15-03-2020 காலை முரளி ஓம் சாந்தி ’மாதேஸ்வரி’ ரிவைஸ் 11-12-1985


உண்மையான சேவாதாரியின் அடையாளம்

இன்று அன்புக் கடல் பாப்தாதா அன்புக் குழந்தைகள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையிடமும் மூன்று விசேஷங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் -- ஒவ்வொரு குழந்தையும் மூன்று விசேஷங்களிலும் எது வரை நிறைவாக ஆகியுள்ளனர்? அந்த மூன்று விசேஷங்களாவன -- சிநேகம், சகயோகம் அதாவது சகஜயோகம் மற்றும் சக்தி சொரூபம் அதாவது நடமாடும் போதும், இங்கங்கு போய் வரும் போதும் சைதன்ய லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ். ஒவ்வொரு சங்கல்பம், பேச்சு மற்றும் கர்மத்தின் மூலம் மூன்று சொரூபங்களும் வெளிப்படையாகத் தெரியுமளவு யாருக்கு வேண்டுமானாலும் அனுபவம் ஆக வேண்டும். எப்படி பாபா அன்புக்கடலாக இருக்கிறாரோ, அதே போல் மாஸ்டர் கடலுக்கு முன்பாக எந்த ஒரு ஞானி அல்லது அஞ்ஞானி ஆத்மா வந்தாலும் அனுபவம் செய்ய வேண்டும் -- மாஸ்டர் அன்புக்கடலின் அலைகள் அன்பின் அனுபவம் செய்வித்துக் கொண்டிருக்கின்றன. எப்படி லௌகிக் அல்லது இயற்கைக் கடலின் கரையில் யாராவது சென்றால் குளிர்ச்சியின், சாந்தியின் அனுபவத்தைத் தானாகவே அடைவாரோ, அது போன்று மாஸ்டர் அன்புக் கடலின் மூலமாக ஆன்மிக அன்பின் அனுபவம் ஏற்பட வேண்டும் - உண்மையான அன்பின் பிராப்திக்கான இடத்தில் வந்து சேர்ந்திருக்கிறேன். ஆன்மிக சிநேகத்தின் அனுபூதி, ஆன்மிக நறுமணம் வாயுமண்டலத்தில் அனுபவம் ஆக வேண்டும். பாபாவுக்கு அன்பானவர்களாக இருக்கிறோம் என்று அனைவருமே சொல்கிறீர்கள் மற்றும் பாபாவும் அறிவார், பாபாவிடம் அனைவருக்குமே அன்பு உள்ளது. ஆனால் இப்போது அன்பின் நறுமணத்தை உலகத்தில் பரவச் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இந்த நறுமணத்தின் அனுபவத்தை செய்விக்க வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் இதை வர்ணனை செய்ய வேண்டும் -- இவர் சிரேஷ்ட ஆத்மா. பாபாவுக்கு மட்டும் சிநேகி என்பதில்லை. ஆனால் அனைவருக்கும் சதா சிநேகி. இந்த இரண்டு அனுபவங்களும் எப்போது அனைவருக்கும் சதா இருக்கிறதோ, அப்போது மாஸ்டர் அன்பின் கடல் எனச் சொல்வார்கள். இன்றைய உலகம் உண்மையான ஆத்மிக அன்பிற்காக ஏங்கிக் கொண்டி ருக்கிறது. சுயநல அன்பைப் பார்த்துப் பார்த்து அந்த அன்பிலிருந்து மனம் விடுபட்டு விட்டது. அதனால் ஆத்மிக அன்பின் சில கணங்களின் அனுபவத்தைக் கூட வாழ்க்கைக்கான ஆதரவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் -- அன்பின் விசேஷத்தை மற்ற ஆத்மாக்களுக்காக கர்மத்தில் மற்றும் சேவையில் கொண்டு வருவதில் எது வரை வெற்றி அடைந்திருக்கின்றனர்? தனது மனதில் மட்டும் தனக்குத் தானே குஷி அடைந்து கொள்வதில்லை தானே? நானோ மிகவும் சிநேகியாக இருக்கிறேன். அன்பு இல்லை என்றால் பாபாவுடையவராக எப்படி ஆக முடியும்? மற்றும் பிராமண வாழ்க்கையில் எப்படி முன்னேற முடியும்? தனது மனதில் திருப்தி உள்ளது -- இதை பாப்தாதாவும் அறிவார். தன் வரையிலும் என்பதும் சரி தான். ஆனால் குழந்தைகள் நீங்கள் அனைவரும் பாபாவுடன் கூட சேவாதாரிகளாக இருக்கிறீர்கள். சேவைக்காகத் தான் இந்த உடல்-மனம்-செல்வம் எல்லாம் உங்கள் அனைவருக்கும் பாபா டிரஸ்டி ஆக்கித் தந்திருக்கிறார். சேவாதாரியின் கடமை என்ன? ஒவ்வொரு விசேஷத்தையும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். உங்களுடைய விசேஷத்தை சேவையில் ஈடுபடுத்தவில்லை என்றால், ஒரு போதும் அந்த விசேடம் விருத்தி அடையாது. அதே எல்லையில் தான் இருக்கும். அதனால் அநேகக் குழந்தைகள் அது போல் அனுபவம் செய்கின்றனர் -- பாபாவுடையவர்களாக ஆகி விட்டோம். தினந்தோறும் வரவும் செய்கிறோம், புருஷார்த்தத்திலும் சென்று கொண்டிருக்கிறோம், நியமங்களையும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புருஷார்த்தத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட வேண்டுமோ, அது அனுபவமாகவில்லை. சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் விருத்தி அடையவில்லை. இதற்கான காரணம் என்ன? விசேஷங்களை சேவையில் ஈடுபடுத்துவதில்லை. வெறுமனே ஞானம் சொல்வது, ஒரு வாரப்பாடம் எடுப்பது -- இது மட்டுமே சேவை கிடையாது. சொல்வதோ துவாபர யுகத்திலிருந்து பரம்பரையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இந்த பிராமண வாழ்க்கையின் விசேடம் -- சொல்வது என்றால் கொஞ்சம் கொடுப்பது. பக்தி மார்க்கத்தில் சொல்வது என்றால் பெற்றுக் கொள்வதாகிறது மற்றும் இப்போது சொல்வது என்றால் கொஞ்சம் கொடுப்பதாகும். வள்ளலின் குழந்தைகள் நீங்கள். யாரெல்லாம் தொடர்பில் வருகிறார்களோ, அவர்களும் அனுபவம் செய்ய வேண்டும் -- நாம் கொஞ்சம் பெற்றுக் கொண்டு செல்கிறோம். வெறுமனே கேட்டு விட்டுச் செல்கிறோம் என்று அப்படி இல்லை. அன்பின் செல்வத்தால், அல்லது நினைவு பலத்தின் செல்வத்தால், சக்திகளின் செல்வத்தால், சகயோகத்தின் செல்வத்தால் பையை அதாவது புத்தியை நிரப்பிக் கொண்டு செல் கிறோம். இது தான் உண்மையான சேவை எனச் சொல்லப் படும். ஒரு விநாடியின் திருஷ்டி அல்லது இரண்டு வார்த்தைகள் மூலம் தன்னுடைய சக்திசாலி விருத்தியின் வைப்ரேஷன்கள் மூலம், தொடர்பு மூலமாக வள்ளல் ஆகி, கொடுக்க வேண்டும். அத்தகைய சேவாதாரிகள் உண்மையான சேவாதாரி ஆவார்கள். அது போல் கொடுப்பவர்கள் சதா இதை அனுபவம் செய்வார்கள் -- அதாவது ஒவ்வொரு விருத்தியை அல்லது முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். இல்லை யென்றால் புரிந்து கொள்கிறார்கள், பின் தங்கி விடவில்லை, ஆனால் எந்த அளவு முன்னேற வேண்டுமோ, அந்த அளவு முன்னேறவில்லை. ஆகவே வள்ளல் ஆகுங்கள், அனுபவம் செய்வியுங்கள். அதே போல் சகயோகி மற்றும் சகஜயோகி தனக்காக மட்டுமா அல்லது மற்றவர்களையும் கூட உங்களது சகயோகத்தின் ஊக்கம்-உற்சாகத்தின் அலை சகயோகி ஆக்கி விடுகிறதா? உங்களது சகயோகத்தின் விசேஷம், சர்வ ஆத்மாக்களுக்கும் இது அனுபவம் ஆக வேண்டும் -- இவர்கள் நம்முடைய சகயோகிகள். எந்த ஒரு பலவீனமான ஸ்திதி அல்லது பரிஸ்திதியின் சமயத்திலும் இவர்கள் சகயோகத்தின் மூலமாக முன்னேறுவதற்கான சாதனங்களைக் கொடுப்பவர்கள். சகயோகத்தின் விசேஷம் பற்றி அனைவருக்கும் ஆத்மாக்களாகிய உங்களிடமிருந்து அனுபவமாக வேண்டும். இது தான் விசேடத்தை சேவையில் ஈடுபடுத்தினீர்கள் எனச் சொல்வதாகும். பாபாவின் சகயோகியாகவோ இருக்கவே செய்கிறீர்கள். ஆனால் பாபா உலக சகயோகி. குழந்தைகளிட மிருந்தும் ஒவ்வொரு ஆத்மாவுக்காகவும் உள்ளுக்குள் இருந்து இந்த அனுபவத்தின் வார்த்தை வெளிப்பட வேண்டும் -- இவர்களும் கூட பாப்-சமான் அவைருக்கும் சகயோகியாக இருப்பவர்கள். தனிப்பட்ட முறையில் ஒருவர்-மற்றவர்க்கு சகயோகி ஆகக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் சுயநலத்தின் சகயோகி ஆவார்கள். எல்லைக்குட்பட்ட சகயோகி ஆவார்கள். உண்மையான சகயோகி எல்லையற்ற சகயோகியாக இருப்பார்கள். உங்கள் அனைவரின் டைட்டில் என்ன? விஷ்வ கல்யாண்காரியா அல்லது வெறும் சென்டரின் கல்யாண்காரியா? தேசத்தின் கல்யாண்காரியா அல்லது வெறுமனே வகுப்பின் மாணவர்களுக்குக் கல்யாண்காரியா? அந்த மாதிரி டைட்டிலோ இல்லை தானே? விஷ்வ கல்யாண்காரி, உலகத்தின் மாலிக் ஆகப் போகிறவர்களா அல்லது வெறுமனே தன்னுடைய மாளிகைக்கு மாலிக் ஆகப் போகிறவரா? யார் சென்டரின் எல்லைக்குட் பட்டதில் இருக்கின்றனரோ, அவர்கள் தங்கள் மாளிகைக்கு மட்டும் தான் மாலிக் ஆவார்கள். ஆனால் எல்லையற்ற தந்தை மூலமாக எல்லையற்ற ஆஸ்தி பெறுகிறீர்கள். எல்லைக்குட் பட்டதல்ல. ஆக, அனைவருக்காகவும் சகயோகத்தின் விசேஷத்தைக் காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். இதைத் தான் சகயோகி ஆத்மா எனக் கூறுவது! இந்த விதியின் பிரமாணம் சக்திசாலி ஆத்மா சர்வ சக்திகளைத் தனக்காக மட்டுமல்ல, ஆனால் அனைவருக்காகவும் சேவையில் ஈடுபடுத்துவார்கள். யாரிடமும் பொறுமை சக்தி இல்லை. உங்களிடம் உள்ளது. மற்றவர்களுக்கு இந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். இது தான் சக்தியை சேவையில் ஈடுபடுத்துவதாகும். இதை மட்டும் யோசிக்காதீர்கள். அதாவது நானோ சகிப்புத் தன்மையோடு இருக்கிறேன். ஆனால் உங்களுடைய சகிப்புத் தன்மையின் குணத்தினுடைய லைட் மைட் அடுத்தவர் வரை சென்று சேர வேண்டும். லைட் ஹவுஸின் லைட் தனக்காக மட்டும் இல்லை, மற்றவர்களுக்கு ஒளி கொடுப்பதற்கு அல்லது வழி சொல்வதற்காக உள்ளது. அந்த மாதிரி சக்தி ரூபம், அதாவது லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகி, மற்றவர்களுக்கு அதன் நன்மையை அனுபவம் செய்வியுங்கள். அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும் -- பலமற்ற நிலையின் இருளிலிருந்து சக்தியின் ஒளியில் வந்து விட்டோம், அல்லது புரிந்து கொள்ள வேண்டும் -- இந்த ஆத்மா தனது சக்தியின் மூலம் என்னையும் சக்திசாலி ஆக்குவதில் உதவியாளராக இருக்கிறார். தொடர்பை பாபாவோடு ஏற்படுத்துவார், ஆனால் நிமித்தமாக ஆகி அது போல் செய்வார். சகயோகம் கொடுத்து தன் மீதே ஒட்டிக் கொள்ளும்படி (தன்னைச் சார்ந்திருக்குமாறு) செய்ய மாட்டார். பாபாவின் கொடையை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறார். இந்த ஸ்மிருதியோடு மற்றும் சக்தியோடு விசேடங்களை சேவையில் ஈடுபடுத்துவார். உண்மையான சேவாதாரியின் அடையாளம் இது தான். ஒவ்வொரு கர்மத்திலும் பாபா காணப்படுவார். அவரது ஒவ்வொரு சொல்லும் பாபாவின் நினைவைக் கொடுக்கும். ஒவ்வொரு விசேடமும் வள்ளலின் பக்கம் ஜாடை காட்டும். சதா பாபா தான் தென்படுவார். அவர்கள் உங்களைப் பார்க்காமல் பாபாவைப் பார்ப்பார்கள். என்னுடைய சகயோகி என்பது உண்மையான சகயோகியின் அடையாளம் கிடையாது. இதை ஒரு போதும் சங்கல்பத்தில் கூட யோசிக்கக் கூடாது -- அதாவது எனது விசேஷத்தாவின் காரணத்தால் இவர் எனக்கு மிகவும் சகயோகியாக உள்ளார். சகயோகிக்கு சகயோகம் கொடுப்பது எனது கடமையாகும். அவர் உங்களைப் பார்த்தார், பாபாவைப் பார்க்கவில்லை என்றால் இது சேவை ஆகவில்லை. இது துவாபரயுக குருமார் போல் முகத்தைத் திருப்பியதாக ஆகும். பாபாவை மறக்க வைத்தார்களே தவிர சேவை செய்யவில்லை. இது வீழ்த்துவதாக ஆகுமே தவிர உயர்த்துவதாகாது. இது புண்ணியமல்ல, பாவமாகும். ஏனென்றால் பாபா இல்லை என்றால் நிச்சயம் பாவம் தான். ஆக, உண்மையான சேவாதாரி சத்தியத்தின் பக்கம் தான் சம்மந்தத்தை இணைப்பார்கள்.

பாப்தாதாவுக்கு அவ்வப்போது குழந்தைகள் மீது சிரிப்பும் வருகிறது -- லட்சியம் என்ன, லட்சணம் என்ன? பாபாவின் பக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும், ஆனால் கொண்டு சேர்ப்பது தன்னிடமே! எப்படி மற்ற தெய்வீகத் தந்தையர் (மதத் தலைவர்கள்) பற்றிச் சொல்கிறீர்கள் -- அவர்கள் மேலிருந்து கீழே அழைத்து வருகின்றனர். மேலே அழைத்துச் செல்வதில்லை. அந்த மாதிரி தெய்வீகத் தந்தை ஆகாதீர்கள். பாப்தாதா இதைப் பார்த்துக் கொண்டிருந்தார் -- எங்கெங்கே குழந்தைகள் நேரான பாதைக்குப் பதிலாக சந்துக்க ளுக்குள் சென்று சிக்கிக் கொள்கின்றனர். பாதை மாறி விடுகிறது, அதனால் போய்க் கொண்டே இருக்கின்றனரே தவிர இலக்கின் அருகில் சென்று சேர்வதில்லை. ஆக, உண்மையான சேவாதாரி எனச் சொல்லப் படுபவர் யார் என்று புரிந்து கொண்டீர்களா? இந்த மூன்று சக்திகள் அல்லது விசேடங்களை எல்லையற்ற திருஷ்டி மூலம், எல்லையற்ற விருத்தி மூலம் சேவையில் ஈடுபடுத்துங்கள். நல்லது.

சதா வள்ளலின் குழந்தைகள் வள்ளல் ஆகி, ஒவ்வோர் ஆத்மாவையும் நிரம்பியவராக ஆக்குகிற, ஒவ்வொரு கஜானாவையும் சேவையில் ஈடுபடுத்தி, ஒவ்வொரு சமயம் விருத்தி அடையக்கூடிய, சதா பாபா மூலம் பிரபுவின் கொடை என உணர்ந்து மற்றவர்களுக்கும் கூட பிரபு பிரசாதம் கொடுக்கக் கூடிய, சதா ஒருவரின் பக்கம் சமிக்ஞை காட்டி ஏக்ரஸ் ஆக்கக் கூடிய அத்தகைய சதா மற்றும் அனைவரின் உண்மையான சேவாதாரி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

குமாரிகளிடம் அவ்யக்த பாப்தாதாவின் உரையாடல்: இந்த சேனை என்ன செய்யும்? சேனை சதா வெற்றி அடையும். சேனை வெற்றிக்காகத் தான் உள்ளது. விரோதியுடன் போரிடுவதற்காக சேனை வைத்துக் கொள்கின்றனர். ஆகவே மாயா என்ற விரோதியின் மீது வெற்றி பெறுவது தான் உங்களனைவரின் கடமையாகும். சதா தன்னுடைய இந்தக் கடமையை அறிந்து கொண்டு மிக விரைவாக முன்னேறிக்கொண்டே செல்லுங்கள். ஏனென்றால் சமயம் மிக வேகமாக முன்னால் சென்று கொண்டிருக்கிறது. யார் மந்தமாகி விடுகிறார்களோ, அவர்கள் தாமாகவே வேட்டைப் பொருளாகி விடுகின்றனர். சக்திசாலி சதா வெற்றியாளராக இருப்பார்கள். ஆக, நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களா?

சதா இதே லட்சியம் வையுங்கள், நாம் சேவை செய்யக்கூடியவராகி சேவையில் சதா முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் குமாரிகளுக்கு எந்த ஒரு பந்தனமும் இல்லை. எவ்வளவு சேவை செய்ய விரும்புகிறீர்களோ, செய்ய முடியும். சதா தன்னை, நான் பாபாவுடைய வராக இருக்கிறேன், பாபாவுக்காகவே இருக்கிறேன் எனப் புரிந்து கொண்டு முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். யார் சேவையில் நிமித்தமாகிறார்களோ, அவர்களுக்குக் குஷி மற்றும் சக்தி தானாகவே பிராப்தியாகும். சேவைக்கான பாக்கியம் கோடியில் சிலருக்குத் தான் கிடைக்கிறது. குமாரிகள் எப்போதுமே பூஜைக்குரிய ஆத்மாக்கள். தங்களின் பூஜைக்குரிய சொரூபத்தை ஸ்மிருதியில் (நினைவு) வைத்து, ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்கள். மேலும் ஒவ்வொரு கர்மத்திற்கு முன்பும் சோதித்துப் பாருங்கள் -- இந்தக் காரியம் பூஜைக்குரிய ஆத்மாவின் பிரமாணம் உள்ளதா? இல்லையென்றால் பரிவர்த்தன் செய்துக் கொள்ளுங்கள். பூஜைக்குரிய ஆத்மாக்கள் ஒரு போதும் சாதாரணமாக இருக்க மாட்டார்கள். மகானாக இருப்பார்கள். 100 பிராமணர்களைக் காட்டிலும் உத்தம குமாரிகள் நீங்கள். ஆக, ஒவ்வொரு பிராமணனும் ஒவ்வொரு குமாரியைத் தயார் செய்ய வேண்டும். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். குமாரிகள் என்ன அற்புதத்தின் பிளான் யோசித்திருக்கிறீர்கள்? எந்த ஓரு ஆத்மாவுக் காவது நன்மை நடைபெற வேண்டும், இதைவிடப் பெரிய விசயம் என்ன இருக்கிறது? தங்களின் மகிழ்ச்சியிலேயே இருப்பவர்கள் தானே? சில நேரம் ஞானத்தின் மகிழ்ச்சியில், சில நேரம் நினைவின் மகிழ்ச்சியில். சில நேரம் அன்பின் மகிழ்ச்சியில். மகிழ்ச்சியின் மேல் மகிழ்ச்சி! சங்கமயுகமே மகிழ்ச்சியின் யுகம்! நல்லது. குமாரிகள் மீது சதா பாபாவின் பார்வை உள்ளது. குமாரிகள் தங்களை என்னவாக ஆக்குகிறார்கள்? -- இது அவர்களிடம் தான் உள்ளது. ஆனால் பாப்தாதாவோ அனைவரையும் உலகத்தின் மாலிக் ஆக்குவதற்காக வந்துள்ளார். சதா உலகத்தின் மாலிக் தன்மையின் நஷா மற்றும் குஷி இருக்க வேண்டும். சதா களைப்பற்ற சேவையில் முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். நல்லது.

வரதானம்:

செய்பவர் மற்றும் செய்விப்பவர் நினைவின் மூலம் ஒளிக்கிரீடதாரி ஆகுக.

நான் நிமித்த கர்மயோகி, செய்பவன், செய்விப்பவர் பாபா. இந்த ஸ்மிருதி தானாகவே இருக்கிறது என்றால் சதா ஒளிக்கிரீடதாரி அல்லது கவலையற்ற மகாராஜா ஆகி விடுவீர்கள். பாபா மற்றும் நான் மட்டுமே. மூன்றாவது யாரும் இல்லை -- இந்த அனுபவம் சுலபமாகவே கவலையற்ற மகாராஜா ஆக்கிவிடும். யார் அது போல் மகாராஜா ஆகிறார்களோ, அவர்கள் மாயாவை வென்றவர்கள், கர்மேந்திரியங்களை வென்றவர்கள் மற்றும் இயற்கையை வென்றவராகி விடுகிறார்கள். ஆனால் யாராவது தவறுதலாகக் கூட தன் மீது ஏதேனும் வீண் பாவனையின் (எண்ணங்கள்) சுமையை ஏற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்றால், கிரீடத்திற்கு பதிலாக கவலைகளின் அநேகக் கூடைகள் தலை மீது வந்து விடும்.

சுலோகன்:

சர்வ பந்தனங்களில் இருந்தும் விடுபடுவதற்கு

 

தேக உறவுகளில் வைத்த மோகத்தை அழித்தவராக ஆகுங்கள்.

அறிவிப்பு : இன்று சர்வதேச யோகதினம், மூன்றாவது ஞாயிறு, மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சகோதர-சகோதரிகள் அனைவரும் குழு ரூபத்தில் ஒருமுகப்பட்டவராகி, யோக அப்பியாசத்தில் சர்வ ஆத்மாக்களுக்காகவும் இந்த சுப பாவனை வையுங்கள் -- சர்வ ஆத்மாக்களுக்கும் நன்மை நடக்கட்டும். சர்வ ஆத்மாக்களும் சத்திய மார்க்கத்தில் சென்று பரமாத்ம ஆஸ்திக்கான அதிகாரத்தை அடையட்டும். நான் பாப்-சமான் சர்வ ஆத்மாக்களுக்கும் முக்தி ஜீவன்முக்தியின் வரதானத்தைக் கொடுக்கும் ஆத்மா.