14.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சங்கமயுகத்தில் மாத்திரமே ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ இவ்வாறாக சிரமப்படத் தேவையில்லை.

கேள்வி:
ஸ்ரீ கிருஷ்ணரின் பெற்றோரின் பெயர்களை விட ஸ்ரீகிருஷ்ணரின் பெயர் மிகவும் பிரபல்யமாக இருப்பது ஏன்?

பதில்:
1) ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்னர், வேறு எவருமே யோக சக்தியின் மூலம் பிறப்பெடுக்காததால் ஆகும். கிருஷ்ணருடைய பெற்றோரும் யோக சக்தியின் மூலம் பிறக்கவில்லை 2) இராதை மற்றும் கிருஷ்ணரின் ஆத்மாக்களே முழுமையான கர்மாதீத நிலையை அடைவதுடன், முழுமையான சற்கதியையும் பெறுகின்றார்கள். பாவாத்மாக்கள் எவரும் இல்லாதபொழுது, வைகுந்தம் என்று அழைக்கப்படுகின்ற, தூய புதிய, அழகான உலகில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பெடுக்கின்றார். 3) ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்மாவே சங்கமயுகத்தில் அதிகளவு முயற்சி செய்கின்றார். இதனாலேயே அவரது பெயர் போற்றப்படுகின்றது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை அவர் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். மக்கள் கூவியழைக்கின்றார்கள்: வந்து தூய்மையற்ற எங்களைத் தூய்மையாக்குங்கள். இது தூய்மையற்ற உலகம் என்பதையே இது நிரூபிக்கின்றது. புதிய உலகம் தூய்மையான உலகமாக இருந்தது. ஒரு புதிய கட்டடம் அழகானது, பழைய கட்டடம் வெடித்து, அழிந்து விடுகின்றது; அது மழைக்கு இடிந்து வீழ்ந்துவிடுகின்றது. தந்தை இப்பொழுது உலகைப் புதிதாக்க வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் 5000 ஆண்டுகளின் பின்னர், மீண்டும் உங்களுக்குக் கற்பிப்பார். எந்தச் சாதுக்களோ, புனிதர்களோ தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு இவ்வாறு கற்பிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள் ஆதலால், அவர்கள் இது பற்றியோ அல்லது நாடகம் பற்றியோ எதையுமே அறியார்;கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களுக்குக் கூறமுடியாது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதையே குழந்தைகளாகிய நீங்கள் சிரமமாகக் கருதுகின்றீர்கள். ஏனெனில் நீங்கள் அரைக்கல்பமாக ஆத்ம உணர்வில் இருக்கவில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களைப் பரமாத்மா எனக் எண்ணாதீர்கள், இல்லை. உங்களை ஆத்மாக்களாகக் கருதி, பரமாத்மாவான பரமதந்தை சிவனை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையாகுகின்ற நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். இதில் பௌதீகமானவை எதுவுமில்லை. உங்களுடைய செவிகளையோ, மூக்கையோ நீங்கள் மூடவேண்டியதில்லை. உங்களை ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்வதே பிரதான விடயமாகும். நீங்கள் அரைக்கல்பமாகச் சரீர உணர்வுப் பழக்கத்தை விருத்தி செய்துள்ளீர்கள். நீங்கள் முதலில் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுகின்றபொழுதே, உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியும். பக்தி மார்க்கத்திலும் மக்கள் பாபா, பாபா எனக் கூவியழைக்கின்றார்கள். சத்தியயுகத்தில் பௌதீகமான ஒரு தந்தையை மாத்திரமே நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே எவருமே அப்பாலுள்ள தந்தையை நினைவுசெய்ய மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். பின்னர் பக்தி மார்க்கத்தில் நீங்கள் பௌதீகத் தந்தை, ஆன்மீகத் தந்தை என இரு தந்தையரைக் கொண்டிருக்கிறீர்கள். சகலரும் துன்ப நேரத்திலேயே அப்பாலுள்ள தந்தையை நினைவுசெய்கின்றார்கள். சத்திய யுகத்தில், எந்த விதமான பக்தியுமில்லை. அங்கே நீங்கள் ஞானத்தின் வெகுமதியை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் இந்த ஞானத்தை அங்கே கொண்டிருக்கிறீர்கள் என்றில்லை; இந்நேரத்தில் நீங்கள் கற்கின்ற ஞானத்தின் வெகுமதியை அங்கே பெறுகிறீர்கள். தந்தை ஒருமுறை மாத்திரமே வருகின்றார். அரைக்கல்பத்திற்கு, நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுகின்ற சந்தோஷம் எனும் ஆஸ்தியைக் கொண்டிருக்கிறீர்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய லௌகீகத் தந்தைகளிடமிருந்து தற்காலிகமான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். மனிதர்களால் இதை விளங்கப்படுத்த முடியாது. இது புதிய விடயமாகும். தந்தை 5000 வருடங்களுக்கு ஒருமுறை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். கலியுக இறுதியினதும், சத்தியயுக ஆரம்பத்தினதும் சங்கமத்திலேயே தந்தை மீண்டும் ஒருமுறை புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு வருகின்றார். புதிய உலகில் அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது, பின்னர் திரேதாயுகத்தில் இராமரின் இராச்சியம் இருந்தது. உருவாக்கப்பட்டுள்ள தேவர்களின் அனைத்துப் படங்களும் பக்தி மார்க்க சம்பிரதாயங்களாகும். தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டையும், புதிய உலகையும் நினைவுசெய்யுங்கள். ஞானப் பாதையே, புரிந்துணர்வுக்கான பாதையாகும். இந்தப் பாதையின் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்கு விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே எந்தவிதமான துன்பமுமில்லை. சத்தியயுகத்திலுள்ள எவருமே, தமக்கு அமைதி வேண்டும் எனக் கூறமாட்டார்கள். இரப்பதை விட இறப்பதே மேல் என்ற ஓர் கூற்று உள்ளது. நீங்கள் கடவுளிடம் எதையுமே வேண்டாத வகையில், தந்தை உங்களைச் செல்வந்தத் தேவர்கள் ஆக்குகின்றார். இங்கு மக்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகின்றார்கள். பாப்பரசர் வரும்பொழுது, மக்கள் ஆசீர்வாதங்களைப் பெறச் செல்கின்றார்கள். பாப்பரசர் பலருக்குத் திருமணச் சடங்குகளையும் நடாத்தி வைக்கின்றார். பாபா அந்த விடயங்களைச் செய்வதில்லை. கடந்த காலத்தில், பக்தி மார்க்கத்தில் நடைபெற்றவை அனைத்தும் இப்பொழுது மீண்டும் இடம்பெறுகிறது. அது மீண்டும் இடம்பெறும். நாளுக்கு நாள், பாரதம் மேலும் வீழ்ச்சியடைகின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்திலும், ஏனையவர்கள் கலியுகத்திலும் உள்ளார்கள். அவர்கள் இங்கு வரும்வரையில் இது சங்கமயுகமா அல்லது கலியுகமா என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒரே குடும்பத்தில், குழந்தைகள் தாங்கள் சங்கமயுகத்தில் இருப்பதாக நம்புகின்றார்கள், ஆனால் அவர்களின் தந்தையோ தான் கலியுகத்தில் இருப்பதாகக் கூறக்கூடும். அப்பொழுது, அதிகளவு சிரமம் உள்ளது; உணவு, பானத்தில் அதிகளவு சிக்கல் ஏற்படுகின்றது. சங்கமயுகத்துக்குச் சொந்தமான நீங்களே தூய உணவை உண்பவர்கள். தேவர்கள் ஒருபொழுதும் வெங்காயம் போன்றவற்றை உண்பதில்லை. தேவர்கள் விகாரமற்றவர்கள் என அழைக்கப்படுகின்றனர். பக்தி மார்க்கத்திலுள்ள அனைவரும் தமோபிரதான் ஆகியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சதோபிரதான் ஆகுங்கள். ஆத்மாக்கள் முதலில் சதோபிரதானாக இருந்து, இப்பொழுது தமோபிரதான் ஆகியுள்ளார்கள் என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை, ஏனெனில் ஆத்மாக்கள் செயல்களின் விளைவுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் கருதுகின்றார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா என அவர்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே ஞானக்கடலாவேன். இந்த தேவ தர்மத்திற்குச் சொந்தமான அனைவரும் வந்து தங்களுடைய ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை கோரிக்கொள்வார்கள். இப்பொழுது மரக்கன்று நாட்டப்படுகின்றது. எவரேனும் ஒருவர் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறத் தகுதியானவர்கள் அல்ல என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். சிலர் வீடு திரும்பி, திருமணம் செய்து, தொடர்ந்தும் அழுக்காகுகின்றார்கள். அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது; ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகின்றேன். ஆகையினால் பிரஜைகளும் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். வேறு எவ்வாறு நீங்கள் இராச்சியத்தை அடைவீர்கள்? இந்த வார்த்தைகள் கீதையிலே உள்ளன. இது கீதையின் யுகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள். ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தின் அத்திவாரம் இப்பொழுது இடப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். சூரிய வம்ச, சந்திர வம்ச இராச்சியங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. பிராமணக் குலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பிராமணர்களே பின்னர் சூரிய, சந்திர வம்சத்தினர் ஆகுகின்றார்கள். மிக நன்றாக முயற்சி செய்பவர்கள் சூரிய வம்சத்தினர் ஆகுவார்கள். ஏனைய மத ஸ்தாபகர்கள் வெறுமனே தங்களுடைய சொந்த மதத்தை ஸ்தாபிப்பதற்கு வருகின்றார்கள். பின்னர் அந்த மதத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் அவர்களது சமயம் தொடர்ந்தும் விரிவடைவதால், தொடர்ந்தும் அவர்களைப் பின்பற்றிக் கீழே வருகின்றனர், உதாரணமாக, கிறிஸ்தவ மதத்தின் விதை கிறிஸ்துவே ஆவார். உங்களுடைய விதை யார்? தந்தையேயாவார். ஏனெனில் அவர் வந்து பிரம்மாவின் மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். பிரம்மா மக்களின் தந்தை (பிரஜாபிதா) என அழைக்கப்படுகின்றார். அவர் படைப்பவர் என அழைக்கப்படுவதில்லை. குழந்தைகள் அவர் மூலமே தத்தெடுக்கப்படுகின்றனர். பிரம்மாவுமே படைக்கப்பட்டவர், அல்லவா? தந்தை வந்து இவருக்குள் பிரவேசித்து இவரைப் படைக்கின்றார்;. சிவபாபா கூறுகின்றார்: நீங்கள் என்னுடைய குழந்தை. பிரம்மா கூறுகின்றார்: நீங்கள் என்னுடைய சரீரதாரிக் குழந்தைகள். நீங்கள் அழுக்காகவும், அவலட்சணமாகவும் ஆகிவிட்டீர்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இந்தச் சங்கமயுகத்திலேயே நீங்கள் அதிமேன்மையான தேவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். தேவர்களும், சூத்திரர்களும் இந்த முயற்சியைச் செய்ய வேண்டியதில்லை. பிராமணர்களாகிய நீங்களே தேவர்களாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தந்தை சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றார். இந்த யுகம் மிகவும் குறுகியது, இதனாலேயே இது லீப் (டநயி) யுகம் என அழைக்கப்படுகின்றது. எவருமே இதை அறியார். தந்தையும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. புதிய உலகம் உடனடியாகவே உருவாக்கப்படும் என்றில்லை. தேவர்களாகுவதற்கு உங்களுக்குக் காலம் எடுக்கின்றது. நற்செயல்களைச் செய்தவர்கள் நல்ல குடும்பத்தில் பிறப்பெடுப்பார்கள். நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக அழகானவர்கள் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களே இவ்வாறு ஆகுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது நல்ல செயல்களைச் செய்வதற்குக் கற்கின்றீர்கள். ஆத்மாக்கள் நல்ல, தீய சம்ஸ்காரங்களைத் தங்;களுடன் சுமந்து செல்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது அழகான மலர்களாகுகின்றீர்கள். பின்னர் தொடர்ந்தும் நல்ல வீடுகளில் பிறப்பெடுப்பீர்கள். இங்கு நல்ல முயற்சி செய்தவர்கள் நிச்சயமாக நல்ல வீடுகளில் பிறப்பெடுப்பார்கள். எனினும் அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நீங்கள் பிறப்பெடுக்கின்றீர்கள். தீய செயல்கள் செய்பவர்கள் இல்லாதபொழுதே, சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படும்; தேர்வு இடம்பெறும். தமோபிரதானான அனைவரும் அழிக்கப்பட்டு, பின்னர் புதிய தேவர்கள் கீழே வர ஆரம்பிப்பார்கள். சீரழிந்தவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணர் பிறப்பு இடம்பெறுகின்றது. அதுவரை மாற்றம் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கும். அழுக்கான எவரும் இல்லாதபொழுதே, கிருஷ்ணர் வருவார். அதுவரைக்கும் அவர்கள் தொடர்ந்தும் வந்து செல்வார்கள். கிருஷ்ணருடைய பெற்றோர் அவரைப் பெறுவதற்காக முன்கூட்டியே தேவைப்படுகின்றனர். அந்நேரத்தில் நல்லவர்கள் மாத்திரமே இருப்பார்கள்; ஏனைய அனைவரும் சென்று விடுவார்கள். அப்பொழுதே அது சுவர்க்கம் என அழைக்கப்படும். கிருஷ்ணரை வரவேற்பவர்களாகிய நீங்கள் மாத்திரமே இருப்பீர்கள். இது இன்னமும் இராவண இராச்சியமாகையால், நீங்கள் நஞ்சின் மூலமே பிறப்பெடுத்திருப்பீர்கள். அவை தூய பிறப்புக்களாக இருக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் மாத்திரமே முதலாவது தூய பிறப்பை எடுக்க முடியும். அதன்பின்னரே, வைகுந்தமான புதிய உலகம் என உலகம் அழைக்கப்படுகின்றது. கிருஷ்ணர் சம்பூரணமான அழகான புதிய உலகிலேயே வருவார். இராவண சமுதாயம் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிடும். கிருஷ்ணருடைய பெயர் அவரது பெற்றோர்களின் பெயர்களையும் விட மிகவும் பிரபல்யமானது. கிருஷ்ணரின் பெற்றோரின் பெயர்கள் அவ்வளவு பிரபல்யமானதல்ல, கிருஷ்ணருக்கு முன்னர் பிறப்பெடுத்தவர்கள், யோக சக்தி மூலம் பிறப்பெடுப்பதில்லை. கிருஷ்ணரின் பெற்றோர் யோக சக்தி மூலம் பிறப்பெடுக்கின்றனர் என்றில்லை; இல்லை, அவ்வாறாயின், அவர்களுடைய பெயரும் பிரபல்யமாகியிருக்கும். இது கிருஷ்ணரின் பெற்றோர், ஸ்ரீ கிருஷ்ணர் செய்தது போன்ற முயற்சி செய்யவில்லை என்பதையே நிரூபிக்கின்றது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது தொடர்ந்தும் இந்த விடயங்களைப புரிந்துகொள்வீர்கள். இராதையும், கிருஷ்ணரும் மாத்திரமே முழுமையான, சம்பூரண ஸ்திதியைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களே முதலில் சற்கதிக்குள் செல்கிறார்கள். பாவாத்மாக்கள் எவரும் எஞ்சியிராதபொழுதே அவர்கள் பிறப்பெடுக்கின்றனர். அப்பொழுது அது தூய உலகம் என அழைக்கப்படுகின்றது. இதனாலேயே கிருஷ்ணரின் பெயர் பிரபல்யமானது. அவரது பெற்றோரின் பெயர் பிரபல்யமானதல்ல. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, பல காட்சிகளைக் காண்பீர்கள். இன்னமும் காலம் உள்ளது. நீங்கள் எவருக்கும் விளங்கப்படுத்தலாம்: இவ்வாறாக ஆகுவதற்கே நாங்கள் கற்கின்றோம். அவர்களுடைய இராச்சியம் இப்பொழுது உலகில் ஸ்தாபிக்கப்படுகின்றது. புதிய உலகம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. இதுவரை நீங்கள் தேவ சமுதாயத்தினர் என அழைக்கப்படுவதில்லை. நீங்கள் பிராமண சமூகத்தவர்கள்; நீங்கள் தேவர்களாகப் போகின்றவர்கள். தேவ சமுதாயம் உருவாக்கப்படும்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்கள் இரண்டும் தூய்மையானவையாக இருக்கும். தற்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருந்து, அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இவை அனைத்தும் முயற்சி செய்வதற்கான விடயங்களாகும். நீங்கள் நினைவின் மூலம் பாவச் செயல்கள் செய்வதை வெற்றிகொள்ள வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதற்கு மீண்டும், மீண்டும் மறக்கின்றீர்கள் எனக் கூறுகின்றீர்கள். பாபா சுற்றுலா (piஉniஉ) செல்லும்பொழுது, நான் நினைவு செய்யாதிருந்தால் பாபா என்ன கூறுவார்? எனச் சிந்திக்கின்றார். இதனாலேயே பாபா கூறுகின்றார்: நீங்கள் சுற்றுலா செல்லும்பொழுதும், நினைவில் நிலைத்திருங்கள். அனைத்தையும் செய்யும்பொழுதும்; அன்பிற்கினியவரை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதிலேயே முயற்சி தங்கியுள்ளது. இந்த நினைவின் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவீர்கள். அத்துடன் நீங்கள் அழியாத ஞானச் செல்வத்தையும் சேமித்துக் கொள்வீர்கள். ஒருவர் பின்னர் தூய்மையற்றவர் ஆகினால், அவரிடமிருக்கின்ற ஞானம் அனைத்தும் முடிந்துவிடும். தூய்மையே பிரதான விடயமாகும். தந்தை மிக நல்ல விடயங்களையே விளங்கப்படுத்துகின்றார். வேறு எவரிடமும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானமில்லை. ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குச் சொந்தமானவை. உண்மையில் இல்லறப் பாதைக்குச் சொந்தமானவர்கள் மாத்திரமே பக்தி செய்ய வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அதிகளவு சக்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் வீட்டிலிருக்கும்பொழுதே சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் சர்வசக்திவான தந்தையிடமிருந்து அதிகளவு சக்தியைப் பெறுகின்றீர்கள். சந்நியாசிகளும் காட்டில் வசித்தபொழுது, அந்தச் சக்தியைக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் தாங்கள் வசிப்பதற்கெனப் பெரிய தொடர்மாடிகளைக் (கடயவள) கட்டியுள்ளார்கள். அவர்களிடம் இப்பொழுது அந்தளவிற்குச் சக்தியில்லை. நீங்கள் ஆதியில் சந்தோஷம் எனும் சக்தியைக் கொண்டிருந்தீர்கள். ஆனால் பின்னர் அது மறைந்து விடுகின்றது. அதுபோன்றே அவர்கள் ஆரம்பத்தில் அமைதிச் சக்தியைக் கொண்டிருந்தனர், ஆனால் இப்பொழுது அவர்களிடம் அது இல்;லை. முன்னர் அவர்கள் படைப்பவரையோ அல்லது படைப்பையோ தாங்கள் அறியார்கள் எனக் கூறியபொழுது, அவர்கள் உண்மையையே கூறினார்கள். இப்பொழுது அவர்கள் தங்களையே கடவுள் என அழைக்கின்றனர். அவர்கள் சிவோஹம் எனக் கூறுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்நேரத்தில், முழு விருட்சமும் தமோபிரதான் ஆகியுள்ளது. இதனாலேயே நான் சாதுக்களையும், புனிதர்களையும் ஈடேற்ற வந்துள்ளேன். இந்த உலகம் மாறவேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். எவ்வாறு ஓர் அழியாத பாகம் ஒவ்வோர் ஆத்மாவிலும்; பதியப்பட்டுள்ளது என்பதையும், அது எவ்வாறு மீண்டும் மீண்டும் நடிக்கப்படும் என்பதையும் எந்த ஆத்மாவுமே புரிந்துகொள்ளவில்லை. ஆத்மாக்கள் சின்னஞ்சிறியவர்கள், அவர்களில் பதிந்துள்ள அழியாத பாகங்கள் ஒருபொழுதும் அழிக்க முடியாதவை. இதைப் புரிந்துகொள்வதற்கு, மிகவும் தூய்மையான புத்தி தேவைப்படுகின்றது. நீங்கள் நினைவு யாத்திரையில் போதையுடன் இருக்கும்பொழுதே, இது இடம்பெறும். நீங்கள் முயற்சி செய்யாது ஓர் அந்தஸ்தை அடையமுடியாது. இதனாலேயே இது நினைவுகூரப்படுகின்றது: நீங்கள் மேலேறினால், சுவர்க்க அமிர்தத்தின் இனிமையைச் சுவைப்பீர்கள், ஆனால் இரட்டைக் கிரீடமணிந்து அரசர்களுக்கெல்லாம் அரசராக இருப்பதற்கும், பிரஜைகளில் ஒருவராக இருப்பதற்கும் இடையில் அத்தகைய பாரிய வித்தியாசம் உள்ளது. அனைவருக்கும் கற்பிப்பதற்கு ஒரேயொருவர் மாத்திரமே இருக்கின்றார். நீங்கள் இதை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நினைவு யாத்திரையே பிரதான விடயம் என பாபா, மீண்டும், மீண்டும் விளங்கப்படுத்துகின்றார். நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆகவே, ஆசிரியரே குருவாகவும் இருக்கின்றார். தந்தையே ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரும், தந்தையருக்கெல்லாம் தந்தையுமாவார். உங்கள் பாபா மிகவும் அன்பானவர் எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அந்தத் தந்தையை அதிகளவில் நினைவுசெய்ய வேண்டும். அத்துடன் நீங்கள் சரியாகக் கற்கவும் வேண்டும். தந்தையை நீங்கள் நினைவுசெய்யாது விட்டால், உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட முடியாது. தந்தை சகல ஆத்மாக்களையும் தன்னுடன் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். சகல சரீரங்களும் அழிக்கப்பட்டு ஆத்மாக்கள் வீடு திரும்பி, தத்தமது சொந்த மதப் பிரிவுகளின்;; வரிசைக்கேற்ப வசிப்பார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக்குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியைத் தூய்மையாக்குவதற்கு, போதையுடன் நினைவுயாத்திரையில்; நிலைத்திருங்கள். அனைத்தையும் செய்கின்றபொழுதும் ஒரேயொரு அன்பிற்கினியவரை நினைவுசெய்வதனால், நீங்கள் பாவச்செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள்.

2. இந்தக் குறுகிய யுகத்தில், ஒரு சாதாரண மனிதனிலிருந்து ஒரு தேவராக மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள். நற்செயல்களைச் செய்து, நல்ல சம்ஸ்காரங்களைக் கிரகிப்பதால், நீங்கள் நல்ல குடும்பத்திற்குள் செல்வீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உலகின் ஒளியாகி, காட்சிகளை அருளும் ஓர் உருவமாகுவதால், ஒரு கணப் பார்வையால் பக்தர்களை அப்பால் அழைத்துச் செல்வீர்களாக.

உலகின் கண்களாகிய ஆத்மாக்களாகிய உங்களிடமிருந்து திருஷ்டியைப் பெறுவதற்கு முழு உலகமும் காத்திருக்கின்றது. உலகின் ஒளிகளான நீங்கள் உங்களுடைய முழுமையான, சம்பூரண ஸ்திதியை அடையும்பொழுது, அதாவது, நீங்கள் உங்கள் சம்பூரணத்தின் கண்களைத் திறக்கும்பொழுது, ஒரு விநாடியில் உலகம் மாற்றம் அடையும். அப்பொழுது காட்சிகளை அருளும் உருவங்களான, ஆத்மாக்களாகிய உங்களால் ஒரு கணப் பார்வையால் பக்த ஆத்மாக்களை அப்பால் அழைத்துச் செல்ல இயலும். ஒரு கணப் பார்வையால் அப்பால் அழைத்துச் செல்லப்பட விரும்புபவர்களின் வரிசை நீண்டதாக இருக்கும் ஆதலால், உங்கள் சம்பூரணத்தின் கண்களைத் திறந்தே வைத்திருங்கள். இப்பொழுது உங்கள் கண்களைத் துடைப்பதையும், தூங்கி வழிவதையும், உங்கள் எண்ணங்களில் மூச்சுத் திணறுவதையும் நிறுத்தி விடுங்கள். அப்பொழுதே உங்களால் காட்சிகளை அருளும் ஓர் உருவமாக இயலும்.

சுலோகம்:
ஒரு தூய சுபாவமே பணிவின் அடையாளமாகும், தூய்மையாகுங்கள், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.