14.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற சேவையில் நிச்சயமாகத் தடைகள் இருக்கவே செய்யும். நீங்கள் அனைத்துச் சிரமங்களையும் சகித்துக் கொண்டு இச் சேவையைச் செய்வதில் ஈடுபட்டிருக்க வேண்டும். நீங்கள் கருணை நிறைந்தவர்களாக ஆக வேண்டும்.

பாடல்:
தங்கள் இறுதிப் பிறவியின் விழிப்புணர்வில் இருப்பவர்களின் அடையாளங்கள் யாவை?

பதில்:
இவ்வுலகில் தாங்கள் இன்னொரு பிறவி எடுக்கப் போவதுமில்லை, எவருக்கும் பிறப்பு கொடுக்கப் போவதுமில்லை என்ற விழிப்புணர்வு அவர்களின் புத்தியில் இருக்கும். இது பாவாத்மாக்களின் உலகம், நாங்கள் அதனை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை; இது அழிக்கப்பட வேண்டும். நாங்கள் இப்பழைய ஆடைகளைக் களைந்து, எங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்வோம். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது.

பாடல்:
புதிய யுகத்தின் மொட்டுக்கள்....

ஓம் சாந்தி.
தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரது தீபத்தையும் ஏற்ற வேண்டும். இது உங்கள் புத்தியில் உள்ளது. மனிதர்கள் அனைவருக்கும் முக்திக்கான பாதையைக் காட்ட வேண்டும் என்ற எல்லையற்ற எண்ணத்தைத் தந்தையும் கொண்டுள்ளார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்து, உங்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கே வந்துள்ளார். இது துன்ப உலகம் என்பதையும், சந்தோஷத்திற்கான ஓர் இடமும் இருக்க வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு இது தெரியாது. சமயநூல்களில், அவர்கள் சந்தோஷத்திற்கான இடத்தைத் துன்பத்திற்கான இடமாக ஆக்கியுள்ளார்கள். தந்தை கருணை நிறைந்தவர். மக்கள் தாங்கள் சந்தோஷத்தை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாதுள்ளார்கள், ஏனெனில், அவர்கள் சந்தோஷத்தைப் பற்றியோ அந்தச் சந்தோஷத்தைக் கொடுப்பவரைப் பற்றியோ அறியார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சந்தோஷம் என்று அழைக்கப்;படுவது என்ன, துன்பம் என்று அழைக்கப்படுவது என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. கடவுளைப் பற்றி கூறும்பொழுது, அவரே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என்று அவர்கள் கூறுகிறார்கள், அவர்கள் அவரை அவதூறு செய்கின்றார்கள் என்று அதற்கு அர்த்தமாகும். அவர்;கள் தந்தை என்று அழைக்கின்ற கடவுளை அவர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்தை மாத்திரமே கொடுக்கின்றேன். பாபா, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கவே இப்பொழுது வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் கூறுகிறார்: நான் அனைவரையும் இனிய வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். அந்த இனிய வீடும் தூய்மையானதே; எந்தத் தூய்மையற்ற ஆத்மாக்களும் அங்கு வசிப்பதில்லை. எவருக்கும் அந்த இடத்தைத் தெரியாது. அவர்கள் கூறுகிறார்கள்: இன்ன இன்னார் அப்பால், நிர்வாணா தாமத்திற்குச் சென்று விட்டார், ஆனால் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. புத்தர் நிர்வாணா தாமத்திற்குச் சென்றிருந்தால், அவர் நிச்சயமாக அவ்விடத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆகவே அவர் அங்கு திரும்பிச் சென்றுள்ளார். அச்சா, அவர் அங்கு சென்று விட்டார், ஆனால் பிறர் எவ்வாறு அங்கு செல்ல முடியும்? அவர் எவரையும் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. உண்மையில், அவர் அங்கு செல்லவில்லை என்பதாலேயே அனைவரும் தூய்மையாக்குபவரான தந்தையை நினைவுசெய்கின்றார்கள். தூய உலகங்கள் இரண்டு உள்ளன: ஒன்று முக்தி தாமமும், மற்றையது ஜீவன்முக்தி தாமமும் ஆகும். சிவனின் தாமமும், விஷ்ணுவின் தாமமும் உள்ளன, இதுவோ இராவணனின் உலகமாகும். பரமாத்மா பரமதந்தை இராமர் என்றும் அழைக்கப்படுகின்றார். ‘இராம இராச்சியம்’ என்று கூறப்படும்பொழுது, உங்கள் புத்தி கடவுளை நோக்கிச் செல்கின்றது. ஒரு மனிதரைக் கடவுள் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, நீங்கள் அவர்கள் மீது கருணை கொள்ள வேண்டும். நீங்கள் சிரமங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும். பாபா கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்ற இந்த ஞான யாகத்திற்குப் பல தடைகள் ஏற்படும். கீதையின் கடவுளும் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது. இவரும், நீங்களும் அவமதிக்கப்படுகின்றீர்கள். ‘இவர் ஒருவேளை நாலாம் பிறையைக் கண்டிருப்பார்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவை யாவும் கட்டுக் கதைகள். உலகில் அதிகளவு அழுக்கு உள்ளது. மக்கள் எதனை உண்கின்றார்கள் என்று பாருங்கள்; அவர்கள் மிருகங்களைக் கூட கொல்கின்றார்கள். அவர்கள் செய்கின்ற செயல்களைப் பாருங்கள். தந்தை வந்து, உங்களை அவ்விடயங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை செய்கின்றார். உலகில் அதிகளவு வன்முறை இடம்பெறுகின்றது. தந்தை அனைத்தையும் உங்களுக்கு மிகவும் இலகுவாக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஒரேயொரு விடயத்தை மட்டும் நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் அமைதி தாமத்தையும், உங்கள் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்யுங்கள். அதுவே உங்கள் உண்மையான வசிப்பிடமாகும். சந்நியாசிகளும் அவ்விடத்திற்கான பாதையையே உங்களுக்குக் காட்டுகின்றார்கள். ஒருவர் நிர்வாணா தாமத்திற்குச் செல்வாராயின், அவரால் எவ்வாறு பிறரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியும்? அவர்களை அங்கே யார் அழைத்துச் செல்வார்? உதாரணத்திற்கு, புத்தர் நிர்வாணா தாமத்திற்குச் சென்றார், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களான பௌத்தர்கள், இங்கேயே உள்ளார்கள். அவர்களையும் அவர் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். தூதுவர்கள் அனைவரினதும் ஆவிகள் (ஆத்மாக்கள்) இங்கேயே உள்ளனர் என்றே நினைவுகூரப்படுகின்றது, அதாவது, அவர்கள் ஏதோவொரு சரீரத்தில் உள்ளார்கள், இருப்பினும் மக்கள் தொடர்ந்தும் அவர்களின் புகழைப் பாடுகின்றார்கள். அச்சா, அவர்கள் ஒரு மதத்தை ஸ்தாபித்த பின்னர் சென்று விட்டனர். அதன்பின்னர் என்ன நடைபெற்றது? மக்கள் முக்தி அடைவதற்காகப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். பாபா உங்களுக்குச் செபித்தல், தபஸ்யா செய்தல், யாத்திரை செல்தல் போன்றவற்றைக் கற்பிக்கவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் அனைவருக்கும் முக்தியையும், சற்கதியையும் அருளவே வருகின்றேன். நான் அனைவரையும் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். சத்திய யுகத்தில் ஜீவன்முக்தி உள்ளது. அங்கே ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. அவர் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். பாபாவே பூந்தோட்டத்தின் அதிபதி என்பதையும், நாங்கள் அனைவரும் பூந்தோட்டக்கார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பூந்தோட்டக்கார்களாக, மம்மா, பாபா, குழந்தைகள் அனைவருமே தொடர்ந்தும் விதைகளை விதைக்கின்றார்கள். மரக்கன்றுகள் வெளித்தோன்றுகின்றன, பின்னர் மாயையின் புயல்கள் அவற்றைத் தாக்குகின்றன. பல வகையான புயல்கள் அவற்றைத் தாக்குகின்றன. அவை மாயையின் தடைகள் ஆகும். புயல்கள் வீசும்பொழுது, நீங்கள் வினவ வேண்டும்: பாபா, நான் இதற்கு என்ன செய்யலாம்? தந்தையே உங்களுக்குச் ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். புயல்கள் இருக்கும். சரீர உணர்வே முதல் இலக்கமாகும். ‘ஆத்மாவாகிய நான் அழியாதவர், எனது சரீரமோ அழியக்கூடியது’ என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. நாங்கள் இப்பொழுது எங்களது 84 பிறவிகளை நிறைவுசெய்துள்ளோம். ஆத்மாக்களே மறுபிறவி எடுக்கின்றனர். ஒரு சரீரத்தை விட்டு, மீண்டும் மீண்டும் வேறொன்றை எடுப்பது ஒவ்வோர் ஆத்மாவினதும் வேலையாகும். தந்தை கூறுகின்றார்: இது இப்பொழுது உங்;களின் இறுதிப் பிறவியாகும். நீங்கள் இவ்வுலகில் இன்னொரு பிறப்பு எடுக்கப் போவதுமில்லை, எவருக்கும் பிறப்பு கொடுக்கப் போவதுமில்லை. சிலர் வினவுகின்றார்கள்: அவ்வாறாயின், உலகம் எவ்வாறு தொடரும்? ஓ, இந்நேரத்தில் இவ்வுலகம் இனிமேலும் அதிகரிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அது சீரழிவை அதிகரிப்பதாகும். இராவணன் வந்ததிலிருந்து இவ் வழமை தொடர்ந்துள்ளது. இராவணனே உலகைச் சீரழித்துள்ளான். இராமர் அதனை மேன்மையாக்குகின்றார். அதற்கும் நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகாதிருந்தால், உங்களை நீங்கள் ஆத்மாக்கள் என்று கருதுவீர்கள். சத்திய யுகத்திலும், அவர்கள் தங்களை ஆத்மாக்கள் என்றே கருதுகின்றார்கள். தங்கள் சரீரங்கள் இப்பொழுது பழையவையாகி விட்டன என்பதையும், தாங்கள் அப்பொழுது அவற்றை நீக்கி, புதியவற்றைப் பெறுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். இங்கே, அவர்களுக்கு ஆத்மாக்கள் பற்றிய ஞானமேனும் இல்லை. அவர்கள் சரீரங்கள் என்றே தம்மைக் கருதுகின்றார்கள். சந்தோஷம் அற்றிருப்பவர்கள் இவ்வுலகை விட்டு நீங்க விரும்புகின்றார்கள். அங்கே, சந்தோஷம் மாத்திரமே உள்ளது. ஆனால் அங்கே அவர்களுக்கு ஆத்மாக்களைப் பற்றிய ஞானம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தை விட்டு, இன்னொன்றை எடுக்கின்றார்கள், இதனாலேயே அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. அதுவே சந்தோஷம் என்ற வெகுமதியாகும். இங்கும், அவர்கள் ஆத்மாவைப் பற்றிப் பேசுகின்றார்கள், சிலரோ ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்றும் கூறுகின்றார்கள். அவர்களுக்கு ஆத்மாக்கள் உள்ளனர் என்ற ஞானம் இருக்கின்றது, ஆனால் தங்களது பாகங்களை நீக்கித் தாங்கள் திரும்பிச் செல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னொன்றை எடுக்கவே வேண்டும். அனைவரும் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அனைவரும் தத்தமது செயல்களுக்காக வருந்துகின்றார்கள். மாயையின் இராச்சியத்தில், செயல்கள் எப்பொழுதும் பாவகரமானவையாக உள்ளதால், அவர்கள் தொடர்ந்தும் தமது செயல்களுக்காக வருந்துகிறார்கள். அங்கே பின்னர் நீங்கள் வருந்தும்படியான அத்தகைய செயல்கள் எதனையும் செய்ய மாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதையும், விநாசம் இடம்பெற வேண்டும் என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். அவர்கள் இன்னமும் குண்டுகளைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கோபத்தில் அவர்கள் குண்டுகளினால் தாக்குவார்கள். அவை மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள். ஜரோப்பாவைச் சேர்ந்த யாதவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளார்கள். நாங்கள் சமயங்கள் அனைத்தையும் சேர்ந்தவர்களை ஜரோப்பியர் என்றே அழைப்போம். ஒருபுறம் பாரதம் உள்ளது, பின்னர் ஏனைய அனைவரையும் அவர்கள் கலந்து விட்டார்கள். அவர்கள் தத்தமது சொந்த நாட்டைப் பெருமளவு நேசிக்கின்றார்கள். எவ்வாறாயினும், நியதி அவ்வாறாயின், அவர்களால் என்ன செய்ய முடியும்? பாபா உங்கள் அனைவருக்கும் முழுச் சக்தியையும் கொடுக்கின்றார். நீங்கள் யோக சக்தியினால் இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். பாபா உங்களுக்கு எச்சிரமத்தையும் கொடுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து, சரீர உணர்வைத் துறந்திடுங்கள். சிலர் கூறுகின்றார்கள்: நான் இராமரை நினைவுசெய்கின்றேன் அல்லது ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுசெய்கின்றேன். அந்நேரத்தில் அவர்கள் தம்மை ஆத்மாக்கள் என்று கருதுவதில்லை. அவர்கள் தம்மை ஆத்மாக்கள் என்று கருதுவார்களாயின், அவர்கள் ஏன் ஆத்மாக்களின் தந்தையை நினைவுசெய்வதில்லை? தந்தை கூறுகின்றார்: பரமாத்மாவான பரமதந்தையான என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் ஏன் மனிதர்களை நினைவுசெய்கின்றீர்கள்? நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்களாக வேண்டும். நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவுசெய்கின்றேன். தந்தை உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார்: என்னை நினைவுசெய்வதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், ஆஸ்தியும் உங்கள் புத்திக்குள் பிரவேசிக்கும்: தந்தையும் சொத்தும், அதாவது, முக்தியும் ஜீவன்முக்தியுமாகும். மக்கள் இதற்காகவே தடுமாறித் திரிகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் யாகம் செய்தல், தபஸ்யா செய்தல், மந்திரம் ஓதுதல் போன்றவற்றைச் செய்கின்றார்கள். அவர்கள் போப்பாண்டவரிடம் ஆசீர்வாதம் வாங்கவும் செல்கின்றார்கள். இங்கே, தந்தை உங்களைச் சரீர உணர்வைத் துறந்து, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்குமாறே கூறுகின்றார். இந்நாடகம் முடிவடைந்து விட்டது, எங்கள் 84 பிறவிகளும் முடிவடைந்து விட்டன, நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். பாபா அதனை மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தியுள்ளார்! வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். ஒரு நாடகம் முடிவடைய உள்ளபொழுது, இன்னமும் 15 நிமிடங்களே உள்ளன என்றும், பின்னர் நாடகக் காட்சி முடிவடையும் என்றும் அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். தங்களது ஆடைகளைக் களைந்து, தாங்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள் என்பதை நடிகர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அனைவருமே இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இவ்விடயங்களைப் பற்றி நீங்கள் உங்களுடனேயே பேச வேண்டும். நீங்கள் சந்தோஷமும், துன்பமும் நிறைந்த உங்கள் பாகங்களை எவ்வளவு காலத்திற்கு நடித்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். உலகில் நடக்கின்ற ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள். அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். கலியுகம் இன்னமும் நாற்பதாயிரம் வருடங்களுக்குத் தொடர்ந்திருக்கும் என்று அம்மக்கள் நம்புகின்றார்கள். அது காரிருள் என்று அழைக்கப்படுகின்றது. அவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் இருப்பதில்லை. தந்தையின் அறிமுகம் கிடைத்திருத்தல் ஞானமாகும், அறிமுகம் அற்றிருத்தல் அறியாமையாகும். எனவே, அவர்கள் காரிருளில் உள்ளார்கள் என்பதே அதன் அர்த்தமாகும். இப்பொழுது நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப, பேரொளியில், வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். இரவு முடிவடையவுள்ளது, நாங்கள் வீடு திரும்ப உள்ளோம். இப்பொழுது இது பிரம்மாவின் இரவு ஆகும், நாளை அது பிரம்மாவின் பகலாக இருக்கும். மாற்றத்திற்குக் காலம் எடுக்கின்றது. நாங்கள் இப்பொழுது மரண உலகில் இருக்கின்றோம் என்பதையும், நாளை அமரத்துவ உலகில் இருப்போம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில், நாங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இவ்வாறாக 84 பிறவிச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது; அது என்றுமே சுழல்வதை நிறுத்துவதில்லை. பாபா கூறுகின்றார்: நீங்கள் எத்தனை தடவைகள் என்னைச் சந்தித்திருப்பீர்கள்? குழந்தைகளாகிய நீங்கள் என்னைப் பல தடவைகள் சந்தித்திருப்பீர்கள் என்று கூறுகின்றீர்கள். உங்கள் 84 பிறவிச் சக்கரம் முடிவடைவதுடன், ஏனைய அனைவருக்கும் கூட சக்கரம் முடிவடையும். இது ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. தூய்மையாக்குபவரும், ஞானக் கடலுமான பரமாத்மாவான பரமதந்தையே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் வினவலாம்: தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுபவர் யார்? அசரீரியானவரே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார், எனவே நீங்கள் ஏன் ‘இரகுவின் பிரபுவான அரசர் இராமரே’ என்று கூறுகின்றீர்கள்? அந்த அசரீரியானவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்குப் பெரும் சாதுரியம் தேவைப்படுகின்றது. நீங்கள் இந்த ஆழமான ஞானத்தைத் தொடர்ந்தும் பெறுவதால், நாளுக்கு நாள் தொடர்ந்தும் முன்னேறுவீர்கள். அல்பா என்ற விடயத்தையே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அல்பாவை மறப்பதால், அநாதைகள் ஆகுவதுடன், தொடர்ந்தும் சந்தோஷமற்றவர்கள் ஆகுகிறீர்கள். ஒரேயொருவரிடமிருந்து, ஒரேயொருவரைப் பற்றி அறிந்து கொள்வதனால், நீங்கள் 21 பிறவிகளுக்குச் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். இது ஞானமாகும், கடவுள் சர்வவியாபகர் என்று அவர்கள் கூறுவது அறியாமையாகும். ஓ, ஆனால் அவரே தந்தையாவார். தந்தை கூறுகின்றார்: உங்களுக்குள் இருக்கும் தீய ஆவிகளே சர்வவியாபியாகும். ஐந்து விகாரங்கள் என்ற வடிவிலுள்ள இராவணனே சர்வவியாபி ஆவான். இவ்விடயங்களை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் கடவுளின் மடியில் இருப்பதையிட்டுப் பெரும் போதை கொண்டிருக்க வேண்டும். அதன்பின்னர், எதிர்காலத்தில், நீங்கள் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள். அங்கே சதா சந்தோஷம் நிலவுகின்றது. சிவபாபா எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்கள் அவரை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்கும், பிறருக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள். இவை புரிந்துகொள்வதற்கு மிகவும் நல்ல விடயங்கள். சிவபாபா அசரீரியானவர், ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்கள். நாங்கள் அங்கே சரீரமற்றவர்களாக, நிரவாணாவாக இருந்தோம். பாபா எப்பொழுதும் சரீரமற்றவராகவே உள்ளார். பாபா சரீரம் என்ற ஆடையை என்றுமே அணிவதுமில்லை, மறு பிறப்பெடுப்பதும் இல்லை. பாபா ஒருமுறை மாத்திரமே மறு அவதாரம் எடுக்கின்றார். அவர் முதலில் பிரம்மாவைப் படைக்கின்றார். ஆகவே அவர் இவரைத் தனக்குச் சொந்தமாக்கி, இவருக்கு வேறொரு பெயரையும் கொடுக்கின்றார். பிரம்மா இல்லாதிருந்தால், பிராமணர்கள் எங்கிருந்து வருவார்கள்? எனவே, இவரே முழு 84 பிறவிகளையும் எடுத்துள்ள, அதே நபர் ஆவார். இவரே அழகானவராக இருந்து, பின்னர் அவலட்சணமானவர் ஆகுகின்றார்: அவர் சுந்தரிலிருந்து (அழகானவர்) சியாமாகவும் (அவலட்சணமானவர்), பின்னர் சியாமிலிருந்து சுந்தராகவும் ஆகுகின்றார். பாரதத்தையும் நாங்கள் ‘சியாம்-சுந்தர்’ என அழைக்கலாம். பாரதமே சியாம் என்று அழைக்கப்;படுகின்றது, பாரதம் சத்திய யுகத்தைச் சேர்ந்த சுந்தர் (அழகானது) என்றும் அழைக்கப்படுகின்றது. பாரதமே காமச் சிதையில் அமர்ந்து, அவலட்சணம் ஆகுகின்றது. பாரதமே இந்த ஞானச் சிதையில் அமர்ந்து, அழகானது ஆகுகின்றது. பாபா பாரதத்தையிட்டுப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. பாரத மக்கள்pல் சிலர் ஏனைய மதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஜரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் புலப்படக்கூடிய வித்தியாசம் இல்லை. அவர்கள் (இந்தியர்கள்) வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கே திருமணம் செய்யும்பொழுது, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு அந்த முகச்சாயல்களே உள்ளன. சிலர் ஆபிரிக்காவிற்குச் சென்றும் திருமணம் செய்கின்றார்கள். பாபா சக்கரத்தைப் புரிந்துகொள்வதற்கு, உங்களுக்கு இப்பொழுது பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொடுக்கின்றார். விநாச காலத்தில் அன்பற்ற புத்தியைக் கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. யாதவர்களுக்கும், கௌரவர்களுக்கும் அன்பென்பதே இல்லை. அன்பு கொண்டிருந்தவர்கள் வெற்றியாளர்களாக ஆகினார்கள். அன்பற்ற புத்தியை உடையவர் ஓர் எதிரி என அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில், அனைவருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் ஆவார்கள். அவர்கள் தந்தையைச் சர்வவியாபகரெனக் கூறி, இவ்வாறாக அவரை அவதூறு செய்கின்றார்கள் அல்லது அவர் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர் என்றும், அவருக்குப் பெயரோ வடிவமோ இல்லை என்றும் கூறுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் ‘ஓ தந்தையான கடவுளே!’ என்று கூறுகின்றார்கள். அவர்கள் ஓர் ஆத்மாவினது அல்லது பரமாத்மாவினது காட்சிகளையும் காண்கின்றார்கள். ஆத்மாக்களுக்கும், பரமாத்மாவிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை, ஆனால்; சக்தியில் குறைவாகவும் கூடுதலாகவும் வரிசைக்கிரமமாக உள்ளது. மனிதர்கள் மனிதர்களாக இருந்தபொழுதிலும், அவர்களுக்கான அந்தஸ்;தில் தராதரங்கள் உள்ளன. அவர்களின் புத்தியிலே ஒரு வேறுபாடு உள்ளது. ஞானக் கடல் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார், இதனாலேயே நீங்கள் அவரை நினைவுசெய்கின்றீர்கள். உங்களது அந்த ஸ்திதி இறுதியில் உருவாக்கப்படும். அமிர்த வேளையில் நீங்கள் தந்தையை நினைவுசெய்து, சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் படுத்திருக்கலாம், ஆனால் நீங்கள் தூங்கி விடக்கூடாது. நீங்கள் சுய திடசங்கற்பத்துடன் அமர்ந்திருக்க வேண்டும்; இதற்கு முயற்சி தேவை. அமிர்த வேளைக்காக மூலிகை வைத்தியர்கள் மருந்து கொடுக்கின்றார்கள். இதுவும் ஒரு மருந்தாகும். படைப்பவரான தந்தை, பிரம்மாவின் மூலம் பிராமணர்களை உருவாக்கி, அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். அனைவருக்கும் இதனை விளங்கப்படுத்துங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து, இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கடவுளின் மடிக்கு வந்துள்ளீர்கள், பின்னர் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள் என்ற ஆன்மீகப் போதையைப் பேணுங்கள். உங்களுக்கும், பிறருக்கும் நன்மையை ஏற்படுத்துங்கள்.

2. அமிர்த வேளையில் விழித்தெழுந்து, ஞானக் கடலின் ஞானத்தைக் கடையுங்கள். ஒரேயொருவரின் கலப்படமற்ற நினைவில் நிலைத்திருங்கள். சரீர உணர்வைத் துறந்து, நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அமிர்த வேளையிலிருந்து இரவுநேரம் வரை நினைவுடன் ஒவ்வொரு செயலையும் ஒழுங்காகச் செய்வதனால், ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் அமிர்த வேளையிலிருந்து இரவு நேரம் வரை, என்ன செயல்களைச் செய்தாலும், அவற்றை நினைவுடன் ஒழுங்காகச் செய்யுங்கள், அப்பொழுது ஒவ்வொரு செயலும் வெற்றிகரமானதாக இருக்கும். உடனடிப் பலன் வடிவில் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதே, அனைத்திலும் பெரிய வெற்றி ஆகும். நீங்கள் சதா தொடர்ந்தும் சந்தோஷத்தினதும், களிப்பினதும் அலைகளில் முன்னேறிச் செல்வீர்கள். ஆகவே, இந்தப் பலனை நீங்கள் உடனடியாகப் பெறுவதுடன், எதிர்காலத்திலும் பலனைப் பெறுவீர்கள். இந்தப் பிறவியில் நீங்கள் பெறுகின்ற உடனடிப் பலன் உங்களுடைய எதிர்காலத்துப் பல பிறவிகளில் பெறுகின்ற பலனை விடவும் மேலும் அதிக மேன்மையானது. நீங்கள் இப்பொழுது எதனையாவது செய்கின்ற அதேநேரத்தில் அதன் பலனை உடனடியாகப் பெறுகின்றீர்கள்: இதுவே உடனடிப் பலன் என அழைக்கப்படுகின்றது.

சுலோகம்:
ஒவ்வொரு செயலையும் உங்களைக் கருவிகளாகக் கருதியவாறே செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் பற்றற்றவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பதுடன், “நான்” எனும் உணர்வு எதனையும் கொண்டிருக்கவும் மாட்டீர்கள்.