15.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, இப்பொழுது இது உங்கள் அனைவரதும் ஓய்வு ஸ்திதியாகும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். ஆகவே தந்தையையும், வீட்டையும் நினைவு செய்யுங்கள். தூய்மையாகி, உங்கள் கணக்குகள் அனைத்தையும் முடித்து விடுங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கொடுக்கின்ற பொறுமை என்ன?

பதில்:
குழந்தைகளே, இந்த உருத்திர ஞான யாகத்தில் பல வகையான தடைகள் இருக்கும். எவ்வாறாயினும், உங்களுக்குப் பொறுமை இருக்க வேண்டும். உங்கள் செல்வாக்கு பரவும்பொழுது, எண்ணற்ற மக்கள் வருவதுடன், அவர்கள் அனைவரும் உங்கள் முன்னால் தலை வணங்குவார்கள். பின்னர் பந்தனங்களில் உள்ளவர்களின் பந்தங்கள் முடிவடைந்து விடும். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பந்தங்கள் தொடர்ந்தும் துண்டிக்கப்படுவதுடன், நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாகவும் ஆகுவீர்கள்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் வேறு எவரும் இல்லை

ஓம் சாந்தி.
போலாநாத் (கள்ளங்கபடமற்ற பிரபு) என்ற இந்தப் பட்டம் எப்பொழுதும் சிவனையே குறிக்கின்றது. நீங்கள் இப்பொழுது சிவனுக்கும், சங்கரருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். சிவன் அதிமேலான அசரீரி தாமத்தில் வசிக்கின்றார், சங்கரர் சூட்சும லோகத்தில் வசிப்பவர்; எவ்வாறு அவர் கடவுள் என அழைக்கப்பட முடியும்? ஒரேயொரு தந்தையே அதிமேலான இடத்தில் வசிக்கின்றார். பின்னர் அடுத்த தளத்தில் மூன்று தேவர்களும் உள்ளனர். அவரே அசரீரியான, அதிமேலான தந்தை, ஆனால்; சங்கரருக்கு ஒரு சூட்சும வடிவம் உள்ளது. சிவன் ஞானக் கடலாகிய கள்ளங்கபடமற்ற பிரபுவாவார். சங்கரரை ஞானக் கடல் என அழைக்க முடியாது. கள்ளங்கபடமற்ற பிரபுவாகிய சிவபாபா உங்கள் புத்தியை நிரப்புவதற்காக வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியத்தை விளங்கப்படுத்துகின்றார். படைப்பவரினதும், படைப்பினதும் இரகசியமானது மிகவும் எளிமையானது, இருப்பினும் மகா ரிஷிகளும், முனிவர்களும் கூட இந்த இலகுவான விடயங்களைப் புரிந்துகொள்ளவில்லை. ரஜோகுனியாக இருந்தவர்களே (தூய்மையின் இடைநிலையில் உள்ளவர்கள்) இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளாதபொழுது, எவ்வாறு தமோகுனியாக உள்ளவர்களால் (தூய்மையற்றவர்கள்) புரிந்துகொள்ள முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள், அவர் உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். எங்கள் பாபாவாகிய சிவபாபா உண்மையான அமரத்துவக் கதையை எங்களுக்குக் கூறுகின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. இதனைப் பற்றி எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. எங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவது ஒரு மனிதரல்ல. சிவபாபாவே கள்ளங்கபடமற்ற பிரபு. அவர் கூறுகின்றார்: எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. நான் அசரீரியானவர், மக்கள் என்னை எனது அசரீரி ரூபத்தில் வழிபடுகின்றனர். அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். தந்தை பிறப்பிற்கும், இறப்பிற்கும் அப்பாற்பட்டவர். அவரே வந்து, நிச்சயமாக அனைவரது புத்தியையும் நிரப்புகின்ற, கள்ளங்கபடமற்ற பிரபு ஆவார். எவ்வாறாயினும், அவர் எவ்வாறு உங்கள் புத்தியை நிரப்புகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரம் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் உங்கள் புத்தியை அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிரப்புகின்றார். ஞானக்கடலே உங்களுக்குக் கொடுப்பதற்காக வருகின்ற ஞானம் இதுவே ஆகும். ஒரேயொரு கீதை மாத்திரமே உள்ளது, அதில் சமஸ்கிருதத்தில் உள்ள வாசகங்கள் எதுவுமில்லை. கள்ளங்கபடமற்ற பெண்கள் சமஸ்கிருதத்தைப் பற்றி எதனை அறிவார்கள்? கள்ளங்கபடமற்ற பாபா அவர்களுக்காகவே வருகின்றார். சாதரணமாகப் பெண்கள் வீட்டில் தங்கியிருந்து, தங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள், ஆனால் இப்பொழுது அவர்கள் வேலைக்குச் செல்வது நாகரிகமாகி விட்டது. இப்பொழுது பாபா அனைத்துக் கல்விகளிலும் அதிமேன்மையான கல்வியை உங்களுக்குக் கற்பிப்பதற்கு வந்துள்ளார். எதனையுமே கற்றிராதவர்களே முதலில் இந்த ஞானக் கல்வியின் கலசத்தைப் பெறுகின்றார்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் பக்தர்கள் அல்லது சீதைகள், அத்துடன் இராமர், ஆத்மாக்கள் அனைவரையும் இராவணனின் இலங்கையிலிருந்து விடுவிப்பதற்கு, அதாவது, ஆத்மாக்கள் அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுவிப்பதற்கு வந்துள்ளார். பின்னர் நீங்கள் தந்தையுடன் வீடு திரும்புவீர்கள். வேறு எங்கு நீங்கள் செல்வீர்கள்;? அனைவரும் வீட்டை நினைவுசெய்து, கூறுகின்றார்கள்: நாங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதை விரும்புகின்றோம். எவருமே நாடகத்தின் மத்தியில் முக்தியைப் பெற முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள்; அனைவரும் தமோபிரதானாக வேண்டும். பிரதான அத்திவாரம் எரிந்து விடுகின்றது; அந்தத் தர்மமுமே மறைந்து விடுகின்றது, அதன் சில ரூபங்கள் மாத்திரமே எஞ்சி உள்ளன. இலக்ஷ்மி நாராயணனின் ரூபங்களும் மறைந்திருந்தால், எவ்வாறு நீங்கள் அவர்களின் ஞாபகார்த்தங்களைக் காண முடியும்? தேவர்கள் ஆட்சிபுரிந்தார்கள் என்பதையும், அவர்களின் ரூபங்கள் இன்றும் உள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் தங்களது இளம் பராயத்தில் இளவரசரும் இளவரசியுமான இராதையும் கிருஷ்ணருமாக இருந்தார்கள்; என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள், பின்னர் அவர்கள் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகினார்கள்; அவர்கள் சத்திய யுகத்தின் அதிபதிகள் ஆகினார்கள். தேவர்களின் பாதங்கள் தூய்மையற்ற உலகில் பதியக்கூட முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் வைகுந்தத்தின் இளவரசர்; அவரால் கீதை ஞானத்தைப் பேச முடியாது. ஆகவே அத்தகையதொரு பெரிய தவறு உள்ளது! கிருஷ்ணரைக் கடவுள் என அழைக்க முடியாது; அவர் ஆதிசனாதன தேவ தர்மத்திற்குரிய ஒரு மனிதர். உண்மையில், தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகில் வாழ்கின்றனர். ஆனால் இங்கு மனிதர்கள் உள்ளனர்;. மனிதர்களைச் சூட்சும உலகவாசிகள் என அழைக்க முடியாது. அவர்கள் கூறுகின்றார்கள்: பிரம்ம தேவருக்கு வந்தனங்கள்;, விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள் அது தேவ தர்மமாகும். அவர்கள் இறைவி இலக்ஷ்மியையும், இறைவன் ஸ்ரீ நாராயணனையும் பற்றிப் பேசுகின்றார்கள். மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். ஆதியில் நீங்கள் தேவ தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்; அந்தத் தர்மம் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. நாங்கள் ஏன் அங்கு இருக்கவில்லை? என எவராலும் வினவ முடியாது. ஆதியில் ஓர் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது என்பதையும், மற்றைய சமயங்கள் வரிசைக்கிரமப்படி பின்னரே வந்தன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இவ்விடயங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த முடியும். இது ஓர் அநாதியான, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம், எனவே சத்திய யுகம் மீண்டும் வர வேண்டும். பாரதம் அநாதியான பூமி, அது ஒருபொழுதும் அழிவதில்லை என்பதால் இது பாரதத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது. நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்த வேண்டும். தந்தையின் பிறப்பு இங்கு இடம்பெறுகின்றது. அவருடைய பிறப்பு தெய்வீகமானது; அது மனிதர்களுடையது போன்றதல்ல. தந்தை உங்களை அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளார். எனவே தந்தையையும், வீட்டையும் நினைவு செய்யுங்கள், நீங்கள் அந்த இராச்சியத்திற்குள் பிரவேசிப்பீர்கள். இதுவோ அசுர இராஜஸ்தான் (அரசர்களின் பூமி), ஆனால் தந்தை உங்களைத் தெய்வீக இராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்கின்றார். அவர் உங்களுக்கு எவ்விதமான சிரமத்தையும் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்ய வேண்டும். இது ஒரு மௌனமான செபித்தல் ஆகும். நீங்கள் உங்கள் உதடுகளினால் எதனையும் கூறத் தேவையில்லை. நீங்கள் சூட்சுமமான முறையில் உள்ளார்த்தமாக எதனையும் மீண்டும் மீண்டும் கூறத் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறு தந்தையை மௌனமாக நினைவுசெய்யுங்கள். பந்தனத்திலுள்ள குழந்தைகளும் வீட்டில் அமர்ந்திருந்தவாறு, இவ்விடயங்களைச் செவிமடுக்கின்றார்கள். அவர்களுக்கு இங்கு வருவதற்குச் சுதந்திரம் இல்லை. எனவே, ஆம், வீட்டில் இருந்தவாறே தூய்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கூறுங்கள்: நான் தூய்மையாக வேண்டும் என்ற வழிகாட்டல்களை எனது கனவில் பெற்றேன். இப்பொழுது மரணம் முன்னால் உள்ளது. நீங்கள் அனைவரும் இப்பொழுது ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றீர்கள். மக்கள் ஓய்வு ஸ்திதியை அடையும்பொழுது, அவர்களிடம் விகாரத்திற்கான எந்த எண்ணமும் இருக்க மாட்டாது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது இது முழு உலகினதும் ஓய்வு ஸ்திதியாகும். அனைவருமே வீடு திரும்ப வேண்டும், எனவே வீட்டை நினைவுசெய்யுங்கள். நீங்கள் பின்னர் பாரதத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் முகங்கள் வீட்டை நோக்கித் திரும்பியிருக்கும். குழந்தைகளான உங்களுக்கு எவ்விதமான சிரமமும் கொடுக்கப்படுவதில்லை. இது மிகவும் இலகுவானது. வீட்டில் உணவு தயாரிக்கும்பொழுதும், அதனைச் சிவபாபாவின் நினைவில் செய்யுங்கள். சாதாரணமாக, வீட்டில் எவராவது உணவு தயாரிக்கும்பொழுது, அவள் தனது கணவனை நினைவுசெய்கின்றாள். தந்தை கூறுகின்றார்: இவரே கணவர்களுக்கெல்லாம் கணவர். 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கும் அந்த ஒரேயொருவரை நினைவுசெய்யுங்கள். அச்சா. உங்களில் எவருக்கேனும் இங்கு வருவதற்குச் சுதந்திரமில்லை என்றால், அப்பொழுது வீட்டிலிருந்தவாறே தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்வதற்கான வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் தந்தையிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோர முடியும். படிப்படியாக நீங்கள் விடுதலையாகுவீர்கள். ஆம், உருத்திர ஞான யாகத்தில் நிச்சயமாகத் தடைகள் ஏற்படும். இறுதியில் உங்கள் செல்வாக்கு பரவும்பொழுது, மக்கள் வந்து உங்களுக்குத் தலை வணங்குவார்கள். எவ்வாறாயினும், குறுக்கீடு செய்கின்ற, தடைகளும் இருக்கும். பொறுமையாக இருங்கள்! பொறுமையை இழந்தவர்கள் ஆகாதீர்கள்! வீட்டில் இருக்கும்பொழுதும், ஒரு விடயத்தை உங்கள் கணவனுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். என்னை நினைவுசெய்து, உங்கள் ஆஸ்தியைக் கோருங்கள்! என்பதே தந்தையின் அறிவுறுத்தல்கள் என்று அவர்களுக்குக் கூறுங்கள். கிருஷ்ணர் இவ்விடயங்களைக் கூறுபவராக இருக்க முடியாது. தந்தையே நினைவுசெய்யப்பட வேண்டியவர். அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள், எனவே அனைவரும் சிவபாபாவே எங்கள் பாபா என்பதை அறிந்;து கொள்வார்கள். இப்பொழுது உங்களால் மிகவும் நன்றாக நினைவுசெய்ய முடியும். இந்த வன்முறைகளின் பந்தனங்கள் முதலியன மிகக் குறுகிய காலத்திற்கே நீடிக்கும். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, இவ்விடயங்கள் அனைத்தும் முடிவிற்கு வரும். சில சுகவீனங்கள் உடனடியாகக் குணமாகும். மற்றவையோ ஓரிரு வருடங்களுக்கு நீடிக்கும். ஆகவே இங்கு ஒரேயொரு தீர்வு மாத்திரமே உள்ளது, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் அனைத்துப் பந்தங்களும் முடிவடைந்து விடும். இதனாலேயே ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதிகளவு என்னை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதுடன், உங்கள் புத்தி தொடர்ந்தும் அதிகளவில் அனைத்துப் பந்தங்களையும் துண்டிக்கும். பாவங்களின் பந்தனங்களும் இருக்கின்றன, காமமே முதலிலக்கப் பாவமாகும். நீங்கள் இப்பொழுது பாவங்களை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் பாவங்களை வென்றவர்களாக முடியும். உங்கள் அனைத்துக் கணக்குகளும் தீர்க்கப்பட்டதும், சந்தோஷத்தின் கணக்கு ஆரம்பமாகும். இது வியாபாரிகளுக்கு மிகவும் இலகுவானது, ஏனெனில் பழைய கணக்குகள் தீர்க்கப்பட்டு, பின்னர் புதியன ஆரம்பிக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். தொடர்ந்தும் நினைவில் இருங்கள், அப்பொழுது உங்கள் இலாபம் சேகரிக்கப்படும். நீங்கள் நினைவு செய்யாவிட்டால், எவ்வாறு நீங்கள் சேகரிக்க முடியும்? இதுவும் ஒரு வியாபாரமே. தந்தை உங்களுக்கு எவ்விதமான சிரமத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் வெளியில் எங்கும் தடுமாறத் தேவையில்லை. நீங்கள் பிறவிபிறவியாகத் தடுமாறி அலைந்தீர்கள். உண்மையான தந்தை இப்பொழுது உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். கடவுளால் மாத்திரமே உங்களுக்கு உண்மையைக் கூறமுடியும்; ஏனைய அனைத்தும் பொய்யானவை. பாபா விளங்கப்படுத்துவதற்கும், மனிதர்கள் விளங்கப்படுத்துவதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்! இதுவே நாடகம், இதே விடயங்கள் மீண்டும் இடம்பெறும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் சற்கதியடைவீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். இல்லாவிட்டால் உங்களால் அத்தகைய ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு நீங்கள் கருவிகள் ஆகுகின்றீர்கள். அங்கு எவ்விதப் பாவங்களும் இருப்பதில்லை, ஆனால் இங்கே பாவங்கள் உள்ளன, இதனாலேயே தண்டனையாக வேதனைகள் உள்ளன. ஆகவே ஸ்ரீமத்தைப் பின்பற்றாதவர்களை எவ்வாறு அழைப்பது? நாஸ்திகர்கள்! பாபா தங்களை ஆஸ்திகர்கள் ஆக்குகின்றார் என்பதை அவர்கள் அறிந்த பின்னரும், அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றாது விட்டால், அவர்கள் நாஸ்திகர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். அவர்கள் சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். இருப்பினும், ஓர் ஆத்மா இன்னமும் ஸ்ரீமத்தைப் பின்;பற்றவில்லை எனில், என்ன கூறப்பட முடியும்? உங்களை மேன்மையாக்குவதற்கே ஸ்ரீமத் கொடுக்கப்பட்டுள்ளது. சற்குருவே அதிமேலானவர். தந்தை நேரடியே இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்கு ஒவ்வொரு சக்கரத்திலும் விளங்கப்படுத்தியுள்ளார். சமயநூல்கள் போன்றவை பக்தி மார்க்கத்திற்கு உரியவை. எண்ணற்ற சமயநூல்கள் உள்ளன. மக்கள் சமயநூல்களுக்கு அதிகளவு மதிப்பு கொடுக்கின்றார்கள். அவர்கள் சமயநூல்களை நகரத்தைச் சுற்றி எடுத்துச் செல்வதைப் போன்றே, ரூபங்களையும் நகரத்தைக் சுற்றிலும் எடுத்துச் செல்கின்றார்கள். இப்பொழுது பாபா கூறுகின்றார்: அந்த விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். ஒரு புள்ளியாகுங்கள். அனைத்து விடயங்களுக்கும் ஒரு புள்ளியை இடுங்கள். வேறு எவற்றையும் செவிமடுக்காதீர்கள். தீயவற்றைக் கேட்காதீர்கள், தீயவற்றைப் பார்க்காதீர்கள், தீயவற்றைப் பேசாதீர்கள்! பாபா உங்களுக்குக் கூறுகின்ற விடயங்களைத் தவிர, வேறு எதனையும் செவிமடுக்காதீர்கள். சரீரமற்றவர்களாகித் தொடர்ந்தும் ஏனைய விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் சரீரங்களினால் செவிமடுக்கின்றீர்கள். தந்தை வந்து, பிரம்;மாவின் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்தி, குழந்தைகளான உங்களுக்குச் சற்கதிக்கான பாதையையும் காட்டுகின்றார். நீங்கள் எத்தனை வித்தியாசமான முறைகளில் முன்னர் முயற்சி செய்திருந்தாலும், ஆத்மாக்களாகிய உங்களால் முக்தியையோ அல்லது ஐPவன்முக்தியையோ அடைய முடியவில்லை. அவர்கள் சக்கரத்தின் கால எல்லையையும் மிகவும் நீண்டதாக்கி விட்டார்கள். அது அவர்களின் பாக்கியத்தில் இருந்தால், அவர்கள் இவ்விடயங்களைச் செவிமடுப்பார்கள். அவர்களின் பாக்கியத்தில் அது இல்லையாயின், அப்பொழுது அவர்களால் வர முடியாது. ஆகவே இங்கும் இது பாக்கியத்துக்கான கேள்வி ஆகும். தந்தை மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார் இருப்பினும், சிலர் கூறுகின்றார்கள்: எங்களால் இவ்விடயங்களைப் பற்றிப் பேச முடியாதுள்ளது. இருப்பினும் அது மிக இலகுவானது! தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள்! சமஸ்கிருதத்தில் அவர்கள் இதனை மன்மனபவ எனக் குறிப்பிடுகின்றார்கள். சிவபாபாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. கிருஷ்ணரைத் தந்தை என்றழைக்க முடியாது. பிரம்மாவே மக்கள் அனைவரினதும் தந்தை. யார் மகத்தானவர்? ஆத்மாக்களின் தந்தையா அல்லது மக்களின் தந்தையா? மூத்த பாபாவை நினைவு செய்வதனால், நீங்கள் சுவர்க்க ஆஸ்தி எனும் வெகுமதியைப் பெறுவீர்கள். காலம் செல்லும்பொழுது, பலர் உங்களிடம் வருவார்கள். அவர்கள் வேறு எங்கு செல்ல முடியும்? எனவே அவர்கள் தொடர்ந்தும் இங்கு வருவார்கள். பலர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்பொழுது, அதனைப் பார்க்கும் மற்றவர்களும் அங்கு செல்கிறார்கள். உங்கள் மத்தியிலும் தொடர்ந்தும் விரிவாக்கம் இடம்பெறும். எத்தனை தடைகள் வந்தாலும், நீங்கள் அந்தக் குழப்பங்களுக்கு அப்பால் சென்று, உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். இராம இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. இராம இராச்சியம் புதிய உலகம் ஆகும். நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் உங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தைப் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குப் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களிடம் வினவ வேண்டிய முதல் விடயம்: பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன? பிரஐhபிதா பிரம்மாவுடனான உங்கள் உறவுமுறை என்ன? அவர் எல்லையற்ற தந்தை, பின்னர் வெவ்வேறு வம்சாவழி விருட்சங்கள் அனைத்தும் உள்ளன் அவை அனைத்தும் ஒன்றிலிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். பரமாத்மாவான பரமதந்தை உலகைப் பிரஐhபிதா பிரம்மாவின் மூலம் உருவாக்கினார், அதாவது, அவர் ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக மாற்றினார். உலகம் எதனையும் புரிந்துகொள்வதில்லை; அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் பூஐpக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தோம். பின்னர் நாங்கள் பூஐpப்பவர்கள் ஆகினோம். எவ்வாறாயினும் அவர்கள் இதனைக் கடவுளைக் குறித்துக் கூறுகின்றார்கள். கடவுளும் பூஐpப்பவராகி விட்டால், ஆத்மாக்களாகிய உங்களைப் பூஐpக்கத் தகுதிவாய்ந்தவர்களாக யார் ஆக்குவார்? அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். ஹம்சோ என்பதன் அர்த்தம் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஹம்சோ என்பதன் அர்த்தமானது: நாங்கள் சூத்திரர்களாக இருந்தோம், இப்பொழுது தேவர்கள் ஆகுகின்றோம். உங்களால் சக்கரத்தை நினைவுசெய்ய முடியும், இல்லையா? கூறப்பட்டுள்ளது: தந்தை மகனைக் காட்டுகிறார். பின்னர் மகன் தந்தையைக் காட்டுகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. திறமையான வியாபாரி ஆகுங்கள், பழைய கணக்குகள் அனைத்தையும் முடித்து, சந்தோஷத்துக்கான புதிய கணக்கை ஆரம்பியுங்கள். நினைவில் நிலைத்திருந்து, பாவப் பந்தங்களைத் துண்டியுங்கள். பொறுமையாக இருங்கள், அவசரப்படாதீர்கள்.

2. வீட்டில் உணவு தயாரிக்கும்பொழுதும், ஒவ்வொரு செயலையும் செய்யும்பொழுதும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற, அழிவற்ற ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்புவதுடன், அவற்றைப் பிறருக்கும் தானம் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்க்ள ஒரு மாஸ்டர் படைப்பவராகவும், ஒரு பற்றற்ற பார்வையாளராகவும் இருந்து, மாயையின் விளையாட்டுக்கள் எதனையும் களிப்பூட்டுவதாகப் பார்ப்பீர்களாக.

மாயை உங்களுக்கு எத்தனை நிறங்களைக் (திறமையைக்) காட்டினாலும், மாயையின் விளையாட்டுக்களை இவ்விழிப்புணர்வுடன் அவதானியுங்கள்: நான் மாயையின் பிரபு, மாயை படைப்பும், நான் ஒரு மாஸ்டர் படைப்பவரும் ஆவேன். விளையாட்டுக்களில் தோற்றுப் போகாதீர்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராக இருந்து, தொடர்ந்தும் விளையாட்டுக்களைக் களிப்பூட்டுபவையாக அவதானியுங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு முதல் இலக்கத்தைக் கோருவீர்கள். அத்தகைய ஆத்மாக்களுக்கு, மாயையிடமிருந்து வருகின்ற பிரச்சனை எதுவும் ஒரு பிரச்சனை போன்று தென்பட மாட்டாது. எந்தக் கேள்வியும் இருக்க மாட்டாது. சதா ஒரு பற்றற்ற பார்வையாளராகி, தந்தையின் சதா சகவாசத்தைப் பற்றி அறிந்திருங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு வெற்றியாளர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் மனதைக் குளிர்மையாகவும், உங்கள் புத்தியைக் கருணைநிறைந்ததாகவும், உங்கள் வாயை இனிமையானதாகவும் ஆக்குங்கள்.