14.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே உண்மையான ராஜரிஷிகள், உங்கள் கடமை தபஸ்யா செய்வதாகும். தபஸ்யா செய்வதன் மூலமே குழந்தைகள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றனர்.

கேள்வி:
எம்முயற்சி உங்களை எல்லா நேரத்திற்கும் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக்குகின்றது?

பதில்:
நீங்கள் ஆத்மாவின் ஒளியை ஏற்றி, தமோபிரதான் ஆத்மாவை சதோபிரதானாக்குவதற்கு முயற்சி செய்யும்போதே எல்லா நேரத்திற்கும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். இந்நேரத்தில் கவனயீனமாக இருந்து, தவறுகள் செய்பவர்கள் அதிகளவு அழுவார்கள். நீங்கள் முயற்சி செய்யாது, சித்தி அடையாது விட்டால் தர்மராஜிடமிருந்து தண்டனையை அனுபவம் செய்வதுடன், பூஜிக்கப்படவும் மாட்டீர்கள். தண்டனையை அனுபவம் செய்பவர்களால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாதிருக்கும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். முதலில் அவர் தனது குழந்தைகளுக்கு, அவர்களை ஆத்மாக்களாகக் கருதுமாறு கூறுகின்றார். முதலில் ஆத்மாவும், பின்னரே சரீரமும் ஆகும். கண்காட்சிகளிலும், அருங்காட்சியகங்களிலும், வகுப்பிலும், எங்கும் முதலில் நீங்கள் அனைவரையும் எச்சரிக்க வேண்டும்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது, நீங்கள் அனைவருமே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்றில்லை. இங்கு அமர்ந்திருக்கும்போதும், உங்கள் எண்ணங்கள் எங்கும் அலைபாய்கின்றன. சத்சங்கங்களில், சாது வரும்வரைக்கும் அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் நிச்சயமாகச் சில எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள். பின்னர், சாது வந்ததும் அவர் கூறுகின்ற கதையைச் செவிமடுக்க ஆரம்பிக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: பக்தி மார்க்கத்தில் சில விடயங்கள் கூறும்போது, மக்கள் அதனைச் செவிமடுக்கின்றனர். அவையனைத்தும் போலியானவை, அவற்றில் எதுவுமே இல்லை எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். அவர்கள் கொண்டாடுகின்ற தீபாவளியும் போலியானதே. மூன்றாவது ஞானக்கண் திறந்திருக்க வேண்டும் எனத்; தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். அப்பொழுது, ஒவ்வொரு வீட்டிலும் ஒளி இருக்க முடியும். இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இருள் சூழ்ந்துள்ளது. அந்த ஒளி அனைத்தும் வெளிப்படையானது. நீங்கள் உங்கள் ஒளியை ஏற்றுவதற்காக முழுமையான மௌனத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களை உங்கள் ஆதி தர்மத்தில் ஸ்திரப்படுத்துவதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்த நினைவு யாத்திரை மூலமே உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். ஆத்மாவின் ஒளி அணைந்துவிட்டது. சக்தி என்ற பெற்றோல் முழுவதும் பயன்படுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகும்போது, மீண்டும் நிரப்பப்படுவீர்கள். பகலுக்கும் இரவுக்குமிடையிலான வேறுபாடு உள்ளது. மக்கள் இப்பொழுது இலக்ஷ்மியை அதிகளவில் வழிபடுகின்றனர். இலக்ஷ்மியா, சரஸ்வதி மாதாவா மகத்தானவர் எனச் சில குழந்தைகள் கேட்டு எழுதுகின்றனர். இலக்ஷ்மி ஸ்ரீ நாராயணன் ஒருவருக்கே சொந்தமானவர். அவர்கள் மகாலக்ஷ்மியை வழிபடும்போது, அவரை நான்கு கரங்களுடன் காட்டுகின்றனர். அவ்வுருவம் அவர்கள் இருவரையுமே குறிக்கின்றது. அது உண்மையில் இலக்ஷ்மி நாராயணனின் வழிபாடு என்றே அழைக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதால் அவர்கள் நான்கு கரங்களுடைய உருவத்தைக் காட்டிய போதிலும், மனிதர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: அனைவரும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டனர். ஒரு லௌகீகத் தந்தை முழு உலகிலுமுள்ள குழந்தைகளை விவேகமற்றவர்கள் எனக் கூறுவாரா? உலகத் தந்தை யாரென்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவரே கூறுகின்றார்: நானே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவேன். நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். அனைவரும் கடவுள் என அந்த சாதுக்கள் கூறுகின்றனர். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஞானத்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மனிதர்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் கூறுகின்றார்கள்: தாங்கள் இன்னார் இன்னார். அவர்கள் சரீரப் பெயரின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் தங்களுக்கிடையில் பழகுகின்றனர். பரமாத்மாவாகிய சிவபாபா அசரீரியானவர். அவ்வாத்மாவின் பெயர் சிவன்;. சிவபாபாவின் பெயர் மாத்திரமே ஆத்மாவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பரமாத்மாவாகிய கடவுள். அவரது பெயர் சிவன் ஆகும். ஏனைய ஆத்மாக்கள் அனைவருக்கும், அவர்களது சரீரங்களுக்கே பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சிவபாபா இங்கு வசிப்பதில்லை, அவர் பரந்தாமத்திலிருந்தே இங்கு வருகின்றார். சிவனின் அவதாரம் உள்ளது. சகல ஆத்மாக்களும் தங்கள் பாகங்களை நடிப்பதற்காக இங்கு வருகின்றார்கள் எனத் தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். தந்தைக்கும் ஒரு பாகம் உள்ளது. தந்தை இங்கு சிறந்ததொரு பணியை மேற்கொள்கின்றார். அவரது அவதாரத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாலேயே, அவருக்கென ஒரு விடுமுறை தினத்தைக் கொண்டாடவும், அவரின் முத்திரையைக் கொண்டிருக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். தந்தை அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்பதால், சகல நாடுகளிலும் இதனையிட்டு விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். அவரது பிறந்த தினத்தையோ, அல்லது அவர் பிரிந்து செல்லும் நேரத்தையோ எவராலும் அறிந்து கொள்ள முடியாது, ஏனெனில், அவர் தனித்துவமானவர். இதனாலேயே அவர்கள் சிவராத்திரி பற்றிப் பேசுகின்றனர். அரைக்கல்பத்திற்கு எல்லையற்ற பகலும், அரைக் கல்பத்திற்கு எல்லையற்ற இரவும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இரவு முடிவடையும்போது, பகல் ஆரம்பிக்கின்றது. தந்தை இரண்டிற்குமிடையில் வருகின்றார். இதுவே மிகச் சரியான நேரமாகும். ஒரு குழந்தை பிறக்கும்போது, அது நகர சபையில் பதிவு செய்யப்படுகின்றது. ஆறு நாட்களின் பின்னர் குழந்தைக்குப் பெயர் சூட்டப்படுகின்றது. அது பெயர் சூட்டுவிழா எனப்படுகின்றது. சிலர் அதனை சாத்தி (ஆறாவது நாள் விழா) என அழைக்கின்றனர். பல மொழிகள் உள்ளன. அவர்கள் இலக்ஷ்மியை வழிபடும்போது, பட்டாசுகள் போன்றவற்றைக் கொழுத்துகிக்றார்கள். நீங்கள் அவர்களை வினவலாம்: நீங்கள் இலக்ஷ்மியின் பண்டிகையைக் கொண்டாடுகின்றீர்கள், ஆனால் அவர் எப்பொழுது சிம்மாசனத்தில் அமர்ந்தார்? அவர் சிம்மாசனத்தில் அமர்ந்த, முடிசூட்டு விழாவையே அவர்கள் கொண்டாடுகின்றனர். அவரது பிறந்த தினத்தை அவர்கள் கொண்டாடுவதில்லை. அவர்கள் இலக்ஷ்மியின் படத்தை ஒரு தட்டில் வைத்து, அவரிடம் செல்வத்தை வேண்டுகின்றனர். அவர்கள் வேறு எதனையும் அவரிடம் வேண்டுவதில்லை. ஆலயங்களில் அவர்கள் எதையும் வேண்டுவார்கள், ஆனால் தீபாவளியன்று, அவர்கள் செல்வத்தை மாத்திரமே வேண்டுகின்றனர். எவ்வாறாயினும், அவர் செல்வத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் அது அவர்களின் நம்பிக்கையாகும்! ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் வழிபடும்போது. அவர் ஒரு குறுகிய காலத்திற்குச் செல்வத்தைப் பெறுவது சாத்தியமாகும். அது தற்காலிக சந்தோஷம் ஆகும். எங்கோ ஒரு இடத்தில் நிரந்தர சந்தோஷம் இருக்க வேண்டும்! அவர்களுக்குச் சுவர்க்கத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. சுவர்க்கத்துடன் எதையும் ஒப்பிட முடியாது. அரைக் கல்பத்திற்கு ஞானமும், அரைக் கல்பத்திற்கு பக்தியும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் விருப்பமின்மை உள்ளது. இவ்வுலகம் பழையதும், அழுக்கானதும் என்றும், அதனால் புதிய உலகம் நிச்சயமாகத் தேவையென்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வைகுந்தம் புதிய உலகம் எனப்படுகின்றது. அது சுவர்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நாடகத்திலுள்ள நடிகர்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு உங்கள் பாகத்தை நடிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: நீங்கள் கண்காட்சியொன்றில் மக்களுக்கு விளங்கப்படுத்தும்போதெல்லாம், முதலில் உங்கள் இலக்கும் இலட்சியமுமாகிய இதனைக் காண்பித்து, எவ்வாறு நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறலாம் என்பதை விளங்கப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் நிச்சயமாக பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் வர வேண்டும். நீங்கள் ஏணிப் படத்தைப் பயன்படுத்தி மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். பக்தி இராவண இராச்சியத்திலேயே ஆரம்பமாகின்றது. சத்திய யுகத்தில் பக்தியின் பெயரோ, சுவடோ இல்லை. ஞானமும், பக்தியும் வேறானது. நீங்கள் இ;ப்பொழுது இப்பழைய உலகில் ஆர்வமின்மையைக் கொண்டுள்ளீர்கள். இப்பழைய உலகம் இப்பொழுது முடிவடையப் போகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு எப்பொழுதும் சந்தோஷத்தையே கொடுப்பார். ஒரு தந்தை தனது குழந்தைகளுக்காகத் அதிக பிரயத்தனம் செய்கின்றார். அவர் ஒரு புதல்வனைப் பெறுவதற்காக குருமாரிடமும், சாதுக்களிடமும் செல்கின்றார், ஏனெனில், தனக்கு ஒரு புதல்வன் இருந்தால், தனது சொத்துக்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்கலாம் என அவர் நம்புகின்றார். எனக்கு ஒரு புதல்வன் இருந்தால், அவனை எனது வாரிசு ஆக்க முடியும் ஒரு தந்தை ஒருபோதும் தனது குழந்தைகளுக்குத் துன்பம் விளைவிப்பதில்லை. அது அசாத்தியமாகும்! நீங்கள் தாயையும், தந்தையையும் கூவியழைத்து அழுதீர்கள். எனவே, ஆன்மீகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு சந்தோஷத்திற்கான பாதையைக் காட்டுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். ஆன்மீகத் தந்தை மாத்திரமே துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தைக் கொடுப்பவர். இந்த விநாசமும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்கே ஆகும். வேறு எவ்வாறு நீங்கள் முக்தியையும், ஜீவன் முக்தியையும் பெறுவீர்கள்? எவ்வாறாயினும், எவரும் இதனைப் புரிந்துகொள்ளவதில்லை. ஏழைகளும், பலவீனமானவர்களுமே இங்கு வருகிறார்கள், ஏனெனில், அவர்களால் மாத்திரமே தாங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும். எவ்வாறாயினும், செல்வந்தர்களான முக்கியஸ்தர்களின் சரீர உணர்வு மிகவும் உறுதியாக உள்ளது, அதைக் கேட்கவே வேண்டாம்! பாபா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் இராஜரிஷிகள். ரிஷிகள் எப்பொழுதும் தபஸ்யா செய்வார்கள். அவர்கள் பிரம்மத்தை நினைவு செய்கின்றனர், அவர்கள் ஒளித் தத்துவத்தை நினைவு செய்கின்றனர். சிலர் காளி போன்றவர்களைக்கூட நினைவு செய்கின்றனர். பல சந்நியாசிகள் காளியை வழிபடுகின்றனர். அவர்கள் காளி மாதாவைக் கூவியழைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில், அனைவரும் விகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். காமச் சிதையில் அமர்ந்ததால் அவர்கள் அவலட்சணமாகிவிட்டனர். தாய், தந்தை, குழந்தைகள் அனைவரும் அவலட்சணமாக உள்ளனர். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். சத்தியயுகத்தில் எவரும் அவலட்சணமானவர்களல்ல, அனைவரும் அழகானவர்கள். நீங்கள் மீண்டும் எப்பொழுது அவலட்சணமாகினீர்கள் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நாளடைவில், நீங்கள் மென்மேலும் தூய்மையற்றவர்கள் ஆகியதால், நீங்கள் முற்றிலும் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: இராவணன் உங்களைக் காமச் சிதையில் அமரச்செய்து, உங்களை முற்றிலும் அவலட்சணமாக்கிவிட்டான். இப்பொழுது நான் உங்களை மீண்டும் ஒரு தடவை ஞானச் சிதையில் அமரச் செய்கின்றேன். ஆத்மாவே தூய்மையாக்கப்பட வேண்டும். தூய்மையாக்குபவரான தந்தை இப்பொழுது வந்து, எவ்வாறு தூய்மையாகுவது என உங்களுக்குக் காண்பிக்கின்றார். தூய்மையாகுவது எவ்வாறு என தண்ணீரால் எவ்வாறு உங்களுக்குக் காட்ட முடியும்? எவ்வாறாயினும், நீங்கள் மில்லியன் கணக்கானோருக்கு இதனை விளங்கப்படுத்தினால், அந்த மில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரே இதைப் புரிந்துகொண்டு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கோருவதற்காகத் தந்தையிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, பல காட்சிகளைப் பெறுவீர்கள். உங்கள் கல்வி பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். தற்போது கவனயீனமாக உள்ளவர்கள் பின்னர் பெருமளவில் அழுவார்கள். அவர்கள் அதிகளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன், அந்தஸ்தும் அழிக்கப்படும். அப்பொழுது உங்களால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாதிருக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, முயற்சி செய்து சித்தியடைந்தால், நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை. அப்பொழுதே நீங்கள் பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தண்டனை அனுபவிக்க நேர்ந்தால், நீங்கள் பூஜிக்கப்பட முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு முயற்சி செய்யவேண்டும். நீங்கள் ஆத்மாவின் ஒளியை ஏற்றவேண்டும். தற்போது, ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். எனவே, அவர்கள் சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். ஓர் ஆத்மா ஒரு புள்ளியாவார், ஆத்மா ஒரு நட்சத்திரமாகும். நீங்கள் ஆத்மாவிற்கு வேறு எப்பெயரும் கொடுக்க முடியாது. சிலர் ஆத்மாவை காட்சியில் கண்டுள்ளதாக பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். சுவாமி விவேகானந்தரினதும், இராமகிருஷ்ண பரமஹம்சரினதும் உதாரணம் உள்ளது. அவர் மற்றவரிலிருந்து ஒளி வருவதைப் பார்த்தார். எனவே, அது ஓர் ஆத்மாவாகவே இருந்திருக்க முடியும். அது அவரினுள் இரண்டறக் கலந்துவிட்டதாக அவர் நினைத்தார். ஓர் ஆத்மா எவரினுள்ளும் வந்து இரண்டறக் கலக்க முடியாது. ஓர் ஆத்மா சென்று, இன்னொரு சரீரத்தை எடுக்கின்றார். இறுதியில், நீங்கள் இதனை அதிகமாகக் காண்பீர்கள். பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டது எதுவுமே இல்லை. ஆகாயம் வெற்றிடம் எனப்படுகின்றது, எனினும் அதற்கும் ஒரு பெயர் இருக்கவே செய்கின்றது. ஸ்தாபனையானது ஒவ்வொரு கல்பத்திலும் இடம்பெறுகின்றது என்றும், அது நிச்சயமாக இப்போதும் இடம்பெறும் என்றும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பிராமணர்களாகிய நாங்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாக முயற்சி செய்கின்றோம். கடந்துசெல்கின்ற ஒவ்வொரு விநாடியும் நாடகம் எனப்படுகின்றது. முழு உலகினதும் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இச்சக்கரம் 5000 வருடங்கள் கொண்டது. அது தொடர்ந்தும் ஒரு பேனைப் போன்று ஊர்ந்துசெல்கின்றது. அது தொடர்ந்தும் நகர்ந்து செல்கின்றது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நடக்கும்போதும், உலாவித் திரியும்போதும், அனைத்தையும் செய்யும்போதும் தந்தையை நினைவு செய்யுங்கள்! இதில் மாத்திரமே நன்மை உள்ளது. சிலவேளைகளில் மாயை உங்களை அறைவாள். நீங்கள் பிராமணர்கள், நீங்கள் ரீங்காரமிடும் வண்டுகள் செய்வது போன்று, மற்றவர்களையும் உங்களைப் போன்று பிராமணர்கள் ஆக்க வேண்டும். அந்த ரீங்காரமிடும் வண்டு வெறும் உதாரணமே ஆகும். நீங்கள் உண்மையான பிராமணர்கள். பிராமணர்களாகிய நீங்களே தேவர்கள் ஆகவேண்டும். இதனாலேயே நீங்கள் அதி மேன்மையான மனிதர்களாகுவதற்கென சங்கமயுகம் உள்ளது. நீங்கள் அதி மேன்மையான மனிதர்களாகுவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் முதலில் நிச்சயமாக பிராமணர்கள் ஆகவேண்டும். பிராமணர்களின் உச்சிக்குடுமி உள்ளது. நீங்கள் பிராமணப் புரோகிதர்களுக்கு விளங்கப்படுத்தலாம்: உங்கள் பிராமண குலம் உள்ளது, எனினும் பிராமண இராச்சியம் என்பது இல்லை. உங்கள் குலத்தை ஸ்தாபித்தவர் யார்? உங்கள் மூத்தவர் அல்லது தலைவர் யார்? நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினால், அவர்கள் மிகவும் சந்தோஷமடைவார்கள். அந்தப் பிராமணர்கள் சமய நூல்கள் போன்றவற்றை எடுத்துரைப்பதால், மக்கள் அவர்களுக்கு அதிகளவு மதிப்புக் கொடுக்கின்றனர். ஆரம்ப நாட்களில், பிராமணப் புரோகிதர்கள் ராக்கி கட்டச் செல்வதுண்டு. இந்நாட்களில், இதைச் செய்வதற்கு குழந்தைகளே செல்கின்றனர். தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தைச் செய்பவர்களுக்கே நீங்கள் ராக்கி கட்டவேண்டும். நிச்சயமாக சத்தியம் செய்யப்பட வேண்டும். பாரதத்தை மீண்டும் தூய்மையாக்குவதற்காக நாங்கள் இச்சத்தியத்தைச் செய்கின்றோம். நீங்கள் தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்க வேண்டும். இதைக் கூறுவதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதால், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே உங்கள் வியாபாரம் ஆகும். வேறு எந்த மனிதர்களும் இவ்வாறு இல்லை. நீங்கள் அவர்களைக் கொண்டு இந்தச் சத்தியத்தைச் செய்விக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: காமமே மிகக் கொடிய எதிரியாகும்! இதனை வெற்றி கொள்ளுங்கள்! இதை வெற்றி கொள்வதால் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் நிச்சயமாகத் தங்களின் முன்னைய பிறவியில் முயற்சி செய்தார்கள். அவ்வாறே அவர்கள் இலக்ஷ்மி, நாராயணன் ஆகினார்கள். அவர்கள் அந்த அந்தஸ்தைப் பெறுவதற்காக எத்தகைய முயற்சி செய்தார்கள் என நீங்கள் மக்களுக்குக் கூறலாம். இதனையிட்டுக் குழப்பமடைவதற்கென எதுவுமேயில்லை. இந்த தீபாவளி போன்றவற்றால் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது தந்தைக்குரியவர்கள், நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் மக்கள் ஏராளமாகச் செலவுசெய்கின்றனர்! அதில் அதிகளவு இழப்பு உள்ளது. சிலவேளைகளில் தீ மூளவும் செய்கின்றது. எவ்வாறாயினும், அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது உங்கள் புதிய வீட்டிற்கு மீண்டும் ஒரு முறை செல்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். சக்கரம் அதேபோன்று மீண்டும் சுழலும். இது ஓர் எல்லையற்ற திரைப்படம் ஆகும். இது ஓர் எல்லையற்ற திரை ஆகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்குச் சொந்தமானவர்கள் என்பதால், உங்களுக்குள் சந்தோஷம் பொங்கியெழ வேண்டும். நாங்கள் நிச்சயமாக எங்களின் சுவர்க்க ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவோம். தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்து, உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். முயற்சி செய்வதால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகமுடியும். இந்த பாபாவினால் மிக மேன்மையானவர் ஆகமுடியும், உங்களாலும் அவ்வாறு ஆக முடியாதா? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை எப்பொழுதும் அவரது குழந்தைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பது போன்று, நீங்களும் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகவேண்டும். முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள்.

2. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்கு தபஸ்யா செய்யுங்கள். இந்த அழுக்கான, பழைய உலகில் எல்லையற்ற துறவிகள் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
தெய்வீகக் குணங்களை வரவழைத்துக் கொள்வதன் மூலம், சகல குறைபாடுகளையும் அர்ப்பணித்து விடுகின்ற ஒரு திருப்தியான ஆத்மா ஆகுவீர்களாக.

தீபாவளியின் போது சுத்தத்தப்படுத்துவதிலும் வருமானம் ஈட்டப்படுவதிலும் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. அவ்வாறே, ஒவ்வொரு வகையிலும் சுத்தமாக இருப்பது மற்றும் வருமானம் ஈட்டுவது என்ற இலக்கைக் கொண்டிருப்பதன் மூலம்; திருப்தியானதொரு ஆத்மா ஆகுங்கள். திருப்தியாக இருப்பதனால் மாத்திரமே உங்களால் சகல தெய்வீகக் குணங்களையும் வரவழைத்துக் கொள்ள முடியும். அப்பொழுது இயல்பாகவே சகல குறைபாடுகளையும் அர்பணித்துவிட முடியும். உங்களுக்குள் இருக்கின்ற சகல பலவீனங்களையும், குறைபாடுகளையும், பலமற்றிருப்பதையும், உணர்ச்சிவசப்படுதலையும் முடித்து, புதிதாக ஒரு கணக்கை ஆரம்பியுங்கள். புதிய சம்ஸ்காரங்கள் என்ற புத்தாடைகளை அணிந்து உண்மையான தீபாவளியை கொண்டாடுங்கள்.

சுலோகம்:
உங்கள் சுயமரியாதை என்ற ஆசனத்தில் சதா ஸ்திரமாக அமர்வதற்கு, திடசங்கற்பம் என்ற இடுப்புப்பட்டியை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.