15.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானம் எனும் மூன்றாவது கண்ணைக் கொடுக்கவே வந்துள்ளார். அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்கின்றீர்கள்.

கேள்வி:
எவ்விடயங்களை, பெண்சிங்கங்களான சக்திகளால் மாத்திரமே தைரியமாக விளங்கப்படுத்த முடியும்?

பதில்:
சக்திகளாகிய நீங்கள், ஏனைய சமயத்தவர்களுக்கும், தந்தை கூறுவதாக விளங்கப்படுத்த வேண்டும்: உங்களைப் பரமாத்மாவாக அன்றி, ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, முக்தி தாமத்துக்குச் செல்வீர்கள். உங்களைப் பரமாத்மாவாகக் கருதுவதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. பெருமளவு தைரியத்தைக் கொண்டுள்ள பெண்சிங்கங்களான, சக்திகளாகிய உங்களால் மாத்திரமே இவ்விடயத்தை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இதை விளங்கப்படுத்துவதைப் பயிற்சி செய்வது அவசியம்.

பாடல்:
அன்பான கடவுளே! குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்!

ஓம் சாந்தி.
குழந்தைகள் சிரமங்களை அனுபவம் செய்கின்றார்கள், ஆன்மீக நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்குச் சிரமங்கள் இருப்பதும் காணப்படுகின்றது, அத்துடன் பக்தி மார்க்கத்தில் அவர்கள் வாசல்வாசலாகத் தடுமாறித் திரிகின்றார்கள். அவர்கள் பலவிதமான பிராயச்சித்தங்கள், தபஸ்யா, யாகங்கள் செய்து, சமயநூல்கள் போன்றவற்றையும் வாசிக்கின்றார்கள். இதனாலேயே இது பிரம்மாவின் இரவு என்று அழைக்கப்படுகின்றது. அது அரைக்கல்பத்திற்கு இரவாகவும், மற்றைய அரைக்கல்பத்திற்குப் பகலாகவும் இருக்கின்றது. பிரம்மா மாத்திரமே இருப்பதில்லை, இல்லையா? அவர் பிரஜாபிதா பிரம்மாவாக (மக்களின் தந்தை) இருப்பதால், அவரது குமாரர்களும், குமாரிகளாகிய குழந்தைகளும் நிச்சயமாக இருப்பார்கள். எவ்வாறாயினும் மக்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு மூன்றாவது கண்ணாகிய ஞானத்தைக் கொடுக்கின்றார், அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்திலும்; பிராமணர்களாக இருந்து, பின்னர் தேவர்கள் ஆகினீர்கள். இவ்வாறு ஆகியவர்கள் மீண்டும் அவ்வாறு ஆகுவார்கள். நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்குரியவர்கள். நீங்கள் மாத்திரமே பூஜிக்கத் தக்கவர்கள் ஆகுகின்றீர்கள், பின்னர் நீங்களே பூஜிப்பவர்கள் ஆகுகின்றீர்கள். ஆங்கிலத்தில் அவர்கள் பூஐpக்;கத் தகுதிவாய்ந்தவர்களும், பூஐpப்பவர்களும் என அழைக்கப்படுகின்றனர். பாரதமே அரைக்கல்பத்திற்குப் பூஐpப்பவர் ஆகுகின்றது. ஆத்மா, தான் பூஜிக்கத் தக்கவராக இருந்து பின்னர் பூஜிப்பவர் ஆகினார் என ஏற்றுக்கொள்கின்றார். நீங்கள் பூஜிக்கத் தக்கவரிலிருந்து பூஜிப்பவராகவும், பின்னர் மீண்டும் பூஜிக்கத் தக்கவராகவும் ஆகுகின்றீர்கள். தந்தை பூஜிக்கத் தக்கவராகவோ, அல்லது பூஜிப்பவராகவோ ஆகுவதில்லை. நீங்கள் தேவர்களாக இருந்தபொழுது தூய்மையாகவும், பூஜிக்கத் தக்கவராகவும் இருந்தீர்கள் எனக் கூறுகின்றீர்கள். 84 பிறவிகளின் பின்னர் நீங்கள் முழுமையாகத் தூய்மையற்ற, பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். இந்நேரத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்குரிய பாரதமக்கள் தங்களுடைய சொந்த சமயம் பற்றி எதையும் அறியாதுள்ளனர். ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் நீங்கள் பேசுகின்ற இவ் விடயங்கள் பற்றிப் புரிந்துகொள்வதில்லை. இத் தர்மத்திலிருந்து மாற்றப்பட்டவர்களே, மீண்டும் திரும்பி வருவார்கள். பலர் மாற்றப்பட்டுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: சிவனையும், தேவர்களையும் பூஜிப்பவர்களுக்கு இது மிக இலகுவானது. ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் உங்கள் தலையை உருட்டுவார்கள். (பல கேள்விகள் கேட்பார்கள்). இங்கிருந்து மாற்றப்பட்டவர்கள், இந்த விடயங்களால் தொடப்பட்டு, வந்து புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இல்லையெனில் அவர்கள் அதனை நம்ப மாட்டார்கள். பலர் ஆரிய சமாஜியிலிருந்து வந்துள்ளார்கள். சீக்கிய சமூகத்திலிருந்தும் சிலர் இங்கு வந்துள்ளனர். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்து, பின்னர் ஏனைய சமயத்துக்கு மாற்றப்பட்டவர்கள், நிச்சயமாகத் தங்கள் சொந்தத்; தர்மத்திற்குத் திரும்பி வருவார்கள். விருட்சத்தின் படத்தில் பல்வேறு பிரிவுகள் காட்டப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் மீண்டும் வரிசைக்கிரமமாகத் திரும்பி வருவார்கள். கிளைகளும், சிறு மதப்பிரிவுகளும் தொடர்ந்தும் வெளிப்படும். அந்த ஆத்மாக்கள் தூய்மையானவர்கள் ஆதலால், நல்ல ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றார்கள்;. இந்நேரத்தில் தேவ தர்மத்தின் அத்திவாரம் இல்லாததால், அது மீண்டும் ஒருமுறை இடப்பட வேண்டும். நீங்கள் அவர்களைச் சகோதர, சகோதரிகள் ஆக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள், ஒரேயொரு தந்தையின் குழந்தைகளான, சகோதரர்கள் ஆவோம். நாங்கள் பின்னர் சகோதர, சகோதரிகள் ஆகுகின்றோம். இப்பொழுது புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுவதால், முதலில் பிராமணர்கள் இருக்கின்றார்கள். புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு பிரஐhபிதா பிரம்மா நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். பிரம்மாவின் மூலமே பிராமணர்கள் உருவாக்கப்படுகின்றனர். இதுவும் உருத்திரரின் ஞான யாகம் என அழைக்கப்படுகின்றது. பிராமணர்கள் இதற்கு நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார்கள். அவரே முப்பாட்டனார். பிராமணர்களே உச்சிக்குடுமிகளான, முதல் இலக்கத்தவர்கள். மக்கள் ஆதாம், பீபீ அல்லது ஆதாம், ஏவாளில் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நேரத்தில் நீங்கள் பூஜிப்பவரிலிருந்து, பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். தில்வாலா ஆலயமே உங்கள் அனைவரதும் மிகச்சிறந்த ஞாபகார்த்தம். நீங்கள் தரையிலிருந்து தபஸ்யா செய்வதாகவும், இராச்சியம் மேலே கூரையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது; நீங்கள் இங்கே உயிருள்ள ரூபத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். அந்த ஆலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, பின்னர் பக்தி மார்க்கத்தில் மீண்டும் உருவாக்கப்படவுள்ளது. நாங்கள் இப்பொழுது இராஜயோகம் கற்று, பின்னர் புதிய உலகிற்குச் செல்வோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உயிரற்ற ஆலயம், ஆனால் நீங்களோ இங்கே உயிருள்ள ரூபத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். அந்தப் பிரதான ஆலயம் மிகச்சரியாக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுவர்க்கத்தை மேலே கூரையில் சித்தரித்துள்ளார்கள். வேறு எங்கே சுவர்க்கத்தைக் காட்ட முடியும்? நீங்கள் இந்தத் தலைப்பை மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். பாரதமே சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகி விட்டது என அவர்களிடம் கூறுங்கள். இந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்கள், இதை மிக விரைவாகப் புரிந்துகொள்வார்கள். இந்துக்கள் பலரும் ஏனைய சமயங்;களுக்குள் சென்று விட்டார்கள். நீங்கள் அவர்களைத் திரும்பவும் அழைத்து வருவதற்குப் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அவ்வளவுதான்! வேறு எதனையும் பற்றிப் பேசாதீர்கள்! இந்தப் பயிற்சியைக் கொண்டிராதவர்கள் எதையும் கூறவும் கூடாது. இல்லையெனில், அவர்கள் பிரம்மகுமாரிகளின் பெயரை அவதூறு செய்வார்கள். வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வரும்பொழுது, அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் முத்தி தாமத்திற்குச் செல்ல விரும்பினால், உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்களைப் பரமாத்மாவாகக் கருதாதீர்கள். உங்களை ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவுசெய்வதால், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள். மன்மனாபவ என்ற இந்த மந்திரம் உங்களுக்குப் போதுமானது. எவ்வாறாயினும், உங்களுக்குப் பேசுவதற்குத் தைரியம் தேவை. பெண் சிங்கங்களான, சக்திகளால் மாத்திரம் இந்தச் சேவையைச் செய்ய முடியும். சந்நியாசிகள் வெளிநாடுகளுக்குச் சென்று, வெளிநாட்டவரை இங்கே வருமாறு அழைத்துக் கூறுகின்றார்கள்: வாருங்கள், நான் உங்களுக்கு ஆன்மீக ஞானத்தைக் கொடுப்பேன். அவர்கள் தந்தையையும் அறியார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தைக் கடவுள் எனக் கருதி, அனைவரையும் அதை நினைவுசெய்யுமாறு கூறுகின்றனர். ஒரு பறவையைக் கூட்டில் இடுவது போல், அவர்கள் வெறுமனே இந்த மந்திரத்தைக் கொடுக்கின்றார்கள். இந்த முறையில் விளங்கப்படுத்துவதற்கு நேரம் எடுக்கின்றது. பாபா உங்களுக்குக் கூறியுள்ளார்: கடவுள் சிவன் பேசுகின்றார் என ஒவ்வொரு படத்திலும் எழுதப்பட வேண்டும். பிரபுவும், அதிபதியும் இல்லாது ஒவ்வொருவரும் அநாதைகள் ஆகிவிட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் கூவி அழைக்கின்றார்கள்: நீங்களே தாயும், தந்தையும். சரி, இதன் அர்த்தம் என்ன? உங்கள் கருணையினால் நாங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றோம் என அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்றார்கள். சுவர்க்கத்தின் சந்தோஷத்திற்காகத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார், நீங்களும் அதற்காக முயற்சி செய்கின்றீர்கள். எதையாவது செய்பவர்கள் அதனுடைய பலனைத் திரும்பப் பெறுவார்கள். இந்நேரத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். சுவர்க்கம் மாத்திரமே புதிய உலகான, தூய உலகாகும். இங்கே ஒரு நபர் கூட சதோபிரதானாக இருக்க முடியாது. சத்தியயுகத்தில் சதோபிரதானாக இருந்தவர்கள் தமோபிரதானாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டார்கள். கிறிஸ்துவுக்குப் பின்னர் வந்த கிறிஸ்தவ சமயத்தவர்கள் அனைவரும் முதலில் சதோபிரதானாகவே இருப்பார்கள்;, இல்லையா? அவர்களில் நூறாயிரக்கணக்கானவர்கள் இருக்கும்பொழுது, அவர்களுடைய சேனை போரிட்டுத் தங்கள் இராச்சியத்தைக் கோரத் தயாராக இருக்கின்றது. அவர்கள் குறைந்தளவு சந்தோஷத்தையும், குறைந்தளவு துன்பத்தையும் அனுபவஞ் செய்கிறார்கள். நீங்கள் கொண்டிருக்கும் சந்தோஷத்தை வேறு எவரும் அனுபவம் செய்வதில்லை. நீங்கள் இப்பொழுது சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்குத் தயாராக்கப்படுகின்றீர்கள். ஏனைய சமயத்தவர்கள் எவரும் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது தூய்மையாக இருந்ததைப் போல், வேறு எந்த நாடும் தூய்மையாக இருக்க முடியாது. தந்தை வருகின்றபொழுது மாத்திரமே, கடவுளின் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கே யுத்தம் என்ற கேள்வியே கிடையாது. சண்டையும், யுத்தமும் பின்னரே பெருமளவில் ஆரம்பிக்கின்றன. பாரத மக்கள் மற்றவர்கள் போன்று அதிகளவு சண்டையிடவில்லை. அவர்கள் தங்களுக்குள் சிறிதளவு சண்டையிட்டு, பிரிந்தார்கள். துவாபரயுகத்தில், அவர்கள் ஒருவரையொருவர் தாக்குகின்றார்கள். இந்தப் படங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்குப் பெரும் விவேகம் தேவை. நீங்கள் எழுதவும் வேண்டும்: எவ்வாறு சுவர்க்கமாக இருந்த பாரதம் இப்பொழுது நரகமாகி விட்டது என வந்து புரிந்துகொள்ளுங்கள். பாரதம் சற்கதி அடைந்திருந்தது, ஆனால் அது இப்பொழுது சீரழிந்து விட்டது. தந்தையால் மாத்திரமே ஞானத்தைக் கொடுக்க முடியும், அதன்மூலம் நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். மனிதர்களிடம் இந்த ஆன்மீக ஞானம் இருப்பதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையிடம் மாத்திரமே இந்த ஞானமுள்ளது. தந்தை மாத்திரமே ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஏனைய இடங்களில் மனிதர்களே மற்றைய மனிதர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார்கள். சமயநூல்களும் மனிதர்களாலேயே எழுதப்பட்டு, மனிதர்களாலேயே கற்கப்படுகின்றன. இங்கே, ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார், ஆத்மாக்களாகிய நீங்கள் கற்கின்றீர்கள். ஆத்மாக்களே கற்கின்றார்கள். அங்கே, மனிதர்களே எழுதி, கற்பவர்கள். பரமாத்மா எந்தச் சமயநூல்கள் போன்றவற்றையும் கற்க வேண்டியதில்லை. தந்தை கூறுகின்றார்: அந்தச் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்பதால், எவருமே சற்கதி பெற முடியாது. நானே வந்து, திரும்பவும் அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இப்பொழுது உலகில் பில்லியன்; கணக்கான மனிதர்கள் இருக்கின்றார்கள்;. சத்தியயுகத்தில் அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, 900,000 மக்களே இருந்தார்கள். அது மிகவும் சிறிய விருட்சமாக இருந்தது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் எங்கே சென்றார்கள் எனச் சற்றுச் சிந்;தித்துப் பாருங்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்திலோ அல்லது நீரிலோ இரண்டறக் கலப்பதில்லை. அவர்கள் அனைவரும் முக்திதாமத்தில் இருந்தார்கள். ஒவ்வோர் ஆத்மாவும் அழிவற்றவர், அவரில் (ஆத்மா) ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாத, ஓர் அழிவற்ற பாகம் பதியப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாதவர். ஓர் ஆத்மா ஒரு புள்ளியாவார். இன்னமும் எவராலும் நிர்வாணா தாமத்திற்கு செல்ல முடியாதுள்ளது. ஒவ்வொருவரும் தனது பாகத்தை நடித்தாக வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் கீழிறங்கியவுடன் பின்னர் நான் வந்து அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்கின்றேன். தந்தையினுடைய பாகம் இறுதியிலேயே உள்ளது. புதிய உலகின் ஸ்தாபனையும், பின்னர் பழைய உலகின் விநாசமும் இருக்கின்றன. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆரிய சமாஜிகளின் குழுவினருக்கு நீங்கள் விளங்கப்படுத்தும்பொழுது, அக் குழுவில் தேவதர்மத்துக்கு உரியவர்கள் எவரேனும் இருந்தால், அவர்கள் இந்த ஞானத்தினால் தொடப்படுவார்கள். நீங்கள் கூறுபவை உண்மையில் சரியானவை என அவர் புரிந்துகொள்வார். கடவுள் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? கடவுளே தந்தையாவார், நாங்கள் அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். ஆரிய சமாஜிகளிலிருந்து எவராவது உங்களிடம் வந்தால், அவர் மரக்கன்று என அழைக்கப்படுகின்றார்;. தொடர்ந்தும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள், உங்களின் குலத்திற்கு உரியவர்கள் உங்களிடம் வருவார்கள். தந்தையாகிய கடவுள் உங்களுக்குத் தூய்மையாகுவதற்கான வழிகளைக் காட்டுகின்றார். கடவுள் பேசுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! நானே தூய்மையாக்குபவர். என்னை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் முக்திதாமத்திற்குச் செல்வீர்கள். இச் செய்தி அனைத்துச் சமயத்தவர்களுக்கும் உரியது. அவர்களுக்குக் கூறுங்கள்: தந்தை கூறுகின்றார்: சகல சரீர சமயங்களையும் துறந்து, என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகுவீர்கள். ஒரு குஜராத்தி அல்லது இன்னார், இன்னார் என்ற உணர்வை விட்டுவிடுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். இது யோகாக்கினி ஆகும். நீங்கள் எடுக்கின்ற ஒவ்வோர் அடியும் எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டும். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். நீங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். எவருமே முதலில் தூய்மையாகாது நிர்வாணா தாமத்திற்குச் செல்ல முடியாது. நீங்களும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியைப் புரிந்துகொள்ள வேண்டும். இதை முழுமையாகப் புரிந்துகொள்வதன் மூலமே, நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். குறைந்த பக்தி செய்துள்ளவர்கள், இந்த ஞானத்தில் குறைந்தளவையே புரிந்துகொள்வார்கள். பெருமளவு பக்தி செய்துள்ளவர்கள், இந்த ஞானத்தைப் பெருமளவில் பெறுவார்;கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அனைத்தையும் நீங்கள் கிரகிக்க வேண்டும். ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களுக்கு இது மிக இலகுவானது. அவர்கள் இல்லறச் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கின்றார்கள். 60 வயதின் பின்னரே ஓய்வு பெறுகின்ற வயது வருகின்றது; இதன்பின்னரே அவர்கள் ஒரு குருவை ஏற்கின்றார்கள். இந்நாட்களில் குழந்தைகளும் ஒரு குருவை ஏற்றுக் கொள்ளுமாறு செய்யப்படுகின்றனர். இல்லையெனில், முதலில் தந்தையும், பின்னர் ஆசிரியரும், பின்னர் 60 வயதின் பின்பே ஒரு குருவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே சற்கதி அருள்பவர். அந்தக் குருமார்களில் எவருமே சற்கதி அருள்பவர்கள் இல்லை. அவை அனைத்தும் அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள். அனைவருக்கும் சற்கதி அருள்கின்ற, ஒரேயொரு சற்குரு மாத்திரமே இருக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றேன். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விரிவாக்கம் எனும் பாகம் ஆகும். அனைவரும் ஏணியில் கீழிறங்க வேண்டும். ஞானம், பக்தி, பின்னர் பக்தியில் விருப்பமின்மை இருக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றபொழுதே, பக்தியில் விருப்பமின்மை கொள்கின்றீர்கள். இப் பழைய உலகில் உங்களுக்கு விருப்பமின்மையுள்ளது. நீங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றால் வேறு எங்கே செல்வீர்கள்? இந்த உலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே எல்லையற்ற உலகம் துறக்கப்பட வேண்டும். நீங்கள் முதலில் தூய்மையாகாது வீடு திரும்ப முடியாது. தூய்மையாகுவதற்கு நினைவு யாத்திரையே தேவைப்படுகின்றது. பாரதத்தில் இரத்த ஆறு ஓடிய பின்னர் மாத்திரமே பாலாறு இருக்கும். விஷ்ணு பால் ஏரியில் பள்ளிகொள்வதாகக் காட்டப்பட்டுள்ளார். இந்த யுத்தத்தின் மூலம் முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான வாயில்கள் திறக்கப்படுகின்றன என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு முன்னேறிச் செல்கையில், இந்த ஒலியும் அதிகளவில் தொடர்ந்தும் வெளியாகும். யுத்தம் இப்பொழுது இடம்பெறவுள்ளது. முன்னர், ஒரு பொறியிலிருந்து என்ன நடந்தது என்று பாருங்கள்! தாங்கள் நிச்சயமாகச் சண்டையிடுவோம் என அவர்கள் நம்புகின்றார்கள். யுத்தங்கள் சதா காலமும் தொடர்கின்றன. அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாளர்கள் ஆகுகின்றனர். உங்களுக்கும் புதிய உலகம் தேவை. ஆகையினால், பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்தப் பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது, ஆகவே, இந்தப் பழைய உலகைத் துறந்து விடுங்கள்! நீங்கள் இவ்வுலகை விட்டு எங்காவது செல்ல வேண்டியதில்லை, ஆனால் உங்கள் புத்தி அதை மறக்க வேண்டும்.

2. நிர்வாணா தாமத்திற்குச் செல்வதற்கு, முழுமையாகத் தூய்மையாகுங்கள். படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை முழுமையாகப் புரிந்துகொண்டு, புதிய உலகில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் கவனயீனம் எனும் உறக்கத்தைத் துறந்து, உறக்கத்தை வென்றவராகவும், பூகோளத்தை ஆட்சிசெய்பவராகவும் ஆகுவீர்களாக.

காட்சிகளை அருளும் ரூபம் ஆகுவதற்கும், பக்தர்களுக்குக் காட்சிகளை அருள்வதற்கும், ஒரு பூகோள ஆட்சியாளர் ஆகுவதற்கும் உறக்கத்தைத் துறந்தவர்கள் ஆகுங்கள். நீங்கள் இந்த விநாச காலத்தை மறக்கும்பொழுது, கவனயீனம் எனும் உறக்கத்தில் உறங்குகின்றீர்கள். பக்தர்களின் அழைப்பையும், சந்தோஷமற்ற ஆத்மாக்களின் துன்பக் கதறல்களையும், தாகமாகவுள்ள ஆத்மாக்களின் பிரார்த்தனைகளின் ஒலியையும் செவிமடுங்கள், அப்பொழுது நீங்கள் ஒருபொழுதுமே கவனயீனம் எனும் உறக்கத்தில் உறங்க மாட்டீர்கள். இப்பொழுது சதா ஏற்றப்பட்ட ஒளியாகி, கவனயீனம் எனும் உறக்கம் எதனையும் துறந்து, காட்சிகளை அருளும் ஒரு ரூபம் ஆகுங்கள்.

சுலோகம்:
உங்கள் சரீரம், மனம், செல்வம், மற்றும் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்று உங்களால் முடிந்த எவ் வகையிலும் ஒத்துழையுங்கள், அப்பொழுது நீங்கள் ஓர் இலகுயோகி ஆகுவீர்கள்.