15.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்தச் சங்கமயுகமே எழுச்சிக்கான யுகமாகும். அனைவருமே இந்த யுகத்தில் நன்மை அடைகிறார்கள். இதனாலேயே, 'உங்கள் எழுச்சிக்கான ஸ்திதியில் அனைவருக்குமே நன்மை உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

கேள்வி:
பாபா ஏன் பிராமணக் குழந்தைகள் அனைவரையும் பெரிதும் பாராட்டுகிறார்?

பதில்:
பாபா கூறுகிறார்: எனது குழந்தைகளாகிய நீங்கள் மனிதரிலிருந்து தேவர்களாகுவதால் பாராட்டப்படுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் இராவணனின் சங்கிலிகளிலிருந்து விடுதலை அடைகிறீர்கள். நீங்கள் திறமைச்சித்தி எய்தி, சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகிறீர்கள். நான் அதனைச் செய்வதில்லை. இதனாலேயே பாபா உங்களைப் பெரிதும் பாராட்டுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் பட்டங்கள் ஆவீர்கள். உங்கள் அனைவரினதும் நூல்கள் எனது கரங்களிலுள்ளன. நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகிறேன்.

பாடல்:
இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும்; வந்து விட்டது........

ஓம் சாந்தி.
இந்த அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறிக் கொண்டிருப்பவர் யார்? இதை நீங்கள் அமரத்துவக் கதை எனக் கூறினாலோ அல்லது சத்திய நாராயணன் ஆகுகின்ற கதை எனக் கூறினாலோ அல்லது மூன்றாவது கண்ணின் கதை எனக் கூறினாலோ, மூன்றுமே முக்கியமானவை. நீங்கள் யார் முன்னிலையில் இப்பொழுது அமர்ந்திருக்கிறீர்கள்?, உங்களுக்குக் கதையைக் கூறிக் கொண்டிருப்பவர் யார்? இவரும் பல ஆன்மீக ஒன்றுகூடல்களுக்குச் சென்றுள்ளார். அங்கு, நீங்கள் மனிதர்களை மாத்திரமே காண முடியும். இன்ன சந்நியாசி, ஒரு சமயக் கதையைக் கூறுகிறார், சிவானந்தா ஒரு கதையைக் கூறுகிறார் என அவர்கள் கூறுகிறார்கள். பாரதத்தில் பல ஆன்மீக ஒன்றுகூடல்கள் உள்ளன. ஒவ்வொரு வீதியிலும் ஆன்மீக ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்றன. பெண்கள் கூட சர்வசாதாரணமாக ஒரு சமயநூலைக் கையில் வைத்துக் கொண்டு ஆன்மீக ஒன்றுகூடல்களை நடாத்துகின்றார்கள். ஆகவே அங்கு நீங்கள் மனிதர்களையே காண்கிறீர்கள். ஆனால் இங்கு இதுவோ ஓர் அற்புதமான விடயம். உங்கள் புத்தியில் உள்ளவர் யார்? கடவுளாகிய பரமாத்மாவே ஆவார். பாபா உங்கள் முன்னிலையில் இப்பொழுது வந்திருப்பதாகவும், அசரீரியான பாபா உங்களுக்குக் கற்பிக்கிறார் எனவும் நீங்கள் கூறுகிறீர்கள். மனிதர்கள் கூறுகிறார்கள்: ஆனால் கடவுள் பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டவர்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: எதுவுமே பெயருக்கும், உருவத்திற்கும் அப்பாற்பட்டதல்ல. இங்கு உங்களுக்குக் கற்பிப்பவர் ஒரு பௌதீகச் சரீரதாரி அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உலகில் வேறெங்கு நீங்கள் சென்றாலும் சரீரதாரிகளே உங்களுக்குக் கற்பிக்கின்றனர். இங்கு தந்தையாகிய, அசரீரியான கடவுள் எனப்படுகின்ற, பரமாத்மாவே இங்கமர்ந்திருந்து, ஒரு சரீரதாரியின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கிறார். இது முற்றிலும் புதியது. 'இன்னார் ஒரு பண்டிதர் அல்லது குரு" என்றே அவர்கள் கூறுவதைப் பிறவிபிறவியாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்குப் பல பெயர்கள் உண்டு. பாரதம் மிகப் பெரியது. உங்களுக்குக் கற்பிப்பவரோ அல்லது விளங்கப்படுத்துபவரோ எவராயினும், அவர்களும் மனிதர்களே. சீடர்களும் மனிதர்களே. பலவிதமான மனிதர்கள் உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் சரீரத்தின் பெயரைக் கூறி 'இவர் இதனைக் கூறுகிறார்" என்பர். பக்தி மார்க்கத்தில் அசரீரியானவரைக் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! அவரே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். முழு உலகமும் ஒவ்வொரு கல்பத்திலும் தூய்மையற்றது ஆகுகிறது என்பதையும்;, அசரீரியான தந்தையே அதனை மீண்டும் தூய்மையாக்குகிறார் என்பதையும் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இங்கமர்ந்திருக்கும் உங்களிற் சிலர் பலவீனமானவர்களாகவும், இன்னும் சிலரோ உறுதியானவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்குச் சரீர உணர்வு உடையவர்களாக இருப்பதால், இப்பொழுது இப்பிறவியில், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக வேண்டும். உங்கள் சரீரத்தில் இருக்கின்ற, ஆத்மாக்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் பரமாத்மா இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்கின்றார். ஆத்மாவே தனது அங்கங்களினூடாக நான் இன்னார் எனக் கூறுகிறார். எவ்வாறாயினும், எவரும் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை. பாரதத்தில், சூரிய வம்சத்திற்கும் சந்திர வம்சத்திற்கும் உரியவர்களாக இருந்தவர்களே, இந்த நேரத்தில் வந்து பிராமணர்களாகி, பின்னர் தேவர்கள் ஆகுவார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். மனிதர்களுக்குச் சரீர உணர்வு எனும் பழக்கம் உள்ளது; அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பதை மறந்து விடுகிறார்கள். இதனாலேயே தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள்! ஆத்மாவே வெவ்வேறு ஆடைகளை ஏற்றுத் தனது பாகத்தை நடிக்கிறார். இவையே அவரது அங்கங்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார்: மன்மனாபவ ஆகுங்கள்! கீதையை மட்டும் கற்பதால், எவராலுமே இராச்சிய பாக்கியத்தைப் பெற முடியாது. இந்நேரத்தில் நீங்கள் திரிகாலதரிசி ஆகுகிறீர்கள். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர். சூரிய வம்சத்துத் தேவர்களுக்கு, இந்த ஞானம் இல்லை. இந்த ஞானம் மறைந்து விடும். இந்த ஞானம் சற்கதியை அடைவதற்கானது. சத்திய யுகத்தில் எவரும் சீரழிவில் இருப்பதில்லை. அது சத்தியயுகமும், இது இப்பொழுது கலியுகமும் ஆகும். பாரதத்தில் முதலில் 8 பிறவிகள் சூரிய வம்சத்திலும், பின்னர் சந்திர வம்சத்தில் 12 பிறவிகளும் உள்ளன. இப்பொழுது உங்களுடைய இந்த ஒரு பிறவியே அனைத்திலும் அதி சிறந்தது. நீங்களே பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள். இதுவே அதிமேன்மையான பிராமண தர்மம். தேவ தர்மத்தை அதிமேன்மையான தர்மம் என அழைக்க முடியாது. பிராமண தர்மமே அனைத்திலும் அதிமேன்மையானது. தேவர்கள் தங்கள் வெகுமதியையே அனுபவிக்கிறார்கள். இந்நாட்களில் பல சமூக சேவையாளர்கள் உள்ளனர். ஆன்மீகச் சேவையே உங்களது பணியாகும். அவர்களுடையது பௌதீகச் சேவை ஆகும். இந்த ஆன்மீகச் சேவையை ஒருமுறை மாத்திரமே செய்ய முடியும். முன்னர், சமூக சேவையாளர் போன்றவர்கள் இருக்கவில்லை. அரசரும், அரசியும் ஆட்சிபுரிந்தார்கள். சத்திய யுகத்தில் தேவர்களே இருந்தனர். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் துவாபர யுகத்தில் பாவ மார்க்கத்திற்குள் சென்றனர், பின்னர் மக்கள் அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டினார்கள். அனைத்துக்கும் முதலில் அவர்கள் ஒரு சிவாலயத்தையே கட்டினார்கள். அவரே அனைவருக்கும் சற்கதி அளிப்பவர். ஆகையினால் அவர் நிச்சயமாகப் பூஜிக்கப்பட வேண்டியவர். சிவபாபா ஆத்மாக்களை விகாரமற்றவர்கள் ஆக்கினார். பின்னர் தேவர்களின் வழிபாடு உள்ளது. நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: தொடர்ந்தும் சக்கரத்தை நினைவுசெய்யுங்கள். நீங்கள் ஏணியில் இறங்கி வந்து, இப்பொழுது நிலத்தில் வீழ்ந்;து விட்டீர்கள். இதுவே உங்கள் எழுச்சிக்கான ஸ்திதி. கூறப்பட்டுள்ளது: உங்கள் எழுச்சிக்கான ஸ்திதியால் அனைவருக்கும் நன்மை உள்ளது. நான் இப்பொழுது உலகிலுள்ள மனிதர்கள் அனைவருக்கும் எழுச்சிக்கான ஸ்திதியை உருவாக்குகிறேன். தூய்மையாக்குபவர் வந்து, அனைவரையும் தூய்மையாக்குகிறார். உங்களது எழுச்சிக்கான ஸ்திதியின் பின்னர், சத்திய யுகம் இருந்தபொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தனர். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் பாரதத்தில் மட்டுமே பிறப்பெடுக்கிறேன். சிவபாபா வந்தார் என நினைவுகூரப்பட்டுள்ளது. அவர் இப்பொழுது மீண்டும் ஒருமுறை வந்துள்ளார். குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, சுய இராச்சியத்திற்கான அழிவற்ற ஞான யாகமே இது என அழைக்கப்படுகிறது. சுய இராச்சியத்தைப் பெறுவதற்காகவே யாகம் உருவாக்கப்பட்டது. அப்பொழுதும் தடைகள் இருந்தன. இப்பொழுதும் தடைகள் இருக்கின்றன. தாய்மார்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் துகில் உரியப்படுகிறோம்! அவர்கள் எங்களை விட்டுவிடுவதில்லை! பாபா, எங்களைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் திரௌபதி எவ்விதம் காப்பாற்றப்பட்டாள் எனக் காட்டியுள்ளார்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கிறீர்கள். நீங்கள், நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து உங்களைத் தூய்மையாக்குகிறீர்கள். பின்னர் விகாரங்களில் ஈடுபடுவதனால் அனைத்துமே முடிவடைந்து, நீங்கள் கீழே வீழ்கிறீர்கள். இதனாலேயே தந்தை கூறுகிறார்: நிச்சயமாக நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சென்ற கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள் தூய்மைக்கான சத்தியத்தைச் செய்வார்கள். பின்னர் சிலரால் தூய்மையாக இருக்க முடிகிறது, ஆனால் சிலர் தூய்மையாக இருப்பதில்லை. நினைவே பிரதான விடயம். நீங்கள் நினைவில் நிலைத்திருந்து, தூய்மையாகி, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றினால், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். விஷ்ணுவின் இணைந்த ரூபமே இராச்சியத்தை ஆட்சிசெய்கிறது. எவ்வாறாயினும், விஷ்ணுவிற்குக் கொடுக்கப்பட்டுள்ள சங்கு, சக்கரம் போன்ற ஆபரணங்கள் தேவர்களுக்கு உரியதல்ல் இலக்ஷ்மியும் நாராயணனும் அவற்றைக் கொண்டிருப்பதில்லை. விஷ்ணு சூட்சும உலகில் இருக்கிறார். அவருக்குச் சக்கரத்தின் ஞானம் தேவையில்லை. அங்கு அசைவு மட்டுமே உள்ளது. நீங்கள் அமைதி தாம வாசிகள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அது அசரீரி உலகமாகும். ஓர் ஆத்மா என்றால் என்ன என்பதை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆத்மாவைப் பற்றி அவர்கள் கூறும்பொழுது, நெற்றியின் மத்தியில் ஒரு பிரகாசமான நட்சத்திரம் வசிக்கின்றது எனக் கூறுகிறார்கள். இக்கண்களினால் ஆத்மாவைக் காண முடியாது. எவ்வாறு ஓர் ஆத்மா சரீரத்தை நீக்குகிறது என்பதைப் பார்ப்பதற்குச் சரீரத்தை ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் பூட்டி வைத்து முயற்சி செய்தாலும், எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. எவ்வாறாயினும், ஆத்மாக்கள் நட்சத்திரம் போன்றவை என்றும், தெய்வீகப் பார்வை இல்லாமல் காணப்பட முடியாதவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பக்தி மார்க்கத்தில் பலருக்குக் காட்சிகள் கிடைக்கின்றன. அர்ஜுனனுக்கு அநாதியான ஒளியின் காட்சி கிடைத்தது என எழுதப்பட்டுள்ளது. அதனைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என அர்ஜுனன் அழுதான். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அதைப் போல் பிரகாசமான எதுவும் இல்லை. ஓர் ஆத்மா சரீரத்தில் பிரவேசிக்கும்பொழுது, அந்த உணர்வு உங்களுக்கு இருப்பதில்லை. பாபா எவ்வாறு சரீரத்தில் பிரவேசித்துப் பேசுகிறார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஆத்மாவே, இங்கு வந்து பேசுகிறார். இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. இதில் எவரதும் சக்தி உள்ளது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மா தனது சரீரத்தை விட்டு வேறெங்கும் செல்வதில்லை; அது காட்சிக்கான விடயமே. அது ஓர் அற்புதமான விடயம். தந்தை கூறுகிறார்: நான் சாதாரணச் சரீரம் ஒன்றிலேயே பிரவேசிக்கிறேன். அவர்கள் ஆத்மாவை அழைக்கிறார்கள். முன்னர், அவர்கள் சரீரத்தை விட்டு நீங்கிய ஓர் ஆத்மாவை வரவழைத்து, பின்னர் அவரிடம் கேள்விகளை வினவுவார்கள். இப்பொழுது, அனைவரும் தமோபிரதான் ஆகிவிட்டனர். தந்தை, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு வருகிறார். அவர்கள் 84 பிறவிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆகையினால் முதலில் வந்தவர்கள் நிச்சயமாக 84 பிறவிகள் எடுத்திருக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவர்கள் நூறாயிரக் கணக்கான வருடங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினேன். நீங்கள் அங்கு சென்று ஆட்சிசெய்தீர்கள். பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்கத்திற்கு அனுப்பப்பட்டீர்கள். உங்களுக்குச் சங்கம யுகத்தில் இராஜயோகம் கற்பிக்கப்பட்டது. தந்தை கூறுகிறார்: நான் கல்பத்தின், சங்கம யுகத்தில் வருகிறேன். அவர்கள் பின்னர் கீதையில் ஒவ்வொரு யுகத்திலும் அவர் வருகின்றார் என எழுதியுள்ளனர். எவ்வாறு ஏணியில் கீழிறங்கி, பின்னர் எவ்வாறு மேலேறுகிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எழுச்சிக்கான ஸ்திதியும், பின்னர் வீழ்ச்சிக்கான ஸ்திதியும் உள்ளன. இது இப்பொழுது சங்கம யுகம். அனைவருக்குமே இது எழுச்சிக்கான ஸ்திதியைக் கொண்ட யுகமாகும். நீங்கள் இப்பொழுது ஏறி, மேலே செல்கிறீர்கள். பின்னர் நீங்கள் சுவர்க்கத்தில் உங்கள் பாகங்களை நடிப்பதற்குக் கீழிறங்குவீர்கள். சத்திய யுகத்தில் வேறெந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அது விகாரமற்ற உலகம் எனக் கூறப்பட்டது. பின்னர் தேவர்கள் பாவ மார்க்கத்திற்குச் சென்றதுடன், அனைவருமே விகாரமுள்ளவர்களாகத் தொடங்கினார்கள். அரசர், அரசி எவ்வழியோ, அவ்வழியே பிரஜைகளும் சென்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஓ பாரத மக்களே, நீங்கள் விகாரமற்ற உலகில் இருந்தீர்கள், இப்பொழுது அது விகார உலகமாகும். அங்கு இப்பொழுது எண்ணற்ற சமயங்கள் உள்ளன. ஆனால் தேவ தர்மம் இல்லை. தேவ தர்மம் இல்லாதபொழுதே, அது நிச்சயமாக மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படும். தந்தை கூறுகிறார்: நான் வந்தே, ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை பிரம்மா மூலம் ஸ்தாபிக்கின்றேன். அவர் இதனை இங்கு செய்வார், இல்லையா? அவர் இதனைச் சூட்சும உலகிற் செய்ய மாட்டார். பிரம்மா மூலமே, ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் படைக்கப்;பட்டது என எழுதப்பட்டுள்ளது. நீங்கள் தூய்மையானவர்கள் என இந்நேரத்தில் அழைக்கப்படுவதில்லை. நீங்கள் தூய்மையாகுகிறீர்கள்; அதற்குக் காலம் எடுக்கின்றது. எந்தச் சமயநூலிலும், எவ்வாறு நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என எழுதப்படவில்லை. உண்மையிலேயே புகழ் அனைத்தும் தந்தை ஒருவருக்கே உரியது. அந்தத் தந்தையை மறந்ததனாலேயே, நீங்கள் அநாதைகளாகித் தொடர்ந்தும் சண்டை பிடிக்கிறீர்கள். மக்கள் வினவுகிறார்கள்: எவ்வாறு அனைவரும் ஒற்றுமையாகி, ஒன்றாகுவார்கள்? அவர்கள் அனைவரும் சகோதரர்கள். பாபா அனுபவசாலி. இவர் அனைத்து வகையான பக்தியையும் செய்துள்ளார்; இவர் அதிக எண்ணிக்கையான குருமாரை ஏற்றிருந்தார். தந்தை கூறுகிறார்: அவர்கள் அனைவரையும் துறவுங்கள்! நீங்கள் என்னைக் கண்டடைந்து விட்டீர்கள். அனைவருக்கும் சற்கதி அளிப்பவரே, சத் ஸ்ரீ அகால் (சத்தியமானவரும்;, அதிமேன்மையானவரும், அமரத்துவமானவரும்) என நீங்கள் அவரை அழைக்கிறீர்கள். மக்கள் இவற்றைப் பெருமளவு வாசிக்கிறார்கள், ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: அனைவரும் இப்பொழுது தூய்மையற்றவர்களே. பின்னர் தூய உலகம் உருவாக்கப்படும். பாரதம் மட்டுமே அழிவற்றது. பாரதம் என்றுமே அழிவதில்லை என்றோ அல்லது முழுமையான பிரளயம் (முழு விநாசம்) ஒருபொழுதுமே ஏற்படப் போவதில்லை என்பதோ எவருக்கும் தெரியாது. கிருஷ்ணர் கடலில் அரசமிலையில் மிதந்து வந்தாரென அவர்கள் காட்டுகிறார்கள். ஒரு குழந்தையால் அரசமிலையில் மிதந்து வரமுடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் கருப்பை மூலம் மிகச் சௌகரியமாகப் பிறப்பெடுப்பீர்கள். அங்கு கருப்பையானது ஒரு மாளிகை எனக் கூறப்படுகிறது. ஆனால் இங்கோ கருப்பை ஒரு சிறை எனப்படுகிறது. சத்திய யுகத்தில் கருப்பை ஒரு மாளிகையைப் போன்றது, ஆத்மா தான் ஓர் சரீரத்தை நீக்கி, வேறொரு சரீரத்திற்குச் செல்கின்ற காட்சியை முற்கூட்டியே காண்பார். அங்கு அவர்கள் ஆத்ம உணர்வில் இருக்கின்றனர். மனிதர்களுக்குப் படைப்பவரையோ, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ தெரியாது. தந்தையே ஞானக்கடல் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். நீங்கள் மாஸ்டர் கடல்கள். தாய்மார்களாகிய நீங்கள் நதிகளும், சகோதரர்கள் ஞான ஏரிகளும் ஆவார்கள். அவர்கள் ஞான நதிகள், நீங்கள் ஏரிகள். அங்கு இல்லறப் பாதை உள்ளது. உங்கள் ஆச்சிரமம் தூய இல்லறப் பாதைக்குரியதாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்ற இல்லறப் பாதையாக உள்ளது. தந்தை கூறுகிறார்: நீங்கள் ஆத்மாக்கள் என்பதை எப்பொழுதும் நினைவுசெய்யுங்கள். ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்யுங்கள். பாபா உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்: சரீரதாரி எவரையும் நினைவுசெய்யாதீர்கள்! நீங்கள் உங்களது கண்களால் காண்பவை யாவும் அழிக்கப்பட உள்ளன. இதனாலேயே தந்தை கூறுகிறார்: மன்மனாபவ, மத்தியாஜிபவ! இந்த மயானத்தைத் தொடர்ந்தும் மறந்து விடுங்கள். மாயையின் புயல்கள் பல வரும். நீங்கள் அவற்றையிட்டுப் பயப்படாதீர்கள். பல புயல்கள் வரும், ஆனால் உங்கள் பௌதீக அங்கங்;களால் பாவச் செயல்களைச் செய்யாதீர்கள். நீங்கள் தந்தையை மறக்கும்பொழுதே, புயல்கள் வருகின்றன. இந்த நினைவு யாத்திரை, ஒருமுறை மாத்திரமே இடம்பெறுகிறது. அந்த யாத்திரைகள் மரண பூமிக்குரியவை. இந்த யாத்திரை அமரத்துவமான பூமிக்கு இட்டுச் செல்கின்றது. தந்தை கூறுகிறார்: சரீரதாரி எவரையும் நினைவுசெய்யாதீர்கள். சிவஜெயந்தியை முன்னிட்டு, குழந்தைகள் அநேக தந்திகள் அனுப்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்கும் அதுவே பொருந்துகின்றது. தந்தை குழந்தைகளான உங்களையும் பாராட்டுகிறார். உண்மையில், நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதாலேயே பாராட்டப்படுகிறீர்கள். பின்னர் திறமைச்சித்தி எய்துபவர்கள், அதிகப் புள்ளிகள் பெற்று, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது இராவணனின் சங்கிலிகளிலிருந்து விடுபட்டுள்ளதால், தந்தை உங்களைப் பாராட்டுகிறார். ஆத்மாக்கள் அனைவரும் பட்டங்கள் போன்றவர்கள். அனைவரதும் நூல்களும் தந்தையின் கரங்களிலேயே உள்ளன. அனைவரையும் திரும்பவும் தன்னுடன் அவர் அழைத்துச் செல்வார். அவரே அனைவருக்கும் சற்கதியருள்;பவர், ஆனால் நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெற முயற்சி செய்கிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. திறமைச்சித்தி எய்துவதற்கு, சரீரதாரி எவரையும் அன்றி, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் கண்களால் நீங்கள் பார்க்கின்ற அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள்.

2. நீங்கள் அமரத்துவப் பூமிக்கு யாத்திரை செல்கின்றீர்கள். ஆகவே நீங்கள் மரண பூமியின் எதனையுமே நினைவுசெய்யக்கூடாது. உங்கள் பௌதீக அங்கங்கள் மூலம் எப் பாவச் செயல்களையும் செய்யாதிருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலக சேவகராக இருந்து, உங்கள் அதீந்திரிய சுகம் எனும் ஸ்திதி மூலம் பல ஆத்மாக்களை அழைப்பீர்களாக.

எந்தளவிற்கு அதிகமாக உங்கள் இறுதி ஸ்திதி தொடர்ந்தும் அண்மையில் வருகின்றதோ, கர்மாதீமாக இருப்பது அதிகமாக உள்ளதோ, அந்தளவிற்குச் சத்தத்திற்கு அப்பால் இருக்கின்ற ஸ்திதியில் இருப்பதை விரும்புவீர்கள். இந்த ஸ்திதியில் நீங்கள் சதா அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள். பின்னர் இந்த அதீந்திரிய சுகம் எனும் ஸ்திதியில், உங்களால் இலகுவாக ஏனைய பல ஆத்மாக்களையும் வரவழைக்க இயலும். இச் சக்தி வாய்ந்த ஸ்திதியே உலக உபகாரி எனும் ஸ்திதியாகும். இந்த ஸ்திதி மூலம் உங்களால் பாபாவின் செய்தியானது தொலைவில் இருக்கின்ற ஆத்மாக்களை அடையுமாறு செய்ய முடியும்.

சுலோகம்:
உங்கள் விழிப்புணர்வில் ஒவ்வொருவரினதும் சிறப்பியல்பை வைத்திருப்பதால், நம்பிக்கை மிக்கவராகுங்கள். அப்பொழுது ஒன்றுகூடல் ஒரே வழிகாட்டலில் ஒற்றுபடும்.