15.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அகநோக்குடையவராகி, ஞானக்கடலைக் கடையுங்கள், அப்பொழுது நீங்கள் சந்தோஷத்தையும் போதையையும் அனுபவம் செய்வதுடன், தந்தைக்குச் சமனாக இருக்கும் ஆசிரியர்கள் ஆகுவீர்கள்.

கேள்வி:
எதன் அடிப்படையில் உங்களுடைய உள்ளார்ந்த சந்தோஷம் நிலையானதாக இருக்க முடியும்?

பதில்:
நீங்கள் மற்றவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தி, அனைவரையும் சந்தோஷப்படுத்தும் போது, சதா சந்தோஷமாக இருப்பீர்கள். கருணை நிறைந்தவராகுங்கள், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். கருணைமிக்கவர் ஆகுபவர்களின் புத்தியில் ஓஹோ! ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையே எங்களுக்குக் கற்பித்து, எங்களைத் தூய்மையாக்குகிறார். நாங்கள் உலகச் சக்கரவர்த்திகள் ஆகுகிறோம் என்பது நிலைத்திருக்கும். அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய சந்தோஷத்தைத் தானம் செய்கின்றார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளிடம் வினவுகின்றார்: குழந்தைகளே, ஓம் சாந்தி? எனக் கூறியது யார்? (சிவபாபா.) ஆம், சிவபாபாவே இவ்வாறு கூறினார். ஏனெனில் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை அவரே எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் கூறுகிறார்: நான் இந்த இரதத்தில் ஒவ்வொரு கல்பமும் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கிறேன். எனவே, அவரே கற்பிக்கின்ற ஆசிரியர் ஆவார். ஆசிரியர் ஒருவர் வந்ததும், காலை வந்தனங்கள் எனக் கூறுகிறார். குழந்தைகளும் காலை வந்தனங்கள் எனப் பதிலளிக்கிறார்கள். பரமாத்மா, ஆத்மாக்களுக்கு காலை வந்தனங்கள் எனக் கூறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். காலை வந்தனங்கள் என்று லௌகீகத்தில் பலர் கூறுவதுண்டு. இவர் உங்களுக்கு வந்து கற்பிக்கும் எல்லையற்ற தந்தை ஆவார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு விருட்சத்தினதும் நாடகத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். சகல ஆத்மாக்களினதும் தந்தை வந்துவிட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். எல்லையற்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்ற நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய புத்தியில் நாள் முழுவதும் கொண்டிருக்க வேண்டும். அவர் எங்களுடைய தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். அவர் படைப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் ஆத்மாக்களைப் படைக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நானே விதையாவேன் என அவர் விளங்கப்படுத்துகிறார். மனித உலக விருட்சத்தின் ஞானத்தை நானே உங்களுக்குக் கூறுகிறேன். விதையானவரைத் தவிர வேறு எவரால் இந்த ஞானத்தை வழங்கமுடியும்? அவர் விருட்சத்தை உருவாக்கினார் என உங்களால் கூறமுடியாது. அவர் கூறுகிறார்: குழந்தைகளே, இந்த விருட்சம் அநாதியானது. இல்லாவிடின், நான் உங்களுக்கு எப்போது, எவ்வாறு அது உருவாக்கப்பட்டது என்ற திகதிகளைக் கூறியிருப்பேன். எவ்வாறாயினும், இந்தப் படைப்பு அநாதியானது. தந்தை ஞானக்கடல் என அழைக்கப்படுகிறார். ஜனிஜனன்ஹார் என்றால் விருட்சத்தின் இரகசியங்களை அதன் ஆரம்பம், மத்தியினூடாக இறுதிவரை அறிந்தவர் என்று அர்த்தமாகும். தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் ஞானக்கடல் ஆவார். அவர் தனக்குள் முழுமையான ஞானத்தைக் கொண்டிருக்கிறார். அவர் வந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார். எவ்வாறு அமைதி ஏற்படும்? என மனிதர்கள் அனைவரும் தொடர்ந்தும் வினவுகிறார்கள். அமைதிக்கடலே அமைதியை ஸ்தாபிக்கிறார் என நீங்கள் இப்போது கூறுகிறீர்கள். அவர் அமைதிக்கடலும் சந்தோஷக்கடலும் ஞானக்கடலும் ஆவார். எந்த ஞானம்? அவர் இந்த உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டுள்ளார். அவர்களோ சமய நூல்களையே ஞானம் எனக் கருதுகிறார்கள். இத்தகைய சமய நூல்களை எடுத்துரைக்கும் பலர் உள்ளனர். எல்லையற்ற தந்தை வந்து தனது அறிமுகத்தையும், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் உங்களுக்கு வழங்குகிறார். அவர் வரும்போதே அமைதி ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். அமைதி தாமத்தில் அமைதி நிலைத்திருக்கும். அமைதி தாமத்தில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள் என்பதை எவரும் அறியமாட்டார்கள். உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என மக்கள் தொடர்ந்தும் கேட்கிறார்கள். இங்கு நிச்சயமாக அமைதி நிலவியது. உங்களுக்கு இராம இராச்சியத்தின் அமைதி தேவைப்படுகிறது. எப்போது இராம இராச்சியம் இருந்தது என எவருக்கும் தெரியாது. எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளனர் என்பதையும் தானே அனைவருக்கும் தந்தை என்பதையும் தந்தை அறிவார். வேறு எவராலும் இவ்வாறு கூறமுடியாது. இந்நேரத்தில் ஆத்மாக்கள் அனைவரும் இங்கேயே உள்ளனர். முதலில், அவர்கள் அமைதி தாமத்தில் இருந்தார்கள். பின்னர், அவர்கள் சந்தோஷ தாமத்திலிருந்து, துன்ப தாமத்திற்குச் சென்றார்கள். இன்பமும் துன்பமும் நிறைந்த இந்த நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என எவரும் அறியமாட்டார்கள். இது வருவதும் போவதுமாக உள்ள நாடகம் என அவர்கள் கூறுகிறார்கள். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இப்போது உள்ளது. அவர் எங்களுக்கு ஞானத்தைப் பேசுகிறார். அவர் வந்து சுவர்க்க இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். அவரே எங்களுக்குக் கற்பிக்கிறார். குழந்தைகளே, நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என அவர் கூறுகிறார். வேறு எவரும் இவ்வாறு கூற முடியாது. சகல ஆத்மாக்களினதும் தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். இது அத்தகையதொரு பாரிய எல்லையற்ற நாடகமாகும். ஆனால் அவர்களோ, இது நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கும் எனக் கூறுகிறார்கள். இந்த நாடகத்தின் காலப்பகுதி 5000 ஆண்டுகள் என நீங்கள் கூறுகிறீர்கள். இரு வகையான அமைதி உள்ளது என்பதை நீங்கள் இப்போது அறிந்துள்ளீர்கள். ஒன்று அமைதி தாமத்திற்குரியது. மற்றையது, சந்தோஷ தாமத்திற்குரியது. சகல ஆத்மாக்களினதும் தந்தை இப்போது எமக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் உள்ளது. இது வேறு எந்த சமய நூல்களிலும் குறிப்பிடப்படுவதில்லை. அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களும் அல்லா, தந்தையாகிய கடவுள், பிரபு என்றெல்லாம் அழைக்கும் எல்லையற்ற தந்தை அவரே ஆவார். அவரின் கற்பித்தல்கள் நிச்சயமாக அதியுயர்ந்தவையாகவே இருக்க வேண்டும். நாள் முழுவதும் இது உங்களுடைய புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் புதிய விடயங்களை புதிய வழிமுறைகளில் கூறுகிறேன். பின்னர் நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் தேவர்களுக்குப் பெருமளவு மரியாதை செலுத்தப்படுகின்றது. உண்மையில், இந்த பிரம்மாவே மூத்த தாய் ஆவார். அவர் (சிவன்) தந்தை என்றே அழைக்கப்படுகிறார். இவர் தாயும் தந்தையும் என அழைக்கப்படுகிறார். தந்தை உங்களை இந்தத் தாயின் மூலமாகத் தத்தெடுத்து, குழந்தாய், குழந்தாய் எனத் தொடர்ந்தும் கூறுகிறார். தந்தை கூறுகிறார்: 5000 வருடங்களுக்கு ஒரு தடவை நான் வந்து இந்த ஞானத்தை உங்களுக்குக் கூறுகிறேன். இந்தக் கல்பம் உங்களுடைய புத்தியில் உள்ளது. நீங்கள் செவிமடுக்கும் ஒவ்வொரு வார்த்தையும் புதியது. இதுவே ஞானக்கடலாகிய தந்தையின் ஆன்மீக ஞானம் ஆகும். தந்தையாகிய ஆத்மா ஞானக்கடல் ஆவார். ஆத்மாக்கள் பாபா என்று அழைக்கின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் உங்களுடைய புத்தியில் மிக நன்றாகக் கிரகித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் அகநோக்குடையவராகி, இந்த ஞானக் கடலைக் கடையும்போது, சந்தோஷத்தையும் போதையையும் அனுபவம் செய்கிறீர்கள். சிவபாபாவே மிகமகத்துவமான ஆசிரியர் ஆவார். அவர் உங்களையும் ஆசிரியர்கள் ஆக்குகிறார். நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். எந்தக் குழந்தைகளால் மிக நன்றாகக் கற்பிக்க முடியும் என பாபா அறிவார். அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: உங்களை இவ்வாறு ஆக்கிய பாபாவைச் சந்திக்க எம்மை விரைவாக அழைத்துச் செல்லுங்கள். பாபா கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதிப்பிறவியிலே நான் இவரில் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கிறேன். ஒவ்வொரு கல்பமும் இந்த பாரதத்தில் நான் எத்தனை தடவைகள் வந்திருப்பேன்? எல்லையற்ற தந்தை எங்களுக்குக் கற்பிக்கும் இப்புதிய விடயங்களைச் செவிமடுக்கையில் நீங்கள் வியப்படைகிறீர்கள். அவர் பக்தி மார்க்கத்தில் பல பெயர்களைக் கொண்டிருக்கிறார்: அவர் பரமாத்மா, இராமா, பிரபு, அல்லா என்றும் அழைக்கப்படுகிறார். ஒரேயொரு ஆசிரியரே இருந்தாலும், அவர் பல பெயர்களால் நினைவுகூரப்படுவதைப் பாருங்கள். ஆசிரியர் ஒருவர் ஒரு பெயரையே கொண்டிருக்க வேண்டும். அவர் பல பெயர்களைக் கொண்டிருக்க முடியுமா? பல மொழிகள் உள்ளன. சிலர் கடவுள் என்றும், சிலர் குதா என்றும் கூறுகிறார்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்க வந்துள்ளேன் என்று அவருக்குத் தெரியும். நீங்கள் கற்ற பின்னர், தேவர்கள் ஆகும்போது விநாசம் இடம்பெறும். இவ் உலகம் பழையதாகி விட்டதால், இதனை யாரால் புதியதாக்க முடியும்? தந்தை கூறுகிறார்: அதனைப் புதியதாக்குவது எனது பாகமாகும். நானும் நாடகத்தின் பந்தனத்தில் கட்டுண்டுள்ளேன். பக்தி மார்க்கத்தில் அதிக விரிவாக்கம் உள்ளது என்பதை குழந்தைகளாகிய நீங்களும் அறிந்துள்ளீர்கள். இதுவும் ஒரு நாடகமேயாகும். பக்தி மார்க்கம் அரைக் கல்ப்பத்திற்கு நீடிக்கின்றது. தந்தை இப்பொழுது வந்துள்ளார். அவரே எமக்குக் கற்பிப்பவர் ஆவார். அவரே அமைதியை ஸ்தாபிப்பவரும் ஆவார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபோது, அமைதி நிலவியது. இங்கே அமைதியின்மை நிலவுகின்றது. ஒரேயொரு தந்தையும் பல ஆத்மாக்களும் உள்ளனர். இது மிகவும் அற்புதமான ஒரு நாடகமாகும். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையாகிய பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அதிக சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாங்களே கோப கோபியர் என்பதையும் பாபா கோப கோபியரின் தந்தை ஆவார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். தனி ஆத்மாக்கள் கோப கோபியர் என அழைக்கப்படுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரத்தில் இருக்கும்போதே கோப கோபியர் என அழைக்கப்படுகிறீர்கள். அதாவது நீங்கள் சகோதர சகோதரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். கோப கோபியர் சிவபாபாவின் குழந்தைகள் ஆவார்கள். கோப கோபியர் என்ற கூற்று மிகவும் இனிமையானதாகும். கோபியரினதும் அவரது பிரபுவினதும் புகழ் பாடப்பட்டுள்ளது. இப் புகழ் இந்த நேரத்திற்குரியதாகும். எவ்வாறாயினும், அவர் யார் என்பதை அறியாததால், அவர்கள் அனைவரையும் கலந்து குழப்பத்தை விளைவித்துள்ளார்கள். தந்தை இங்கு அமர்ந்திருந்து, உலக வரலாற்றையும் புவியியலையும் விளங்கப்படுத்துகின்றார். மக்கள் இந்தத் தேசங்களை மாத்திரமே அறிவார்கள். யார் சத்திய யுகத்தை ஆட்சி செய்தார்கள் என்றும் அது எவ்வளவு காலத்திற்கு நீடித்தது என்றும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையானது நூறாயிரம் ஆண்டுகளுக்கானது என்று கூறியிருப்பதால் அவர்களுக்கு இது தெரியாதுள்ளது. அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். தந்தை வந்து இப்பொழுது உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொடுக்கின்றார். இதை அறிந்திருப்பதன் மூலம், நீங்கள் மூக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் திரிநேற்றி (முக்கண்கள் உடையவர்கள்) ஆகுகின்றீர்கள். இது ஒரு கல்வியாகும். தந்தையே கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும், சக்கரத்தின் சங்கமத்தில் உங்களை அதி மேன்மையான மனிதர்கள் ஆக்குவதற்காக வருகின்றேன். நீங்கள் வரிசைக்கிரமமாக இவ்வாறு ஆகுகின்றீர்கள். ஒரு கல்வியின் மூலமே உங்களால் ஓர் அந்தஸ்தைப் பெறமுடியும். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். கடவுளுக்கு பெயரோ வடிவமோ இல்லை என்றும் அவர் கற்களிலும் கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவரைப் பற்றி பல்வேறு விடயங்கள் கூறப்படுகின்றன. அவர்கள் தேவியரை பல கரங்களுடன் சித்தரித்துள்ளார்கள். இராவணன் பத்துத் தலைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளான். குழந்தைகளே, ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்றும் அவரே எங்களைத் தூய்மையாக்குகின்றார் என்பதும் உங்கள் புத்தியில் புகவேண்டும். ஆகையால் உங்களுக்குள் எவ்வளவு சந்தோஷம் இருக்கவேண்டும். எவ்வாறாயினும், இந்தச் சந்தோஷமானது நீங்கள் கருணை நிறைந்தவராக இருந்து, பலருக்கும் நன்மை ஏற்படுத்தி, அவர்களைச் சந்தோஷப்படுத்தும்போதே வெளிப்படும். ஒஹோ! பாபா எங்களை உலகச் சக்கரவர்த்திகள் ஆக்குகின்றார். அரசர்கள், அரசிகள், பிரஜைகள் அனைவரும் உலக அதிபதிகள் ஆகுவார்கள். அங்கே ஆலோசகர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இப்பொழுது அரசர்கள் எவரும் இல்லை. எங்கும் ஆலோசகர்களே உள்ளார்கள். இப்பொழுது மக்கள் மக்களை ஆட்சி செய்யும் காலமாகும். எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கற்பிப்பவை உங்கள் புத்தியில் மீண்டும் மீண்டும் பிரவேசிக்க வேண்டும். நன்றாகக் கற்பவர்கள் முதலில் வந்து, உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு மிகவும் செல்வந்தர்கள் ஆகினார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்? பக்தி மார்க்கத்தில் மக்கள் செல்வந்தர்களாக இருந்தால், அவர்கள் மேன்மையான செயல்களைச் செய்துள்ளார்கள் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. மக்கள் கடவுளின் பெயரில் தானதர்மங்கள் செய்கின்றார்கள். அதற்குப் பிரதிபலனாக தாம் அதிகளவு பெறுவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தமது அடுத்த பிறவியில் செல்வந்தர்கள் ஆகுகின்றார்கள். எவ்வாறாயினும் அவர்கள் மறைமுகமாக எதனையாவது கொடுத்து தற்காலிகமாக எதனையாவது பெறுகிறார்கள். தந்தை இப்பொழுது உங்களிடம் நேரடியாகவே வந்துள்ளார். அனைவரும் அவரை எங்களை வந்து தூய்மையாக்குங்கள் என்று கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் வந்து எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்து எங்களை இலக்ஷ்மி நாராயணன் போல் ஆக்குங்கள் என்று கூறுவதில்லை. மனிதர்களின் புத்தி கிருஷ்ணரை நினைவு செய்கின்றது. தந்தையை அறியாததால், அவர்கள் மிகவும் சந்தோஷமிழந்து இருக்கின்றார்கள். தந்தை உங்களை இப்பொழுது தெய்வீக சமுதாயத்திற்குரியவர்கள் ஆக்குகிறார். முதலில் நீங்கள் அமைதி தாமத்திற்கும் பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்வீர்கள். தந்தை இப்பொழுது அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். அவர்கள் கேட்டும் கேட்காதிருக்கின்றார்கள். அவர்கள் கல்லுப் புத்தியுடையவர்களிலிருந்து தூய புத்தியுடையவர்களாக மாறுவதில்லை. நீங்கள் நாள் முழுவதும் பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஒரு மனைவி தனது கணவனுக்காக மரணிக்கவும் தயாராக உள்ள அளவிற்கு அவன்மீது அன்பு கொண்டிருக்கின்றாள். இங்கே, நீங்கள் அனைவரும் குழந்தைகள், எனினும்; நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் அத்தகைய எல்லையற்ற தந்தையை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். எனினும் நீங்கள் இன்னமும் மறந்துவிடுகின்றீhகள். ஓஹோ! உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்ற அத்தகைய தந்தையை நீங்கள் ஏன் மறந்துவிடுகின்றீர்கள்? மாயையின் புயல்கள் தொடர்ந்தும் வரும். ஆனால் நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்யவேண்டும். தந்தையை நினைவு செய்தால் நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுவீhகள். நீங்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளான தேவர்களாகுவீர்கள். எவ்வாறாயினும் சிலர் தண்டனையை அனுபவம் செய்த பின்னர் தேவர்கள் ஆகுவார்கள். ஆனால் அவர்களின் அந்தஸ்து குறைந்ததாக இருக்கும். இவ்விடயங்கள் அனைத்தும் புதியவை ஆகும். நீங்கள் தந்தையையும் ஆசிரியரையும் நினைவு செய்யும்போதே உங்கள் கவனம் இவ்விடயங்கள்மீது ஈர்க்கப்படும். நீங்கள் ஆசிரியரை மறந்துவிடுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: இக்கல்வி, நான் இங்கிருக்கும் வரைக்கும், விநாச காலம் வரைக்கும், அனைத்தும் இந்த யாகத் தீயில் அர்ப்பணிக்கப்படும் வரைக்கும் தொடரும். அவர் அனைத்தையும் கற்பித்து விட்டதால், அவர் கற்பிக்க வேறென்ன இருக்கின்றது என நீங்கள் கூறுகிறீர்கள். பாபா கூறுகிறார்: புதுக் கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படும். இவற்றைச் செவிமடுக்கையில் நீங்கள் சந்தோஷம் அடைகின்றீர்கள். ஆகவே நன்றாகக் கற்று, அனைத்தையும் சுதாமா செய்ததைப் போன்று மாற்றம் செய்யுங்கள். இதுவும் மிகப் பெரிய வியாபாரமாகும். பாபா அவருடைய வியாபாரத்தில் அதிகளவு பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். அவர் தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம் செய்தார். அவருக்கு இலாபம் கிடைக்காத போதிலும், அவர் முதலில் தானம் செய்ய வேண்டும் என்றே விரும்பினார். அவரிடம் அவர்கள் கூறுவதுண்டு: நீங்கள் பரந்த மனப்பாங்குடன் தானம் செய்வதைப் பார்க்கும்போது அனைவரும் அதேபோன்று செய்வதற்கு தூண்டப்படுவதால், பலரும் நன்மை அடைவார்கள். அது பக்தி மார்க்கமாகும். இங்கே அனைத்தும் தந்தைக்கே கொடுக்கப்படுகின்றது. பாபா: அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்! தந்தை கூறுகிறார்: நான் முழு உலக இராச்சியத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். பாபா விநாசத்தின் காட்சியையும், நான்கு கரங்கள் கொண்ட வடிவத்தின் காட்சியையும் கண்டார். அந்நேரத்தில், நான் உலக அதிபதி ஆகவேண்டும் எனப் புரிந்துகொண்டேன். பாபா எனக்குள் பிரவேசித்து விநாசத்தின் காட்சிகளை காண்பித்துள்ளார். அவ்வளவுதான்! இவ்வுலகம் முடிவடையவுள்ளது. நான் ஏன் வியாபாரத்தைச் செய்ய வேண்டும்? இந்த கழுதை வேலையை துறவுங்கள்! நான் இராச்சியத்தைப் பெறப்போகின்றேன். இப்பழைய உலகம் அழியப் போகின்றது எனத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். கும்பகர்ண உறக்கத்திலிருந்து உங்களை விழித்தெழச் செய்வதற்கு அதிக முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நீங்கள் இன்னமும் விழித்தெழவில்லை. ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் அனைத்தையும் தந்தைக்குக் கொடுத்துவிட்டீர்களாயின், நிச்சயமாக நீங்கள் நினைவு செய்யவேண்டியவர் ஒரேயொரு தந்தையே ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் நீண்ட நேரத்திற்கு நினைவில் நிலைத்திருக்க முடியும். இந்த பாபாவுக்கு அதிகளவு பொறுப்புக்கள் உள்ளன. பந்தனத்தில் உள்ளவர்களிடமிருந்து அதிகளவு செய்திகள் வருகின்றன. ஏழைத் தாய்மார் அதிகளவில் தாக்கப்படுகின்றார்கள் என்பதால் பாபா அதிகளவு அக்கறை கொண்டுள்ளார். அவர்கள் தங்களுடைய கணவன்மாரால் அதிகளவு துன்புறுத்தப்படுகிறார்கள். இது நாடகத்தில் உள்ளதென அவர்கள் புரிந்துகொண்ட போதிலும், அவர்களால் என்ன செய்ய முடியும். அப்பாவிகள் முன்னைய சக்கரத்திலும் தாக்கப்பட்டார்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதியிலே நான் இவருடைய சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். எனவே நிச்சயமாக அழகாக இருந்த நாங்களே இப்பொழுது அவலட்சணமானவர்களாக ஆகிவிட்டோம். நான் முதல் இலக்கத்தைப் பெறுவேன். நான் சென்று கிருஷ்ணராகுவேன். இப்படத்தைப் பார்க்கும்போது நான் இவ்வாறு ஆகப்போகின்றேன் என நினைக்கின்றேன். எனவே தந்தை குழந்தைகளுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது இதனைப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது குழந்தைகளாகிய உங்களின் பணியாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நாங்களே கோபியரின் தந்தையின், கோப கோபியர் ஆவோம். இந்த சந்தோஷத்திலும் போதையிலும் நிலைத்திருங்கள். அகநோக்குடையவராகி, ஞானக்கடலைக் கடைந்து, தந்தையைப் போன்று ஓர் ஆசிரியர் ஆகுங்கள்.

2. சுதாமாவைப் போன்று ஆகி, உங்களிடம் இருக்கும் அனைத்தையும் இடமாற்றம் செய்வதுடன் மிக நன்றாகக் கற்றிடுங்கள். விநாசம் இடம்பெறுவதற்கு முன்பாகவே உங்களுடைய முழு ஆஸ்தியையும் தந்தையிடமிருந்து கோரிக்கொள்ளுங்கள். கும்பகர்ண உறக்கத்திலிருந்து அனைவரையும் விழித்தெழச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
திரிகாலதரிசி (முக்காலத்தையும் அறிந்தவர்) ஆகுவதன் மூலம் ஒவ்வொரு பணியிலும், தெய்வீக புத்தியின் ஆசீர்வாதத்தை பயன்படுத்தி வெற்றி நிறைந்தவர்கள் ஆகுவீர்களாக.

பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் தெய்வீகப்புத்தியின் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். தெய்வீகப்புத்தியினால் மாத்திரமே உங்களால் தந்தையையும் உங்களையும் முக்காலங்களையும் தெளிவாக அறிய முடிவதுடன் சகல சக்திகளையும் கிரகிக்க முடியும். ஓர் தெய்வீக புத்தியுள்ள ஓர் ஆத்மாவால் ஒவ்வொரு எண்ணத்தையும், செயலிலோ வார்த்தைகளிலோ இடுவதற்கு முன்பாக, அவருக்கு அதன் முக்காலமும் தெரியும். அவ் ஆத்மாவிற்கு கடந்த காலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தைப் போன்று தெளிவாகத் தெரியும், ஏனெனில், அத்தகைய தெய்வீக புத்தியைக் கொண்டவர்கள் முக்காலத்தையும் அறிபவர்களாக இருப்பதால், அவர்கள் எப்பொழுதும் வெற்றி நிறைந்தவர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
முழுமையான தூய்மையைக் கிரகிப்பவர்களால் மாத்திரமே பேரானந்தத்தை அனுபவம் செய்ய முடியும்.