15.05.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.91     Om Shanti     Madhuban


உலக உபகாரி ஆகுவதற்கு, எல்லாவற்றினதும் விழிப்புணர்வுடன் சம்பூரணமானவராகி, எல்லோருடனும் ஒத்துழையுங்கள்.


இன்று, சர்வசக்திவான் தந்தை நினைவின் சொரூபமாக உள்ள தனது குழந்தைகளைப் பார்த்து மகிழ்கிறார். இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த, முழு உலகிலுமுள்ள குழந்தைகள் நினைவு தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இன்று, இந்த நினைவு தினம் குழந்தைகளான உங்களுக்கு உங்களின் பிராமண வாழ்க்கையை நினைவூட்டுகிறது. அதாவது, உங்களின் சக்திவாய்ந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது. ஏனென்றால், தந்தை பிரம்மாவின் வாழ்க்கைக் கதையுடன்கூடவே, பிராமணக் குழந்தைகளின் வாழ்க்கைக் கதைகளும் உள்ளன. அசரீரியான தந்தை பௌதீக பிரம்மாவினூடாக பிராமணர்களை உருவாக்கினார். அப்போதே பிராமணர்களினூடாக அழியாத யக்யம் என்ற படைப்பு உருவாகியது. தந்தை பிரம்மா பிராமணர்களுடன் சேர்ந்து ஸ்தாபனைக்குக் கருவி ஆகினார். ஆகவே, தந்தை பிரம்மாவின் வாழ்க்கைக் கதையுடன் முதல் பிராமணர்களின் வாழ்க்கைக் கதைகளும் உள்ளன. யக்யத்தின் ஸ்தாபனையில் ஆதிதேவன் பிரம்மாவின் முக்கியத்துவத்துடன் முதல் பிராமணர்களின் முக்கியத்துவமும் உள்ளன. அநாதியான தந்தை பிரம்மாவினூடாக முதல் பிராமணர்களின் படைப்பை உருவாக்கினார். அந்த ஆதி பிராமணர்கள் ஏனைய பல பிராமணர்களின் விரிவாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தந்தை பிரம்மாவினால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனையின் கதையே இந்த நினைவு தினத்தில் கூறப்படுகிறது. நீங்கள் இதை நினைவு தினம் என்று அழைக்கிறீர்கள். எனவே, நீங்கள் தந்தை பிரம்மாவை மட்டும் நினைத்தீர்களா? அல்லது, தந்தை பிரம்மாவினூடாகத் தந்தை உங்களுக்கு நினைவூட்டிய விடயங்கள் அனைத்தையும் நினைத்தீர்களா? ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரை உங்களுக்கு எந்த விடயங்கள் நினைவூட்டப்பட்டுள்ளன? எத்தனை விடயங்கள் நினைவூட்டப்பட்டுள்ளன? அவற்றை நீங்கள் நினைக்கிறீர்களா? அமிர்த வேளையில் இருந்து இரவுவரை, உங்களுக்கு நினைவூட்டப்பட்ட விடயங்களை நீங்கள் மீண்டும் நினைத்துப் பார்த்தால், அவற்றை நினைக்க ஒரு நாள் போதுமா? நீண்டதொரு பட்டியல் உள்ளதுதானே? நீங்கள் நினைவிற்காக ஒரு வாரத்தைக் கொண்டாடினாலும், அப்போதும் அதிகளவு விபரங்கள் எஞ்சியிருக்கும். ஏனென்றால், நீங்கள் அதை மீட்டல் செய்வது மட்டுமில்லை, ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும். இதனாலேயே, நீங்கள் நினைவின் சொரூபம் என்று சொல்கிறீர்கள். சொரூபம் ஆகுவதென்றால் ஒவ்வொரு வகையான விழிப்புணர்வையும் அனுபவம் செய்வதாகும். நீங்கள் விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகுகிறீர்கள். ஆனால், பக்தர்கள் அதைப் பற்றி வெறுமனே பேசுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன விழிப்புணர்வை அனுபவம் செய்தீர்கள்? அவை அனைத்திலும் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. எவ்வாறு தந்தையின் அறிமுகம் மிகப் பெரியதாக இருந்தாலும், நீங்கள் அதன் சாராம்சத்தை ஐந்து விடயங்களில் கொடுக்கிறீர்களோ, அதேபோல், உங்களுக்கு நினைவூட்டப்பட்ட விடயங்கள் எல்லாவற்றினதும் விரிவாக்கத்தை ஐந்து விடயங்களின் சாராம்சத்திற்குள் கொண்டு வாருங்கள். ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை, பாப்தாதா உங்களின் பல பட்டங்களை நினைவூட்டியுள்ளார். எத்தனை பட்டங்கள் உள்ளன? பெரியதொரு விரிவாக்கம் உள்ளதல்லவா? ஒவ்வொரு பட்டத்தையும் நினையுங்கள். அதன் சொரூபம் ஆகுங்கள். அதை அனுபவம் செய்யுங்கள். நீங்கள் வெறுமனே அதைத் திருப்பிச் சொல்லக்கூடாது. நினைவின் சொரூபம் ஆகுவதில் உள்ள ஆனந்தம், தனித்துவமானது, அழகானது. கண்ணின் ஒளி என்ற பட்டத்தைத் தந்தை குழந்தைகளான உங்களுக்கு நினைவூட்டுகிறார். நீங்கள் பாபாவின் கண்ணின் ஒளிகள். கண்ணின் சிறப்பியல்பு என்ன? கண்களின் பணி என்ன? கண்களின் சக்தி என்ன? இவை அனைத்தையும் அனுபவம் செய்யுங்கள். அதாவது, இந்த விழிப்புணர்வின் சொரூபம் ஆகுங்கள். இந்த முறையில், ஒவ்வொரு பட்டத்தினதும் விழிப்புணர்வைத் தொடர்ந்து அனுபவம் செய்யுங்கள். இது ஓர் உதாரணமாக உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், மேன்மையானதொரு ரூபத்தை நினையுங்கள். அந்த ரூபத்தில் எத்தனை வடிவங்களை உங்களால் நினைக்க முடிகிறது? பிராமணர்களான உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? தந்தையின் வடிவம் என்னவோ, அவை பிராமணர்களான உங்களின் வடிவங்களும் ஆகும். அந்த வடிவங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றினதும் விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகுங்கள். ஆதியான, அநாதியான, நிகழ்காலப் பட்டம், ரூபம், நற்குணங்கள். பிராமண வாழ்க்கையின் சகல நற்குணங்களினதும் விழிப்புணர்வின் சொரூபங்கள் ஆகுங்கள்.

அதேபோல், உங்களின் பணிகளைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். இத்தகைய மேன்மையான பணிகளுக்கு நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள். அந்தப் பணிகள் அனைத்தினதும் விழிப்புணர்வானது வெளிப்பட வேண்டும். பாப்தாதா உங்களுக்கு நினைவூட்டிய ஐந்தாவது விடயம், உங்களின் ஆதியான, அநாதியான வீட்டைப் பற்றியதாகும். உங்களின் சொந்த வீட்டை நினைவில் வைத்திருப்பதன் மூலம், வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கான சக்தியை நீங்கள் பெற்றீர்கள். ஓர் இராச்சியத்திற்கு, உங்களின் சொந்த இராச்சியத்திற்கான உரிமை உடையவராக இருக்கும் தைரியத்தைப் பெற்றீர்கள். அத்துடன், தற்சமயம் சங்கமயுகத்தில் பிராமண உலகில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கான வாழும் கலையையும் தெரிந்து கொண்டீர்கள். மிக நன்றாக வாழும் கலையை நீங்கள் இப்போத தெரிந்து கொண்டீர்கள்தானே? இந்த உலகமே மரணிக்கும் கலையில் வேகமாக முன்னேறிச் செல்கிறது. ஆனால் பிராமணர்களான நீங்களோ சுகம் நிறைந்த சந்தோஷமான வாழ்க்கையில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் அதிகளவு வேறுபாடு உள்ளது!

நினைவு தினம் என்றால், சகல வகையான விழிப்புணர்வுகளுடன் ஆன்மீக போதையை அனுபவித்தல் என்று அர்த்தம். இந்த நினைவு தினத்தில், உலக மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளான, எமது பிரம்மா பாபா இப்படியிருந்தார், அவர் இவ்வாறு சொன்னார், அவர் அதைச் செய்தார் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. உலக மக்கள், அவர் அப்படியிருந்தார், அவர் இப்படியிருந்தார் எனக் கூறி, துன்ப அலைகளைப் பரப்புவார்கள். பிராமணர்களான உங்களின் சிறப்பியல்பு என்னவென்றால், அவர் இப்போதும் எங்களுடனேயே இருக்கிறார், நாம் அவரின் சகவாசத்தை அனுபவம் செய்கிறோம் என நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, உங்களிடம் இந்தச் சிறப்பியல்பு உள்ளது. தந்தை பிரம்மா சென்றுவிட்டார் என நீங்கள் சொல்ல மாட்டீர்கள். அவர் உங்களுடன் இருந்து, உங்களுடனேயே திரும்பிச் செல்வார் எனச் சத்தியம் செய்திருக்கிறார். முதல் ஆத்மா தனது சத்தியத்தை நிறைவேற்றா விட்டால், வேறு யார்தான் சத்தியத்தை நிறைவேற்றுவார்கள்? சேவை செய்கின்ற ரூபமும் வழிமுறையும் மாறிவிட்டன. அவ்வளவுதான். உங்கள் எல்லோருடைய இலக்கும் தேவதைகள் ஆகிப் பின்னர் தேவதேவியர்கள் ஆகுவதாகும். தந்தை பிரம்மா தேவதை ரூபத்தின் மாதிரியுரு ஆகியுள்ளார். குழந்தைகளான உங்கள் எல்லோருடைய பராமரிப்பும் இப்போதும் பிரம்மாவினூடாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனாலேயே, நீங்கள் பிரம்மாகுமார்கள், பிரம்மாகுமாரிகள் என்று அழைக்கப் படுகிறீர்கள். இந்த நினைவு தினத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இவை அனைத்தினதும் விழிப்புணர்வில் சதா அமிழ்ந்திருங்கள். இதுவே, தந்தைக்குச் சமமாக இருக்கும் அனுபவத்தைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. ஆத்மாக்களான நீங்கள் தந்தைக்குச் சமமாக இருப்பதை அனுபவம் (பாப்சமான்) செய்துள்ளீர்கள். ஆனால் மக்கள் சமான்(சமம்) என்ற இந்த வார்த்தையை சமானா (கலத்தல்) என அர்த்தப்படுத்தியுள்ளார்கள். ஆத்மாக்களான நீங்கள் பரமாத்மாவில் ஒன்றுகலப்பதில்லை. ஆனால் நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். குழந்தைகள் எல்லோரும் நினைவு தினத்திற்காக விசேடமான நினைவுகளைத் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார்கள். பலர் தூதுவர்களாக அன்பையும் நினைவுகளையும் எடுத்து வந்துள்ளார்கள். ஏனென்றால், எல்லோரும் எனது விசேடமான நினைவுகளைக் கொடுங்கள் எனச் சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கடிதத்தை எழுதுவதற்குப் பதிலாக, பாபா தனது இதயத்தில் இருந்து உங்களுக்கு எழுதுகிறார். உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வருகின்ற இதயபூர்வமான அன்பு, பாப்தாதாவின் கண்களிலும் அவரின் இதயத்திலும் ஒன்றுகலந்துள்ளது. அது குறிப்பாக இப்போது கலந்துள்ளது.

குறிப்பாக பாபாவை விசேடமாக நினைவு செய்பவர்களையும் பாபா முன்னால் தோன்றச் செய்து, அவர்களுக்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். உங்கள் ஒவ்வொருவரினதும் இதயத்தின் உற்சாகமும் இதயபூர்வமான சம்பாஷணையும் இதயத்தின் நிலைமையும் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரான பாபாவை வந்தடைந்துள்ளன. பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் இந்த விழிப்புணர்வை நினைவூட்டுகிறார்: நீங்கள் எப்போதும் பாபாவின் இதயத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சேவை சகபாடிகள். உங்களின் ஸ்திதியானது, சதா பார்வையாளர் என்பதாகும். எனவே, மாயையை வென்றவராகும் கொடியானது தொடர்ந்து பறக்கும்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் குழந்தைகள் எல்லோருடைய விழிப்புணர்விலும் எதுவும் புதியதல்ல என்ற பாடம் இருக்க வேண்டும். பிராமண வாழ்க்கை என்றால், எந்தவொரு கேள்விக்குறியோ அல்லது வியப்புக்குறியோ இருக்க முடியாது. நீங்கள் இந்தச் செய்திகளை எத்தனை தடவைகள் கேட்டுள்ளீர்கள்? (எங்கேயோ யுத்தம் நடப்பது பற்றிய செய்திகள் வந்துள்ளன.) இந்தச் செய்திகள் புதியவையா? இல்லை. பிராமண வாழ்க்கை என்றால், நீங்கள் ஏதாவது செய்திகளைக் கேட்டாலும், சென்ற கல்பத்தின் விழிப்புணர்வில் நீங்கள் சக்திநிறைந்தவர்களாக இருக்க வேண்டும். என்ன நடக்க வேண்டுமோ, அது நடக்கும். அதனால், என்ன நிகழும்? என நீங்கள் கேள்வி கேட்க முடியாது. நீங்கள் திரிகாலதரிசிகள்: நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, முடிவை அறிந்தவர்கள். எனவே, உங்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றித் தெரியாதா? நீங்கள் பயப்படவில்லைத்தானே? பிராமண வாழ்க்கையில், ஒவ்வோர் அடியிலும் நன்மை உள்ளது. பயப்பட வேண்டிய தேவையில்லை. உங்களின் அமைதி சக்தியால் அமைதியை இழந்துள்ள ஆத்மாக்களுக்கு அமைதிக்கதிர்களைக் கொடுப்பதே உங்கள் எல்லோருடைய பணியாகும். அவர்கள் உங்களின் சகோதர, சகோதரிகள். உங்களின் இறை குடும்பத்தைப் பொறுத்தவரை, ஒத்துழைப்பவர் ஆகுங்கள். அவர்கள் விரைவாக முன்னேறும் அளவிற்கு, யோகி ஆத்மாக்களான உங்களின் யோகம் அவர்களுக்கு அமைதியின் ஒத்துழைப்பை வழங்கும். ஆகவே, விசேடமாக நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு அமைதியின் ஒத்துழைப்பை வழங்குங்கள். இதுவே பிராமண ஆத்மாக்களான உங்களின் பணியாகும். அச்சா.

சகல வகையான விழிப்புணர்வின் சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், தந்தைக்குச் சமமாகும் இலக்கையும் தகைமைகளையும் கொண்டுள்ள ஆத்மாக்களுக்கும், சதா தங்களைத் தந்தையுடன் இருப்பதை அனுபவம் செய்யும் நெருக்கமான ஆத்மாக்களுக்கும், நடைமுறையில் இலகுவாக எதுவும் புதியதல்ல என்ற பாடத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும், உலக உபகாரிகளாகி, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுப்பவர்களுக்கும், இத்தகைய சதா வெற்றியாளர் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா தாதிகளைச் சந்திக்கிறார்:

முதல் பிராமணர்களின் மாலைக்கு: தந்தை பிரம்மாவுடன் கூடவே, முதல் பிராமணர்களும் கருவிகள் ஆகினார்கள். முதல் பிராமணர்களுக்குப் பெரும் முக்கியத்துவம் உள்ளது. ஸ்தாபனையும் பராமரிப்பும் மாற்றமும் உள்ளன. விநாசம் என்ற வார்த்தை சிறிது உத்தியோகபூர்வமானது. எனவே, முதல் பிராமணர்கள் ஸ்தாபனையும் பராமரிப்பும் உலக மாற்றமும் என்ற விசேடமான பாகங்களை நடித்தார்கள். நீங்கள் இந்தப் பாகங்களை நடித்தீர்கள்தானே? சக்திகள் அதிக ஆடம்பரத்துடன் வழிபடப்படுகிறார்கள். அசரீரியான தந்தையும், தந்தை பிரம்மாவும் அந்தளவு ஆடம்பரத்துடன் வழிபடப்படுவதில்லை. பிரம்மாவின் ஆலயம் மிகவும் மறைமுகமானது. ஆனால் சக்தி சேனை பக்தியில் மிகவும் பிரபல்யமானவர்கள். இதனாலேயே, விசேடமான குழந்தைகளான உங்களுக்கு இறுதிவரை மேடையில் விசேடமான பாகங்கள் உள்ளன. பிரம்மாவின் பாகம் மறைமுகமானது - அவ்யக்த ரூபம் என்றால் மறைமுகமானது என்று அர்த்தம். அவர் பிராமணர்களை உருவாக்கினார். அதனால் பிரம்மாவின் பாகம் மறைமுகமாகியது. சரஸ்வதியும் மறைமுகமான முறையிலேயே காட்டப்படுகிறார். ஏனென்றால், நாடகத்தில் அவரின் பாகம் மறைமுகமான முறையில் தொடர்கிறது. இது நல்லது. முதல் பிராமண ஆத்மாக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமானவர்கள். அத்துடன் சக்திநிறைந்தவர்கள். (தாதி ஜான்கியிடம் பேசுகிறார். உங்களின் உடல் பலவீனமாக இல்லை. அது சக்திவாய்ந்தது. அது இடையில் சிறிது ஓய்வு கொடுப்பதற்கு ஒரு சாக்குப்போக்காகும். அது ஒன்றும் பயப்படும்படியாக இல்லை. பொதுவாக, நீங்கள் ஓய்வெடுப்பதில்லை. நீங்கள் ஓய்வெடுப்பதற்கு ஏதாவதொன்று காரணம் ஆகுகின்றது. உங்கள் எல்லோருக்கும் தாதிகளிடம் மிகுந்த அன்பு இருக்கிறதல்லவா? தந்தையுடன் கூடவே, முதல் பிராமண கருவிகள்மீதும் உங்களுக்கு அன்பு உள்ளது. எனவே, உங்கள் எல்லோருடைய அன்பும் தூய ஆசிகளும் முதல் பிராமணர்களை ஆரோக்கியமாக வைத்துள்ளன. இது நல்லது.

நீங்கள் மௌனத்துடன் சேவை செய்வதற்கான நல்லதொரு பாகத்தைப் பெற்றுள்ளீர்கள். அதிகளவு ஆத்மாக்கள் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதிகளவில் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குச் சிறு கையளவினை வழங்குவீர்கள்தானே? மக்கள் சென்று தேவிகளிடம் சக்தியை வேண்டுகிறார்கள்தானே? அவர்களுக்குச் சக்தியை வழங்குவது விசேட ஆத்மாக்களான உங்களின் பணியல்லவா? நாளுக்கு நாள், அவர்கள் எங்கேயோ இருந்து அமைதிக்கதிர்கள் தங்களை நோக்கி வருவதை அனுபவம் செய்வார்கள். அதன்பின் அவர்கள் அவற்றைத் தேடுவார்கள். எல்லோருடைய பார்வையும் அதன்பின்னர் பாரதபூமியை நோக்கிச் செல்லும். அச்சா.

குழு1: நீங்கள் உங்களை நம்பிக்கை நிறைந்த புத்திகளைக் கொண்டுள்ள ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? உங்களிடம் சதா அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா? அல்லது, அது சிலவேளைகளில் அசைகிறதா? நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருப்பதன் அடையாளம், நீங்கள் ஒவ்வொரு பணியிலும், அது உலகரீதியானதோ அல்லது ஆன்மீகரீதியானதோ, அதில் வெற்றி பெறுவீர்கள். ஒரு செயல் எத்தனை சாதாரணமானதாக இருந்தாலும், இத்தகையதோர் ஆத்மா நிச்சயமாக அதில் வெற்றி பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார். ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் விசேடமான பிறப்புரிமை வெற்றியாகும். இத்தகையதோர் ஆத்மா எந்தவொரு பணியாலும் மனச்சோர்வு அடைய மாட்டார். ஏனென்றால், அந்த வெற்றி தனது பிறப்புரிமை என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கும். எனவே, இத்தகையதோர் உரிமை இருப்பதன் போதை உங்களுக்கிருக்கிறதா? கடவுளின் சகபாடியாக இருக்கும் ஒருவருக்கு வெற்றி கிடைக்காவிட்டால், யாருக்குத்தான் வெற்றி கிடைக்கும்? சென்ற கல்பத்தின் ஞாபகார்த்தமானது, எங்கு இறைவன் இருக்கிறாரோ, அங்கு வெற்றி இருக்கும் எனக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பாண்டவர்களை மட்டும் காட்டினாலும், யார் வெற்றி பெற்றார்கள்? இறைவன் உங்களோடிருக்கிறார். நீங்கள் சென்ற கல்பத்தின் ஞாபகார்த்தமாக வெற்றியாளர் ஆகியிருப்பதனால், இப்போதும் வெற்றி பெறுவீர்கள்தானே? எந்தவொரு பணியிலும், இது நிகழுமா இல்லையா? வெற்றி ஏற்படுமா இல்லையா? என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படக்கூடாது. இந்தக் கேள்வி தோன்றக்கூடாது. தந்தையின் சகவாசத்தில் இருப்பவர்களால் ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. இது ஒவ்வொரு கல்பத்திலும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேறு எவராலும் இந்த விதியை மாற்ற முடியாது. இத்தகைய திடசங்கற்பமான நம்பிக்கை சதா உங்களை முன்னால் பறக்கச் செய்யும். எனவே, சதா உங்களின் வெற்றியின் சந்தோஷத்தில் தொடர்ந்து ஆடிப் பாடுங்கள்.

குழு2: நீங்கள் சதா உங்களைப் பாக்கியத்தை அருள்பவரின் பாக்கியசாலிக் குழந்தைகளாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளா? அல்லது நூறு மடங்கு பாக்கியசாலிகளா? இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள், சதா மலர்ச்சி நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், பாக்கியசாலிக் குழந்தைகளுக்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. எனவே, எங்கு சகல பேறுகளும் இருக்கிறதோ, நீங்கள் சதா மலர்ச்சிநிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். ஒருவர் எல்லைக்குட்பட்ட அதிர்ஷ்டலாபத்தை வென்றாலும், அவர் எதையோ பெற்றுள்ளார் என்பது அவரின் முகத்தில் தென்படும். எனவே, பலமில்லியன் மடங்கு பாக்கியத்தை அடையும் ஒருவர் எவ்வாறிருப்பார்? சதா மலர்ச்சிநிறைந்தவராக இருப்பார். மிகவும் மலர்ச்சிநிறைந்தவராக இருங்கள். உங்களைப் பார்க்கும் எவரும் நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள் எனக் கேட்க வேண்டும். உங்களின் முயற்சிகளில் நீங்கள் முன்னேறிச் செல்லும் அளவிற்கு, நீங்கள் பேசுவதற்குக் குறைந்தளவு தேவையே ஏற்படும். நீங்கள் எதையாவது கண்டுவிட்டீர்கள் என்பதை உங்களின் முகங்கள் காட்டும். ஏனென்றால், உங்களின் முகம் ஒரு கண்ணாடி போன்றது. ஒரு கண்ணாடியில் உங்களால் உள்ளதை உள்ளவாறே பார்க்க முடியும். எனவே, உங்களின் முகங்கள் ஒரு கண்ணாடி போல் செயற்பட வேண்டும். ஆத்மாக்கள் பலர் செய்தியைப் பெறவேண்டும். அமர்ந்திருந்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது. காலம் தொடர்ந்து மிகவும் இக்கட்டானதாக ஆகிக் கொண்டிருக்கும். அப்போது எதையும் சொல்வதற்குக்கூட உங்களுக்கு நேரம் இருக்காது. எனவே, நீங்கள் எவ்வாறு சேவை செய்வீர்கள்? அருங்காட்சியகங்களில் படங்களின் மூலம் நீங்கள் சேவை செய்வதைப் போல், உங்களின் முகங்களினூடாகச் சேவை செய்வீர்கள். இந்தப் படங்களைப் பார்க்கும்போது அவை மக்களின் மனங்களில் பதிகின்றன. எனவே, உயிர்வாழும் சித்திரங்களான நீங்கள் சேவைக்குக் கருவிகள் ஆகவேண்டும்: சித்திரங்களான நீங்கள் அதற்குத் தயாரா? உயிர்வாழும் இத்தகைய சித்திரங்கள் தயார் ஆகும்போது, சத்தத்தை உரத்துக் கேட்க முடியும். நடக்கும்போதும் உலாவரும்போதும், அமர்ந்திருக்கும்போதும், எப்போதும் நீங்கள் உயிர்வாழும் சித்திரங்கள் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருங்கள். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரின் பார்வையும் உங்களின் மீதே உள்ளது. உயிர்வாழும் சித்திரங்களில் மிகவும் கவர்ச்சிகரமான விடயம் என்ன? சதா சந்தோஷம். எனவே, நீங்கள் சதா சந்தோஷமாக இருக்கிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் ஏதாவது குழப்பம் ஏற்படுகிறதா? அல்லது, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும், இந்த விடயம் நிகழ்ந்தது, அதனாலேயே எனது சந்தோஷம் குறைந்தது எனச் சொல்வீர்களா? என்ன நிகழ்ந்தாலும், உங்களின் சந்தோஷம் குறையக்கூடாது. நீங்கள் அத்தகைய பலசாலிகளா? நீங்கள் இதை விட உயர்ந்த (மிகவும் கஷ்டமான) பரீட்சையில் சித்தி அடைவீர்களா? பாப்தாதா எல்லோருடைய புகைப்படங்களையும் எடுத்து, யார் ஆமாம் எனச் சொல்கிறார்கள் எனப் பார்க்கிறார். அந்த நேரத்தில் நான் சொன்னேன் எனப் பின்னர் சொல்லாதீர்கள். உண்மையில், மாஸ்ரர் சர்வசக்திவான்களின் முன்னால் எதுவும் பெரிய விடயமல்ல. இரண்டாவதாக, வெற்றிக்கு உங்களுக்கு உத்தரவாதம் உள்ளது என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. ஆகவே, இது பெரியதொரு விடயமல்ல. சகல சக்திகள் என்ற பொக்கிஷங்களை ஒழுங்குமுறையாக வைத்திருப்பவர்களுக்கு எந்தவொரு சக்தியும் அவர்களுக்கு உதவி செய்யும். ஆனால் கட்டளை இடுபவருக்குத் தைரியம் இருக்க வேண்டும், அவ்வளவுதான். எனவே, எவ்வாறு கட்டளை இடுவது என உங்களுக்குத் தெரியுமா? அல்லது எவ்வாறு ஒரு கட்டளையைப் பின்பற்றுவது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சிலவேளைகளில் மாயையின் கட்டளைகளைப் பின்பற்றுவதில்லைத்தானே? ஒரு சூழ்நிலை தோன்றி, அது முடிவிற்கு வரும். அதன்பின்னர் நீங்கள் அந்த முறையில் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைப்பதாக இல்லையல்லவா? அவ்வாறு இல்லைத்தானே? நீங்கள் சகல சக்திகளையும் சரியான நேரத்தில் பயன்படுத்துகிறீர்களா? அல்லது அவை சிறிது நேரத்தின் பின்னர் வருகின்றனவா? நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் சரியாக அமர்ந்திருந்தால், எந்தவொரு சக்தியும் உங்களுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது என்பது சாத்தியமில்லை. நீங்கள் உங்களின் ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி, அதன்பின்னர் கட்டளை இட்டால் மட்டுமே அவை உங்களுக்குக் கீழ்ப்படியாது. உலகரீதியிலும், ஒருவர் தனது பதவியில் இருந்து கீழிறங்கிய பின்னர் கட்டளை இடுவாராக இருந்தால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். ஏதாவதொரு சக்தி உங்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாவிட்டால், நீங்கள் நிச்சயமாக உங்களின் பதவி என்ற ஆசனத்தில் இருந்து கீழிறங்கிவிட்டீர்கள் என்றே அர்த்தம். எனவே, மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற ஆசனத்தில் சதா அமர்ந்திருங்கள். சதா ஆட்ட, அசைக்க முடியாதவராக இருங்கள். தளம்பல் அடைபவர் ஆகாதீர்கள். பாப்தாதா சொல்கிறார்: நீங்கள் உங்களின் உடலை விடவேண்டி வந்தாலும், உங்களின் சந்தோஷம் போகக்கூடாது. இத்தகையதோர் ஆத்மாவின் முன்னால் பணம் எதுவுமேயில்லை. சந்தோஷம் என்ற பொக்கிஷத்தை வைத்திருப்பவர்கள், எதையும் பெரியதொரு விடயமாகக் கருதமாட்டார்கள். ஒத்துழைக்கும், சேவையாளர் குழந்தைகளுக்கு எப்போதும் பாப்தாதாவின் சகவாசம் இருக்கும். ஒரு குழந்தை தந்தையுடன் இருக்கும்போது, எதுவும் பெரிய விடயமல்ல. ஆகவே, எதையிட்டும் பயப்பட வேண்டியதில்லை. தந்தை இங்கே அமர்ந்திருக்கிறார். எனவே, எந்தவொரு குழந்தையும் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? தந்தை சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர். குழந்தைகளான நீங்கள் ஏதாவது வழிமுறைகளால் பராமரிக்கப்பட வேண்டும். ஆகவே, கவலையற்றவர் ஆகுங்கள். நீங்கள் துன்ப பூமியில் சந்தோஷ பூமியை ஸ்தாபிக்கிறீர்கள். அதனால் துன்ப பூமியில் ஏதாவது குழப்பம் நிகழும். வெப்பமான பருவ காலத்தில், சூடாகத்தான் இருக்கும், இல்லையா? எவ்வாறாயினும், தந்தையின் குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தந்தையின் சகவாசம் உள்ளது.

சகல குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் செய்தி:

தபஸ்விக் குழந்தைகள் எல்லோருக்கும் அன்பும் நினைவுகளும் உரித்தாகட்டும். பாருங்கள் குழந்தைகளே, இன்றைய காலத்தின் செய்திகளை நீங்கள் கேட்கும்போது, அனைத்திலும் அதிமேலான பற்றற்ற பார்வையாளர்கள் என்ற ஆசனத்திலும் கவலையற்ற சக்கரவர்த்திகள் என்ற சிம்மாசனத்திலும் அமர்ந்திருந்து இந்த நாடகத்தைப் பார்க்கிறீர்கள்தானே? இந்த பிராமண வாழ்க்கையில், பயம் என்ற எண்ணம் உங்களின் கனவுகளிலேனும் தோன்றக்கூடாது. இந்தத் தபஸ்யா வருடத்தில், எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவத்தை உருவாக்குவதற்காக சதா அன்பு என்ற நெருப்பு கொழுந்து விட்டெரிகிறது. தந்தையை ஒத்தவராக, சம்பூரணமானவர் ஆகவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது. அதாவது, வெற்றிக் கொடியை ஏற்றும் ஒரு திட்டத்தை நீங்கள் செய்துள்ளீர்கள். ஆகவே, அதேவேளையில் மறுபுறம், நிறைவு பெறுவதற்கான குழப்பமும் நடப்பதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ளதுதானே? இந்த ஒத்திகைகளே நாடகத்தின் காட்சிகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளாகும். ஆகவே, எதுவும் புதியதல்ல!

தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப, வருவதிலும் போவதிலும் அல்லது எதையாவது பெறுவதில் ஒரு போராட்டம் இருந்தாலும், உங்களின் மனதின் எண்ணங்களில் எந்தவிதமான போராட்டமும் இருக்கக்கூடாது. எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் எங்கே இருந்தாலும், எப்போதும் தொடர்ந்து சந்தோஷமான இதயம் (தில்குஷ்) என்ற தோளியை உண்ணுங்கள். சந்தோஷமாக இருந்து, தேவதைகளைப் போல் பறந்து செல்லுங்கள். அத்துடன் கூடவே, இந்த வேளையில் ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு விசேட தபஸ்யா நிகழ்ச்சி இடம்பெற வேண்டும். ஒருவரால் எவ்வளவு நேரத்தைக் கொடுக்க முடியுமோ, அந்தளவிற்கு மௌனத்தின் ஒத்துழைப்பை வழங்குங்கள். அச்சா. ஓம் சாந்தி.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு கணமும் சகல பொக்கிஷங்களும் நிறைந்த உலக உபகாரியாக சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பீர்களாக.

உலக நன்மைக்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்கள், முதலில் தாங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருப்பார்கள். ஞானப் பொக்கிஷத்தைப் பொறுத்தவரை, முழுமையான ஞானத்தைக் கொண்டிருங்கள். எதுவும் தவறவிடப்படக்கூடாது. அப்போதுதான் நீங்கள் நிரம்பியவர் என்று சொல்லப்படுவீர்கள். சிலரிடம் முழுமையான பொக்கிஷம் உள்ளது. ஆனால், அதைச் சரியான வேளையில் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அதைப் பயன்படுத்தும் காலம் கடந்தபின், அவர்கள் அதைப் பற்றி நினைக்கிறார்கள். அதை நிரம்பியிருப்பவர் என்று சொல்ல முடியாது. உலக உபகாரி ஆத்மாக்கள் ஒவ்வொரு கணமும் தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள்.

சுலோகம்:
உங்களுடைய சுபாவத்தை ஞானமும் யோகமும் உடையதாக ஆக்கும்போது, உங்களின் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே மேன்மையானதாகவும் யுக்தியுக்தாகவும் இருக்கும்.

ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, உலக தியான நாள். சகல இராஜயோகி தபஸ்வி சகோதரர்களும் சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30வரை யோகத்தைப் பயிற்சி செய்யுங்;கள். உங்களின் மூதாதை ரூபத்தின் விழிப்புணர்வில் ஸ்திரமாக இருந்து, கல்ப விருட்சத்தின் வேர்களில் அமர்ந்திருந்து, முழு மரத்திற்கும் சக்திவாய்ந்த யோக தானத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களின் சந்ததிக்கும் தெய்வீகப் பராமரிப்பை வழங்குங்கள்.