அனைவரும் 21 பிறவிகளுக்கான பேற்றைப் பெறுகின்றார்கள். இதில் தற்கொலை என்ற கேள்விக்கு இடமில்லை. தற்கொலை செய்பவர் ஒரு மகா பாவி என அறியப்படுகின்றார். ஓர் ஆத்மா தனது சொந்தச் சரீரத்தையே அழிக்கின்றார், அது நல்லதல்ல. ஒருவர் இன்னொருவரின் கழுத்தை வெட்டக்கூடும். ஆனால், இது உங்கள் கழுத்தை நீங்களே வெட்டுவதாகும். இதனாலேயே தற்கொலை செய்பவர் மகா பாவி என அறியப்படுகின்றார். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நான் கல்பம் கல்பமாக, சங்கம யுகத்திலே இந்தக் கும்பமேலாவிற்கு வருகின்றேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இவர் அதே தாயும், தந்தையுமானவர். குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, எங்களுக்கு அனைத்துமே நீங்கள்தான். பாபாவும் கூறுகின்றார்: ஓ குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் எனக்குரியவர்கள். சிவபாபா ஒரு சக்கரத்திற்கு முன்னர் வந்ததைப் போன்றே வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழுமையாக 84 பிறவிகளை எடுத்துள்ளவர்களை அவர் அலங்கரிக்கின்றார். பாபா ஞானம் நிறைந்தவரும், தூய்மையாக்குபவரும்; என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் இப்பொழுது எங்களுக்கு மொத்த ஞானத்தையும் கொடுக்கின்றார். அவர் மாத்திரமே ஞானக்கடல். இங்கே, சமயநூல்களில் உள்ள எதுவும் கிடையாது. இங்கு நீங்கள் உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, அனைத்தையும் மறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தைக்குரியவர்கள் என்பதால், ஏனைய அனைத்தையும் மறந்துவிட வேண்டும். உங்கள் புத்தியின் யோகத்தை அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரேயொருவருடன் இணைத்துக் கொள்ள வேண்டும். பாடப்படுகின்றது: நாங்கள் எங்களை உங்களுடன் மாத்திரமே இணைத்துக் கொள்வோம். பாபா, நாங்கள் எங்களை முழுமையாக அர்ப்பணிப்போம். தந்தை கூறுகின்றார்: நானும் உங்களிடம் என்னை அர்ப்பணிக்கின்றேன். இனிய குழந்தைகளே, நான் உங்களை முழு உலக இராச்சியத்தினதும் அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் தன்னலம் கருதாதவர். மக்கள் தாங்கள் தன்னலமற்ற சேவை செய்வதாகக் கூறக்கூடும், இருப்பினும், அவர்கள் அதன் பலனைப் பெறுகின்றார்கள். தந்தையே தன்னலமற்ற சேவை செய்கின்றார்; நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கின்றீPர்கள். தாங்கள் தன்னலமற்ற சேவை செய்வதாக ஆத்மாக்கள் கூறும்பொழுது, அவர்கள் அதனை எங்கே கற்றார்கள்? பாபா மாத்திரமே தன்னலமற்ற சேவை செய்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் சக்கரங்களின் சங்கமத்தில் மாத்திரமே வருகின்றார், அவர் இப்பொழுது உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கின்றார். தந்தையே கூறுகின்றார்: நான் அசரீரியானவர். நான் எவ்வாறு இந்த ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்க முடியும்? எவ்வாறு என்னால் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்க முடியும்? இதில் தூண்டுதல் என்ற கேள்வி ஏதுவுமில்லை. மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர், எனவே நான் வருகின்றேன். நான் பாரதத்திற்கு வருகின்றேன். அவர் எங்களுக்குப் பாரதத்தின் புகழைக் கூறுகின்றார். பாரதம் மிகவும் மகத்துவமானதாகவும், முற்றிலும் தூய்மையானதாகவும் இருந்தது. இப்பொழுது அது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது அதிகளவு அன்பு கொண்டுள்ளார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்தின்; அடிப்படையில் உங்கள் குலத்திற்கு நன்மை அளியுங்கள். உங்கள் குலம் முழுவதையும் தூய்மையாக்குங்கள். உங்கள் உண்மையான கணக்கைத் தந்தையிடம் கொடுங்கள்.

2. நினைவுச் சக்தியினால் உங்கள் சரீரத்தை நோயிலிருந்து விடுவியுங்கள். உங்களை முழுமையாகத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, அதை ஒரேயொருவருடன் இணையுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் வேறு எவரினதும், அன்றி, ஒரேயொரு தந்தையின் விழிப்புணர்வு மூலம் ஒரு கருவியாகச் செயற்பட்டு, பற்றிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்களாக.

வேறு எவருக்கும் அன்றி, ஒரே தந்தைக்கு உரியவராக இருக்கின்ற விழிப்புணர்வைப் பேணுகின்ற குழந்தைகளின் மனமும், புத்தியும் இலகுவாக ஒருமுகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் கருவிகளாகச் சேவை செய்வதால், அதன் மீது பற்று எதனையும் கொண்டிருப்பதில்லை. நீங்கள் எதில் பற்றைக் கொண்டிருக்கின்றீர்களோ, அவற்றை நோக்கியே உங்கள் புத்தி செல்கின்றது என்பதும், உங்கள் மனமும் அங்கேயே ஓடும் என்பதுமே பற்றின் அடையாளமாகும். எனவே, தந்தையிடம் உங்கள் பொறுப்புக்கள் அனைத்தையும் கையளித்து, அனைத்தையும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும், கருவியாகவும் பராமரியுங்கள், அப்பொழுது நீங்கள் பற்றிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தடைகள் ஆத்மாக்களை உறுதியானவர்கள் ஆக்குகின்றன, ஆகவே, தடைகளையிட்டுப் பயப்படாதீர்கள்.